தேசியக்கொடியும் தேசப்பற்றும்
மீதமுள்ள மாற்றப்படாத மீறப்படாத ஒப்பந்த விதியின் படி காஷ்மீரின் தேசியக் கொடி இந்தியாவின் தேசியக் கொடி அல்ல. காஷ்மீருக்கு என தனியான தேசியக் கொடி என்பது தான் இன்று வரை உள்ள சட்ட நிலைமை
370 வது பிரிவு கூறுவது என்ன
குடியரசு தினத்தை முன்னிட்டு 'கொடியேற்றும் யாத்திரை' என்ற பெயரில் கல்கத்தாவில் இருந்து கிளம்பி காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் இந்திய தேசியக்கொடியை ஏற்றப்போவதாக மீண்டும் அறிவித்து நாட்டில் வகுப்பு துவேஷத்தையும் அமைதி சீர்குலைவையும் வீண் மதக்கலவரத்தையும் விதைக்க பாஜக சங்பரிவார ஹிந்துத்வா சதிகாரக்கூட்டம் திட்டமிட்டுள்ளது.
'இந்தியாவின் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பாக உள்ளார்கள்' என்ற பொய்த்தோற்றத்தை ஏற்படுத்தி 'முஸ்லிம்களுக்கு தேசப்பற்று இல்லை' என்ற நச்சுக்கருத்தை விதைப்பதுதான் இவர்களின் நோக்கம்.
'தேசப்பற்று என்றால் என்ன?' என்ற அரிச்சுவடி கூட தெரியாத மூடர்கள் தான் - அல்லது தெரியாதது போல் நடிப்பவர்கள் தான் - பாஜக தலைவர்கள் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
தேசப்பற்று அவசியம் என்பதில் இந்தியாவில் உள்ள எந்த முஸ்லிமுக்கும் இரண்டாவது கருத்து இல்லை. தேசத்துக்கு ஆபத்து என்றால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் முஸ்லிம்களுக்கும் சேர்த்துத் தான் ஏற்படும் என்பதை இந்திய முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் அறிந்தே வைத்துள்ளனர். தேசத்தை நேசிப்பதில் முஸ்லிம்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்.
'தேசப்பற்று என்றால் என்ன?' என்ற அரிச்சுவடி கூட தெரியாத மூடர்கள் தான் - அல்லது தெரியாதது போல் நடிப்பவர்கள் தான் - பாஜக தலைவர்கள் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
தேசப்பற்று அவசியம் என்பதில் இந்தியாவில் உள்ள எந்த முஸ்லிமுக்கும் இரண்டாவது கருத்து இல்லை. தேசத்துக்கு ஆபத்து என்றால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் முஸ்லிம்களுக்கும் சேர்த்துத் தான் ஏற்படும் என்பதை இந்திய முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் அறிந்தே வைத்துள்ளனர். தேசத்தை நேசிப்பதில் முஸ்லிம்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்.
தேசத்தின் மீது பற்று இருந்த காரணத்தால் தான் பாஜகவின் முன்னோடிகள் வெள்ளையர்களுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருந்த போது வெள்ளையனுக்கு எதிராக உயிரைக் கொடுத்து முஸ்லிம்கள் போராடினார்கள்.
தங்களுக்கு என தனி நாடு உருவான போதும் தங்கள் நாட்டை விட்டு போகாமல் இங்கேயே தங்கி தேசப்பற்றைச் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் நிரூபித்துக் கொண்டிருக்கும் ஒரே சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் மட்டுமே.
மற்ற எந்தச் சமுதாயத்துக்கும் இந்தப் பரீட்சை வைக்கப்படவில்லை. ஆனாலும் ஆங்கிலேயனுக்கு வால் பிடித்த பரம்பரையில் வந்தவர்கள் இன்று தேசப்பற்றின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்களாக வேடம் போட்டு தேசியக்கொடியை ஏற்றப் புறப்பட்டிருப்பது கேவலத்திலும் கேவலமாகும்.
காஷ்மீரில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அங்குள்ள முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் ஏன் எதிர்க்கிறார்கள் என்பது தான் ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. சங்பரிவாரக் கும்பலால் திரித்துக் கூறப்படுகிறது.
காஷ்மீரில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றுவதும், 'ஏற்றுவோம்' எனக் கூறுவதும்தான் அரசியல் சட்டப்படி தேச விரோதச் செயலாகும்.
முதலில் தேசம் என்றால் என்ன? தேசப்பற்று என்றால் என்ன? காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட வரலாறு என்ன? என்பதை விளங்கிக் கொண்டால் பாஜகவினர் செய்யும் இந்தச் செயல் எப்படி தேச விரோத நடவடிக்கையாக உள்ளது என்பது விளங்கும்.
இந்தியா எனும் தேசத்தை ஒருவன் மதிக்கிறான் என்றால் நமக்காக நாமே உருவாக்கிக் கொண்ட சட்டத்தை அவன் மதிக்க வேண்டும். சட்டத்தில் சொல்லப்பட்டதை எதிர்த்து ஒருவன் செயல்பட்டால் அவன்தான் தேச விரோதியாவான்.
முதலில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட வரலாற்றை இவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் .
நாடு சுதந்திரம் அடைந்த போது இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரமான இரண்டு நாடுகளாக ஆக்கப்பட்டன. ஆனால் காஷ்மீர் மாநிலத்தை வெள்ளையர்கள் இந்தியாவுடனும் சேர்க்கவில்லை. பாகிஸ்தானுடனும் சேர்க்கவில்லை. அதைத் தனி நாடாகவே விட்டுச்சென்றனர்.
இந்து மன்னரான ஹரிசிங் என்பவரின் ஆட்சியின் கீழ் அங்கே மன்னராட்சி நடந்து வந்தது. இந்த நிலையில் காஷ்மீர் மன்னர் ஹரிசிங் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தி தன்னாட்சியுடன் பாகிஸ்தானுடன் இணைய 1947-ல் ஒப்பந்தம் செய்தார். இதன் பின்னர் காஷ்மீர் மன்னரை இந்திய அரசாங்கம் சரிக்கட்டியதால் அவர் இந்தியாவுடன் நிபந்தனையின் அடிப்படையில் இணைய ஒப்புக் கொண்டு இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உதவியை நாடினார்.
இதன்படி இந்திய ராணுவம் இந்திய எல்லையில் இருந்தும் பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் இருந்தும் காஷ்மீருக்குள் நுழைந்தன. காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக்கொண்டது. அது 'சுதந்திர காஷ்மீர்' என்று பாகிஸ்தான் கூறுகிறது. அது 'ஆக்ரமிப்பு காஷ்மீர்' என்று இந்தியா கூறுகிறது. எஞ்சிய மூன்றில் இரு பங்கு பகுதியை இந்திய ராணுவம் கைப்பற்றிக் கொண்டது. இதில் ஒரு பகுதியை பின்னர் சீனா பிடித்துக்கொண்டது தனிக்கதை
இதன்படி இந்திய ராணுவம் இந்திய எல்லையில் இருந்தும் பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் இருந்தும் காஷ்மீருக்குள் நுழைந்தன. காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக்கொண்டது. அது 'சுதந்திர காஷ்மீர்' என்று பாகிஸ்தான் கூறுகிறது. அது 'ஆக்ரமிப்பு காஷ்மீர்' என்று இந்தியா கூறுகிறது. எஞ்சிய மூன்றில் இரு பங்கு பகுதியை இந்திய ராணுவம் கைப்பற்றிக் கொண்டது. இதில் ஒரு பகுதியை பின்னர் சீனா பிடித்துக்கொண்டது தனிக்கதை
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் நாட்டோடு காஷ்மீரை இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டதால் காஷ்மீரில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த விகாரம் 1948-ல் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றது. இந்தியாவும் பாகிஸ்தானும் தனது செயலைச் சட்டப்பூர்வமானது என்று நிரூபிக்க இயலாததால் காஷ்மீர் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி தீர்வு காண்பதாக ஐநா சபையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்களா? பாகிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா? அல்லது தனிநாடாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறார்களா? என்ற மூன்று கேள்விகள் அடிப்படையில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். ஓட்டெடுப்பின் மூலம் கிடைக்கும் மக்கள் கருத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் மன்னரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்த ஒப்பந்தம்.
ஐநாவின் மூலம் செய்து கொண்ட இந்த ஒப்பந்தத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் நடைமுறைப்படுத்தவில்லை. எப்படியாவது காஷ்மீரைத்தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் இரண்டு நாடுகளின் நப்பாசையாக இருந்தது. அதனால்தான் இது வரை ஓட்டெடுப்பு நடத்தவில்லை. ஓட்டெடுப்புக்கு விடாமல் இந்தியாவுடன் காஷ்மீரை எப்படியும் முழுமையாக இணைத்து விட வேண்டும் என்று நினைத்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தாலும் அதன் தனித்தன்மைகள் காக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன் அடிப்படையில் தான் காஷ்மீரின் மூன்றில் இரண்டு பாகம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றது. இந்த உறுதி மொழி இந்திய அரசியல் சாசனத்திலும் சேர்க்கப்பட்டதால் ஓட்டெடுப்பு நடத்தும் திட்டத்தை இந்திய அரசு தள்ளிப்போட்டு வந்தது.
இந்திய அரசியல் சாசனத்தில் 370-வது பிரிவு உருவாக்கப்பட்டு காஷ்மீருக்கு தன்னாட்சி உரிமையும் சிறப்பு அந்தஸ்தும் அளிக்கப்பட்டது. பாதுகாப்பு, அயலுறவு, நாணயம், செய்தித் தொடர்பு ஆகியவை மட்டும் இந்திய அரசிடம் இருக்கும். மற்ற எல்லா அதிகாரமும் மாநில அரசிடம் இருக்கும்.
காஷ்மீரை ஆள்வதற்காக மக்களால் தேர்வு செய்யப்படுபவர், ஜம்மு-காஷ்மீர் பிரதமர் என்று அழைக்கப்படுவார் என்றும் காஷ்மீர் ஆளுநர், ஜனாதிபதி என்று அழைக்கப்படுவார் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டது.
காஷ்மீரை ஆள்வதற்காக மக்களால் தேர்வு செய்யப்படுபவர், ஜம்மு-காஷ்மீர் பிரதமர் என்று அழைக்கப்படுவார் என்றும் காஷ்மீர் ஆளுநர், ஜனாதிபதி என்று அழைக்கப்படுவார் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டது.
இதன்படி காஷ்மீரின் முதல் பிரதமராக (முதல்வராக அல்ல; பிரதமராக) 1951-ல் ஷேக் அப்துல்லா பதவியேற்றார். மன்னர் ஹரிசிங்கின் மகன் கரன்சிங் ஜனாதிபதியானார்.
"காஷ்மீர் பிரதமர்"களின் பட்டியலை அறிய விக்கிபீடியாவில் இங்கே சென்று வருக.
"காஷ்மீர் மன்னர்/ஜனாதிபதி ஆளுனரானதை" விக்கிபீடியாவில் இங்கே கண்டு வருக.
இதன் பின்னர் 370-வது பிரிவில் சொன்னபடி நடக்காமல் 1954 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநில அரசை இந்திய அரசு கலைக்கலாம் என்று இந்திய அரசியல் சாசனச்சட்டம் வெளியிடப்பட்டு ஒப்பந்தம் மீறப்பட்டது.
பின்னர் 1957 ஜனவரி 26ல் இன்னும் ஒரு அரசியல் சாசனச் சட்டத்தின் மூலம் காஷ்மீர் இனி எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும் என்று ஆக்கப்பட்டது. ஐநா ஒப்பந்தத்தை இந்திய அரசு மீறியது போலவே இந்து மன்னரிடமும் முஸ்லிம் தலைவர்களிடமும் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும் ஒவ்வொன்றாக மீறியது.
பின்னர், 1965 மார்ச் 30 அன்று காஷ்மீர் பிரதமர் குலாம் முஹம்மது சாதிக்.... முதல்வராக(!?) ஆக்கப்பட்டார்..! ஜனாதிபதி கரண்சிங் கவர்னர் ஆனார்..! இப்படி கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியும் இந்திய அரசால் மீறப்பட்டது.
இதுமட்டுமின்றி காஷ்மீருக்கென தனி தேசியகீதமும் உண்டு..! அதன் ஆங்கில மொழியாக்கத்தை இங்கே வாசியுங்கள். ( Did the constituent assembly declare the poem written by Maulana Masoodi and recited by Sheikh Mohammed Akbar at the request of president of the assembly Ghulam Mohammed Sadiq in the year 1952, the National Song of the state?)
இந்தியாவுக்குத் தனியாக அரசியல் சாசனம் இருப்பது போல் காஷ்மீருக்குத் தனியாக அரசியல் சாசனம் உருவாக்கிக் கொள்ள இந்திய அரசு ஒப்புக் கொண்டு அதன் படி காஷ்மீருக்குத் தனி அரசியல் சாசனச் சட்டம் உருவாக்கப்பட்டது.
இது குறித்து இந்திய அரசியல் சாசனம் பின்வருமாறு கூறுகிறது
,ஆனால் (ஆ) கிளைக் கூறின் (1) ஆவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதும், அந்த அந்த மாநிலத்தை இணைத்துக் கொள்ளும் போது எழுதப்பட்டதுமான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசரைக் கலந்தாலோசிக்காமல் எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது
இந்திய அரசியல் சாசனத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட படி காஷ்மீருக்கான அரசியல் சாசனம் 17.11.1956 ல் அரசியல் சாசனச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது 26.1.1957இல், இந்தியாவின் எட்டாவது குடியரசு நாளில் நடப்புக்கு வந்தது
The Constitution of Jammu and Kashmir
Preamble. – We, the people of the State of Jammu and Kashmir, having solemnly resolved, in pursuance of the accession of this State to India which took place on the twenty - sixth day of October, 1947, to further define the existing relationship of the State with the Union of India as an integral part thereof, and to secure to ourselves – ………
IN OUR CONSTITUENT ASSEMBLY this seventeenth day of November, 1956, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.
Preamble. – We, the people of the State of Jammu and Kashmir, having solemnly resolved, in pursuance of the accession of this State to India which took place on the twenty - sixth day of October, 1947, to further define the existing relationship of the State with the Union of India as an integral part thereof, and to secure to ourselves – ………
IN OUR CONSTITUENT ASSEMBLY this seventeenth day of November, 1956, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.
மேலே உள்ளது ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரைப் பகுதி.
இது என்ன கூறுகிறது?
.ஜம்மு - காஷ்மீர் மக்களாகிய நாங்கள், 1947 அக்டோபர் 26 அன்று இம்மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவும், மேலும் இந்திய ஒன்றியத்தோடு இந்த மாநிலத்துக்கு உள்ள தொடர்பை வரையறை செய்ய வேண்டியும் ... ... எங்கள் மாநில அரசியல் அமைப்பு அவையில், 1956 நவம்பர் 17 அன்று நாங்கள் நிறைவேற்றியும் ஏற்றும் எங்களுக்கான இந்த அரசமைப்பை அமைத்துக் கொண்டோம்'' எனக் கூறுகிறது. இந்தியாவுடன் இணைக்கப்பட்டதை ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஜம்மு - காஷ்மீருக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவு - தொடர்பு பற்றிய ஒரு விளக்கத்தையும் அல்லது வரையறையையும் தங்களுக்குத் தாங்களே செய்து கொண்டனர்
சுதந்தர இந்தியாவுக்கு என்று எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?.
.அதன் முகவுரையில் இந்திய மக்களாகிய நாங்கள், 1949 நவம்பர் 26இல் நிறைவேற்றிக் கொண்ட அரசமைப்புச் சட்டம்'' என்றே கூறுகிறது. அதாவது இந்தியாவிலுள்ள எல்லா மக்களும் இந்திய மக்கள்''. ஆனால், காஷ்மீரில் உள்ள மக்கள் முதலில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் அடுத்து இந்திய மக்கள். சட்டப்படி அவர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள்
மேற்கண்ட காஷ்மீர் அரசியல் சாசனத்தில் காஷ்மீரின் தேசியக் கொடி எது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதை இந்திய அரசியல் சாசனமும் ஒப்புக் கொள்கிறது.
மீதமுள்ள மாற்றப்படாத மீறப்படாத ஒப்பந்த விதியின் படி காஷ்மீரின் தேசியக் கொடி இந்தியாவின் தேசியக் கொடி அல்ல. காஷ்மீருக்கு என தனியான தேசியக் கொடி என்பது தான் இன்று வரை உள்ள சட்ட நிலைமை
ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் விதி 144 அந்நாட்டுக்கு உரிய தேசியக் கொடியின் அமைப்பை விவரிக்கிறது.
144. Flag of the State: - The Flag of the State shall be rectangular in shape and red in colour with theree equidistant white vertical stripes of equal width next to the staff and a white plough in the middle with the handle facing the stripes. The ratio of the length of the flag to its width shall be 3 : 2.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி நீண்ட சதுர வடிவத்தில் சிவப்பு வண்ணத்தில் இலங்கும். அக்கொடியின் கம்பை ஒட்டி சமமான இடைவெளிகளைக் கொண்ட சமமான அகலம் கொண்ட செங்குத்தான வடிவில் - வெள்ளை நிறத்தில் மூன்று கோடுகள் இருக்கும். கொடியின் நடுவில் வெள்ளை வண்ணத்தில் ஏர் வரையப்பட்டிருக்கும். ஏரின் முனை வெள்ளைக் கோடுகளை நோக்கி இருக்கும்.(படம்கீழே)
இதேபோல பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீருக்கு ஒரு தனி தேசியக்கொடி இங்கே உள்ளது.
இந்திய பாகிஸ்தான் சுதந்திரத்துக்கு முன்னர் காஷ்மீர் தேச மஹாராஜாவின் கொடி இங்கே.
இப்போது காஷ்மீரில் இந்திய தேசியக்கொடி ஏற்றும் பிரச்சனைக்கு வருவோம். அது தான் காஷ்மீரத்துக்கான இந்தியதேசியக்கொடி என்று இந்திய அரசியல் சாசனம் சொல்லும் போது அதை மீறும் வகையில் அரசியல் சாசனத்தைக் காலில் போட்டு மிதித்து விட்டு "அந்த மாநிலத்திற்கு எது தேசியக்கொடியாக இல்லையோ அதைத்தான் நாங்கள் ஏற்றுவோம்" என்று ஒருவர் கூறினால் அவர் இந்தியாவின் அரசியல் சட்டத்தை மீறுகிறார். இந்தியாவின் அரசியல் சட்டத்தை மீறும் யாரும் தேச விரோதிகளாகத் தான் இருப்பார்களே தவிர ஒருக்காலும் தேசபக்தர்களாக முடியாது.
தேசியக் கொடியை அரசியலாக்கும் கயவர்கள் 'முஸ்லிம்கள் தேசியக்கொடியை எதிர்க்கிறார்கள்' என்ற கருத்தை மக்கள் மத்தியில் விதைக்க முயல்கிறார்கள். ஆனால் இவர்கள் எது சட்டப்படி காஷ்மீரின் தேசியக் கொடியாக இல்லையோ அதை காஷ்மீரின் தேசியக் கொடி என்று கூறி தேச விரோதச் செயலைச் செய்கிறார்கள். காஷ்மீருக்கு எது இந்தியாவின் தேசியக் கொடியாக இருக்கிறதோ அதை ஏற்க மறுக்கிறார்கள். இதன் மூலம் தாங்கள் தேச விரோதிகளே என்பதை நிரூபிக்கிறார்கள்.
தேசியக் கொடியை அரசியலாக்கும் கயவர்கள் 'முஸ்லிம்கள் தேசியக்கொடியை எதிர்க்கிறார்கள்' என்ற கருத்தை மக்கள் மத்தியில் விதைக்க முயல்கிறார்கள். ஆனால் இவர்கள் எது சட்டப்படி காஷ்மீரின் தேசியக் கொடியாக இல்லையோ அதை காஷ்மீரின் தேசியக் கொடி என்று கூறி தேச விரோதச் செயலைச் செய்கிறார்கள். காஷ்மீருக்கு எது இந்தியாவின் தேசியக் கொடியாக இருக்கிறதோ அதை ஏற்க மறுக்கிறார்கள். இதன் மூலம் தாங்கள் தேச விரோதிகளே என்பதை நிரூபிக்கிறார்கள்.
இது போல் தான் கர்நாடக மாநில ஹூப்லியில் உள்ள ஈத்கா மைதானத்தில் தேசியக் கொடி ஏற்ற முயல்வதும் அதை முஸ்லிம்கள் எதிர்க்கும் போது முஸ்லிம்கள் தேசப் பற்று இல்லாதவர்கள் எனச் சித்தரிப்பதும் இவர்களின் வாடிக்கை.
முஸ்லிம்களுக்குச் சொந்தமான தனி உடமையான இடத்தில் சங்பரிவாரம் அத்து மீறுகிறது என்பது தான் இங்கே பிரச்சனை. தேசியக்கொடி அல்ல. அங்கே தேசியக்கொடி ஏற்றுவதன் மூலம் அந்த இடம் முஸ்லிம்களுக்கு உரியது அல்ல என்று நிலை நாட்டப் பார்க்கிறார்கள். இந்த அத்து மீறலுக்கு தேசியக்கொடியைக் கேடயமாக ஆக்கி தேசியக்கொடியின் மரியாததையைக் குலைத்த தேச விரோதிகள் இவர்கள் தான்.
அத்வானியின் வீடு முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்று வழக்கு இருக்கும் போது அத்வானியின் வீட்டுக்குள் புகுந்து முஸ்லிம்கள் தேசியக் கொடி ஏற்றப் போனால் அது தேசியக் கொடி பிரச்சனை என்று சங்பரிவாரம் எடுத்துக் கொள்ளுமா? அல்லது அத்வானியின் இடத்தை முஸ்லிம்கள் உரிமை கொண்டாடுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளுமா?
இந்தக் காவிக் கும்பல் நாட்டில் அமைதியக் குலைத்து நல்லிணக்கத்தைக் கெடுத்து சிறுபாண்மை சமுதாயத்தின் மீது வெறுப்பை விதைப்பதை மட்டுமே ஒரே கொள்கையாகக் கொண்டுள்ளது.
இவர்களின் எண்ணம் பலிக்காத வகையில் இதை முஸ்லிமல்லாத மக்கள் மத்தியில் கொண்டு சென்று இவர்களின் தேச விரோதச் செயலை முறியடிக்க வேண்டும். இதற்காக உழைக்க வேண்டிய அளவுக்கு முஸ்லிம்கள் உழைக்க வேண்டும்
370 வது பிரிவு கூறுவது என்ன
370. (1) .- இந்த அரசியல் சாசனத்தில் யாது கூறப்பட்டிருப்பினும்
(அ) 238 ஆவது கோட்பாட்டில் உள்ளவற்றை ஜம்மு நாடாளுமன்றத்திலுள்ள அதிகாரம்
(ஆ) அந்த மாநிலம் சம்பந்தமாக சட்டம் இயற்றுவத்ற்கு நாடாளுமன்றத்திலுள்ள அதிகாரம்
(1) அந்த மாநிலத்தைக் குடியேற்ற நாடான இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் போது எழுதப்பட்ட ஆவணத்தில் அந்த மாநிலம் பற்றிக் குடியேற்ற நாடான இந்தியாவுக்குச் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரமுள்ளதாகக் குறிப்பிடப்பட்ட விவகாரங்களுக்கும் அதோடு ஒத்திருக்கும் விவகாரங்களுக்கும் மத்தியப் பட்டியலிலும் மத்திய மற்றும் மாநிலப் பட்டியலில் இருக்கின்றவை எனக் குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்படும் விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசைக் கலந்தாலோசித்த பின்னரும்
(2) அந்த மாநில அரசின் ஒப்புதலுடன் குடியரசுத் தலைவர் தம் உத்தரவில் குறிப்பிடத்தக்க அத்தகைய பட்டியல்களில் உள்ள வேறு விவகாரங்கள் பற்றியும்
மட்டுமே சட்டம் இயற்ற வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
விளக்கம் : இந்தக் கோட்பாட்டில் வரும் மாநில அரசாங்கம் என்ற சொல் குடியரசுத் தலைவரால் தற்காலிகமாக ஜம்மு காஷ்மிரின் மகாராஜா என்று அங்கீகரித்துள்ள நபரைக் குறிக்கும். அந்த மகாராஜா 1948 மார்ச்சு மாதம் 16 ஆம் நாள் வெளியிட்டுள்ள பிரகடனப்படியுள்ள தம் அமைச்சரவையின் அறிவுரைக்கு ஏற்பச் செயல்பட வேண்டும்.
)இ) இந்தக் கோட்பாடும் மற்றும் ஒன்றாவது கோட்பாடும் அந்த மாநிலத்துக்கு அனுசரிக்கப்பட வேண்டும்.
)ஈ) குடியரசுத் தலைவரின் உத்தரவில் குறிப்பிடும் விதி விலக்குகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டு இந்த அரசியல் சாசனத்தில் உள்ள மற்ற விதிகளும் அனுசரிக்கப்படலாம்.
ஆனால் (ஆ) கிளைக் கூறின் (1) ஆவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதும், அந்த அந்த மாநிலத்தை இணைத்துக் கொள்ளும் போது எழுதப்பட்டதுமான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசரைக் கலந்தாலோசிக்காமல் எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது,
இதற்கு முந்தைய விதியில் கூறப்படாத விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசரைக் கலந்தாலோசிக்காமல் எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது.
(2) (1) வது கூறின் (ஆ) கிளைக் கூறின் (2)வது பத்தியில் உள்ளபடி அல்லது அந்தக் கூறின் (ஈ) இணைக் கூறின் இரண்டாவது விதியில் உள்ளபடி மாநில அரசாங்கத்தின் சம்மதத்தை அந்த மாநிலத்தின் அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு முன்னர் பெற்றிருந்தால் அதனை அரசியல் நிர்ணய சபையில் அத்தகைய முடிவு எடுக்கப்படுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
(3) இந்தக் கோட்பாட்டில் இதற்கு முன்னர் யாது கூறப்பட்டிருப்பினும் தாம் குறிப்பிடும் அத்தகைய நாளிலிருந்து இந்தக் கோட்பாட்டில் உள்ளவை செயல் இழக்கும் அல்லது அத்தகைய மாற்றங்களூக்கும் விதி விலக்குகளுக்கும் உட்பட்டுச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு பொது அறிவிக்கை மூலம் குடியரசுத் தலைவர் அறிவிப்பு தரலாம்.
எனினும் அத்தகைய அறிவிப்பை செய்வதற்கு முன் (2) வது கூறிலுள்ளபடி அந்த மாநிலத்தின் அரசியல் நிர்ணய சபையால் அந்த அறிவிப்பு பரிந்துரை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
நன்றி : ஆன்லைன்பிஜே டாட் காம். (டிஸ்கி: சகோ.பி.ஏ.ஷேக்தாவூத் மூலம் மெயிலில் பெறப்பட்ட இப்பதிவு, என்னால்... புகைப்படங்கள், சுட்டிகள் என சில பிற்சேர்க்கைகளுடன் இங்கே இடம்பெற்றுள்ளது) | ||||
37 ...பின்னூட்டங்கள்..:
பாரத நாடு எந்த நாட்டையும் போரிட்டு கைப்பற்றியதில்லை என்று பட்டிமன்றங்களில் சிலர் பேச கேட்டிருக்கிறேன். ஆனால் இங்கு ஒரு தேசத்தையே நயவஞ்சகமாக லவட்டியிருக்கிறார்கள் இந்திய தேசத்தின் மக்களாட்சி ஆட்சியாளர்கள். கஷ்மீர் இந்தியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ சொந்தமல்ல; கஷ்மீரிகளுக்கே சொந்தம் என்று உரக்க கத்த தோன்றுகிறது. சரியான நேரத்தில் பதிவேற்றி இருக்கிறீர்கள் ஆஷிக். ஆழமான கட்டுரை. எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய உண்மைகள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
காஷ்மீருக்கென தனி தேசியக்கொடி உள்ளது என்பதை பற்றியும், அதன் வரலாறுபற்றியும் இப்போது தான் ஆழமாக உணர முடிந்தது. அனைவரும் அறிய வேண்டிய தகவல்கள்
தங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக சகோ.உதயம்.
//கஷ்மீர் இந்தியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ சொந்தமல்ல; கஷ்மீரிகளுக்கே சொந்தம் என்று உரக்க கத்த தோன்றுகிறது.//--உங்களுடன் சேர்ந்து எனக்கும் உரக்க கத்த தோன்றுகிறது சகோ.
//எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய உண்மைகள்.//--கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ.
அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஆமினா,
//அனைவரும் அறிய வேண்டிய தகவல்கள்//--கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
சரியான சட்டையடி பதிவு
ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறினால் உண்மையாகிவிடும் என்ற நினைப்பில்
நாங்கள்தான் தேசபக்தியாளர்கள் என்று ஊடக பலத்தோடு திரும்ப திரும்ப கூவுகிற பாசிச காவி கும்பல்கள் வரலாறை மறைக்க முடியாது என்பதை தெரிந்துக் கொள்ளட்டும்.
இந்துத்துவாதிகளின் பிரதான ஆயுதம் வரலாறு வரலாற்றின் அடிப்படையிலேயே அவர்கள் ‘எதிரி’யை அடையாளப்படுத்துகிறார்கள். ’தேசியத்தை’ வரையறுக்கின்றனர். காவிகளின் நிகழ்கால அரசியலுக்கு தோதாக ஒரு பழங்காலத்தைக் கட்டமைக்கின்றனர். அதன்மூலம் நிகழ்காலம் மட்டுமல்லாமல் பழங்காலத்தையும் அவர்களின் வசமாக்க பார்க்கிறார்கள்.
இவர்களை முறியடிக்க வேண்டும் என்றால் நாமும் உண்மையான வரலாற்றை கற்றுக்கொள்ள வேண்டும்.
”எந்த சமூகம் தன்னுடைய வரலாற்றை மறந்து விடுகிறதொ அந்த சமூகம் அழிக்கப்பட்டு விடும்”
அந்த வகையில் வரலாற்றுரிதியான சகோதரர் முஹம்மது அஷிக் அவர்களின் பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் நெஞ்சம் நன்றியால் விம்முகிறது
நன்றி சகோ
இன்று மக்களுக்கு இரு நற்செய்திகள்.
மத்திய அரசும் காஷ்மீர் அரசும் இப்போது சற்று அறிவுத்திறனுடன் நாட்டின் அமைதிக்காக உடனடியாக செயல்பட ஆரம்பித்து விட்டன. அதன் செயல்களை வரவேற்போம்.
1 - நேற்று ஜம்முவுக்கு தேசியக்கொடியேற்றச்செல்ல முயன்ற சுஷ்மா சுவராஜையும், அருண் ஜேட்லியையும் விமான நிலையத்தை விட்டு வெளியேற பாதுகாப்புப் படையினரும், மாநில அரசு அதிகாரிகளும் அனுமதிக்கவில்லை. விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திவிட்டனர். அத்வானிக்கு செம கடுப்பு. வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார்.
அடுத்த செய்தி....
அடுத்த செய்தி..!
2 - பெங்களூரிலிருந்து புறப்பட்ட ரயில் பெங்களூருக்கே செல்கிறது..!? என்ன புரியவில்லையா? தொடர்ந்து படிங்கள் செம காமடி.
ஸ்ரீநகரில் லால்சவுக்கில் தேசிய கொடியை ஏற்றுவதற்காக தனி சிறப்பு ரெயிலில் காஷ்மீர் புறப்பட்ட கர்நாடகா மாநில பா.ஜ.க "கொடிசெவை" தொண்டர்கள் தூக்கத்திலிருந்து விழித்த பொழுது தாங்கள் பயணித்த ரெயில் வந்த வழியிலேயே வேகமாக திரும்பிச் செல்வதை கண்டனர்.
பெங்களூரிலிருந்து புறப்பட்ட ரெயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மஹராஷ்ட்ரா மாநிலத்தை வந்தடைந்தது. அஹ்மத் நகருக்கு அடுத்துள்ள தவ்த் ரெயில்வே ஸ்டேசனுக்கு ரெயில் வந்தபொழுதே முன்னரே தயாராக்கிய திட்டத்தின் படி 2 பெட்டிகள் ரெயிலுடன் இணைக்கப்பட்டு அவற்றில் 200 போலீசார் ஏறினர். தொடர்ந்து ரெயில் அடுத்துள்ள ஸரோல-கஸர் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டது. அங்கு ரெயில் எஞ்சின் பிரித்தெடுக்கப்பட்டு ரெயிலுக்கு எதிர்பக்கம் (!?) பொருத்தப்பட்டது. ரெயில் கர்நாடகா மாநிலம் குல்பர்காவை நோக்கி வந்துக்கொண்டிருக்கும் பொழுதுதான் தூங்கிக் கொண்டிருந்த நபர்களுக்கு ரெயில் பெங்களூரை நோக்கி திரும்பிச்செல்வது புரிந்தது. செம காமடின்னா இதுதாங்க...!
தங்கள் பணியை சரியாக செய்த ரயில்வே மந்திரி மம்தாவுக்கும்(உடன்பட்ட மத்திய அரசுக்கும்), காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லாவிற்கும் வாழ்த்துக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
தன் காவி தீவிரவாதம் வெளியில் தெரிய ஆரம்பித்தவுடன், அதை மறைக்க இந்த கூட்டம் செய்யும் நாடகங்களில் இதுவும் ஓன்று.
//இந்தியாவின் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பாக உள்ளார்கள்//
Yes or No?
Venumna, "Allaah oo Akbar" nu paatu pottu, Pakistan kodi yethiralaama?
Kadupethuranga my lord.
அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஹைதர் அலி,
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. பாராட்டுக்கள் ஆன்லைன் பிஜே டாட் காம் தளத்துக்கு பார்சல்...!
அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.இளம் தூயான்,
//தன் காவி தீவிரவாதம் வெளியில் தெரிய ஆரம்பித்தவுடன், அதை மறைக்க இந்த கூட்டம் செய்யும் நாடகங்களில் இதுவும் ஓன்று.//--மிகச்சரியாக சொன்னீர்கள்.
ஏனெனில், பாஜக தலைமையில் தேஜகூ ஆட்சி நடந்தபோது, பிரதமர் வாஜ்பாய் செங்கோட்டையில் கொடியேற்றுவதற்குப் பதிலாக ஸ்ரீநகர் லால் சவுக்கில் கொடியேற்றி இருந்திருக்கலாமே? ஒரு முறைகூட அப்படிச் செய்யவில்லையே, ஏன்? ஆனால், இப்போது பிரச்சினையை கிளப்புவது... தாங்களை ஏதோ தேசபக்தர் கூட்டம் என்று மக்களை நம்பவைக்கும் மோசடி. சதி. இதில் அரசும் மக்களும் உடன்கட்டை ஏற சம்மதிக்கவில்லை.
Anonymous said... 9 (அதே நெல்லை அனானி)
தங்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக சகோ நெல்லைக்கார அனானியாரே...
////ஸ்ரீநகர் பக்ஷி ஸ்டேடியத்தில் குடியரசு தினத்தன்று காஷ்மீர ஆளுநர் தேசியக் கொடியை வழக்கம்போல ஏற்றத்தான் போகிறார். அந்தக் கொடியேற்றும் விழாவில் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாக்காரர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று யாரும் தடுக்கவில்லையே?
காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் தாங்கள் இந்தியர்கள் என்கிற உணர்வு பெற வேண்டும். அவர்களுக்கு இந்திய அரசு தங்களையும் பிரஜைகளாகக் கருதுகிறது என்கிற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அவர்களே மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு குதூகலமாக மூவர்ணக் கொடியைப் பறக்கவிட்டு தேசிய கீதம் பாடினால்தான் அதில் அர்த்தம் இருக்கும். அதை விட்டுவிட்டு, ஏதோ அடையாளத்துக்குக் கொடியேற்றப் போகிறேன் என்று விதாண்டாவாதம் செய்தால், பிரிவினைவாதிகள் பாகிஸ்தானியக் கொடியை ஏற்றி நம்மைக் கேவலப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்தியக் குடியரசின் ஐக்கியமும், ஒருமைப்பாடும் காப்பாற்றப்படும். காப்பாற்றப்பட்டாக வேண்டும் என்பதில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு மட்டுமல்ல, பொறுப்பான ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அக்கறை உண்டு./////
---தினமணி தலையங்கம்(நன்றி)
இந்தியாவுடன் இணையவேண்டும் என்ற மனதுடன் உள்ள காஷ்மீரிகளின் பொதுக்கட்சிதான் ஆளும் தேசிய மாநாட்டுக்கட்சி. 'தனிநாடு வேண்டும்' என்று கேட்கும் பிரிவினை வாதிகள் பொதுத்தேர்தலில் கலந்து கொள்வதில்லை. 'பாகிதானுடன் இணைய வேண்டும்' என்போர் 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்' குடியேறிவிட்டனர். பாஜகவின் இதுபோன்ற முட்டாள்த்தனமான செயல் இப்போது தனிநாடு கோரும் காஷ்மீர் பிரிவினைவாதிகளின் மனமாற்றத்த்தை தடுத்துவிடும். ஓமர் அப்துல்லாவைக்கூட கொடியேற்ற விடாமல் இனி அவர்கள் எதிர்க்கக்கூடும். இந்தியா அரசுமட்டும் பாஜகவின் செயலுக்கு ஆதரவு நல்கி இருந்தால்...? ஓமர் அப்துல்லாவே கடுப்பாகி பிரிவினைவாதியாகி இருக்ககூடுமே?
பாஜகவின் இந்த அரசியல் ஸ்டன்ட், இப்போது உண்மைகளை நோக்கி மக்களை சிந்திக்க வைத்துவிட்டது. அவ்வகையில் அவர்களுக்கு நன்றி.
"கட்டாய மதமாற்றத்தை" எதிர்க்கும் நாம் துப்பாக்கி முனையில் "கட்டாய தேசிய மாற்றத்தையும்" எதிர்க்க வேண்டும். எந்த மாற்றமும் மனமாற்றமாக இருந்தால் மட்டுமே நீடித்து நிலைக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நாமெல்லாம்(நீங்களும்தானே?) குடியரசுக்காக இத்தினத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
ஆனால், பாஜக தலைவர் நிதின் கட்காரி, 'குடியரசு தினம் ஒரு துக்க தினம்' என்று இன்று அறிவித்துள்ளார். தேசத்துரோகிகள் ஒழிக.
ஜெய்ஹிந்த்..!
@ indian voice,
இதுவரை எனக்கு வந்த மறுமொழிகளிலேயே மிகவும் அருவருக்கத்தக்கது உங்களுடையது. அதனால் வெளியிடவில்லை. அதற்கு பதில்... உங்கள் வலைப்பூவில் என் பின்னூட்டம்.
http://kanoodu.blogspot.com/2009/10/karpanai.html?showComment=1296072437553#c7204165327303537810
////முஹம்மத் ஆஷிக் said...
உங்கள் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!
என் வலைப்பூவில் இன்று ஏன் அப்படி ஒரு கேவலமான அநாகரிகமான ஆபாச பின்னூட்டம் போட்டீர்கள் சகோதரா? வெளியிடமுடியாத அளவுக்கு?
நம் 'இந்தியன் வாய்ஸ்' இப்படி இருக்காதே? மாற்றுக்கருத்து இருந்தால் அதை நாகரிகமாக பதிவு செய்யுங்கள் சகோ. நிச்சயமாய் வெளியிடுவேன்.
என் பதிவில் ஏதும் தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள். உடனே திருத்திக்கொள்ள தயாராய் உள்ளேன்.
ஆக்கப்பூர்வமான மறுமொழிகளை உங்களிடமிருந்து எதிர்பாட்க்கிறேன் சகோ.
நன்றி.
January 26, 2011 12:02 PM////
முன்னாள் பா.ஜ.க தலைவர் முரளி மனோகர் ஜோஷி 1992-ஆம் ஆண்டு பலத்த ராணுவ பாதுகாப்பிற்கு மத்தியில் லால்சவுக்கில் கொடியேற்றும் பொழுது பயத்தில் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றினார். அப்பொழுது அவர் பா.ஜ.கவின் 3-வது பெரிய தலைவராக மதிக்கப்பட்டார். தற்பொழுது அவர் பா.ஜ.கவின் முதல் 10 தலைவர்களில் கூட இல்லை.
//"கட்டாய மதமாற்றத்தை" எதிர்க்கும் நாம் துப்பாக்கி முனையில் "கட்டாய தேசிய மாற்றத்தையும்" எதிர்க்க வேண்டும். //
நல்ல கருத்து.
நன்றி சகோ.ஹுசைனம்மா.
நன்றி சகோ.Anonymous ...15. நேற்று கூட ஒரிஸ்ஸாவில் பாஜக தலைமை அலுவலகத்தில் இதே தலைகீழ் கதைதான் நடந்துள்ளது..! ஏன் இப்படி?
முஸ்லிம்களையே பிடிக்காத ஹிந்துதுவா சக்திகளும் காங்கிரசும் எதற்கு முஸ்லிம்கள் தொண்ணூறு சதத்திற்கு மேல் உள்ள காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க போராடுகின்றன?
சுதந்திரத்துக்கு முன்னாள் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு மக்கள்தொகை இருந்த முஸ்லிம்கள் இப்போது இப்படி சக்தி இழந்து கூனி குறுகி சிறுபான்மையாக இருக்க காரணம் பாகிஸ்தான் பிரிவினைதானே? அதேபோல இந்திய முஸ்லிம்களை வலிமை இழக்கச்செய்யும் இன்னொரு பிரிவினை எதற்கு இந்திய முஸ்லிம்களுக்கு?
இப்போது இதற்கு பதில் சொல்லுங்கள்.
நீங்கள் காஷ்மீர் பிரிவினையை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்தக் கட்டுரை தொகுப்பை "ஆன்லைன் பிஜே டாட் காம்" - ல் நானும் படித்தேன் சகோ. எக்ஸ்ட்ரா சுட்டிகளோடும், படங்களோடும் அதை நீங்கள் மீள்பதிவு செய்ததும் நல்லதே! இதுபோன்ற அவசியமான ஆக்கங்களைக் கொடுக்கும் பிஜே அண்ணனுக்கு அல்லாஹுத்தஆலா நீடித்த ஆயுளும் நோயற்ற வாழ்வும் மறுமைப் பலனையும் கொடுப்பானாக! உங்களுக்கும் நன்றி சகோ.
பெங்களூரிலிருந்து புறப்பட்ட ரயில் பெங்களூருக்கே சென்ற 'செம காமடி'யும் மாலை மலரில் பார்த்தேன் :)))
"தங்கள் பணியை சரியாக செய்த ரயில்வே மந்திரி மம்தாவுக்கும்(உடன்பட்ட மத்திய அரசுக்கும்), காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லாவிற்கும் வாழ்த்துக்கள்." ரிப்பீட்டு....!
முதல் கேள்வி... உண்மையிலேயே சிந்திக்க வைக்கும் கேள்வி.
இவர்கள்தானே 'பாகிஸ்தான் பிரிந்தால் நல்லது' என்று நினைத்து பிரித்து விட்டவர்கள், அப்புறம் ஏன் இப்போது அதேபோன்ற விஷயத்தில் பல்டி அடிக்கின்றனர்... என கேட்கிறீர்கள்?
அமர்நாத் யாத்திரை போவது பனி லிங்கம்... இதெல்லாம் காரணமாக இருக்கலாம்.
அல்லது,
சுவிஸ் போல ஸ்கேட்டிங் செய்யவல்ல ஒரு பனி படர்ந்த குளிர்ந்த பூலோக சொர்க்கம் போன்ற தோற்றம் காரணமாக அதன் மீது கொண்ட மோகம் காரணமாக இருக்கலாம்.
அல்லது,
காஷ்மீர் மூலம் பாக்,சீன,ஆப்கானிய பகுதிகளை கண்காணிக்க வசதி...?
அல்லது
சும்மா ஒரு வெத்து கவுரவம்?
அல்லது
அரசியல் ஸ்டன்ட்தான் காரணமா... பாகிஸ்தான், ராமர் கோவில், பொது சிவில் சட்டம், சேது சமுத்திரம், இத்தாலிக்காரி... இத்யாதி... இத்யாதி...
இரண்டாவது கேள்வி முதல் கேள்வியை விட அருமை சகோ.
(Kerala had a Muslim chief minister when C.H. Mohammed Koya of the Muslim League assumed office on Oct 12, 1979, but his four-member cabinet was forced to resign on Dec 1 the same year.) --இதை தவிர...காஷ்மீருக்கு வெளியே வேறு எங்காவது முஸ்லிம் முதலமைச்சர் வந்திருக்கின்றனரா?
இந்தியாவின் முதல் பிரதமாராக காந்தி, ஜின்னாவை முன்மொழிந்தபோது எவ்வளவு எதிர்ப்புகள் வந்தனவோ... அவ்வளவு ஆதரவு ஜின்னா தனி நாட்டுக்கு இசைவு தந்தபோதும் வந்தது.
இன்றைய இந்திய முஸ்லிம்களின் அவல நிலைக்கு முழுக்காரணமும் ஜின்னாதான் என்று சொல்லமுடியாவிட்டாலும், 'முக்கியகாரணம்' என்று சொல்லலாம். அவர் மட்டும் அன்று அடாவடியாக "நீங்கள் தரும் பிரதமர் பதவிக்காகவெல்லாம் மதிமயங்கி நம் நாட்டை பிரிக்க நான் அனுமதிக்க மாட்டேன்" என்று பிரிவினைவாதிகளின் சதிவலைக்கு உடன்படாமல் கறாராய் ஒத்தைக்காலில் நின்றிருந்தால்...? அடடா...! ஹூம்ம்ம்ம்...! இப்போது பெருமூச்சு விட்டு என்ன பயன்..?
கண்டிப்பாய்... ஒவ்வொரு இந்திய முஸ்லிமும் காஷ்மீர் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்றே ஆசைப்படுவோம். அவ்வளவு ஏன்? ஒரு பேச்சுக்கு பாக்-கும் பங்கலாதேசும் இந்தியாவுடன் நாளை இணைகிறது என்றால்...?! முதல் வரவேற்பு கொடுக்கப்போவது இந்திய முஸ்ளிம்கள்தானே? இதில் ஏதும் சந்தேகம் உண்டா?
மூன்றாவது கேள்வி...//நீங்கள் காஷ்மீர் பிரிவினையை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?//--- இரண்டும் இல்லை சகோ.
நான் ஏற்கனவே சொன்னதுதான் இதற்கு விளக்கம்..!
//இந்தியாவுடன் இணையவேண்டும் என்ற மனதுடன் உள்ள காஷ்மீரிகளின் பொதுக்கட்சிதான் ஆளும் தேசிய மாநாட்டுக்கட்சி. 'தனிநாடு வேண்டும்' என்று கேட்கும் பிரிவினை வாதிகள் பொதுத்தேர்தலில் கலந்து கொள்வதில்லை.//---இதில் இரண்டாமவருக்கு கவுன்சிலிங் கொடுத்து மனமாற்றம் ஏற்படவேண்டுமானால் அது நமது நன்னடத்தை மூலமாக மட்டுமே வரும். இந்த 'நமதில்' ஓமர் அப்துல்லாவும் அடங்குவார். பாஜாகவின் செயல் கவுன்சிலிங்கை குலைத்து விடும். அதனால் தான் மத்திய மாநில அரசுகள் பஜாகவுக்கு இணங்க மறுத்து விட்டன. புரிகிறதா?
//"கட்டாய மதமாற்றத்தை" எதிர்க்கும் நாம் துப்பாக்கி முனையில் "கட்டாய தேசிய மாற்றத்தையும்" எதிர்க்க வேண்டும்.//---காஷ்மீரிகள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு எடுக்கட்டுமே..!
//////இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் நாட்டோடு காஷ்மீரை இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டதால் காஷ்மீரில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த விகாரம் 1948-ல் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றது. இந்தியாவும் பாகிஸ்தானும் தனது செயலைச் சட்டப்பூர்வமானது என்று நிரூபிக்க இயலாததால் காஷ்மீர் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி தீர்வு காண்பதாக ஐநா சபையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்களா? பாகிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா? அல்லது தனிநாடாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறார்களா? என்ற மூன்று கேள்விகள் அடிப்படையில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். ஓட்டெடுப்பின் மூலம் கிடைக்கும் மக்கள் கருத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் மன்னரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்த ஒப்பந்தம்/////
நம்முடன் மனப்பூர்வமாய் இசைந்து மகிழ்வுடன் அனைத்து காஷ்மீரிகளும் ஜனநாயக ஓட்டெடுப்பு மூலம் இணைந்தால் அந்நாளை மிகப்பெரிய விழாவாக கொண்டாடுவோம் சகோ.
வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.அஸ்மா,
மிக்க நன்றி.
//இதுபோன்ற அவசியமான ஆக்கங்களைக் கொடுக்கும் பிஜே அண்ணனுக்கு அல்லாஹுத்தஆலா நீடித்த ஆயுளும் நோயற்ற வாழ்வும் மறுமைப் பலனையும் கொடுப்பானாக!//--ஆமீன்.
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு, அறிந்திடா தகவல்கள்.
காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக்கொண்டது. அது 'சுதந்திர காஷ்மீர்' என்று பாகிஸ்தான் கூறுகிறது. அது 'ஆக்ரமிப்பு காஷ்மீர்' என்று இந்தியா கூறுகிறது.///
அந்த பகுதி மக்களின் நிலை என்ன?
கர்நாடக மாநிலம் மைசூரில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றுவதற்கு அனுமதி மறுத்த அம்மாநிலத்தின் ஆளுங்கட்சியான பா.ஜ.க குடியரசு தினத்தில் கஷ்மீரில் தேசிய கொடியை ஏற்ற முயற்சித்தது கேவலமான பிரச்சார நாடகம் .
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.ஹசன்,
//அந்த பகுதி மக்களின் நிலை என்ன?//--பாகிஸ்தானிடம்தான் கேட்க வேண்டும்.
முதலில் நம்மோடு அரசியலில் கைகோர்த்து வாழும் காஷ்மீரிகளைப்பற்றியே இங்கே இன்னும் யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
ஆனால்... அதற்குள் நீங்கள்... உங்களுக்கு பரந்த நல்ல உள்ளம்தான். சரி, இந்த பிரச்சினை முதலில் முடியட்டும் சகோ.
@ Anonymous said... 25
நன்றி சகோ. புதிய தகவல். விபரங்கள் தெரியவில்லை. அறிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
தேவையான கட்டுரை. ரயில் திரும்பவும் கர்நாடகா சென்றது நாடகம் காமெடியாக முடிந்ததைக் காட்டுகிறது.
@சுவனப்பிரியன்//நாடகம் காமெடியாக முடிந்ததைக் காட்டுகிறது.//--மட்டுமில்லை,
நாடகம்...அட்டர் ஃபிளாப்..! நன்றி சகோ.சுவனப்பிரியன்.
எனது அருமை அறிவுஜீவி அவர்களுக்கு
இந்தியா என்பது இப்பொழுதைய பெயர், நம் நாட்டின் உண்மையான பெயர் பாரதம், பாரதத்தின் எல்லைகள் கந்தகார் ( இந்த ஊரை உங்களால் மறக்க முடியாது என்று நினைக்கிறேன் ), வரை நீண்டு இருந்தது, அப்படி பார்க்கும் பொழுது கஷ்மீர் எங்கள் பாரதத்தை சேர்ந்தது, பிஜேபி யை குறை சொல்லும் கனவான்களே குஜராத் என்ற மாநிலம் இன்று இந்திய நாட்டின் மாநிலங்களுக்கு உதாரணமாய் விளங்குகிறது, கர்நாடகாவில் பிஜேபி அரசை எதிர்த்து ஊடகங்கள் செய்தி பரப்பினாலும் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 90 % இடங்களை பிடித்தனர், இதில் இருந்து உங்களுக்கு தெரியவில்லை, யார் போலி வேடம் புனைவது என்று ( கண்முடித்தனமாய் குறை சொல்வதை விட்டு விட்டு நாட்டின் நிலவரத்தை பார்த்துவிட்டு பின்னூட்டம் எழுதுங்கள் )
@AnonymousCoimbatore,Tamil Nadu, India
Bharti Broadband( 122.165.224.83 )
//பாரதத்தின் எல்லைகள் கந்தகார் வரை நீண்டு இருந்தது, அப்படி பார்க்கும் பொழுது கஷ்மீர் எங்கள்(?) பாரதத்தை சேர்ந்தது//--காஷ்மீர் மட்டுமா...? ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இவையும்தான் நம்(!) பாரதத்துடன் சேர்ந்தது. ரொம்ப நல்ல யோசனை..!
ஒருநிமிஷம் சகோ!
இங்கே 23,
அங்கே ஒரு 21,
அப்புறம் அங்கே ஒரு 4,
இந்த பக்கம் பங்காளிகள் ஒரு 17,
வாவ்... நம் பாரதநாட்டின் முஸ்லிம்கள் மக்கள் தொகை 65 கோடி...
மாஷாஅல்லாஹ்.
ரொம்ப நல்ல யோசனை அனானி.
இனிமே அத்வானி எல்லாம் வேஸ்ட். அம்மணமாய் பூஜையில் படுத்துகிடந்து 90 % இடங்களை பிடித்த எடியூரப்பாதான் தெ பேஸ்ட். அவருகிட்டே சொல்லி எப்படியாவது இந்த "புதிய பாரதம்" ஏற்பட முயற்சி செய்ய சொல்லுங்க சகோ.
முஸ்லிம்களுக்கு பார்லிமென்டில் மெஜாரிட்டி கிடைச்சு முஸ்லிம் பிரதமர், முஸ்லிம் உள்துறை மந்திரி, முஸ்லிம் ராணுவ மந்திரி, முஸ்லிம் நிதித்துறை மந்திரி, முஸ்லிம் நீதித்துறை மந்திரி அப்டீன்னு நம்ம பாரத முஸ்லிம்களுக்கும் ஒரு நன்மை நடக்கட்டுமே. அப்புறம் பாருங்க...சகோ.
தங்கள் ஹிந்து சகோதரர்களை முஸ்லிம்கள் எப்படி அன்போட அரவனைச்சு எல்லா உரிமையும் அவங்களுக்கு கொடுத்து சமநீதியோட தாங்கு தாங்குன்னு தாங்கி வாழராங்கன்னு...
சிறுபான்மை பெரும்பான்மைங்க்கிற பேச்சுக்கே இனி வேலை இல்லைல...?!
@முஹம்மத் ஆஷிக்
அவாள்களின் மனப்பான்மைக்கு, 'பச்சை'யை மேலேற்றி, 'காவி'யை கீழிறக்குவதென்றால் அறியாமல் செய்கிறார்களாயிருக்கும்.
அட, விடுங்க சார்!
@வாசகன் கொஞ்சநேரம் சந்தொஷப்பட்டுக்க கூட விடமாட்டேங்குறீங்களே சகோ.வாசகன். ஒருவேளை அவர்கள் கேட்பது "empty காஷ்மீராக" இருக்குமோ? அதாவது... 'காஷ்மீர் மைனஸ் காஷ்மீரிகள்'..! அட உலக மகா பயங்கரவாதமே..!
இந்தியாவை, பாஜகவையும் மட்டும் வெளுத்து வாங்குவதை விட்டு விட்டு, கொஞ்சமாவது பாகிஸ்தானையும் போட்டுச் சாத்தியிருந்தால், தமிழ் பேசும் இந்திய முஷ்லிம்களுக்குக் கூட தமது சகோதர தமிழர்களிலும், இந்தியாவிலும் உள்ள பற்றை விட தமது மதம் சார்ந்த முஸ்லிம்கள், ஆபிரிக்காவில் இருந்தாலும் கூட, அவர்களில் பற்றும் பாசமும் அதிகம் என்று சொல்பவர்களின் வாயை அடைத்திருக்கலாம். பாகிஸ்தான் தனது கொடியை, அவர்கள் பங்கு கொண்டாடும் காஷ்மீரில் ஏற்றுவதெலாம் சரியானதா? அதைப் பற்றி நீங்கள் மூச்சுக் கூட விடவில்லையே, பாகிஸ்தானில் அவ்வளவு பாசமா? :))))
@viyasanஎனக்கும்..."காஷ்மீர்:-பயங்கரவாத பாக்கின் பச்சைத்துரோகம்"--இப்படி ஒரு பதிவு போட ஆசைதான். எப்போ எப்போன்னுதான் ஆவலாய் உள்ளேன்.
ஆனால், பிறரை குற்றம் சொல்வதற்கு முன்னால் நம் முகத்தில் ஒட்டி இருக்கும் அசிங்கத்தை நாம் முதலில் கழுவி சுத்தம் செய்து விட வேண்டும் அல்லவா? அதுதானே நேர்மை, நியாயம் சகோ.வியாசன்..?
//பாகிஸ்தானில் அவ்வளவு பாசமா? :))))//---ஒரு புண்ணாக்கு பாசமும் கிடையாது. சொல்லப்போனால் நான் வெறுக்கும் ஒரு நாடு பாகிஸ்தான். இந்திய முஸ்லிம்களின் முதுகில் குத்திய முதல் சுயநலவாதிகள் அவர்கள்தானே...?
धेसीयाकोदियिने यार इतर मुयान्द्रालुम अम्मुयार्ची பாராட்டப்பட வேண்டியதே.அதனை விடுத்தது அப்சல் குருக்களுக்கும் கஜாப்களுக்கும் வக்காலத்து வாங்குவது முரண்பாட்டிலும் கேடுகெட்ட முரண்baadu
@vsankarஅப்சல் குருவும் அஜ்மல் கசாபையும் ஒரே தட்டில் வைத்து பார்க்கும் உங்கள் புரிதல் ஆச்சர்யம் அளிக்கிறது.. சகோ.சங்கர்.
அப்சல் குரு - ஒரு அப்பாவி. ஆனால், ஹிந்துத்துவா தீவிரவாதிகளை இந்திய மக்களாக கருதி அவர்களின் விருப்பத்திற்கு இணங்க வழக்கில் அப்சலுக்கு எதிராக எவ்வித ஆதாரமும் இல்லாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர். அதை என்றுமே நிறைவேற்ற மனசு இல்லாமல் குற்ற உணர்ச்சியுடன் நம் நாடும் நீதி மன்றமும் தலைகவிழ்ந்து நிற்பதுதான் யதார்த்த நிகழ்கால வரலாறு.
ஆனால், அஜ்மல் கசாப் ஒரு ஏவப்பட்ட பயங்கரவாதி. ஏவியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டி மரண தண்டனை தறுதல் கால தாமதம் ஆகிறது. அவ்ளோதான்.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.சங்கர்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!