அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Wednesday, June 15, 2011

15 அதிகநேரம் அமர்ந்திருந்தால் அதிவிரைவில் அமரர்...!? அதிர்ச்சிஅறிக்கை..!

எனதருமை சகோ..!                        
          சென்றவருடம்  டிசம்பரில், அலுவலில் அல்லது பதிவுலகில்(?!) 'மணிக்கணக்கில் பொட்டி தட்டுவோர்' -களுக்காக...
 ---என்று உங்க உடம்பு நோகாமல் இருக்க(?) ஒரு பதிவு போட்டிருந்தேன். அப்போது அதன் அதிபயங்கர பின்னணி தெரியாமல் அப்படி ஒரு பதிவு போட்டுவிட்டேன். ஸாரி...! ஆனால், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதாலேயே கூடிய சீக்கிரம் உயிர்போக வாய்ப்பு அதிகமாம்..!? இப்படி ஒரு அதிர்ச்சி ஆய்வறிக்கை ஒன்றை சொல்லி இப்போது வயிற்றில் புளியை கரைக்கிறார்கள்..! என்னத்த சொல்ல சகோ..?! அந்த அறிக்கை சொல்வதை நீங்களே தொடர்ந்து படியுங்களேன்..!
 .
மணிக்கணக்காய் டிவி பார்ப்பதும், கணிணி முன்னாலேயே (வேலையாகவோ அல்லது வெட்டியாகவோ) பொழுதன்னிக்கும் அமர்ந்து கிடப்பதும், அலுவல் என்றாலும்... அது தற்சமயம் "மேசை வேலை" என்றான நிலையில்... இந்த இருபத்தோராம் நூற்றாண்டில், உலக மனிதர்களின் உட்காரும் சராசரி நேரம் 9.3 மணிநேரமாக அதிகரித்துவிட்டது..! இவ்வுலகில் மனிதர்கள் தூங்கும் சராசரி நேரம் கூட, 7.7 மணிநேரமாக சுருங்கிவிட்டது..!

என்னதான் ஒருவர் உடற்பயிற்சி செய்பவாராக இருந்தாலும், அவர் தொடர்ந்து ஒருநாளைக்கு 6 மணி நேரங்களுக்கு மேல் தொடர்ந்து அமர்பவராகவே இருந்தால், அவருக்கு 40% வரை இறப்பதற்கு வாய்ப்பு மற்றவரைவிட அதிகம் என்கிறது அந்த அறிக்கை..! 
வேறுவழியின்றி 8 மணிநேரம் அமர்ந்தே பணியாற்றும் ஒவ்வொருவரும் அதற்கு அதிகமாய்... வீட்டில் சென்றும் டிவி/கணிணி முன் அமர்வதால் வருகிறது மேலும் ஆபத்து..! இவர்களுக்கு அரைமணி நேர உடற்பயிற்சி எல்லாம் ஒரு நாளைக்கு போதவே போதாதாம்.
.
உட்கார்ந்தே இருப்பது உடல் எடையை கூட்டுகிறது. அமர்ந்திருக்கும்போது, கால் தசைகள் வேலை செய்வதில்லை. கலோரி எரிப்பும், என்சைம் சுரப்பும்  குறைந்து விடுகிறது. உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்டிரால் குறைகிறது. இதனால், இதய நோய், ரத்த அழுத்தநோய், சர்க்கரை நோய் பாதிப்பு ஆகியன வர அதிக சாத்தியம் உண்டு.

8 மணிநேரம் நின்று கொண்டு வேலை பார்ப்பவரை விட 8 மணிநேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவருக்கு இதயநோய் வர இருமடங்கு சாத்தியம். அப்படி... 8 மணி நேரம் தினமும்  உட்கார்ந்தவாறே "மேசைவேலை" பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தும், 3மணி நேரம் அல்லது அதைவிட அதிகம் ஓரிடத்தில் அமர்ந்து டிவி பார்ப்போருக்கு 64% மாரடைப்பு வர சாத்தியம் உண்டு என்கிறது அறிக்கை. அப்படி அமரும்போது 135' பாகையில் அமர்வது ஓரளவு நல்லது. ஆகவே இந்த, நம் மனித உடலமைப்பு நீண்ட நேரம் உட்கார்வதற்காக படைக்கப்பட வில்லையாம்.
.
நூறு வருடங்களுக்கு முன்னால், இப்போதுள்ள நவீன மின்சார இயந்திர சாதனங்கள் ஏதும் கண்டுபிடிக்காமல் இருக்கும்போது, மனிதர்கள் தம் அன்றாட தேவைகளை தாமே தம் உடலுழைப்பால் பூர்த்தி செய்து கொண்டனர். அதனால், இப்போதுள்ள உடற்பருமன் மற்றும் அதானால் வரும் நோய்கள் ஏதும் அப்போது இல்லை. இப்போதோ அனைத்துக்கும் இயந்திர உதவி மனிதனுக்கு அத்தியாவசியமாகிவிட்டது. அதானால்தான் வருகின்றன அத்தனை நோய்களும்.
.
இதற்கு இனி நாம் என்ன மாற்று வழிகளை சிந்தனை செய்யலாம்..?
.
நீண்டநேரம் அமர்ந்தவாறே நம் பணி இருக்குமானால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அல்லது அப்படியொரு வாய்ப்பை நாமே உருவாக்கியாவது தொடர்ச்சியாக அமராமல், அவ்வப்போது எழுந்து ஒரு உலா போய் வருதல் நலன் பயக்கும். நமக்கு ஏதும், கைபேசி அழைப்பு வந்தால் ஓரிடத்தில் அமர்ந்து பேசாமால் சற்று உலாசென்று கொண்டே பேசலாம். எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் முடிந்தவரை சற்று நிற்கலாம். லிஃப்ட் இருந்தாலும், அவசரம் இல்லையேல்... படிக்கட்டை உபயோகிக்கலாம். சிறுதொளைவு என்றால் முடிந்தவரை காலாற நடந்து சென்றுவரலாம். சிறுதூரத்துக்கு இனி மிதிவண்டி பயன்படுத்தலாம். உட்கார்ந்தவாறே சுவிங்கம் மெல்வது கூட உடற்பயிசியாம். 

Sitting is Killing You


_________________________________________________________________________________

ம்ஹூம்...சகோ..!
நீங்க முதல்ல அந்த இடத்தை விட்டு எழுந்தறிங்க..!
டக்குன்னு எழுந்தறிங்க சொல்றேன்..!  என்னது..?
ஓட்டா..?  பின்னூட்டமா..?
ஃபாலோவர் போடறீங்களா..?
அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் சகோ..!
இப்போது அதைவிட ரொம்ப முக்கியம்...
உடனே கொஞ்சம் காலாற நடந்துட்டு வாங்க..!
ஏனெனில்...
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வ'மாம்..!
Health is Wealth -ன்னு பேசிக்கிறாங்க..! நாம்... வருமுன் காப்போம் சகோ..! 


டிஸ்கி :  
நாங்கூட இந்த பதிவை நின்னுகிட்டே டைப் அடிச்சேன்னா பாத்துக்கோங்களேன்..!

15 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...