"திருவள்ளுவர் தினம் -தை முதல் நாள்- தமிழ்ப்புத்தாண்டு- தமிழர் திருநாள்" என்று சென்ற வருட தமிழக அரசு சார்பாக திமுகவினர் சொல்ல...
"இல்லை... இல்லை... சித்திரை ஒண்ணுதான் தமிழ்புத்தாண்டு என்று இன்றைய தமிழக அரசு சார்பில் அதிமுக சொல்ல...
தமிழர்கள் நாம் எது 'ரியல் புத்தாண்டு' என்று மண்டையை பிய்த்துக் கொள்கிறோம்..! நம் பூமி எந்த இடத்தில் இருந்து சூரியனை சுற்ற ஆரம்பித்தது என்று எவருக்கும் தெரியாது. எனவே, எந்த மாதம் வேண்டுமானாலும் ஓர் ஆண்டின் தொடக்கமாக இருக்கலாம். இந்நிலையில், "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று பள்ளியில் பழமொழி படித்தோம். இப்போதெல்லாம் தை பிறந்தால் அது சண்டைக்குத்தான் வழி அமைக்கிறது. அதிலாவது அர்த்தம் இருந்தால் கூட பரவாயில்லை. முட்டாள்த்தனமாக சண்டை நடக்கிறது.
திமுக காரர்கள் கருணாநிதியை கூலிங் கிளாசுடன் பெரிய கருந்தாடி வைத்து உயரமாக கொண்டை முடித்து 'திருவள்ளுவர் கெட்டப்'புக்கு மாற்றி "தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு" என்று போஸ்டர் அடித்து ஒட்டி விட்டார்கள்.
இதைக்கண்ட உடனே தினமணிக்கு மூக்கில் வியர்த்து விட்டது.
அந்த போஸ்டரை ஃபோட்டோ பிடித்து போட்டு... அதன் கீழே ஏதோ தம் இஷ்டத்துக்கு உரைநடை மாதிரி இல்லாத 'ஏதோ ஒரு அரைகுறை நடை'யில் தப்பும் தவறுமாக........
இவிங்களுக்கு மட்டும் பூத்தாண்டு பொறக்குதுங்கோஓஓஓஓ!கருணலொள்ளுவர் ஆண்டுசுடாலிங் மாதம் சென்றுகனிவலி மாதம் பிறக்கும் முதல்நாளில்தம்மில்லத்தாருக்கு பூத்தாண்டு பொறந்ததைதம்மில்லருக்கு பொறந்ததாய்துக்ளக் தர்பார் நடாத்தினீய்ங்களே!!நீவிர் வாழ்க வாழ்க!!ம்.....தன்னேரில்லாத் தமிழே!உனக்கும் கறுப்பு (கண்ணாடி) திரையிட்டுஉன்புகழை மறைக்கக் கூடும்ஒரு நாள்...ஓர் நாள்!எச்சரிக்கை! எச்சரிக்கை!!
.......இப்படி எழுதி இருந்தது..!
இதற்கு கீழே நம் மணி மணியான பல தினமணி வாசகர்கள் பொங்கி எழுந்து விட்டார்கள் பின்னூட்டத்தில்... 'அதெப்படி எங்கள் திருவள்ளுவரை இப்படி அவமானப்படுத்தலாம்' என்று..? இதனை கேள்வி கேட்ட எனது பின்னூட்டத்தை தினமணி வெளியிடவே இல்லை..! அதனால் இங்கே பதிவு போடவேண்டிய அவசியமாகிவிட்டது..!
நாம் TTC பேருந்தில் பார்த்த அந்த வெண்தாடித்தாத்தா படம் என்ன திருவள்ளுவரின் சொந்தப்படமா..? உண்மைப்படமா..? இல்லையே..? அது கற்பனையாக வரையப்பட்ட புனைவுப்படமாயிற்றே..? "புனைவினால் திருவள்ளுவருக்கு இழுக்கு சேரக்கூடாது" என்ற இன்றுள்ள இதே நல்ல எண்ணம் அன்றே இருந்திருந்தால்... முதல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் புனைவுப்படம் போட்ட அன்றே போராடி இருந்திருக்கலாமே..? அல்லது ஏதாவது ஒரு படத்தை தேர்ந்தெடுத்து இதைத்தவிர வேறு புனைவுப்படங்கள் ஏதும் யாரும் வரையக்கூடாது என்று சட்டம் போட்டு இருக்கலாமே..? 'தும்பை விட்டு ஏன் வால்' என்பதே என் கேள்வி..!
அசலை காக்க புனைவை எதிர்த்தால் நாம் வரவேற்போம்..! ஆனால், அசல் என்று நம்பி ஒரு புனைவுக்காக இன்னொரு புனைவை எதிர்க்கும் இந்த எதிர்ப்பை எப்படி நாம் ஆதரிக்க முடியும்..!
அசலை காக்க புனைவை எதிர்த்தால் நாம் வரவேற்போம்..! ஆனால், அசல் என்று நம்பி ஒரு புனைவுக்காக இன்னொரு புனைவை எதிர்க்கும் இந்த எதிர்ப்பை எப்படி நாம் ஆதரிக்க முடியும்..!
இதற்குமுன்... வெண்தாடி, ஜடாமுடி கொண்டையுடன் புனைவு முகம் போட்டு இஷ்டத்துக்கு வரைந்த போதெல்லாம் வராத
ஆங்காரம்... கோபம் எல்லாம்... இப்போது கருந்தாடி, கூலிங் கிளாஸ், சிகப்பு உதடு,
வெண்மை கன்னம் என்று 'பந்தா'வாக மற்றுமொரு திருவள்ளுவர் புனைவு படத்துக்கு மட்டும் ஏனப்பா இம்புட்டு கோபம் வருகிறது..?
"திருவள்ளுவரின் நிஜமான உருவம் எது?" என்று... அதை கற்பனையாக வரையும் போது எவருக்குமே தெரியாது அன்று..!
"திருவள்ளுவரின் படம் புனையப்பட்ட கற்பனைதான்..!" என்று ஒருத்தருக்குமே தெரியாமல் போனது இன்று..!
இதில், 'திருவள்ளுவரை அவமானப்படுத்தி விட்டார்கள்' என்று தினமணி போன்ற ஒரு முன்னணி பத்திரிக்கை அறியாமையில் பொருமுவது... கேலிக்கூத்து... என்றால், அதில் பின்னூட்ட மிட்ட ஒருத்தருக்கும் கூடவா தெரியவில்லை... திருவள்ளுவர் படம் ஒரு பொய் என்று..!? பொய்யை எப்படி அவமதிக்கமுடியும்..?
"திருவள்ளுவரின் படம் புனையப்பட்ட கற்பனைதான்..!" என்று ஒருத்தருக்குமே தெரியாமல் போனது இன்று..!
இதில், 'திருவள்ளுவரை அவமானப்படுத்தி விட்டார்கள்' என்று தினமணி போன்ற ஒரு முன்னணி பத்திரிக்கை அறியாமையில் பொருமுவது... கேலிக்கூத்து... என்றால், அதில் பின்னூட்ட மிட்ட ஒருத்தருக்கும் கூடவா தெரியவில்லை... திருவள்ளுவர் படம் ஒரு பொய் என்று..!? பொய்யை எப்படி அவமதிக்கமுடியும்..?
ஒருகாலத்தில் புனைவு என்று இருந்தது பிற்காலத்தில் மனதில் பதிந்து பதிந்து அதுவே போகப்போக உண்மை என்று ஆகி விட்டதை பார்க்கிறீர்களா...?
அதிகாரம் 30. வாய்மை
குறள் 300
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
பொருள் :- யாம் உண்மையாகக் கண்ட பொருள்களுள் வாய்மையைவிட எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத் தக்கவை வேறு இல்லை.
அடப்பாவிகளா... வாய்மை பற்றி இவ்வளவு தெளிவான குறள்களுடன் அதிகாரம் எழுதியவருக்கே... ஒரு பொய்யான உருவத்தை
கொடுத்து விட்டீர்களே..? அந்த பொய்யான உருவத்துக்கு பதில் இன்னொருத்தன் இன்னொரு பொய்யான உருவம் கொடுத்தால் ஏன் கோபப்பட வேண்டும்..?
.
.
இன்று ஒருவேளை அந்த சாட்சாத் அசல் திருவள்ளுவரே நேரில் நம்
முன்னே வந்து நின்று... "நான் தாண்டா வள்ளுவன்" என்றாலும்... "ஹலோ
பெருசு... டாஸ்மாக்குல சரக்கடிச்சிட்டு ஒளராம சும்மா அப்பால போய் ஓரமா குந்து... அதுக்குமுன்னால, தோ பார்... எங்க திருவள்ளுவரு இவர்தாம்பா.." என்று
கன்னியாகுமரி சிலையை சுட்டி, ஒரிஜினலுக்கே பெப்பே காட்டி விடுவார்கள் அல்லவா நம் தமிழ்க்குடிமகன்கள்..!
அந்தோ பரிதாபம் அந்த வாய்மை..!
.
.
இப்போது புரிகிறதா..? 'மனித குல இறப்புக்கு பின்னர் நாளை மறுமையில் நியாயத்தீர்ப்பு நாளில் கவ்சர் தடாகத்துக்கு அருகே, ஒற்றை மனிதராய் நிற்கும் தங்கள் இறைத்தூதரை நேரில் காண இருக்கும் முஸ்லிம்கள், தம் நபிக்கு பொய்யான புனைவு உருவங்களை யாருமே வரைந்து குழப்பம் ஏற்படுத்தக்கூடாது' என்று ஏன் இவ்வளவு பிரயத்தனப்படுகிறார்கள் என்று..? ஏதோ.... புரிந்தால் சரி..!
'குழப்பம் இல்லாதிருக்க உங்கள் நபிக்கு உண்மையான வரைபடம் ஒன்று இருந்திருக்கலாமே' என்போருக்கான பதில்...
அப்படி ஒரு படம் இருந்திருந்தால்... முந்தைய நபியான ஈசா அலை...(ஜீசஸ் கிரைஸ்ட்)க்கு வைக்கப்பட்டது போல இவருக்கும் மக்கள் சிலை வைத்து, சர்ச்(தர்ஹா)கட்டி, இவரையும் கடவுளாக்கி, கிரிஸ்டியாநிசம் போல... 'முஹம்மதியானிசம்' என்று ஒரு புதிய மதத்தை உருவாக்கி, ஆதி மனிதர் ஆதமுக்கு அருளப்பட்ட, முஹம்மத் நபியால் இறுதியாக புணரமைக்கப்பட்ட இன்று நம்மிடமுள்ள ஏக இறைவணக்கம் கொண்ட அதே தூய இஸ்லாம் மீண்டும் ஒருமுறை சிதைக்கப்பட்டு இருந்திருக்கும்..! அப்படி ஏதும் நடந்து விடக்கூடாது என்பதில்தான் படு உறுதியாக இருந்தார்கள்... இஸ்லாத்தின் இறுதித்தூதரான முஹம்மத் நபி (ஸல்..) அவர்கள்..!
'குழப்பம் இல்லாதிருக்க உங்கள் நபிக்கு உண்மையான வரைபடம் ஒன்று இருந்திருக்கலாமே' என்போருக்கான பதில்...
அப்படி ஒரு படம் இருந்திருந்தால்... முந்தைய நபியான ஈசா அலை...(ஜீசஸ் கிரைஸ்ட்)க்கு வைக்கப்பட்டது போல இவருக்கும் மக்கள் சிலை வைத்து, சர்ச்(தர்ஹா)கட்டி, இவரையும் கடவுளாக்கி, கிரிஸ்டியாநிசம் போல... 'முஹம்மதியானிசம்' என்று ஒரு புதிய மதத்தை உருவாக்கி, ஆதி மனிதர் ஆதமுக்கு அருளப்பட்ட, முஹம்மத் நபியால் இறுதியாக புணரமைக்கப்பட்ட இன்று நம்மிடமுள்ள ஏக இறைவணக்கம் கொண்ட அதே தூய இஸ்லாம் மீண்டும் ஒருமுறை சிதைக்கப்பட்டு இருந்திருக்கும்..! அப்படி ஏதும் நடந்து விடக்கூடாது என்பதில்தான் படு உறுதியாக இருந்தார்கள்... இஸ்லாத்தின் இறுதித்தூதரான முஹம்மத் நபி (ஸல்..) அவர்கள்..!
தொடர்புடைய பதிவு : பதிவுலகின்...'தினமலம்'...(கொடுக்கி)
32 ...பின்னூட்டங்கள்..:
உருவம் கற்பிப்பத் நம்மவர்களுக்கு நிகர் வேறுயாருமில்லை என்பதை வரிக்கு வரி சொல்லாமல் சொல்லியுள்ளீர்கள்.
//இப்போது புரிகிறதா..? 'மனித குல இறப்புக்கு பின்னர் நாளை மறுமையில் நியாயத்தீர்ப்பு நாளில் கவ்சர் தடாகத்துக்கு அருகே, ஒற்றை மனிதராய் நிற்கும் தங்கள் இறைத்தூதரை நேரில் காண இருக்கும் முஸ்லிம்கள், தம் நபிக்கு பொய்யான புனைவு உருவங்களை யாருமே வரைந்து குழப்பம் ஏற்படுத்தக்கூடாது' என்று ஏன் இவ்வளவு பிரயத்தனப்படுகிறார்கள் என்று..? ஏதோ.... புரிந்தால் சரி..!
//
உண்மையில் மிகச் சரியான பதிலை நம் மக்களுக்கு கற்றுத்தந்துள்ளீர்கள். ஜஸக்கல்லாஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
//இப்போது புரிகிறதா..? 'மனித குல இறப்புக்கு பின்னர் நாளை மறுமையில் நியாயத்தீர்ப்பு நாளில் கவ்சர் தடாகத்துக்கு அருகே, ஒற்றை மனிதராய் நிற்கும் தங்கள் இறைத்தூதரை நேரில் காண இருக்கும் முஸ்லிம்கள், தம் நபிக்கு பொய்யான புனைவு உருவங்களை யாருமே வரைந்து குழப்பம் ஏற்படுத்தக்கூடாது' என்று ஏன் இவ்வளவு பிரயத்தனப்படுகிறார்கள் என்று..? ஏதோ.... புரிந்தால் சரி..!//
நெத்தியடி
புனைவுக்கு எதிரான போராட்டம் ஏன் என்று நீங்கள் சொல்வது சரிதான். ஆனாலும், வள்ளுவருக்கு கருப்பு கண்ணாடி மாட்டியது தான் தினமணிக்கும் அதன் வாசகர் களுக்கும் கடும் கோபம் வர வைத்து விட்டது.
சலாம்! சகோ ஆஷிக்!
//அசலை காக்க புனைவை எதிர்த்தால் நாம் வரவேற்போம்..! ஆனால், அசல் என்று நம்பி ஒரு புனைவுக்காக இன்னொரு புனைவை எதிர்க்கும் இந்த எதிர்ப்பை எப்படி நாம் ஆதரிக்க முடியும்..!//
இது அடுத்த நெத்தியடி!
திருவள்ளுவர் ஒரு பிராமணராகத்தான் இருக்க முடியும் என்ற வார்த்தை ஜாலங்கள் பல காலமாக அவாள்களால் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி யிருக்க ஒரு சூத்திரனை வள்ளுவராக உருவகப்படுத்தினால் விடுமா தினமணி. எனவேதான் முறுக்கிக் கொண்டு கட்டுரை எழுதியிருக்கிறது. இதையே சோ ராமசாமியை வள்ளுவராக உருவகப் படுத்தியிருந்தால் இந்த அளவு கொதித்திருக்காது தினமணி!
விழிப்புணர்வூட்டும் பதிவு.
சலாம் சகோ ஆசிக்,
தமிழகத்தில் நடக்கும் விசயங்களை, இங்கு இருப்பவர்களை விட நீங்கள் துல்லியமாக கவனிக்கிறீர்கள். நிற்க.
இதே கேள்வியை என்னுடைய கிறித்தவ(ராபின் சண்டைக்கு வருவாரு பாருங்க) நண்பர்களிடமும் கேட்டேன். ஏப்பா பார்க்காத ஒருவர எப்படிப்பா வரைந்தது அவருடைய உண்மைப்படம் போல் போடுகிறீர்களே??? இது நியாயமா என்று. உங்கள் மூக்கை மட்டும் மாத்தி வரைந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என்று???? அதற்க்கு அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொன்னார்கள். ஆனால் கடவுளுக்கு அல்லது பெரியவர்களுக்கு அதே தவறை சர்வ சாதாரணமாக செய்கிறார்கள்.
உருவம் இருந்தால் தான் அவர்கள் சொன்னது மக்களிடம் சென்றடையும் என்ற தவறான புரிதலால் இருக்கலாம் சகோ. இந்த விசயத்தில் அவர்கள் முஸ்லிம்களை ஒப்பிட்டு பார்க்கலாம். உருவம் இல்லாமலே எவ்வளவு தூரம் நாம் முஹம்மது நபி ஸல் அவர்களை மதிக்கிறோம்,விரும்புகிறோம் என்று.
நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. உருவம் கொடுப்பவர்கள் தான் சிந்திக்க வேண்டும்.
அற்ப்புதமான பதிவு சகோ. வாழ்த்துக்கள்.
@சுவனப்பிரியன்
சகோ பாலசந்தரை கண்ணாடியோடு திருவள்லுவராக ஒவ்வொரு வாரமும் பாலசந்தர் இயக்கிய சீரியல் தொடங்குவதற்கு கண்பித்தார்கள் அப்போது தினமணிக்கு கோபம் வரவில்லை பாருங்கள்
பாலசந்தரின் திருவள்ளுவர் கலைக்கூட போட்டோவில் பாலசந்தர் தான் திருவள்ளுவர்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
ஜெயலாலிதா அம்மையாருக்கு ஜல்றா அடிப்பதில் யாரு பெரியவர் என்று நீருபிக்கும் விசுவாச போட்டியில் தினமலரும் தினமணியும் பல விஷயங்களை ஒளறி கொட்டுகின்றன அதில் இதுவும் ஒன்று ஆட்சி மாறும் போது பாருங்கள்
அன்னை மேரியாக எப்படி ஜெயலாலிதாவை சித்தரிக்கலான் என்று ஜல்றா அடிப்பார்கள் இதுலாம் தினபத்திரிக்கை உலகில் சாகஜமப்பா
அல்ஹம்துலில்லாஹ்! அருமையான பதிவு! புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சந்தோசம்
hai citizen of world,
good awareness article.
'குழப்பம் இல்லாதிருக்க உங்கள் நபிக்கு உண்மையான வரைபடம் ஒன்று இருந்திருக்கலாமே' என்போருக்கான பதில்...
>>>>>this same question flashed in my mind. ah. immediately got a nice logical answer. thanks. see, even this poet tiruvalvar is slowly becoming a GOD from no image to very huge idol at cape comerin.
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
---->
புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர் <----
.
yes they are not publishing my comment too..now dinamani is following Dinalamalr..
@தாஜுதீன்வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.தாஜுதீன்.
@ஆமினா
அலைக்கும் சலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஆமினா
@நல்லபெயர்///வள்ளுவருக்கு கருப்பு கண்ணாடி மாட்டியது தான் தினமணிக்கும் அதன் வாசகர் களுக்கும் கடும் கோபம் வர வைத்து விட்டது.///
---அடடா...
கூலிங் கிளாஸ் அணிவது அவ்ளோ பெரிய பாவமா சகோ.நல்லபெயர்..? அந்தக்காலத்தில் அது இல்லை. ஆனால், இந்தக்காலத்தில் வாழ்ந்து இருந்தால், மயிலாப்பூரில் கொளுத்துற வெயிலில் திருவள்ளுவரே அதை மாட்டி இருந்திருப்பார் அல்லவா..?
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.
@சுவனப்பிரியன்அலைக்கும் சலாம் வரஹ்...
///திருவள்ளுவர் ஒரு பிராமணராகத்தான் இருக்க முடியும் என்ற வார்த்தை ஜாலங்கள் பல காலமாக அவாள்களால் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி யிருக்க ஒரு சூத்திரனை வள்ளுவராக உருவகப்படுத்தினால் விடுமா தினமணி. எனவேதான் முறுக்கிக் கொண்டு கட்டுரை எழுதியிருக்கிறது. இதையே சோ ராமசாமியை வள்ளுவராக உருவகப் படுத்தியிருந்தால் இந்த அளவு கொதித்திருக்காது தினமணி!///
---வ்வ்வாவ்...விழிப்புணர்வூட்டும் அதிரடி பின்னூட்டம்..!
இதற்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@சிராஜ்அலைக்கும் சலாம் வரஹ்...
//தமிழகத்தில் நடக்கும் விசயங்களை, இங்கு இருப்பவர்களை விட நீங்கள் துல்லியமாக கவனிக்கிறீர்கள்.//---internet..!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சிராஜ்
@ஹைதர் அலிஅலைக்கும் சலாம் வரஹ்...
சகோ.ஹைதர் அலி,
வ்வ்வாவ், இது....///பாலசந்தரை கண்ணாடியோடு திருவள்லுவராக ஒவ்வொரு வாரமும் பாலசந்தர் இயக்கிய சீரியல் தொடங்குவதற்கு கண்பித்தார்கள் அப்போது தினமணிக்கு கோபம் வரவில்லை பாருங்கள்///...சகோ.சுவனப்பிரியனின் விழிப்புணர்வூட்டும் அதிரடி பின்னூட்டத்திற்கு லட்டு மாதிரியான ஆதாரணம்..!
///பாலசந்தரின் திருவள்ளுவர் கலைக்கூட போட்டோவில் பாலசந்தர் தான் திருவள்ளுவர்///---
இவருடையது 'கவிதாலயா' அல்லவா சகோ..? அதில் திருவள்ளுவரை பார்த்ததாகத்தான் எனக்கு நியாபகம்..!
///ஜெயலாலிதா அம்மையாருக்கு ஜல்றா அடிப்பதில் யாரு பெரியவர் என்று நீருபிக்கும் விசுவாச போட்டியில் தினமலரும் தினமணியும்...///---உளுத்துப்போனது ஊடக தர்மம்..!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஹைதர் அலி.
@Jafar Safamarva//புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சந்தோசம்//---yes..!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.Jafar.
@தட்டச்சன்
///this poet tiruvalvar is slowly becoming a GOD from no image to very huge idol at cape comerin.///---ஏற்கனவே ஐயன் திருவள்ளுவர் என்று சொல்லிவிட்டார்கள்... சகோ.தட்டச்சன். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.
@VANJOORவருகைக்கு நன்றி சகோ.வாஞ்சூர். (சுட்டி வேலை செய்யவில்லை).
@செங்கதிரோன்
//yes they are not publishing my comment too..//---தினமணிக்கு என்ன ஒரு வில்லத்தனம்...?
//now dinamani is following Dinalamalr..//---அப்படித்தான் தெரிகிறது சகோ.செங்கதிரோன்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.
@pattu
//...இப்படிதான் இங்கு வரலாறு படம் ஒடுது.//
///என்ன பன்னா அவங்களோட தர்மத்தை காரைக்கிறார்கள்.///
---சரியா சொன்னீங்க சகோ.pattu..!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
காணத்தவறாதீர்கள். உலகிலேயே மிக பெரிய, மிக சிறிய திருகுரான் பிரதிகளின் அரிய சிறுகண்காட்சி விடியோக்கள் .மழலைகள், சிறார்கள் குரான் ஓதும் விடியோக்கள்.
.
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
CORRECTED.
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
2. ---- >
புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர் < ----
திருவள்ளுவரை முதலில் பார்த்தவர் யாரென்று தினமலர்க்காரனை கேட்டால் பதில் சொல்லுவானா.......?
மிக நல்ல பதிவு.
@VANJOORவருகைக்கும் சரிசெய்த சுட்டி பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ.வாஞ்சூர்.
@zaeisa
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே பிறந்தவர் திருவள்ளுவர். ஆனால் தினமலர்...? உங்கள் பின்னூட்டத்தில் எதோ உள்குத்து இருக்கிறது புரிகிறது. ஆனால், அது என்ன என்றுதான் விளங்க வில்லை சகோ.zaeisa.
வருகைக்கு மிக்க நன்றி சகோ.
@lcnathanவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.
LCநாதன்.
இராமகிருஷ்ணன், மலேசியா
எப்படி இப்படியெல்லாம் உண்மைகளை உங்களால் சொல்ல முடிகிறது!
எனக்கும் இப்படி ஒரு சந்தேகம் இருந்து வந்தது. புத்திக்கு மட்டுமே முதலிடம் கொடுக்கும் நாம் பெரும்பாலும் நாம் எல்லா விசயங்ளிலும் அறிவுக்கு வழி விடுவதில்லை. அறிவுக்கு வழி விடுபவர்கள் அவதானமாக எதையும் பேசமாட்டார்கள். பார்த்துப் பார்த்துப் பழகிப்போன காட்சிகள் (புனைவுகள்) நெஞ்சுக்குள் பதிவாகிப்போனபின் பின்னாளில் அதுவே உண்மையாகிப்போய் விடுகிறது. இந்து கடவுள்கள் விசயத்திலும் அதுதான் உண்மை. அதுவே, மாற்றமாகி வேரோர் வகையில் உருமாறிப்போகும்போது அது புனைவு என்று மனம் முன்னிலைப்படுத்தாது. அத்தோடு அவர்களுக்குள் வக்கிரப் புத்தியும் சேர்ந்துவிடும் பட்சத்தில் கெட்கவேவேண்டாம். வெளிப்பார்வைக்குமட்டுமே தெரிந்த மற்ற மதத்தின் வெளி நெறிகளை கொச்சைபடுத்தி எல்லையிலா விமர்சனத்துக்குள்ளாக்குவதில் இந்த பாழ்பட்ட மனிதர்களுக்கு ஒரு சந்தோசம்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!