(அலுவலில் அல்லது பதிவுலகில் 'மணிக்கணக்கில் பொட்டிதட்டுவோர்'களுக்காக)
உங்களுக்கு நீண்ட நேரம் 'பொட்டிதட்டும்' வேலையாலோ... அல்லது 'ஒரு பரபரப்பு பதிவு' போட்டுவிட்டு அதற்கு எவரேனும் பின்னூட்டமிடுகிறாரா... என எந்நேரமும்... 'கணிணித்திரையும் கண்ணுமாய்' காத்திருந்து, பின்னூட்டமிட்டவர்களிடம் 'விசைப்பலகையும் விரல்களுமாய்' கடுமையான விவாதம் புரிவதாலோ... கண் பார்வை பிரச்சினை, முதுகு வலி, தோள் புஜம் நோவு, முழங்கால் வலி, மணிக்கட்டு வீக்கம், பாதச்சோர்வு, தசைப்பிடிப்பு, தலைவலி, இடுப்புவலி ...( ...போதும்... போதும்... என்கிறீர்களா..? ) ...சரி, இதெல்லாம் வராமல் இருக்க... அல்லது தாமதமாக வர...(!?) அல்லது வந்த வலி குறைய... வேண்டுமானால், பின்வரும் ஆலோசனைகளை செயல்படுத்தி பாருங்களேன்..!
(Courtesy:- Safety Letter, Saline Water Conversion Corporation, Saudi Arabia.)
1# கணிப்பொறியின் திரையை பார்வை மட்டத்திலும் பார்வைக்கு நேர்க்கோட்டிலும் அமைக்க வேண்டும்.
2# திரைக்கும் உங்கள் கண்களுக்கும் இடையேயான தூரம் 16"-ஆக இருக்க வேண்டும்.
3# சி.பி.யு. வை கை எட்டும் தூரத்தில் வைக்கும் அதேநேரம் திரை அமைந்திருக்கும் மேசை மேல் வைக்காமல் வலப்பக்கம் மேசைக்கு கீழே வைக்கவேண்டும். ( இது வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு ; இடது கை பழக்கம் உள்ளவர்கள் இடப்பக்கம் வைக்கலாம் )
4# உங்கள் முழங்கால்கள் மேசைக்கு கீழே வசதியாக அமையுமாறு மேசை உயரம் இருத்தல் அவசியம். அல்லது அதற்குத்தகுந்த உயரத்துக்கு உங்கள் நாற்காலியை உயர்த்தியோ தாழ்த்தியோ கொள்ள வேண்டும். கால்களை தொங்க விடாமல் ( பாதத்தின் விரல்கள் பாகம் உயர்ந்தும் குதிகால் பாகம் தாழ்ந்தும் உள்ள ) ஏதாவது ஒரு நிலையான கட்டையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
5# விசைப்பலகை, நாற்காலியின் கைப்பிடியால் முட்டுக்கொடுக்கப்பட்ட முழங்கைக்கு கீழ்மட்டத்திலும் அதன்மூலம் தோள்களுக்கு அழுத்தம் தராத வகையிலும் இருத்தல் வேண்டும்.
6# விசைப்பலைகையின் முன் புறம் சற்று தூக்கி இருக்கும் படி அமைத்துக்கொள்ள வேண்டும்.
7# முழங்கை கோணம் தோராயமாக 90° இருக்கும்படி அமைத்து, மணிக்கட்டுகள் முழங்கைக்கு கிடைமட்டமாக அமையுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
8# 'மவுசை' (இதற்கு என்ன தமிழ்ப்பெயர்?) விசைப்பலகை மட்டத்திலே அதற்கு முடிந்தவரை நெருக்கமாக வைக்கவேண்டும்.
9# முதுகுவலி அவஸ்தை வராமல் இருக்க, எப்போதுமே முதுகை கணிப்பொறி இயக்கத்திற்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சுழல் நாற்காலியுடன் ஒட்டி சாய்த்து அதே நேரம் முதுகு வளையாமல் செங்குத்தாக இருக்கும் படி அமர வேண்டும்.
10# ஒருமுறை இந்த அமர்வில் இருந்து எழுந்துவிட்டால், உடனே மீண்டும் அமர்ந்துவிடாமல், (சிறுது நேரம் நின்றுவிட்டோ, ஒரு சிறு உலா போய்விட்டோ...) அடுத்த அமர்விற்கு குறைந்தது 20 வினாடிகளிலிருந்து 2 நிமிடங்கள் வரை இடைவெளி விட்டு மீண்டும் அமர்தல் நல்லது. அமர்ந்திருக்கும்போதே, அவ்வப்போது கண் விழிகளை நன்றாக சுழற்றி கண்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்க வைத்து விட்டு பின் பழையபடி திரை மீது பார்வைகளை சீராக்க வேண்டும். இப்படி செய்வது, கண்களுக்கு நன்று.
12 ...பின்னூட்டங்கள்..:
நல்ல இடுகை - முதலாளிகள் கவனத்திற்கு.
நன்றி.
உக்காருவதில் இவ்வளவு விஷயமா???
விளக்கப்படத்துடன் விளக்கமா சொன்னதுக்கும் மிக்க நன்றி சகோ
அப்பாடா...!
"நீண்ட நேரம் இப்படி கஷ்டப்பட்டு கணிணி முன் அமர்ந்து இவ்வளவு விஷயங்களை தட்டச்சி இருக்கிறோமே... என்னடாது... ஒரு பதிவர் கூடவா 'நல்லாயிருக்கு' என்று ஓர் ஒற்றை வார்த்தையை உதிர்க்க மாட்டார்?" என்று நினைத்தேன்...
அப்பாடா...!
ஒன்பது வார்த்தைகள்..!
மிக்க நன்றி சகோ.
@ பொட்டி தட்டுவோர் சங்கம் said... 1 :-
//நல்ல இடுகை//--நன்றி...
"போராடுவோம்... போராடுவோம்..."
"பொட்டிதட்டுவோர்களின் நலனைப்பாதுகாக்கும் பொருட்டு சுழல் நாற்காலியும் கணிணி மேசையும் தரும் வரை போராடுவோம்"
"இலையேல்... வேலை நிறுத்தம் நோட்டீஸ்"
"போராடுவோம்... போராடுவோம்..."
இப்படி ஆர்ப்பாட்டம் செய்தால்தான் முதலாளி காதில் விழும், இந்த பதிவை எல்லாம் எந்த முதலாளி வந்து படிக்கப்போகிறார்?
முழிச்சுக்கங்க.... பொ.த.ச.
மிக பயனுள்ள இடுகை
சகோ.ஜலீலாகமால், வருகைக்கு மிக்க நன்றி.
எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாவதாக! நெத்தியடியை காண வில்லை என்று தேடிக்கொண்டு இருக்கையில் தனி வலைப்பூவை தொடங்கி அதில் பயனுள்ள தகவல்களை வழங்கியமைக்கு நன்றி! வாழ்த்துகளுடன் பாரூக்!
சகோதரர் பாரூக்,
எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாவதாக!
என்னை தேடிக்கண்டுபிடித்து வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
தொடர்ந்து இணைந்திருங்கள்.
அப்பாடா! நல்ல டாக்டராய் பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். கவலை விட்டது சகோதரா!
வருகைக்கு மிக்க நன்றி சகோ.மு.ஜபருல்லாஹ். தங்களுக்கு ஏற்பட்ட உடல் சமபந்தமான பிரச்சினைகள் நீங்கி ஸலாம் உண்டாக இறைவனிடம் இறைஞ்சுசுகிறேன் சகோ.
mouse kku tamil peyar sutteli
//mouse kku tamil peyar sutteli//
நன்றி சகோ.
சுட்டெலிக்காக குறள் வெண்பாவெல்லாம் வடிக்க ஆரம்பித்து...
தொட்டுச் சொடுக்க தொடங்கும் நிகழ்வுகள்
சுட்டெலி ஆற்றும் செயல்.
--ஓகை நடராஜன்
...யப்பா...!!!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!