நிரூபன் :- இலங்கையில் ஜாஃப்னாவில்... "ஒட்டுக் கேட்டல், நம்பர் நோட் பண்ணல்" இவற்றையே தன் வேலையாக கொண்டுள்ளாராம் இவர்..! "நாற்று" மற்றும் "ஒளியூற்று" வலைப்பூக்களின் அதிபர்..! மிக்க நடுநிலையுடன் எவர்க்கும் அஞ்சாமல் பல உண்மைகளை பல பதிவுகளில் அதிரடியாக வலையேற்றுவதன் மூலம் வலையுலகில் புகழ் பெற்ற ஈழத்தமிழரான இவர்தான் என்னிடம் மாட்டிய முதல் நபர்..!
சித்ரா :- எதையும் (சில சமயம் மனிதர்களைகூட ) சீரியஸ் பார்வையில் பாக்காமல், சிரியஸ் பார்வையில் பாத்து போய்கிட்டு இருக்கும் இவர் "கொஞ்சம் வெட்டி பேச்சு" வலைப்பூவிற்கு அதிபர்..! தன் வலைப்பூவிற்கு இப்படி பெயர் வைத்திருந்தாலும்... அதற்கு கொஞ்சமும் பொருத்தமே இல்லாமல் நிறைய உபயோகமான நல்ல கருத்துக்களை சொல்லி வருவது நாம் தெரிந்த ஒன்றே. பாளையங்கோட்டையில் பிறந்து அமெரிக்காவாழ் தமிழரான இவர்தான் என்னிடம் மாட்டிய இரண்டாவது நபர்..!
ஆஷிக் அஹமத் :- "பரிணாமத்தில் உள்ள ஓட்டைகளை வெளிக்கொணர்வதில் இவருக்கு டாக்டர் பட்டம் கூட கொடுக்கலாம்" (Thanks:-சகோ.bat) எனும் அளவுக்கு எழுதி வருவது நாம் அறிந்ததே..! இப்போதெல்லாம் பரிணாமம் (Evolution) என்றாலே எனக்கு இவர் நியாபகந்தான் வருகிறது..! பாண்டிச்சேரியில் Islamic research, Semiconductor Physics, IC design என்று இருக்கும் இவர் "எதிர்க்குரல்" வலைப்பூவின் அதிபர்..! என்னிடம் மாட்டிய மூன்றாவது நபர்..!
சரி... தற்போது வெவ்வேறு நாட்டில் இருக்கும் இவர்கள் மூன்று பேரும் சவூதியில் இருக்கும் என்னிடம் எதற்காக வசம்ம்மாக மாட்ட வேண்டும்...?
அதற்கு முன்.... இன்னொரு விஷயம் பார்த்துவிடுவோமே சகோ...!
இது ஒரு தொடர்பதிவாம்..! இதை எழுத என்னை அழைத்த அந்நியன் 2 வலைப்பூ அதிபர் சகோ.அய்யூப் அவர்களுக்கு நன்றி..! இதில் உள்ள விசேஷம் என்னவென்றால்... கொடுக்கப்பட்ட ஒவ்வோர் கேள்விகளுக்கும் மும்மூன்று பதில்கள் சொல்ல வேண்டுமாம்..!
இது ஒரு தொடர்பதிவாம்..! இதை எழுத என்னை அழைத்த அந்நியன் 2 வலைப்பூ அதிபர் சகோ.அய்யூப் அவர்களுக்கு நன்றி..! இதில் உள்ள விசேஷம் என்னவென்றால்... கொடுக்கப்பட்ட ஒவ்வோர் கேள்விகளுக்கும் மும்மூன்று பதில்கள் சொல்ல வேண்டுமாம்..!
விரும்பும் மூன்று விஷயங்கள்
- நன்மை செய்தல்
- தீமையை தடுத்தல்
- இவ்விரண்டு செயல்களையும் செய்வோரை ஆதரித்தல்
விரும்பாத மூன்று விஷயங்கள்
- அரசே அதிகாரபூர்வமாய் தீமை செய்தல்
- எளியோருக்கு நீதிமன்றத்தில் நீதிகிடைக்க தாமதமாதல் அல்லது கிடைக்காமலே போதல்
- கல்வியும் மருத்துவமும் காசு கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற நிலை
பயப்படும் மூன்று விஷயங்கள்
- தீயோர்களும் முக்கிய அதிகாரத்தில் வீற்றிருப்பது
- பொய்யர்களிடமும் வெகுஜன ஊடகங்கள் சிக்கிக்கிடப்பது
- பொதுமக்களிடம் தீமைக்கு துணைபோவது குறித்த குற்றவுணர்ச்சி குறைந்து வருவது
புரியாத மூன்று விஷயங்கள்
- ஏகப்பட்ட ஆயுதங்கள் தயாரித்து, விற்று, உலக அழிவுக்கும், உலக அமைதிக்கும் ஊறுவிளைவித்துவரும் அமெரிக்க அரசை... "பயங்கரவாதத்துக்கு எதிரான நாடாக" உலகமே அங்கீகரிப்பது
- இத்தனை குண்டுவெடிப்புகள் ஆதாரபூர்வமாக சிக்கிய பின்னருங்கூட ஹிந்துத்துவா-சங்பரிவார RSS பயங்கரவாத இயக்கங்கள் இன்னும் நம் நாட்டில் தடை செய்யப்படாமல் இருப்பது
- புவி வெப்பமயமாதலை தடுக்க மரம் வளர்ப்பிற்கு (சாதகமான சூழல் தங்கள் நாடுகளில் இருந்தும் அதற்கு) முக்கியத்துவம் அளிக்காத உலக நாட்டு அரசுகள்
மேஜைமீதுள்ள மூன்று பொருட்கள்
- மானிட்டர்
- மவுஸ்
- கீ-போர்ட் ( "CPU எங்கே சகோ..? " "ஹலோ யாருங்க அது...? அதை மேஜைக்கடியிலே வச்சிருக்கேன்..!)
சிரிக்கவைக்கும் மூன்று விஷயங்கள்
- ஒவ்வொரு முறையும் 'நல்லாட்சி நம்பிக்கை'யுடன் தேர்தலில் பொதுமக்கள் ஓட்டளிப்பது (>80%..!)
- கறுப்புப்பணத்தை காப்பாற்ற ஏகப்பட்ட சட்டங்களை வைத்துக்கொண்டு அதை "கறுப்புப்பணத்தை ஒழிக்கப்போகிறேன்" என்று ஆளாளுக்கு பந்தா காட்டுவது
- முதன்முதலாக குண்டுவெடிப்பு செய்தி கேள்விப்பட்டுக்கொண்டு இருக்கும்போதே... அதுகேட்டு ஆழ்ந்த துயரத்தில் இருந்து கொண்டு இருக்கும்போதே... "இதற்கு இன்னார் / இந்த அமைப்பு 'பொருப்பேற்றுக்(?)கொண்டுள்ளதாக'... ஈ-மெயில் வந்ததாக..." தொடர்ந்து வாசிக்கப்படும் செய்தி... உடன் சோகத்தை மறந்து சிரிக்க வைக்கும் இது.... வேதனை
தற்போது செய்துகொண்டிருக்கும் மூன்று காரியங்கள்
- சுவாசிக்கிறேன்
- சாப்பிட்டதை ஜீரணிக்கிறேன்
- இப்படியாக இதை எழுதிக்கொண்டும் இருக்கிறேன்...
வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியங்கள் (இறைநாடினால்)
- பள்ளிக்கூட நாட்களில் 'டுக்கா'விட்ட அந்த இரண்டு நண்பர்களை (சரவணன் & சம்சுதீன்) எப்படியாவது கண்டுபிடித்து 'பழம்'விட்டு சேர்ந்து விட வேண்டும்
- ஓரளவு பணம் சேர்ந்துவிட்டால் ஒரு சிறு தொழிலை சொந்த ஊரில் ஏற்படுத்திக்கொண்டு ஊரோடு செட்டில் ஆகிவிட வேண்டும்
- அப்போது... ஊரில் உள்ள பள்ளிவாசல் நிர்வாக கமிட்டியில் இடம்பெற்று சிறப்பாக... "நிர்வாகி என்றால் அதற்கு ஓர் உதாரணமாக" பணியாற்ற வேண்டும்
செய்து முடிக்கக்கூடிய மூன்று விஷயங்கள்
மேலே... "தற்போது செய்துகொண்டிருக்கும் மூன்று காரியங்கள்" என்று மூன்றை சொன்னேன் அல்லவா...? அதனையேகூட "செய்து முடிக்கக்கூடிய காரியங்கள்" என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாத நிச்சயமற்ற இவ்வாழ்க்கையில், வேறு என்னத்த சொல்ல..?
மேலே... "தற்போது செய்துகொண்டிருக்கும் மூன்று காரியங்கள்" என்று மூன்றை சொன்னேன் அல்லவா...? அதனையேகூட "செய்து முடிக்கக்கூடிய காரியங்கள்" என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாத நிச்சயமற்ற இவ்வாழ்க்கையில், வேறு என்னத்த சொல்ல..?
கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்
- "ஸாரி சார்... சிசேரியன் ஆபரேஷன் பண்றதைத்தவிர வேற வழியில்லை" என்று ஒரு மகப்பேறு மருத்துவரிடமிருந்து...
- "என்னை முதல்ல 'கவனிங்க...' அப்புறம் உங்க வேலை முடிஞ்சிட்டா மாதிரித்தான்" என்று ஒரு அரசு அலுவலரிடமிருந்து...
- "இன்னார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்" எனும் செய்தியை செய்திவாசிப்பவரிடமிருந்து...
கற்றுக்கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்
- 'சமூக அவலங்களைக்கண்டு கோபப்படாமல் இருப்பது எப்படி' என்று...
- 'சீரியஸான பதிவு எழுதி அதற்கும் ஹிட்ஸ் வாங்குவது எப்படி' என்று...
- 'ஒருவர் குறையை அவர் நன்மைக்காக வேண்டி அவரிடமே அவருக்கு கோபம் ஏற்பட விடாமல் நயமாக தெரிவிப்பது எப்படி' என்று...
பிடித்த மூன்று உணவு வகைகள்
- பாலும் பழமும் சீனியும் போட்டு பிசையப்பட்ட சோறு + கிள்ளு படையான்
- சவூதி "அல்-பைக்"-ன் சிக்கன் ப்ரோஸ்ட்டட்
- 'டோப்பிடஹான்'
அடிக்கடி முணு முணுக்கும் மூன்று பாடல்கள்
அடடே...! இப்படி ஒரு பழக்கமே எங்கிட்டே இல்லையே...!
அடடே...! இப்படி ஒரு பழக்கமே எங்கிட்டே இல்லையே...!
பிடித்த மூன்று படங்கள்
- உமர் முக்தார்
- ஜுராசிக் பார்க்
- அவதார்
'இது இல்லாம வாழமுடியாது' என்ற மூன்று விஷயங்கள்
- ஆக்சிஜன்
- கார்பன்-டை-ஆக்சைட்
- தண்ணீர்
ஹி... ஹி... ஹி... அதுதாங்க இந்த பதிவோட டைட்டிலே..!
- சகோ.நிரூபன்
- சகோ.சித்ரா
- சகோ.ஆஷிக் அஹமத்
55 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,, என்னமோ ஏதோன்னு உள்ள வந்து பார்த்தா இதுதானா சங்கதி..
எல்லாமே அருமையான விடயங்கள்.. எல்லாம் நிறைவேற என் பிரார்த்தனைகள்..
தங்கள் பின்னூட்டம் வரவேற்கப்படுகிறது சகோ.:
1. பதில்கள் அனைத்தும் அருமை சகோ.
2. மூணு மூணா பதில் சொல்றேன்னு, 17 பதிவுகளோட இணைப்பு கொடுத்திருப்பது சூப்பர் சகோ.!
3. :) :) :) (மூணு ஸ்மைலிஸ்)
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,
நல்ல பதிவு ...
உங்கள் எண்ணங்கள் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை பிரதிக்கும் ...
பேட்டரியே இல்லாத
ரியாஸ் ( தவறுக்கு வருந்தி இப்ப தமாசுக்கு சொல்லுறேன் )
வணக்கம் சகோ,
தாங்கள் நலமா?
இது முத்தான மூன்று விடயங்களை, வெவ்வேறு தலைப்பின் கீழ் எழுத எனக்கு விடுக்கப்பட்டுள்ள இரண்டாவது அழைப்பு இது.
வெகு விரைவில் எழுதுகிறேன்.
உங்களுக்கு முன்னர், இராஜகோபாலன் அண்ணாச்சியும் இப்படி ஓர் அழைப்பு விடுத்திருந்தார்.
நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக எழுதுகிறேன்.
தங்களின் புரிந்துணர்விற்கும் அன்பிற்கும் நன்றி.
உங்கள் ரசனையினை வெளிப்படுத்தும் வண்ணம், உங்கள் மன உணர்வினை வெளிப்படுத்தும் வண்ணம் மூன்று மூன்று விடயங்களாக பகிர்ந்திருக்கிறீங்க.
வெகு விரைவில் தங்கள் கட்டளைப் படி எழுதுறேன் சகோ.
மாட்டி கொண்டார்கள் என்றதும் பயந்தே விட்டேன், இருப்பினும் நன்றாகவே மாட்டி கொண்டார்கள்.
முதலில் மாட்டி கொண்டது பின்னூட்டவாதி ஆஷிக் தானே?
நல்லா இருக்கு பதிவு.
அனைத்தும் அட்டகாசம் சகோ.ஆஸிக்
ஆனால்-இதைத்தவிர,
///மேஜைமீதுள்ள மூன்று பொருட்கள்
மானிட்டர்
மவுஸ்
கீ-போர்ட் ( "CPU எங்கே சகோ..? " "ஹலோ யாருங்க அது...? அதை மேஜைக்கடியிலே வச்சிருக்கேன்..!)///
இதெல்லாத்துக்கும் சேர்த்து எங்க ஊருல நாங்க கம்பியூட்டருன்னுதான் சொல்லுவோம்.
சரி இருக்கட்டும். அப்புறம் ஸ்பீக்கர், பிரிண்டர், வெப்கேம் எல்லாம் மேசைலே காணலியே?? அவ்வ்வ்!!
அஸ்ஸலாமு அலைக்கும் w.r.b.
கிழித்து தந்த 3 (கேள்விகளை) கோடுகளை
வாகனங்களோடும் சாலையாக,
கப்பலோடும் கடலாக,
விமானம் பறக்கும் ஆகாயமாக....
இருக்கட்டும். இருக்கட்டும்.
சந்துக்குள் சிந்து பாடவில்லை
மாறாக சின்ஃபனிக் ஆர்கெஸ்ட்ரா symphonic orchestra ஒலித்து கொண்டிருக்கிறது.
தகுதிவாரியாக மயிலிறகிலான மென்மையையும் தந்து தவறாமல் உரித்தான சவுக்கடியும் வஞ்சகமில்லாது வாரி வழங்கப்பட்டிருக்கிறது.
நடக்கட்டும். நடக்கட்டும்.
வாஞ்சையுடன் வாஞ்சூர்.
ஆமாமா ,மூணு பேரும் வசமா தான் மாட்டியிருக்காங்க! நல்லாருக்கு.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அருமையான பதிவு சகோ
வாழ்த்துக்கள்
தமிழகத்தின் விடிவெள்ளியே....
நாளைய முதலமைச்சரே.........
//"ஸாரி சார்... சிசேரியன் ஆபரேஷன் பண்றதைத்தவிர வேற வழியில்லை" என்று ஒரு மகப்பேறு மருத்துவரிடமிருந்து...//
என்ன தான் பண்ணுவாங்க பாவம்?..... :)
//ஒவ்வொரு முறையும் 'நல்லாட்சி நம்பிக்கை'யுடன் தேர்தலில் பொதுமக்கள் ஓட்டளிப்பது( >80%..!)//
எங்கள பாத்தா உங்களுக்கு சிரிப்பா வருதா??? இந்தியாவின் அடுத்த பிரதமரே...... இந்தியாவின் விடிவெள்ளியே :)
அடிக்கடி முணு முணுக்கும் மூன்று பாடல்கள்
அடடே...! இப்படி ஒரு பழக்கமே எங்கிட்டே இல்லையே...!///ஜன கண மன கூடவா ???????
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் .....
அஸ்ஸலாமு அலைக்கும்
அருமையான பதில்கள்
//ஸாரி சார்... சிசேரியன் ஆபரேஷன் பண்றதைத்தவிர வேற வழியில்லை" என்று ஒரு மகப்பேறு மருத்துவரிடமிருந்து...
// மிகச்சரியே
//பள்ளிக்கூட நாட்களில் 'டுக்கா'விட்ட அந்த இரண்டு நண்பர்களை (சரவணன் & சம்சுதீன்) எப்படியாவது கண்டுபிடித்து 'பழம்'விட்டு சேர்ந்து விட வேண்டும்
ஓரளவு பணம் சேர்ந்துவிட்டால் ஒரு சிறு தொழிலை சொந்த ஊரில் ஏற்படுத்திக்கொண்டு ஊரோடு செட்டில் ஆகிவிட வேண்டும்
அப்போது... ஊரில் உள்ள பள்ளிவாசல் நிர்வாக கமிட்டியில் இடம்பெற்று சிறப்பாக... "நிர்வாகி என்றால் அதற்கு ஓர் உதாரணமாக" பணியாற்ற வேண்டும்//
/இந்த முன்று எண்ணங்களும் நிறைவேற வாழ்த்துக்கள்//
சீனி சோறு பழம் போட்டு , என் பெரிய பையனுக்கு சிறு வயதில் தினந்தோறும் இரவு சாப்பாடு இது தான்
அல் பைக் , சவுதியில் உம்ரா போகும் போது வரும் போதும் சாப்பிட்டோம், இன்னும் என் சின்ன பையன் இன்னும் சொல்லி கொண்டே இருப்பான்.
//ஜன கண மன கூடவா ??????? //
haa...haa...haa....
தமிழ் செம்மொழியாகுற வரைக்கும் சகோ அவர்கள் ஹிந்தி பாட்டு கூட பாட மாட்டாராம்....
உமது வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் மனதை துளைக்கின்றது.
உமது வைராக்கியமும் லட்சியமும் வீர உரையில் தெரிகிறது.
தொடங்கி வைத்த பதிவாளரும் இத்தனை சேதி சொல்ல மறந்தார்.
ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு வைர மோதிரம் தர ஆசை.
வெகுண்டெலும் நானோ வறுமை கோட்டிற்கு கீழே.
எனது கோரிக்கைய ஏற்று எழுதி...இல்லை..இல்லை.வரைந்து எல்லோர் மனதிலும் இடம் பிடித்த நீங்கள் நீடூழி வாழ்க!
சகோ.முஹம்மத் ஆஷிக்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நன்மை செய்தல்
தீமையை தடுத்தல்
இவ்விரண்டு செயல்களையும் செய்வோரை ஆதரித்தல்
ஆஹா....
அப்போது... ஊரில் உள்ள பள்ளிவாசல் நிர்வாக கமிட்டியில் இடம்பெற்று சிறப்பாக... "நிர்வாகி என்றால் அதற்கு ஓர் உதாரணமாக" பணியாற்ற வேண்டும்
தங்களின் சேவை,
பாபநாசம் என்ற குறுகிய எல்லைக்குள் முடங்குவதை
நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... எல்லாமே அருமையா இருக்கு சகோ. குறிப்பாக, 'பயப்படும் மூன்று விஷயங்கள்', 'புரியாத மூன்று விஷயங்கள்', 'சிரிக்கவைக்கும் மூன்று விஷயங்கள்' டாப் 3! ஆ... இங்கேயும் மூன்றா..? :))
அதுசரி.. "எங்க ஊரு நல்ல ஊரு" என்னாச்சு சகோ? எழுதாம எஸ்கேப் ஆகும் முடிவோ? :)
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
அருமையான பதிவு.
சவுதியில் வசித்தும் உங்களுக்கு கப்ஸா வும் துர்கிஸ் ஸ்டைல் ஷாவர்மா சான்ட்விச் வும் பிடித்த உணவாக இல்லாதது கண்டு ஆச்சர்யம்
சூப்பர்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
எல்லாமே அருமையா இருக்கு.
//ஓரளவு பணம் சேர்ந்துவிட்டால் ஒரு சிறு தொழிலை சொந்த ஊரில் ஏற்படுத்திக்கொண்டு ஊரோடு செட்டில் ஆகிவிட வேண்டும் //
நல்ல முயற்சி.இறைவன் நாடுவனாக .
//ஆமினா said...
தமிழகத்தின் விடிவெள்ளியே....
நாளைய முதலமைச்சரே.........//
ஆமினா இது ஓவரா தெரியல..அப்புறம் தமிழ் நாட்டு மக்களை அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது.
ஆஹா...!! மூன்று பேரும் எங்கிட்டே வசம்ம்மா மாட்டிக்கிட்டீங்களா..!!!/
நண்பர் தின இனிய வாழ்த்துக்கள்.
நண்பரே... மூன்று முடிச்சு அனைத்தும் படிச்சு ரசிச்சேன்...வாழ்த்துக்கள்... தலைப்பிலேயே..அசத்திட்டீங்களே.....
ஆஹா, இந்த பதிவுக்கு இதை விட நல்ல டைட்டில் வைக்கவே முடியாது.. அசத்துங்க
@Riyasஅலைக்கும் ஸலாம் வரஹ்... தங்கள் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி சகோ ரியாஸ்.
@Abdul Basith
//17 பதிவுகளோட இணைப்பு//
ம்ஹூம்... 16 பதிவுகள்தான் (!?)
தங்கள் வருகைக்கும் 'மூன்றோஃபிலியா' பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.அப்துல் பாஸித்...
@ரியாஸ் அஹமதுஅலைக்கும் ஸலாம் வரஹ்... தங்கள் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி சகோ ரியாஸ் அஹமது. தவறை உணர்ந்து வருந்துவது மிகச்சிறந்த பண்பு சகோ. நீங்கள் பண்பில் மிகவும் உயர்ந்து விட்டீர்கள்.(சீரியஸா சொல்றேன்)
@நிரூபன் ஏக இறைக்கே நம் வணக்கம் உரித்தாகட்டும்.
நலம்:). சகோ.நிரூபன் நலமறிய அவா.
ஓ.. இது இரண்டாவது அழைப்பா..? நன்று. நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்...
இத்தொடர்பதிவின் கான்செப்ட்:- ஒரே பதிவில் பல்வேறு தரப்பட்ட அம்சங்களை எழுதிட ஓர் அரிய வாய்ப்பாக உள்ளது.
//...கட்டளைப் படி...//--ஹி..ஹி.. அன்புக்கோரிக்கைதான் சகோ.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் என் தொடர்பதிவு அழைப்பை ஏற்றமைக்கும் மிக்க நன்றி சகோ.நிரூபன்.
@கார்பன் கூட்டாளி //முதலில் மாட்டி கொண்டது//---யார் என்று தெரியவில்லையே சகோ.கூட்டாளி.
இப்போது நான் மூன்று பேரை கோர்த்துவிட்டிருக்கேன் அல்லவா... இதேபோல நானும் இந்த ரயிலில் சகோ.அந்நியனால் இடையில் கோர்த்துவிடப்பட்ட ஒரு பெட்டி அவ்ளோதான்.
ஆனால், "இந்த ரயிலின் என்ஜின்" (அதாவது... இத்தொடர்பதிவை ஆரம்பித்து வைத்தவர்) யார்? -என்று தெரிந்தோர் கூறுங்கள் சகோ. அறிய ஆவல்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.கார்பன் கூட்டாளி.
@Lakshmi தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.லக்ஷ்மி.
@neethimaanவருகைக்கும் கருத்துக்கும் கேள்விக்கும் நன்றி சகோ.நீதிமான்.
எப்படி... எப்படி...?
//எங்க ஊருல நாங்க கம்பியூட்டருன்னுதான் சொல்லுவோம்//---எங்க ஊர்ல நாங்களும் அப்படித்தான் சொல்லுவோம்.
இங்கே 'பொருட்கள்' என்றுதான் கொஸ்டின் பேப்பரில் கேட்டு இருக்காங்க... தனித்தனியா இருந்தா அவை பொருட்கள்தான்..!
//அப்புறம் ஸ்பீக்கர், பிரிண்டர், வெப்கேம் எல்லாம் மேசைலே காணலியே??//---ம்ம்ம்...
ஸ்பீக்கரை சுவத்துல ஆணியில் மாட்டி வச்சி இருக்கேன்.
பிரிண்டர் இல்லை.
வெப்கேம் ஸ்பீக்கர் மேலே இருக்கு.
// அவ்வ்வ்!! //--ரிப்பீட்டு.
@VANJOOR அலைக்கும் ஸலாம் வரஹ்...
பல்வேறு தரப்பட்ட நம் எண்ணங்களை ஒரே பதிவில் தந்திட ஓர் அரிய வாய்ப்பாக இருந்தது இத்தொடர்பதிவிற்கான கான்செப்ட். விட்டுடுவோமா..?
தங்கள் பின்னூட்டங்கள் என்றுமே எனக்கு சிறந்த ஊட்டங்கள் சகோ.வாஞ்சூர்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
தங்கள் பாராட்டுக்களுக்கும் நன்றி. அதற்குண்டான என் தகுதியை நான் மேம்படுத்திக்குள்ள எனக்காக துவா செய்யுங்கள் சகோ.வாஞ்சூர்.
@Yoga.s.FR//ஆமாமா ,மூணு பேரும் வசமா தான் மாட்டியிருக்காங்க! நல்லாருக்கு.//---தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.யோகா.
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ.ஹைதர் அலி.
@ஆமினா //தமிழகத்தின் விடிவெள்ளியே....
நாளைய முதலமைச்சரே.........//
---பதிவிற்கு முற்றிலும் பொருந்தா கருத்து. :(
தவறுதலாக முகவரி மாற்றி அனுப்பி விட்டீர்கள் என நினைக்கிறேன்... சகோ.ஆமினா.
இனி கவனம் தேவை. :)
@ஆமினா //என்ன தான் பண்ணுவாங்க பாவம்?..... :) //
---இதை டெலிவரி டியு டேட் தாண்டி அல்லது ஸ்கேன் ரிப்போர்ட் படி அல்லது வேறு ஏதும் பிரச்சினை என்றால்... சொல்லலாம் 100% ஓகே.
ஆனால்...
பெரும்பாலும்...
வேலை, சம்பளம், சொத்து எல்லாம் விசாரித்து விட்டு... சிலர் எட்டாவது மாசமே 'அப்படி' சொல்ல ஆரம்பிக்கின்றனரே...?!? :(
இன்னும் சிலர்...
ஊட்டச்சத்து பவுடர் எழுதிக்கொடுத்து சாப்பிட சொல்லிவிட்டு... "அடடே... இப்போவே பத்து கிலோ ஏறிட்டீங்களே.." என்று கேட்டு ஆறாம் மாதமே 'அப்படி' சொல்கின்றனரே..!?! :(
வேறு சிலர்...
"உங்களுக்கு தலைப்பிரசவம் ஆபரேஷனா..?" என்று கேட்டுவிட்டு, மூன்றாம் மாசமே 'அப்படி' சொல்லிவிடுகின்றனரே..!!?
இப்படிப்பட்ட பலருக்காக சொல்லப்பட்டதுதான் அது, சகோ.ஆமினா..!
மற்றபடி நல்லுள்ளம் கொண்ட மனசாட்சியுள்ள இறையச்சம் கொண்ட மகப்பேறு மருத்துவர்கள் வாழ்க..! வாழ்க..! வாழ்க..!
@ஆமினா //எங்கள பாத்தா உங்களுக்கு சிரிப்பா வருதா???//---ஹா...ஹா...ஹா... நீங்களும் அவங்கள்ள ஒருத்தரா..?
//இந்தியாவின் அடுத்த பிரதமரே...... இந்தியாவின் விடிவெள்ளியே :)//---இம்முறை 'கட் & பேஸ்ட்' கையாள்வதில்... மீண்டும் நேர்ந்த அதே தவறு என்று நினைக்கிறேன்.
சகோ.ஆமினா...
என்னாச்சு உங்களுக்கு..!?
சகோ.அப்துல் பாஸித், அவர் பிளாக்கில் உங்களிடம், சவூதியில் நான் இருக்கும் இடத்தில்தானே வெயில் அதிகம் என்றார் ..!?!
@Yoga.s.FR///ஜன கண மன கூடவா ???????///---டு யூ மீன் தேசிய கீதம்..?
(பொதுவாக இக்கேள்விக்கு சினிமா பாடல்களைத்தான் பல சகோ'க்கள் எழுதுகின்றனர்)
பள்ளிகளில் அசெம்ப்ளியில்... மாணவிகள் பாட மற்ற அனைவரும் மவுனமாக இருந்து கேட்போம்.
முணுமுணுத்தது கிடையாது.
ஏதாவது ஒரு விழாவை நிறைவு செய்யும்போது தேசிய கீதம் ஒலிக்க, பவ்யமாய் எல்லோருடன் சேர்ந்து எழுந்து நின்றது உண்டு.
நான் உட்பட யாரும் முணுமுணுத்தது கிடையாது.
மற்ற நேரங்களில் எனக்கும் மற்றவருக்கும் எவ்வித லாபமும் இன்றி (ஜன கன மன உட்பட) நான் ஏன் ஏதேனும் ஒரு பாடலை 'முணுமுணுக்க' வேண்டும்..?
புரியலையே சகோ.யோகா..!?!
அதனால்....
இப்படி ஒரு பழக்கமே எங்கிட்டே இல்லை சகோ...!
@koodal balaநேற்று மட்டும் இல்லாமல் வருடத்தின் அனைத்து தினங்களுமே நமக்கு "நண்பர்கள் தினமே"...
ஆக, எல்லா நாட்களும் நண்பர்கள் தினங்களாக அமைந்து மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள் சகோ.கூடல் பாலா.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ.
@Jaleela Kamal அலைக்கும் ஸலாம் வரஹ்...
//சீனி சோறு பழம் போட்டு , என் பெரிய பையனுக்கு சிறு வயதில் தினந்தோறும் இரவு சாப்பாடு இது தான்//---அட..! இன்னும் கூட சில சமயம் எனக்கு இதுதான் இரவு சாப்பாடு..! கிள்ளு படையான் உடன்.
கிள்ளு படையான்--இது கையால் இடப்பட்டு காயவைத்த்து பின் வருக்கப்படும் அரிசி கூழ் வத்தல்/வடகம். வீட்டில் எப்போதும் ஸ்டாக் இருக்கும். ஊர் சென்று வருபவர்களிடம் கரெக்டாக என் தாயார் எனக்காக செய்து அனுப்பிவைத்து விடும் ஆயிட்டங்களில் இதுவும் ஒன்று..!
//அல் பைக் , சவுதியில் உம்ரா போகும் போது வரும் போதும் சாப்பிட்டோம்//---நாங்களும் அப்படித்தான்.
2005-ல் ஹஜ் செய்த சமயம் ஜமராவில் இரண்டாம் நாள்கள் கல் எறிந்த பின்னர் சுமார் இருநூறு பேருக்கும் அதிகமாக நின்ற கியூவில்(இந்த கியூவில் நான் நின்ற நேரம் பதினைந்து நிமிடங்கள் கூட இருக்காது... அவ்வளவு படு ஸ்பீடான பத்து சப்ளையர்கள்...) நின்று அல்-பைக் ப்ரோஸ்டட் வாங்கி சாப்பிட்டது (அதுதான் முதல் முறை..) வாழ்வில் மறக்க முடியாத விஷயம். பின்னர் ஒவ்வொரு உம்ராவின் போதும் அது மஸ்ட்.
ஏனெனில், இவ்வளவு பாபுலர் ஆன ஒரு கம்பெனி மேற்கு கரை மண்டலத்தில் மட்டுமே. நிறைய உள்குத்து அரசியல் காரணங்களால் மத்திய மண்டலம் அண்ட் தலைநகர் ரியாத் மற்றும் தமாம் போன்ற கிழக்கு கரை மண்டலங்களில் ஏன் வேறு எங்கும் கிடையாது.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.ஜலீலா கமால்.
@ஆமினா
/// தமிழ் செம்மொழியாகுற வரைக்கும் சகோ அவர்கள் ஹிந்தி பாட்டு கூட பாட மாட்டாராம்.... ///
சகோ.ஆமினா, தாங்கள் தொடர்ச்சியாக வருகை புரிந்து கருத்திடுவதற்கு நன்றி.
ஆனால், சில கேள்விகள்...
தமிழ் இன்னும் செம்மொழி ஆக வில்லையா..?
'ஜன காண மன...' ஒரு ஹிந்தி பாட்டா..?
@அந்நியன் 2
சகோ.அய்யூப், வழக்கம்போல செந்தமிழில் பிச்சு உதறுகின்றீர்கள்...!
உங்கள் வருகைக்கும், அங்கீகாரத்திற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ. ஆனால், சமூக நன்மைக்காக மட்டுமே நாம் எழுதுகிறோம். புகழ்ச்சிக்காக நாம் எழுதுவதில்லை. இறைவனுக்கே நம் புகழனைத்தும் உரித்தாகட்டும்.
@மு.ஜபருல்லாஹ் அலைக்கும் ஸலாம் வரஹ்...
//தங்களின் சேவை,
பாபநாசம் என்ற குறுகிய எல்லைக்குள் முடங்குவதை
நான் வன்மையாக கண்டிக்கிறேன்.//---தங்கள் வருகைக்கும் வன்மையான :) கண்டனத்துக்கும் மிக்க நன்றி சகோ.ஜபருல்லாஹ்.
நன்மை செய்தால் பொதுவாக ஒரு எதிர்ப்பும் வராது. அதற்கு உலகத்தில் எல்லையே இல்லை.
ஆனால், தீமையை தடுத்தால்... கடும் ஆபத்துகளை/விளைவுகளை சந்திக்க நேரிடும்.
அப்போது உள்ளூர் ஆள் என்றால்... ஆபத்து குறைவாக இருக்கும். காரணம், ஒரு பாசம் பரிவு விட்டுக்கொடுத்தல் இருக்கும். சிலரின் சப்போர்ட்டாவது இருக்கும். அதுவே யாரோ முகம் தெரியாத வெளியூர் காரர் எனில்... கேட்கவே வேண்டாம். பொதுவாக ஆபத்தை தவிர வேறு ஒன்றும் இருக்காது.
தற்போதைய என் நிலையில், என் எல்லை இதுதான் சகோ. இதுவே எனக்கு பெரும் எல்லை.
@அஸ்மாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//அதுசரி.. "எங்க ஊரு நல்ல ஊரு" என்னாச்சு சகோ? எழுதாம எஸ்கேப் ஆகும் முடிவோ? :)//---நான் உங்களிடம் அந்த பதிவு எழுத தாமதம் ஆகும் என்றேனே..? காரணம் நீங்கள் அந்த பதிவை எழுதி இருந்த விதம். குறைந்த பட்சம் அதில் 50% ஆவது நான் மெனக்கெட வேண்டாமா சகோ.அஸ்மா..? அதற்கான தயாரிப்பு வேலைகள் பின்னணியில் நடக்கின்றன. எஸ்கேப் ஆகும் முடிவெல்லாம் இல்லை.
ஆனால், இந்த தொடர்பதிவை உடனே எழுதுவதாக சகோ.அய்யூபிடம் சொன்னேன். எழுதியும் விட்டேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் விசாரணைக்கும் நன்றி சகோ.அஸ்மா.
@batஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//கப்ஸா வும் துர்கிஸ் ஸ்டைல் ஷாவர்மா சான்ட்விச் வும்//---அதுவும் நன்றாகத்தான் இருக்கும் சகோ.ரப்பானி.
நீங்கள் அல்-பைக் ப்ரூஸ்ட்டட் சாபிட்டதில்லை என நினைக்கிறேன்..!
அவை மற்ற ப்ரூஸ்ட்டட் போல அல்ல. படு ஸ்பெஷல்.
ஜித்தாவில்... அல்-பைக் முன்னாடி டேஸ்டில் நிக்க முடியாமல், ஹர்பி கெண்டகி கே.எப்.ஸி. மெக்டொனால்ட் உட்பட எல்லாரும் ப்ரோஸ்ட்டட் பிசினசில் மட்டும் ஈ ஓட்டுகின்றனர் தெரியுமா..?
ஆனால், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு டேஸ்ட். பதிவில் சொல்லப்பட வேண்டியதோ பிடித்த மூன்றுதான். என்ன செய்வது?
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.bat.
@nellai ram வருகைக்கும் //சூப்பர்//க்கும் மிக்க நன்றி சகோ.ராம்.
@ஆயிஷா அபுல்.அலைக்கும் ஸலாம் வரஹ்...
//எல்லாமே அருமையா இருக்கு.//
//நல்ல முயற்சி.இறைவன் நாடுவனாக.//---வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.ஆயிஷா அபுல்.
அப்புறம்...
அஸ்தஃபிருல்லாஹ்...
//தமிழ் நாட்டு மக்களை அந்த *** *** முடியாது.//--- இது மெய்யான இறைநம்பிக்கைக்கு எதிரான "பகுத்தறிவுப்பஞ்ச டயலாக்" சகோ. :)
அதை 1996-ல் சொன்னவரே சொன்னதை மறந்துபோய் மீடியாவுக்கு முன்னாடி 2011-ல் இளித்துக்கொண்டே ரெட்டலைக்கு ஓட்டு போடறார்... :)
இறைசக்திக்கு அளவோ எல்லையோ வரையறையோ ஏது சகோ..?
இறைவனால் முடியாதது என்று எதுவுமே இருக்க முடியாதே சகோ.ஆயிஷா அபுல்..!
//@ ஆமினா said...//---முகவரி பிழை அல்லது கட் அண்ட் பேஸ்ட் குழப்பமாக இருக்கலாம். பாவம், அவங்களை விட்ருங்க.
@இராஜராஜேஸ்வரிவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ.இராஜராஜேஸ்வரி.
எல்லா நாட்களுமே நல்ல நண்பர்களுக்கான தினங்களாக அமைந்து மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள் சகோ.
@மாய உலகம்
&
@சி.பி.செந்தில்குமார்
தலைப்பு :-
ஆமாம்..! ரொம்பத்தான் யோசிச்சேன்..!
நீங்கள் இருவரும் வந்து சொல்லும்போது என் முயற்சிக்கு ஒரு மகிழ்ச்சியான நிறைவு ஏற்படுகிறது.
தங்கள் இருவர் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரர்களே.
@Priyaதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
//தமிழ் நாட்டு மக்களை அந்த *** *** முடியாது.//
சகோ அந்த வார்த்தையை விளையாட்டாக எழுதிவிட்டேன்.
அஸ்தஃபிருல்லாஹ்...அஸ்தஃபிருல்லாஹ்...அஸ்தஃபிருல்லாஹ்...
@ஆயிஷா அபுல். தங்கள் மீதும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் என்றென்றும் ஏற்படட்டுமாக சகோ..!
:)
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!