அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, February 10, 2011

71 மூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்

முக்கிய அறிவிப்பு :- (21-12-2011)
இந்த பதிவுத்தொடர் முழுவதையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவர்கள் வெளியிட்டுள்ளார். நன்றி சகோ. அதனை தரவிறக்க விரும்புவோர் இங்கே >>>"கிளிக்"<<< சுட்டுங்கள் சகோ..!
========================================================================

'அரவாணி' என இதிகாச புராணம் சார்ந்த பெயரிலும், 'திருநங்கை' என திரித்தும் 'பொன்னைக்கா' அல்லது 'அலி' அல்லது 'ஒம்போது' என்று கண்ணியமற்ற, பொருளற்ற வார்த்தைகளாலும், ‘மூன்றாம் பாலினத்தவர்’ என்று அறிவியல் அறியாமல் தவறாகவும் அழைக்கப்படும் "இவர்கள்" பற்றி நம்மில் பலருக்கு சரியான முழுவிபரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். உண்மையை சொன்னால், நமக்கு அறிந்துகொள்ள ஆர்வம் இல்லை. ஏன் அப்படி?  

'அவர்களை'-க் குறித்து நேர்மையான நோக்குடன் அணுகாமல், அவர்களை பிச்சைகாரர்களாகவும் பணம் பறிப்பவர்களாகவும் மற்றும் விபச்சாரம் செய்பவர்களாகவுமே ஊடகங்கள் மூலமும், சமுதாயத்தில் சிலசமயம் நேரடியாகவே அவர்களில் பெரும்பாலோரின் நடவடிக்கைகளை நாம் கண்ணுற்றோ செவியுற்றோ அறிவதினாலும்தான் இந்த ஆர்வமற்ற நிலை. மேலும்... 'மிகப்பெரும்பான்மையான நாம் அவர்களாய் இல்லை...!


ஓர் ஆண்,
தன் 23 ம் ஜோடி பாலின குரோமோசொமில் குறைபாடு கொண்டால்... அவன் ஒரு "ஆண் மாற்றுத்திறனாளி". அதேபோல...
ஒரு பெண்,
தன் 23 ம் ஜோடி பாலின குரோமோசொமில் குறைபாடு கொண்டால்... அவள் ஒரு "பெண் மாற்றுத்திறனாளி".

இவர்களுக்கு மாற்றுத்திரனாளி கோட்டாவில் தனி இட ஒதுக்கீடு தந்து அரசும் நீதி மன்றமும் ஊக்குவிக்க வேண்டும்.

அதை விடுத்து...
இவர்களை முட்டாள்த்தனமாக "மூன்றாம் பாலினம்" என வகைப்படுத்தி அரசும் நீதி மன்றமும் ஊடகமும் சமூக சிந்தனையாளர்களும் அறிவியல் புரிதல் இன்றி கேவலமாக சொல்வதும் கணக்கெடுப்பு எடுப்பதும் அக்கிரமம். அராஜகம். அநீதி. மனிதத்தன்மையற்ற மாபாதக சொல் & செயல் அது.
 

 நரம்பியல் மண்டல குரோமோசோமில் குறைபாடு உள்ள மனிதனை "பைத்தியம்" வருது... "லூசு" போகுது... "கிறுக்கு" சாப்டுது... என்று அஃறிணையில் சொல்லும் அசிங்கத்துக்கு சமானமானது "மூன்றாம் பாலினம்" எனும் சொல்வழக்கு..!

உலகில் இதுவரை ஒரு 'மூன்றாம் பாலின குழந்தை' (?!) பிறந்ததாக எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு காட்டிலும் எந்த ஒரு மருத்துவமனையிலும் சரித்திரமோ பூகோளமோ சயின்சோ இல்லவே இல்லவே இல்லை..!

நீங்களே யோசியுங்களேன்... இவ்வுலகில் இதுவரை எந்த ஒரு குழந்தை பிறந்தபோதும் “ஆண் குழந்தைங்க” அல்லது “பெண் குழந்தைங்க” என்றுதான் பெற்றோருக்கும் உறவினருக்கும் தகவல் தரப்படுமே அன்றி, ஒருபோதும் “உங்களுக்கு 'மூன்றாம் பாலின' குழந்தை பிறந்திருக்குதுங்க(!?)” "அரவாணி பிரத்திருக்கு" "அலி பிறந்திருக்கு" "திருநங்கை பிறந்திருக்கு" என்ற தகவல் தரப்பட்டதாக ஏதும் உங்களிடமோ உலக மீடியாவிலோ தகவலுண்டா? அப்புறம் எப்படி.. எங்கிருந்து.. எப்போது.. இவர்கள் திடீரென்று இவர்கள் முளைத்தார்கள்?  

முழுமையாக 'ஆண்' எண்றோ அல்லது 'பெண்' என்றோ இல்லாமல் இருவரது புற பண்புகளையும் உள்ளடக்கிய இடைநிலை பாலினம் போல (Intersex)  தோற்றம் அளிக்கும் ‘இவர்கள்’... "மூன்றாம் பாலினத்தவராக" (Third Sex) தற்போது தமிழ்நாடு உட்பட பல நாடுகளிலும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறார்கள். இது சரியா? இவர்கள் ஆனா? அல்லது பெண்ணா?  அல்லது இரண்டுமா?  அல்லது இரண்டும் இல்லையா?  

அது பற்றிய தெளிவான  தீர்க்கமான புரிதலை நோக்கி நேர்மையான வழியில்தான்  இந்த  பதிவுத்தொடர் பயணம்..! 

வாருங்கள் சகோ... நீங்களும் சரியான புரிதலின் பால் இணையுங்கள் சகோ.

=> 'இவர்கள்' பற்றி அறிவியல் என்ன கூறுகிறது?


மனித உடலில் ஒவ்வொரு செல்லிலும் 46 குரோமோசோம்கள் உண்டு என்பது நாம் பள்ளிப் பருவத்திலேயே அறிந்ததுதான். அதைப்பற்றி இப்போது கொஞ்சம் நினைவு கூர்ந்தால்தான் ‘அவர்களை’ப்பற்றி பூரணமாய் புரிந்து கொள்ள முடியும்.  

மனிதனின் பல்வேறு உறுப்புகளுக்கும் அதன் செயல்பாடுகளுக்கும் அதன் குணாதிசயங்களுக்கும் காரணமான வெவ்வேறு மரபணுக்களை (Genes) கற்றையாக ஒருங்கே கொண்டிருப்பது தான் 'குரோமோசோம்'. மனித உடம்பில் உள்ள ஒவ்வொரு கோடானகோடி செல்லிலும் 46 குரோமோசோம்கள் உள்ளன. இந்த 46 குரோமோசோம்களும் இரண்டிரண்டாக மொத்தம் 23 ஜோடிகளாக காணப்படும். இவற்றில் 22 ஜோடிகள், பால் சம்பந்தப்பாடாத உடலின் மற்றஅனைத்துப்பண்புகளையும் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துபவை. கடைசி 23-வது ஜோடி குரோமோசோம்கள் மட்டும் பாலினம் (Sex) சம்பந்தப்பட்டவை. அந்த  ஜோடி பார்க்க ஒரே மாதிரி என்று பெண்களிலும் (அதனால் XX-என்று குறிப்பிடுகின்றனர் ), பார்க்க வேறுபட்டு (XY) என்று ஆண்களிலும் காணப்படும். இனப்பெருக்கத்தின் போது ஆண்களில் அது X மற்றும் Y ஆகவும், பெண்களில் 2 தனித்தனி Xகளாகவும், அளவில் மட்டுமல்ல பண்புகளிலும் சரிபாதியாக பிரிந்து கரு உருவாக உதவும். 

தாம்பத்திய  உறவில்  ஈடுபடும்  பெற்றோருக்கு  உருவாகும் கருவில், ஆணின் விந்துவான அந்த ஒரு செல் உயிரியில் X ம் பெண்ணின் ஒரு செல் உயிரியான முட்டையில் உள்ள X ம் இணைந்து XX குரோமோசோம் உருவானால் அந்த கருமுட்டை  பெண்ணாக வளரும். ஆணின் Y ம் பெண்ணின் X ம் இணைந்து XY குரோமோசாமாக உருவானால் கருமுட்டை ஆணாக வளரும். அதாவது உருவாகும் கருவில் Y குரோமாசோம் இருந்தால் அது ஆணாகவும் Y இல்லையென்றால் அது பெண்ணாகவும் வளர்ச்சியடைகிறது எனலாம். (இந்த  கடைசி  வரி  ரொம்ப  முக்கியம்)   

மிகச்சில வேளைகளில் (ஆயிரத்தில் இரண்டு) இந்த 23-ம் ஜோடி இவ்விதம் முறைப்படி இரண்டாக பிரிந்து இணைவதில்லை. உதாரணமாக, உருவாகும் கருவில் X அல்லது Y என்ற ஒற்றை குரோமோசோம் மட்டுமே காணப்படலாம். அதனால், இவர்கள் 45Y ஆகவோ (ஆண்பண்புகள் குறைவான ஆண்கள்-சாத்தியமில்லை அல்லது இந்த கரு நிலைக்காது) அல்லது 45X (பெண்பண்புகள் குறைந்த பெண்கள்-மிக அரிது) ஆகவோ இருப்பர்.  

 
சிலநேரம், இதுபோன்று உருவாகும் கருவில் இரண்டிற்கும் மேற்பட்ட குரோமோசோம்களும் காணப்படலாம். இவர்கள் 'பெண்பண்புகள் அதிகம் கொண்ட பெண்கள்' (47XXX), அல்லது 'ஆண்பண்புகள் அதிகம் கொண்ட ஆண்கள்' (47XYY) அல்லது 'பெண்பண்புகள் கொண்ட ஆண்கள்' (47XXY) என வித்தியாசமானவர்களாக இருப்பர்.  இவ்விதம் குரோமோசோமின் எண்ணிக்கை கூடுதல் குறைவைப் பொறுத்தும் இவற்றில் Y குரோமோசோம் இருப்பதையும் இல்லாததையும் பொறுத்தும் அந்த கருவானது வளர்ச்சியடையும் போது அதில் உட்புறமான மற்றும் வெளிப்புறமான பாலின இன உறுப்புக்கள் உருவாகுவது தீர்மாணிக்கப்படுகிறது. 
 ஆக இங்கே பிரச்சினைக்குரிய Genotype எது என்றால்... " 47-XXY " --தான்..! இவர்கள்தான் இந்த பதிவிற்கு உரியவர்கள். ஆண்களுக்கு XY என்று இருக்க வேண்டியதற்கு பதிலாய்... 23-வது "ஜோடி" குரோமோசோம்கள் " XXY " என்று இருந்தால் அது ஒரு "பிறவிக் குறைபாடு"  (genetic birth defect) என்று இதை 'Klinefelter syndrome' என்றும் கண்டுபிடித்து சொன்னவரின் (1942-ல்...Dr. Harry Klinefelter) பெயரை வைத்து அழைக்கின்றனர் அறிவியலாளர்கள்.  

ஆக, இந்த ‘மூன்றாம் பாலினத்தவர்’ வேறு யாரும் அல்ல. ஆண்கள்தான். ஆண்கள்தான். குறையுள்ள ஆண்கள்தான். அவர்களுக்கு அறிவியல் கொடுத்திருக்கும் பெயர்: 'XXY MALE'..! இவர்கள்தான் "இப்பதிவின் நாயகர்கள்".  அறிவியலுக்கு எதிராக இவர்களை "மூன்றாம் பாலினம்" ("THIRDSEX") என்பது மூடத்தனம் அல்லவா?
  
அப்புறம் ஏன் அவர்கள் பெண்கள் போல நடந்து கொள்ள வேண்டும்..?

ஒருவரை ஆண் என்றோ அல்லது பெண் என்றோ வெளித்தோற்றத்தை வைத்து, எளிதாக அடையாளம் கண்டு விடுகிறோம். ஆனால், அது சாத்தியமில்லாத சூழ்நிலையில், ஆணுக்கும் பெண்ணிற்கும் உள்ள பல்வேறு பால் வேறுபாடுகள் பற்றியும் நாம் தெரிந்திருக்க வேண்டும். 

ஆணுக்கும் பெண்ணிற்கும் உள்ள பால் வேறுபாடுகள் அடிப்படையில் பால் என்பதை கீழ்கண்டவாறு 4 முக்கிய வகையாக பிரிக்கலாம்:  


1. மரபணு பால் (Genetic Sex) : 

இதன் படி ஒருவரின் உடலில் 23-ம் ஜோடி குரோமோசோமில் Y காணப்பட்டால் அவரை ஆண்(XY) என்றும், அது காணப்படவில்லையெனில் பெண்(XX) எனவும் கூறுகிறோம். 

இதன்படி இந்த பதிவின் நாயகர்கள் "XXY-ஆண்கள்" குரோமோசோமில்-Y இருப்பதால் அவர்கள் ஆண்கள்..!

2. இன உறுப்புகள் பால் (Gonadal Sex) : 

உருவாகும் கருவில் Y குரோமோசோம் இருப்பதையும் இல்லாததையும் பொறுத்து உட்புற மற்றும் வெளிப்புறமான பாலின உறுப்புக்கள் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ வளர ஆரம்பிக்கும். எனவே இந்த இன உறுப்புகள் பால் உருவாக அடிப்படையானது, மரபணு பால் எனலாம். ஆக இதன்படி  Y இருப்பதால் ஆண்களுக்கான உட்புற பாலின உறுப்புக்களும், வெளிப்புற இனப்பெருக்க உறுப்புகளும் மட்டுமே 'XXY-MALE' களுக்கு வளரும்.  

இதன்படியும் இந்த பதிவின் நாயகர்கள் "XXY-ஆண்கள்"-ன் குரோமோசோமில் Y இருப்பதால் ஆண்பாலின உறுப்புகள் கொண்ட ஆண்கள் தான்..! 

3. புறத்தோற்ற பால் (Phenotype Sex) :

இதில் பாலினஉறுப்புக்கள் வளர்வது மாத்திரமல்ல, அதற்கேற்ப அவைகளில் நாளமில்லாச்சுரப்பிகள் சுரக்கும் ஹார்மோன்கள் (ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன்) அதனால் ஏற்படும் உடல்வாகு / பிற உடல் மாற்றங்கள் (Secondary Sexual Characters) ஆகியவை அடங்கும். இன உறுப்புகளில் ஆண்ட்ரோஜென் சுரந்தால் ஆணாகவும் (மீசை/தாடி/உடலில் நிறைய முடி/கடின தோல்/கடினகுரல்) ஈஸ்ட்ரோஜன் சுரந்தால் (மாதவிடாய் சுழற்சி/மார்பகம்/மிருதுவான தோல்/மெல்லிய குரல்...) பெண்ணாகவும் வளர்ச்சியடைகின்றனர். 

அதாவது, Y இருந்தால் ஆண்ட்ரோஜென் மிகைத்து சுரக்கும். Y இல்லை என்றால் ஈஸ்ட்ரோஜென் மிகைத்து சுரக்கும். இங்கே XXY-ல் Y இருப்பதால் ஆண்ட்ரோஜென் மட்டும்தான் மிகைக்கும். ஆனால், இரண்டு XX -களை சமாளிக்க முடியாமல் Y கொஞ்சம் கம்மியாக ஆண்ட்ரோஜெனை சுரக்கிறது அல்லது சுரப்பதில்லை. பொதுவாகவே XY இருக்கும்போது அங்கே X சும்மா... 'உப்புக்கு சப்பாணி'தான். XXY எனும்போது அங்கே X கொஞ்சமாய் தன் வேலையை காட்டுகிறது. அதனால்தான் இந்த XXY ஆண்களிடம், பெண்குரலும், நளினமும், சிறிய மார்பகமும், மீசை தாடி முளைக்காததும் என..!

சுத்தமாய் androgen சுரக்கவில்லை என்றால், XXY ஆண்களிடம் erection /ejection /sperm எல்லாம்  கிடையாது. இங்கேதான் மருத்துவம் மூக்கை நுழைக்கமுடியும். அதாவது, androgen  தானாக சுரக்கவில்லையல்லவா?  அதனை ஊசி மூலம்  மேலதிகமாக உட்செலுத்துவதன் மூலம் 'XXY ஆண்களுக்கு' அவர்களின் குறையை போக்க முடியும். அனுபவத்தில் நமக்கு நன்றாக தெரியும். ஹார்மோன் சுரப்பதுக்கும் மனக்கட்டுப்பாட்டிற்கும் உள்ள தொடர்பு. மனது வைத்தால் மார்க்கமுண்டு. 

இதன்படி இந்த பதிவின் நாயகர்கள் மனது வைத்து... பூரண நம்பிக்கையுடன் தக்க மருத்துவம் பார்த்து, ஆண்ட்ரோஜென் சுரந்துவிட்டால் முழு ஆண்கள்..! ஆனால், பெண்களாக மாற எந்த மருத்துவத்திலும் வழியே இல்லை.

4. உளவியல் பால் (Psychological Sex) :

ஆண் தன்னை 'ஆண்' என்றும், பெண் தன்னை 'பெண்' என்றும் நம்புவது.

இவ்விதம் ஒருவர் நான்கு நிலைகளிலும் ஒரேவகையினராக பொருந்தினால் மட்டுமே அவர் ஒரு சராசரி ஆண் அல்லது சராசரி பெண் ஆக தோற்றம் பெறுவார்.  ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இல்லாமல், இடை நிலை தோற்றத்துடன் இருப்பது கருஉருவாகும் போது ஏற்படும் mutations மூலம் அவற்றிலுள்ள மரபணுக்கள் மற்றும் அவற்றைத் தாங்கியுள்ள குரோமோசோம்களின் அமைப்பையும் அளவையும் பொறுத்தது. 

இதற்கு  முந்தைய மூன்று தேர்விலும் ஆண் என்று தேறிய நம் 'பதிவின் நாயகர்கள்' இங்கே (நம்பிக்கைதான் நான்காவது தேர்வு) தங்களை ஆண் என்று நம்புவதில் குழம்புகின்றனர் அல்லது குழப்பப்படுகின்றனர். இதன்படி இந்த பதிவின் நாயகர்கள் "XXY-ஆண்கள்" தங்களை ஆண் என்றுதான் நம்ப முடியும்..! நம்ப வேண்டும்..! இயற்கைக்கு மாற்றமான ஒரு முடிவை அவர்கள் எடுக்கும்போதுதான் எல்லா பிரச்சினைகளும் வருகின்றன.  அதற்கு மூல காரணங்கள்... இவர்கள் மட்டுமல்ல நம் சமுதாயமும்தான்.

மேற்கண்ட பண்புகளுடன் ஒருவரது வளர்ப்புமுறை, சமுதாய சூழ்நிலையை பொறுத்து மனதளவிலும் முழுமையான ஆணாக முதிர்ச்சி அடைய விடுவதில்லை இந்த சமுதாயம்.  கேலி கிண்டல் பேசி புறக்கணிக்கும் போதுதான் "நாம் ஏன் பெண்ணாகவே மாறிவிடக்கூடாது?" என்று விபரீதமான தவறான பொருந்தாத முடிவு எடுக்கும்போதுதான், இந்த "XXY-ஆண்கள்" காணாமல் போய் ‘மூன்றாம் பாலினத்தவர்’ என முதல் பாரா கூத்துக்கள் எல்லாமே அரங்கேறுகின்றன. ஆனால், அவை அனைத்தும் உண்மைக்கும் இயற்கைக்கும் அறிவியலுக்கும் முற்றிலும் எதிரானவை ஆகும்.

இந்த "XXY-ஆண்கள்", சேலை/ரவிக்கை/பாவாடை அணிந்துகொண்டு சடைபின்னி பூ வச்சு பொட்டு வச்சு லிப்ஸ் ஸ்டிக் போட்டு நளினமாய் நடந்து வந்து குழைந்து நெளிந்து பெண்குரலில் அச்சு அசல் பெண்போலவே பேசுகிறார்களே? --- நல்ல கேள்வி..!
 
சரியான பதில் :- 'அவ்வை ஷன்முகி'-யின்... "ஹீரோயின் கமல்"... என்றால் எப்படி இருக்கும்..?!? நம் பதிவின் நாயகர்கள் 'சிலர்' நினைப்பது போல படத்திற்கு பொருந்தினாலும், அப்படி "டைட்டில் கார்ட்" போட்டால்...?!? இயற்கைக்கு விரோதமாகத்தானே இருக்கும்..? ஆனால், கருத்து காட்டுத்தீயாய் பிரபலமாகும். என்றாலும் அது போலி அல்லவா? 'வேஷம்' போட்டு 'உணர்வுப்பூர்வமாய்' நடிப்பதெல்லாம் ஒருபோதும் பாலின மாற்றம் என்றாகாது.

 

=>தங்களைப்பற்றி ‘அவர்கள்’ என்ன நினைக்கிறார்கள்?
=>'இவர்கள்' பற்றி மக்கள் கருத்து என்ன? 
=>'அவர்களுக்கு' அரசு என்ன சொல்கிறது? 
=>இதில் இஸ்லாம் தரும் தீர்வு என்ன? 
=>'இவர்களுக்கு' என்னதான் முடிவு?

----இறைநாடினால் மேற்படி தலைப்புகளில் இந்த "XXY-ஆண்கள்" பற்றி மேலும் சில பதிவுகளில் தொடர்ந்து ஆய்ந்தறிவோம்.

டிஸ்கி: 

இது, 'மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்' தொடரின் முதல்பதிவு..! இந்த பதிலிருந்து ஆரம்பிப்பவர்கள், தொடரின் அடுத்த 5 பதிவுகளான...

ஆகிய பதிவுகளையும் தொடர்ந்து படித்து விடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சகோ..! 

அப்போதுதான்.... அரவாணி/திருநங்கை/அலி பற்றியான முழுமையான=சரியான புரிதலை பெற முடியும் சகோ..!

71 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...