அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, November 3, 2012

11 உம்மன் 'சாண்டி' & 'நீலம்' சஞ்சீவரெட்டி : புயலானது எப்படி..?!


லில்லி, இசபெல், கேத்ரீனா, ஐரின், ரீட்டா... இதுபோன்ற அமெரிக்க புயல் பெயர்களை செய்திகளில் கேட்டுக்கேட்டு, 'ஏன் இப்படி புயலுக்கு பெண்கள் பெயர் வைக்கிறார்கள்' என்று யோசித்து அதுபற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம்... அந்த புயலால் விளைந்த நாசத்தினால் உண்டான சோகத்தினால் பின்னர் அறவே மறந்துவிடும். 


அதேபோல... நம்ம ஊர்களில் வீசும் புயலுக்கும்... மாலா, அய்லா, லைலா, நர்கிஸ், நிஷா... என்ற பெயர்களை கேட்கும்போது... 'அமெரிக்காக்காரனின் வழிகாட்டுதலில், இன்றைய உணவு-உடை-வீடு- மொழி-அறிவியல்-தொழில்நுட்பம்- கலவி-இசை-சினிமா- வாழ்க்கை-பண்பாடு-நாகரிகம் என்று எல்லாவற்றையும் அடியொற்றி பின்பற்றும்  'முற்போக்கு(?)நாகரிக' கூட்டமொன்று... புயலுக்கு பெயர் வைப்பதில் மட்டும் விதிவிலக்காகுமா, என்ன..?!'

"கஷ்டம் தரும் புயல்களை இப்படி 'கவர்ச்சிப்புயல்'-களாக்குகிறார்களே" என்று நானே வருத்தத்தில் இருக்கும் வேளையில், புதிதாக... 'இப்போது... 'சான்டி - நீலம்' இருவரும் பிரபலமாகிவர... காரணம், "இவர்களும் ஹாலிவுட்/பாலிவுட் நடிகைகள் என்பதால்தானே?" என்று இங்கே ஒரு நண்பரிடம் விபரம் கேட்க... அதற்கு அவர்... " தானே - எந்த மொழி நடிகை? உங்களுக்கு நடிகைகள் பெயர்தான் நியாபகத்துக்கு வருமா..?  ஏன்..? கேரள முதல்வர் (உம்மன்) சாண்டி - முன்னாள் ஜனாதிபதி நீலம் (சஞ்சீவரெட்டி) இவர்கள் பெயர்கள் எல்லாம் நியாபகம் வராதா..?" என்றார்..! அட..! ஆமாம்..! செம்மை நோஸ்கட்..!

அதுசரி..., உம்மன் 'சாண்டி' & 'நீலம்' சஞ்சீவரெட்டி : இருவரும் புயலானது எப்படி..?

அதே ஜாலி மூடில்... புயல் சோகத்தை சற்று ஒதுக்கிவிட்டு... அதுகுறித்து தேடிப்பிடித்த வித்தியாசமான விஷயங்களை சகலருக்கும் பகிரலாம் என்றுதான் இப்பதிவு..!

'புயலுக்கு எப்படி பெயர் வைக்கிறார்கள்' என்பது மெய்யாலுமே ஒரு சுவாரஸ்‌யமான தகவல்தான் சகோஸ்..! புயலுக்கு பெயர் வைக்கும் வேலையை அமெரிக்கா 1950-லேயே ஆரம்பித்து விட்டது. இதற்கு சொல்லப்பட்ட காரணம் : ஒரே வருடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட புயல்கள் வருமாயின் வருஷமும் மாதமும் தேதியும் சொல்லி புயலை அழைத்தால் குழம்புமாம்; இதுபோன்ற பெயர் வைத்தால்... அப்போதுதான் வானிலை ஆராய்ச்சி அதிகாரிகளிடையே புயல் பற்றி நியாபகம் வைக்க, மக்களை எச்சரிக்க மற்றும் நிவாரண உதவிக்கான தகவல் பரிமாற்றத்துக்கு எளிதாக இருக்குமாம்..!

இப்படியாக  அமெரிக்க வழக்கத்தை உலகம் முழுக்க படிப்படியாக ஏற்றுக்கொண்டு... அந்தந்த கடல் பிராந்தியத்துக்கு என தனித்தனி பெயர்கள் சூட்டுவது என்றும் அவர்களுக்குள்ளே ஒரு எழுதப்படாத சட்டம் நாளடைவில் சேர்ந்து கொண்டது. அட்லாண்டிக் - பசிபிக் - இந்திய பெருங்கடல் என பகுதிவாரியாக- திசை வாரியாக தனித்தனி பெயர்கள் உருவாக்கப் பட்டுள்ளன..! ஒரு கடற்பகுதியின் புயல் பெயர், இன்னொரு கடற்பகுதியின் புயல் பெயராகாது..! அதனால்... லில்லி, இசபெல், கேத்ரீனா, ஐரின், ரீட்டா... சான்டி எல்லாம் இந்தியா வரவேமாட்டார்கள்..! அதேபோல... மாலா, அய்லா, லைலா, நர்கிஸ், நிஷா... நீலம் எல்லாம் அமெரிக்கா செல்லவே மாட்டார்கள்..! 

எனவே, ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் புயலுக்கான பெயர்ப்பட்டியல் தயாராகவே அவரவரிடம் இப்போதுள்ளது. அதாவது, 'வீசக்கூடிய அடுத்தடுத்த புயல் பெயர்கள் என்னன்ன' என்று எல்லாருக்கும் தெரியும்..! ஆனால், எப்போது, எங்கு அவை மையங்கொள்ள விருக்கின்றன, எந்நேரம் எவ்விடம் கரையைக்கடக்க விருக்கின்றன... எங்கெல்லாம் வீசவிருக்கின்றன... எவ்வளவு மழையை எங்கெல்லாம் பொழியவிருக்கின்றன... என்றுதான் எவருக்கும்- எந்த நவீன அறிவியலுக்கும்- இன்றுவரை கூட தெரியாது..! இறைவனைத்தவிர..!

தனது அருளுக்கு முன்னால் நற்செய்தியாக அ(இறை)வனே காற்றை அனுப்புகிறான். அது கனமான மேகத்தைச் சுமக்கும் போது இறந்து போன ஊருக்கு அதை ஓட்டிச் செல்கிறோம். அதிலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் எல்லாப் பலன்களையும் வெளிப் படுத்துகிறோம். இவ்வாறே இறந்தவர்களையும் வெளிப் படுத்துவோம். (இதன் மூலம்) நீங்கள் படிப்பினை பெறக்கூடும். (அல்குர்ஆன் 7:57)  
சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை. (அல்குர்ஆன் 15:22)
அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது. (அல்குர்ஆன் 24:43).

சரி..! இவை ஒருபுறமிருக்க, இந்த பெயரிடும் அமெரிக்கப்பழக்கம் இந்தியா வந்து சேர்ந்தது எப்போது..?

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் வைக்கும் வழக்கம் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தொடங்கியது. சர்வதேச வானிலை ஆராய்ச்சி மைய குழுமத்தில் உறுப்பினர்களாக இருக்கும் வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியன்மார், ஓமன், பாகிஸ்தான், தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகள் எல்லாம் ஓர் நாள் ஒன்றுகூடி... "நம்ம நாட்டில் வீசக்கூடிய புயலுக்கு என்ன பெயர் வைக்கலாம்..?" என்ற பெயர் பட்டியலை வெளியிட்டது..! அதில் ஒவ்வொரு நாடும் ஆளுக்கு எட்டு பெயர்களை முன்மொழிந்துள்ளன..!


மேற்படி ஆங்கில அகர வரிசைப்படியான அட்டவணையில், முதலாம் பட்டியலில் 'ஓனில்' என்று ஆரம்பித்து.... 'முக்தா' முடிந்து... இரண்டாம் பட்டியலில் 'ஒக்னி' என தொடர்ந்து... தற்போது... நான்காம் பட்டியலில் 'நிலம்' (நீலம் அல்ல) வரை நடந்து முடிந்து இருக்கிறது..! தானே தவிர்த்து பெண் பெயர்கள் மட்டுமே ஊடகங்களால் அதிகம் விளம்பரப்படுத்தப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை..! முர்ஜன், கிரி, பாண்டு, பையன், ஆகாஷ்... இதெல்லாம் பற்றி எவ்வளவு கேள்விப்பட்டு இருக்கிறோம்..? 

சரி... அடுத்த புயல் பெயர்... 'மஹாசென்' (நம்ம ஆளுங்க... 'மஹேசன்' என்பார்களோ..?) இது செய்தியில் எப்படி சொல்லப்படுகிறது என்று பொறுந்திருந்து பார்ப்போம்..! எனக்கென்னமோ... இனி அடுத்த புயல் பெயராக... 'ஹெலன்' மட்டுமே தலைப்புச்செய்தியில் தடபுடலாக பலரவுண்டு வலம் வரும் போல் படுகிறது..! காரணம்..? உங்களுக்கே தெரியும்..! Sholay - 'Mehboobaa... mehboobaa...' ஹெலன் - ஒரு நடிகை என்று..! அ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ .....!

ஆக மொத்தத்தில்... இந்த எட்டு நாடுகள் ஒட்டு மொத்தமாக பரிந்துரைத்த 64 பெயர்கள் தான் தற்போது ஒவ்வொரு புயலுக்கும் பெயராக வைக்கப்பட்டு வருகிறது என்ற வரலாற்று முக்கியத்துவமான செய்தியை பகிர்ந்து கொண்டாயிற்று..! :-) பெயரை தேர்ந்தெடுக்கும் போது, சிறியதாக, எளிதில் உச்சரிக்கக் கூடியதாக, சர்ச்சை இல்லாத பெயராக இருக்க வேண்டும் என்ற ஒரு சில விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவாம்..! ஆனால், பாக்ஸ் & பங்ஸ் ரெண்டும் சேர்ந்து ஹிந்தி நடிகைகள் பெயர்களையே அதிகம் தேர்ந்தெடுத்து இருப்பதை கவனிக்கவும்..! :-) 

இப்படி பரிந்துரைக்கப்பட்ட 64 பெயர்களில் இது வரை 30 பெயர்கள்  உபயோகப் படுத்தப்பட்டுள்ளன. இப்படியாக... அந்த 64 பெயர்களும் முடிந்துவிட்டால், அடுத்து...?

ஹி...ஹி...ஹி... 65 வது புயலின் பெயர்... மீண்டும்.... அதே பழைய 'ஓனில்' தான்..! 92 -வது புயல் பெயர் 'தானே' தான்..! 94 - 'நீலம்'..! என்னது...? அது எப்படி வரலாமா..? அப்போது... பெயர்க்குழப்பம் வரும்மா..? தகவல் தொடர்பு பாதிக்குமா..? என்ன சொல்றீங்க சகோ..?

ஏங்க... பில்லா, படிக்காதவன், ஆயிரத்தில் ஒருவன், பலே பாண்டியா, பொல்லாதவன்... இதெல்லாம் மறுபடியும் வரும்போது ரசிகர்களை கொழப்பவா செய்யுது...? இல்லைலே..? அப்புறம் என்னங்க...?  :-))

11 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...