2011 நவம்பர் 26 - அன்றே இங்கே
சவூதியில் புத்தாண்டு..!?! புரியவில்லையா..?
ஹிஜ்ரி 1432 முடிந்து அன்றுதான் 1433
ஆரம்பித்தது. அன்றுதான் அவ்வருடத்தின் முதல் நாள். அன்று சவூதியில், யாரும் யாரிடமும் வாழ்த்து கூறியோ, இது
பற்றியோ, இந்த நாளை நினைவு படுத்தியோ ஏதும் தனிச்சிறப்பாக கூறிக் கொள்ளவும் வாழ்த்திக் கொள்ளவும் இல்லை; எக்ஸ்ட்ராவாக
மகிழவும் இல்லை. அடுத்தநாள் அலுவலகத்தில் புதிய காலண்டர்
(அதில் ஹிஜ்ரி/கிரிகோரியன் இரண்டும் இருக்கும்) மாட்டினார்கள். அவ்ளோதான்..! நான் இங்கு வந்த ஏழு வருஷமாக இப்படித்தான் பார்க்கிறேன். ஹிஜ்ரி வருடப்பிறப்பெல்லாம் இங்கே ஒரு விஷயமே இல்லை..!
அதேபோலத்தான்,
நேற்று இரவும் எந்தவித வித்தியாசமும் இல்லை..! டிசம்பர் 31 போய் ஜனவரி 1
வந்தது..! இன்று இங்கே காலண்டர் கூட மாறவில்லை..! இன்று மார்னிங் ஷிஃப்ட் லாக் எழுதும்போது அரபி
ஒருவர் தேதியை 1-1-2011
என்று பழக்கதோஷத்தில் எழுதியிருந்தார். நான் அதை திருத்தி 2012
என்றாக்கினேன். அவ்ளோதான். மற்றபடி சவூதியின் எந்தவொரு டிவியிலோ, வெளியே வீதியிலோ,
அலுவலகத்திலோ எவ்வித குறிப்பிடத்தக்க வித்தியாசமும் நேற்றிரவு இல்லை. "விஷ் யூ
ஹாப்பி........" என்றெல்லாம் எதுவும் இல்லை. வெடி, வண்ண விளக்குகள், வாழ்த்துகள் என எதுவும் சவூதியில் நான் இருக்கும் இடத்தில் பார்த்தது இல்லை. நான் இங்கு வந்த ஏழு வருஷமாக இப்படித்தான் பார்க்கிறேன். கிரிகோரியன் வருடப்பிறப்பெல்லாம் இங்கே ஒரு விஷயமே இல்லை..!
ஆனால்,
துபாய் டிவியில்... நேற்று புர்ஜ் கலீஃபாவில் வானவேடிக்கை - ஆடம்பர வண்ண விளக்குகள்... அமளி துமளி எல்லாம் நேரடி
ஒளிபரப்பு..! சுமார் பத்து நிமிஷம் தொடர்ச்சியாக வண்ணவண்ண வெடிகள்..! திர்ஹாமையும்
காற்றையும் அப்படித்தான் கரியாக்கினார்கள், தம் பணத்திமிரால் தம் மனதை நாசமாக்கிக்கொண்டு..! இவ்வுலகில் வேறொரு இடத்தில் பலர் உண்ண ஒருவேளை உணவுக்கும் உடுக்க ஒரே ஓர் ஆடைக்கும், படுக்க ஒரு கூரைக்கும் கையேந்தும் நிலையில்... இது வீண்
வெட்டிச்செலவு இல்லையா..? இங்குமட்டுமா..? நம் ஊரிலும்தானே..? உலகம் முழுதும்
பெரும்பாலான நாடுகளில் இப்படித்தானே..? பொருளாதாரமும் சுற்றுப்புறமும்
உடல்நலனும் உலகெங்கும் மாசாகும் இந்த மடநாளில்... என் மகிழ்ச்சி எங்கேயோ காணாமல்
போனது சகோ..!
எங்கிருந்தோ எப்போதோ எப்படியோ வந்து... சம்பந்தமே இல்லாமல் நமக்கும் இந்த பழக்கம் ஒட்டிக்கொண்டு விட்டது..!
ஏன் வாழ்த்து சொல்கிறோம் என்றோ, எதனால் சொல்கிறோம் என்றோ, இதனால் வருடம் முழுக்க அவர் எவ்வித துக்கமும் இன்றி ஹேப்பியாக இருப்பாரா என்றோ நாம் சிந்திக்கவில்லை. இதேபோல
தை/சித்திரை-முஹர்ரம்-உகாதி எல்லாம் அமர்க்களப்படுகிறதா என்றோ, இதைமட்டும் எப்போது, யார், எதனால் ஆரம்பித்தது... இந்த
புத்தாடை, பட்டாசு, மத்தாப்பு கொண்டாட்டங்களால் யாராருக்கெல்லாம் எவ்வளவு இலாபம், இதன் பின்னணி என்ன....
என்றெல்லாம் நாம் சிந்திப்பதில்லையே..! ஏன்..? தினமும் அன்றி, "புதிய காலண்டர் மாற்றும் அன்று" ஒருநாள் மட்டும் நமக்குள் மகிழ்வாக இருக்க பரஸ்பரம் வாழ்த்து சொல்லிக்கொள்கிறோம்..! நல்ல விஷயம்தான். ஆனால், அது வார்த்தையோடு நின்று விடாமல் செயலிலும் இருக்க வேண்டும். உலகம் முழுக்க மகிழ்வோடு இருக்க என்ன செய்யவேண்டுமோ அதை செய்ய வேண்டுமா... வேண்டாமா..?
மனதில் அமைதியும், வாழ்வில் அனைத்து வகை செல்வமும், அதில் என்றும் குறையாத அபிவிருத்தியையும் இறைவன் புறத்திலிருந்து தம்மீது நிலவ விரும்பாதார் எவர்தான் இருக்க முடியும் சகோ..?
ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் இன்று ஒருநாள் மட்டுமின்றி என்றென்றும் நம் மீது நிலவியிருக்கட்டுமாக..!
திருவிழா, இலாபம், பிறப்பு, வெற்றி என்று மகிழ்வோடு இருப்போரிடம் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் இதை வாழ்த்தாக சொல்லலாம்.
அது மட்டுமில்லை சகோ... அதேநேரம்,
போர், புயல், பூகம்பம், வெள்ளம், வறட்சி, இறப்பு, இழப்பு, தோல்வி என்று துக்கத்தால் பாதிக்கப்பட்டோரிடமும் கூட...
இதை ஒரு பிரார்த்தனையாகவும் சொல்லலாம். இவர்களிடம் சென்று... "விஷ் யூஹேப்பி நியூ இயர்" என்று சொல்ல முடியுமா..?
மனதில் அமைதியும், வாழ்வில் அனைத்து வகை செல்வமும், அதில் என்றும் குறையாத அபிவிருத்தியையும் இறைவன் புறத்திலிருந்து தம்மீது நிலவ விரும்பாதார் எவர்தான் இருக்க முடியும் சகோ..?
ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் இன்று ஒருநாள் மட்டுமின்றி என்றென்றும் நம் மீது நிலவியிருக்கட்டுமாக..!
திருவிழா, இலாபம், பிறப்பு, வெற்றி என்று மகிழ்வோடு இருப்போரிடம் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் இதை வாழ்த்தாக சொல்லலாம்.
அது மட்டுமில்லை சகோ... அதேநேரம்,
போர், புயல், பூகம்பம், வெள்ளம், வறட்சி, இறப்பு, இழப்பு, தோல்வி என்று துக்கத்தால் பாதிக்கப்பட்டோரிடமும் கூட...
இதை ஒரு பிரார்த்தனையாகவும் சொல்லலாம். இவர்களிடம் சென்று... "விஷ் யூஹேப்பி நியூ இயர்" என்று சொல்ல முடியுமா..?
18 ...பின்னூட்டங்கள்..:
assalamu alaikum,
உங்கள் கருத்தை ஆமோதிகின்றேன்,//இவ்வுலகில் வேறொரு இடத்தில் பலர் உண்ண ஒருவேளை உணவுக்கும் உடுக்க ஒரே ஓர் ஆடைக்கும், படுக்க ஒரு கூரைக்கும் கையேந்தும் நிலையில்... இது வீண் வெட்டிச்செலவு இல்லையா..?//உண்மையை ஊரறிய உரக்க சொல்லும் நறுக்கு வரிகள் ...ஆங்கில புத்தாண்டு பத்தி www.tvpmuslim.blogspot.com இந்த தளத்திலும் உள்ளது....வந்து படிங்க உங்க தளத்திற்கு நாங்க வந்தோம்ல,எங்க தளத்திற்கும் நீங்க வாங்க...and join as a blog member.......
www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....
பயணம் செய்யும் பொழுது நாம் எண்ணிச் செல்லும் மைல் கற்கள் தான் ஆண்டுகள்.... இலக்கை அடைய எவ்வளவு தூரம் என்று தெரியாததால், இவ்வளவு மைல்கள் கடந்திருக்கிறோம்... குறைந்த பட்சம் காலண்டர் தயாரிக்கப் பட்டு ஆண்டுகள் கழிந்து விட்டன... ஆனால் விடியல் பலர் வாழ்வில் வரவே இல்லை... ஆகையால் இனியும் கிழிந்த தேதிகளை நினைவில் கொள்ளாமல் இந்த வருடமாவது விடியலை கொண்டு வருமா என்று காத்திருக்காமல் விடியலை கட்டி இழுத்து வருவோம்....
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
நாள்களில் நன் நாளும் இல்லை வீண் நாளும் இல்லை என்பதை அழகாக எடுத்துரைத்துள்ளிர்கள் சவுதியில் இருப்பதை போன்றே இங்கேயும்
(துபாயை தவிர்த்து)குறிப்பாக அபு தாபியில் எந்த ஒரு ஆடமபரத்தையும் பார்க்க முடியாது.
நன்மை செய்து தீமையை தடுத்தாலே போதும்,எல்லா நாள்களும் நன் நாளே.
@திருவாளப்புத்தூர் முஸ்லீம்அலைக்கும் ஸலாம் வரஹ்...
அழைப்பிற்கு நன்றி. வந்தேன், படித்தேன், உங்களுடையது மிக அருமையான பதிவு சகோ.தி.முஸ்லிம்.
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.
@suryajeevaவீண் வெட்டி பகட்டுச்செலவுகள் மற்றும் சுற்றுப்புற சுகாதாரக்கேடு வேண்டாம் என்றுதான் இப்பதிவு. மற்றபடி... வெறும் வாழ்த்துச்சொற்களால் அன்றி, செயலால்... விடியலை கட்டி இழுக்க கை கோர்ப்போம்..! வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.சூர்யாஜீவா.
@அந்நியன் 2அலைக்கும் ஸலாம் வரஹ்...
//அபு தாபியில் எந்த ஒரு ஆடமபரத்தையும் பார்க்க முடியாது.//---அஹா..! அருமை. அல்ஹம்துலில்லாஹ்.
//நன்மை செய்து தீமையை தடுத்தாலே போதும்,எல்லா நாள்களும் நன் நாளே.//---அருமையான கருத்து.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.அய்யூப்.
தங்கள் கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன். புத்தாண்டுக் கொண்டாட்டம் தேவையற்றது. கொண்டாடுவது தனிநபர் விருப்பம் என்பர் சிலர். இங்கே தமிழகத்தில் பல இளசுகள் நள்ளிரவில் குடித்து கும்மாளம் போட்டு விட்டு ஆட்டம் போட்டு தாங்கள் சீரழிவதுடன் சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கும் பல வகைகளில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றர்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக்!
தற்போது மிக அவசியமான பதிவு. இஙகும் புது வருடம் என்ற எந்த அறிகுறியும் இல்லை. துபாய் கொண்டாட்டத்துக்கு இவ்வளவு செலவு செய்வதை வறிய நாடுகளுக்கு கொடுத்துதவலாம்.
தமிழ்நாட்டில் புத்தாண்டு அன்று டாஸ்மார்க் கடைகள் எப்படி வரவேற்கின்றன என்பதற்கு தினகரனில் வந்த ஒரு செய்தியை பார்ப்போம்.
நாளை புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் வழக்கத்தைவிட அதிகமாக மது விற்பனை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ரூ.200 கோடிக்கு மது விற்பனை என்ற இலக்கை டாஸ்மாக் நிர்ணயித்துள்ளது. அதாவது 31 மற்றும் 1ம் தேதிகளில் விற்பனை இலக்கு ரூ.200 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக எல்லா கடைகளிலும்
எல்லாவிதமான பிராண்ட் மது வகைகளும் கிடைக்கும் வகையில் அந்தந்த மாவட்ட குடோன்களில் இருந்து சரக்குகளை கொண்டு சென்று இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இரவோடு இரவாக லோடுகளை அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Dinakaran 31-12-2011
உண்மையான கருத்து.ஒருவருக்கொருவர் வாழ்த்துசொல்லிக்கொள்வதாலொன்றும் பெரிய மாற்றம் வந்துவிடப்போவாதில்லை.இருந்தாலும்,ஒருநாளாவது ஒருத்தரையொருத்தர் வாழ்த்தும் பழக்கம் இருக்கட்டும் என்று அதை ஏற்றுக்கொண்டாலும்,இந்த-பட்டாசுக்கூத்துகளெல்லாம் ஏன்?என்பதுதான் எனக்கும் புரியவில்லை.காசைக்கரியாக்குவது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அதை இந்த வாணவேடிக்கைகளுக்கூடாகத்தான் நேரடியாகப் பார்த்தேன்.வெறுப்புதான் வருகிறது.
இந்தப்புதுவருடம் மட்டுமல்ல எந்தப்பண்டிகையாகிலும் இப்படிக்கொண்டாடுவதை அந்த அந்த சமூகத்தினர் தவிர்த்துக்கொள்ளவேண்டுமென்பதே என் ஆசையும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இதைவிட அருமையான வாழ்த்து பரிமாற்றத்தை
எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் சொல்லமுடியாது.
உங்கள் பதிவு அருமையான விழிப்புணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்தட்டும்!
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...
செவிட்டில் அறைந்தாற்போல் சொல்லியிருக்கிறீர்கள்.சகோ.....
அஸ்ஸலாமு அலைக்கும் துபாயில் புத்தாண்டுக்காக நிறைய செலவு செய்து வானவேடிக்கை ஒருபுறமென்றால் பிற நாட்டிலிருந்து வேலை செய்வதற்க்காக வந்திருந்த குறிப்பாக இந்தியர்கள் தண்ணீரை பாலித்தீன் பைகளில் நிரப்பி தங்களுடைய flatலிருந்து வருவோர் போவோர் மீது எறிந்து தங்களுடைய மகிழ்ச்சியை(?) பரிமாறிக்கொள்கிறார்களாம்.அடுத்தவனை தொந்தரவு செய்வதில் என்ன சந்தோஷம் கொண்டார்களோ தெரியவில்லை.எத்தனை குப்பைகள் பார்க்கவே கண்ராவியாக இருக்கும்.இவர்களெல்லாம் எப்போதுதான் திருந்த போறாங்களோ தெரியவில்லை.
@பொதிகை///இங்கே தமிழகத்தில் பல இளசுகள் நள்ளிரவில் குடித்து கும்மாளம் போட்டு விட்டு ஆட்டம் போட்டு தாங்கள் சீரழிவதுடன் சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கும் பல வகைகளில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றர்.///---பொருப்பற்றுத்திரியும் இந்த புத்தாண்டு பொறுக்கிகளுக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
வருகைக்கும் தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ.பொதிகை.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
ம்ம்ம்... துபாய்கார்கள் காற்று மாசு மூலம் மக்கள் நலனை பாதித்தார்கள் என்றால், தமிழ்நாடு அரசு சாராயம் மூலம் மக்களை பாதிக்கிறது..!
குடிப்பவர்களும் குடிக்க வைப்பவர்களும் திருந்த வேண்டும்... அல்லது திருத்தப்பட வேண்டும்..!
வருகைக்கும் செய்தியை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@சுவடுகள்//இந்த-பட்டாசுக்கூத்துகளெல்லாம் ஏன்?.... ....இந்தப்புதுவருடம் மட்டுமல்ல எந்தப்பண்டிகையாகிலும் இப்படிக்கொண்டாடுவதை அந்த அந்த சமூகத்தினர் தவிர்த்துக்கொள்ளவேண்டுமென்பதே என் ஆசையும்.//---மிகவும் உறுதியான சரியான கருத்துக்கள் சகோ.சுவடுகள்..!
வருகைக்கும் செய்தியை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சகோ.சுவடுகள்.
@மு.ஜபருல்லாஹ்ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் தங்கள் மீதும் நிலவியிருக்கட்டுமாக..!
///இதைவிட அருமையான வாழ்த்து பரிமாற்றத்தை
எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் சொல்லமுடியாது.///---ஆமாம் சகோ.ஜபருல்லாஹ்...
திருவிழா, இலாபம், பிறப்பு, வெற்றி என்று மகிழ்வோடு இருப்போரிடம் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் இதை வாழ்த்தாக சொல்லலாம்.
அது மட்டுமில்லை சகோ... அதேநேரம்,
போர், புயல், பூகம்பம், வெள்ளம், வறட்சி, இறப்பு, இழப்பு, தோல்வி என்று துக்கத்தால் பாதிக்கப்பட்டோரிடமும் கூட...
இதை ஒரு பிரார்த்தனையாகவும் சொல்லலாம். இவர்களிடம் சென்று... "விஷ் யூஹேப்பி நியூ இயர்" என்று சொல்ல முடியுமா..?
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.மு.ஜபருல்லாஹ்.
@ரஹீம் கஸாலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//செவிட்டில் அறைந்தாற்போல் சொல்லியிருக்கிறீர்கள்.சகோ.....//---ஹா...ஹா...ஹா... அந்த வெடிச்சத்தங்களும் செவிட்டில் அறைந்தார்போலத்தானே இருந்திருக்கும்..? அப்போ, இது நல்ல பதிலடிதான்..!
வருகைக்கும் சூடான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ரஹீம் கஸாலி.
@முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//தண்ணீரை பாலித்தீன் பைகளில் நிரப்பி தங்களுடைய flatலிருந்து வருவோர் போவோர் மீது எறிந்து தங்களுடைய மகிழ்ச்சியை(?) பரிமாறிக்கொள்கிறார்களாம்.//---அடக்கொடுமையே..! இதற்கப்புறம் என்ன அங்கே ஹேப்பி வேண்டி கிடக்கு..?
//இவர்களெல்லாம் எப்போதுதான் திருந்த போறாங்களோ தெரியவில்லை.//---திருந்த பிரார்த்திப்போம்..!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.முஹம்மத் ஷஃபி அப்துல் அஜீஸ்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!