அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Tuesday, June 26, 2012

57 'இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..? (China Tissue Factory - Photo Gallery)

பாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம், வீடு, டாக்சி, பஸ், ரெஸ்டாரன்ட், மஸ்ஜித்... என எங்கே போனாலும், அங்கே ஒரு உடைத்த டிஷ்யூ பாக்ஸ் வைத்து இருக்கிறார்கள். பொதுச்சேவை..! நாம் அதில் இருந்து டிஷ்யூக்களை வேண்டியமட்டும் உருவிக்கொள்ளலாம்..!

பொதுவாகவே... வியர்வை துடைக்க, முகம்-கை கழுவி (மஸ்ஜிதுகளில் ஒழு செய்து) விட்டு துடைக்க அப்புறம் முக்கியமாக சளி பிடித்து தும்மல் போட்டுக்கொண்டு இருக்கும்போது சுகாதாரமாகவும், சுத்தமாகவும், அசூசை இல்லாமலும்... 'துடைத்டோமா.. வீசிநோமா.. சென்றோமா..' என்று மிகவும் 'டீசண்டான மேட்டராக' மக்களுக்கு உபயோகப்படுவது... கைக்குட்டையை விட எல்லா விதத்திலும் டிஷ்யூ பேப்பர்தான்.

 .
ஏற்கனவே, 'பேப்பர் தயாரிக்க மரங்கள் வெட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றனவே' என்ற உலக மக்களின் கவலையில் நாம் ஐக்கியமாகி இருக்க... "கைக்குட்டை" என்ற ஒன்றை இனி மியூசியத்தில்தான் பார்க்க வேண்டிய நிலையை வேண்டுமென்றே உண்டாக்கிவிட்டு, ஏன் இப்படி ஒரேயடியாக மக்கள் தங்கள் தவறான புரிதலால் டிஷ்யூ பேப்பர் பக்கம் சாய்ந்து விட்டார்கள்..?

Saturday, June 16, 2012

35 அமீர்கான் திருந்துவாரா..?

'Bollywood' என்றழைக்கப்படும் ஹிந்தி சினிமா உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமீர்கான் என்பவர், 'சத்யமேவ ஜெயதே' எனும் பெயரில் 'ரியாலிட்டி ஷோ' என்ற வகைப்படும்... சமூக விழிப்புணர்வை தூண்டும் ஒரு நிகழ்ச்சியை  ஸ்டார் தொலைக்காட்சியில் நடத்தி வருவது... பொதுவாக தற்போது பல தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நிகழ்ச்சி... ஏதோ நல்ல நிகழ்ச்சிதான்..! ஆனால்.... அதை நடத்துபவர்..?!?!?

'நிகழ்ச்சி நடத்தும் ஹிந்தி சினிமா நடிகர் அமீர்கான்'

Friday, June 8, 2012

33 நைட் ஷிப்டா..? அஸிடிட்டியா..? தீர்வு இதோ..!

சென்ற இரு பதிவிற்கு முந்தைய பதிவில், பகல் நேரப்பணியில் கடும் கோடையில் உண்டான பிரச்சினையும் அதற்கு கண்ட தீர்வையும் சொல்லி இருந்தேன் அல்லவா..? இப்போது... இரவுப்பணியில் எனக்கு ஏற்பட்ட பிரச்சினையையும் அதற்கு கண்ட தீர்வையும் எழுதப்போகிறேன்..! யாருக்கேனும் எனது அனுபவம் பயன் தந்தால் மிக்க மகிழ்ச்சி..! வழக்கம்போல சகோஸ்... நீங்களும் பின்னூட்டத்தில் மேலும் சில ஐடியாக்களை தாருங்கள்..! :-))

Tuesday, June 5, 2012

49 That is why... என் விக்கி சகோதரா..!

'விக்கியுலகம்' பதிவர் சகோ.விக்கி... நல்லவர், வல்லவர், நாலும் நன்றாக அறிஞ்சவர்..! ஆனால், அஞ்சாவதா ஒரு விஷயத்தில் தவறான புரிதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்..! :-)) சென்றமாதம் ஒரு குழு தப்பு தப்பா தன் வயலில் நாற்று நட்டதை நோட்டம் இட்டபோது... 'அது சரி' என்று நம்பி //இப்படி// சொல்லி இருந்தார்..! //அவர் சொன்னதை// எடுத்துப்போட்டு... நான், 'அதை சரியா' என்று அவரை அங்கே கேள்வி கேட்டிருந்தேன்..! 
Mohamed Ashik ///ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்பதை அனைத்து மதமும் பின்பற்றினால் இந்திய ஜனத்தொகையாவது குறயும்...இதயாவது பின்பற்றுங்கப்பா../// ===?!?!?! ஸலாம் சகோ.விக்கி, தங்களுக்கு கணிதம் நன்றாக வரும் என்று தெரியும். ஜனத்தொகை குறைதல் = இது எப்படி சாத்தியம் என்று உங்களால் சொல்ல இயலுமா..? சேலஞ்..!

Mohamed Ashik விக்கி சகோ, நீங்க சொன்னதிலிருந்து நான் என்ன புரிந்து கொண்டேன் என்றால், ஒருத்தனுக்கு ரெண்டு மூணு என்று மனைவிகள் இருந்தால் இந்தியாவில் ஜனத்தொகை பெருகும் என்று சொல்ல வருகிறீர்கள் என்றும்.... அதுவே, ஒருத்தனுக்கு ஒருத்தி என்றால் ஜனத்தொகை குறையும் என்றும் சொல்ல வருகிறீர்கள் என்றும், புரிந்து கொண்டேன். சரிதானே சகோ..?


அதுக்கு கேள்வி கேட்டிருந்த அந்த இடத்தை விட்டுவிட்டு தன் வலைப்பூவில் வந்து, 'என் சகோதரா...Why?' என்றொரு பதிவு போட்டு இருந்தார்..! அதில்...
Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...