புத்தாண்டு தினத்தன்று கர்நாடகா-பீஜப்பூர் மாவட்டம், சிந்தகி என்ற ஊரில் அரசு வட்டாட்சியார் அலுவலகம் உட்பட பல அலுவலகங்கள் உள்ள ஒரு வளாகத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டு பறந்து கொண்டிருக்க... உடனே, அந்த ஊரில் பதட்டம்..!
பிஜேபி, ஸ்ரீ ராம் சேனை உட்பட்ட தடை செய்யப்படவேண்டிய அனைத்து RSS-சங்பரிவாரங்களின் ஆதரவோடு... கடைய(உ)டைப்பு, கட்டுப்பாடற்ற ஊர்வலம், விஷமகோஷம், வன்முறை முழக்கம், வெறியாட்டம், தீவைத்தல், வாகனங்களை சேதப்படுத்துதல், சாலை மறியல், தர்ணா, போக்குவரத்து நிறுத்தம், பள்ளி கல்லூரி கட்டாய விடுமுறை, அலுவலகம் மூடல், அப்பாவி மக்கள் அவதியுறல், மாமூல் வாழ்க்கை பாதிப்பு, கலவரம், லத்தி சார்ஜ், பந்த்... எல்லாமே ஜெகஜ்ஜோதியாக அடுத்தடுத்து திட்டமிட்டபடி மக்கள் விரோத செயல்கள் அரங்கேறின. பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாக வழக்கம்போலவே முஸ்லிம்கள் இவர்களால் 'சந்தேகிக்கப்பட்டு'(?) தூற்றப்பட்டனர். உடனே கொடி ஏற்றியவர்களை கைது செய்ய கலவரக்காரர்களால் காவல் துறையினரிடம் கோரப்பட்டது..!!!
ஆனால், கயவர்களை கண்டுபிடித்து... கைது செய்தவுடன், அவர்களிடம் பேச்சு மூச்சை காணவில்லை..! அதுவரை அப்படி குதித்தவர்கள் அடங்கிப்போய் ஓடி ஒளிந்து உட்கார்ந்து விட்டார்கள். அது மட்டுமல்ல, "நான் இல்லை நீதான்..." "...இல்லை ...இல்லை ...நீ தான்..!" "உனக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லையே..!" "நீ யார்..?" என்று நேற்றுவரை ஒன்றாக இருந்து கத்தியவர்கள்... தமக்குள் இன்று சண்டை போட்டுக்கொள்ள ஆரம்பித்து விட்டனர்..!
'இஸ்மாயில்' என்று கையில் பச்சை குத்தி காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே காலத்தில் இருந்தே... இப்படி முஸ்லிம்கள் மீது பழிபோட்டு அப்பாவி மக்களிடம் ஹிந்துத்வா மதவெறியூட்டி... கொலைக்களம் காணத்துடிக்கும் ஈவிரக்கமற்ற இந்த பயங்கரவாதிகளுக்கு கண்டனப்பதிவு போடுவதை விட, இந்த உண்மையை மூன்றே நாளில் கண்டுபிடித்தோரை பாராட்டி பதிவுபோடுவதே இப்போது மிக முக்கியம்..!
'இஸ்மாயில்' என்று கையில் பச்சை குத்தி காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே காலத்தில் இருந்தே... இப்படி முஸ்லிம்கள் மீது பழிபோட்டு அப்பாவி மக்களிடம் ஹிந்துத்வா மதவெறியூட்டி... கொலைக்களம் காணத்துடிக்கும் ஈவிரக்கமற்ற இந்த பயங்கரவாதிகளுக்கு கண்டனப்பதிவு போடுவதை விட, இந்த உண்மையை மூன்றே நாளில் கண்டுபிடித்தோரை பாராட்டி பதிவுபோடுவதே இப்போது மிக முக்கியம்..!
இதற்கு முன் இரண்டு பிளாஷ்பேக்ஸ் பார்த்து விடுவோம்..!
பிளாஷ்பேக் -1 : P.கண்ணப்பன்..!
தென்காசி RSS அலுவலக குண்டு வெடிப்பு தொடர்பாக உடனடியாக சந்தேகத்தின் பேரில், தலைப்புச் செய்தியில் "இஸ்லாமிய(?) பயங்கரவாதிகள்" கைது செய்யப் பட்டிருக்க, அந்த வழக்கை தன் கையில் எடுத்து... திறம்பட துப்பறிந்து... "தங்கள் அலுவலகத்தில் தாங்களே வெடி குண்டு வைத்துக் கொண்டார்கள், இந்த RSS பயங்கரவாதிகள்" என்ற உண்மையை வெளிக்கொணர்ந்த அன்றைய திருநெல்வேலி DIG (பின்னர், மதுரையில் IG) P.கண்ணப்பன் IPS மற்றும் அவருடைய டீமை தமிழ் முஸ்லிம்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. "முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள்" என்ற புனையப்பட்ட அவப்பெயரை முதலில் நீக்கியவர். ஆனாலும், இந்திய ஊடகங்கள் இதை துணுக்குச் செய்தியாகக்கூட பகிராமல் மறைத்தன.!
பிளாஷ்பேக் -2 : ஹேமந்த் கார்கரே..!
இன்றைய தேதியில் இந்தியாவில் உள்ள எந்த ஒரு முஸ்லிமும் இவரை தெரியாமலோ, தெரிந்தோர் மறந்து போயிருக்கவோ வாய்ப்பே இல்லை..! நான் உட்பட இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தலை நிமிர்ந்து தனக்கான குடி யுரிமையுடன் ஜம்பமாக பயங்கரவாதத்தை எதிர்த்து அவைகளுக்கு தடைகோரி பதிவில் எழுத- பொது வெளியில் பேச- முடிகிறது என்றால்... பற்பல குண்டுவெடிப்பு வழக்கில் ஏற்கனவே "இஸ்லாமிய(?) பயங்கரவாதிகள்" சந்தேகத்தின் பேரில் தலைப்புச் செய்தியில் கைது செய்யப் பட்டிருந்தும், அனுதினமும் வந்த காவிகளின் கொலை மிரட்டல்களை பொருட் படுத்தாது அந்த வழக்குகளில் உண்மையை வெளிக் கொணர்ந்த இவரின் நேர்மையான உயிர்க்கு அஞ்சா உழைப்பே காரணம். இவரை நம் நாட்டிற்கு சரியான நேரத்தில் ஈந்த இறைவனுக்கே புகழனைத்தும்.இவர்கள் போல இன்னும் நிறைய நேர்மையான அதிகாரிகளை நம் நாட்டிற்கு தரச்சொல்லி, இத்தளத்தில் முன்பொரு பதிவில் இறைவனிடம் நாம் பிரார்த்தித்து உள்ளோம் சகோ..! இவர்கள் போல கர்நாடகா-பீஜப்பூர் சம்பவத்தில் இன்னும் சிலரை காண்கிறோம்.
.
இந்த பாகிஸ்தானிய கொடியேற்று சம்பவம் நடந்த நான்காவது நாள் அதிகாலை (வெறும் மூனே நாள்தான் துப்பு துலக்கல்) "ஹிந்துத்துவ-RSS-சங்பரிவார கும்பலில் ஒன்றான 'ஸ்ரீ ராம் சேனா' வினர்தான் குற்றவாளிகள்" என்று கண்டு பிடிக்கப்பட்டது... நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சாதனை அல்லவா..?!
இதை நிகழ்த்தியவர்கள் பற்றி... இவர்களை ஃபோகஸ் பண்ணி பாராட்டி, தட்டிக்கொடுத்து புகழ்ந்து பேச, ஃபோட்டோ போட்டு எழுத ஏனோ கிட்டத்தட்ட எவருமே முன்வர வில்லை..! அதனால் என்ன..? நாம் எதற்கு பிளாக் வைத்து இருக்கிறோம்..? தனிப்பதிவு போட்டு பாராட்டுவோம்..! போதாக்குறைக்கு அவர் ஒரு பதிவர் (Blogger) வேறு..! விட்டு விடுவோமா..?
மங்களூர் பஃப் மற்றும் காதலர் தின தாக்குதலுக்கு பெயர்போன 'ஸ்ரீ ராம் சேனா'வின் மாணவர் அணி தலைவனான Rakesh Siddaramiah Mutt (19) என்பவனும், அவனோடு படிக்கும் அவ்வமைப்பின் கல்லூரி மாணவர்கள் Sunil Madiwalappa (18), Anil Kumar (18), Parashuram Ashok (20), Rohit Eshwar (18), Mallanagouda Vijaykumar (18) 5 பேரும் ( இதில் ஈடுபட்ட Arun Vaghmore (20) என்பவன் தப்பிவிட்டான்... தேடப்படும் இவன் மட்டும் இன்னும் பிடிபட வில்லை)....மொத்தம் ஏழு பேர் சேர்ந்து... இரவில் அங்கே கொடியை ஏற்றிவிட்டு காலையில் வந்து நல்லவர்கள் போல கொடியை ஏற்றியவர்களை உடனே கண்டுபிடித்து கைது செய்யக்கோரி கோஷம்போட்டு பாகிஸ்தான் கொடியை எரித்து கலவரம் செய்து இருக்கின்றனர்..!
முதலில் அந்த ஜனவரி 1 இரவில் அந்த அலுவலக வளாகத்தில் இரவு அரைமணி நேரம் (3:30-4:00) ஒரு இருசக்கர மோட்டார் வாகனம் நிறுத்தப்பட்டு இருந்ததுதான் முதல் துப்பு. அதை கண்ட ஐ விட்னஸ் சொன்ன தகவலின்படி... அந்த வாகனத்துக்கு சொந்தக்காரனை, வேறொரு இடத்தில் பார்த்த அந்த ஐ விட்னஸ் அவனை அடையாளம் காட்ட... அவனை அணுகி விசாரிக்கும் போது தெரியவந்தது என்னவெனில்... பைக் சொந்தக்காரனான இவனும் இவன் நண்பனும் பிஜப்பூரில் புத்தாண்டு இரவு கொண்டாட்டங்கள் முடிந்து நள்ளிரவில் திரும்பும்போது தம் நண்பர்களை அந்த அரசு அலுவலக வளாகத்தில் சந்தித்ததாக தெரிவித்தனர். கூடவே அவர்கள் செய்த காரியமும் இவர்கள் மூலம் வெளிவந்து விட்டது. இவர்களின் மூலம் மற்ற நண்பர்கள் கண்டறிந்து சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டனர். தப்பிவிட்ட ஒருவன் மட்டும் இன்னும் சிக்கவில்லை. தாசில்தார் அலுவலகத்தில் ஏற்றப்பட்ட பாகிஸ்தான் கொடி சுனில் வீட்டில் தான் செய்யப்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது..! புதன்கிழமை, ஜனவரி 4 ம் தேதி அதிகாலை மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
பொதுவாக முஜாகிதீன், சிமி, தொய்பா, கொய்தா என்று அனானி ஈமெயிலை ஆதாரமாக குற்றம் சாட்டி சந்தேகத்தின் பேரில் 'தடா பொடா' என்று கைது செய்யப்படுபவர்கள் கூட, தங்கள் முகங்களை கைகளால் மறைக்க இயலாதவாறு பின்னால் கட்டப்பட்டு செய்தியாளர்களிடம் முகம் நிமிண்டி காட்டப்படுவது நாம் அறிந்ததே..!
பாக்.கொடி ஏற்றிய ஸ்ரீராம் சேனாவின் 'பர்தா' அணிந்த கேடிகள் |
ஆனால், இங்கே... சாட்சி, ஆதாரத்துடன் அகப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னரும் கூட... இவர்களுக்கு முகத்தை மறைக்க பிரான்ஸ் நாட்டில் தடை செய்யப்பட்ட முகம் மறைக்கும் புருகா-நிகாப் சலுகைகள் எல்லாம் தரப்பட்டுள்ளன..! சபாஷ்..! இந்த "புதிய மாற்றத்தை" நாம் வரவேற்போம். அதேநேரம்... நாளை ஒருநாள்... 'குற்றவாளிகள்' என்று நீதிமன்றம் தீர்பளித்த பின்னராவது இவர்களின் முகத்தை "நடுநிலை(?) ஊடகங்கள்" நமக்கு காட்டுவார்கள் என்று நம்புவோம்..!
"ஒரு பக்கம், நாங்கள் குற்றவாளிகள் அல்ல... RSS தான் குற்றவாளி" என்று கூறும் ஸ்ரீ ராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தாலிக்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூடவா இந்த உண்மையை கண்டுபிடித்த சாதனையாளர்களுக்கு இல்லை..? அவனுக்கெல்லாம் பக்கம் பக்கமாக அத்தனை ஃபோட்டோக்கள் கூகுளில் உள்ளன..! ஹேமந்த் கார்கரேவின் வாரிசுகளான இவர்களுக்கு ஒரே ஒரு போட்டோ எடுப்பதற்குள்...அப்பப்பா 2 நாளாக நான் பட்ட பாடு..! அவர்கள் ஒருவரல்ல சகோ..! 5 பேர் கொண்ட டீம்..! இந்த ஐந்து பேரில், அதன் டீம் தலைவர்தான் சாதனையாளரான நம் பதிவர்..! கடைசியில், அவரின் ப்ளாக் ப்ரோஃபைல் போட்டாதான் எனக்கு கிடைத்தது..! நியூசில் அல்ல..!
(பிற்சேர்க்கை) மேலேயுள்ள ப்ளாக் ப்ரோஃபைல் லிங்க் இதுதான்....
http://www.blogger.com/profile/09631126950354305286
(பிற்சேர்க்கை) இந்த ப்ரோஃபைளில் உள்ள அவரின் ப்ளாக் முகவரி இதுதான்....
http://bijapurpolicenews.blogspot.com/
http://www.blogger.com/profile/09631126950354305286
(பிற்சேர்க்கை) இந்த ப்ரோஃபைளில் உள்ள அவரின் ப்ளாக் முகவரி இதுதான்....
http://bijapurpolicenews.blogspot.com/
இவர்தான் ஒரு "special investigation team" ஒன்றை தன்னுடைய DSP - முத்துராஜ் தலைமையில் உடனடியாக ஏற்படுத்தி... அதில் DCIB Police Inspector சித்தேஷ்வர், CPI
சிதம்பர் மற்றும் PSI பாபகவுடா படில் ஆகியோரை இணைத்தார். இவர்கள்தான் எவ்வித உயிரிழப்புகளும் இன்றி கலவரத்தையும் கட்டுப்படுத்தி, பந்தையும் அமைதியாக நடக்க அனுமதித்து, இதன் மூலம் முஸ்லிம்கள் மீது தேசத்துரோக பழிபோட்டு, அப்பாவி இந்து மக்களை தூண்டிவிட்டு பெரிய அளவில் மதக்கலவரத்தை கர்நாடகாவில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததை முறியடித்தும் உள்ளனர்.
நம் நாட்டில் இவரை/இவர் டீமை எவரும் கண்டு கொள்ளா விட்டாலும் கூட... தான் உண்டாக்கிய தன் டீமுக்கு தானே ரூ.10,000 வெகுமதி வழங்கி கவுரவித்தும் உள்ளார்.
நம் சக பதிவரான... இவருக்கு நம் பாராட்டுக்களை மகிழ்வோடு தெரிவிப்போம் சகோ..!
நம் சக பதிவரான... இவருக்கு நம் பாராட்டுக்களை மகிழ்வோடு தெரிவிப்போம் சகோ..!
Well done, Bijappur SP, Dr. D.C. RAJAPPA & team..!
அவர் ஊடக பேட்டியில் சொன்னது.......
"Rakesh is the Sindhagi unit president of Sene's student wing and the
other accused are its members. They are all students in various
colleges of Sindhagi and Bijapur. Their aim was to create communal
unrest and gain advantage for their campaign" Rajappa said.
Rajappa said: "The accused have confessed...They were planning to shift
base to Goa for a few days by mid- January. They had stitched the
Pakistani flag at an accomplice's house in Sindhagi.Investigations are
on to find out if other Sene leaders are involved." He said the accused
conspired for a week before hoisting the flag on the night of December
31.
They returned the following morning and staged their demonstration,
pelting stones at a government- owned bus. "Their motive was clear:
hoist the flag, create unrest and take mileage by protesting against the
incident," Rajappa said.
Thanks to these news sources for references.....
http://mangaloretoday.com/mt/index.php?action=headlines&type=2572 (special investigation team)
http://indiatoday.intoday.in/story/sri-ram-sene-activists-pakistani-flag/1/167409.html
http://www.megamedianews.in/index.php/44924/gang-of-7-in-rama-sene-hoisted-the-pak-flag-6-arrested-one-absconds/
அப்புறம் ஒரு கேள்வி..!
இந்த சம்பவம் பற்றிய செய்திகளை ஜனவரி 2 மற்றும் 3 ம் தேதிகளில் நிறைய தமிழ் & ஆங்கில தளங்களில் நான் படித்த போது அங்கேயெல்லாம் தவறாமல் நான் பார்த்த சில பின்னூட்டங்களின் கருத்து என்னவென்றால்... "பாகிஸ்தான் கொடியை நம் நாட்டில் ஏற்றிய இந்த தேசத்துரோத முஸ்லிம் '@$*#~^+}?!(%='களை உடனே பிடித்து பாகிஸ்தானுக்கு பார்சல் கட்டி பார்டருக்கு அந்தப்புறம் தூக்கி வீசிவிடவேண்டும்" என்பதுதான்..!
ஆனால், இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு விரட்டும் தீயோரின் சூழ்ச்சியில் மீண்டும் மீண்டும் மண்..! போகாதோரை கலவரம் ஆரம்பித்து இனச்சுத்திகரிப்பு செய்யும் பயங்கரவாத சூழ்ச்சியும் செத்தது..! அல்ஹம்துலில்லாஹ்..!
சரியான ஆதாரம், நிஜமான சாட்சி என்று ஏதும் இல்லாவிட்டாலும் ஊடகம் ஏற்படுத்திவிட்ட மாயையினால் 'பயங்கரவாதி' என்று மக்கள் மனதில் நன்கு பதியப்பட்டுவிட்ட அப்சல் குருவுக்கு... பெருவாரியான இந்திய மக்கள் ஆசைக்கிணங்க தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது போல.......
........இந்தியமக்களான அந்த பெருவாரியான பின்னூட்டவாதிகளின் ஆசைக்கிணங்க... இந்த பச்சைக்கொடியேற்றிய காவிகள் ஏழு பேரையும் உடனே பார்ஸல் கட்டி இந்திய-பாகிஸ்தான் எல்லையோர இரும்பு முள் வேலிக்கு அந்தப்பக்கம் நைசாக ராவோடு ராவா தூக்கி கடாசி விட வேண்டும்..!
இவர்கள் மீது, இப்படி ஒரு நீதி மன்ற தீர்ப்பு வந்தால் எனக்கு ஓகே..! உங்களுக்கும் ஓகே தானே சகோ...?
Well-placed police sources, however, told The Hindu that, the entire
incident was carried out at the behest of an elected representative of
the BJP, whose political agenda was to foment communal disturbances in
the district.
.
=========================================================================
பிற்சேர்க்கை
ஒருவழியாக ஊடகங்கள் மெளனம் கலைக்கின்றன..! 4-ம் தேதியிலிருந்து வாய்திறக்காமல் 8-ம் தேதி லேசாக பட்டும்படாமல்மென்று விழுங்கிவிட்டு, இன்று11-ம் தேதி மேலும் சில அதிர்ச்சி திருப்பங்களுடன் செய்தி வெளியிட்டுவிட்டது,
THE HINDU..!
ஒருவழியாக ஊடகங்கள் மெளனம் கலைக்கின்றன..! 4-ம் தேதியிலிருந்து வாய்திறக்காமல் 8-ம் தேதி லேசாக பட்டும்படாமல்மென்று விழுங்கிவிட்டு, இன்று11-ம் தேதி மேலும் சில அதிர்ச்சி திருப்பங்களுடன் செய்தி வெளியிட்டுவிட்டது,
THE HINDU..!
Pakistani flag hoisting was a Hindutva plot to foment strife, police say.
(7-th hindutva activist also arrested yesterday.)
Meanwhile, members of the district unit of Sri Ram Sene have said the
accused do not belong to their outfit but are members of the Rashtriya
Swayamsevak Sangh (RSS).
At a press conference here, they released several pictures to prove
their point, alleging that the police had been pressured not to drag the
name of the RSS into the issue.
.
அடப்பாவிகளா..! உங்கள் கொட்டம் அடங்காதா..? எல்லாரும் ஒரே ஹிந்துத்துவா குளத்தில் ஊறிய-ஊறுகின்ற மட்டைகள்தானே..? அந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட BJP பயங்கரவாதியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வார்களா...? RSS மற்றும் ஸ்ரீ ராம் சேனா இயக்கங்களை தடை செய்வார்களா..?
73 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும்,
அட்டகாசமான பதிவு. வித்தியாசமான approach. உங்களுடன் சேர்ந்து குற்றத்தை கண்டுபிடித்த அந்த காவல்துறையினரை மனதார பாராட்டுகின்றேன்.
வஸ்ஸலாம்..
அருமையான பதிவு சகோ
நல்லது. இதுபோன்ற ஒரு சமூக பொறுப்பான காரியத்தில் பொது புத்தி கொண்டு ஒருங்கே நின்றாலே, பல விஷயங்கள் நல்வழி நடக்கும்!
அப்படியே இந்த இஸ்லாமிய தலைவர்களை ஒற்றுமையின் பால் - அநியாங்களுக்கு எதிராக ஒருமித்த குரல் கொடுக்க ஒரு இடுகை எழுதுங்கள். இவ்வுலக வாழ்கை வீணும் விளையாட்டுமே என்று சொல்லிவிட்டு , நேரில் கண்டால் சலாம் சொல்லவேண்டுமே என்று நேரில் காண்பதை தவிர்க்கும் அவர்களையும் ஒரு பிடி பிடியுங்கள்!
ஐஜி கண்ணப்பன் ஐ ப்பி எஸ், ஹேமந்த் கார்கரே ஐ ப்பி எஸ் ஆகியோருடம் எஸ் ப்பி ராஜப்பாவுக்கும் என்னுடைய சல்யூட்!
இவ்வாறு உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படும்போது அவர்கள்மீதான நடவடிக்கை, இறுதி தீர்ப்பு போன்றவை குறித்த செய்திகளும் வெளியாக வேண்டும்.
இத்தகைய நேர்மையான அதிகாரிகள் சமூகத்தில் அடையாளம் காட்டப்படவேண்டும். இந்திய சமூகம் இவர்களுக்குக் கடமைபட்டுள்ளது.
நல்லதொரு பதிவுக்காக சகோதரர் ஆஷிக் முஹம்மதுவுக்கு நன்றிகள்.
ரொம்பவும் ஓவரா பில்டப் நம்ம நாட்டு கொடிக்கு குடுப்பது குறைந்தால் இதுப்போல தேவை இல்லாத பிரச்சனைகள் வராது . ((அமெரிக்க கொடியை உள்ளாடையாக அணிந்தாலும் யாருமே கவலைபடுவதில்லை ))
Thank you sir "Bijappur SP, Dr. D.C. RAJAPPA & team"
JAZAKALLAH Sago for sharing this ...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்த பச்சைக்கொடியேற்றிய காவிகள் ஏழு பேரையும் உடனே பார்ஸல் கட்டி இந்திய-பாகிஸ்தான் எல்லையோர இரும்பு முள் வேலிக்கு அந்தப்பக்கம் நைசாக ராவோடு ராவா தூக்கி கடாசி விட வேண்டும்..!
இவர்கள் மீது, இப்படி ஒரு நீதி மன்ற தீர்ப்பு வந்தால் எனக்கு ஓகே..! உங்களுக்கும் ஓகே தானே சகோ...?
பின்னே! தன் மகளாக இருந்தாலும் தண்டனை எல்லோருக்கும் பொதுவானது என்று நபி (ஸல்)அவர்கள் கூறியிருக்கிறார்களே!
Bijappur SP, Dr. D.C. RAJAPPA & team..!
உங்களைப் போல் உள்ள மிக சிலரால்தான் அல்லாஹ் எங்களுக்கு பாதுகாப்பை தருகிறானோ?
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் நெத்தியடி முஹம்மத் ஆஷிக்,
அரை நூற்றாண்டு கடந்த தங்களின் செயல்திட்டத்தில் அவ்வப்போது இதுமாதிரியான சில சறுக்கல்களை சங்பரிவார் கூடாரம் சந்தித்து வருகிறது. ஆனாலும் மனம் தளராமல் சங்பரிவார்கள் தமது முயற்சியை தொடர்ந்து கொண்டிருப்பார்கள். பல இடங்களில் அவர்கள் வெற்றியும் பெற்று விட்டனர். "Who killed Karkare" என்ற புத்தகத்தில் மஹாராஷ்டிராவின் காவல்துறை முன்னாள் ஐ.ஜி முஷ்ரிப் அவர்கள் இதுகுறித்து அருமையாக விளக்கியிருப்பார்கள். பாகிஸ்தான் கொடியை முஸ்லிம் பெயர்தாங்கிகள் ஏற்றிவிட்டால் குய்யோ முய்யோ என்று ஊளையிடும் ஊடகங்கள் இந்த விசயத்தில் அடக்கியே வாசிப்பதன் மர்மம் புரிகிறதா? எந்தளவிற்கு சங்பரிவார் கூடாரம் சில முக்கிய துறைகளை ஆக்கிரமித்திருக்கிறது என்று. அட பதிவுலகின் தேசபிமானிகள் கூட (இவர்களில் பலர் போலி தேசியம் பேசி திரிகின்றவர்கள்) இது குறித்து மூச்சு விடவில்லை. இவ்வளவு முயற்சிகள் செய்து உண்மையை கண்டறிந்த பீஜப்பூர் காவல்துறை குழு குறித்த செய்திகளை பகிர்ந்து கொண்டமைக்கு உங்களுக்கு நன்றிகள்.
பொய்கள் ஆளும் தேசத்தில் உண்மையை பேசுவது கூட புரட்சி தான் என்ற அடிப்படையில் உண்மைகளை கண்டறிந்த காவல்துறை அதிகாரிகளுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள். குற்றவாளிகளுக்கான தண்டனைகளை தகுந்த முறையில் நீதிமன்றங்கள் வழங்க வேண்டும். இது வெறுமனே அந்நிய நாட்டின் கொடியை ஏற்றிய வழக்கு மட்டுமல்ல. மாறாக திட்டமிட்ட ஒரு கலவரத்தை, ஒரு மதத்தை பின்பற்றுவர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்ட செய்யப்பட்ட சதி.
சலாம் சகோ ஆசிக்,
தவறுகளைச் செய்தவர்களை திட்டி எழுதாமல்... துப்பறிந்தவர்களை பாராட்டி அற்ப்புதமான பாசிட்டிவ் பதிவு சகோ... உங்கள் சேவை இந்த சமூகத்திற்கு எப்பொழுதும் தேவை.
கோ... உங்கள் சேவை இந்த சமூகத்திற்கு எப்பொழுதும் தேவை.
பாஜக ஆளும் ஒரு மாநிலத்தில் அவர்கள் ஆதரவு குரூப்பை பிடித்தது உண்மையிலே பெரும் சாதனை தான் சகோ. எவ்வளவு அரசியல் அழுத்தங்கள் இருந்திருக்கும் அந்த காவல் துறையினருக்கு. அதையும் மீறி குற்றவாளிகளை பிடித்த அவர்கள் நிச்சயம் போற்றுதலுக்கு உரியவர்கள் சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ ஆஷிக்!
காவிகளின் காட்டு தர்பாரை அழகாக தோலுரித்துக் காட்டியிருக்கிறீர்கள்.. நீதியான ஒரு சில போலீஸார் உளளதால் உண்மை ஆங்காங்கு வெளி வருகிறது. இறைவனுக்கே புகழனைத்தும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
"யார் மனிதர்களுக்கு நன்றி செலுத்த வில்லையோ அவர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாதவர் போன்றாவார்".
கண்டனமாக அல்லாமல், வேறு பார்வையாக தகுதியுடையவர்களை நன்றியோடு பாராட்டிய இந்த பதிவின் மூலம் நமக்கு நன்மைதான்.
நானும் இவர்கள் அனைவரையும் பாராட்டி நன்றி கூறுகிறேன்.
====ஒரு சமூகத்தில் பரஸ்பர பாராட்டுக்களும், நன்றியரிதல்களும் குறைந்து கண்டன குரல்களே மிகுதியாயின் அது அமைதி குலைந்த சமூகமாகி விடும்====]- சரியான நல்ல கருத்து.
Salam bro!
Kavalargalidamum oru sila nalla ullangal erukirargal!!!
Arumaiyana post bro keep it up
jazhkallahu kair
Dear Bijappur SP, Dr. D.C. RAJAPPA & team..!
Well done with thanks.
Be careful on your BJP Govt.
They may trouble you.
Coz., they have successfully hidden your popularity in media.
\இதன் மூலம் முஸ்லிம்கள் மீது தேசத்துரோக பழிபோட்டு, அப்பாவி இந்து மக்களை தூண்டிவிட்டு பெரிய அளவில் மதக்கலவரத்தை கர்நாடகாவில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததை முறியடித்தும் உள்ளனர். \=alhamdulillah.
நான் உங்கள் பணியை பாராடுகிறேன்.
போலிசின் விசாரணையை குழுவை மனமார பாராடுகிறேன். இதை போன்று மற்ற மாநில பொலிசாரும் செயல் பட கேட்டுக்கொள்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
சகோ நெத்தியடி பதிவு சகோ
பிஜாப்பூர் நகரத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பும் இதைப் போன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், குற்றவாளிகள் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை அந்த சம்பவம் மறைக்கபட்டது போல் இதையும் ஊடகங்கள் மறைக்கப் பார்க்கின்றன சகோ
அந்த நேர்மையான அதிகாரிக்கும்,பிளாக்கருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்துக்கள் நன்றிகள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மாதுல்லாஹ் ...
சகோ கலக்கிடீங்க ...!!! உண்மையின் மறுபக்கம் உங்க எழுத்து தான் ...
பரபரப்புக்கு பஞ்சமே இல்லை உங்க பதிவு ...
உங்கள் பதிவு பயணம் தொடர வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் ..
அஸ்ஸலாமு அழைக்கும் ,காவிகளின் காவாளித்தனம் (சூழ்ச்சி) இத்துடன் முடியப்போவதில்லை.சூழ்ச்சி செய்வோருக்க்கெல்லாம் மிகப்பெரிய சூழ்ச்சியாளன் அல்லாஹ், தன் பொதுமறையில் சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது ,நிச்சயம் அசத்தியம் அழிந்தே தீரும் என்றல்லவா கூறியுள்ளான்.இறுதியில் வெல்லப்போவது அல்லாஹ்வின் படையே ..
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக்...
மாஷா அல்லாஹ் நிதானத்துடன் கூடிய மிக அழகிய பதிவு.
உங்களுக்கும் அந்த மூவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.
நானும் அவர்களை மனதார பாராட்டுகிறேன்.மாஷா அல்லாஹ்.
முதாலில் Bijappur SP, Dr. D.C. RAJAPPA & team.. என்னுடையா மனமார பாராட்டுக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... முஹம்மத் ஆஷி,
அருமையான பதிர்வு மற்றும் உங்களுடைய positive திங்கிங் நன்றி.
//இந்திய-பாகிஸ்தான் எல்லையோர இரும்பு முள் வேலிக்கு அந்தப்பக்கம் நைசாக ராவோடு ராவா தூக்கி கடாசி விட வேண்டும்..! // இந்த ஆறு அனானி இருத்த பரவில்லை அது கோடியை தாண்டும். இம்புடு மக்கள்தொகை ஆங்கை எதுக்கு தளளுனும்.
சங்பரிவார் "பிஞ்சு உள்ளங்கலில்" விதை விதச்த கண்டிபகாக அறுவடை sayuim... என்ன என்ன விதைன்களா அதோட எதிர்வினை கண்டிபாகாக இன்ஷா அல்லா நாம் பார்போம். (உ. ம்) நாம் நாட்டில் என்ன என்ன கிரிமினல் குற்றம்ன்னு ஒரு லிஸ்ட் எடுத்து பாருங்க இவகளுடைய உறத்தில் வளந்தா கிரிமினல் அதிகாம் இருபனங்கா. தண்டனை மட்டும் அனுபவிக்கா மட்டனுங்கா. ஆயிராக்கான கொலை செய்யுவா அனா முதலைமாசார இருப்பான். கோடி கோடியகா உழல் பணுவா நேஞ்சு வலி விட்டுள் குந்தீவானு. அப்பாவி குண்டு வெச்சை சொல்லி பத்து வருஷம் ஜெயில் தண்டனை பிறகு நிரபாரி பட்டம் மட்டும்.
என்னை படைத்த இறைவன் தான் அப்பாவி நிறைந்தா இந்தியாவை காப்பற்றா வேண்டும்.
எங்கே?, தினமும் படையெடுக்கும் அனானி அண்ணன்களை காணோம்?
//Well done, Bijappur SP, Dr. D.C. RAJAPPA & team..!//
மீண்டும் மீண்டும் நன்றி.
பொறுப்பான தங்கள் பதவிக்கமைய நேர்மையாக உழைத்து/சாதித்து பெருமை சேர்த்த அந்த காவல்துறை அதிகாரிகள் அனைவரும் மிகுந்து பாராட்டுகளுக்குரியவர்கள்.
superb bro.....rocking article as usual.....May the Almighty Allah help all of us in all d ways.....keep writing.....
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ அருமையான பதிவு.எவ்வளவுதான் கண்டுபிடித்தாலும் இந்த RSS & கோ பயங்கரவாதிகள் ஏதாவது ஒரு தகிடுதத்தம் வேலையை செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.தேசத்தில் பிரிவினை ஏற்படுத்த முயலும் இந்த பயங்கரவாதிகள்தான் தேசபக்தர்களாம்.கொடுமை கொடுமை...இவர்களுக்காகவே ஊதுவதற்கென்றே சில பத்திரிக்கைகள் வேறு. உண்மையான பயங்கராவதிகளை களையெடுக்கும் இவர்களை போன்று நேர்மையான சில அதிகாரிகள் இருப்பதால் நீதியும் நேர்மையும் இன்னும் சாகாமல் இருக்கின்றது என்பதை நினைவுபடுத்தி கொண்டேயிருக்கின்றது என்பது சந்தோஷம் தரும் விஷயமென்றாலும் இனிமேல் இவ்வதிகாரிகளுக்கு தேச துரோக பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் அதிகமாகும் எனபதும் கவலைக்குறிய விஷயம்.இவர்களுக்கும் இவர்களுடைய குடும்பத்தினருக்கும் அரசாங்கம் போதுமான பாதுகப்பை தரவேண்டும்.
muhammad nasar
5:46 PM (22 minutes ago)
to bcc: me
அஸ்ஸலாம் அலைக்கும்
முஹமத் ஆஷிக் பாய்,
.சூழ்ச்சிக்காரர்களுக்கெல்லாம் ,மகா சூழ்ச்சிக்காரன் அல்லா ....
கயவர்களின் சூழ்ச்சியை, ஒரு இந்து போலீசைக் கொண்டே எப்படி முறியடித்தான்
பார்த்தீர்களா ........நல்ல பதிவு
மிகவும் போற்றப்படவேண்டியவர்
பீஜப்பூர் மாவட்ட SP, Dr. D.C. ராஜப்பா IPS
அவர்கள்
நான் எல்லா இடத்திலும் ஒட்டு போட்டுவிட்டேன் ஆனால் கருத்திடமுடியவில்லை ......என்ன காரணம் தெரிவிக்கவும்.. மற்றும்
அவர் பிளாக்கர் என்று சொன்னீர்களே , விலாசத்தை தெரிவிக்கவும் ......
=================================================================================
Mohamed Ashik முஹம்மத் ஆஷிக்
6:10 PM (3 minutes ago)
to muhammad nasar
அலைக்கும் ஸலாம் வரஹ்...
அருமையான கருத்து சகோ.நாசர்.
கவனிக்க வில்லையா சகோ..?
அவருடைய ஃபோட்டோவுக்கு மேலே லிங்க் உள்ளதே..?
///அவர்.... பீஜப்பூர் மாவட்ட SP, Dr. D.C. ராஜப்பா IPS
(நம்மை போல இவரும் ஒரு (Blogger) பதிவருங்கோ...!)///
///(நம்மை போல இவரும் ஒரு (Blogger) பதிவருங்கோ...!)///
இதனுள்ளே 'கிளிக்' பண்ணினால் ஓபன் ஆகும் படி லிங்க் செருகி உள்ளேன்.
எனினும் குழப்பம் இன்றி பிற்சேர்க்கை சேர்த்து விட்டேன்..! இப்படி....
அந்த ப்ளாக் ப்ரோஃபைல் லிங்க் இதுதான்....
http://www.blogger.com/profile/09631126950354305286
இந்த ப்ரோஃபைளில் உள்ள அவரின் ப்ளாக் முகவரி இதுதான்....
http://bijapurpolicenews.blogspot.com/
சகோ.நாசர்,
சிலருக்கு ஏனோ இங்கே சிலநேரங்களில் பின்னூட்டம் இட முடியவில்லை.
அந்த டெக்னிகல் ப்ராப்ளம் என்னவென்று எனக்கும் விளங்கவில்லை..!
வருகைக்கும் மெயிலுக்கும் நன்றி சகோ.நாசர்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆசிக்.
மிக தெளிவாகவும் அதே நேரத்தில் தகுந்த ஆதாரத்துடன் விளக்கியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்.
இச்செய்தியை நானும் நக்கீரன் வெப் சைட்டிலும் பார்த்தேன் குறைந்தது ஒரு ஆறு வரியில் துனுக்கு செய்தியாக போட்டிருந்தார்கள் அந்த ஆசிரியருக்கு ஒரு வாழ்த்து கடிதமும் அப்பெட்டிக்கு கீழே ஒரு ரெண்டு வரியில் கண்டனமும் தெரிவித்து இருந்தேன்.
ஜனவரி ஒன்றில் இதை காரணம் காட்டி மிகப் பெரிய கலவரத்தை நடத்த திட்டமிட்ட தீவிரவாதி மாணவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் இவர்கள் செய்த செய்கையினால் பல்லாயிரம் அப்பாவி மக்கள்களின் உயிர்கள் அநியாயமாக பறிக்கப்பட்டு சொத்துகளும் கற்புகளும் சூறையாள பட்டிருக்கும் அல்லாஹ்வின் கிருபையால் அப்படி ஒரு சம்பவம் நடக்காமல் நல்ல மனிதர்களின் அதிரடி நடவடிக்கைகள் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது அந்த காவல் துறை அதிகாரியின் நேர்மைக்கு ஒரு சல்யூட்.
தீவிரவாதிகள் எந்த மதத்திலும் இருந்தாலும் வேரு அறுக்கப் படவேண்டும் என்பதே எனது ஆசை
வாழ்த்துக்கள்
உங்கள் சேவை மகத்தானது. இந்த கட்டுரை அனைவரும் படிக்க அனைத்து வலைதளத்திலும், வலைப்பூக்களிலும் மறுபதிப்பு வர அனுமதி கொடுங்கள்.
@niduraliவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.நீடூர் அலி.
இந்த வலைப்பூவில் உள்ள பதிவுகளை யாரும் எங்கும் மறுபதிப்பு செய்ய ஒரு வருஷத்துக்கும் முன்னாடியே எழுத்துக்களில் அனுமதி அளித்து வைத்து இருக்கிறேன் சகோ.
என்னுடைய பிளாக்கின் கடைசி வரியை பாருங்கள்....
////////////////////////////////
Copyright: For Me (~முஹம்மத் ஆஷிக்_citizen of world~) & You also--with a link to this blog is fine.
////////////////////////////////
அந்த ராஜப்பா போல நீங்களும் துப்பறிந்தது இந்த செய்தியின் நீள, அகலங்களை ஆய்ந்து இருக்கிறீர்கள். நன்றி சகோதரா.
Please visit
http://seasonsnidur.blogspot.com/2012/01/blogger-citizen-of-world.html
Please Visit this link :
http://youtu.be/xsNQrGoLfAs
சங்க பரிவார்களின் சதி வலைகள் வெளிச்சத்திற்கு வர துவங்கியுள்ளன.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மீண்டும்
மீண்டும்
அவர்களின் கனவு தகர்க்கப்படும்போது!
அவர்களை திட்டி அவர்களின் கயமைத்தனத்தை வெளிக்கொணர்ந்து பதிவிட்டு ஏனைய ஆயிர பதிவுகளோடு ஆயிரத்து ஓன்றாம் பதிவாக சேர்வதை விட அவர்களின் நாசகார செயல்களை அடையாளப்படுத்தியவர்களை குறித்து பதிவிடுவது காலச்சிறந்தது.,
நல்ல இடுகை
பகிர்ந்த பகிர்வுக்கு நன்றி சகோ
//இந்த பச்சைக்கொடியேற்றிய காவிகள் ஏழு பேரையும் உடனே பார்ஸல் கட்டி இந்திய-பாகிஸ்தான் எல்லையோர இரும்பு முள் வேலிக்கு அந்தப்பக்கம் நைசாக ராவோடு ராவா தூக்கி கடாசி விட வேண்டும்..! //
ஏன் அந்த இடமாவது ஒழுங்கா இருக்கிறது ஒங்களுக்கு பிடிக்கலையா..
ஹி ஹி ...
http://www.satyamargam.com/blogger
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
மாஸா அல்லாஹ். அறிவு இறைவனால் கொடுக்கப் பட்டு அவன் துணையுடன் நாம் வளர்த்துக் கொண்டது . அறிவு வெளிப் படுத்தப்பட்டவுடன் அதனை நாம் உரிமைக் கொண்டாட முடியாது. அது இறைவனுக்கே சொந்தம்.. மக்கள் பலனடைய வேண்டும்.No copy right in Islam
சகோ. முஹம்மத் ஆசிக்.
சரியான நேரத்தில் சரியான பதிவு, ஊடகங்களை நம்பி பிரயோஜனம் இல்லை, எதை பெரிது படுத்த வேண்டுமோ அதை செய்வதில்லை, தேவை இல்லாத செய்தி எதுவோ காசு பார்ப்பது எதன் மூலமோ அதுவே அவர்களின் குறி.
நக்கீரன் என்ற ஊரை ஏமாற்றும் பேய் கூறுகிறது, ஜெயலலிதா மாட்டு கறி சாப்பிடுகிறாராம், அவர் மாட்டு கறி சாப்பிட்டால் என்ன ஆட்டு கறி சாப்பிட்டால் என்ன அதை தலையங்கத்தில் போடா வேண்டிய அவசியம் என்ன. தானே புயலால் ஏற்பட்ட பல பாதிப்புகள் இது வரை வெளி வரவில்லை,ஊடகங்களின் பொறுப்பில்லாத தனத்தை நினைத்தால் வேதனையாக உள்ளது.
சரி தங்களின் பதிவிற்கு வருகிறேன், பிஜேபி கும்பலின் விஷமத்தனம் இந்தியா முழுவதும் இருந்தாலும் இது போல சில நல்லவர்களும் ஆங்காங்கு இருக்கத்தான் செய்கிறார்கள், இது போன்றவர்களை பாராட்டுவது ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய ஒன்று, அது அவர்களை ஊக்க படுத்தலாம்,
காவி கும்பலின் அடாவடிகளை முடிந்த அளவு எடுத்து கூறி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம், என்னுடைய பாராட்டுகளை அவரின் ப்ளாக்கில் பதிந்து விட்டேன்.
சிறந்த பதிவை இட்டமைக்கு வாழ்த்துக்கள், தொடர்ந்து இது போன்ற பயனுள்ளவைகளை வெளிக்கொணர வேண்டும்.
உண்மைகளை வெளிக் கொண்டு வந்தீர்கள், மிகச்
சிறப்பாக.
பகிர்விற்கு நன்றி!
இன்று என் வலையில்:
ஆட்டுக் கறியும் மாட்டுப் பாலும் (அ) வாழ்க நீ எம்மான்!
அஸ்ஸலாமு அலைக்கும்!
முத்து முத்து வரிகள்!!சபாஷ்!!
SP, Dr. D.C. RAJAPPA & team கு எங்கள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும்..தெரிவிக்கிறோம்.
அப்புறம்,
.//.இந்தியமக்களான அந்த பெருவாரியான பின்னூட்டவாதிகளின் ஆசைக்கிணங்க... இந்த பச்சைக்கொடியேற்றிய காவிகள் ஏழு பேரையும் உடனே பார்ஸல் கட்டி இந்திய-பாகிஸ்தான் எல்லையோர இரும்பு முள் வேலிக்கு அந்தப்பக்கம் நைசாக ராவோடு ராவா தூக்கி கடாசி விட வேண்டும்..//!
//இவர்கள் மீது, இப்படி ஒரு நீதி மன்ற தீர்ப்பு வந்தால் எனக்கு ஓகே..! உங்களுக்கு?// ஆஹா...ஓஹோ..
தற்போது இருக்கிற சூழ்நிலையில் நம் சமுதாய மக்களிடையே விழிப்புணர்வு மிகவும் அவசியமாக உள்ளது .கருத்து வேறுபாடு இல்லாமல் ஒன்றிணைந்து தகவல்களை பரிமரிக்கொள்ளவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம் ..உலகில் இன்டர்நெட் மூலமாக பரிமாறிய தகவல்களால் பல மாற்றங்கள் நடந்துள்ளது ..ஆகவே சகோதரர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளவேண்டும் ..
@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் SP அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தங்களின் பாராட்டை தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி சகோ.ஆஷிக் அஹமத்.
@mohandivyaவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.மோஹன் திவ்யா.
@ஷர்புதீன்
///அப்படியே இந்த இஸ்லாமிய தலைவர்களை ஒற்றுமையின் பால் - அநியாங்களுக்கு எதிராக ஒருமித்த குரல் கொடுக்க ஒரு இடுகை எழுதுங்கள். ///---- "இந்த இஸ்லாமிய தலைவர்களை"---- இவர்கள் யார் யார் என்று ஆதாரத்துடன் பெயரை சொல்லுங்கள் சகோ.ஷர்புதீன்..!
///இவ்வுலக வாழ்கை வீணும் விளையாட்டுமே என்று சொல்லிவிட்டு , நேரில் கண்டால் சலாம் சொல்லவேண்டுமே என்று நேரில் காண்பதை தவிர்க்கும் அவர்களையும் ஒரு பிடி பிடியுங்கள்!///----உங்களிடம் இப்படி நடந்து கொள்கிறவர்களை நீங்களே நேரில் கேட்கலாமே சகோ.ஷர்புதீன்..!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஷர்புதீன்.
@இறை நேசன்வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் ராயல் சல்யுட் தெரிவித்தமைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.இறை நேசன்.
@ஜெய்லானிதேசியக்கொடியை ஒரு புனிதப்பொருளாக எண்ணுகிற மனப்பாங்கும் ஒரு மூட நம்பிக்கையே. தங்கள் கருத்துடன் உடன்படுகிறேன் சகோ.ஜெய்லானி.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.
@நட்புடன் ஜமால்
வருகைக்கும், SP அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தங்களின் நன்றியை தெரிவித்தமைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.நட்புடன் ஜமால்
@மு.ஜபருல்லாஹ்
அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும், SP அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தங்களின் நன்றியை தெரிவித்தமைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.மு.ஜபருல்லாஹ்
@பி.ஏ.ஷேக் தாவூத்அலைக்கும் ஸலாம் வரஹ்...
///"Who killed Karkare" ///---இதற்கெல்லாம் பெரிய ஆராய்ச்சி தேவையா சகோ..?
இந்த ஹேமந்த் கார்கரே இடம் மாலேகான் குண்டுவெடிப்பை துப்பறியும் பொறுப்பை ஒப்படைத்தபோதும், பின்னர் அதனைத்தொடர்ந்து இன்னும் பல குண்டுவெடிப்பு துப்பறியும் பொறுப்புகளை ஒப்படைத்தபோதும் இருந்த உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில்... இப்போது எங்கே..?
பின்னர் ஹேமந்த் கார்கரே கொல்லப்பட்டவுடன் அந்த கொலையில் சந்தேகம் இருக்கிறது என்று பாராளுமன்றத்தில் சொன்ன ஒரே குரலுக்குரியவரான... கேபினெட் அமைச்சர் அந்தஸ்தில் நான்காம் இடத்தில் இருந்தவருமான அமைச்சர் ஏ.ஆர். அந்துலே இப்போது எங்கே...?
((காங்கிரஸ் கட்சியினர் தெரிந்தால் கூறவும்))
ஹேமந்த் கார்கரே கொல்லப்படும் முந்திய இரவு வரை காவிகளிடமிருந்து கொலை மிரட்டல்கள்..! கொல்லப்பட்ட அடுத்த நாள் "இழப்பீடாக(?!?!?!?!)" கோடி ரூபாயுடன் வந்த மோடியையும் அவர் ரத்தக்கறை படிந்த 'பிச்சைக்காசையும்' வீட்டுக்குள்ளேயே அனுமதிக்காமல் விரட்டிய திருமதி ஹேமந்த் கார்கரேயை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..!
வருகைக்கும், மிகச்சரியான கருத்துக்களை கூறியமைக்கும், SP அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தங்களின் நன்றியை தெரிவித்தமைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.பி.ஏ.ஷேக் தாவூத்.
@சிராஜ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
///பாஜக ஆளும் ஒரு மாநிலத்தில் அவர்கள் ஆதரவு குரூப்பை பிடித்தது உண்மையிலே பெரும் சாதனை தான் சகோ.///---நான் சொல்ல மறந்த சரியான பாயின்ட்..!
வருகைக்கும், மிகச்சரியான கருத்துக்களை கூறியமைக்கும், SP & மற்றவர்களின் சேவையை பாராட்டியமைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சிராஜ்.
@நல்லோர் வாக்கு
///நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
"யார் மனிதர்களுக்கு நன்றி செலுத்த வில்லையோ அவர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாதவர் போன்றாவார்"///
///தகுதியுடையவர்களை நன்றியோடு பாராட்டிய இந்த பதிவின் மூலம் நமக்கு நன்மைதான்.///
அல்ஹம்துலில்லாஹ்...!
வருகைக்கும், நபிமொழியுடன் கூடிய நல்லதொரு பின்னூட்டத்திற்கும்
மிக்க நன்றி சகோ.
@s.jaffer.khanஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்
மிக்க நன்றி சகோ.s.jaffer.khan.
@Peace Be Up On YouPeace Be Up On You too..!
//Be careful on your BJP Govt.
They may trouble you.
Coz., they have successfully hidden your popularity in media.//---சரியான நல்லதோர் எச்சரிக்கைதான்.
ஆனால்,
இதெல்லாம் தெரியாமலா அந்த அதிகாலையிலேயே ஊடகத்துக்கு உண்மையை உடனடியாக அறிவித்து இருப்பார்..?
எதற்கும் துணிந்தவர்களே இப்படி நேர்மையாளர்களாக இருக்க முடியும் சகோ..!
வருகைக்கும் SP அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தங்களின் பாராட்டையும் நன்றியையும் பாதுகாப்பையும் தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி சகோ.
@Ameenவருகைக்கும் பின்னூட்டத்திற்கும், SP அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தங்களின் பாராட்டை தெரிவித்தமைக்கும், அழகிய கோரிக்கைக்கும் மிக்க நன்றி சகோ.Ameen.
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//அந்த நேர்மையான அதிகாரிக்கும்,பிளாக்கருக்கும்//---இருவரும் ஒருவரே...!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும், SP அவர்களுக்கு வாழ்துகள் நன்றிகள்
தெரிவித்தமைக்கும், மிக்க நன்றி சகோ.ஹைதர் அலி.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//நீதியான ஒரு சில போலீஸார் உளளதால் உண்மை ஆங்காங்கு வெளி வருகிறது.//---இறைவனுக்கே புகழனைத்தும்.
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்
மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@சிந்தனைஅலைக்கும் ஸலாம் வ ரமத்துல்லாஹி வ பரக்காத்துஹ்.
//உண்மையின் மறுபக்கம் உங்க எழுத்து தான்...//---அதிர்ச்சி..! :-)
என்ன சொல்லவரீங்க சகோ..?
'உண்மையின்பக்கம்'---என்றுதானே..? :-) நிதானம்...நிதானம்...!
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்
தங்கள் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி சகோ.சுல்தான்.
@PARAMAKUDIPOPULARFRONTஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//சூழ்ச்சி செய்வோருக்கெல்லாம் மிகப்பெரிய சூழ்ச்சியாளன் அல்லாஹ்//---நிச்சயமாக சகோ.
இறைவன் அவர்களுடைய சூழ்ச்சிகளை இப்படி எல்லாம் முறியடிப்பதைத்தான் காண்கிறோம்.
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்
மிக்க நன்றி சகோ.PARAMAKUDI POPULARFRONT.
@முஸ்லிம்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் SP குழுவினரை பாராட்டியமைக்கும் தங்கள் துவாவிற்கும் மிக்க நன்றி சகோ.ஹசன்.
@Nizamஅலைக்கும் ஸலாம் வரஹ்...
///இந்த ஆறு அனானி இருத்த பரவில்லை அது கோடியை தாண்டும். இம்புடு மக்கள்தொகை ஆங்கை எதுக்கு தளளுனும்.?///
---1947 பிரிவினையின்போது பிரிவினையின்போது....
இந்தியா வராமால்... பாகிஸ்தானிலேயே தங்கிவிட்ட இந்துக்களையும்
சீக்கியர்களையும்
கிருத்துவர்களையும்
கேவலமாக....
என்றைக்காவது,
யாராவது,
எப்போதாவது,
ஏதாவது கேவலமாக
சொல்லி இருக்க கேட்டதுண்டா..?
ஆனால்....
இலவச ரயில்கள் விட்டு பாகிஸ்தான் போகச்சொல்லியும் போகாமல்,
"இதுதான் எம் தாய்மண்... இங்குதான் இருப்போம்" என்று...
இந்த மண்ணில் காலங்காலமாய் இருப்போரை...
'இந்திய அரசு அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிய அந்த குற்றத்தை செய்தவர்கள் யார்'... என்று எதுவும் தெரியாத போதே...
முன் முடிவுடன் எப்படி அவர்களால் முஸ்லிம்களை மட்டும் அப்படி போகச்சொல்ல முடிகிறது...?
'நம்மை சொல்லும்போது எவ்வளவு புண்பட்டு இருப்போம்' என்று அதை படிக்கும்போதாவது அவர்கள் உணரட்டுமே... என்றுதான்...
...அந்த கடுப்பில்தான் அப்படி எழுதினேன் சகோ..!
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் தங்கள் துவாவிற்கும் மிக்க நன்றி சகோ.Nizam.
@Syed Ibramshaவருகைக்கும், பின்னூட்டத்திற்கும் SP குழுவினரை நன்றியோடு பாராட்டியமைக்கும் மிக்க நன்றி சகோ.Syed Ibramsha.
@சுல்தான்வருகைக்கும், பின்னூட்டத்திற்கும், நேர்மையாக உழைத்து/சாதித்து பெருமை சேர்த்த அந்த காவல்துறை அதிகாரிகளை பாராட்டியமைக்கும் மிக்க நன்றி சகோ.சுல்தான்.
@abd shamவருகைக்கும், பின்னூட்டத்திற்கும் தங்கள் துவாவிற்கும் மிக்க நன்றி சகோ.abd sham.
@முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
///உண்மையான பயங்கராவதிகளை களையெடுக்கும் இவர்களை போன்று நேர்மையான சில அதிகாரிகள் இருப்பதால் நீதியும் நேர்மையும் இன்னும் சாகாமல் இருக்கின்றது///---அல்ஹம்துலில்லாஹ்..!
///இவ்வதிகாரிகளுக்கு தேச துரோக பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் அதிகமாகும் எனபதும் கவலைக்குறிய விஷயம்.இவர்களுக்கும் இவர்களுடைய குடும்பத்தினருக்கும் அரசாங்கம் போதுமான பாதுகப்பை தரவேண்டும்.///---நீங்கள் சொல்வதும் ஒருவிதத்தில் சரியே..!
அதேநேரம் அரசை நம்பாமல் சுயமாகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..!
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்.
@அந்நியன் 2அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் காவல் துறை அதிகாரியின் நேர்மைக்கு சல்யுட்க்கும் அருமையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.அய்யூப்.
@உதயம்வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் அதிர்ச்சிகரமான விழிப்புணர்வூட்டும் வீடியோ பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ.உதயம்.
///சங்க பரிவார்களின் சதி வலைகள் வெளிச்சத்திற்கு வர துவங்கியுள்ளன.///
---இது... 'லவ் ஜிகாத்'
....என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம் பெண்களை காதலிப்பது போல நடித்து, அவர்களை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து ஊரைவிட்டு ஓடிவரவைத்து ஏமாற்றி, நண்பர்கள் பலருடன் சேர்ந்து அவர்களை நாசப்படுத்தும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின்றன சகோ..!
இந்த RSS காவிக்கூட்டம் தாங்கள் செய்வதை முஸ்லிம்கள் செய்வதாக பழி போடுவதில் இந்த பயங்கரவாதமும் மேலும் ஒன்று..!
இவர்களிடம்.......
முஸ்லிம் பெண்கள் ஜாக்கிரதை..!
முஸ்லிம் பெண்கள் ஜாக்கிரதை..!
முஸ்லிம் பெண்கள் ஜாக்கிரதை..!
@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் நல்ல கருத்துக்களுடன் கூடிய பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.G u l a m.
///ஏன் அந்த இடமாவது ஒழுங்கா இருக்கிறது ஒங்களுக்கு பிடிக்கலையா...///
---இங்கே எதற்கு பயந்து பயந்து அர்த்த ராத்திரியில் யாருக்கும் தெரியாம திருட்டுத்தனமா கொடி ஏத்தணும்...?
அங்கே போனா பகிரங்கமா எல்லார் முன்னாடியும் பட்டப்பகலில் கொடி ஏத்தலாமே..?
அதுக்குத்தான் சகோ..குலாம்..! ஹி..ஹி...ஹி...
(நிஜமான காரணத்துக்கு....
57-வது பின்னூட்டம் படியுங்கள் சகோ..!)
@முஸ்லிம்
//http://www.satyamargam.com/blogger//---maashaAllaah..!
இந்த பதிவை மேலும் பலரிடம் கொண்டுசேர்க்க வெளியிட்ட சத்தியமார்க்கம் தளத்தினருக்கும் தெரியப்படுத்திய தங்களுக்கும் எனது நன்றிகள். ஜசாக்கலாஹு க்ஹைர்.
@nidurali
///Please visit
http://seasonsnidur.blogspot.com/2012/01/blogger-citizen-of-world.html
///
இந்த பதிவை மேலும் பலரிடம் கொண்டுசேர்க்க தங்கள் தளத்தில்
வெளியிட்டு அதை இங்கே பின்னூட்டமிட்டு தெரியப்படுத்திய தங்களுக்கு எனது நன்றிகள். ஜசாக்கலாஹு க்ஹைர்.
இஸ்லாமிய தாவா பணியில் இருப்போருக்கு...//No copy right in Islam//---அருமையான கருத்துக்கள் சகோ..! தங்கள் கருத்தே என் கருத்தும்..!
@கார்பன் கூட்டாளி
///என்னுடைய பாராட்டுகளை அவரின் ப்ளாக்கில் பதிந்து விட்டேன்.///---அடடே...!
எனக்கு ஏன் இந்த பின்னூட்டமிடும் ஐடியா தோணாம போச்சு...?!?
இப்போது, நானும் அவருக்கு நன்றி சொல்லி, அவரையும் அவர் டீமையும் பாராட்டி பின்னூட்டம் போட்டுட்டேன் சகோ..!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் அருமையான கருத்துக்கும், அவர் பிளாக்கில் பின்னூட்டமிட நியாபகப்படுத்தியமைக்கும் நன்றி சகோ.கார்பன் கூட்டாளி.
@NIZAMUDEENவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.NIZAMUDEEN.
@zalhaஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் SP அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தங்களின் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி சகோ.zalha.
//ஆஹா...ஓஹோ..//---அஹ்ஹஹா.. ஓஹ்ஹஹோ...
@mallipattinamtoday
//உலகில் இன்டர்நெட் மூலமாக பரிமாறிய தகவல்களால் பல மாற்றங்கள் நடந்துள்ளது//---கேட்கவே இனிமையான செய்தியாக உள்ளது மல்லிப்பட்டினம் சகோ..!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.
அருமையான பதிவு, மென்மேலும் உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்!!! :)
Regards,
ungalblog.blogspot.com
@Abu Nadeemதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.அபு நதீம்.
u have rights to talk about who one did bad incidents on ur religious. but it should be particular party. not entire religious. Hope u understand cos me also a hindu but i wil not do like this bad ugly things.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!