அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Friday, December 7, 2012

8 'விமர்சகன்' : ஒரு விமர்சனம்..!


நல்ல பக்கமும் தீய பக்கமும் நிச்சயமாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உண்டு. 

அவற்றில் எந்த பக்கம் மிகுதியோ அதைவைத்துத்தான் அவன் நமது 'நல்ல சமூகத்தில்' நல்லவன் அல்லது தீயவன் எனப்படுகிறான்..! 

('தீய சமூகத்தில்'... நல்லவன்... 'தீயவன்' என்றும் தீயவன்... 'நல்லவன்' என்றும் பெயர்பெற்று உல்ட்டாவாகிவிடுவது தனிக்கதை. அதுபற்றி இப்பதிவில் வேண்டாம்..! )

சரி, நமது வாழ்க்கை புத்தகத்தில் அந்த இரண்டு பக்கத்தையும் படித்து இரண்டையும் நேர்மையான முறையில் கூட்டி குறைக்காமல் உள்ளது உள்ளபடி பொதுவில் கருத்து சொல்பவர்கள்தான் 'விமர்சகர்கள்'..!

ஆனால், இவர்கள் உண்மையில் தமது விமர்சனத்தில் பெரும்பாலும் நேர்மையாக நடப்பதில்லை..! 


காரணம்..? விமர்சிக்கப்படுபவரின் இனம், தேசம், மொழி, மதம், சாதி, குலம், உறவு, பாலினம், பணம் என... ஏதாவது ஒரு காரணியால்... நேர்மை தவறி விடுகிறார்கள்..!

இப்படியான விமர்சகர்களில் பல தரப்பினர் உண்டு..! அவர்களில் சிலரை இங்கே காண்போம்..! இவர்கள் தம்மை அப்படி சொல்லிக்கொண்டாலும்... உண்மையில் இவர்கள் 'விமர்சகர்கள்' அல்லர்..! அப்படி சொல்(லிக்கொள்)வது தவறான புரிதல்..!

நமது இரண்டு பக்கத்தையும் படித்து, அதில் நமது நல்ல பக்கத்தை மட்டுமே நம்மிடம் 'விமர்சனமாக' சொல்பவர்கள்... நம்மிடம் ஆதாயம் தேட சுயநலன் விரும்பி 'ஜிங் ஜாக்' அடிக்கும் ஜால்ராக்கள்..!

நமது இரண்டு பக்கத்தையும் படித்து, அதில் நமது நல்லதை பொதுவில்  பாராட்டிவிட்டு... தீய பக்கத்தை நம்மிடம் மட்டுமே சுட்டிக்காட்டி நம்மை திருத்த அல்லது நாம் திருந்த உரிமையோடு 'விமர்சனமாக' சொல்பவர்கள் நண்பர்கள்..!

நமது இரண்டு பக்கத்தையும் படித்து, அதில் தீயதை கண்டுகொள்ளாமல்... நல்லதை மட்டுமே 'விமர்சனமாக' பிறரிடம் பொதுவில் சொல்பவர்கள் நமது அல்லக்கை அடியாள் ரசிகர்கள்..!

நமது இரண்டு பக்கத்தையும் படித்து, அதில் நல்லதை கண்டுகொள்ளாமல்... தீயதை மட்டுமே பிறரிடம் பொதுவில் 'விமர்சனமாக' சொல்பவர்கள் நம்மை வெறுக்கும் எதிரிகள் அல்லது நமது எதிரியின் அல்லக்கை அடியாள் ரசிகர்கள்..!  

பெரும்பாலும்  நம்மில் எல்லோரும் மற்றவர்களை தமக்கென விரும்புவது நண்பர்களாக இருக்க மட்டுமே..!  :-))

ஆனால்... பெரும்பாலும் அந்த 'அதே எல்லாரும்' தம்மை பிறர்க்கு தம்மையும் அறியாமல் காட்டி வரும் முகம் விமர்சகர்களாகவே..!  ஏனோ... நண்பர்களாக அல்ல..!

ஆகவே... நண்பர்கள் கிட்டுவது இங்கே அரிதே..! ஆனாலும் அரிதுதான் எனினும் அறிதாகவேனும் கிட்டிவிடுகிறார்கள் நண்பர்கள்..!

அதேநேரம், விமர்சகர்கள் என்ற பெயரில்... மற்றவர்கள் கிட்டுவதுதான் மிக எளிதாக உள்ளது..! 

ஆனால்................

அவர்களில்..................  

'மெய்யான விமர்சகர்களை'த்தான் நான் குவி ஆடியில் கண் முழி குழி விழ தேடிக்கொண்டு இருக்கிறேன்..! 

இவர்கள் கிட்டுவதுதான் இங்கே நண்பர்களை விட அரிதினும் அரிதாகவே உள்ளது..! பதிவுலகிற்கு இது ஆரோக்கியமானது அல்லவே அல்ல..!

8 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...