அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!
Showing posts with label அல்மராய். Show all posts
Showing posts with label அல்மராய். Show all posts

Saturday, August 13, 2011

36 சவூதி:மக்கள் புரட்சிக்கு மகத்தான வெற்றி..! (Milk Revolution)

இவ்வருடம் அரபுலகில் புரட்சிகளின் வருடம் போலும்..! துனிசியா, எகிப்து என்று மக்கள் புரட்சி வெற்றி பெற்றாலும் லிபியா, சிரியா, எமன், பஹரைன், ஜோர்டான் போன்ற நாட்டு அரபு மக்கள் இன்னும் முனைப்போடு ஜனநாயக வழியில் தங்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இவ்வாறின்றி, தம் நிலத்தை அபகரித்த ஆயுத அடக்குமுறை வந்தேறிகளுக்கு எதிராக தீரமுடன் ஆயுதமேந்தியும் ஏந்தாமலும் போராடும் பாலஸ்தீனியரையும் நாம் மறந்துவிட இயலாது. இந்நிலையில் சவூதியிலும் சென்ற மாதம் சத்தம் போடாமல் ஒரு புரட்சி ஆரம்பித்து இரண்டே வாரத்தில் வெற்றியும் பெற்று விட்டது..! அல்ஹம்துலில்லாஹ்..! சவூதி பற்றிய செய்தி என்றாலே 'ஈரை பேனாக்கி, பேனை பெருச்சாளியாக்கும்' உலக ஊடகங்கள் இதை மட்டும் ஏனோ வெளியில் தெரியப்படுத்தாமல் சர்வ ஜாக்கிரதையாக அமுக்கி விட்டன..! ஆனால், நாம் விட்டு விடுவோமா..? பின்னே, தனியே எதற்கு ஒரு வலைப்பூ வெச்சிருக்கோம்..? லேட்டானாலும் தாளிச்சிட மாட்டோம்..?

previous home
Related Posts Plugin for WordPress, Blogger...