ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
--------------------------------------------------------------------------------------------------------புறநானுறு
மேற்படி வரிகள்... "மனிதனுக்கு தர்மம் செய்யும் சிந்தனை தழைத்தோங்கச் செய்வதற்காக இயற்றப்பட்ட செய்யுட்பா" என என் ஆசிரியர் கூறியபோது, "இல்லை...ஐயா, பிச்சை எடுப்பதை ஒழிப்பதற்காகவும் இயற்றப்பட்ட புரட்சிப்பா... என்றுதான் அதன் உள்ளார்ந்த அர்த்தம் இறுதியில் கூறுவது போல தெரிகிறதே..!" என ஆசிரியருடன் தொடர்ந்து நான் வாதிட்டதால்... பெஞ்சு மேல் ஏற்றப்பட்டேன்.(!?)
'இது என்ன தண்டனையோ..? மற்ற மாணவர்களை விட என்னை உயர்ந்த இடத்தில் வைக்கிறாரா நம் ஆசிரியர் (?!)' என்ற சிந்தனையில் நான் மூழ்கி இருந்த போது, "இதை இயற்றியவர் யார்?" என்று ஆசிரியர் கேட்க, "பொற்கிழி பரிசில் பெறுவதற்காகவே புகழ்ந்து பாடி பாடல் புனையும் புலவர்களை இடித்துரைக்கும் பொருட்டு, தமிழ்ப்புலமை கொண்ட ஓர் அரசனால் இயற்றப்பட்டதாக இருக்கலாம் ஐயா...!" என்று பெஞ்சில் நின்றவாறே என் கருத்தை கூறியபோது... ஆசிரியரால் வகுப்பினின்றும் வெளியேற்றப்பட்டேன்..!
இது ஒருபுறம் இருக்க...பள்ளிக்காலங்களில் நான் படித்த இந்த வரிகள் என்னை சிந்திக்க வைத்தன. உண்மையில், 'யார் பிச்சை எடுக்கலாம்', 'யார் தர்மம் செய்ய வேண்டும்' என்ற... "இதற்கான சரியான வரைமுறை எது?... இருவருக்குமான தகுதிகள் யாவை..?" என்ற என் கேள்விக்கு பள்ளியில் ஆசிரியரிடம் சரியான விடை எனக்கு கிடைக்கவில்லை. இதற்கு விடை இல்லை என்றால், ஒரு கோடீஸ்வரரும் தன்னை ஏழை எனலாம். ஒரு பெயர் தெரியா சாலையோர பிச்சைக்காரரும் தன்னை பணக்காரர் எனலாம். இவர்களை பிரித்தறிவிக்க என்ன அளவுகோள்..?
அதாவது, நாம் ஓர் ஊரை விட்டு வெளியேறினால்... அதன் எல்லை முடிவை... "நன்றி..! மீண்டும் வருக..!" என்ற அறிவிப்புப்பலகை மூலம் அறியலாம். அதேபோல ஊரின் எல்லை துவக்கத்தை, "நல்வரவு...! அன்புடன் வரவேற்கிறோம்..!" என்ற அறிவிப்புப்பலகை மூலம் அறியலாம். அடுத்தடுத்து ஒட்டியுள்ள இரண்டு ஊர்களுக்கு ஒரே பலகையில் இரண்டு அறிவிப்புகளையும், அந்த ஒரே பலகையின் இரண்டு புறங்களிலும் கூட காணலாம். இதன் மூலம் இரு ஊர்களின் எல்லைகளை நாம் அறியலாம், அல்லவா..?
நான் கேட்பதும் அதே போலத்தான்,
"இதுபோல இரண்டையும் பிரித்தறிவிக்கும் ஒரு அறிவிப்பு பலகை... 'இவர் பணக்காரர்- இவர் ஏழை' என்ற ஓர் அலகு அந்த 'ஏழை-பணக்காரன் அளவுகோளில்' எந்த இடத்தில் வருகிறது..?"
----என்பதுதான்..!
உலகின் பல அரசுகளும் இன்று தத்தம் நாடுகளில் 'வறுமைக்கோடு' என்று ஓர் அளவை வைத்திருக்கின்றன. ஆனால், அது ஒவ்வொரு நாட்டுக்கும் அந்ததந்த நாட்டு பொருளாதாரம் மற்றும் பணமதிப்பின் அடிப்படையில்தான் அந்த வறுமைக்கோடு உள்ளதே தவிர, உலகளாவிய சர்வதேச வறுமைக்கோடு என்று ஒன்று பொதுவாக இல்லை. அது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.
மேலும், எனக்கு ஓரிருமுறை பணநெருக்கடியான சூழல் ஏற்பட்டு, நண்பர்களிடம் கடன் கேட்கும் போது, என் அவசர சூழலைத்தான் விவரித்தேனே அன்றி, இக்கட்டான சூழலில் அழகிய முறையில் தன் சகோதரனுக்கு கடன் கொடுப்பதால் அவருக்கு கிடைக்கப்போகும் மறுமை நன்மைகளை அவரிடம் பட்டியலிட்டதில்லை. கடன் கேட்பவர் இதை கூறாமல் இருப்பதும், கடன் கொடுப்பவர் இதை அறிந்து இருப்பதும்தான் சிறப்பு, அல்லவா..?
.
.
ஆனால், வெள்ளிக்கிழமை ஜும்மாவில் மட்டுமே இஸ்லாமிய சிந்தனை என்று வளர்ந்த அந்நேரத்தில், மாதத்தில் ஓரிரு வாரங்களில் வெளியூரிலிருந்து பள்ளிக்கு வரும் சில மவ்லானாக்கள், பள்ளியின் இமாமுக்கு பதிலாக ஜும்மா உரை நிகழ்த்துவார்கள். அப்போது, பெரும்பாலும் ஜகாத்(கட்டாய தர்மம்), சதகா(தர்மம்) இவற்றை செய்வோருக்கான இவ்வுலக-மறுவுலக சிறப்புகளை நன்மைகளை எல்லாம் அரைமணிநேரம் பட்டியலிட்டு கூறிவிட்டு, இறுதியாக தங்கள் பொருளாதார தேவைகளை மக்களிடம் கூறி ஜகாத் கேட்கும்போதுதான் என்னுள் ஒரு பரிதாப உணர்வு தோன்றும்... இவ்வளவு சிறப்புகளையும் இவர் அடைந்து கொள்ள, ஈயென இரக்கும் இவருக்கு கொடுத்து வைக்க வில்லையே என்று..! இரப்பவரே இதை கூறாமல் இருப்பதும், ஈபவர் இதை அறிந்து வைத்திருப்பதும்தான் சிறப்பு, அல்லவா..?
மேலும், இவர்களில் சிலர் உழைக்க நல்ல உடல்நலனுடன் திடகாத்திரமான உடலுருப்புக்களுடனும், இளமையாக இருப்பர். அப்படியெனில், இவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் நன்மைகளை அடைந்து கொள்ள இவர்கள் ஏன் ஜகாத் கொடுப்பவராக முயற்சிக்கக்கூடாது..? அப்போது, எனக்குள் தோன்றிய... என்னுடைய இந்த 'யார் ஏழை... யார் பணக்காரன்', 'யார் யாசிக்கலாம்', 'எப்போது ஈயென இரக்கலாம்', 'யாருக்கு, எப்போது கொள்ளென கொடுக்கலாம்?' என்ற பல அரசுகளும் அவற்றின் சட்டங்களும் விடைசொல்ல முடியாத கடினமான இக்கேள்விக்கு... துல்லியமான பதிலை நாம் பெற முடியுமா..? எனது இளம்பிராயத்து இத்தேடலின் இறுதிப்புகலிடம் இஸ்லாமிய ஆவணங்களான அல்குர்ஆன் மற்றும் அல்ஹதீஸ்..!
குர்ஆனில், தர்மம் செய்வது என்பது தொழுகையுடன் கூடவே சேர்ந்து பல இடங்களில் பலமுறை மீண்டும் மீண்டும் வலியுருத்தப்படுவதால், கொள்ளென கொடுத்தலாகிய ஜகாத் & சதகாவின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம். அதில் ஒரு வசனத்தில் யார் யாருக்கெல்லாம் நம்முடைய கடமையான தர்மங்கள் உரித்தானவை என்றும் இறைவனால் கூறப்பட்டுள்ளது.
தர்மங்கள் - யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:60)
இங்கே... கூர்ந்து கவனித்தால் மேற்கூறப்பட்ட ஏனைய எட்டு பிரிவினரில் ஒரே ஒருவர்தான் யாசிப்பவர்...! யாசிப்பதால், 'இவர் தர்மம் செய்யப்பட வேண்டியவர்' என்று ஒரு பிரிவினரை மிக இலகுவாக அறியலாம். இதில் ஏழைகளும் இருப்பர்..! ஏழை அல்லாதோரும் இருப்பர்..! ஏனென்றால்...
அடுத்து, ஒரே ஒரு பிரிவினர்தான் ஏழைகள்...! அதாவது, யாசிக்காத தன்மானமுள்ள ஏழைகள்..! அதேநேரம், மீதம் உள்ளவர்கள் இவ்விரு பிரிவினரும் இல்லை..! ஆனால், மற்றவர்களை 'இவர்கள் தர்மத்துக்கு உரியவர்கள்தான்' என்று எப்படி அறிவது..? இதுதான் இஸ்லாம். நம் அறிவிற்கும் சிந்தனைக்கும் தீனி போடும் நுண்ணிய இஸ்லாம். எனது மேற்படி கேள்விகளுக்கும் பதில் தந்த இஸ்லாம். அது பற்றிய அழகிய சிந்தனைகளை இறைநாடினால் பின்னர் பகிர்ந்துகொள்கிறேன்...
-------------------------------------------------------------------------------------------------------------------------
இப்பதிவின் தொடர்ச்சியை இங்கே வாசியுங்கள் சகோ..!
-------------------------------------------------------------------------------------------------------------------------
9 ...பின்னூட்டங்கள்..:
as salamu alaykum bhai,
konjam puriyuthu niraiya puriyalai. sorry. muthalil antha paadalukkaana vilakkam ezuthi vainga. ennai maathiri thamiz enraal kilo enna vilai enru ketpavarkalukku siramame. adutha paguthiyum padichittu solgiren, insha Allah,,,,
@அன்னுஅலைக்கும் ஸலாம் வரஹ்... சகோ.அன்னு, அந்த செய்யுள் பள்ளியளவில் செம பிரபலம். தமிழில் மிக எளிதாக புரியக்கூடிய நடைதான் என்றாலும்... நீங்கள் கேட்டதற்காக விளக்கம் தருகிறேன்:
'ஈ'யென-'பிச்சை போடுங்கள்'என
இரத்தல்-பிச்சை எடுத்தல்
இழிந்தன்று-இழிவானது;
அதனெதிர்-அதற்கு எதிராக
ஈயேன்-பிச்சை போடமாட்டேன்
என்றல்-என்று சொல்வது
அதனினும்-அதைவிட
இழிந்தன்று-இழிவானது;
'கொள்'ளெனக்கொடுத்தல்-'இந்தா வெச்சுக்கோ' என்று பிச்சை போடுதல்
உயர்ந்தன்று-உயர்வானது;
அதனெதிர்-அதைவிட
கொள்ளேன்-பிச்சை போடப்படும் பொருளை பெற்றுக்கொள்ள மாட்டேன்
என்றல்-என்று சொல்லுதல்
அதனினும்-அதைவிட
உயர்ந்தன்று-உயர்வானது;
மிக்க நன்றி சகோ.அன்னு.
ஆஷிக் பாய், ‘இழிந்தன்று, உயர்ந்தன்று...’ போன்ற ‘அன்று’க்களை எல்லாம் நான் ‘இல்லை’ என்னும் பொருளில் எடுத்துக் கொண்டேன், இதனாலேயே முழு கட்டுரையும் என்னை குழப்பி விட்டது. விளக்கத்திற்கு நன்றி.
@அன்னு‘இழிந்தன்று, உயர்ந்தன்று...’ இவற்றை ‘இழிந்த(த)ன்று, உயர்ந்த(த)ன்று...’ என்று பொருள் கொண்டு விட்டீர்களாக்கும்..! சொன்னீர்களே சகோ..! நல்லவேளை..!
அஸ்ஸலாமு அலைக்கும்!
ஜகாத் என்ற ஏழை வரி, ஈதுல் பித்ர் என்ற பெருநாள் தர்மம் இந்த இரண்டும் கொடுக்க கடமைபட்டவர்கள் முறையாக கொடுத்து வந்திருந்தால் சமதர்ம சமுதாயம் இஸ்லாமியரிடத்தில் என்றோ உருவாகியிருக்கும். இந்த தர்மங்களை எல்லாம் நம் ஊர் இமாமுக்கும் மோதினாருக்குமே கொடுக்க வேண்டும் என்று இது நாள் வரை விளங்கியிருந்தோம். இறைவன் கிருபையால் தற்போது இந்த பணிகள் சிறப்புற்று பணம் உரியவர்கள் இடத்தில் சென்று சேர்கிறது. இது மேலும் விரிவாக்கப்பட வேண்டும்.
சிறந்த பதிவு.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
சகோ முஹம்மது அஷிக்
//பள்ளியின் இமாமுக்கு பதிலாக ஜும்மா உரை நிகழ்த்துவார்கள். அப்போது, பெரும்பாலும் ஜகாத்(கட்டாய தர்மம்), சதகா(தர்மம்) இவற்றை செய்வோருக்கான இவ்வுலக-மறுவுலக சிறப்புகளை நன்மைகளை எல்லாம் அரைமணிநேரம் பட்டியலிட்டு கூறிவிட்டு, இறுதியாக தங்கள் பொருளாதார தேவைகளை மக்களிடம் கூறி ஜகாத் கேட்கும்போதுதான்//
இது போன்ற இமாம்களை நானும் சந்தித்து இருக்கிறேன் மிகவும் வருத்தமான உண்மை.
ஒவ்வோரு பள்ளியிலும் 1500அல்லது 2000 சம்பளம் கொடுப்பது இந்த சம்பளத்திற்குள் அவர்கள் குடும்பத்தை ஓட்ட வேண்டும் மெளலவி மார்களுக்கு சரியான சம்பளம் கொடுத்தால் அவர்கள் வீடு வீடுக்கு மெளலுது ஓத போக மாட்டார்கள் இஸ்லாத்தின் பெயரை பயன்படுத்தி காசு பார்க்கிற எத்தனையே விஷயங்களை விட்டு விடுவார்கள்.
திருச்சியில் என் நண்பனின் தந்தை அங்குள்ள பள்ளியில் இமமாக இருக்கிறார் அவரு கூட பேசிக்கிட்டு இருக்கும் போது ஒரு சிறுவன் வந்து ஹஜ்ரத் இன்னைக்கி எங்க வீட்டுல மெளலுது ஓதனும் அத்தா வரச் சொன்னாங்க என்றவுடன்
என் நண்பரின் தந்தை அந்த இமாம்.
எனக்கு இந்த பள்ளியில் 8000 சம்பளம் தருகிறார்கள் அதனால் நான் மெளலுது ஓத வரமாட்டேன் என்றார்.
இப்படித்தான் சமாளிக்கனும் என்று சொல்லி என்னைப் பார்த்து சிரித்தார்.
பகிர்வுக்கு
நன்றி சகோ
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
சரியாக சொன்னீர்கள் சகோ.சுவனப்பிரியன். இதுதான் இப்பதிவின் கிளைமாக்ஸ் ஆக சொல்ல இருந்தேன். ஜகாத்/ஃபித்ரா இவற்றை கொடுப்பதில் இருப்பதைவிட அதை மிகச்சரியாக ஒன்று திரட்டி தேவை உடையோரை கண்டுபிடித்து விநியோகிப்பதில்தான் வெற்றி இருக்கிறது. இதில் இப்போது நம் தமிழகத்தில் வெற்றியை நோக்கி... தழைத்தோங்க ஆரம்பித்துள்ளது, சிலவருடங்களாய்..!
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
நல்லதொரு கருத்தை நவின்றதற்கு நன்றிகள் பல, சகோ.ஹைதர் அலி.
இதற்கு, இமாம்களுக்கு அதிக சம்பளம் தருதல் என்பது ஒரு தீர்வு என்றாலும், தொழுகை நேரங்கள் போக(ஒரு நாளைக்கு மொத்தமாக 2 மணிநேரம் ஆகுமா... மீதி 22 மணிநேரம்) அவர்களை வேறு ஏதேனும் ஒரு தொழிலை செய்ய அனுமதிக்க வேண்டும்.
இதுபற்றிய ஓர் உண்மைச்சம்பவம் ஒன்றை இறைநாடினால் விரைவில் பதிவிடுகிறேன்.
Assalaamualikum
Please visit
http://seasonsnidur.blogspot.in/2012/04/vs.html
ஈயென இரத்தல் Vs. கொள்ளென கொடுத்தல்
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
“Allâh will reward you [with] goodness.”
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!