அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Sunday, November 27, 2011

20 நம்மை இளிச்சவாயனாக்கும் E codes..!

ஆங்கிலேய கவர்னர் ஜென்ரல் லார்ட் டல்ஹவுசி பற்றியும், 1857 -ல் நடந்த முதலா'இரண்டாம்' இந்திய சுதந்திரப்போராட்டம் குறித்தும் பள்ளியில் வரலாற்று பாடத்தில் தவறாமல் படித்து இருப்பீர்களே சகோ..? அப்போது, ஆங்கிலேயர்களிடம் வேலை பார்த்த இந்திய சிப்பாய்களுக்கு புதிதாக வழங்கப்பட்ட என்ஃபீல்ட் துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வழங்கப்பட்டன அல்லவா..? ஈரப்பதத்துடன் உப்புக்காற்று வீசும் கடல் பயணத்தை, மாதக்கணக்கில் கப்பலில் கடந்து வரும் தோட்டாக்கள், வீணாகாமல் அதே புதுப்பொலிவுடன் வந்து சேர வேண்டும் என்பதற்காக, (தற்போது கடையில் கதவு 'கீல்', தாழ்ப்பாள், பூட்டு போன்ற இரும்பு இயங்கு சாதனங்கள் வாங்கும்போது அவை கிரீஸ் எண்ணெய் பிசுக்குடன் இருப்பதை கண்டிருப்பீர்கள். அது அவற்றின் பாதுகாப்பிற்காக என்பது உங்களுக்கு தெரியும்) அந்த புதிய தோட்டாக்கள் மீது பன்றிக்கொழுப்பை தடவி, கொண்டு வந்தார்கள்.

Sunday, November 20, 2011

23 கைவாளேந்திய காரிகை..!

ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) - இவரைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் சகோ. நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்து நாட்டைச்சார்ந்த தாதி. அதாவது 'நர்ஸ்'..! பின்னாளில் தாதிகளுக்கான பயிற்சிப்பள்ளியையும் இவரே முதலில் துவங்கினார். இரவென்றும் பாராமல் கையில் ஒரு அரிக்கேன் விளக்கை ஏந்திக்கொண்டு ஓடியோடி ஓய்வின்றி போரில் காயம்பட்ட வீரர்களுக்கு மருந்திட்ட காரணத்தினால் "கைவிளக்கேந்திய காரிகை" (The Lady with the Lamp) என்று அன்போடு மக்களால் அழைக்கப்பட்டார்.

மன்னிக்கவும் சகோ..! இப்பதிவு 'இவரைப்பற்றி அல்ல' என்பதுதான் வருத்தமான செய்தி. பின் யாரைப்பற்றி..? 

Monday, November 14, 2011

34 புன்னகையே வாழ்க்கை

"புன்னகையே வாழ்க்கை" வலைப்பூ அதிபர் சகோ.முஹம்மத் ஃபைக் நேற்று எழுதிய வெளிநாட்டு வாழ்க்கை என்ற பதிவில்... எழுதப்பட்டு உள்ளவைக்கு வரிக்கு வரி பதில் எழுத விழைந்து அதனால் விளைந்ததுதான் இந்த பதிவு..! இதை 'எதிர்ப்பதிவு' என்பதோ 'பக்கத்துவீட்டுப்பதிவு' என்பதோ உங்கள் விருப்பம்..! ஆனால், அதில் சொல்லப்பட்ட மற்றும் இதில் சொல்லப்படும் விஷயங்கள்தான் முக்கியம்..!

Wednesday, November 9, 2011

28 எண்:100க்கு அப்படி என்ன முக்கியத்துவம்..?

தற்போது 'ஹாட் டாபிக்', "சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் தன் "நூறாவது 100"-ஐ இத்தொடரில் அடிப்பாரா" என்பதுதான்..! கிரிக்கெட்டில் batsman நூறாவது ரன்னை அடைவதான 'century' / 'சதம்'  என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. நரம்பு புடைக்கும் இரத்த அழுத்த துடிதுடிப்பு... உடலெங்கும் வியர்த்து ஊற்றும் படபடப்பு... இப்படி எல்லாமே அது ஏன் நூறை எட்டும்போது மட்டும் வருகிறது..? டெண்டுல்கரை பலவருடங்களாக நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். அவர் 'டக் அவுட்' (ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆவது) ஆகும்போது கூட அந்த அளவுக்கு ஏமாற்றத்தை முகத்தில் காட்ட மாட்டார்; ஆனால்... 99, 98, 97...90 போன்ற "nervous nineties" ரன்களில் அவுட் ஆனாலோ... "நாக்குக்கு எட்டியது தொண்டைக்குள் இறங்கவில்லையே" என்பது போல மிகப்பெரும் ஏமாற்றத்தை தன்முகத்தில் காண்பிப்பதை அப்போதெல்லாம் கண்டிருக்கிறோம். 

கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனான சச்சினுக்கு மட்டுமா இந்த  டென்ஷன்..? எத்தனையோ சாதனைகள் புரிந்தாலும், இன்றைக்கு 56.14 ரன் பேட்டிங் சராசரி வைத்திருக்கும் சச்சினால் ஒரே ஒரு சாதனையை மட்டும் தன் வாழ்வில் என்றுமே கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாத அளவுக்கு பேட்டிங்கில் சாதனை ஒன்றை சாதித்து வைத்துவிட்டு சென்றாரே ஒருவர்..! அவருக்கும்தான் சகோ அன்று செம டென்ஷன்..! சரி... யார் அவர்..?

Monday, November 7, 2011

42 நீதிபதி கட்ஜுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஊடகத்தாருக்கு கடுங்கண்டனம்..!


(பொறுப்பற்ற மற்றும் எதிர்மறையான கருத்துகள் சொன்னதற்காக தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்கள் கட்ஜுவை சாடினர்)
***************************


(இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவிற்கு "எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா" கண்டனம்)
***************************

(ஊடகங்களுக்கு எதிராக நீதிபதி கட்ஜுவின் தரம்தாழ்த்தும் கருத்துக்களை 'ஒலிபரப்பு எடிட்டர்கள் சங்கம்' கண்டிக்கிறது)

(கட்ஜு அறிக்கைக்கு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்)
***************************
(செய்தி ஒலி/ஒளிபரப்பாளர்கள் சங்கம் கூட, ஊடக செயல்பாடுகளை பாதுகாக்கும் பொருட்டு கட்ஜு கருத்துக்கு கண்டனம்)
***************************
News bodies - Indian Newspaper Society (INS) condemn Katju’s comment
(செய்தி அமைப்பு மற்றும் தினசரி உரிமையாளர்களின் கூட்டமைப்பு ஆகியன கட்ஜுவின் கருத்துக்கு கண்டனம்)
***************************
ந்த ஊடகத்துறையினர் எல்லோரும் இப்படி ஒட்டுமொத்தமாக வாயிலும் வயிற்றிலும் 'லபோ திபோ' என்று அடித்து அலறிக்கொண்டு... எதற்கு இதுபோல காட்டமாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.மார்கண்டேய கட்ஜுவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்..? ஊடகத்தினர்  பற்றி அவர் அப்படி என்னதான் சொன்னார்..?

Tuesday, November 1, 2011

29 Traffic ராமசாமி-நீதி மன்றம்-CMDA-ஆக்ஷன் சீ(ல்)ன்..!


சென்னை தி.நகரில் உள்ள உஸ்மான் சாலையிலும், ரங்கநாதன் தெருவிலும் பல வருடங்களாக உள்ள மிகவும் பிரபலமான ஏகப்பட்ட வர்த்தக நிறுவனங்களில்... சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ், குமரன் தங்க மாளிகை, ஜெயச்சந்திரன், காதிம்ஸ்... உள்ளிட்ட 61 வர்த்தக நிறுவனங்களை நேற்று காலை தி.நகருக்கு வந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (CMDA) அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

என்ன காரணமாம்..? முறையான கட்டட வரைபட அனுமதி இல்லாமல் கட்டியது, பார்க்கிங் வசதி செய்யப்படாதது, தீயணைப்பு வாகனங்கள் சென்று வர வசதியில்லாத இடங்களில் பல அடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டியது, பல்வேறு விதிமுறை மீ்றல்கள், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக என்று செய்திகள் கூறுகின்றன.

ஏற்கனவே... இந்த நிறுவனங்களுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும், எவ்வித உரிய நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எடுக்காது கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும், இதுதொடர்பாக வழக்குகளும் பெருமளவில் தொடரப்பட்டிருந்ததாகவும், இப்போதுதான் அவை எல்லாம்  "பூட்டி சீல்"வைக்கும் அளவுக்கு செய்வல்வடிவம் எடுத்திருப்பதாகவும் செய்திகளை படிப்போர் மேலும் அறியலாம்.

சகோ..! ஒரு நிமிஷம்..! இப்போது நம்முள் எழும் சில முக்கிய வினாக்கள்.
Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...