கஷ்டப்பட்டு உழைத்து, மாதம் பிறந்தால் பெற்றதைக்கொண்டு, செலவு செய்ய வேண்டிய பலவற்றில் கட்டுப்பாடாக இருந்து, அதை சிறுக சிறுக சேமித்து, கடைசியில்... 'இதுவும் ஒரு பெருகக்கூடிய சேமிப்பே..' என்று, அவ்ளோ காசு போட்டு தங்க நகை வாங்கினால்... அது, புதுசிலேயே அறுந்தாலோ-விட்டாலோ-முறிந்தாலோ-உடைந்தாலோ-நெளிந்தாலோ-நசுங்கினலோ-விரிந்தலோ... நம் மனம் என்னமாய் படாத பாடுபடுகிறது..? அதே நகை இதே காரணமாக எங்கோ தவறி, தொலைந்தாலோ... அப்போதைய நம் மனநிலையை கேட்கவே வேண்டாம்..! எத்தனை மாத உழைப்பின் சேமிப்பு..?
நன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.
அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!
Tuesday, October 30, 2012
14 உங்கள் தங்கநகைகள் தொலையாமல் இருக்க...
Thursday, October 11, 2012
64 PJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்
எத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற
துவா செய்யுங்கள்' என்று..! ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெயில்- இது ஏனோ, எனது குடும்பத்து உறுப்பினர்
நோய்வாய்ப்பட்டது போன்ற ஒரு சோகத்தை என்னுள் ஏற்படுத்துகிறது. காரணம், நான் மட்டுமல்ல...
'குர்ஆன் ஹதீஸ் மட்டுமே தனது வாழ்வியல் மார்க்கம்,
என்று யாரெல்லாம் எனது தலைமுறையில் வாழ தலைப்பட்டனரோ, அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்வினுள்ளும் மார்க்க ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மவுலவி சகோ.பீஜே' என்று கூறினால் அது மிகை அல்லதான்..!
Sunday, October 7, 2012
33 சகோ, இது உங்க கம்பெனி கதைதானே..?
ஒரு ஊருலே... ஒரு தொழிற்சாலையாம். அதிலே, ஒவ்வொரு நாளும் விடிகாத்தாலேயே சுறுசுறுப்பா எழுந்து வேலைக்கு வந்து முழுமூச்சா உழைச்சிட்டு இருந்துச்சாம் நிறைய எறும்புகள்.
தேடுகுறிச்சொற்கள் :-
Photo Gallery,
சமூகம்,
தவறான புரிதல்,
தொழிலாளி,
நிகழ்வுகள்,
நிர்வாகம்,
முதலாளி
Friday, October 5, 2012
12 மானிட வெறி
இனவெறி-மதவெறி-மொழிவெறி-தேசவெறி-சாதிவெறி-கட்சிவெறி என்று மனிதன் சக மனிதனை கொல்லும் செய்திகள் ஒரு எக்ஸ்ட்ரீம்மில் இருந்தாலும்... இன்னொரு புறம், ஒரு மிருகத்துக்காக தனது சொந்த மகனையே அநியாயமாக கொலை செய்த மனுநீதி சோழன் நடித்த நீதி வெறிக்கதைகளும் இன்னொரு எக்ஸ்ட்ரீம்மில் உலா வருகின்றன..! இரண்டுமே தவறானவையே..! நிலைமை இப்படி இருக்க, 'சிறு எறும்புக்கும் கூட நாம் தீங்கு நினைக்காமல், மட்டன் பிரியாணி சாப்பிடுவது எப்படி' என்றுதான் நாம் சிந்திக்க வேண்டும்.
முன்பு ஒரு முறை நான் எனது நண்பன் வீட்டு தோட்டத்தில் நீர்பாய்ச்சிக்கொண்டு இருந்தேன். நண்பன் குடும்பம் முழுக்க எனக்கு சில ஆண்டு பழக்கம். பள்ளியிலிருந்தே நட்பு. நன்கு அறிமுகமான வீடு.
முன்பு ஒரு முறை நான் எனது நண்பன் வீட்டு தோட்டத்தில் நீர்பாய்ச்சிக்கொண்டு இருந்தேன். நண்பன் குடும்பம் முழுக்க எனக்கு சில ஆண்டு பழக்கம். பள்ளியிலிருந்தே நட்பு. நன்கு அறிமுகமான வீடு.
.
அன்று நண்பனின் உறவினர்கள் வந்து இருந்தனர். அதில் ஒரு சுட்டிக்கார துவக்கப்பள்ளி மாணவன் கையில் ஒரு லென்ஸ் வைத்து இருந்தான். "அண்ணே... இதிலே நெருப்பு வருமாமே..? நெசமாவாண்ணே..?" என்று கேட்க... நான் அறிந்த எனது இயற்பியல் அறிவை அவனுக்கு ஊட்ட வேண்டிய கடமையை உணர்ந்தவனாக........................
தேடுகுறிச்சொற்கள் :-
அனுபவம்,
எறும்பு,
சமூகம்,
சரியான புரிதல்,
மனிதாபிமானம்
Sunday, September 30, 2012
29 'சீனியர் சிட்டிசன்' : அரசின் சலுகைகள்
சென்ற முறை ஊரில் BSNL அலுவலகம் சென்று இணைய இணைப்புக்காக நான் மனுச்செய்யும் பொழுது... 'எந்த Internet Package சிறந்தது' என்று தேர்ந்தெடுக்க, அலுவலர் தந்த ஒரு குறிப்பேட்டை பார்த்தபோது... அதன் அடியில் இருந்த கடைசி வரி... "ஒய்வு பெற்ற அரசு ஊழியர் மூத்த குடிமக்கள் எனில் 20% மாதாந்திர கட்டணத்தில் சலுகை உண்டு" என்று போட்டிருப்பதை பார்த்தேன்..! அப்புறம் என்ன..? எனது தந்தையை மனுச்செய்ய வைத்து, சலுகையுடன் வீட்டுக்கு இணைப்பு வாங்கிவிட்டேன்..! :-))
---------------------------------------------------------------------
பிற்சேர்க்கை :
1-5-2013 முதல்...
இச்சலுகையை BSNL நிறுவனம் 10% குறைத்து விட்டது.
எனவே... என் இணையக்கட்டணம் 10% கூடி விட்டது. :-((
---------------------------------------------------------------------
பிற்சேர்க்கை :
1-5-2013 முதல்...
இச்சலுகையை BSNL நிறுவனம் 10% குறைத்து விட்டது.
எனவே... என் இணையக்கட்டணம் 10% கூடி விட்டது. :-((
---------------------------------------------------------------------
இப்படியான பல சலுகைகளை மத்திய-மாநில அரசுகள் பல இடங்களில் வழங்குகின்றன. அது ஏனோ நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இதில் போதிய விழிப்புணர்வு இல்லை. கூடவே, பயன்படுத்திக்கொள்ள தேவையற்ற தயக்கம். இவற்றை தெரியப்படுத்தி சலுகையை பெற தூண்டவே இந்த பதிவு..!
.
.
தேடுகுறிச்சொற்கள் :-
Senior Citizen,
அனுபவம்,
சமூகம்,
சரியான புரிதல்,
மூத்த குடிமக்கள்
Thursday, September 27, 2012
27 Supreme Court : அதிரடி தீர்ப்பில் நெத்தியடி கருத்து..!
| H.L. Dattu --- உச்ச நீதிமன்ற நீதிபதிகள் --- C.K. Prasad |
"சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக எந்த ஓர் அப்பாவி நபரையும் பிடித்து பயங்கரவாதி / தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் அடைக்காதீர்" என்று நேற்று உச்ச நீதிமன்றம் தனது வரலாற்று சிறப்பு மிக்க அதிரடி தீர்ப்பில் குஜராத் போலீஸ்க்கு ஓங்கி நச்சென மண்டையில் குட்டும் விதமாக, இந்த நெத்தியடி கருத்தினை கூறியது. குஜராத்துக்கு மட்டுமல்ல... இது அனைத்து மாநில அரசு , காவல்துறை மற்றும் ஊடகங்களுக்கும் சேர்த்தே பொருந்தும்..!
தேடுகுறிச்சொற்கள் :-
அரசியல்,
சட்டம்,
நிகழ்வுகள்,
நீதிமன்றம்,
நெத்தியடி
Friday, September 21, 2012
15 ஓட்டரசியலில் காவிரி ஓர் அநாதை
1980கள்- அது ஒரு பொற்காலம் சகோ..! என்னதான் கடுங்கோடை ஆனாலும், வீதிக்கு வீதி - வீட்டுக்கு வீடு... கையால் அடிக்கும் ஒரு இரும்பு பம்பு (எங்க ஊரு பக்கம் -தஞ்சை மாவட்டம் பாபநாசம்/பண்டாரவாடை/ராஜகிரி- 'வேம்பா' என்று சொல்வோம்) ஒன்று ஆங்காங்கே இருக்கும். அப்போது அதன் உயரம் கூட நான் இருக்கமாட்டேன். ஒரு கையால் கைப்பிடியை பிடித்து நான் இழுத்தாலே அதன் வாய் நிறைய தண்ணீர் கொட்டும். அத்தனை தெளிவான சுவையான குடி நீர் வரும்..! இப்போது... அதெல்லாம் அது ஒரு கனாக்காலம் சகோ..! ஏன் இந்த நிலை..? பதில் :- காவிரி..! இப்போதெல்லாம் போர் போட்டாலே சில இடங்களில் தண்ணீர் வருவது இல்லை என்பது ஒரு புறமிருக்க... வறண்ட காவிரி ஆற்றில் மணலைக்கூட காண முடியவில்லையே சகோ..! :-(( என்ன காரணம்..? யார் காரணம்..?
தேடுகுறிச்சொற்கள் :-
அரசியல்,
இந்தியா,
கர்நாடகா,
காவிரி,
சரியான புரிதல்,
நிகழ்வுகள்
Thursday, September 13, 2012
44 காட்டுமிராண்டிகளுக்கு கடுங்கண்டனம்..!
அப்பாவி மக்களை கொல்வது... விபச்சாரம்... ஓரினச்சேர்க்கை... போன்ற மனிதநாகரிகத்துக்கு எதிரானவற்றுக்கு கடும் தண்டனைகள் வழங்கி அவற்றுக்கு தடை போட்ட புரட்சி வாழ்வியல் மார்க்கம்தான் இஸ்லாம்..!
பெண்கள், குழந்தைகள். வயோதிகர்கள், மத குருமார்கள் போன்றவர்கள் தங்களிடம் போர்களத்துக்கே வந்து நின்றாலும் கூட... அவர்களை ஒன்றும் செய்யக்கூடாது... என்ற தூய்மையான வழியை போதித்த மார்க்கம்தான் இஸ்லாம்..!
இதெல்லாம்... 'நம் ஏக இறைவன் நமக்கு இப்படித்தான் வாழவேண்டும் என்று கட்டளை இடுகிறான்' என்று மக்களுக்கு எடுத்துரைத்து... தாமும் இறைவன் சொன்னபடி சரியாக வாழ்ந்துகாட்டியவர்தான் நம் இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்..!
அன்னார் பற்றி புனைவாக ஒரு ஆபாசமான அடல்ட்ஸ் ஒன்லி செக்ஸ் சினிமா எடுக்க வேண்டும் என்றால்... எவ்வளவு கேவலமான தரங்கெட்ட மிருக சிந்தனை கொண்டவனாக அவன் இருக்க வேண்டும்..? ஆம்..! எடுத்து இருக்கிறார்கள்... சில அமெரிக்க காட்டுமிராண்டிகள்..!
தேடுகுறிச்சொற்கள் :-
அமெரிக்கா,
சமூகம்,
சரியான புரிதல்,
நிகழ்வுகள்,
மதஎதிர்வெறி
Thursday, August 30, 2012
14 Delete செய்த 'பிரபல' Post ஐ மீட்பது எப்படி..?
Blogger > Dashboard > Posts இங்கே சென்று எழுத்துப்பிழையை Edit பண்ணவேண்டிய சென்ற பதிவை அவசரத்தில் நான் Delete பண்ணிவிட்டேன்..! :-((
Edit | View | Delete மூன்றும் பக்கம் பக்கம் இருந்ததால்... அவசரத்தில் டெலிட் அழுத்தி, 'நடப்பு பின்னூட்டப்போர்' டென்ஷனில்... அடுத்து வந்த ஒரு சாளரத்தில் "Are you sure you want to delete the selected post(s)?" என்பதற்கு உடனே "OK" யும் கொடுத்துவிட்டேன்..! போச்சு..! பிரபல(!)பதிவர் 'டீக்கடை சிராஜுதீன்' இலை மடித்த பதிவு "Deleted" என்றாகி காணாமல் போச்சுங்க சகோ..!
தேடுகுறிச்சொற்கள் :-
Blogger tips,
Deleted Post,
Recover / Restore Post,
அனுபவம்,
சீரியஸ் பதிவு,
மீட்பு
Monday, August 27, 2012
138 'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்?
எப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..! அதற்காக நல்ல நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டியது பேரானந்தம்..! இந்த சந்திப்பு சென்னையில் சீரும் சிறப்புமாக அமைய முயற்சி எடுத்த மற்றும் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எனது இனிய நன்றிகள்..! என்னால் கலந்து கொள்ள இயலாவிடினும் நேரலையில் காண முடிந்தது..!
இந்த பதிவர் சந்திப்பு பற்றி பரபரப்பு தலைப்பு வைத்து, அதன்மூலம் ஏகப்பட்ட ஹிட்ஸ் அள்ளுவது என்பது இவ்வார பதிவுலக ஹிட்ஸ் நோய் ஆகிவிட்டது..! பொதுவாக அந்தந்த வாரத்தில் என்னன்ன விஷயங்கள் 'ஹாட் டாப்பிக்'கோ அதை வைத்து தங்கள் பதிவுக்கு தலைப்பு போடுவார்கள் நம் பதிவர்கள்..!
உதாரணமாக...
தேடுகுறிச்சொற்கள் :-
கலாச்சாரம்,
சமூகம்,
தவறான புரிதல்,
நிகழ்வுகள்,
மூடநம்பிக்கை
Subscribe to:
Posts (Atom)





