இந்த வாரம், தம் 90 வது பிறந்த நாள் விழாவில்... தம்மை வாழ்த்த வந்த அத்வானி மோடியுடன் ராம் ஜெத்மலானி. |
'Ramjetmalonia' - A new Disease Discovered @ Jodhpur High Court
"ராம்ஜெத்மலோனியா" வியாதி ( Ramjetmalonia Disease ) என்ற... பெண்ணுக்கு மட்டுமே (?!) வரும் புதியதொரு வியாதி (?!) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
===>>யாரால் இந்நோய் கண்டுபிடிக்கப்பட்டது..?
"ஆண்களை கவர்ந்து இழுக்கும்" இந்நோயை கண்டுபிடித்து உலக மருத்துவ சமூகத்திற்கு காணிக்கையாக்கியுள்ளார்... சங் பரிவார பிரபல கிரிமினல் லாயர் ஒருவர்..! அவரின் பெயரிலேலே அந்த நோயின் பெயரும் வழங்கப்படுகிறது..!
===>>இந்நோய் யாருக்கு வரும்..?
பாலியல் வல்லுறவில் பாதிக்கப்பட்டு புகார் அளித்த ஒரு பெண் 18 வயது நிரம்பாத 'சிறுமி' என்றால்... தன் கட்சிக்காரனான பாலியல் வல்லுறவு கொண்டவனை தப்ப வைக்க...
அச்சிறுமியை பணத்தை காட்டியோ... உயிர்பயம் காட்டியோ... மிரட்டி... "ஆமாம், நானும் மன இசைவுடன் அவனுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டேன்" என்று அவனுடைய கிரிமினல் வக்கீல் அப்பெண்ணை அப்படி சொல்ல வைத்தாலும் கூட...
'அவள் 18 வயது நிரம்பாத சிறுமி' என்பதால்... அவளின் இசைவை ஏற்க இந்திய சட்டத்தில் இடம் இல்லையாதலால்... அது போன்ற வஞ்சிக்கப்பட்ட சிறுமிகளுக்கு இந்நோய் இருப்பதாக கோர்ட்டில்தான் கிரிமினல் வக்கீலால் கண்டுபிடித்து அறிவிக்கப்படும்..!
சப்போஸ்... குற்றம் சாட்டப்பட்டவர்... மக்களால் கடவுளாக கருதப்பட்டு பூஜித்து வணங்கப்படும் மிகப்பெரிய சாமியார் என்றால்... "அவர் மீது தவறில்லை... அப்பெண் மீதுதான் தவறு" என்று அவரை 'அப்பழுக்கில்லாதவர்' என்று தீர்ப்பு கூறி விடுவிக்க...அனேகமாக இந்நோய் அச்சிறுமிக்கு இருப்பது சங் பரிவார மருத்துவ உலகின் மருத்துவர்களால் சான்றிதழ் தரப்பட்டு உறுதி செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது..!
சரி... இனி சீரியஸாக அலசுவோம்..!
'கடவுளாக மதிக்கப்படும்' (!?) சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் பலாத்கார புகார் கூறிய சிறுமிக்கு "ஆண்களை கவர்ந்திழுக்கும் நோய்"(?!) உள்ளது என்று பாஜகவின் 90 வயது 'கிரிமினல் வக்கீல்' ராம் ஜெத்மலானி ஆசாராம் பாபுவின் விடுதலைக்காக என்ன்ன்னமாய் வாதாடுகிறார்..!
http://www.deccanchronicle.com/130918/news-current-affairs/article/asaram-bapus-lawyer-ram-jethmalani-says-victim-suffering-man
http://www.deccanchronicle.com/130918/news-current-affairs/article/asaram-bapus-lawyer-ram-jethmalani-says-victim-suffering-man
அவர் மீதான வழக்கு விபரம்..!
The minor girl’s complaint of alleged sexual assault has been registered under Section 376(rape), 354 (assault), and 509 (insult) of Indian Penal Code (IPC).
The minor girl’s complaint of alleged sexual assault has been registered under Section 376(rape), 354 (assault), and 509 (insult) of Indian Penal Code (IPC).
யார் இந்த ஆசாராம் பாபு..?
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் 1941 இல் பிறந்து, பிரிவினையின் பொழுது குஜராத்தில் செட்டில் ஆகி நிலக்கரியும் விறகும் விற்ற குடும்பத்தில் வளர்ந்தவர். பின்னாளில்... 1958-59 இல் கோர்ட் வாசலில் டி விற்று உழைத்துக்கொண்டு இருந்தவர். பின்னர் சைக்கிள் மெக்கானிக் ஆகவும் உழைத்தவர்..!
http://www.indiatvnews.com/news/india/how-asaram-bapu-a-cycle-mechanic-set-up-a-rs-5000-cr-empire--27379.html |
அதன்பிறகு திடீரென்று, தியானம்... கடவுள்... பக்தி... மோட்சம்... என்று ஏதேதோ கூறியவுடன்... சிலர் அவர் சொல்வதை உண்மை என்று நம்பி சிஷ்யர்களாக ஆக... கொஞ்சம் கொஞ்சமாக அவர் பிரபலம் அடைந்து 1970 -ல் குஜராத்தில் 10 ஏக்கரில் முதல் ஆஷ்ரமம் கட்டினார். ஏகப்பட்ட பக்தர்கள் வரவே... அது அப்படியே வளர்ந்து இன்று உலகெங்கும் 400க்கும் மேற்பட்ட ஆஷ்ரம்ங்களாக பெருக்கெடுத்து நிற்கிறது. இவரை பின்பற்றும் பக்தர்கள் இவரை குருவாக சாமியாராக வழிகாட்டியாக கடவுளாக நம்புகிறனர். இப்படியாக... ஆன்மீக பிசினசில் வெற்றி கண்ட இவர்... இன்று 5000 கோடி ரூபாய்க்கு சொந்தமான ஒரு கோடீஸ்வரர்..!
சென்ற வருடம் டெல்லி மாணவி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், "அந்த பெண்ணும் குற்றவாளிதான்... அவர் அவர்களை "அண்ணா" என்று அழைத்து கெஞ்சி விட்டுவிட சொல்லி இருந்திருக்க வேண்டும்... ஒரு கை மட்டும் ஓசை எழுப்புமா..?" என்று அவர் சொன்ன மோசமான அரைவேக்காட்டு கருத்து பரவலாக பலரால்... விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளாக்கப்பட்டது..!
போலி சாமியார் ஆசாராம் பாபு |
இப்படியான ஒரு மனநிலை கொண்டவர்தான் ஆசாரம் பாபு..! இதுபோன்ற பணத்துக்காக எவ்வளவு கடும் பொய்களையும் சொல்லி வாதாடி தனது கட்சிக்காரர்களை நிரபராதி என எப்படி எப்படி எல்லாமோ நிரூபித்து கேஸ்களை ஜெயிக்கும் 'கிரிமினல் வக்கீல்'களை பார்த்து இருக்கிறோம். ஆனால், ஹிந்துத்துவா கொள்கைக்காக எந்த அளவுக்கும் கீழ்த்தரமான பொய் வாதங்களையும் வைக்கமுடியும் என்று மூன்றாம் முறையாக இந்திய நீதிமன்ற வரலாற்றில் பணத்துக்கு எவ்வித குறைவில்லாத ராம் ஜெத்மலானியின் வாதத்தை பார்த்தபோது என்னால் அறியமுடிகிறது..!
(முதன்முறை... 'பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம்' என்ற வழக்கு...
இரண்டாம் முறை... அப்சல் குரு வழக்கு...)
இந்த வழக்கில் ராம்ஜெத்மலானி வைத்துள்ள இன்னொரு முக்கியமான வாதம்... பாதிக்கப்பட்ட பெண் 16 வயது சிறுமி அல்ல. மாறாக அவள் ஒரு 18 வயதை கடந்த ஒரு 'யுவதி' என்பதுதான்..! இந்தக்காலத்தில்... பிறப்புச்சான்றிதழ்.. பள்ளியில் படித்த சான்றிதழ்... என்று எவ்வளவோ தடைகளை உடைத்து தாண்டியும்... இதற்கு இவர் ஆதாரங்கள் சமர்பித்து...
அவ்வாறு அந்த சிறுமியை ஒரு '18 வயதை கடந்த பெண்'ணாக நிலைநிறுத்திவிட்டால், அதன் பின்னர் இந்த வழக்கில் நடந்தது 'கற்பழிப்பல்ல' - விரும்பி நடந்த 'பாலுறவு' என்பதை... அந்த பெண்ணை கொண்டே "ஆமாம்" போட வைத்து நிரூபித்து 'ஆசாராம் பாபுவை' சட்டப்படியான நீதிமன்ற தண்டனையிலிருந்து பாதுகாத்து விட முடியும்..!
ஏன்..? இப்போதே அந்த சிறுமியை அப்படி சொல்லவைக்க முடியாதா..? முடியும்தான். ஆனால்... பயனில்லை. ஏனெனில்... சில மாதங்களுக்கு முன்னர்... 'விருப்பமுடன் ஈடுபடும் பாலியல் உறவுக்கான வயது 16' என்ற சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் தோற்றுப்போனதால்... இப்போது அந்த சிறுமி "ஆமாம்" என்றால்... அவள் சிறுமி என்பதால் அந்த "ஆமாம்"ஐ கோர்ட்டும் சட்டமும் ஏற்காது..!
அதே நேரம்... அந்த சிறுமியின் வயது 18 என்று 'எப்படியோ' நிரூபித்து விட்டாலும்... அவ்வாறான ஒரு வா(சூ)தாட்டத்தில் 'சாமியார் ஆசாராம் பாபு' மீதான பாலியல் குற்றசாட்டு - 'விருப்பத்துடனான பாலுறவு' என்று நிருபிக்கபட்டாலும் கூட 'ஆசாராம் பாபு' மீதான 'பாலுறவு களங்கம்' பொதுமக்கள் மத்தியில் நீங்காது அல்லவா..?
எனவேதான்.... அந்த 'பாலுறவு களங்கத்தையும்' அந்த பெண் மீதே சுமத்திவிட முன்கூட்டியே தீட்டப்பட்ட பக்காவான திட்டம்தான்... மேற்படி "விசித்திரமான கண்டுபிடிக்கப்படாத ஒரு நோய்" எனும் ராம் ஜெத்மலானியின் இந்த நிரூபிக்கப்படாத அவதூறு பிரச்சார வாதமாக இருக்க முடியும்..!
மேலும் இந்த 'அவதூறான' வாதத்தின் மூலம் ஏற்படும் திட்டமிட்ட 'ஊடக அதிர்ச்சியையும்' குற்றம் சாட்டப்பட்டவர் தரப்புக்கும், தனது 'வழக்கறிஞர்' புகழுக்கும் சாதகமாக்கி கொண்டுள்ளார் பாஜகவின் மற்றும் மோடியின் நண்பரான 90 வயது கிரிமினல் லாயர் ராம் ஜெத்மலானி.
இந்த கூத்துக்கள் எல்லாமே நடப்பதுக்கு காரணம்... பாலியல் வல்லுறவுக்கும் விபச்சாரத்துக்கும் தண்டனை தருவதற்கு சரியான சட்டம் நம் நாட்டில் இல்லாததால்தான்...!
மனிதனால் இயற்றப்பட்ட நம் நாட்டு சட்டத்தில் உள்ள விசித்திர வினோத நகைச்சுவை என்னவென்றால்...
உதாரணமாக...இஸ்லாம், திருமணத்துக்கு வயதை அடிப்படையாக நிர்ணயிக்காமல்... அது நிர்ணயித்த வேறு சில அடிப்படைகளான 'மணமக்களின் மன நிலை', 'மணமக்களின் உளப்பூர்வமான ஒப்புதல்', 'மணமக்களின் உடல் தகுதி' ஆகியவற்றை... திருமணத்துக்கு வைக்காமல்...
நம் நாடும் மற்ற பல 'முன்னேறிய' மேற்கத்திய நாடுகளும் 'திருமணம் செய்யாமல் விரும்பி செய்யும் விபச்சார பாலுறவிற்கு' போய் அவற்றை அடிப்படை தகுதிகளாக வைத்துள்ளன..!
அதாவது... ஒரு பெண் / ஆண் 'பருவம் அடைந்தாலே' அவளுக்கு 'விரும்பி செய்யும்' பாலுறவிற்கான தகுதி வந்துவிட்டதாக பெரும்பான்மையான நாடுகளின் சட்டம் கருதுகிறது. விபச்சாரத்துக்கு 14... 16... என்று சில நாடுகள் வயது நிர்ணயிக்கின்றன்ர். ஆனால்... அவர்களே... திருமணத்துக்கு என்றால் மட்டும்... 18... 21... என்று வயது நிர்ணயிக்கின்றனர். இல்லாவிட்டால் அதை 'குழந்தை திருமணம்' என்று கூப்பாடு போடுகின்றனர்..!
பொதுவாக பாலியல் வல்லுறவு வழக்கில்... எல்லாருமே பாலியல் குற்றத்துக்கு இஸ்லாம் பரிந்துரைக்கும் மரண தண்டனையைத்தான் கோரி வருகிறார்கள்.
'இஸ்லாம் இறைவனின் மார்க்கம்' என்பதற்கு இது போன்ற சட்டதிட்டங்கள்தான் மிக சிறந்த உதாரணம்.
மேலோட்டமாக பார்ப்பதற்கு 'இஸ்லாமிய சட்டதிட்டங்கள், வழிகாட்டு நெறிமுறைகள்' யாவும் தவறானதாக, கடினமானதாக, அநீதியாக தோன்றும். ஆனால்... பாதிக்கப்பட்டவர் இடத்தில் இருந்து நோக்கினால் நீதியாகவும் சரியாகவும் சிறப்பானதாகவும் புரியவரும்.
விநோதமாக, இஸ்லாத்தை எதிர்த்துக்கொண்டு 'என் வழி - பகுத்தறிவின் வழி' என்று செல்வோருக்கும், அந்த வழிகளால் அவர்கள் ஆக கடைசியில் வாங்கும் 'அடிகளுக்கு' பின்னர்... அதற்கு மேலே முன்னேற முடியாமல் முட்டு சந்தில் திக்கு தெரியாமல் நிற்கும்போது... அல்லது தாமே பாதிக்கப்படும் போது இஸ்லாமிய சட்டங்களை... 'சரி' என உணர நேருகிறது.
===>>சரி... இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி வரும்..?
வேறெப்படி..? "தேசத்தின் கூட்டுமனசாட்சி" திருப்தியுற வேண்டுமென்ற அடிப்படையில்தான்...!
4 ...பின்னூட்டங்கள்..:
ஜெத்மலானிகள் - சீச்சீ....இப்படியும் ஒரு பிழைப்பா?!
மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று பாடினார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
பழம்பெருமை மிக்க நம் பாரத நாட்டில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டால் இனி, மங்கையராய்ப் பிறப்பதுவே மாபாவம் என்றிட வேண்டுமம்மா என்று தான் பாடத் தோன்றும்.
நாளொருவண்ணமும் பொழுதொருமேனியுமாய் பெண்களுக்கெதிரான கொடுஞ்செயல் குறித்த செய்திகளால் நிரம்பி வழிகின்றன அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும். பெண்களுக்கெதிரான காமுகர்களின் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில் வார்த்தைகளால் அந்த அபலைகளை வன்புணரும் வழக்கறிஞர்களின் வாய்ச்சொற்கள் வருமானமே குறியென்று தேசத்தின் தன்மானத்தைத் துகிலுரிக்கின்றன என்றால் மிகையில்லை.
நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களுள் ஒருவரான ராம் ஜெத்மலானி பாலியல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாமியார் ஆசாராமுக்காக பிணை வேண்டி வாதாடுகையில், பாதிக்கப்பட்டுள்ள அந்த அபலைப் பெண்ணைக் குறித்து கொஞ்சமும் நாக்கூசாமல் "ஆண்களைக் கவர்ந்திழுக்கும் நோய் பீடித்தவள் (Nymphomaniac) மனநிலை பிறழ்ந்தவள்; என்றெல்லாம் கூறியிருப்பதன் மூலம் மீண்டும் ஒரு வன்புணர்வையே நிகழ்த்தியிருக்கிறார் எனலாம்.
வருமானத்திற்காக வாதிட்டுப் போகும் வழக்கறிஞரே யானாலும் அபலைப் பெண்களின் வாழ்வில் இப்படியெல்லாம் பேசித் தீதிட முயல்வது மகளிரைப் போற்றும் தேசத்துக்கும், அதன் மகளிருக்கும் பெரும் அவமானமே. இப்படி, நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களின் வார்த்தைப் புணர்வுகளுக்குப் பயந்தே பெரும்பாலான பெண்கள் தாங்கள் அடைகிற பாலியல் பாதிப்புகளை வெளியே சொல்ல முடியாமல், ஊமையின் கனவைப் போல உள்ளுக்குள்ளே வைத்து நொறுங்கிப் போகிறார்கள்.
ஆனால் இத்தகைய வழக்குகளில் பிணை வழங்கப்படுவதற்கு முன், மூன்று அம்சங்களையே நீதிமன்றம் பிரதானமாகக் கருத்தில் கொள்கிறது.அவை 1). குற்றச்சாட்டுகளின் வலிமை 2). தொடக்க நிலை வழக்கா இல்லையா? 3). பிணையில் விடுவதன் மூலம் குற்றஞ்சாட்டப்பட்டவர் சாட்சியத்தைக் கலைக்கும் வாய்ப்புள்ளதா? . இம்மூன்று காரணிகளின் அடிப்படையில் சாமியார் ஆசாராமுக்கு நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.
பெண்ணின் மனநிலைக்கும் சாமியார் ஆசாராமின் குற்றச்செயலுக்கும் என்ன தொடர்பு? எந்த மருத்துவர் அல்லது மனநலநிபுணர் அந்த அபலைப் பெண்ணை ஆராய்ந்து ஜெத்மலானியிடம் சான்றளித்தார்? . வழக்கறிஞர்களின் சட்டக் குழுமம் ஜெத்மலானிகளிடம் அறமின்றி வாதாடக் கூடாதென்பதை அறிவுறுத்த வேண்டும்.
வழக்கறிஞர் என்பதற்காக, பாலியல் சாமியார்களைக் காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் பேசி விடலாம் என்று ஜெத்மலானிகள் கருதக் கூடாது.
அண்மையில், ஏப்ரல் 2, 2013ல் பாலியல் துன்புறுத்தல் சட்டத்தில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ள திருத்தங்களின் படி, பாலியல் துன்புறுத்தல் சட்டத் திருத்தம் 2013, பிரிவு 354 A (iii) படி, எதிராளியைக் குறித்த பாலியல் வண்ணம் பூசிய வார்த்தைகளுக்கும் ஒரு வருடம் தண்டனையோ, அபராதமோ, அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம் என்பதை ஜெத்மலானி போன்ற வழக்கறிஞர்களுக்கு நினைவிருக்காதா என்ன?
- இப்னு ஹம்துன்
SOURCE:.inneram.com
إناء فازهكاداء
Asak....bro
Thank you very much for good sharing
//வேறெப்படி..? "தேசத்தின் கூட்டுமனசாட்சி" திருப்தியுற வேண்டுமென்ற அடிப்படையில்தான்...! // சந்தேகமில்லாமல் இதைதான் தீர்ப்பில் குறிப்பிட போகிறார்கள்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!