இந்தியாவில் எல்லாமே ஒழுங்காகத்தான் போய்க்கொண்டு இருந்தது. 1992 டிசம்பர்-6 வரை..! அன்றுதான்... எங்கிருந்துதான் வந்தார்களோ தெரியவில்லை... ஆயிரக்கணக்கில் 'கரசேவகர்கள்' என்றபெயரில் ஷைத்தான்கள்..! ஒரே நாளில் இடித்துத்தள்ளினார்கள். தரையோடு தரையாக... மண்ணோடு மண்ணாக... எதை...? ஒட்டுமொத்த இந்தியாவின் அமைதியை..!
அதன்பிறகு நாடெங்கும் எதிர்ப்பு கோஷம், கண்டன ஆர்ப்பாட்டம், அமைதி ஊர்வலம் என அடுத்தடுத்த மாதங்களில் ஜனநாயக ரீதியில் மக்கள் கொந்தளிக்க... பம்பாயிலும் அதேபோல் நடந்து கொண்டிருந்தது. பொறுக்கவில்லை சங்பரிவார சிவசேனை ஷைத்தான்களுக்கு..! அடுத்த மாதம், ஜனவரியில்... சுமார் 500 பேர் பம்பாயில் கொல்லப்பட்டார்கள். ஜனவரி... பிப்ரவரி.. மார்ச்... என கொலைகாரர்கள்-பால் தாக்கரேக்கள்- கட்சிக்கொடிகளுடன் பந்தாவாக வீதிகளில் பவனிவர... கண்டும் காணாமல் சட்டம் தூங்க (இன்றுகூட ஜஸ்டிஸ் ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் அறிக்கை 1998-ல் வந்த பிறகும் கூட விழிக்கவில்லை என்றால் அப்போது எப்படி அசந்து தூங்கி இருந்திருக்கும்...?) பலிகொடுத்தவர்களுக்கு பழிவாங்கும் எண்ணம் தலைதூக்க, அந்த சமயம் பார்த்து இதற்காகவே பல ஆண்டுகள் காத்திருந்த பாகிஸ்தானியருக்கும், பம்பாய் நிழலுலக கள்ளக்கடத்தல் தாதாக்களுக்கும் தங்கள் நீண்ட நாள் எண்ணங்களை ஈடேற்ற கிடைத்த அரிய பொக்கிஷமான சந்தர்ப்பமாயிற்று. (பின்னே...! கலவரத்தில் மக்களை கொன்ற ஷைத்தான்கள் எல்லாரும் பங்குச்சந்தை வர்த்தக கட்டிடத்திலா பணிபுரிந்தார்கள்?)
இவர்களுக்கு... கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களும், தாதாக்களின் எலும்புத்துண்டுகளுக்கு வாலாட்டும் சில நடிகர்கள், சில சுங்க அதிகாரிகள், சில காவல்துறையினர்களும் உதவி செய்ய, 1993ம் ஆண்டு மார்ச் 12-ல், பம்பாயில் அடுத்தடுத்து பதினைந்து குண்டுகள் வெடித்தன. பின்னர் நூற்றுக்கணக்கானோர் (...இப்படித்தான் அனைத்து தேடுபோறிகளும் சொல்கின்றன... கணக்கெல்லாம் கிடையாதாம்...) தடாவில் கைது செய்யப்பட்டனர். (தடா: - விசாரனைக்கைதியாக எத்தனை வருஷமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஜாமீனும் கிடையாது.)
14 வருஷங்கள் நிதா........னமாய் விசாரித்துவிட்டு, மே 27, 2007-ல், மொத்தம் 100 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள். மற்றவர்களில் நடிகர் சஞ்சய் தத்தும் ஒருவர். (இவர் தான் பொடா சட்டம் வர காரணமானவர். ஏனெனில், தடாவில் உள்ள அத்தனை ஓட்டைகளிலும் நன்றாக படம் காட்டினார்... பொடா வந்தது. ஆனால், பொடா சட்டம் தூக்கப்பட காரணம் ஜெயலலிதா என்று தெரியுமா? - பாராளுமன்ற உறுப்பினர் வைகோவை உள்ளே வைத்து பொடா என்றால் என்ன என்று கொண்டுவந்தவர்களுக்கே புரியவைத்து பின்னர் அதை தூக்கவும் வைத்தார்..!)
பம்பாய் குண்டுவெடிப்பு வழக்கில் இரண்டு மாதம் பிட்டு பிட்டாய் வந்த தீர்ப்பில் கடைசியில் ஜூலை 31, 2007 அன்று சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் உட்பட (இதிலும் கூட இன்று வரை படம் தான் காட்டுகிறார்), மும்பை தொடர் குண்டுவெடிப்பில் 12 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டது. சுங்க அதிகாரிகள், காவல் துறையினர் என மற்றவர்களுக்கு குறைந்தது 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில், 24 பேர்கள் ஜூலை 31, 2007 அன்று -அதாவது, 14-வருடங்கள் கழித்து, குற்ற மற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டனர். சரி... மீதம் உள்ள "நூற்றுக்கணக்கானோர்"(!?) அதற்கு கொஞ்சம் ஆண்டுகள் முன் சிறுக சிறுக விடுவிக்கப்பட்டு இருப்பார்கள் என்று(!?) நம்புகிறேன்... இதெல்லாம் செய்தி அல்ல. கைதாவது மட்டும்தான் செய்தி.
கோவை கலவரம் & குண்டுவெடிப்பு
கோவையில் ஒரு காவலர் படுகொலையை தொடர்ந்து மூன்று பேர்(முஸ்லிம்கள்) சரணடைந்து விட்ட பின்னும், 1997 - நவம்பர் 30, டிசம்பர் 1-ல், அதனை ஒரு மதக்கலவரமாக்கி ஷைத்தான்களும் காவல்துறையினரும் கைகோர்த்து திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டு பலர் காயமுற்று, முஸ்லிம்களின் வணிக நிலையங்கள் மட்டும் சூறையாடப்பட்டு பின்னர் அவை தீயிட்டு கொளுத்தப்பட்டு... என எல்லாம் சாட்சிகளுடன் நடந்து முடிந்த பின்னரும் நடவடிக்கை எடுக்காமல் சட்டம் தூங்க...(இன்றுவரை கூட ஜஸ்டிஸ் கோகுலகிருஷ்ணா கமிஷன் அறிக்கை 2000-ல் வந்த பிறகும்கூட விழிக்கவில்லை என்றால் அப்போது எப்படி அசந்து தூங்கி இருந்திருக்கும்...?)
அதனை தொடர்ந்த, 1998 பிப்ரவரி 14-ம் தேதி கோவையில் 17 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில், 58 பேர் இறந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக, பாஷா, மதானி உள்ளிட்ட 167 பேர் தடாவில் கைது செய்யப்பட்டு சாவகாசமாய் கடந்த 2001ம் ஆண்டுதான் குற்றப்பத்திரிக்கை நகல்கள் அனைவரிடமும் வழங்கப்பட்டது. அதன்பிறகு இவ்வழக்கை விசா............ரித்த கோவை சிறப்பு நீதிமன்றம் 2007-ல்.. அதாவது 10-ஆண்டுகள் கழித்து பாஷா உள்ளிட்ட 44 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்தது. 64 பேருக்கு 3 ஆண்டுகள் முதல் 13 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மதானி உள்பட மீதி 59 பேர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டனர்--10 வருடங்கள் கழித்து..! இதெல்லாம் செய்தி அல்ல. கைதாவது மட்டும்தான் செய்தி.
இதுவரை இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட அனைத்து குண்டு வெடிப்பு வழக்குகளிலும், இரண்டே இரண்டுக்கு மட்டும் குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவித்து தீர்ப்பு வந்திருக்கின்றன. மற்ற குண்டுவெடிப்புகளில் எல்லாம் முஸ்லிம்கள் நிரபராதிகள் என தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டுக்கொண்டே வருகின்றனர். அவ்விரண்டு மட்டுமல்லாது பின்னர் நடந்த அனைத்துமே ////பாபர் மசூதி இடிப்பின் எதிரொலியாக..////--என்று மீண்டும் மீண்டும் ஊடகங்கள் உண்மைகளை திரித்துகொண்டே உள்ளன. எப்படி? இடித்தவர்களே... சரியாக இடிக்கவில்லை என்று அவர்கள் பங்குக்கு ஒருதடவை குண்டு வைக்கிறார்களாமா?
பாபர் மசூதி இடிப்புக்கும் மேற்படி இரண்டு குண்டு வெடிப்புகளுக்கும் துளியும் சம்பந்தமில்லை. அவரவர் சொந்தக்காரர்களை இழந்தவர்களே மேற்படி பயங்கரவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அதேநேரம், பழிவாங்குதல் என்ற பெயரில், ஏதுமறியா அப்பாவி மக்களை கொல்லுதல் இஸ்லாத்திற்கு எதிரானது. மொத்த மனித சமுதாயத்தையே கொலை புரிதலுக்கு சமமான மகா பெரிய பாவம். இச்செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதற்கு தக்க தண்டனை அளித்த நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்கிறேன். இத்தீர்ப்பு குற்றம் செய்ய நினைக்கும் தடம்புரண்ட மனங்களுக்கு தக்க படிப்பினை. பயங்கரவாதத்துக்கு என்றென்றும் நான் எதிரி என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன்.

அதேநேரம்... ஒரு சமுதாயத்திடம் மட்டும் நீதி நிலைநிறுத்தப்படுவதையும் வேறோர் சமுதாயத்தின் குற்றங்களை கண்டு கொள்ளாமல் இருப்பதையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன். (எத்தனையோ விசாரணை கமிஷன் அறிக்கைகள் கிடப்பில் கிடப்பதும், ஆதாரத்துடன் மாட்டிய காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இன்னும் தண்டிக்கபடாதிருப்பதும் என்னை இப்படி கண்டனம் தெரிவிக்க வைக்கின்றன)
தவறான ஆயுள்தண்டனையாம்..!
1993-ம் ஆண்டு சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் (இத்தாக்குதலில் 11 பேர் பலியாயினர்) அப்போதே கைது செய்யப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை, அவர்களுக்கு தவறான முறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி, கடந்தமாதம் (2010-டிசம்பரில்... அதாவது 17 வருடங்கள் கழித்து...!) உச்ச நீதிமன்றம் இவர்களை நிரபராதிகள் என விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. இதெல்லாம் செய்தி அல்ல. கைதாவது மட்டும்தான் செய்தி.
குணங்குடி ஹனீஃபா
1997-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தன்று திருச்சியில் பாண்டியன் எக்ஸ்பிரஸ், ஈரோட்டில் சேரன் எக்ஸ்பிரஸ், கேரள மாநிலம் திருச்சூரில் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 72பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக குணங்குடி ஹனீஃபா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் 13 வருடமாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மீது பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குணங்குடி ஹனீஃபா உள்ளிட்ட 8 பேரையும் நிரபராதி என விடுதலை செய்வதாக ....அதாவது 13 வருடங்கள் கழித்து.... நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதன் பின்னர், அதாவது 1998 முதல் பல குண்டு வெடிப்புகள் இந்தியாவெங்கும் நடந்தன. முக்கியமான விஷயம் இவ்வாண்டில் இருந்துதான் பாஜக நாட்டை ஆளத்துவங்கி இருந்தது. அதன் தொடர்ச்சியாக சில மாநிலங்களிலும் ஆட்சியைப்பிடித்தது. பொதுவாக பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பெரும்பாலும் குண்டுகள் வெடிக்கும். ஒவ்வொரு குண்டுவெடிப்புக்கும் பிறகு, உடனே..... ஒரு மொக்கை பதிவுக்குக்கூட 'ஹைய்யா... முதல் வடை(!?) எனக்கு' என்று பதிவு பொட்ட அடுத்த நிமிஷமே வரும் படுமொக்கை பின்னூட்டம் போல..... ஒரு ஈ-மெயில் எப்போதும் பறந்து வந்துவிடும். ஏதாவது ஒரு முஸ்லிம் அமைப்பு... 'ஏதோ அனாதைகளுக்கு ஆதரவு அளிப்பது போல பெருமையுடன்' பொறுப்பேற்கும்.(!?)
பொறுப்பேற்றவர்களின் பெயர்களை வைத்தே... தாடி, தொப்பி எல்லாம் போட்டு அடுத்த நாள் கணிணி உதவியால் சில உருவகங்கள், "குற்றவாளிகள் புகைப்படம்" என்று கொட்டை எழுத்தில் தலைப்பு செய்தியாய் அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக பலநாள் காட்டப்படும். சாலைகளில் நடக்கும் அனைத்து முஸ்லிம்களையும் 'இவர்கள் குற்றவாளிகளா' என்று உற்று உற்று பார்ப்பவர்களை கண்டு கோபம் கொள்வதா... இப்படிப்பட்ட நாட்டில் வசிப்பதை நினைத்து உள்ளுக்குள் புழுங்கி அழுவதா... வேதனை..! ( இதை விட பெரிய கொடுமை... என்னவெனில்... " 100 கிலோ வெடிகுண்டுடன் நடமாடும் தீவிரவாதி ஆயிஷா "...! முஸ்லிம் பெண்களின் நிலைமையை நினைத்தால் இன்றும் மனம் கொதிக்கும். புருக்காவில் போகிற வருகிற முஸ்லிம் பெண்களை நிறுத்தி "எங்கே.. உங்கள் முகத்தை காட்டுங்கள்" என்பார்கள் காவலர்கள். அவர்கள் கையில் வைத்திருக்கும் ஆயிஷாவின் புகைப்படத்திலோ கண்கள் மட்டுமே இருக்கும்..!?! என்ன புத்தியோ... என்ன மூளையோ...! இது ஒரு பக்கா டார்ச்சர்தானே? பல வருஷம் கழித்து கடைசியில் கமிஷ்னரே ஒரு பேட்டியில், 'ஆயிஷா மேட்டர் சும்மா ஜோடிச்சது' என்ற போதுதான்... தமிழக காவல்துறை மீது எனக்கிருந்த துளி நம்பிக்கையும் மரியாதையும் காணாமல் போனது..!)
சரி.. நாம் தொடர்வோம்... அடுத்த வாரம் பரபரப்பாக சிலர் முஸ்லிம்கள் தொப்பி தாடி சகிதம் பொடாவில் கைது செய்யப்படுவார்கள். இவர்களை தொடர்ந்து... 'தீவிரவாதிக்கு உதவினார்கள்' என்று மேலும் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். எல்லாமே அடுத்த குண்டுவெடிப்பு நிகழும் வரைதான். பிறகு முன்னதை மறந்து இதை பற்றி பேச ஆரம்பிப்பார்கள். அந்த குண்டு வெடித்த பின் உடனே ஒரு ஈ-மெயில்.... அதுவே... ரிபீட்....!

இப்படித்தான்... தென்காசி, சென்னை, கான்பூர், அஜ்மீர், மோடாசா, மாலேகான்-1, மாலேகான்-2, ஹைதராபாத், அஹ்மதாபாத், ஜெய்ப்பூர், நான்டேட், பானிபட்-சம்ஜோதா ரயில், தானே, கோவா, பெங்களூர், வாரனாசி என்று வரிசையாய் ... அதே... ரிபீட்... ரிபீட்... ரிபீட்...
தகுந்த ஆதாரங்கள் இன்றி, சாட்சிகள் இன்றி சந்தேகத்தின் பேரில் கைதுசெய்வதையேகூட இஸ்லாம் எதிர்க்கிறது. இப்படி கைது செய்து பல்லாண்டுகள் சிறையில் அடைப்பது மனித உரிமைக்கு எதிரானது. மற்ற நாடுகளில் இது ஒரு பெரிய குற்றமாகக்கூட பார்க்கப்படுவது உண்டு. ஆனால், நம் நாட்டில் அதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல...!
ஹேமந்த் கார்கரே
மேற்கண்ட அனைத்து குண்டு வெடிப்புகளிலும் -- சென்ற வருட செப்டம்பர் மாத வாரனாசி குண்டுவெடிப்பு தவிர -- மேற்சொன்ன அதே ரிப்பீட் தான். வாரணாசியில் மட்டும் அப்படி என்ன மாற்றம்? சந்தேகம் 'ஹிந்துத்துவா தீவிரவாதிகள்' மீதாம்..! இந்திய வரலாற்றில் காவல்துறை இப்படி அறிவித்தது இதுதான் முதன்முறை. காரணம்:- கர்மவீரர் - அஞ்சாநெஞ்சர் - துப்பறியும் சிங்கம் - நேர்மைமிகு மறைந்த ATS தலைவர் ஹேமந்த் கார்கரே - அவர்களை இந்தியாவிற்கு அளித்த இறைவனுக்கே எல்லா புகழும்..!
கார்கரேவின் மாலேகான் குண்டு வெடிப்பு விசாரணையின் முடிவில் ஆதாரங்களுடனான அவரின் அதிரடி கைது நடவடிக்கைகள் மொத்த இந்தியாவிலும் பூகம்பத்தை கிளப்பியது. அதுவரை 'இஸ்லாமிய தீவிரவாதிகள்' என்று திரும்ப திரும்ப வாய் வலிக்கும் அளவுக்கு சொன்னவர்கள்... இப்போது 'தீவிரவாதத்துடன் மதம் இணைக்கப்படக்கூடாது' என்று திரும்ப திரும்ப வாய் வலிக்கும் அளவுக்கு சொல்ல ஆரம்பித்தனர்.
குண்டுகள் பாகிஸ்தானிலிருந்து வரவில்லை என்பது ஒரு அதிர்ச்சி. 'வெடிகுண்டு சப்ளையர்கள்' மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் இந்திய ராணுவ உயரதிகாரிகள் என்பது அதைவிட பெரிய அதிர்ச்சி. அவற்றை பொது இடங்களில் வெடிக்க வைத்து அப்பாவி மக்களை கொன்றவர்கள் தீவிர சங்பரிவார ஹிந்துத்துவா துறவிகள் என்பது அதிர்ச்சியோ அதிர்ச்சி. மொத்த இந்தியாவையும் அது உலுக்கி எடுத்து புரட்டிப்போட்டது. இது, அதுவரை நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளையும் மீள் விசாரணை நடத்த வைத்தது. மீள் விசாரணை நடந்த அனைத்தும் காவி ஷைத்தான்களிடம் தான் போய் நிற்கிறது. வகை தொகையாக மாட்டி, இவர்கள் கைது செய்யப்படும் படலம் அடிக்கடி நடந்தேறி வருகிறது.
விசாரணைக்கைதிகள் --- நஷ்டஈடு?
"பற்பல குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் கைது நடவடிக்கைக்கு பின்னர், இதுவரை... அதே குண்டுவெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு பிணையில் கூட வர முடியாமல் தடாவிலும் பொடாவிலும் பல வருடங்களாய் உள்ளே கிடக்கும் முஸ்லிம்கள் நிரபராதிகள்தானே..?" புதிய ஹிந்துத்துவா கைதிகள் உள்ளே சென்றபின் பழைய முஸ்லிம் கைதிகள் வெளியே வந்துதான் இருக்க வேண்டும். முக்கியமற்ற செய்திகள் என்பதால்... அச்செய்திகளை தினசரிகளில் தேடினால் கிடைக்குமா என்று தெரியவில்லை. தமிழகம் சம்பந்தப்பட்ட செய்திகள் மட்டும் எனக்குத்தெரிந்ததை நான் முன்னரே சொல்லிவிட்டேன். அதனால்தான் மேலே சொன்னேன்... 'இதெல்லாம் செய்தி அல்ல. கைதாவது மட்டும்தான் செய்தி' என்று..!
இந்திய உச்சநீதி மன்ற கணம் கோர்ட்டார் அவர்களே..!
இழப்பீடு விஷயத்தில் நமது 'நீதி தேவதை' தொலைந்து போய் விட்டதா? அதனை ஆஸ்திரேலியாவில் தேடி கண்டெடுத்திருக்கிறாரா டாக்டர் ஹனீப்..! வேற்று நாட்டு மனிதனுக்கே அங்கே நீதி கிடைக்கிறதே..! இங்கே நம் இந்திய குடிமகன்களுக்கு உரிய நீதி என்னவாயிற்று?
இன்னொரு அன்பு வேண்டுகோள்:-
ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி எனத்தெரிந்தால் அவரை விடுவிப்பதுடன் அதே தீர்ப்பிலேயே... அது பொய்க்குற்றச்சாட்டு என்றாகிவிடுவதால், இவருக்கு... இக்காலத்துக்குள்.. இவ்வளவு.. நஷ்ட ஈட்டுத்தொகை அரசு அல்லது குற்றம் சாட்டியவர் அளிக்க வேண்டும் என்று கூறி ஒரேயடியாய் கணக்கை பைசல் பண்ணிவிட வேண்டியதுதானே? அதற்கென எதற்கு ஒரு தனி வழக்கு? தீர்ப்புக்காக எத்தனையோ வழக்குகள் உங்கள் முன் மலைபோல தேங்கியுள்ளனவே? ஒத்தைக்கு ரெட்டையாய் இதுவேறு எதற்கு ஒவ்வோர் வழக்கிலும் தனிச்சுமை உங்களுக்கு? சிந்திப்பீர்களாக..!

இப்போது அனைவருக்கும் ஒரு முக்கிய கேள்வி உதித்திருக்க வேண்டும். கேள்வி வர வேண்டும் என்பதால்தான் இப்பதிவில் ஆங்காங்கே அவ்வரிகளை மட்டும் இப்படி சிகப்பு வண்ணமிட்டு தனியாக அடையாளப்படுத்தி உள்ளேன்.
"பற்பல குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் கைது நடவடிக்கைக்கு பின்னர், இதுவரை... அதே குண்டுவெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு பிணையில் கூட வர முடியாமல் தடாவிலும் பொடாவிலும் பல வருடங்களாய் உள்ளே கிடக்கும் முஸ்லிம்கள் நிரபராதிகள்தானே..?" புதிய ஹிந்துத்துவா கைதிகள் உள்ளே சென்றபின் பழைய முஸ்லிம் கைதிகள் வெளியே வந்துதான் இருக்க வேண்டும். முக்கியமற்ற செய்திகள் என்பதால்... அச்செய்திகளை தினசரிகளில் தேடினால் கிடைக்குமா என்று தெரியவில்லை. தமிழகம் சம்பந்தப்பட்ட செய்திகள் மட்டும் எனக்குத்தெரிந்ததை நான் முன்னரே சொல்லிவிட்டேன். அதனால்தான் மேலே சொன்னேன்... 'இதெல்லாம் செய்தி அல்ல. கைதாவது மட்டும்தான் செய்தி' என்று..!
இப்படி.... மேற்படி குண்டுவெடிப்பு வழக்குகளில் தலைப்புச்செய்தியாய் கைது செய்யப்பட்டு பலவருஷம்... விசாரனைக்கதிகளாய் சிறையில் வைக்கப்பட்டு... பின்னாளில் ரகசியமாய்... 'குற்றமற்றவர்' என நீதி தேவதையால் விடுவிக்கப்பட்ட எந்த ஒரு முஸ்லிமும் இழப்பீடு கோரியதாகவோ, எந்த நஷ்டஈடும் இதுவரை தரப்பட்டதாகவோ செய்தி இல்லையே... ஏன்?
நாம் இப்போது ஆஸ்திரேலியாவில் நடந்த இதே போன்ற பிரச்சினை ஒன்றை பார்ப்போம்.
டாக்டர் முஹம்மது ஹனீஃப்
2007, ஜூன் 30: இங்கிலாந்தின், கிளாஸ்கோ விமான நிலையத்தின் முன் கஃபில் என்பவர் எரிவாயு சிலிண்டர் நிரப்பிய வாகனத்துடன் தன்மீதும் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு மோதியதால் வாகனம் தீப்பிடித்தது. 92% உடல் பாகங்கள் எரிந்த நிலையில் கஃபில் உயிருக்கு போராடியதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், இவர் ஆஸ்திரேலியாவில் வேலை பார்க்கும் மருத்துவர் முஹம்மது ஹனீஃபின் உறவினர். அதுமட்டுமா? ஹனீஃப் முன்பொருமுறை 2006-ல் லண்டன் சென்றிருந்த போது, தான் லண்டனில் வாங்கி உபயோகித்த புது சிம் கார்டை அதன் அடுத்த இரண்டாண்டு வேலிடிட்டி மற்றும் மிச்சம் இருந்த சில பவுண்டுகளினால் தூக்கி வீச மனசில்லாமல், உறவினர் கஃபிலிடம் கொடுத்துவிட்டு ஆஸ்திரேலியா போய்விட்டார். அந்த சிம்மைத்தான் விபத்தின் போது கபில் உபயோகித்திருந்தார். (ஊருக்கு விடுமுறைக்கு சென்றால்... அது முடிந்தவுடன் ஏர்டெல், ஏர்செல், ஐடியா, டோகொமோ, பிஎஸ்என்எல் போன்ற எந்த சிம்முகளையும் யாருக்கும் தராமல் உங்களுடனேயே எடுத்து வந்து விடுங்கள்... ஜாக்கிரதை..!)
இது போதாதா? அவ்வளவுதான், இங்கிலாந்தில் நடந்த குண்டுவெடிப்பில், சந்தேகத்தின் பேரில், ஆஸ்திரேலியாவில் இருந்து பெங்களூருக்கு தன் பிறந்து ஆறு நாள் ஆன குழந்தையை காண ஏழு நாள் லீவில் புறப்படுவதற்காக விமான நிலையம் வந்தடைந்த டாக்டர் முஹம்மது ஹனீஃபை ஜூலை-2, அன்று கைது செய்து, ஆஸ்திரேலிய அரசு தன் விசாரணை வளையத்தில் வைத்தது. உடனே நம் ஊடகங்களுக்கு சொல்லவா வேண்டும்..? "இந்திய முஸ்லிம்களுக்கு உலகளாவிய அளவில் பயங்கரவாத நெட்வொர்க் உள்ளது(?!)" என்று கூசாமல் பொய் புளுகின.
அச்சமயம், ஹனீஃப் 14 நாட்கள் (ஜூலை-2 முதல் ஜூலை-16வரை) ஆஸ்திரேலியாவில் சிறை வாசம் அனுபவிக்க வேண்டியதாயிற்று. பின்னர் அவர் 10,000 டாலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர், 27 ஜூலை அன்று அவர் மீது போட்ட அத்தனை வழக்குகளையும் நீதிமன்றத்தில் திரும்பப்பெற்றுக்கொண்டு விட்டது ஆஸ்திரேலியா. உடனே இதற்காக இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார் ஹனீஃப். பின்னர் இந்தியா வந்து தங்கி துபாயில் பின்னர் வேலைக்கு சேர்ந்தார்.
சென்ற ஆண்டு டிசம்பரில் இழப்பீட்டு வழக்கு பற்றிய தீர்வுச்செய்தியும் வந்தது. படித்திருப்பீர்கள்... /// ஆஸ்திரலிய அரசால் குற்றம் சாட்டப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு துயரம் அனுபவித்த இந்திய முஸ்லிம் இளைஞர் முஹம்மது ஹனீப் என்ற மருத்துவரிடம் கடைசியாக ஆஸ்திரேலியா மன்னிப்பு கேட்டுக்கொண்டது. அத்துடன் இந்திய நாணய மதிப்பில் நான்கரை கோடி ரூபாய் வரை இழப்பீட்டு தொகையாக வழங்க முன்வந்துள்ளது. சரியான தொகை ரகசியமாக உள்ளது. அத்துடன் மருத்துவரான ஹனீபுக்கு ஆஸ்திரேலிய அரசின் சார்பில் பணி வழங்கவும் முன்வந்துள்ளது ///...என்று..!
இது அங்கே சாத்தியம் என்றால் இதே கதைதானே இங்கும்...? சொல்லப்போனால், இங்கே அனுபவித்தவர்களின் துயரத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கேனும் அனுபவித்திருப்பாரா ஹனீஃப்...? இதற்கே இவ்வளவு இழப்பீடு தருகிறார்கள் என்றால்... இதுவரை விசாரணை கைதிகளாகவே சிறையில் இருந்து ஆயுள்தண்டனையையே அனுபவித்து விட்டு குற்றமற்றவர் என விடுதலையான பலர் பற்றி இந்திய அரசும், நீதித்துறையும், ஊடகமும் ஏன் கண்டுங்காணாதது போல மவுனமாய் உள்ளன?
கடந்த பதினேழு ஆண்டுகளாக முஸ்லிம்கள்- எத்தனையோ இளைய தலைமுறையினர், யாரோ வைத்த குண்டுகளுக்காக இன்றும் சிறை வாசம் அனுபவித்த வேதனையே இன்னும் அவர்களை விட்டு விலகாத நிலையில்... அவர்களுக்காக இந்திய அரசின் இழப்பீட்டினையும், மன்னிப்பையும் கேட்பது யார்? எப்போது ? எப்படி?
மேற்படி அனைத்து குண்டுவெடிப்பு வழக்குகளிலும் எப்படியும் குறைந்தது ஆயிரம் பேராவது இதுபோல பாதிக்கப்படிருப்பார்கள் அல்லவா? பலவருஷம் கழித்து வெளிவந்த எந்த ஒரு நிரபராதியும் தனக்கு நஷ்ட ஈடு கோரி ஏன் வழக்கு தொடுக்க வில்லை? தமக்கு அது நிச்சயமாக கிடைக்காது என்று 100% உணர்ந்ததால்தானா..?
ஆஸ்திரேலியா இழப்பீடு தருவதை... 'நீதி வென்றது.'.. 'தர்மம் ஜெயித்தது'... ஆஸ்திரேலியாவின் பெருந்தன்மை... நேர்மை... என்றெல்லாம் பெருமையாக எழுதிய-சொன்ன எல்லா ஊடகங்களும், அதே நீதியை இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏன் கேட்கவில்லை? இதுபற்றி எல்லாம் இந்திய அளவில்-தமிழக அளவில் எந்த ஒரு முஸ்லிம் அமைப்புகளும் கூட இதுவரை எந்த ஒரு போராட்டமும் செய்ய வில்லையே...! விரக்தியா? இரண்டாந்தர குடிமகனுக்கு என்ன கிடைக்கப்போகிறது என்ற அவநம்பிக்கையா? குடிமகனே இல்லாத ஹனிஃபே வேறொரு நாட்டில் நான்கரை கோடி ரூபாய் இழப்பீடு வாங்கும் நிலை இருக்கும்போது... சிறையில் நொந்து நூடுல்சானவர்கள் கேட்காவிட்டாலும் மற்றவர்கள் இவர்களுக்காக--இந்தியக்குடிமகன்களுக்காக கேட்கலாமே..!

நல்லவேளை... ஹனீஃப் ஆஸ்திரேலியாவிலேயே கைது செய்யப்பட்டார்..! அவர் மட்டும்... ஒரு பேச்சுக்கு... ஆஸ்திரேலிய போலீசின் சோம்பேறித்தனத்தால்... பெங்களூர் கிளம்பி வந்திருந்தாரேயானால்...? ஆஸ்திரேலியாவின் வேண்டுகோளுக்கிணங்க... அன்றே பெங்களூர் விமான நிலையத்தில் ஹனீஃப் பொடா-வில் கைதாகி... பல ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு... ஒருநாள் நிரபராதி என ரிலீஸ் ஆனால்... பேசாமல் வீட்டைப்பார்த்து நடையைக்கட்டி இருப்பார்..!! இழப்பீடாவது... மண்ணாங்கட்டியாவது...!!!
இந்திய உச்சநீதி மன்ற கணம் கோர்ட்டார் அவர்களே..!
இழப்பீடு விஷயத்தில் நமது 'நீதி தேவதை' தொலைந்து போய் விட்டதா? அதனை ஆஸ்திரேலியாவில் தேடி கண்டெடுத்திருக்கிறாரா டாக்டர் ஹனீப்..! வேற்று நாட்டு மனிதனுக்கே அங்கே நீதி கிடைக்கிறதே..! இங்கே நம் இந்திய குடிமகன்களுக்கு உரிய நீதி என்னவாயிற்று?
ஆஸ்திரேலியாவில் முஹம்மது ஹனீப் கண்ட அந்த இழப்பீடு எனும் 'நீதி தேவதையை' இந்தியாவிற்கு மீட்டு வர முயற்சி எடுப்பீர்களா? உங்களால் முடிகிற விஷயம்தானே..!
இன்னொரு அன்பு வேண்டுகோள்:-
ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி எனத்தெரிந்தால் அவரை விடுவிப்பதுடன் அதே தீர்ப்பிலேயே... அது பொய்க்குற்றச்சாட்டு என்றாகிவிடுவதால், இவருக்கு... இக்காலத்துக்குள்.. இவ்வளவு.. நஷ்ட ஈட்டுத்தொகை அரசு அல்லது குற்றம் சாட்டியவர் அளிக்க வேண்டும் என்று கூறி ஒரேயடியாய் கணக்கை பைசல் பண்ணிவிட வேண்டியதுதானே? அதற்கென எதற்கு ஒரு தனி வழக்கு? தீர்ப்புக்காக எத்தனையோ வழக்குகள் உங்கள் முன் மலைபோல தேங்கியுள்ளனவே? ஒத்தைக்கு ரெட்டையாய் இதுவேறு எதற்கு ஒவ்வோர் வழக்கிலும் தனிச்சுமை உங்களுக்கு? சிந்திப்பீர்களாக..!
28 ...பின்னூட்டங்கள்..:
ellaa muslim theeviravaathikkum bharatha rathna koduthudalam sir.
///வேற்று நாட்டு மனிதனுக்கே அங்கே நீதி கிடைக்கிறது. இங்கே நம் இந்திய குடிமகன்களுக்கு உரிய நீதி என்னவாயிற்று?///
வெட்கப்ப்பட வேண்டிய விஷயம் தான்....
சிந்திக்கவும் செய்ய வேண்டும்!!!!
நல்ல அலசல் சகோ
Very Good
//நல்லவேளை... ஹனீப் ஆஸ்திரேலியாவிலேயே கைது செய்யப்பட்டார்..! //
ஆமாங்க.
நல்ல பதிவு. பதில்தான் தெரியலை..
அப்புறம், இந்த கருப்புப் பிண்ணனியை மாற்றினா தெளிவா வாசிக்க வசதியாருக்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்து!
நமது நாட்டில் தான் முதுகு எழும்பு இல்லாத ஊடகத்துறை, காவல்துறை, அரசியல்வாதி ஏன் பொதுமக்களுக்கே கூட நமது உரிமையை எப்படி எங்கு பெற வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லையே, சில பொதுநல வாதிகள் கூட அதன் மூலம் இலாபம் சம்பாதிக்க சுய நலத்துடன் முற்படுகிறார்களே தவிர, சிலர் கார்கரே மாதுரி இலட்சத்தில் ஒருத்தர் வந்தாலும் அவரையும் கொலை செய்ய தயங்காத மனித மிருகங்கள் நம் நாட்டில் உள்ளனர். இங்கு மக்களுக்கு நாம்தான் எஜமானன் அரசு ஊழியர்கள் எல்லாம் அவர்களது வேலையாட்கள் என்று புரிய வைக்க வேண்டும். நமது நாட்டில் எல்லாம் தலைகீழ் எந்த அரசு அலுவலகங்கள் சென்றாலும் மக்கள் அலைகழிக்கப்படுகின்றார்கள் அவர்கள் உரிமையை இலகுவாக பெறமுடிய வில்லை. காரணம் அஸ்திவாரம் (சட்டம்) உறுதியாக இல்லை. அதிலும் முஸ்லிம்களுக்கு என்றால் கேட்கவே வேண்டாம், பாபர் மசூதி வழக்கில் நீதிவான்கள் (சாதிவான்கள்) செய்த கட்டப் பஞ்சாயத்து நமது நாட்டிற்கே பெரும் அவமானம், இந்த அவமானத்தையும் வெகுமானமாக்க சிலர் முயற்சிப்பதை என்னவென்று சொல்வது? வேதனைதான் மிச்சம்,
இந்த வேதனைகளை தாங்கள் போன்றோர் சாதனைகளாக ஆக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!
வருகின்ற 27 தேதி TNTJ நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையிலும், மதுரையிலும் வெற்றி பெற பிரார்த்தனை செய்யுமாறும் நமது மக்களை அதிகமாக கலந்து கொள்ளுமாறும் வேண்டுகிறேன்.
சட்டம் உறங்கி விட்டது . நிச்சயம் ஒரு நாள் நமக்கு நீதி கிடைக்கும் ,படைத்தவனை நம்புவோம்.
நியாயமான கேள்விகள்.
அரசும் நீதித்துறையும் கண்டு கொள்ள வேண்டும்.
கடைசி பாரா நல்ல யோசனை.
அனைவர் மீதும் சலாம் உண்டாகட்டும்.
சரியான கேள்விகள். நிறைய யோசிக்க வேண்டிய தருணம் இது. நல்ல பதிவு. நன்றி.
ஆர்.எஸ்.எஸ் குற்றவாளிகளை துப்பறிந்து பிடித்துவிட்டு முஸ்லிம் விசாரனைக்கைதிகளை விடுதலை செய்த அந்த தென்காசி காவல் அதிகாரியும் குறிப்பிடத்தக்கவர். சொல்லப்போனா அவர் கர்கறேக்கு முன்னோடி.
நண்பரே எனது தளத்தில் இருந்த அந்த முஸ்லிம் பற்றிய வரிகள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சொல்லவேண்டியது தானே அழித்திருப்பேன். இப்போது அழிக்கப்பட்டுவிட்டது உங்கள் மனம் புண்படும்படி எழுதவில்லை. நான் ஹிந்துவும்(rss ) இல்லை.
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் முஹம்மது ஆஷிக்,
நம் தலைமுறை சந்திக்க கூடிய இந்த அநீதிகளை எதிர்கால சந்ததிகள் சந்திக்க கூடாது. அதற்கு நம்மிடைய நேர்மையான நீதிபதிகள் தோன்ற வேண்டுமென்று இறைவனிடம் துவா செய்வோம்...
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
///Anonymous said... 1
ellaa muslim theeviravaathikkum bharatha rathna koduthudalam sir.///---'இவர்கள் நிரபராதிகள்' என்று சட்டத்தால் பல வருடங்கள் கழித்தேனும் விடுவிக்கப்பட்டவர்களின் இழப்பீடு குறித்து பேசும் இப்பதிவில்... ஏன் சார் உங்களுக்கு அவ்வளவு கோபம்? ஆனாலும், அந்த உயர்ந்த விருதை உங்களை விட யாரும் கேவலப்படுத்தியதில்லை. இதற்க என் கடும் கண்டனங்கள்... நெல்லை அனானி(117.206.80.24).
@ சகோ.ஆமினா...
//நல்ல அலசல் சகோ//..ம்ம்ம்... இதை விடுவதாயில்லை போல... நன்றி சகோ.
@ KOC குவைத் அனானி... நன்றி.
@ சகோ ஹுஸைனம்மா
தங்கள் வருகைக்கு நன்றி சகோ.
//இந்த கருப்புப் பிண்ணனியை மாற்றினா தெளிவா வாசிக்க வசதியாருக்கும்.//--அடடா... இப்பத்தானே ஒருத்தர் கேட்டார் என்று டார்க் பேக்ரவுண்ட் மாற்றினேன்... மீண்டுமா?
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹ்!
சகோ.M.ஃபாரூக்... வேதனைகள் இன்ஷாஅல்லாஹ் விரைவில் நம்மைவிட்டு நீங்க பிரார்த்திப்போம்... அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம். தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ.
@ இளம் தூயவன் said...
நன்றி சகோ. //நிச்சயம் ஒரு நாள் நமக்கு நீதி கிடைக்கும், படைத்தவனை நம்புவோம்.//--இன்ஷாஅல்லாஹ்... நிச்சயமாக.
@ சிந்தனை செய் said...
//கடைசி பாரா நல்ல யோசனை.//--->>>//அரசும் நீதித்துறையும் கண்டு கொள்ள வேண்டும்.//
---தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோ.
@ இறைநேசச்செல்வன் said...
தங்கள் மீதும் சலாம் உண்டாகட்டும் சகோ.
///ஆர்.எஸ்.எஸ் குற்றவாளிகளை துப்பறிந்து பிடித்துவிட்டு.. ..தென்காசி காவல் அதிகாரியும் குறிப்பிடத்தக்கவர்./// --ஆமாம் சகோ. அவர் நெல்லை சரக டி.ஐ.ஜி. திரு P.கண்ணப்பன்.
//சொல்லப்போனா அவர் கர்கறேக்கு முன்னோடி.//--கண்டிப்பாய். ஆனால், கார்கரே மோதியது பெரிய ஆட்களுடன்... கண்டு பிடித்தது பெரிய விஷயம்... அல்லவா?
மேலும் கார்கரேக்கு ஒரு அதிரடி ஃபிளாஷ்பேக் உண்டு. 1998 -ஆம் ஆண்டே ஹிந்துத்துவா-சங்பரிவாரை கலக்கியவர் கார்கரே.
பம்பாய்ய்கு அருகே தானேவில் ஹாஜி மலங் என்ற ஒரு மஸ்ஜிதில், தாநேவின் சிவசேனை தலைவர் ஆனந்த் திகே ஒரு பெருங்கூட்டத்துடன் சென்று தாங்களும் மஸ்ஜிதில் வழிபட(!?)வேண்டும் என்று பிரச்சினையை கிளப்ப... தானேவில் எஸ்.ஐ ஆக இருந்த கார்கரே... ஆனந்த் திகே வை ஒரே அமுக்காக அமுக்கி பிடித்து 'உள்ளே' வைத்தார். இல்லையேல் ஹாஜி மலங் உலகத்துக்கே தெரிந்த இன்னுமொரு 'பாபர் மசூதியாக' கூட ஆகி இருக்கலாம். இந்த ஆனந்த் திகே பெரிய ஆள். பம்பாய்க்கு பால் தாக்கரே என்றால் தானேக்கு திகே. 'நீ எவனா இருந்தா எனக்கென்ன' பாலிசிதான் பின்னர் கார்கரேவை ஏழெட்டு வருடங்கள் ஆஸ்திரியாவில் பணி புரிய வைத்தது. திரும்பி வந்தும் தன் அதே பாலிசியை கார்கரே மாலேகானிலும் தொடர... இம்முறை அவரை.... ம்ம்ம்ம்...
உண்மை கொலைக்குற்றவாளிகள் பிடிபட்டபின் இன்ஷாஅல்லாஹ் இதுபற்றி பேசுவோம்.
@ THOPPITHOPPI said...
வருக சகோ.தொப்பிதொப்பி.
//நண்பரே எனது தளத்தில் இருந்த அந்த முஸ்லிம் பற்றிய வரிகள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சொல்லவேண்டியது தானே அழித்திருப்பேன்.//--??? அதைத்தானே சகோ. பின்னூட்டத்தில் உங்கள் தளத்தில் சொன்னேன்!!!
//இப்போது அழிக்கப்பட்டுவிட்டது//--மிக்க நன்றி சகோ. இச்செயலால் பதிவர்களில் நீங்கள் ஒரு நல்ல முன்னுதாரணம் என்றாகிவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.
//உங்கள் மனம் புண்படும்படி எழுதவில்லை.//--எழுதவில்லை.
ஆனால், பலரும் பலமுறை 'இது பொய்' என்று நார் நாராய் கிழித்து தொங்கவிட்ட விஷயம், நீங்கள் அறிந்திராதது என்பது எனக்கு மிகுந்த ஆச்சர்யம். உங்கள் தளத்தில் வினவுக்கு லிங்க் உள்ளதால் சொல்கிறேன்... வினவில் கூட லவ்ஜிஹாத் பற்றி எழுதியிருக்கிறார்களே சகோ.
நீங்கள் இப்போது அழித்துவிட்டீர்கள். மகிழ்ச்சி. ஆனால், சரியான தகவலா என்று ஆராயாமல் நீங்கள் போட்டதை புதியவர்கள் எத்தனையோ பேர் படித்து சென்றிருப்பார்களே சகோ. அதுதான் கவலை.
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹ்!
சகோ. ஆஷிக் அஹ்மத்,
நிச்சயமாக இறைவனிடம் துவா செய்வோம்...
வருகைக்கு நன்றி சகோ.
முஹம்மத் ஆஷிக் said... 11
///Anonymous said... 1
ellaa muslim theeviravaathikkum bharatha rathna koduthudalam sir.///---'இவர்கள் நிரபராதிகள்' என்று சட்டத்தால் பல வருடங்கள் கழித்தேனும் விடுவிக்கப்பட்டவர்களின் இழப்பீடு குறித்து பேசும் இப்பதிவில்... ஏன் சார் உங்களுக்கு அவ்வளவு கோபம்? ஆனாலும், அந்த உயர்ந்த விருதை உங்களை விட யாரும் கேவலப்படுத்தியதில்லை. இதற்க என் கடும் கண்டனங்கள்... நெல்லை அனானி(117.206.80.24).
உங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன் ஆஷிக்
இக் கட்டுரைக்கான உங்கள் உழைப்பை பாராட்டுகிறேன். ஊடகங்கள் அலட்சியப்படுத்தும் அநீதங்களை வெளிச்சம் போட்டு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்து வருகிறீர்கள். ஏற்கனவே கல்வியிலும்,பொருளாதாரத்திலும் அடிமட்ட நிலையில் ஒரு சமூகத்திற்கு தீவிரவாத முத்திரை குத்தி தனிமைபடுத்தியதுடன் அல்லாமல் அநீதியும் இழைக்கப்பட்டு வருவது, இந்திய முஸ்லிம் எழுச்சி பெறவே என்று எடுத்துக்கொண்டு ஒற்றுமை என்னும் பலத்தை பிரயோகித்து வென்று காட்ட வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை கருத்தியல் ரீதியாக எதிர் கொள்ள, எழுத்து ஆர்வம் கொண்டவர்களை ஊக்கு விக்க வேண்டும். நேற்றைய வரலாறு அறியாத சமூகம் நாளை வரலாறு படைக்க முடியாது.
CLICK THE LINK AND SEE VIDEO.
நீதியை தேடும் பயணங்கள். அயோத்தி பாப்ரிமசூதி தீர்ப்பு கட்டப்பஞ்சாயத்து, நாட்டாண்மை தீர்ப்பை விட படுகேவலமானது. உரை: பேரா. அருணன் தலைவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்
...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
மொத்த உள்ளக்குமுறலையும் கொட்டி விட்டீர்கள்
17 வருச சிறை 18 வருச சிறை சிலருக்கு ஈஸியாக தெரிகிறது அந்த மனஉளச்சலை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது
ஒரு வருஷம் வெளிநாட்டில் சம்பாரிப்பதற்காக குடும்பத்தை பிரிந்து இருக்கிற நமக்கே எவ்வளவு மனஉளச்சல் ஏற்படுகிறது 18 வருடங்கள் ஒரு குற்றமும் செய்யாமல்..
கீழேயுள்ள லிங்க்யில் வீடியோவை பாருங்கள் அந்த வீடியோவின் இறுதியில் சிறைக்கைதியின் மனைவி தனது கஷ்டங்களை சொல்வதை கேளுங்கள்
ஒவ்வோரு முறையும் அந்த வீடியோவை பார்க்கும் போது என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை
http://www.keetru.com/video/madhani/Covai.wmv
சகோதரன்
ஹைதர் அலி
சகோ.ரஹீம் கஸாலி,
வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சகோ.
சகோ.உதயம்,
தீர்க்கமாகவும் தெளிவாகவும் சொல்லியுள்ளீர்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.
சகோ.VANJOOR,
நல்ல உபயோகமான சுட்டிகள். மிக்க நன்றி சகோ.
வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ. ஹைதர் அலி,
வீடியோவை பதிவிறக்கி பார்த்தேன். மோசமான உண்மைகள் பயங்கரமாய் மிரட்டி உள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து பேட்டி கண்டு மனம் கனக்கிறது.
பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கிறான்.
ஆகவே, பொறுமை காப்போம். அப்படி இல்லாமல் போனதால் நிறைய அனுபத்தாயிற்று.
பின்னர் அப்படி இருந்து ஜனநாயக முறையில் போராட ஆரம்பித்ததால்தான்...
தடா,பொடா தூக்கப்படவில்லையா?
ஹேமந்த்கார்கரே என்றொருவர் மீண்டும் ஆஸ்திரியாவிலிருந்து வரவழைக்கப்படவில்லையா?
அத்தாக்கம், எல்லா குண்டுவெடிப்பு வழக்குகளையும் மீள்விசாரணை செய்யப்படவைக்கவில்லையா?
இதன்மூலம் 'முஸ்லிம் என்றாலே தீவிரவாதி'ப்பட்டம் என்பது காணாமல் போகிக்கொண்டிருப்பதை நாம் பார்க்கவில்லையா?
பல விசாணை கமிஷன் அறிக்கைகளின் பேரில் ஒரு நடவடிக்கையும் எடுக்காவிட்டாலும் அவைகள் நேர்மை தவறாமல் உண்மை அறிக்கை அளிக்கவில்லையா?
நம் எதிரிகள் மனிதர்களே. எந்நேரமும் அவர்கள் மனதில் ஒரு மாற்றம் ஏற்படக்கூடும்.
மாற்றம் ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால், மெதுவாக.
இன்ஷாஅல்லாஹ் நிச்சயம் முழுமையான மாற்றம் ஏற்படும். அது விரைவில் ஏற்பட்டு நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் சமநீதி கிடைத்து மகிழ்ச்சி அடைய இறைவனை இறைஞ்சுவோம்.
சகோ ஆஷிக் அவர்களே...
சிறப்பான தரவு,,குறிப்பாக நாம் நினைவில் நிருத்தவேண்டிய,மறந்து மறைந்து போன அத்துனை விஷயங்களையும்,கோர்வையாக்கி தொகுத்தற்கு நன்றி..
பதிவை ஒன்றன் கீழ் ஒன்றாக படிக்கும்போதே,படபடப்பு அதிகமாகி,கண்கலங்கி விடுகிறது..
அவ்வளவு விஷயங்களிலும் நாம் நேரடியாக பாதிக்கப்படாததால்,அந்த செய்திகள் நம்மிடையே உளுத்து போகின்றன..
நம்முடைய சகோதரர்கள் படும் துன்பத்திற்கு வருத்தப்படக்கூட மறந்த நிலையில் தாம் நம் சமுதாயம் இருகிறது,.
தவிர ஹிந்துத்துவ தீவிரவாதம் குறித்து விரிவாக செய்திகளை தந்ததற்கு பாராட்டுக்கள்..
கடைசியாக நடந்த வாரனாசி குண்டு வெடிப்புக்கும், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் இருந்து ஈ மெயில் வந்ததாம்..அவர்கள் தார்மீக பொருப்பேற்றதாக...கொடுமைதான்...
இப்படியான இயக்கங்கள் இருக்கிறதா என்பதே முதலில் இவன்களுக்கு தெரியாது...எவன் மெயில் அனுப்பினாலும்,.உடனே ஊடகமும் தங்களது தர்மத்தை நிறைவேற்ற பத்திகளில் பரப்பிவிடும்..
இந்தியாவில் தொலைந்த நீதி தேவதை..பல ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படவில்லை..இனிமேலும் நம்பிக்கை இல்லை...
அன்புடன்
ரஜின்
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் முஹம்மத் ஆஷிக்,
தலைப்பே ஆயிரம் அர்த்தம் சொல்லுகிறது. இந்தியாவில் நீதி தொலைந்து விட்டது தான். அதை சரி செய்ய வேண்டிய கடமை இந்த நாட்டை உண்மையாக நேசிக்கிற நம்மிடத்தில் தான் இருக்கிறது. அதற்கான போராட்ட களங்களை இங்கு நாம் ஏற்படுத்தாத வரையில் இதைப்பற்றியதொரு விழிப்புணர்வு வராது. பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் அதை கண்கூடாக நாம் கண்டிருக்கிறோம். அரசும் போராட்டங்களை நடத்தினால் தான் எந்த ஒரு பிரச்சனையையும் கவனிக்கிறது. உங்களுடைய கட்டுரையில் ''இதுபற்றி எல்லாம் இந்திய அளவில்-தமிழக அளவில் எந்த ஒரு முஸ்லிம் அமைப்புகளும் கூட இதுவரை எந்த ஒரு போராட்டமும் செய்ய வில்லையே...! விரக்தியா" என்றொரு கேள்வியை முன்வைத்திருக்கிறீர்கள். இதற்கான பதிலை இந்த பின்வரும் விடியோ உரையினில் கேட்டுப் பாருங்கள் சகோதரரே. கூடிய விரைவில் இதற்கான ஒரு போராட்டத்தை தவ்ஹீத் ஜமாஅத் செய்யும் என்று நம்புகிறேன்.
http://www.tntj.net/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8/
முஸ்லீம்களின் அவலநிலை. VIDEO
அப்பட்டமான உண்மைகள். = கண்ணீரில் முஸ்லீம் சமூகம்: “விடியுமா? தெரியல. வேதனை தீரல”
இஸ்லாமியர்கள் தேவைக்கு அதிகமான சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என பொய்யுரைக்கப்பட்டு இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய முஸ்லீம் சமுதாயம்.
சமூக நீதி என்னும் வெளிச்சத்துக்காக ஏங்கி காத்து கொண்டிருக்கும் இந்திய முஸ்லீம் சமுதாயம்
மற்ற எவரையும் விட இந்த மண்ணின் மீது உரிமை கொண்டாட தகுதி படைத்த இந்திய முஸ்லீம் சமுதாயம்
நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய முஸ்லீம் சமுதாயம்.
நாட்டிற்காக சகல பணிகளிலும் தியாகங்களிலும் பங்கேற்ற இந்திய முஸ்லீம் சமுதாயம்
உடலை உருக்கி உதிரம் பெறுக்கி இந்திய மண்ணுக்கு தந்த இந்திய முஸ்லீம் சமுதாயம்
நாட்டின் சுதந்திரத்துக்காக தங்களின் சுகங்களை அன்று இருளாக்கி கொண்டு போராடிவிட்டு இன்னும் இருளிலே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய முஸ்லீம் சமுதாயம்
வெள்ளையர் சமூகத்தை வீரத்துடன் விரட்டி அடித்து விட்டு இன்னும் கருப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்திய முஸ்லீம் சமுதாயம்
முதலில் பாகிஸ்தானுடன் யுத்தம் வந்தபோது போரிலே முன்னிலையில் நின்று நாட்டிற்காக முதலில் உயிர் இழந்தது ஒரு இந்திய முஸ்லீம் என்ற மறைக்கப்பட்ட மறக்கபட்ட ஒரு வரலாறு படைத்த இந்திய முஸ்லீம் சமுதாயம்
இந்த நாட்டை இன்னொரு நாட்டுக்கு விட்டு கொடுத்திராத இந்திய முஸ்லீம் சமுதாயம்
2 பாட்டல் சாராயத்துக்காக நாட்டின் இராணுவ ரகசியங்களை விற்றவர்களில்லை இந்திய முஸ்லீம் சமுதாயம் .
நாட்டில் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் புறந்தள்ளப்படும் இந்திய முஸ்லீம் சமுதாயம்.
அரசியல் அதிகாரத்திலும் அதளபாதாளத்திலேயே இருக்கும் இந்திய முஸ்லீம் சமுதாயம்
முஸ்லீம் சமுதாயத்தின் விகிதாச்சாரப்படி நாடாளும் மன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உரிய பிரதிநுத்துவம் இதுவரையிலும் கிடைத்திராத
இந்திய முஸ்லீம் சமுதாயம்
நாட்டில் 20 சதவிகிதத்திற்கு மேலாக முஸ்லீம் சமுதாயத்தினர் வாழும் நிலையில் அரசின் புள்ளி விபரங்களோ 13 சதவிகிதத்தினரே இருப்பதாக கூறுப்படும் இந்திய முஸ்லீம் சமுதாயம்
அந்த கணக்குபடி பார்த்தாலும் 540 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 60 முஸ்லீம் உறுப்பினர்கள் இருக்கவேண்டும். இது நிறைவு பெறாத இந்திய முஸ்லீம் சமுதாயம்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 30 முஸ்லீம் உறுப்பினர்கள் இருக்கவேண்டும். ஆனால் இதுவரை இந்த தொகை இருந்திராத இந்திய முஸ்லீம் சமுதாயம்.
இன்று சமூக பொருளாதார கல்வி நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களை விட மோசமான நிலையில் முகமிழந்து தன் முகவரி இழந்து வாழ்வுரிமை வினாக்குறியாகி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வீதியில் அழுது கொண்டு நிற்கும் இந்திய முஸ்லீம் சமுதாயம்
இடஒதுக்கீட்டை பொறுத்த வரையில் அது முஸ்லீம்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமை என்பது உண்மை என்ற நிலையில் இந்திய முஸ்லீம் சமுதாயம்.
CLICK AND SEE VIDEO:-
ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் தயாரிப்பான Documentary Film .காணொளியில்
'ஊடகங்களில் 'பிறப்புரிமை'. புறக்கணிக்கப்படும் முஸ்லீம் சமூகம்.
.......
!
சகோ ரஜின் அவர்களே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
//கடைசியாக நடந்த வாரனாசி குண்டு வெடிப்புக்கும், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் இருந்து ஈ மெயில் வந்ததாம்.. அவர்கள் தார்மீக பொருப்பேற்றதாக... கொடுமைதான்...//--உண்மைதான். இருந்தும் இவர்களுக்கு... இப்போதாவது சங்பரிவார கும்பல் மீதும் ஒரு ஓரமாய் சந்தேகப்படலாம்... அதொன்றும் தப்பில்லை... என்று தோன்றி இருக்கிறதே... இது எவ்வளவு பெரிய இமாலய மாற்றம்.!?!?!?!?
//இப்படியான இயக்கங்கள் இருக்கிறதா என்பதே முதலில் இவன்களுக்கு தெரியாது...// ---இல்லை என்று தெளிவாக confirm பண்ணிக்கொண்ட பின்புதான்....
அப்புறம் உண்மையிலேயே அந்த பெயரில் ஒரு அமைப்பு இருந்து... அதிலிருந்து யாரவது கோர்ட்டுக்கு போய் விட்டால்?!?!?!?
அலைக்கும் ஸலாம் வரஹ்...
அன்பின் சகோதரர் பி.ஏ.ஷேக் தாவூத்,
//கூடிய விரைவில் இதற்கான ஒரு போராட்டத்தை தவ்ஹீத் ஜமாஅத் செய்யும் என்று நம்புகிறேன்.//---நிச்சயமாக செய்யத்தான் வேண்டும் சகோ. கூடவே இந்தியாவில் உள்ள எல்லா முஸ்லிம் இயக்கங்களும் ஜனநாயக ரீதியில்..! இது காலத்தின் கட்டாயம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் சுட்டிக்கும் மிக்க நன்றி
சகோ. வாஞ்சூர்,
மிக மிக அருமையாக எழுதி உள்ளீர்கள்...
ஒவ்வொரு வரிகளும் நச்..நச்..
//மற்ற எவரையும் விட இந்த மண்ணின் மீது உரிமை கொண்டாட தகுதி படைத்த இந்திய முஸ்லீம் சமுதாயம்//---கண்டிப்பாய்... நிச்சயமாக... எப்படியென்றால், முஸ்லிம்களுக்கு என்றே தனி நாடு உருவாக்கி, 'வாருங்கள் முஸ்லிம்களே' என்று கூறியும் போகாதவர்கள் நாம் அல்லவா?
ஆளூர் ஷாநவாஸ் வீடியோ கல்லான மனதையும் கலங்க வைக்கும். சுட்டி கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!