அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, October 31, 2013

1 வலக்கை வாட்ச்

வலது  கையில் வாட்ச் கட்டினால் என்ன தப்பு..?
இடது  கையில் தான் வாட்ச் கட்டனும்னு சட்டமா..?
இடது கையில் வாட்ச் கட்டும் கலாச்சாரம் எப்படி வந்தது..?



15 -ம் நூற்றாண்டில் கடிகாரம் கண்டு பிடிக்கப்பட்தும், எந்நேரமும் நேரத்தை "வாட்ச்" பண்ண, அதை மக்கள் தங்கள் கழுத்தில் செயின் கட்டி அல்லது பேன்ட் பெல்டில் மாட்டி தொங்க விட்டுக்கொண்டுதான் அலைந்தனர். அதில் எல்லாம் கடிகார சாவி & நேரம் மாற்றும் திருகாணி அதன் தலைப்பகுதியில் தான் இருக்கும்..! (அதாவது, 12 வது மணிக்கு மேலே..!)

காந்தியாரின் பிரபல "இடுப்பு கடிகாரம்" இப்போது நியாபகம் வருகிறதா..? 


ஆனால், பெண்கள்  பெரும்பாலும் கழுத்தில் சங்கிலி போல கடிகாரம் கட்டி நகை போல தொங்கவிட்டு வந்தனர். 


ஆனால், அப்படி கழுத்தில் தொங்க விடுவது, நெக்லஸ்க்கு இடைஞ்சலாக உள்ளது என்பதாலும்... கடிகாரம் தொங்க விடுவது "பெண்களுக்கு அழகாக இல்லை" (?!) என்றும் பெண்களுக்காகவே பிரத்தியேகமாக "கைக்காடிகாரம்" கண்டு பிடிக்கப்பட்டது என்னவோ Patek Philippe என்பவரால், 1868 ல் தான்..! 

அதற்கு lady's bracelet watch என்று தான் பெயர் வைத்தார் ஃபிலிப். இதனால்... ஆண்கள் தங்கள் மணிக்கட்டில் வாட்ச் கட்டுவது வசதிதான் என்றாலும்..."that is not manly look" என்று கருதி இடுப்பிலேயே கட்டி வந்தனர் அல்லது பாக்கட்டில் வைத்து வந்தனர்.

ஆனாலும், இந்த பெண்களுக்கான Wrist - Bracelet வாட்ச்சில் தான்... நமது பதிவின் மையப்பொருளான வலது-இடது பஞ்சாயத்து ஆரம்பம்..!

உலகின் மிக அதிகமானவர்கள் வலது கை உபயோகிப்பாளர்கள் என்றாலும்... எப்படி, டைப்ரட்டர் கண்டுபிடித்த Christopher Sholes இடக்கைகாரர் என்பதால், தனது இடது கை வசதிக்கு ஏற்றது போல... QWERTY, ASDFG, ZXCVB (16) பெரும்பாலான தட்டச்சு எழுத்துகளை இடது கை விரல்களுக்கு வசதியாக வடிவமைத்துக்கொண்டாரோ...

அதேபோல...

அக்கால வாட்ச்சுக்கு சில மணி நேரங்களுக்கு ஒரு முறை சாவி கொடுக்க வேண்டும் என்பதாலும், ஒருவேளை "வாட்ச் பண்ணாமல் விட்டதால்..." (!) சாவி முடிந்து கடிகாரம் நின்று விட்டால்... முட்களை திருப்பி மீண்டும் டைம் செட் பண்ண வசதியாக அந்த Time Adjustment Stem & Watch Key ஐ வலது கையால் இயக்க வசதியாக கைக்கடிகாரத்தின் வலது புறத்தில் அதை வைத்து அதாவது வடிவமைத்தார் Patek Philippe..! (அதாவது, 3 வது மணிக்கு பக்கத்திலே..!) அதனால், இடது கையில் வாட்ச் கட்டுவதே வசதி என்றானது வலக்கை பழக்கம் உள்ள பெண்களுக்கு.

பின்னர், போர் விமானிகளுக்கு "பாக்கெட் வாட்ச்"ஐ விட "ரிஸ்ட் வாட்ச்" தான் பறந்து கொண்டே சட்டென நேரம் பார்க்க வசதி என்பதால், 1904 ல் Cartier என்பவர்,  வடிமைத்த "ஆண்களுக்கான கைக்கடிகாரம்" முதலாம் உலகப்போரில் பிரபலம் அடைந்தது. அப்புறம் உலக ஆண்களும் தங்கள் மணிக்கட்டில் பெண்களை போலவே (?!) வாட்ச் கட்ட ஆரம்பித்தனர். அவை எல்லாமே... இடது கைகளில் கட்டப்பட்டன... காரணம் மேலே சொன்ன "சாவி" சமாச்சாரம்தான். அப்படித்தான் இடது கையில் வாட்ச் கட்டும் கலாச்சாரம் வேரூன்றியது.


பின்னாளில், சாவி கொடுக்க தேவையே இல்லாமல், பேட்டரியில் ஒரு வருஷத்துக்கு மேலே வாட்ச் தொடர்ந்து ஓடினாலும், சோலார் பிளேட்டில் வருஷக்கணக்கில் வாட்ச் ஓடினாலும், முட்கள் திருப்ப அவசியமே இல்லாத எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே உள்ள வாட்ச் வந்தாலும்... அவை எல்லாமே வலது கையில் கட்டப்படுவதற்கு (!) வேறு பிரத்தியேக காரணங்களும் உண்டு..!

அப்போதுதான்...

வலது கையால் எக்ஸாம் எழுதுவோர் எழுதிக்கொண்டே தடையின்றி டைம் வாட்ச் பண்ணலாம்.

அமெரிக்கா, அரேபியா... etc., போன்ற நாடுகளில், 'இடது கை ஸ்டியரிங் - வலது கை கியர் சேஞ்சிங்' என்பதால்... வலது கை கியரில் இருக்க, ஸ்டியரிங் பிடித்துக்கொண்டே இடது கையில் ஈசியாக வாட்ச் பார்க்கலாம்.

வலக்கை காரர்கள் பெரும்பாலும் வெயிட் தூக்குவது, வேலை செய்வது எல்லாம் வலது கையில்தான். எனவே, இடது கை ஃப்ரீயாகவே இருக்கும்... அதில் வாட்ச் இருந்தால்தான் வேலை தடை படமாலே டைம் பார்ப்பது வசதி.

இவர்கள்  இடது கையில் வாட்ச் கட்டுவதே சரியானது..!

அப்படின்னா... இப்போ...

இடது கையால் எழுதுவோர் &
இந்தியா  இலங்கை போன்ற நாடுகளில், வலது  கை ஸ்டியரிங் - இடது கை கியர் சேஞ்சிங்  என்று... டிரைவிங் பண்ணுவோர் என்றால் அவர்களுக்கு எல்லாம் என்னதான்  தீர்வு..?

ஆம்..! சரியான கேள்வி..!

அவர்களுக்கு வலது கையில் வாட்ச் கட்டுவதே சரியானது..! 

எனில், மேலே சொல்லப்பட்ட காரணங்கள் எல்லாம் சும்மாவா..?

ஹா..ஹா...ஹா..... இல்லை சகோஸ், இந்த, இடக்கைகாரர்களுக்கு என்றே திருகாணி & பட்டன்ஸ் எல்லாம் டையலின் இடது பக்கம் இருக்கும்படி (அதாவது, 9 வது மணிக்கு அருகே..!) வடிவமைத்து "வலக்கை வாட்ச்" கள் சந்தைக்கு வருகின்றன..! அவற்றை கேட்டு தேடிப்பிடித்து வாங்கி அவர்கள் பயனடைய வேண்டும்..!


1 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...