"கருப்பு பணம்... கருப்பு பணம்" என்பார்கள்..! சிறிய வயதில்... நான், 'ஏதோ அது கருப்பு மையில் அச்சடிக்கப்பட்டு இருக்குமோ' என்று நினைத்தது உண்டு. பின்னாளில்தான் இதன் உண்மையான அர்த்தம் புரிந்தது... தன் வருவாய்க்கு உரிய வருமான வரியை அரசுக்கு செலுத்தாத கையிருப்புக்கு பெயர் கருப்பு பணம் என்று..!
வருமான வரி என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தான் ஈட்டும் வருமானத்திற்கேற்ப தான் சார்ந்திருக்கும் நாட்டிற்கு செலுத்தும் வரி ஆகும். ஆனால், கருப்பு பணம் இந்த அர்த்தத்தில் இப்போது சொல்லப்படுவது இல்லை. அது சற்றே திரிந்து வருமானத்துக்கு மீறி சொத்து வைத்திருந்தாலே அது கருப்புப்பணம் எனப்படுகிறது. ஆக, இந்த சொத்துக்கான வருமான வரியை அரசுக்கு செலுத்தி விட்டால் அந்த கருப்பு பணம் வெள்ளையாக மாறிவிடுகிறது. ஆனால்... சட்டப்பூர்வமாக கருப்புப்பணத்தை எப்படி சேமித்து வைத்து அவ்வப்போது தேவைக்கேற்ப செலவழிப்பது..?
நான் இந்தியாவில் பணிபுரிந்த போது, வருமான வரிக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு, ஓர் இலட்சமாக இருந்தது. (இப்போது 1.8 L) எனது அப்போதைய ஆண்டு வருமானம் அதைவிட எட்டாயிரத்து சொச்சம் கூட வந்ததால்... நான் வருமான வரி கட்டினேன். ஆனால், என்னை தவிர என்னுடன் வேலைக்கு சேர்ந்த நூற்றுசொச்சம்பேர் கட்டவில்லை. காரணம், அவர்கள் எல்லோருமே எதோ ஒரு (LIC) பாலிசி எடுத்து இருந்தார்கள். அதனால், income tax rebate-ஆம்..! நாம் அனைவரும் அறிந்த ஆர்வமற்ற முதல் வழிமுறை இது..!
பின்னர் அடுத்தடுத்த ஆறு வருடங்களும் நான் மட்டும் வருமான வரி கட்டினேன். காரணம்... நான் எந்த பாலிசியுமே எடுத்திருக்க வில்லை. பின்னாளில் சவூதி வந்த பிறகு, என் ஊதியத்தை NRE A/C -க்கு அனுப்பினால், ஒவ்வோர் வருடமும் உச்ச வரம்பை கடந்தாலும் அதற்கு வருமான வரியே இல்லை..! எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது வெளிநாட்டில் குடும்பம் சொந்த பந்தங்களை இழந்து கஷ்டப்பட்டு சம்பாரிப்பவர்களுக்கான, அரசின் கருணை என்றுதான் நினைத்தேன்.
இல்லை...! இந்தியாவில் உள்ள Business Magnates எனும் பெரும்பணக்காரர்கள், வருமான வரியிலிருந்து தப்பிக்க தங்கள் வருவாயை அரசுக்கு கணக்கு காட்டாமல், அதை ஏதாவது ஒரு வெளிநாடுவாழ் பினாமிக்கு அனுப்பி, பின் ஏதாவதொரு பினாமி மூலம், ஏதாவதொரு பினாமியின் NRE கணக்கில் அன்னியச்செலாவநியாக சேர்த்துக்கொண்டு, அதை சட்டப்பூர்வமாக வெள்ளையாக்கி விடத்தான் என்று அப்புறமாய் புரிந்தது. இதெல்லாம் கொஞ்சம் பழசுதான்... என்றாலும் இதுதான் இரண்டாவது வழிமுறை.
இப்படி செய்யாமல், வேறுமாதிரி... என்றால், உள்ளூரிலேயே, தனக்கு வரும் எந்த வருவாய்க்கும் invoice bill போடாமல், 'memo' அல்லது 'estimate' அல்லது 'மளிகை கடைச்சிட்டு' அல்லது அதுகூட இல்லாமல் நம்ம டாக்டர்கள் வழிமுறையான... "ம்ம்ம்... அந்த நர்சிடம் ஐநூறு கொடுத்துட்டு போய்ட்டு வாங்க..." பாணி... என்று பல வழிமுறைகள் இருக்கின்றன. இதற்கெல்லாம் இன்கம் டாக்ஸ் ரெய்ட் வருவார்கள். எங்களை கொஞ்சம் கவனிங்க என்று..! வருமான வரியை விட இவர்களின் கவனிப்பு ரொம்ப கம்மியாக இருப்பதால், "படு பிசியான இந்த டாக்டர் அல்லது இந்த தொழிலதிபர் சம்பாரிக்காமல் சும்மா உட்கார்ந்து ஈ ஓட்டுகிறார்" என்று அரசுத்துறை, மேற்படி நபர்களின் கருப்பை வெள்ளையாக்கி விடும்.
நிறைய பணம் சேர்ந்துவிட்டால், வீட்டில் அவ்வளவு கருப்பு பணத்தை வைக்க முடியாது என்றால், தமக்கு நம்பகமான பல பல ஏழை பினாமிகளின் வங்கி கணக்குகளில் சிறு சிறு தொகையாக பிரித்து பிரித்து போட்டு வெள்ளையாக்கி வைக்கலாம். அப்புறம் நாளடைவில், பெரிய ஆளாக ஆகிவிட்டால், 'நம்மளையும் கொஞ்சம் கவனிக்கிறது...' என்று அரசியல் கட்சியினர்-குறிப்பாக ஆளுங்கட்சியினர் எப்படியோ கருப்புப்பணத்தை மோப்பம் பிடித்து வருவார்கள். உடனே உஷாராகி, கவனிக்க வில்லை என்றாலோ, கவனிப்பு பத்தவில்லை என்றாலோ வருமான வரித்துறைக்கு அப்பன்களான அமலாக்கப்பிரிவினர் வருவார்கள். வேறு வழி இல்லை..! இப்போது கவனித்தே ஆக வேண்டும்..! "இது சட்டப்பூர்வம் இல்லையே" என்ற ஐயமே வேண்டாம்..!
நீங்கள் மறந்திருக்கலாம். முன்பு, அன்றைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் VDIS (Voluntary Disclosure) என்று ஒரு சட்டம் கொண்டு வந்தார். அதாவது சுத்தமாகவே வரி கட்டாமல் ஏய்க்கும் பெரும் பண முதலைகள், தாங்களாக முன்வந்து, "இந்தாப்பா..! இதுதானப்பா.. என் இவ்வருட வருமானம்" என்று 'போனாப்போயிட்டு போகுது' என்று அரசுக்கு ஒரு சிறு தொகையை வருமான வரி என்ற பெயரில் பிச்சை போடுவார்கள்..! ஆக, தாமாக ஒரு பொய்க்கணக்கு சொல்வது என்பது VDIS மூலம் சட்டப்பூர்வமானது தானே..?
சரி, இந்த பிரச்சினையிலிருந்தும் தப்பிக்க என்னவழி..? சட்டப்பூர்வமாக தப்பிக்கலாம். எப்படி..? 'Trust... அறக்கட்டளை' என்பார்களே..! அல்லது 'சங்கம்... Society...' என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா..? அது ஒன்றை ஆரம்பித்து விட வேண்டும். கல்விக்காக, மருத்துவத்துக்காக, அனாதைக்காக, முதியோருக்காக, ஊனமுற்றோருக்காக.... என்று இப்படி ஆரம்பிக்கலாம். பின்னர், பில் புக்குகள் அடிக்கவேண்டும். சிலநாள் ராத்திரி பகல் என்று பாரமால் எல்லா பில் புக்கிலும் ஊரில் உள்ளவர்கள் முகவரியை telephone directory மூலம் அறிந்து பில் போட வேண்டும். அது தம் சொத்து அளவுக்கு போட்டுக்கலாம். அந்த அவ்ளோ பணத்தையும் டிரஸ்ட் பெயரில் உள்ள அக்கௌண்டில் சேர்த்து விட்டு ஜாலியாக செலவழிக்கலாம். இதில் இன்னொரு கூத்தும் உண்டு. உங்களுக்கு தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லி அவர்களிடம் income tax rebate கிடைக்கும் அளவுக்குறிய தொகையையும் வசூலிக்கலாம். அவ்ளோ ஏன், உங்க வெள்ளை வருமானத்திற்கும் வருமான வரி கட்டாமல் ரிபேட் பெறலாமே..! So, hereafter don't trust on all trusts & societies...! தம்மைப்போலவே பலரும் இருந்தால் கூட்டு சேர்ந்து கொள்ளலாம். (சட்டப்படி குறைந்த பட்சம் இருவர் வேண்டும்... அதிக பட்சம்..? அளவே ஐல்லை..!) ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. இதுதான் மூன்றாவது வழிமுறை.
இதில், சிறு மாறுதல் செய்தால் வேறொரு வழிமுறை போன்ற இதே வழிமுறை ஒன்றுண்டு. அதாவது... மக்களிடையே பிரபலமான ஒரு பணக்காரர், திடீரென ஒருநாள், தான் ஏதாச்சும் ஒரு விளம்பரத்தில் நடிச்சு அல்லது விளையாடி, அதில் அந்த விளம்பர கம்பெனி தரும் சம்பளத்தை அகதிகளுக்கு/ ஏழைகளுக்கு/ நோயாளிகளுக்கு தரப்போவதாக அறிவிக்க வேண்டும். பின்னர்... ஒருநாள்... "சம்பளம் தந்துட்டேன்" என படக்கம்பெனியும்... "வாங்கியதை அப்படியே நன்கொடையா தந்துட்டேன்..." என நடிகரும்/ விளையாட்டு வீரரும்... சொல்லிட வேண்டியது. சப்போஸ்... அமலாக்கம் கேட்டால்... பெற்றுக் கொண்டவர்களைப் பற்றிய கள்ள ரிப்போர்ட் ஒன்றை... பஸ்டாண்டில் படுத்துகிடந்ததாகவும் ரயில்வே ஸ்டேஷனில் தங்கி இருந்ததாகவும்... பிளாட்பார்மில் தூங்கியதாவும்... அட்ரஸ் தயாரிச்சு தந்துட்டால் போதும். இப்போது... அந்த ஏழை அகதி நோயாளிகளை தேடிப்போய் எவ்வளவு கிடைச்சிதுன்னு...யாரும் கேட்கப்போவதில்லை... அவர்கள் யாரென அறியவும் போவதில்லை எவரும். எப்போது எங்கே வச்சு தந்தீர்கள் எனவும் யாரும் நச்சரிக்கக் போவதில்லை. பிரபலங்கள் மீது அப்படி நடந்து கொண்டால், இதெல்லாம் மக்களிடையே... ரசிகர்களிடையே... அரசின்மீது வெறுப்புணர்வையே தோற்றுவிக்கும்... அடுத்து ஆட்சிக்கு வர வேட்டு வைக்கும்.
இதில், சிறு மாறுதல் செய்தால் வேறொரு வழிமுறை போன்ற இதே வழிமுறை ஒன்றுண்டு. அதாவது... மக்களிடையே பிரபலமான ஒரு பணக்காரர், திடீரென ஒருநாள், தான் ஏதாச்சும் ஒரு விளம்பரத்தில் நடிச்சு அல்லது விளையாடி, அதில் அந்த விளம்பர கம்பெனி தரும் சம்பளத்தை அகதிகளுக்கு/ ஏழைகளுக்கு/ நோயாளிகளுக்கு தரப்போவதாக அறிவிக்க வேண்டும். பின்னர்... ஒருநாள்... "சம்பளம் தந்துட்டேன்" என படக்கம்பெனியும்... "வாங்கியதை அப்படியே நன்கொடையா தந்துட்டேன்..." என நடிகரும்/ விளையாட்டு வீரரும்... சொல்லிட வேண்டியது. சப்போஸ்... அமலாக்கம் கேட்டால்... பெற்றுக் கொண்டவர்களைப் பற்றிய கள்ள ரிப்போர்ட் ஒன்றை... பஸ்டாண்டில் படுத்துகிடந்ததாகவும் ரயில்வே ஸ்டேஷனில் தங்கி இருந்ததாகவும்... பிளாட்பார்மில் தூங்கியதாவும்... அட்ரஸ் தயாரிச்சு தந்துட்டால் போதும். இப்போது... அந்த ஏழை அகதி நோயாளிகளை தேடிப்போய் எவ்வளவு கிடைச்சிதுன்னு...யாரும் கேட்கப்போவதில்லை... அவர்கள் யாரென அறியவும் போவதில்லை எவரும். எப்போது எங்கே வச்சு தந்தீர்கள் எனவும் யாரும் நச்சரிக்கக் போவதில்லை. பிரபலங்கள் மீது அப்படி நடந்து கொண்டால், இதெல்லாம் மக்களிடையே... ரசிகர்களிடையே... அரசின்மீது வெறுப்புணர்வையே தோற்றுவிக்கும்... அடுத்து ஆட்சிக்கு வர வேட்டு வைக்கும்.
அடுத்து, வேறு ஒரு வழி இருக்கிறது. (நாட்டையே ஆண்டாலும்...) எதாவது ஒரு கோயில், அல்லது (தான் ஒரு உலகப்புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆயிற்றே என்றெல்லாம் கர்வம் இன்றி..) ஏதாவது ஒரு தர்ஹா என்று எங்கெல்லாம் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய உண்டியல் இருக்கிறதோ அங்கெ சென்று ஒரு 'அறங்காவலராக' சேந்து விட வேண்டும். பழைய இரும்பு ஈயம் பித்தளை கடையில் வாங்கிய ஒரு பழைய தகரத்தில்... தங்க முலாம் பூசி, அதை பெரிய பொருளாக வெகுஜன ஊடக டிவி காமிராக்கள் முன்னிலையில் ஷோ காட்டி, யாராவது ஒரு அனானியிடம் கொடுத்து அந்த ஆளுயர உண்டியலில் ஸ்டூல் போட்டு ஏறி உள்ளே போட சொல்ல வேண்டும். அந்த மாச கடைசியில், கலெக்ஷன் எண்ணும் போது 'இது தனக்கு வர வேண்டிய பங்கு' என்று அந்த தகர அயிட்டங்களை பொறுக்கிக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள பல கிலோ கருப்பு தங்கத்தை இப்படி வெள்ளையாக மாற்றலாம். ஹி...ஹி... தங்கமெல்லாம் எப்போதும் மஞ்சளாகத்தாங்க ஜொலித்துக்கொண்டு இருக்கும்..! இதுதான் நான்காவது வழிமுறை.
இதேபோல... திருப்பதி, பழனி, சபரிமலை போன்ற பணக்கார கோயில்கள்... அஜ்மீர், நாகூர், ஏர்வாடி போன்ற பணக்கார தர்ஹாக்கள்... வேளாங்கன்னி போன்ற வளம் கொழிக்கும் சர்ச்சுகள்... என இது போன்ற உண்டியல் பிசினஸ் இடங்களில் ஏற்கனவே கொட்டை போட்ட பல அறங்காவலர்கள் புதிய பணக்காரர் ஆன நமக்கு, அதில் சேர இடம் தராவிட்டால் என்ன செய்வது..? அதற்கும் ஒரு வழி இருக்கிறது..!
யாராவது ஒரு அன்றாடங்காய்ச்சிக்கு கொஞ்சம் மேஜிக் செய்ய எல்லாம் கற்றுக்கொடுத்து 'கடவுளின் அவதாரம்...', '...ஆனந்த சாமியார்', '...அடிகளார்' 'அருள்வாக்கு சித்தர்', '...சுவாமிகள்', 'கடவுள்தன்மை கொண்ட அந்த பகவான் மனிதரின் மறுபிறவி' '...பாபா' என்று இப்படி ஏதாவதொரு ஒரு புருடா விட்டு அந்த பரதேசியை பெரிய ஆளாக்கி, வசதியாக வாழ இடம் கொடுத்து, அந்த நபரிடம் தன் எல்லா கருப்பையும் ரகசியமாக கொடுத்து விட்டு பக்தர்கள் போர்வையில் மீண்டும் அந்த பரதேசியிடமே சென்று கொடுத்ததை தர்மமாக தானே பலர் முன்னிலையில் திரும்ப வாங்கிக்கொண்டு வந்து தன் வங்கி கணக்கில் சேமித்துவைத்து அவ்வப்போது செலவழிக்கலாம். இதுதான் ஐந்தாவது வழிமுறை. இதற்கு நாம் மிக உயரிய அரசு அதிகாரத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த பரதேசிக்கு நம் லஞ்சக்குவியலிலிருந்து கணிசமாக ஒரு பங்கை லஞ்சமாக வைக்க வேண்டி வந்துவிடும்..!
இன்னும் பெரிய தொகைகள் என்றால் அதை அந்த பரதேசியிடமே கொடுத்து, அவனை/ளை மெடிக்கல் காலேஜ், இஞ்சினியரிங் காலேஜ், மேனஜ்மென்ட் இன்ஸ்டிடியுட், மருத்துவமனை, அநாதை-முதியோர் காப்பகங்கள்... என பலவற்றை ஆரம்பிக்கவைத்து அதற்கெல்லாம் அறங்காவலர்களாகி தமக்கு ஏற்கனவே இடம் கொடுக்காதவர்களுக்கு செமையாக இப்போது பெப்பே காட்டலாம். அந்த பரதேசி பல கேவலமான குற்றங்களில் அசிங்கமாக ஈடுபட்டாலும் ஓடிப்போய் அதை எல்லாம் பூசி மெழுகி ஒன்றுமில்லாமல் ஆக்கி அவனை காப்பாற்ற வேண்டி இருக்கும். அதாவது அவனிடம் இருக்கும் தம் சொத்தை காப்பாற்ற வேண்டி இருக்கும்..! இது ஒன்றுதான்... ஒன்றே ஒன்றுதான் இந்த வழிமுறையில் எப்போதும் உள்ள ஒரே தலைவலி.
அந்த பரதேசி ஒருநாள் செத்துப்போனால்... குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் காரியம் செய்யும்போதுதான்... மிக அருகே இருக்கவேண்டி டிக்கட் வாங்கிய அந்த 1500 அறங்காவலர்கள் யார் யார் என்று தெரியவரும். வருங்கால அறங்காவலர்கள் வெளியே அக்காரிய நிகழ்ச்சியை டிவிக்கள் மூலம் தேமே என்று பார்ப்பார்கள்.!
அடுத்து இன்னொரு ஆறாவது வழிமுறை இருக்கிறது. சினிமா எடுக்க வேண்டும். ஓரிரு கோடி ரூபாயில் படத்தை முடிக்க வேண்டும். கிராபிக்ஸ் மூலம் நூறு கோடியில் எடுத்ததாக பந்தா காட்ட வேண்டும். சொந்தமாக ரிலீஸ் பண்ண வேண்டும். இப்போதுதான், அது நூறு கோடி மெகா பட்ஜெட் படம் என்று அறிவிக்க வேண்டும். அது ஓடுதோ ஓடலியோ... போட்ட காசு வந்தவுடன் அடுத்த வாரமே தியேட்டரை விட்டு தூக்கிடனும். வேறு எவனும் தியேட்டரில் ஓட்டி சம்பாரிக்காமல் இருக்க ஒரிஜினல் டிவிடி ரைட்சையும் எவனுக்காவது விற்றுடனும். இன்டர்நெட்டில் அப்லோடு செய்திரனும். தன்னிடம் வரும் வருமான வரித்துறை அதிகாரியிடம் தனக்கு 99 கோடி ரூபாய் நஷ்டம் என்று கணக்கு காட்டி அவரையும் தமக்காக அழவைத்து விட வேண்டும். அந்த ஒரு கோடிக்கும் வழக்கம்போல கொஞ்சம் அவரை கவனிக்க வேண்டும்.
அது படம் எடுத்தவருக்கு..! அதில் பணியாற்றுபவருக்கு..? வேறு ஒரு ஏழாவது வழிமுறை இருக்கிறது. 'கறுப்புப்பணத்தை ஒழிப்பது எப்படி' என்று கதை எழுதி டைரக்ட் பண்ண வேண்டும். அதில் ஸ்டைலாக தலை கோதி விடும் கதாநாயகனுக்கு படம் முடியும்போது பத்து கோடி சம்பளம் என்றும் அறிவித்து விட வேண்டும். படம் ரிலீஸ் ஆனவுடன் தன் வீட்டுக்கு படை எடுக்கும் வருமான வரித்துறையினரிடம் இருவரும் அப்போது ஒரு 'உண்மையை' சொல்ல வேண்டும். அதாவது, தான் படத்தை விற்றதற்கு/நடித்ததற்கு அதற்கு பதிலாக தன் சம்பளத்தை பணமாக பெற வில்லை எனவும், சில ஏரியா விநியோக உரிமைகளாக பெற்று இருப்பதாகவும் கூறவும். பின்னர், பலமுறை அதிகாரிகளை அலைய விட்டு... 'ஒன்றும் உருப்படியாக கலெக்ஷன் தனக்கு வந்து சேரவில்லை, படம் பிச்சிக்கிட்டு ஓடினாலும் தனக்கு பெருத்த நஷ்டம்' என்று அதிகாரிகளை படுத்தி எடுத்து அவர்களே வெறுத்து ஓடச்செய்து விட வேண்டும். ரொம்ப சட்டம் பேசினால், அவர்களையும் கொஞ்சம் வழக்கம் போல கவனிக்க சொல்கிறார்கள் என்று அர்த்தம். இல்லை என்றால் அமாலாக்கப்பிரிவு அதிகாரிகள் என்று விஷயம் பெரிசானால்... பேசாமல் ஆளுங்கட்சியை ஆதரித்து விட வேண்டும்..! அப்படியும் நிலைமை மோசம் என்றால், 'இந்த கட்சி மீண்டும் ஜெயித்தால் இனி தமிழ்நாட்டை அந்த ஆண்டவன் கூட காப்பற்ற முடியாது' என்று பிரஸ் மீட்டில் ஒரு கலக்கு கலக்க வேண்டும்..!
அப்புறம்... இந்த கலேபரமெல்லாம் நமக்கு உதவாது... நாம் ரொம்ப ஹைகிலாஸ் என்றால் அல்லது அரசியலில் பெரிய ஆளாக இருந்தால்... ஸ்விட்சர்லாந்து சென்று அங்குள்ள வங்கியில் ஒரு கணக்கு உருவாக்கி தம் பணத்தையெல்லாம் அதில் சேமித்து வைத்து சிறிது சிறிதாக தம் கணக்குக்கு செலவு தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளவும்.! எட்டுத்திக்கும் பிரபலமான வழிமுறையான இது வழிமுறை # எட்டு..!
தேர்தல் நேரம் என்றால்... ஒரு ஐடியா..! ஒரு புது கட்சி தொடங்க வேண்டும். 234 தொகுதிகளிலும் தனியாக நிற்க வேண்டும். செலவே செய்யாமல், அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வேண்டும். இத்துடன் சேர்த்து தமிழ்நாடு முழுக்க சூறாவளி பிரச்சாரம் செய்த செலவு என்று போலி கணக்கு காட்டி சில கோடிகளை வெள்ளை ஆக்கி விடலாம். டெபாசிட் பணம் போய்விடும்..! போனால் போகட்டுமே..! ஆங்... எனினும் இது நம்பர் நைன்..!
அதெல்லாம் அரசியல்..! நமக்கு ஒத்து வராது..! என்றால், ஒரு '...அமைப்பு', '...கழகம்', '...ரசிகர் மன்றம்', '...நற்பணி மன்றம்', '...வெல்பேர் அசோசியேஷன்', '...கிளப்' என்று எதையாவது சிறிய அளவில்... ஏதோ 'ஏழைக்கேற்ற எள்ளுருண்டை' என, மதச்சார்பற்ற ஒன்றாதாக (மதச்சார்புள்ளதாக இருந்தால் வரி உண்டாம்) ஆரம்பித்து நடத்தி அதில் என்னமாவது... 'மரம் நடு விழா', 'மாநாடு', 'போட்டிகள்', 'தன்னார்வ தொண்டுகள்' என்றெல்லாம் விளம்பரம் செய்து நடத்தி, அதற்காக பல கோடிகளை செலவழித்ததாக போலி கணக்கு காட்டி தன் கருப்பை வெள்ளை ஆக்கி விட வேண்டும். அதற்கான சொத்துக்கும் வரி நஹிஹே..! (Section-25 Company Special Licensing) வழிமுறை எண்ணிக்கை பத்து ஆச்சா..? அவ்ளோதான்..!
குறிப்பு : செலவழிக்க 'இந்த பணமெல்லாம் எப்படி வந்தது' என்று யாராவது கேட்டால் திருதிரு என்று முழிக்காமல்... ராத்திரி பகலாக எழுதின அமைப்பு/கழகம்/அறக்கட்டளை/மன்றம் என்ற பெயரில் உள்ள பில் புக்கை காட்டி 'கஷ்டப்பட்டு உலகம் முழுக்க கலெக்ட் பண்ணினோம்' என்று 'ஜென்டில்மேனாய்' கூற வேண்டும்... என்று ஏற்கனவே பார்த்தோம்... என்பதை இங்கே மீண்டும் நியாபகப்படுத்துகிறேன்... இதில் இன்னொரு முக்கிய விஷயம் இருக்கிறது. 'வெளிநாடு நிதி' என்றால் 999 ரூபாயாக அக்கவுண்டிற்கு அனுப்பிக்கொள்ள வேண்டும். ஆயிரம் ரூபாய் பணத்தை அன்பளிப்பாக அரசு கருதாது..! வரி போட்டுத்தொலைத்து விடும். ஆனால், அறக்கட்டளை என்றால் எத்தனை கோடி வேண்டுமானாலும் வெளிநாட்டிலிருந்து அனுப்பலாம்... என்று சட்டம். (ஒரு தகவல்: புள்ளிவிபரப்படி, ஆந்திராவின் புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளைதான் ஒவ்வோர் வருஷமும் இந்தியாவில் நம்பர் ஒன்னாம்... வெளிநாட்டில் கோடி கோடியாய் நன்கொடை பெறுவதில்..! இந்த அறக்கட்டளையின் தற்போதைய சொத்து குறைந்த பட்சம் ரூபாய் 1,50,000 கோடிகள்...! அவ்வளவும் வரி விலக்கு பெற்றவை என்பதை நாம் கவனிக்க வேண்டும்)
டிஸ்கி :-
இறைநாடினால்... நமது அடுத்த பதிவு :-
" Black Money-யை ஒழிக்க நாம் போடவேண்டிய Top 10 புதிய சட்டங்கள்..! "
21 ...பின்னூட்டங்கள்..:
அவ்வளவும் பிரமாதம். என்கிட்டே கருப்பு பணம் இருந்தால் (வெள்ளையே கொஞ்சம்தான். அதுல கருப்பு வேறயா?) இதில் ஒன்றிரண்டை கண்டிப்பாக உபயோகிப்பேன், உங்கள் ஷேரை (கருப்பு பணமாக) கொடுத்துவிட்டு தான்!
புதிய கோணத்தில் சிந்தித்து இருக்கிறீர்கள். வெல்டன் நண்பா. அனித்து பாயின்ட்டும் நச்.
நம் சட்டம் அப்படித்தான் இருக்குன்னு {{தேடுகுறிச்சொற்கள் :- அரசியல், கருப்பு பணம், சட்டம், நிகழ்வுகள், நையாண்டி}} செம நையாண்டி பதிவுதான்.
ஐடியாக்கள் நல்லாருக்கு. குறிச்சு வச்சுக்கிறேன். பின்னாடி பயன்படலாம் ஒருவேளை. :-)))))
நிறைய சம்பாதிக்கறவுங்களுக்கு தான் இத மாதிரி யோசிக்க தோனும். jokes apart. நல்ல பதிவு. இந்திய அரசியல் சட்டத்த மக்கள் படிக்கறாங்களோ இல்லையோ ஆனால் அதில் உள்ள ஓட்டைகளை (சலுகைகளை) நன்றாகவே படித்து தெரிந்து வைத்துள்ளனர் என்பது நிதர்சனமான உண்மை.
நல்ல கருத்துக்கள் கொண்ட கட்டுரை. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
பதிவில் ஓவர் நக்கலும் நையாண்டியும் ஆங்காங்கே தெறிக்கிறது நெத்தியடியாரே. அதிலும் எல்லாமே நிகழ்கால சம்பவங்களாகவே தெரிகிறது. நிறைய உள்குத்து சமாச்சாரங்களை வைத்திருப்பது போல தெரிகிறதே. நெத்தியடியாரே தவறு செய்பவர்களை விட தவறு செய்ய தூண்டுபவர்களுக்கு அதிக தண்டனை வாங்கி தர முடியும். அந்த அடிப்படையில் இரண்டு நபர்களுக்கு (பந்து அண்ட் ஹுசைனம்மா) கருப்பு பண ரகசியத்தை சொல்லி தவறு செய்ய தூண்டிய வழக்கு பாயபோகிறது பார்த்துக் கொள்ளுங்கள்.
@பி.ஏ.ஷேக் தாவூத்அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி சகோ.அத்திக்கடையாரே..!
//தவறு செய்பவர்களை விட தவறு செய்ய தூண்டுபவர்களுக்கு அதிக தண்டனை வாங்கி தர முடியும்.//---உங்கள் பார்வையில் 'தவறானவை'யாகவே இருந்தாலும், சட்டத்தின் பார்வையில் சரியானதை செய்பவர்களுக்கு தண்டனை இல்லை சகோ. சட்டப்படி செய்யச்சொல்லும் எனக்கு தண்டனையா..?
'டிஸ்கி'--யை படித்து விட்டு நான் என்ன சொல்ல வருகிறேன்... என்று புரிந்து கொள்ளவேண்டுகிறேன் சகோ.
நான் மளிகை கடை வெச்சிருந்தேன். சிட்டு எளுதாமல், நாயமா பில் போட்டு கவர்மேன்டுக்கு வருமான வரி கட்டலாம் என்றால், அதற்கு இந்த அதிகாரிகள் விடுவதில்லை. எதுக்குன்னா, அது அரசுக்கு மட்டும்தான் லாபமாம். அவர்களுக்கும் நமக்கும் நஷ்டமாம். அவர்களே எப்படி பில் எழுத வேண்டும் என்று சொல்லியும் கொடுக்கிறார்கள். ஏதோ ஒரு கணக்கு போட்டு ஆயிரம் ரூவா யாவாரத்துக்கு நூத்தி முப்பது ரூவா பில் எழுதணும். வரி வராது. ஒவ்வொரு கடைக்கும் இந்த அளவு வேறுபாடும். அப்போ, நாங்கள் எல்லாம் சேர்ந்து ரஜினி நற்பணி மன்றம் வெச்சிருந்தோம். பாயின்ட் நம்பர் பத்து எங்கள மாதிரி ஏழைப்பட்டவங்களுக்கு சரியானது. இங்கே நாங்க செவழிச்சதுன்னு நாங்க கணக்கு காட்டுவோம். நம்ம தலைவர் அவர் நமக்கு கொடுத்துன்னு சொல்லி அவர் செலவழிச்சதுன்னு அவர் கணக்கு காட்டுவார். சட்டம் தான் கடமையை செய்கிறது.
ஒருகாலத்தில், தியேட்டரில் பிளாக்கில் டிக்கட் விற்பது என்றால் பெரிய குற்றம். ஆனால், பிந்நாளில் தொண்ணூறுகளின் மத்திக்கு முன்பாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் பிளாக்கில் டிக்கட் விற்பது என்பதை பெரிய பட்ஜெட் படங்களுக்கு "சட்டப்படி" அனுமதித்ததன் விளைவு இன்று... பிளாக்கில் எதையும் விற்பது சட்டப்படி அனுமதிக்கப்படுவதாகவே கருதப்படுகிறது. எந்த தவறையும் செய்ய அந்த சட்டம் மனித உள்ளங்களை மலிவாக்கி திறந்து விட்டது. அதன் விளைவுதான் இன்று இந்த அளவுக்கு கருப்புப்பணம் நம் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் அழிக்கிறது.
@bandhuதங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ.பந்து. எனக்கு பங்கு வேண்டாம்.
@ஹுஸைனம்மாஅப்படியா..? ///இறைநாடினால்... நமது அடுத்த பதிவு :-
" Black Money-யை ஒழிக்க நாம் போடவேண்டிய Top 10 புதிய சட்டங்கள்..! " /// :-)))))
@kitchen//நம் சட்டம் அப்படித்தான் இருக்குன்னு செம நையாண்டி பதிவுதான்.//--நன்றி சகோ.சமையலறை... :) சரியான கோணத்தில் வாசித்திருக்கிறீர்கள்.
@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)முதலில் ஓட்டைகளை போட்டுவிட்டுத்தான் அப்பறம் சட்டங்களை இயற்றுகிறார்களோ என்ற ஐயம் எனக்கு..! வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.அபுநிஹான்.
@சிந்தனை செய்ஒளிவு மறைவில்லாமல் கூறிவிட்டீர்கள் சகோ.சிந்தனை. //சட்டம் தான் கடமையை செய்கிறது.//---சட்டமாக இருந்தால் செய்யும்..! சல்லடையாக இருந்தால்..?
@KARUPPUசரியாக சொன்னீர்கள் சகோ.கருப்பு. அருமையான கருத்துக்கும் தங்கள் வருகைக்கும் மிக்க நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நல்லது சகோ நக்கலான அதே சமயத்தில் உண்மையை உரக்க சொல்லும் பதிவு.
//" Black Money-யை ஒழிக்க நாம் போடவேண்டிய Top 10 புதிய சட்டங்கள்..! "//
இந்த பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
ஏனென்றால் அந்த பதிவில் தீர்வுகளை எதிர்பார்க்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி சகோ
அஸ்ஸலாமு அலைக்கும்!
அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட பதிவு. புதிய விபரங்களையும் தெரிந்து கொண்டேன்.
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.ஹைதர் அலி. //அந்த பதிவில் தீர்வுகளை எதிர்பார்க்கிறேன்//---தலை சுத்துது சகோ..!
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.
Boss, i want to read all your article. Today only i have seen your link thro Suratha.com. Very informative (so many things, I come to know). If possible, please send new article links to my mail id: paranthulnt@gmail.com
ஒரு 100 கோடி வருடம் குறிப்பிடாத(2005 க்கு முன்னாடி அடித்த நோட்டுகள்) எப்படி மாற்றுவது ? ? ?
பணம் சம்பாதிக்க யாராலும் முடியாமல் இல்லை. ஆனால் பலருக்கும் அதற்கான சரியான வழிகள் தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர். அந்த இரகசியங்களை எங்கு, எப்படிப் பெறுவது என்பதை அறிய விரும்பினால் secretsinmoneymaking@yahoo.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!