திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் ஃபாத்திமா. இவர் ஒரு அங்கன்வாடி ஊழியர். இவரது மூத்த மகள் ஹலிமா தர்வேஷ் (20). நெல்லை மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 3-ம் ஆண்டு பயில்கிறார்.
கடந்த ஆண்டு பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் கடந்த ஆண்டு அமெரிக்க தூதரகத்தினர் நடத்திய ஆங்கில பேச்சு போட்டியில், "ஜனநாயகம்" என்ற தலைப்பில் பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. பின்னர், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்றை ஒளிபரப்பி, அதில் சில விமர்சனங்களை சொல்லச்செய்தனர். அதையும் சிறப்பாக செய்த மாணவி ஹலிமாவை, அமெரிக்க அரசின் செலவில் 10 மாதங்களுக்கு வடக்கு அலபாமா பல்கலையில் கலாச்சாரம் மற்றும் கம்ப்யூட்டர் கல்விக்கு தேர்வு செய்தனர். மாதம் சுமார் ரூ.12 ஆயிரம் ஊதியத்துடன் தங்கும் வசதி, உணவுடன் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.
அமெரிக்காவில் 10 மாத படிப்பிற்கு பின், தற்போது நெல்லை திரும்பியுள்ள மாணவி ஹலிமா தர்வேஷ் கூறியதாவது :-

மிகவும் பின்தங்கிய பகுதியில் வளர்ந்த நான் சிறுவயதில் நன்றாக படித்தேன்.என் தந்தை தர்வேஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாளராக இருந்தார். நாங்கள் சிறுவயதாக இருக்கும்போது இறந்துவிட்டார். அப்பாவின் மரணத்தால், குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. உறவினர்களின் செலவில்தான் மேலப்பாளையம் பெண்கள் கல்லூரிக்கு பயில வந்தேன்.
அப்போதுதான் இந்த அமெரிக்க வாய்ப்பு கிடைத்தது. தனியாக என்னை அமெரிக்கா அனுப்புவதற்கு அம்மாவிற்கு மனமில்லை என்றாலும், கல்வி கற்கும் வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பதற்காக அனுப்பி வைத்தார். கடந்த 10 மாதங்களாக அமெரிக்காவில் நிறைய கற்றுக்கொண்டேன். நவீனமுறையில் கற்றுக்கொடுத்தல், கம்ப்யூட்டர் துறையில் நாம் 5 ஆண்டுகளுக்கு பின்பு படிக்கும் விஷயங்களை அங்கு உடனுக்குடன் கற்றுத்தருகிறார்கள். என்னைப்போலவே ஜோர்டான், இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 88 பேர் அங்கு பயின்றோம்.
பெற்றோரின் பிரிவு தெரியக்கூடாது என்பதற்காக ஹேஸ்டிங்க்ஸ் தம்பதியினர் என்னை குழந்தையாக தத்தெடுத்துக்கொண்டு உதவிகள் புரிந்தார்கள். மாதாமாதம் அமெரிக்கா தந்த உதவித்தொகையை, எங்கள் குடும்ப வறுமையை போக்குவதற்காக வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். சாதாரண குடும்பத்தை சேர்ந்த எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. கல்லூரி முடிந்த பிறகு வீட்டின் தேவைக்காகவும் 11-ம் வகுப்பு பயில உள்ள தங்கை ரிஸ்வானாவிற்காகவும் நான் ஏதாவது வேலையில் சேர்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். தொடர்ந்து படித்து ஐ.ஏ.எஸ்., படிப்பேன்.
***************************************************************
வாழ்த்துகள் சகோ.ஹலிமா..!
உலகஅளவில் செய்த உங்கள் சாதனைகண்டு மிக்க மகிழ்ச்சி..!
தங்களைப்போன்ற மாணவர்களால் மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி, தமிழ்நாடு, இந்தியா என அனைத்தும் உலக அரங்கில் ஒரேநேரத்தில் பெருமை அடைகிறது.
இறைவனுக்கே புகழனைத்தும்.
கூடிய விரைவில் தங்கள் நன்மையான விருப்பங்களுக்கான... தங்களின் இடைவிடா முயற்சிகளுக்குக்கு, தக்க உயர்ந்தபலன் தந்து அவற்றை நீங்கள் விரும்பியபடி, நிறைவேற்றி வைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.
அமெரிக்கா போன்ற... பொருளாதாரத்திலும் கல்வியிலும் ஒருசேர வளர்ந்த பணக்கார வல்லரசுகள், இதுபோன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் மட்டும் ஈடுபடுவது... வருங்காலத்தில் உலகில் அமைதி நிலவ வழிவகுக்கும். அமெரிக்காவின் இந்த நற்செயலை வரவேற்போம்.
அமெரிக்கா போன்ற... பொருளாதாரத்திலும் கல்வியிலும் ஒருசேர வளர்ந்த பணக்கார வல்லரசுகள், இதுபோன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் மட்டும் ஈடுபடுவது... வருங்காலத்தில் உலகில் அமைதி நிலவ வழிவகுக்கும். அமெரிக்காவின் இந்த நற்செயலை வரவேற்போம்.
28 ...பின்னூட்டங்கள்..:
எங்களுடைய வாழ்த்துகளும் சகோ.ஹலிமா..!
தங்கள் எண்ணப்படி வாழ்க்கை அமைய இறைவன் அருள் புரிவானாக. ஆமீன்.
பகிர்வுக்கு நன்றி சகோ. முஹம்மது ஆஷிக்.
salam!
இந்த செய்தியை குமுதம் எனும் "சினிமா" பத்திரிகையில் முதலில் படித்தேன்.
அமெரிக்கா சென்று சாதித்து திரும்பிய சகோதரி ஹலிமா அவர்களே,
வாழ்த்துக்கள்.
சென்ற வருடம் எஸ்.எஸ்.எல்.சி.யில் மாநில அளவில் திருநெல்வேலி டவுனில் உள்ள நெல்லை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ஜாஸ்மின் முதல் இடத்தைப்பிடித்த்தார். அவர் 500 மதிப்பெண்களுக்கு 495 மதிப்பெண்கள் குவித்து சாதனை படைத்தார்.
இவ்வருடம் இந்த செய்தி.
இதெல்லாம்,
'முஸ்லிம்கள் தங்கள் பெண்ணுக்கு கல்வி தருவதில்லை',
'வெளியுருக்குக்கு படிக்க அனுப்புவதில்லை',
'இஸ்லாம் பெண்ணுரிமையை பறிக்கிறது',
'அத்தியாவசிய சூழல் என்றாலும்,பெண்ணை வேலைக்கு அனுப்புவதில்லை'
_____என்றெல்லாம் முஸ்லிம்கள் மேல் அவதூறு வாரி இறைப்போருக்கு சரியான பதில்கள்.
வாழ்த்துக்கள் சகோதரி ஹலிமா, உங்களுடைய முயற்சிகள் வென்றி பெற பிரார்த்திகின்றேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்!
சகோதரி மேலும் படித்து ஐ.ஏ.எஸ் ஆக வாழ்த்துவோம்!
சிறந்த பதிவை பகிர்ந்த சகோ ஆஷிக்குக்கு நன்றி!
அஸ்ஸலாமு அலைக்கும்.
நேற்று இரவு இந்த செய்தியை முக நூலில் படித்தேன். முழுவதும் படிக்க இயலவில்லை. முழு செய்தியாக தொகுத்தளித்த ஆஷிக் பாய் அவர்களுக்கு நன்றி.
வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் எண்ணப்படி நீங்கள் உயரவும் மென்மேலும் சிகரங்கள் தொடவும் வாழ்த்துக்கள்.
//அமெரிக்கா போன்ற... பொருளாதாரத்திலும் கல்வியிலும் ஒருசேர வளர்ந்த பணக்கார வல்லரசுகள், இதுபோன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் மட்டும் ஈடுபடுவது... //
நெத்த்தியடி
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
சகோதரி ஹலிமா அவர்கள் மேலும் பல சாதனைகள் புரிய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்!
//முஸ்லிம்கள் தங்கள் பெண்ணுக்கு கல்வி தருவதில்லை',
'வெளியுருக்குக்கு படிக்க அனுப்புவதில்லை',
'இஸ்லாம் பெண்ணுரிமையை பறிக்கிறது',
'அத்தியாவசிய சூழல் என்றாலும்,பெண்ணை வேலைக்கு அனுப்புவதில்லை' //
இது பற்றி எனது கருத்து " இஸ்லாமிய பெண்கள் பற்றி சரியான முறையில் பொது உலகுக்கு தெரியாததுதான் காரணம்"., பல மாற்று மத நண்பர்களை நெருங்கிய நண்பர்களாக கொண்ட என்னிடம் அவர்கள் நமது பெண்கள் குறித்து கேட்கும் கேள்விகள் மிக நகைப்பாக இருக்கும்,.....
சரி அத விடுங்க...அது பற்றி எனது காயல்பட்டினம் பதிவில் தெரிவிக்கிறேன்., , பொதுவாக பெண்களை பற்றிய எனது அபிபராயங்கள் பல வருடங்களாக ( எனது தாயாராயினும், சகோதரியாயினும்) மிக கடுமையானது? அதனை பதிவில் எழுதலாமா ? அதிலும் இஸ்லாமிய பெண்களை பற்றி என்றால் இன்னும் அதிகமாக கோபப்படுவேன் ....
சாம்பிளுக்கு ஒன்று இங்கே - தனது "உடல்" குறித்து சுத்தமாக விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது ( எதை சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா? )
சகோதரிக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். உள்ளூர் மாணவியின் திறமையினை உலகிற்கு அறியச் செய்த அமெரிக்க அரசிற்குப் பாராட்டுக்கள்.
ஹலிமா பற்றிய செய்தியினைப் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி சகோ.
@சிநேகிதன் அக்பர்தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி சகோ.அக்பர்.
@ஷர்புதீன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
எப்போது சகோ ஷர்புதீன்? சகோ.ஹலிமா, அமெரிக்கா போகும்போது, சென்ற வருடத்திலா..? நான் அந்த சினிமா பத்திரிக்கை சைட்டுக்கே போறதில்லை. புத்தகம் படித்தும் வருஷங்கள் பலவாச்சு. வருகைக்கும் தகவலுக்கும் நன்றி சகோ.
@neethimaanஎன்னமோ சகோ.நீதிமான்..! நீங்க பாட்டுக்கு வாரீக...
என்னமோ சொல்றீக...
அப்புறம்,
காணாமல் போய்டுறீக...
இங்கே...
இதுவரை அமெரிக்காவை தூற்றித்தான் எழுதியுள்ளேன். ஆனால், இப்போது முதல்முறை, தலைப்பிலும் பதிவிலும் போற்றியுள்ளேன். இதைத்தான் பதிவின் ஹைலைட் ஆக்கியுள்ளேன்.
ஆனால், மீண்டும் ஒரு பட்டாசு கொளுத்தி போட்டு பற்ற வைக்க முயன்று இருக்கிறீர்கள். சென்ற பதிவில், ரெண்டு வரி பட்டாசுக்கே ரெண்டாயிரம் வரிக்கு விவாதம் ஆகிவிட்டது. எனினும், தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.
@இளம் தூயவன்
@சுவனப்பிரியன்
@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)
@Abdul Basith
அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோதரர்களே.
@ஷர்புதீன் ///" இஸ்லாமிய பெண்கள் பற்றி சரியான முறையில் பொது உலகுக்கு தெரியாததுதான் காரணம்"., பல மாற்று மத நண்பர்களை நெருங்கிய நண்பர்களாக கொண்ட என்னிடம் அவர்கள் நமது பெண்கள் குறித்து கேட்கும் கேள்விகள் மிக நகைப்பாக இருக்கும்,.....///---புரிகிறது சகோ.ஷர்புதீன்.
எனக்கும் இந்த அனுபவம் உண்டு.
உதாரணம்...
"ஏன்டா மாப்ள... முஸ்லிம் பெண்களுக்கு மட்டும்... புருவம் ரெண்டும் ஒண்ணா சேர்ந்துருது..?!" எட்டாவது படிக்கும்போது என் வகுப்புத்தோழன் என்னிடம் கேட்டது.
(இப்போது... மெல்ல திறக்குதா சிந்தனை கதவு..?!)
ஆனால், அதுக்கு அப்புறம் நீங்கள் எழுதினவை எனக்கு புரியவில்லை சகோ.ஷர்புதீன்.
@நிரூபன்
//அமெரிக்காவின் இந்த நற்செயலை வரவேற்போம்.//--நீங்கள் ஒருவராவது இதை கவனித்தீர்களே சகோ.நிருபன்..!
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும், பாராட்டுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.நிருபன்.
சகோ. ஹலீமாவை பாராட்டியே ஆக வேண்டும். மேலப்பாளையத்திலிருந்து தன்னந்தனியாக வந்திறங்கி, பல்வேறு கலாச்சாரங்களில் வாழும் மாணாக்கர்களோடு கலந்து படித்துவிட்டு, இன்னமும் தெளிவான சிந்தனையுடன் வீட்டிற்கு திரும்பியிருக்கும் அந்த சகோ, நிச்சயம் பாராட்டத்தக்கவர். வெள்ளத்தாலும் புயல் காற்றாலும் சிக்கி சின்னாபின்னமாயிருக்கும் அலபாமாவிலிருந்து பத்திரமாக இந்தியா திரும்பியதும்... சுப்ஹானல்லாஹ். அல்லாஹ் மிக மிகப் பெரியவன்...!!
கடைசி பாரா ‘மட்டும்’ நச்!!
:))))
நானும் இச்செய்தியினை அறிந்தேன். திறமையுள்ள எவரையும் நாம் தட்டிக் கொடுக்க வேண்டும், ஆற்றல் உள்ள எவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் ... பாத்திமா எளிய குடும்பத்தில் இருந்து வருமின் அவர் இன்னும் பற்பல சாதனைகள் புரிய மனமார்ந்த வாழ்த்துக்களை இங்கும் பதிவு செய்கின்றேன் .. :)
@இக்பால் செல்வன்
இக்பால் செல்வன் Entry > 19:20:02
இக்பால் செல்வன் Exit > 19:20:57 after posting comment
ஆக, 55 வினாடிகளில் தலைப்பையும், பிறகு பதிவின் முதல்வரி---
//திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் ஃபாத்திமா.//
---யையும் 'மட்டும்' படித்து அவற்றை நினைவில் கொண்டு...
ஆங்கில பேச்சுப்போட்டியில் முதல் பரிசுபெற்று அமெரிக்கா சென்று சாதனை செய்த சகோ.ஹலிமாவுடைய..............
...அன்னை ஃபாத்திமா அவர்களை...
'இன்னும் பற்பல சாதனைகள் புரிய மனமார வாழ்த்தி'
...பின்னூட்டமும் அடித்து பதிவு செய்துவிட்டு சிட்டாய் பறந்த...
மின்னல் வேகமும்...
எதையும் மிக ஆழமாகவும் அதி விரைவாகவும் படித்துணரும் தங்கள் அசாத்திய திறனும்...
பதிவு/பின்னூட்டம் என இப்படியான...
தங்கள் கடமை உணர்ச்சியும்...
என்னை அப்படியே மெய்சிலிர்க்க வைக்கிறது, சகோ.இக்பால் செல்வன்.
தங்கள் 55 seconds வருகைக்கு மிக்க நன்றி.
@அன்னு//சகோ. ஹலீமாவை பாராட்டியே ஆக வேண்டும்.......
.....வெள்ளத்தாலும் புயல் காற்றாலும் சிக்கி சின்னாபின்னமாயிருக்கும் அலபாமாவிலிருந்து பத்திரமாக இந்தியா திரும்பியதும்... சுப்ஹானல்லாஹ். அல்லாஹ் மிக மிகப் பெரியவன்...!!//
---அறியாத அரிதான செய்திகளை அறியத்தந்த அமெரிக்கா வாழ் சகோ.அன்னு... தங்களின் பாராட்டுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி சகோ.
@முகமது ஆசிக் - எப்பா அதிமேதாவியரே ? இந்த செய்தியை நீங்கள் பதிவிடுவதற்கு - பல மணிநேரம் முன்னரே படித்துவிட்டேன் ...
முதலில் இந்த செய்தியை எங்கிருந்து எடுத்தீர்கள் - தினமலரில் இருந்து தானே .. அப்புறம் என்ன ? மேலதிகமாக தாங்கள் எழுதி இருப்பீர்கள் என்றுத் தான் இங்கே வந்தேன் .. ஆனால் அதே செய்தி என்பதால் .. இங்கும் தங்கை பாத்திமாவுக்கு ஒரு வாழ்த்தை இட்டுச் செல்லலாம் என்றுத் தான் வாழ்த்தினைப் பகிர்ந்தேன் ..
நான் என்ன செய்கின்றேன் என்பதிலேயே ஆராய்ச்சி செய்யாமல் சுயமாக எதாவது பதிவிட முயலலாமே ?
:)
எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
மேலும் விபரம் அறியவும்....
இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...
@இக்பால் செல்வன்
//இங்கும் தங்கை பாத்திமாவுக்கு ஒரு வாழ்த்தை இட்டுச் செல்லலாம் என்றுத் தான் வாழ்த்தினைப் பகிர்ந்தேன்..//
"சாதனை செய்த சகோ.ஹலிமாவை"
... இங்கே எல்லோருமே பாராட்டி உள்ளார்கள்.
அவரது அன்னை(பாத்திமா)யை வாழ்த்திச்சென்ற ஒரே ஆள் நீங்கள்தான். இதுவே உங்கள் தனிச்சிறப்பு.
அப்படியே பதிவின் இரண்டாவது வரியையும் படித்திருந்தால்... சகோ.ஹலிமாவையும் வாழ்த்தி இருந்திருப்பீர்கள்.
கடைசி வரி (அது நான் சுயமாக எழுதியது) வரை படித்திருந்தால்... அமெரிக்காவையும் பாராட்டி இருந்திருப்பீர்கள்.
அதிமேதாவித்தனம் அல்ல சகோ. இப்படி அவசர கொடுக்கியாக உள்ளீர்களே என்று சிறு வருத்தம்.
இஸ்லாம் உட்பட எதையும் சற்று ஆழ்ந்து படியுங்கள்.
அவ்வளவே...!
கடந்த மூன்று நாளாக வால்பாறை டூர் எனது முதலாளி குடுபத்துடன் சென்றிந்தேன், அப்பொழுது அவரது ஆறுவயது சிறுவன் அவ்வப்பொழுது "பாட்டு போடுங்க" பாட்டு போடுங்க " என்பான்., நான் பேசிக்கொண்டு வருவதற்கு பாட்டு தடையாக இருக்கும் பொழுது அனைத்துவிடுவோம். ஆனாலும் சில நேரம் அவன் விடாமல் நச்சரிப்பான்., சரி இவனை நமது ஸ்டைலில் மடக்குவோம் என்று சில கேள்விகள் கேட்டு அவனது கவனத்தை திசை திருப்ப முயற்சித்த கதை கீழே..
"டேய் ஆகாஷு எப்ப ஸ்கூல் திறக்குது?"
"நாளைக்கு......... பா......ட்டை போடுங்க"
"சரி புது டிரஸ் எல்லாம் எடுத்தாச்சா?"
ஆஅமா எடுத்தாச்சு.,,,,,,,,,,,, பாட்ட போடுங்க...
போன வருஷம் எத்தனாவது ராங்கு எடுத்தே?"
பாஸ்ட்டு றாங்கு ................., பாட்ட போடுங்க"
நீ அம்மா இஷ்டமா? அப்பா இஷ்டமா?"
அம்மாதான் இஷ்டம்,............. பாட்ட போடுங்க"
அவங்க அப்பா பாட்டை போட்டுட்டார் ., நான் தோல்வியை ஒத்துக்கொண்டேன் .
( எதையும் நேரிடையாக சொல்லும் உத்தி எனக்கு சரியா வராது., இத ஏன் சொன்னேன் என்பதை உங்களால் புரிந்துகொள்ளமுடியும், ஏற்றுகொள்ளவைபதற்க்கு சிக்மன்ட் பிராய்டு தேவைபடுவார்.)
@ஷர்புதீன்//எதையும் நேரிடையாக சொல்லும் உத்தி எனக்கு சரியா வராது.,//---சகோ.ஷர்புதீன்...பிளீஸ்... எனக்கு மட்டும் நேரிடையாகவே சொல்லிவிடுங்கள். ஏனென்றால், நான் அந்த அளவுக்கெல்லாம் பிரில்லியண்ட் இல்லை சகோ.
أسلام عليكم
//இஸ்லாம் உட்பட எதையும் சற்று ஆழ்ந்து படியுங்கள். //
எனது இஸ்லாமிய சகோதரர்கள் / நண்பர்களோடு பேசிகொண்டிருந்தால்/விவாதம் செய்துவிட்டு கிளம்பும்போது " என்னடா இன்னிக்குவரைக்கும் இஸ்லாத்துலதானே இருக்கே" அப்படின்னு ஒரு கேள்வியை கேட்டு அப்புறம்தான் பிரிவோம்.அதே போலதான் இருக்கு இக்பால் செல்வனுக்கு நீங்கள் சொல்லும் அந்த அறிவுரை !!
காயல்பட்டணம் , கீழக்கரை, அதிராம்பட்டினம் நண்பர்களிடம் இந்த மாதிரி குணம் அதிகமாகவே இருந்ததை என்னால் உறுதியாக சொல்லமுடியும்.
இதைதான் அந்த சிறிய நடந்த கதையின் மூலம் சொல்லவந்தததை புரிவதற்கு IQ 120 வேணுமாக்கும்??
@ஷர்புதீன்وعليكم السلام
அடடே..! அவரைப்பற்றித்தானா இது..? இப்போதுதான் புரிந்தது சகோ.ஷர்புதீன்..! இந்த அளவுக்கா டியூப் லைட்டா இருந்திருக்கேன் நான்..?! விளக்கியமைக்கு மிக்க நன்றி.
//அடடே..! அவரைப்பற்றித்தானா இது..?//
இதற்க்கு IQ 120 தேவையில்லை, கொஞ்சம் EGO இருந்தால் போதும்! யாரிடம் இருக்கிறது என்பதற்கான பதிலை எப்போதும்போல் அந்தரத்திலேயே விட்டுவிடுகிறேன் !
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!