அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Sunday, August 7, 2011

55 நிரூபன்-சித்ரா-ஆஷிக்:- 3 பேரும் வசம்ம்மா மாட்டிக்கிட்டாங்க..!

நிரூபன்  :- இலங்கையில் ஜாஃப்னாவில்... "ஒட்டுக் கேட்டல், நம்பர் நோட் பண்ணல்" இவற்றையே தன் வேலையாக கொண்டுள்ளாராம் இவர்..! "நாற்று" மற்றும் "ஒளியூற்று" வலைப்பூக்களின் அதிபர்..! மிக்க நடுநிலையுடன் எவர்க்கும் அஞ்சாமல் பல உண்மைகளை பல பதிவுகளில் அதிரடியாக வலையேற்றுவதன் மூலம் வலையுலகில் புகழ் பெற்ற ஈழத்தமிழரான இவர்தான் என்னிடம் மாட்டிய முதல் நபர்..!


சித்ரா :-  எதையும் (சில சமயம் மனிதர்களைகூட ) சீரியஸ் பார்வையில் பாக்காமல், சிரியஸ் பார்வையில் பாத்து போய்கிட்டு இருக்கும் இவர்  "கொஞ்சம் வெட்டி பேச்சு" வலைப்பூவிற்கு அதிபர்..! தன் வலைப்பூவிற்கு இப்படி பெயர் வைத்திருந்தாலும்... அதற்கு கொஞ்சமும் பொருத்தமே இல்லாமல் நிறைய உபயோகமான நல்ல கருத்துக்களை சொல்லி வருவது நாம் தெரிந்த ஒன்றே. பாளையங்கோட்டையில் பிறந்து அமெரிக்காவாழ் தமிழரான இவர்தான் என்னிடம் மாட்டிய இரண்டாவது நபர்..!


ஆஷிக் அஹமத் :- "பரிணாமத்தில் உள்ள ஓட்டைகளை வெளிக்கொணர்வதில் இவருக்கு டாக்டர் பட்டம் கூட கொடுக்கலாம்" (Thanks:-சகோ.bat) எனும் அளவுக்கு எழுதி வருவது நாம் அறிந்ததே..!  இப்போதெல்லாம் பரிணாமம் (Evolution) என்றாலே எனக்கு இவர் நியாபகந்தான் வருகிறது..! பாண்டிச்சேரியில் Islamic research, Semiconductor Physics, IC design என்று இருக்கும் இவர் "எதிர்க்குரல்" வலைப்பூவின் அதிபர்..! என்னிடம் மாட்டிய மூன்றாவது நபர்..!

சரி... தற்போது வெவ்வேறு நாட்டில் இருக்கும் இவர்கள் மூன்று பேரும் சவூதியில் இருக்கும் என்னிடம் எதற்காக வசம்ம்மாக மாட்ட வேண்டும்...?

அதற்கு முன்.... இன்னொரு விஷயம் பார்த்துவிடுவோமே சகோ...!

இது ஒரு தொடர்பதிவாம்..! இதை எழுத என்னை அழைத்த அந்நியன் 2 வலைப்பூ அதிபர் சகோ.அய்யூப் அவர்களுக்கு நன்றி..! இதில் உள்ள விசேஷம் என்னவென்றால்... கொடுக்கப்பட்ட ஒவ்வோர் கேள்விகளுக்கும் மும்மூன்று பதில்கள் சொல்ல வேண்டுமாம்..!

விரும்பும் மூன்று விஷயங்கள்
  1. நன்மை செய்தல்
  2. தீமையை தடுத்தல்
  3. இவ்விரண்டு செயல்களையும் செய்வோரை ஆதரித்தல்
விரும்பாத மூன்று விஷயங்கள்
  1. அரசே அதிகாரபூர்வமாய் தீமை செய்தல்
  2. எளியோருக்கு நீதிமன்றத்தில் நீதிகிடைக்க தாமதமாதல் அல்லது கிடைக்காமலே போதல்
  3. கல்வியும் மருத்துவமும் காசு கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற நிலை
பயப்படும் மூன்று விஷயங்கள்
  1. தீயோர்களும் முக்கிய அதிகாரத்தில் வீற்றிருப்பது
  2. பொய்யர்களிடமும் வெகுஜன ஊடகங்கள் சிக்கிக்கிடப்பது
  3. பொதுமக்களிடம் தீமைக்கு துணைபோவது குறித்த குற்றவுணர்ச்சி குறைந்து வருவது
புரியாத மூன்று விஷயங்கள்
  1. ஏகப்பட்ட ஆயுதங்கள் தயாரித்து, விற்று, உலக அழிவுக்கும், உலக அமைதிக்கும் ஊறுவிளைவித்துவரும் அமெரிக்க அரசை... "பயங்கரவாதத்துக்கு எதிரான நாடாக" உலகமே அங்கீகரிப்பது
  2. இத்தனை குண்டுவெடிப்புகள் ஆதாரபூர்வமாக சிக்கிய பின்னருங்கூட ஹிந்துத்துவா-சங்பரிவார RSS பயங்கரவாத இயக்கங்கள் இன்னும் நம் நாட்டில் தடை செய்யப்படாமல் இருப்பது
  3. புவி வெப்பமயமாதலை தடுக்க மரம் வளர்ப்பிற்கு (சாதகமான சூழல் தங்கள் நாடுகளில் இருந்தும் அதற்கு) முக்கியத்துவம் அளிக்காத உலக நாட்டு அரசுகள்
மேஜைமீதுள்ள மூன்று பொருட்கள்
  1. மானிட்டர்
  2. மவுஸ்
  3. கீ-போர்ட் ( "CPU எங்கே சகோ..? " "ஹலோ யாருங்க அது...? அதை மேஜைக்கடியிலே வச்சிருக்கேன்..!)
சிரிக்கவைக்கும் மூன்று விஷயங்கள்
  1. ஒவ்வொரு முறையும் 'நல்லாட்சி நம்பிக்கை'யுடன் தேர்தலில் பொதுமக்கள் ஓட்டளிப்பது (>80%..!)
  2. கறுப்புப்பணத்தை காப்பாற்ற ஏகப்பட்ட சட்டங்களை வைத்துக்கொண்டு அதை "கறுப்புப்பணத்தை ஒழிக்கப்போகிறேன்" என்று ஆளாளுக்கு பந்தா காட்டுவது
  3. முதன்முதலாக குண்டுவெடிப்பு செய்தி கேள்விப்பட்டுக்கொண்டு இருக்கும்போதே...  அதுகேட்டு ஆழ்ந்த துயரத்தில் இருந்து கொண்டு இருக்கும்போதே... "இதற்கு இன்னார் / இந்த அமைப்பு 'பொருப்பேற்றுக்(?)கொண்டுள்ளதாக'... ஈ-மெயில் வந்ததாக..." தொடர்ந்து வாசிக்கப்படும் செய்தி... உடன் சோகத்தை மறந்து சிரிக்க வைக்கும் இது.... வேதனை
தற்போது செய்துகொண்டிருக்கும் மூன்று காரியங்கள்
  1. சுவாசிக்கிறேன்
  2. சாப்பிட்டதை ஜீரணிக்கிறேன்
  3. இப்படியாக இதை எழுதிக்கொண்டும் இருக்கிறேன்...
வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியங்கள் (இறைநாடினால்)
  1. பள்ளிக்கூட நாட்களில் 'டுக்கா'விட்ட அந்த இரண்டு நண்பர்களை (சரவணன் & சம்சுதீன்) எப்படியாவது கண்டுபிடித்து 'பழம்'விட்டு சேர்ந்து விட வேண்டும்
  2. ஓரளவு பணம் சேர்ந்துவிட்டால் ஒரு சிறு தொழிலை சொந்த ஊரில் ஏற்படுத்திக்கொண்டு ஊரோடு செட்டில் ஆகிவிட வேண்டும்
  3. அப்போது... ஊரில் உள்ள பள்ளிவாசல் நிர்வாக கமிட்டியில் இடம்பெற்று சிறப்பாக... "நிர்வாகி என்றால் அதற்கு ஓர் உதாரணமாக" பணியாற்ற வேண்டும்
செய்து முடிக்கக்கூடிய மூன்று விஷயங்கள்

          மேலே... "தற்போது செய்துகொண்டிருக்கும் மூன்று காரியங்கள்" என்று மூன்றை சொன்னேன் அல்லவா...? அதனையேகூட "செய்து முடிக்கக்கூடிய காரியங்கள்" என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாத நிச்சயமற்ற இவ்வாழ்க்கையில், வேறு என்னத்த சொல்ல..?

கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்
  1. "ஸாரி சார்... சிசேரியன் ஆபரேஷன் பண்றதைத்தவிர வேற வழியில்லை" என்று ஒரு மகப்பேறு மருத்துவரிடமிருந்து...
  2. "என்னை முதல்ல 'கவனிங்க...' அப்புறம் உங்க வேலை முடிஞ்சிட்டா மாதிரித்தான்" என்று ஒரு அரசு அலுவலரிடமிருந்து...
  3. "இன்னார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்" எனும் செய்தியை செய்திவாசிப்பவரிடமிருந்து...
கற்றுக்கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்
  1. 'சமூக அவலங்களைக்கண்டு கோபப்படாமல் இருப்பது எப்படி' என்று...
  2. 'சீரியஸான பதிவு எழுதி அதற்கும் ஹிட்ஸ் வாங்குவது எப்படி' என்று...
  3. 'ஒருவர் குறையை அவர் நன்மைக்காக வேண்டி அவரிடமே அவருக்கு கோபம் ஏற்பட விடாமல் நயமாக தெரிவிப்பது எப்படி' என்று...
பிடித்த மூன்று உணவு வகைகள்
  1. பாலும் பழமும் சீனியும் போட்டு பிசையப்பட்ட சோறு + கிள்ளு படையான்
  2. சவூதி "அல்-பைக்"-ன்  சிக்கன் ப்ரோஸ்ட்டட்
  3. 'டோப்பிடஹான்'
அடிக்கடி முணு முணுக்கும் மூன்று பாடல்கள்

            அடடே...!  இப்படி ஒரு பழக்கமே எங்கிட்டே இல்லையே...!

பிடித்த மூன்று படங்கள்
  1. உமர் முக்தார்
  2. ஜுராசிக் பார்க் 
  3. அவதார்
'இது இல்லாம வாழமுடியாது' என்ற மூன்று விஷயங்கள்
  1. ஆக்சிஜன் 
  2. கார்பன்-டை-ஆக்சைட்
  3. தண்ணீர்
இந்த தொடர்பதிவை தொடர நான் அழைக்கப்போகும் மூன்று பதிவர்கள்

ஹி... ஹி... ஹி... அதுதாங்க இந்த பதிவோட டைட்டிலே..!
  1. சகோ.நிரூபன்   
  2. சகோ.சித்ரா     
  3. சகோ.ஆஷிக் அஹமத்
ஆஹா...!! மூன்று பேரும் எங்கிட்டே வசம்ம்மா  மாட்டிக்கிட்டீங்களா..!!!

55 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...