அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Tuesday, December 14, 2010

12 நீண்ட நேரம் கணிணி முன் அமர சரியான முறை..!

(அலுவலில் அல்லது பதிவுலகில் 'மணிக்கணக்கில் பொட்டிதட்டுவோர்'களுக்காக)

                        உங்களுக்கு நீண்ட நேரம் 'பொட்டிதட்டும்' வேலையாலோ...  அல்லது 'ஒரு பரபரப்பு பதிவு' போட்டுவிட்டு அதற்கு எவரேனும் பின்னூட்டமிடுகிறாரா... என எந்நேரமும்...  'கணிணித்திரையும் கண்ணுமாய்' காத்திருந்து, பின்னூட்டமிட்டவர்களிடம் 'விசைப்பலகையும் விரல்களுமாய்' கடுமையான  விவாதம் புரிவதாலோ... கண் பார்வை பிரச்சினை, முதுகு வலி, தோள் புஜம் நோவு, முழங்கால் வலி, மணிக்கட்டு வீக்கம், பாதச்சோர்வு,  தசைப்பிடிப்பு, தலைவலி, இடுப்புவலி ...( ...போதும்... போதும்... என்கிறீர்களா..? ) ...சரி, இதெல்லாம் வராமல் இருக்க... அல்லது  தாமதமாக வர...(!?)  அல்லது  வந்த வலி குறைய...  வேண்டுமானால்,  பின்வரும் ஆலோசனைகளை செயல்படுத்தி பாருங்களேன்..!



(Courtesy:- Safety Letter, Saline Water Conversion Corporation, Saudi Arabia.)

1# கணிப்பொறியின் திரையை பார்வை மட்டத்திலும் பார்வைக்கு நேர்க்கோட்டிலும் அமைக்க வேண்டும்.

2#      திரைக்கும் உங்கள் கண்களுக்கும் இடையேயான தூரம் 16"-ஆக இருக்க வேண்டும்.

3#   சி.பி.யு. வை கை எட்டும் தூரத்தில் வைக்கும் அதேநேரம் திரை அமைந்திருக்கும் மேசை மேல் வைக்காமல் வலப்பக்கம் மேசைக்கு கீழே வைக்கவேண்டும். ( இது வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு ; இடது கை பழக்கம் உள்ளவர்கள் இடப்பக்கம் வைக்கலாம் )

4#      உங்கள் முழங்கால்கள் மேசைக்கு கீழே வசதியாக அமையுமாறு மேசை உயரம் இருத்தல் அவசியம். அல்லது அதற்குத்தகுந்த உயரத்துக்கு உங்கள் நாற்காலியை உயர்த்தியோ தாழ்த்தியோ கொள்ள வேண்டும். கால்களை தொங்க விடாமல் ( பாதத்தின்  விரல்கள் பாகம் உயர்ந்தும் குதிகால் பாகம் தாழ்ந்தும் உள்ள )  ஏதாவது ஒரு நிலையான  கட்டையில் வைத்துக்கொள்ள வேண்டும். 

5# விசைப்பலகை,  நாற்காலியின் கைப்பிடியால் முட்டுக்கொடுக்கப்பட்ட முழங்கைக்கு கீழ்மட்டத்திலும்  அதன்மூலம் தோள்களுக்கு அழுத்தம் தராத வகையிலும் இருத்தல் வேண்டும். 

6# விசைப்பலைகையின் முன் புறம் சற்று தூக்கி இருக்கும் படி அமைத்துக்கொள்ள வேண்டும்.

7#  முழங்கை கோணம் தோராயமாக  90°  இருக்கும்படி அமைத்து, மணிக்கட்டுகள் முழங்கைக்கு கிடைமட்டமாக அமையுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

8#     'மவுசை' (இதற்கு என்ன தமிழ்ப்பெயர்?) விசைப்பலகை மட்டத்திலே அதற்கு முடிந்தவரை நெருக்கமாக வைக்கவேண்டும்.

9#   முதுகுவலி அவஸ்தை வராமல் இருக்க, எப்போதுமே முதுகை கணிப்பொறி இயக்கத்திற்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சுழல் நாற்காலியுடன் ஒட்டி  சாய்த்து அதே நேரம் முதுகு வளையாமல் செங்குத்தாக இருக்கும் படி அமர வேண்டும்.

10#     ஒருமுறை இந்த அமர்வில் இருந்து எழுந்துவிட்டால்,  உடனே மீண்டும் அமர்ந்துவிடாமல், (சிறுது நேரம் நின்றுவிட்டோ, ஒரு சிறு உலா போய்விட்டோ...) அடுத்த அமர்விற்கு குறைந்தது 20 வினாடிகளிலிருந்து 2  நிமிடங்கள் வரை இடைவெளி விட்டு மீண்டும் அமர்தல் நல்லது. அமர்ந்திருக்கும்போதே, அவ்வப்போது கண் விழிகளை நன்றாக சுழற்றி கண்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்க வைத்து விட்டு பின் பழையபடி திரை மீது பார்வைகளை சீராக்க வேண்டும். இப்படி செய்வது, கண்களுக்கு நன்று.

12 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...