“பிராத்தனையும் வணக்கமாகும்" :- நபி(ஸல்) (அபூதாவூத், திர்மிதி)
“அல்லாஹ்வே மெய்யானவன். அவனைத்தவிர அவர்கள் அழைப்பது பொய்யானதாகும்” :-இறைவன் (குர்ஆன் 31:30)சாலையோர கி.மீ. கல்லை எல்லாம் கடவுளாக வணங்குவது அறியாமை என்றால்... ஒரு மனிதரை அடக்கம் செய்து அதற்கு மேல் கல்லை கட்டி அதை வணங்குவதும் அதனிடம் பிரார்த்திப்பதும் அறியாமேயே..! அந்த கல்லுக்கு பக்கச்சுவரும் கூரையும் போட்டுவிட்டால் அதுதான் தர்காஹ்..! தர்கா வழிபாடு தாங்கொணா வழிகேடு..!
![]() |
நன்றி : ஏகத்துவ அழைப்பாளன்.ஹுசைன் |
பிரபலமான பெரிய தர்கா எனில், அங்கே முஸ்லிம் அல்லாத மாற்று மத மக்களும் ஏராளமாக வருவது சகஜம். அப்படியான ஒரு தர்காவுக்கு காரில் வந்து இறங்கி, அங்கே தாடி தொப்பி பச்சை ஜிப்பா வெள்ளை கைலி சகிதம் உட்கார்ந்திருந்த பெரியவரிடம், ஒரு சர்க்கரை பொட்டலம், ஊதுபத்தி பாக்கெட், மூன்று வாழைப்பழம் எல்லாம் தந்து ஃபாத்திஹா ஓத சொல்லி கேட்டு... நேர்ச்சை தாயத்து வாங்கி கட்டி, தர்ஹாவில் அங்க பிரதட்சணம் எல்லாம் செய்து, உண்டியலில் பயக்தியுடன் காணிக்கை செலுத்திவிட்டு, நீண்ட நேரம் சமாதியை கண்மூடி கும்பிட்டு பிரார்த்தித்துவிட்டு, அங்கே ஓரமாக ஒரு கிண்ணத்தில் இருந்த சந்தனத்தை நெற்றியில் திருநீறு போல பூசிக்கொண்டு வந்த ஒரு படு டீக்காக ட்ரெஸ் போட்டிருந்த மாற்று மத நண்பரிடம்... மெல்ல பேச்சு கொடுத்தேன்......
.