அவர், மேற்கு வங்க மாநில தென் தினாஜ்பூரில் உள்ள பாலுர்காட் என்ற
ஊரில் அரசுப்பள்ளிக்கூட ஆசிரியர். மாதச் சம்பளம் சுமார் ரூ 35,000. அவரின் இந்த மாத செலவுக்கு அவ்வப்போது எடுத்தது போக மீதி அநேகமாக ரூ 10,000 இருக்கலாம் என்று எதேச்சையாக தம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சேமிப்புக்கணக்கை இந்த வார ஞாயிறு அன்று நெட்டில் திறந்து பரிசோதித்த அந்த ஆசிரியருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி..! பேரதிர்ச்சி..!
காரணம், அவர் அக்கௌண்டில் இருந்த பணம்... ரூ 49,570,08,17,538 (அதாகப்பட்டது... சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபாய்..!) யார் அவர்..? அந்த பணம் எப்படி வந்தது இவர் அக்கௌண்ட்டிற்கு..? இவர்
கணக்கில் போட்டது யார்..? அது அவ்வளவும் யாருடைய பணம்..? எப்படி இது நடந்தது..?
அந்த ஆசிரியர் பெயர்... திரு.பாரிஜாத் ஸாஹா..!
இவரின் கணக்கில் இருந்த தொகை கிட்டத்தட்ட இந்திய ரயில்வேக்கான ஆண்டு பட்ஜெட்டுக்கு இணையான தொகை..! இந்திய கல்வித்துறைக்கான ஆண்டு பட்ஜெட்டை விட அதிகம்...!
சூப்பர்..! "கிடைத்த வரை லாபம்" என்று ரகசியமாக இருக்கவில்லை நம் சகோ.ஸாஹா. அடுத்த கணமே அந்த வங்கியில் தனக்குத் தெரிந்த
நண்பர் ஒருவரான அதிகாரிக்கு போன் செய்தார். "என் கணக்கில் ரூ 49,000 கோடி வந்துள்ளது..
சீக்கிரம் உங்கள் தவறை சரி செய்யுங்கள். என் பணம் ரூ 10000 அதில் உள்ளது.
எடுக்க வேண்டும்," என்றாராம்..!
இந்த இடத்தில் ஒரு விஷயம்..! அவர் நினைத்திருந்தால் அந்தப் பணத்தை உடனே எடுத்து செல்வழித்திருக்க முடியும்..! ஆனால், கணக்கில் நடந்துள்ள தவறைப்பார்த்ததும் அந்த வங்கிக்கு தெரிவித்து, கணக்கு சரி செய்யப்படும் வரை காத்திருந்தார்.
சென்ற ஞாயிறு அன்று நடந்த இந்த விஷயம்... ரகசிய விசாரணையின் போது எப்படியோ முந்தாநாள் வெளியில் நியூஸில் கசிந்து விட்டது. உளளூர் தொலைக்காட்சிகள் முதல் சிஎன்என், பிபிசி வரை போட்டி போட்டுக் கொண்டு ஸாஹாவை பேட்டி எடுத்துத்தள்ளி விட்டன. நான் இந்த செய்தியை நேற்று கல்ஃப் நியூஸ் தளத்தில்தான் முதலில் படித்தேன். இன்று மேலும் நிறைய தளங்களிலும் இந்த செய்தி வந்து விட்டது.
சென்ற ஞாயிறு அன்று நடந்த இந்த விஷயம்... ரகசிய விசாரணையின் போது எப்படியோ முந்தாநாள் வெளியில் நியூஸில் கசிந்து விட்டது. உளளூர் தொலைக்காட்சிகள் முதல் சிஎன்என், பிபிசி வரை போட்டி போட்டுக் கொண்டு ஸாஹாவை பேட்டி எடுத்துத்தள்ளி விட்டன. நான் இந்த செய்தியை நேற்று கல்ஃப் நியூஸ் தளத்தில்தான் முதலில் படித்தேன். இன்று மேலும் நிறைய தளங்களிலும் இந்த செய்தி வந்து விட்டது.
School Teacher Mr. Parijat Saha |
என்னே ஒரு நேர்மை..! அவரின் நேர்மைக்கு நாம் நமது பாராட்டுக்களை மனதார தெரிவித்துக் கொள்வோம்..! வாழ்த்துகள் சகோ.பரிஜாத் ஸாஹா..! இவ்வளவு பணத்தை எடுக்கவோ மறைக்கவோ முடியாது. இவர் இதனை வெளியே சொல்லாமல் இருந்தாலும், எப்படியும் கண்டு பிடிக்கப்பட்டு இருந்திருப்பார். அப்போது, இவருக்கு மோசமான முகவரியை ஊடகம் தந்திருக்கும். தாமாக முதல் ஆளாக புகார் தந்தமையால் புகழ் பெற்றார்.
ஸ்டேட் பேங்கின் கொல்கத்தா மண்டல அலுவலகமும், மும்பை தலைமை அலுவலகமும் தீவிர விசாரணையில் இறங்கின. கிட்டத்தட்ட 4 நாட்களாக விசாரணை நடந்தது. ஆனால் இந்த ரூ 49000 கோடி வந்த வழிதான் அவர்களுக்கு தெரியவில்லை.
ஸ்டேட் பேங்கின் கொல்கத்தா மண்டல அலுவலகமும், மும்பை தலைமை அலுவலகமும் தீவிர விசாரணையில் இறங்கின. கிட்டத்தட்ட 4 நாட்களாக விசாரணை நடந்தது. ஆனால் இந்த ரூ 49000 கோடி வந்த வழிதான் அவர்களுக்கு தெரியவில்லை.
நான் என்ன நினைத்தேன் என்றால், யாரோ ஒரு கோடீஸ்வரன் தன் பணத்தை தப்பான கணக்கு (ஆசிரியரின் வங்கி கணக்கு) எண்ணுக்கு அனுப்பி விட்டு விழி பிதுங்கி கருப்பு பணமா என்ற கேள்வியில் மாட்டிக்கொள்ளப்போகிறார் என்று நினைத்தேன். ஆனால், இது இன்று ஒருவழியாக மிக மிக சாதாரண பிரச்சினையாக முடிந்து விட்டது... அல்லது "முடித்து வைக்கப்பட்டு" விட்டது போல தெரிகிறது.
நேற்றுவரை இது விசித்திரமான செய்திதான். ஆனால், இன்று இது முக்கியமான செய்தியாகிவிட்டது எனக்கு. காரணம்... இதைப்பற்றி இன்று வந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்திதான் நம்மை உறைய வைக்கிறது..! அதில் அந்த வங்கியின் Assistant General Manager Mr. Tapan Mitra வின் பேட்டி..........
அதாவது, இவரின் கணக்கில் ஏற்றப்பட்ட அந்த தொகை ஓர் இணைய தவறாம். திரு. ஸாஹா உபயோகித்த இணைய இணைப்பு அப்படி ஒரு தொகை இருந்தது போன்று அவருக்கு காட்டி விட்டதாம். உண்மையில் அவ்வளவு பெரிய அந்த தொகை அவரின் கணக்கிற்கு ஏற்றப்படவே இல்லையாம். இதுபோன்ற தவறுகள் நடப்பது சாதாரணமான(!?) ஒன்றுதானாம். வழக்கமாக பலருக்கு ஏற்படும்(!?) ஒன்றுதானாம். இதற்கு திரு.ஸாஹாவுக்கு இணைய இணைப்பு வழங்கிய நிறுவனம்தான் காரணமாம்..!? இதை எல்லா விசாரணைகளும் முடிந்த பிறகு அந்த வங்கியின் உதவி உயர் அதிகாரி இன்று தெரிவித்து உள்ளார்..!
சகோ..! இதை நம்ப முடிகிறதா...? உங்களுக்கு இந்த செய்தி சொல்லும் பின்னணி கருத்து என்ன..? உங்களுக்கு என்ன தோன்றுகிறது..? அப்போ... இந்த பணம் காற்று வெளியில் வந்த மாயாஜாலமா..? இப்போது அவர் பார்த்த தொகை என்னவாகி இருக்கும்..? அந்த அதிகாரி சொல்வது போல... இதெல்லாம் பலருக்கு நடக்கும் சாதாரண சம்பவமா..? எனக்கு இதுவரை நடந்தது இல்லை..! எனக்கு தெரிந்த எவருக்கும் நடந்ததில்லை...! உங்களுக்கு..?
அப்புறம், என்னிடம் SBI A/C இல்லை..! சகோ, உங்களிடம் SBI Account உள்ளதா..? இருந்தால், உடனே பாருங்கள்... 50,000 கோடி ரூபாய் இருக்கா என்று..! அந்த அதிகாரி சொல்வதை பார்த்தால் இருக்கலாம் போல..!
20 ...பின்னூட்டங்கள்..:
சலாம் ஆசிக்,
ஒன்னுக்கு ரெண்டா SBI ல அக்கவுன்ட் வச்சு இருக்கேன். இன்றைக்கே போய் பார்க்கிறேன். அப்படி இருந்தா நானும் எடுத்துக்க மாட்டேன் சகோ. வங்கிக்கு கொடுத்து விடுவேன். ஏன்னா நான் நேர்மையாளன் ஆக்கும். ஆனா சர்வீஸ் டாக்ஸ் மட்டும் 1 % எடுத்துக்குவேன். அவிங்க அப்படிதானே செய்றாங்க.....
அவ்வவ்வ்வ்வ்........
சலாம் சகோ ஆஷிக்!
இந்த செய்தியை நானும் தமிழ் பத்திரிக்கைகளில் படித்தேன். நேர்மையாளரான அவருக்கு எனது பாராட்டுக்கள். இப்படிபட்டவரை மன்மோகன்சிங் அழைத்து கவுரவிக்க வேண்டும். ஆனால் அவரோ தனுஷ் போன்ற கூத்தாடிகளைத்தான் அழைப்பார் போல :-(
@சிராஜ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//நான் நேர்மையாளன் ஆக்கும். ஆனா சர்வீஸ் டாக்ஸ் மட்டும் 1 % எடுத்துக்குவேன்.//
அடி சக்கை...
இந்த அறிவு அந்த டீச்சர் ஸாஹாவுக்கு இல்லாமல் போச்சே..!
அவருக்கு வர வேண்டிய கமிஷன்... "496 கோடி ரூபாய்" இப்படி அனாமத்தா போச்சே..!
சகோ.சிராஜ்,
நீங்கள் வெவரமான நேர்மையாளர்தான்..! :-))
வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி சகோ.சிராஜ்.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//இப்படிபட்டவரை மன்மோகன்சிங் அழைத்து கவுரவிக்க வேண்டும். ஆனால் அவரோ தனுஷ் போன்ற கூத்தாடிகளைத்தான் அழைப்பார் போல :-(//---இதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு சகோ.சுவனப்பிரியன்.
"தனுஷ்-பிரதமர்: 'கொலவெறி' விருந்தின் பின்னணி" என்ற இந்த பதிவை நீங்கள் படித்துப்பாருங்கள் சகோ.
வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி சகோ.சுவனப்பிரியன்.
ஸலாம் சகோ.முஹம்மத் ஆஷிக்,
சகோ.பரிஜாத் ஸாஹா..!
உங்கள் நேர்மைக்கும் பொறுப்புணர்ச்சிக்கும் பாராட்டுக்கள்!
Mr. Tapan Mitra உங்களது பேட்டியை நீங்களே ஒருமுறை படித்துபாருங்கள்!
நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களை எந்தஅளவில் மதிக்கிறீர்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. தவறை மறைக்க அடுத்தவர்மீது பழி போடாதீர்கள்
@மு.ஜபருல்லாஹ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//தவறை மறைக்க அடுத்தவர்மீது பழி போடாதீர்கள்//---சரியாக சொன்னீர்கள் சகோ.
வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி சகோ.மு.ஜபருல்லாஹ்.
வாத்தியாருக்கு நல்ல மனசு - வாழ்க நீர் பல்லாண்டு.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
ஆஹா.. இது தெரியாம போச்சே... தெரிஞ்சிருந்தா SBI-ல கணக்கு தொடங்கிருப்பேனே?
சலாம் சகோ ஆசிக்,
SBI சொல்லும் காரணம் சரியானது அல்ல. இது நிச்சயமாக அவர்களின் சாப்ட்வேர் தவறுதான். ஏனெனில் வங்கி பரிவர்த்தனைகளில் "TWO PHASE COMMIT " என்ற மாடலே பயன்படுத்தப்படும். அதாவது பணம் அனுப்புவரின் AC ல் இருந்து முதலில் பணம் எடுக்கப்படும் , பின் அது பணம் பெறுபவரின் AC க்கு மாற்றப்படும் . சோ, வேறு ஒருவர் அனுப்பாமல் பணம் வர சாத்தியம் இல்லை . அப்படியே அனுப்பினாலும் ஒரு நாளைக்கு இவ்வளவுதான் அனுப்பலாம் என்ற விதி உள்ளது. 5 லட்சம் என்று நினைக்கிறேன். எனவே இது நிச்சயமாக அவர்களின் சாப்ட்வேர் தவறுதான். அல்லது அவர்களின் data base ல் வேலை செய்யும் நபரின் தவறாக இருக்கலாம்.
@மனசாட்சிவருகைக்கும் வாத்தியாருக்கு வாழ்த்து பகிர்வுக்கும் நன்றி சகோ.மனசாட்சி.
@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//ஆஹா.. இது தெரியாம போச்சே... தெரிஞ்சிருந்தா SBI-ல கணக்கு தொடங்கிருப்பேனே?//---1% transfer charge கூட வேணாம் சகோ..! 0.01% என்றால் கூட பாருங்களேன்... சுமார் அஞ்சு கோடி ரூபாய் உங்களுக்கு வந்துரும்... அதில், எத்தனை ஆண்ட்ராய்ட் மொபைல் வாங்கலாம் நீங்க..? :-))
வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி சகோ.அப்துல் பாஸித்.
@சிராஜ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//இது நிச்சயமாக அவர்களின் சாப்ட்வேர் தவறுதான். அல்லது அவர்களின் data base ல் வேலை செய்யும் நபரின் தவறாக இருக்கலாம்.//---சரியா சொன்னீங்க சகோ.சிராஜ். இதை SBI தரப்பில் மழுப்பியதால்தான் இந்த பதிவை போட்டு பலருக்கு பரப்ப வேண்டியதாயிருச்சு..!
"parijat saha's internet service provider denies SBI's charges"
---என்று இன்று ஏதேனும் நியூஸ் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
வருகைக்கும் அருமையான தகவல் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ.சிராஜ்.
சகோ,ஆஷிக்,
//நான் என்ன நினைத்தேன் என்றால், யாரோ ஒரு கோடீஸ்வரன் தன் பணத்தை தப்பான கணக்கு (ஆசிரியரின் வங்கி கணக்கு) எண்ணுக்கு அனுப்பி விட்டு விழி பிதுங்கி கருப்பு பணமா என்ற கேள்வியில் மாட்டிக்கொள்ளப்போகிறார் என்று நினைத்தேன். ஆனால், இது இன்று ஒருவழியாக மிக மிக சாதாரண பிரச்சினையாக முடிந்து விட்டது... அல்லது "முடித்து வைக்கப்பட்டு" விட்டது போல தெரிகிறது.
நேற்றுவரை இது விசித்திரமான செய்திதான். ஆனால், இன்று இது முக்கியமான செய்தியாகிவிட்டது எனக்கு. காரணம்... இதைப்பற்றி இன்று வந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்திதான் நம்மை உறைய வைக்கிறது..! அதில் அந்த வங்கியின் Assistant General Manager Mr. Tapan Mitra வின் பேட்டி..........
அதாவது, இவரின் கணக்கில் ஏற்றப்பட்ட அந்த தொகை ஓர் இணைய தவறாம். திரு. ஸாஹா உபயோகித்த இணைய இணைப்பு அப்படி ஒரு தொகை இருந்தது போன்று அவருக்கு காட்டி விட்டதாம். உண்மையில் அவ்வளவு பெரிய அந்த தொகை அவரின் கணக்கிற்கு ஏற்றப்படவே இல்லையாம். இதுபோன்ற தவறுகள் நடப்பது சாதாரணமான(!?) ஒன்றுதானாம். வழக்கமாக பலருக்கு ஏற்படும்(!?) ஒன்றுதானாம். இதற்கு திரு.ஸாஹாவுக்கு இணைய இணைப்பு வழங்கிய நிறுவனம்தான் காரணமாம்..!? இதை எல்லா விசாரணைகளும் முடிந்த பிறகு அந்த வங்கியின் உதவி உயர் அதிகாரி இன்று தெரிவித்து உள்ளார்..!
சகோ..! இதை நம்ப முடிகிறதா...? உங்களுக்கு இந்த செய்தி சொல்லும் பின்னணி கருத்து என்ன..? உங்களுக்கு என்ன தோன்றுகிறது..? அப்போ... இந்த பணம் காற்று வெளியில் வந்த மாயாஜாலமா..? இப்போது அவர் பார்த்த தொகை என்னவாகி இருக்கும்..?//
இந்த பணக்கணக்கு விவகாரத்தில் கணினி/ இணையம்/ வைரஸ்/ ஹேக்கர் என்று வேறு ஏதோ ஒன்று தான் இருக்க வேண்டும். காரணம் வங்கிகள் செயல்ப்படவகுத்துள்ள விதி முறைகள்.
உங்கல் கணக்கில் ஒரு கோடி இருந்தாலும் 24 மணி நேரத்தில் 50000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது ஏடிம் இல்.
ஒரு வங்கியில் மொத்த வாடிக்கையாளர் வைப்பு/ சேமிப்பு நிதியில் 10 % மட்டுமே பணமாக ஒரு கிளையில் வைத்திருக்க முடியும். ஒவ்வொரு நாளும் மாலையில் எவ்வளவு கொடுக்கப்பட்டது, வரவு எவ்வளவு என்று கணக்கினை நேர் செய்து விட்டு தான் வங்கியை மூடவே செய்வார்கள்(டெபிட் & கிரடிட் பேலன்ஸ்) ஆன் லைன் பரிவர்த்தனைக்கும் லிமிட்ஸ் உண்டு.
ஒருவர் இவ்வளவு பணம் தான் ecs பரிமாற்றம் செய்ய முடியும். சுவிஃப்ட் கோட், மேக்ஸ் கேப், என்றெல்லாம் ,,கட்டூப்பாடுகள் இருக்கு.
எனவே எந்த கோடிஸ்வரனும் தவறுதலாக / விரும்பி கூட 50 கோடியை ஒரு கணக்கில் இருந்து மாற்ற முடியாது. எல்லாவற்றிற்கும் ஒரு" மேக்சிமம் கேப் " என செட் செய்திருப்பார்கள்.2 லட்சத்திற்கு மேல் உங்கள் வங்கி கணக்கில் இருந்தால் தனியே கவனிப்பார்கள். மேலும் ஒரு ஆண்டுக்கு அப்படியே இருந்தால் வருமான வரித்துறைக்கு நோட் அனுப்ப வேண்டும். இதெல்லாம் வெளியில் தெரியாது.
எந்த கிளை வங்கியிலும் 50 கோடி பணமே இருக்காது அப்படி இருக்க எங்கே இருந்து கணக்கில் ஏற்ற.பெரிய அளவில் பணப்பரிமாற்றம் நடக்காதா கேட்டால் நடக்கும் அதுக்கு நிறைய ஃபார்மாலிட்டிஸ் இருக்கு. எனவே இது போல சும்மா எல்லாம் நடக்காது. இது கணினி சார்ந்த ஒரு தவராகவே இருக்க வேண்டும்.
--------
இந்த பின்னூட்டம் நேற்றும் போட்டேன் என்னமோ தெரியல வரலை. இப்போ மீண்டும், சிராஜ் கூட நான் சொன்னது போல சொல்லி இருக்கார். குறிப்பு: 5 லட்சம் மேலும் செய்யலாம் அதுக்கு முன் கூட்டி அனுமதி வாங்கனும். சில ஃபார்மாலிட்டிஸ் இருக்கு.
@வவ்வால்சகோ.வவ்வால்,
உங்கள் வருகைக்கும்,
//இந்த பணக்கணக்கு விவகாரத்தில் கணினி/ இணையம்/ வைரஸ்/ ஹேக்கர் என்று வேறு ஏதோ ஒன்று தான் இருக்க வேண்டும்.//
.... .... .... .... ....
//எனவே இது போல சும்மா எல்லாம் நடக்காது. இது கணினி சார்ந்த ஒரு தவராகவே இருக்க வேண்டும்.//
இவையும், இவை இரண்டுக்கும் இடையில் பதிவுக்கு அவசியமான இன்னும் பல தகவல்கள் கொடுத்தமைக்கும் மிக்க நன்றி சகோ.வவ்வால்.
//குறிப்பு: 5 லட்சம் மேலும் செய்யலாம் அதுக்கு முன் கூட்டி அனுமதி வாங்கனும். சில ஃபார்மாலிட்டிஸ் இருக்கு.//---சரியா சொன்னீங்க சகோ.
சாதாரண மக்களுக்குத்தானே ஆயிரம் ஃபார்மாலிட்டிஸ் எல்லாம்..?
குறிப்பிட்ட நபருக்கு அரசே மனது வைத்தால்...? எதுவும் சாத்தியமே அல்லவா..?
இந்த பின்னூட்டம் இன்றுதான்- சில மணி நேரம் முன்னர்தான்- வந்தது.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
பாஸ் இதனால தான் நாமே பேங்க்ல...அக்கவுண்டே வைக்கிறதில்ல.,
ஹி ஹி
@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
பரவாயில்லை... ஆனால், SBI ல வைக்காம போயிட்டீங்களே... சகோ.சிராஜின் 1% வேணாம்... சகோ.பாசித்துக்கு நான் சொன்ன .01% கூட வேணாம்...
.0001% transfer charge கிடைத்தால் கூட நீங்க லட்சாதிபதி ஆச்சே..! ஹி...ஹி...
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.குலாம்.
எனக்கு அவ்வளவு ஆசையெல்லாம் இல்லை. ஒரு நூறு அல்லது இருநூறு கோடி வந்தாப்போதும், அத வச்சு பொழச்சுக்குவேன். எனக்கு SBI ல் இரண்டு கணக்கு இருக்கு. ஏதாச்சும் ஒண்ணுல போட்டா போதும்? செய்வாங்களா?
Assalamu alikum bro!
En sbi a/c ulla balence evvalavu theriyuma.....................Rs.20
:) :) :)
enaku ethu pola oru oru kodi anupinal pothum :) :) :)
@பழனி.கந்தசாமிஆசைப்படுவதில் கூட சிக்கனமா..? அதுவும், ரெண்டு அக்கவுன்ட் இருந்தும்..! :-)) வருகைக்கும் ஜாலியான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.பழனி.கந்தசாமி.
@s.jaffer.khanஅலைக்கும் ஸலாம் வரஹ்...
ஆசைப்படுவதில் கூட சிக்கனமா..? 1% serice charge..! அதுக்கு தக்கபடி யோசிங்க சகோ..!
வருகைக்கும் ஜாலியான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.s.jaffer.khan.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!