அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, June 16, 2012

35 அமீர்கான் திருந்துவாரா..?

'Bollywood' என்றழைக்கப்படும் ஹிந்தி சினிமா உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமீர்கான் என்பவர், 'சத்யமேவ ஜெயதே' எனும் பெயரில் 'ரியாலிட்டி ஷோ' என்ற வகைப்படும்... சமூக விழிப்புணர்வை தூண்டும் ஒரு நிகழ்ச்சியை  ஸ்டார் தொலைக்காட்சியில் நடத்தி வருவது... பொதுவாக தற்போது பல தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நிகழ்ச்சி... ஏதோ நல்ல நிகழ்ச்சிதான்..! ஆனால்.... அதை நடத்துபவர்..?!?!?

'நிகழ்ச்சி நடத்தும் ஹிந்தி சினிமா நடிகர் அமீர்கான்'

வெகுஜன ஊடகங்களில் தொலைக்காட்சியின் தாக்கம் முக்கியமானது. பெரும்பாலும் இது ஒரு நல்ல சமூக வாழ்வியலுக்கு வழிகாட்டாத பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத்தான் அதிகம் ஆதரிக்கும் என்றாலும், இதன் மூலமாகவும் சிலநேரம் ஒரு சில நல்ல நிகழ்ச்சிகளை நடத்திக்காட்ட முடியும் என்பதற்கு மேலும் ஓர் உதாரணமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

கடந்த மாதம் முதல்... வாராவாரம் நடந்து வரும் இந்த தொடர் நிகழ்ச்சியில்... வாரம் ஒரு சமூக தீமையை  எடுத்துக்கொண்டு, அது பற்றி அலசுகிறார் அமீர்கான். "பெண் சிசுக்கொலை", "சிறுவர் பாலியல் பலாத்காரம்", "இந்தியாவில் உள்ள வரதட்சணை முறை", "மருத்துவ துறையின் கள்ளத்தனம்"... இப்படியாக தொடர்ந்து போய்க்கொண்டு இருக்கிறது..!

இந்நிகழ்ச்சியில்... மேற்படி சமூக தீமையால் பாதிக்கப்பட்டவர், பொறுப்பில் இருந்து அத்தீமையை நிவர்த்தி செய்து இருக்கக்கூடியவர், பிரச்சினையை பற்றி அறிந்தவர்... தெரிந்தவர்... என சகலரும் வந்து அவர்களின் கருத்தை அமீர்கானின் கேள்விக்கு பதிலாக சொல்கிறார்கள்..! ஆக ஒரு நல்ல விஷயத்தைத்தான் முன்னெடுத்து செய்கிறார் அமீர்கான். ஓகே..!

நல்லதோ கெட்டதோ பணத்துக்காக எதையும் செய்யும் சினிமா நடிகர்தான் அமீர்கான் என்றாலும், ஓரளவுக்கு சமூக அக்கறை உள்ளவர் போல இப்போது நடந்து கொள்கிறார்..! இந்த டிவி நிகழ்ச்சியே கூட டி.ஆர்.பி ரேட்... அப்புறம், அதன் மூலம் வரும் வியாம்பர வருவாய்... ஆகிய இவற்றுக்குத்தான் முக்கியத்துவம் தந்து... சம்பந்தப்பட்ட அமீர்கான் மற்றும் டீவி ஆகியோர் இலாபம் கொழிக்கும் வரைதான் இந்த 'சமூக அக்கறை' டிவியில் ஓடும் என்றாலும், அதுவரையில் இதனூடே இவர்கள் எல்லாம் சேர்ந்து சமூகத்துக்கு அவசியமான நல்ல சிந்தனையை & நல்ல படிப்பினையை &  நல்ல கருத்தை ஊட்டினால்... நமக்கு மிகவும் மகிழ்ச்சிதான்..!

முதல் மூன்று வாரம் சாதாரணமாக சென்று கொண்டிருந்த இந்த தொடரானது... மருத்துவ துறையையும் அதில் நடைபெறும் கள்ளத்தனங்களையும் ஆதார-சாட்சியோடு தொட்டவுடன் கன்னாபின்னா வென்று சூடு பிடித்து... செய்தி ஊடகங்களில் எல்லாம் வந்து... எனக்கும் தெரியவந்து(!)... விளைவு... தொலைகாட்சி டிஆர்பி ரேட்டில் எகிறி விட்டது இந்த நிகழ்ச்சி..!

அந்த குறிப்பிட்ட மருத்துவ கள்ளத்தன எபிசோடில்... சிறு பிரச்னைகளுடன் வரும் நோயாளிகளிடம் பல்வேறு இல்லாத வியாதிகளை சொல்லி பணம் கறக்கும் பணவெறி மருத்துவர்களை பற்றியும், மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் ஒழுங்கீனம் குறித்தும் அந்த சத்திய மேவ ஜெயதே எபிசோடில் அமீர்கான் காட்டியிருந்தார். இதுகண்டு இந்நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய மருத்துவ சங்கம், 'மருத்துவதுறையை அமீர்கான் கேவலப்படுத்துவதாகவும் உடன் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் எச்சரித்தது.

இது குறித்து விளக்கமளித்த ஆமிர்கான், மருத்துவ துறையின் மீது தாம் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் நல்ல மருத்துவர்களை தாம் கேவலப்படுத்தவில்லை என்றும் தாம் ஒரு போதும் மன்னிப்பு கேட்க போவதில்லை என்றும் வழக்கை சந்திக்க தயார் என்றும் அமீர்கான் கூறியுள்ளார். உண்மையில் இத்தகைய முறைகேடான மருத்துவர்கள் தாம் மருத்துவதுறையை கேவலப்படுத்துவதாகவும் ஆமிர்கான் தெரிவித்தார்.

மேற்படி அமீர்கானின் இந்த வாதம் சரியானதுதான்..! ஆனால், அதை அமீர்கான் சொல்லலாமா..? அதற்கு தகுதி உள்ளதா..?

"ஒரு துறையில் உள்ள ஒருவர் பிறிதொரு துறையினரை பற்றி குற்றம் சொல்வதற்கு முன்னர், தான் இருக்கும் துறை சுத்தமானதா..? குற்றம் அற்றதா..? நேர்மையானதா..? ஒழுக்கமானதா..? தனது துறையால் சமூகத்துக்கு  நன்மை விளைகிறதா..? அதில் இருக்கும் தான் சரியாகத்தான் வாழ்ந்து வருகிறோமா..? ---என்று, இதை எல்லாம் சிந்திக்க வேண்டாமா..?

இவற்றுக்கு எல்லாம் பதில் 'இல்லை'... 'இல்லை'... 'இல்லை'... என்றே வருமாயின்...  முதலில் தானும் தன்னை சரி செய்து கொண்டு... தான் சார்ந்த துறையை சுத்தப்படுத்தி விட்டு... (அவ்ளோ எல்லாம் முடியாது எனில் அட்லீஸ்ட்...) தனது துறையின் தவறுகளை- குற்றங்களை- ஒழுக்கக்கேடுகளை- கள்ளத்தனத்தனங்களை- போலித்தனத்தை-எல்லாம் சிறிதாவது ஏதோ ஒரு வாரம் சத்தியமேவ ஜெயதே -வில் விமர்ச்சித்து விட்டு, அதற்கு அப்புறம் எங்களை சொல்"

---என்று இதுவரை விமர்சிக்கப்பட்டவர்கள் இவரிடம் கேட்டால் என்ன பதில் உள்ளது அமீர்கானிடம்..?

அதுமட்டுமல்ல... "இவ்வளவு சமூக அக்கறை உள்ளவர், நடிகையின் ஆடை குறைப்பு ஆபாசம், பெண்கள் மீதான பாலியல் வக்கிரம், அடிதடி வெட்டு குத்து இரத்தம் சொட்டும் வன்முறை, அசிங்கமான உடல் அசைவுகள் கொண்ட சினிமாபாடல் டான்ஸ் ஒழுங்கீனம், இரட்டை அர்த்த கெட்டவார்த்தை வசனங்கள், அவ்வப்போது சிகரட்/தண்ணி/சூதாட்டம் போன்ற கெட்ட செயல்கள் புரிதல் ஆகியன நீக்கமற எங்கும் நிறைந்து காணப்படும் தற்கால சினிமாவில் அல்லவா உள்ளது இவரின் முதலீடு..? இன்னும் இதில் மட்டும் நடிப்பது எங்ஙனம் தகும்..? எப்படி நேர்மையாகும்..?" என்று யாராவது... இல்லை... நானே கேட்டால் என்ன பதில் உள்ளது அமீர்கானிடம்..?

'அப்படித்தான்  சினிமா இருக்கும்; அப்படித்தான் நடிப்பார்' எனில், இப்படியான நிகழ்ச்சி நடத்த அவருக்கு எந்த தார்மீக தகுதியும் இல்லை எனலாம்..!

இதுபோன்ற சினிமாவான சமூக தீமையை ஒருபுறம் ஆதரித்துக்கொண்டு... மறுபுறம் சமூக தீமையை எதிர்த்து 'சத்தியமேவ ஜெயதே' என்று கூறிக்கொண்டு இருந்தால் அது அப்பட்டமான போலித்தனம் இல்லையா...? சினிமாவுக்கு வெளியேயும் எதற்கு இந்த இரட்டைவேஷம்..?

மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து- மது விலக்கு  குறித்து- விஜய் மல்லையா மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தால்... நாம் என்ன சொல்வோம்..? "முதலில் நீ உனது பிராந்தி-விஸ்கி-ரம்-பீர் ஃபேக்டரியை மூடு; அப்புறமா வந்து எங்களுக்கு அறிவுரை சொல்லு.." என சொல்ல மாட்டோமா..?

அதேதானே... இங்கே..!? திரைத்துறையில் இல்லாத  சிறார்/பெண்கள் பாலியல் வக்கிரமா மற்ற இடத்தில் உள்ளது..? அங்கே இல்லாத 'கள்ளத்தனமா'..? நடிகர்களிடம் இல்லாத வரதட்சணையா..? இதை எல்லாம் பற்றி  இதுவரை ஏதாவது சொன்னாரா அமீர்கான்..? இப்படி இரண்டு வேடங்களில் நடிக்கிறாரே... இவர்..? ஆக, அமீர்கான் செய்வது சரியா..? 

ஒரு தீமையை - ஒரு விஷச்செடியை ஒழிக்க வேண்டும் என்றால்... முதலில் அந்த செடியின் ஆணிவேரை அல்லவா பிடுங்கி எறிய வேண்டும்..? நுனிப்புல் ட்ரிம் பண்ணுவது என்ன பலனை தரும்..? டி ஆர்  பி  ரேட்டிங் வருவாய் தவிர..?

"வரதட்சணைக்கு எதிரான சட்டம் கொண்டுவந்த மந்திரியும் அதை வைத்து தீர்ப்பளித்து விட்ட நீதிபதியும் தன் பிள்ளைகளுக்கு சம்பந்தம் பேசும்போது வரதட்சணை வாங்குகிறார்களே..! இதுவா சட்ட அமலாக்கம்..? இப்படியா வரதட்சணையை ஒழிப்பது..? சட்டம் வெறும் வார்த்தையாக அல்லவா உள்ளது..? மக்கள் உள்ளத்தில் இல்லையே..! தீமைக்கு ஆணிவேரான 'வரதட்சணை தவறில்லை' என்ற புரிதலை ஒழிக்காமல் அதை கேட்டு வாங்குவோரை சாடுவதால் மட்டும் தீமை ஒழியுமா..?"
-----என்றல்லவா கேட்டிருக்க வேண்டும் அமீர்கான்..!?
.
"பெண் குழந்தை பிறந்தால்... காதுகுத்து- பூப்புனித நீராட்டு விழா சடங்கு- நிச்சயம்- பரிசம்- கல்யாணம்- சீதனம்- வரதட்சணை- நகை- விருந்து- வளைகாப்பு- தலைப்பிரசவம்- பெயர் வைப்பு- பண்டிகை சீதனம்- இத்யாதி... இத்யாதி... என இவ்வளவு செலவுகளை பெண்ணை பெற்றவர் தலையில் கலாச்சாரம் என்று சுமத்திவிட்டு... இதையெல்லாம் அரசும் சமூகமும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு... தீமைக்கு ஆணிவேரான இதையெல்லாம் ஒழிக்காமல்... 'ஸ்கேனில் பெண் குழநதை என்றால் கலைக்காதே... பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் தராதே' தண்டனை உண்டு என்றால் இது... அரசே... சமூகமே... நியாயமா..? பெண்ணின் பெற்றோரை மட்டும் சாடுவதால் மட்டும் தீமை ஒழியுமா..?"
 -----என்றல்லவா கேட்டிருக்க வேண்டும் அமீர்கான்..!?

மருத்துவத்தில் கள்ளத்தனம் உண்டாகியுள்ளது என்றால்... அதற்கு காரணமான மருத்துவ படிப்புக்கான அநியாய கட்டணம், கல்லூரிகளின் அராஜக டொனேஷன், மருத்துவ கல்வி மற்றும் அதன் வேலைக்கான லஞ்சம், மருந்துகளில் ஊழல், மருத்துவமனை கட்ட-நடத்த-லஞ்சம், வருமானவரியில் நீக்கு போக்கு, அதற்கு லஞ்சம், இதற்கு எல்லாம் பின்புலமாக இருக்கும் அரசியல்... அரசியல்வாதிகள்... தனியார் மருத்துவமனை உயிர்பெற... அரசு மருத்துவமனையை கோமாவில் கிடத்துவது...  இதற்கும் லஞ்சம்... என்று எவ்வளவோ உள்ளதே..!? தீமைக்கு ஆணிவேரான இதையெல்லாம் ஒழிக்காமல் மருத்துவர்களை மட்டும் சாடுவதால் தீமை ஒழியுமா..?"
-----என்றல்லவா கேட்டிருக்க வேண்டும் அமீர்கான்..!?

"பெண் சிசுக்கொலை", "பாலியல் பலாத்காரம்", "வரதட்சணை", "(மருத்துவ துறை எனும்) வியாபாரத்தில் கள்ளத்தனம்" ஆகிய இவற்றுக்கு உடனடி தீர்வாக... ஏக இறைவனை நம்பி, இறைகட்டளைகளுக்கு மாறு செய்தால் ஏற்படும் மறுமை தண்டனை உண்டு என்று பயந்தால்... இவற்றை தடுக்க புதிய தடைச்சட்டம் ஏதும் போடாமலேயே இவற்றை ஒழிக்கலாமே..?


'இதெல்லாம் இறையச்சம் கொண்ட இஸ்லாமிய வாழ்வியலில் மட்டுமே உடனடி சாத்தியம்' என்று ஒரு 'முஸ்லிம்' ஆன அமீர்கானுக்கு தெரியாமல் போய் விட்டதே..!

இது ஏன் அமீர்கானுக்கு தெரியவில்லை..?

எப்படி தெரியும்..?

மனைவி அல்லாத அந்நிய பெண்களை இச்சையோடு பார்ப்பது, ஆபாசமாக காதல்-காம வசனம் பேசுவது, உடலின் எல்லா இடத்திலும் தொடுவது, முத்தமிட்டு கட்டிபிடித்து டான்ஸ் ஆடுவது, இதை ஏதோ தம் சாதனை போல(!?) சொந்த காசில் வேறு சினிமாஸ்கோப்பில் படம் பிடித்து உலக மக்களுக்கும் வெள்ளித்திரையில் போட்டுக்காண்பிப்பது, அதன் மூலம் கோடிகளில் இலாபம் பெறுவது, அந்த காசில் உண்டு  உயிர்வாழ்வது... ஆகிய... இதெல்லாம் 'ஹராம்' - 'முஸ்லிமான தனக்கு இறைவனால் தடை செய்யப்பட்டது' என்ற அடிப்படையைக்கூட அறியாதவர் அல்லவா ஆமிர்கான்..!? ஆகவே... அவருக்கு 'தெரியாது' என்றே நம்புவோம்..!

சரி... இந்நிலையில் இந்த டிவி நிகழ்ச்சி... நல்ல எண்ணம் கொண்ட நேர்மையான சிந்தனை கொண்ட பொதுமக்களிடம் இனி சீரியஸாக எடுபடுமா..?

ஒன்று.... அமீர்கான் இனி மேற்சொன்ன அசிங்கங்கள் உள்ள சினிமாவில் ஒருக்காலும் பணியாற்றக்கூடாது..! 'இல்லை, அப்படித்தான் அந்த சினிமா இருக்கும்' எனில் அத்துறையை விட்டு மனம் திருந்தியவராக இதுவரை செய்த பாவத்துக்கு மன்னிப்பு கேட்டவராக இன்றே வெளியேறி விட வேண்டும்...! செய்வாரா ஆமிர்கான்..?


சரி, இதுவரை எப்படியோ போய்த்தொலையட்டும்...! 'சமூக தீமையை எதிர்க்கும் மனிதன்' & 'முஸ்லிம்' என்று இரண்டிலும் தன்னளவில் நேர்மையில்லாத அமீர்கான், இனியாவது திருந்துவாரா..?
.
'வாய்மையே வெல்லட்டும்...!'


'Let Truth Alone Prevail..!'

35 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...