"திருவள்ளுவர் தினம் -தை முதல் நாள்- தமிழ்ப்புத்தாண்டு- தமிழர் திருநாள்" என்று சென்ற வருட தமிழக அரசு சார்பாக திமுகவினர் சொல்ல...
"இல்லை... இல்லை... சித்திரை ஒண்ணுதான் தமிழ்புத்தாண்டு என்று இன்றைய தமிழக அரசு சார்பில் அதிமுக சொல்ல...
தமிழர்கள் நாம் எது 'ரியல் புத்தாண்டு' என்று மண்டையை பிய்த்துக் கொள்கிறோம்..! நம் பூமி எந்த இடத்தில் இருந்து சூரியனை சுற்ற ஆரம்பித்தது என்று எவருக்கும் தெரியாது. எனவே, எந்த மாதம் வேண்டுமானாலும் ஓர் ஆண்டின் தொடக்கமாக இருக்கலாம். இந்நிலையில், "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று பள்ளியில் பழமொழி படித்தோம். இப்போதெல்லாம் தை பிறந்தால் அது சண்டைக்குத்தான் வழி அமைக்கிறது. அதிலாவது அர்த்தம் இருந்தால் கூட பரவாயில்லை. முட்டாள்த்தனமாக சண்டை நடக்கிறது.