இங்கிலாந்து பாராளுமன்ற வெஸ்ட்மினிஸ்டர் பேலஸ் வளாகத்தினுள்ளே 23 உணவகங்கள் உள்ளன. அங்கே இஸ்லாமிய விதிமுறைப்படி அறுக்கப்பட்ட 'ஹலால்' இறைச்சிகள் உண்ணக்கிடைத்து வந்தன. இந்நிலையில், "பாராளுமன்ற வளாகத்தினுள் உணவு உண்ணும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இனி எந்த உணவு விடுதிகளிலும்... 'ஹலால்' உணவை உண்ண முடியாது என்றும், 'ஹலால்' முறையில் விலங்கு அறுக்கப்படுவது முஸ்லீம் அல்லாத உறுப்பினர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது" என்றும் லண்டனில் வெளியாகும் டெய்லி மெயில் தன்னுடைய பத்திரிகையில் அரசு சார்பாக வெஸ்ட் மினிஸ்டர் அரசு மாளிகை அறிவிப்பை மேற்கோள் காட்டி இச்செய்தியை புத்தாண்டு தினத்தன்று வெளியிட்டுள்ளது.
இவ்வறிக்கை, பிரிட்டிஷ் எம்.பிக்களுக்கு, குறிப்பாக முஸ்லீம் எம்.பிக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 'இதற்கான காரணம் என்ன' என்று கேட்டறிந்த போது, "முஸ்லிம் அல்லாத மற்ற எம்.பி.க்களுக்கு 'ஹலால்' முறையில் அறுக்கப்பட்ட இறைச்சி சாப்பிட பிடிக்க வில்லை..! இதை ஓர் 'இஸ்லாமிய திணிப்பு' போல பார்க்கின்றனர்..! இதனால், 'ஹலால்' அல்லாத இறைச்சி உண்ணும் வாய்ப்பு தங்களுக்கு மறுக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து, இனி இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் 'ஹலால்' அல்லாத இறைச்சியே பரிமாறப்படும்" என்று முடிவு செய்யப்பட்டு விட்டதாம்..!
Lord Ahmad எனும் ஒரு இங்கிலாந்து முஸ்லிம் எம்.பி. இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும் போது, “ஹலால் உணவை உண்ணாதவர்களுக்கு மட்டும் அப்படி ஒரு வாய்ப்பிருப்பது போல்... ஹலால் உணவு மட்டுமே உண்ண விரும்புவோர்க்கும் ஒரு வாய்ப்பு இருக்க வேண்டாமா..?” என்றார்..! இக்கேள்விக்கு சரியான பதிலை எவரும் இறுதிவரை தரவில்லை..! இப்படி, 'ஹலால்' உணவுக்கு அனைத்து கதவுகளையும் அடைத்தது தவறு என்கிறார்..! ஆனால்.... 'இங்கிலாந்து சர்ச்'சின் உறுப்பினர் அலிசான் ரூப்போ என்ற கிருஸ்துவர், “நாட்டின் மற்ற உணவகங்களில், பள்ளியில், மருத்துவமனைகளில் எல்லாம் ஹலால் உணவை பரிமாற அனுமதிக்கும் பாராளுமன்றம், தன் வளாகத்தில் மட்டும் ஹலால் உணவை பரிமாற தடை விதிப்பது இரட்டை நிலைப்பாடாக உள்ளது” என்று கூறி, மறைமுகமாக இந்த முடிவை இங்கிலாந்து முழுக்க விரிவுபடுத்த நச்சுச்சாவி கொடுத்து விட்டார், அண்ணாச்சி..! சரியான... சுப்ரமணிய சுவாமி..!
தமக்கு எவ்வித தேவையுமின்றி எந்த ஓர் உயிரையும் கொல்ல முஸ்லீம்களை இறைவன் அனுமதிக்கவில்லை. அதேநேரம், தம் உயிரைக்காக்க கொடிய விலங்குகளை, நச்சுப்பூச்சிகளை கொல்லலாம். அல்லது... தம் உணவுத்தேவைக்காக அதற்குரிய உயிருள்ள பிராணிகளை, 'இறைவா, என்னை நீ அனுமதிதத்தன் பேரிலேயே இந்த பிராணியை என் உணவுத்தேவைக்காக அறுக்கிறேன்' என்று மனதில் நினைத்தவராக... "இறைவனின் பெயரால்" என்று கூறி, மிகக்கூர்மையான கத்தி கொண்டு கழுத்தின் இரத்த நாளத்தை மட்டும் நொடியில் அறுத்து, இரத்தைத்தை எல்லாம் ஓட்டிவிட்டு (இரத்தம் சாப்பிடக்கூடாது) இறைச்சியை சாப்பிடலாம் இதுதான் ஹலால் முறையிலான அறுப்பு..!
இதுவல்லாத முறைகளில் அறுத்து சாப்பிடுவது, அல்லது ஏதேனும் ஆயுதம் கொண்டு அடித்து கொன்று சாப்பிடுவது, அல்லது ஒரே வெட்டில் தலை-உடம்பு தனித்தனியாக போகும்படி வெட்டிக்கொன்று சாப்பிடுவது, அல்லது தலையை பிடித்து கழுத்தில் திருகி நெரித்து கொன்று சாப்பிடுவது, அல்லது ஓங்கி தரையில்/சுவரில் மோதி அடித்துக்கொன்று சாப்பிடுவது, இதெல்லாம்... முஸ்லிம்களுக்கு அனுமதி - ஹலால் இல்லை..!
மேற்படி முஸ்லிம் அல்லாத இங்கிலாந்து எம்.பி.க்களின் கோரிக்கை இங்கே என்ன சகோ..?
'உயிரினங்களை கொல்லக்கூடாது' என்பதா..? இல்லை..!
'அசைவம் சாப்பிடக்கூடாது' என்பதா..? அதுவும் இல்லை...!
...வேறென்ன..?
"எந்த முறையில் விலங்கை கொல்வது" எனபதில்தான் அங்கே பிரச்சினை..!!!
இஸ்லாமிய 'ஹலால்' முறைப்படி அல்லாமல் நான் மேற்சொன்ன அல்லது வேறு ஏதோ ஒரு முறைப்படி கொன்றால்தான் சாப்பிடுவார்கள் போல..!
சரிங்கப்பா... அது உங்கள் உரிமை. ஹலால் அல்லாத இறைச்சியை சாப்பிடுவது உங்கள் உரிமைதான். அதுதான் 23 உணவகங்கள் அங்கே உள்ளனவே..? அதில் சிலவற்றில் ஹலால் பிரியர்களுக்காக ஹலால் இறைச்சி விற்றால் என்னவாகும்..? முஸ்லிம் எம்.பி.க்களும்... ஹலால் முறையை விரும்பும் மற்ற எம்பிக்களும் அங்கே மட்டும் சென்று சாப்பிட்டுக்கொள்ளட்டுமே..! மற்ற எம்பிக்களுக்கு உள்ள அதே உரிமையை உங்கள் சக குடிமகனான முஸ்லிம் எம்பிக்களுக்கும் தந்தால் என்ன..? ஏன் தரமாட்டீர்கள்..? இதைத்தானே... இந்த உரிமையைத்தானே... லார்ட் அஹமது எம்.பி.யும் கேட்கிறார்..!
புரியவில்லையா..? புரியாதுதான்..! எப்படி புரியும்..?
நிர்வாணமாக திரிவது பெண்ணுரிமை என்பீர்கள்...முழுக்க உடை அணிய வேறொரு பெண்ணுக்கு பெண்ணுரிமை மறுத்து சட்டம் இயற்றுவீர்கள்..!
மது குடிப்பது உங்கள் பிறப்புரிமை என்பீர்கள்... யாரேனும் குடிக்காமல் விலகி சென்றால்... 'பார்ட்டிக்கு அது அவமரியாதை' என்று கூறி மதுகுடிக்காத அடுத்தவர் பிறப்புரிமையை சாகடிப்பீர்கள்..!
ஆண்-ஆண், பெண்-பெண், ஆண்-பெண் என எவ்வித வரைமுறையும் திருமணபந்தமுமின்றி விபச்சாரத்தை உரிமை என்பீர்கள்... திருமண உறவுடன் கணவன் மனைவியாக அனைத்து உரிமைகளையும் தந்து ஒன்று அல்லது அதிக பட்சம் நான்கு மனைவி மட்டும் என்றால்... "ச்சீ..ச்சீ.. இதுதான் கேவலம்" என்பீர்கள்...!
கொடுத்த கடனுக்கு அநியாய வட்டி வசூலிப்பீர்கள்... வட்டி அல்லாமல், இஸ்லாமிய வங்கி கடன் கொடுக்க முன்வந்தால் எதிர்ப்பீர்கள்...!
'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுவது'தான் எம் கொள்கை என்பீர்கள்... யாரோ முகம் தெரியாத ஒரு சிலர் செய்த பயங்கரவாதத்துக்காக... அவர்களை பிடித்து விசாரித்து தண்டிப்பதை விடுத்து... வேறெங்கோ சென்று... மில்லியன் கணக்கில் அப்பாவி மக்களை கொன்று ஊரையே... நாட்டையே... மொத்தமாக அழிப்பீர்கள்...!
'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' நடத்துவீர்கள்... உலகிலேயே மிக மிக அதிகமாக அதிபயங்கர ஆயுதங்கள் தயாரித்து நீங்கள்தான் 'யாராருக்கோ' விற்றுக்கொண்டே இருப்பீர்கள்..!
இப்படிப்பட்ட நீங்கள்தான்... ஹலாலான முறையில் கொல்லப்பட்ட விலங்கின் இறைச்சியை முஸ்லிம்களுக்கு மறுக்கின்றீர்கள்...! எங்களுக்கு எங்களின் முறைப்படி கொல்லப்பட்ட விலங்கின் இறைச்சிதான் வேண்டும் என்று ஒரு குடிமகனாக எம்.பி.யாக கேட்பது கூட தவறா..? 'ஆம்' என்றால்... இதுதானேப்பா கருத்துத்திணிப்பு..? உரிமை மறுப்பு..! மதவெறி..! இஸ்லாமோஃபோபியா..! ச்சே... இவ்வுலகில், ஒரு மனிதன்... கொலைகாரனாக, கொள்ளைக்காரனாக, விபச்சாரியாக, பாலியல் காமுகனாக, குடிகாரனாக, சூதாடியாக... இப்படி சமூகத்துக்கும் அடுத்தவருக்கும் தீங்குதரும் தொல்லையாக... எப்படி வேண்டுமானாலும் வாழலாம் போல, அரசு அனுமதியுடன்..! ஆனால், தூய இஸ்லாமை பின்பற்றி முஸ்லிமாக பிறருக்கும் சமூகத்துக்கும் தொல்லை இன்றி அமைதியாக நன்மை செய்து வாழ மட்டும் ஆயிரம் தடைகள்..! எப்படியெல்லாம் வருகிறது பாருங்கள் சகோ..! ஏன் இப்படி..?
36 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும்
/////நிர்வாணமாக திரிவது பெண்ணுரிமை என்பீர்கள்...முழுக்க உடை அணிய வேறொரு பெண்ணுக்கு பெண்ணுரிமை மறுத்து சட்டம் இயற்றுவீர்கள்..!
மது குடிப்பது உங்கள் பிறப்புரிமை என்பீர்கள்... யாரேனும் குடிக்காமல் விலகி சென்றால்... 'பார்ட்டிக்கு அது அவமரியாதை' என்று கூறி மதுகுடிக்காத அடுத்தவர் பிறப்புரிமையை சாகடிப்பீர்கள்..!
ஆண்-ஆண், பெண்-பெண், ஆண்-பெண் என எவ்வித வரைமுறையும் திருமணபந்தமுமின்றி விபச்சாரத்தை உரிமை என்பீர்கள்... திருமண உறவுடன் கணவன் மனைவியாக அனைத்து உரிமைகளையும் தந்து ஒன்று அல்லது அதிக பட்சம் நான்கு மனைவி மட்டும் என்றால்... "ச்சீ..ச்சீ.. இதுதான் கேவலம்" என்பீர்கள்...!
கொடுத்த கடனுக்கு அநியாய வட்டி வசூலிப்பீர்கள்... வட்டி அல்லாமல், இஸ்லாமிய வங்கி கடன் கொடுக்க முன்வந்தால் எதிர்ப்பீர்கள்...!
'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுவது'தான் எம் கொள்கை என்பீர்கள்... யாரோ முகம் தெரியாத ஒரு சிலர் செய்த பயங்கரவாதத்துக்காக... அவர்களை பிடித்து விசாரித்து தண்டிப்பதை விடுத்து... வேறெங்கோ சென்று... மில்லியன் கணக்கில் அப்பாவி மக்களை கொன்று ஊரையே... நாட்டையே... மொத்தமாக அழிப்பீர்கள்...!///////////////நச் கேள்விகள் சகோ.கடைசி கேள்வி அதைவிட நச்சுனு கேட்டிருக்கீங்க சகோ
அருமையான பதிப்பு
தூய இஸ்லாமை பின்பற்றி முஸ்லிமாக பிறருக்கும் சமூகத்துக்கும் தொல்லை இன்றி அமைதியாக நன்மை செய்து வாழ மட்டும் ஆயிரம் தடைகள்..! எப்படியெல்லாம் வருகிறது பாருங்கள் சகோ..! ஏன் இப்படி..?
இஸ்லாம் மீது இங்கிலாந்து மக்களுக்கு மேனியா வந்துவிடுமோ என்ற ஃபோபியா தான் எல்லாவற்றிற்கும் காரணம்.
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் முஹம்மத் ஆஷிக்,
தனிமனித சுதந்திரத்தில் முன்னேறி விட்டோம் என்று மார் தட்டுகிற இந்த மேலைத்தேய நாடுகள் தம்முடைய நாட்டின் குடிமக்களின் ஒரு பகுதியினரின் சுதந்திரத்தை அப்பட்டமாக பறித்திருக்கிறது. அதுவும் மக்கள் பிரதிநிதிகளுக்கே இந்த நிலைமை. மேலைத்தேய நாடுகள் நாகரிகத்திலும் தனி மனித உரிமைகளிலும் சிறந்தது என்று முழக்கமிடுகிற புண்ணியவான்கள் இதற்கு என்ன பதிலை சொல்வார்கள்? ஆனால் இதை திசை திருப்பும் வண்ணம் அரேபிய நாடுகளில் என்ன சுதந்திரம் இருக்கிறது? பாகிஸ்தானில் பங்களாதேசில் என்ன இருக்கிறது என்ற சிந்து பைரவி ராகத்தை கோரசாக பாடுவார்கள். ஆனால் நீங்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் இருக்காது.
//நிர்வாணமாக திரிவது பெண்ணுரிமை என்பீர்கள்...முழுக்க உடை அணிய வேறொரு பெண்ணுக்கு பெண்ணுரிமை மறுத்து சட்டம் இயற்றுவீர்கள்..!//
மொத்த பதிவின் சுருக்கமும் இந்த ஒற்றை வரியில் அடங்கி விட்டது சகோதரரே. அரைகுறை ஆடையுடன் திரிவது பெண் சுதந்திரம் அல்லது தனி மனித சுதந்திரம் என்றால் முழுக்க உடை அணிந்து கொள்வதும் பெண் சுதந்திரம் அல்லது தனி மனித சுதந்திரம் தானே. ஆனாலும் பாருங்கள் விடை கிடைக்கவே கிடைக்காது.
அருமையான பதிவு ஆஷிக். இவர்களின் நீதியையும் நேர்மையையும் பார்க்கும் போது மனசு கொதிக்கிறது,..
ஒவ்வொரு மதத்தவரும் அவர்களின் தனி விருப்பங்களை அவர்களே செய்துகொள்ள வேண்டும். அதை விட்டு ஒரு சமுதாயத்தையோ அரசையோ மத சடங்குகள், சட்டங்கள் படி செய்ய வற்புறுத்த கூடாது.
"திருமண உறவுடன் கணவன் மனைவியாக அனைத்து உரிமைகளையும் தந்து ஒன்று அல்லது அதிக பட்சம் நான்கு மனைவி மட்டும் என்றால்... "ச்சீ..ச்சீ.. இதுதான் கேவலம்" என்பீர்கள்...!"
இஸ்லாத்தில் ஒரு பெண்ணுக்கு நான்கு கணவர்கள், திருமண பந்தத்துடன் என்றால் ஏற்பீர்களா?
@Bible Hidden Truthஇது ரொம்ப சிம்பிளான விஷயம் சகோ.
உதாரணமாக,
என் வீட்டிற்கு உங்களையும் ஒரு ஐயருடன் விருந்திற்கு அழைத்திருக்கிறேன். அவர் சைவம் மட்டும்தான் சாப்பிடுவார். நீங்களும் நானும் சைவம் மட்டுமின்றி அசைவமும் சாப்பிடுவோம்.
இந்நிலையில், நான் அசைவம் மட்டுமே சமைத்து விருந்து வைத்திருந்தால் என்னைப்பற்றி ஐயர் என்ன நினைப்பார்..?
சரி, ஏதும் சாப்பிடாமல்... நம் வாயையே பார்த்துக்கொண்டிருக்கும் அவருக்கு இப்போது உங்கள் பதில் என்ன..?
//ஒவ்வொரு மதத்தவரும் அவர்களின் தனி விருப்பங்களை அவர்களே செய்துகொள்ள வேண்டும். அதை விட்டு ஒரு சமுதாயத்தையோ அரசையோ
(& விருந்து போடுபவரையோ)
மத சடங்குகள், சட்டங்கள் படி செய்ய வற்புறுத்த கூடாது.//---இதை தங்கள் கருத்தாக அந்த ஐயரிடம் சொல்வீர்களா..?
அங்கே அந்த பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் முஸ்லிம் குடிமகன்கள் எம்.பி.க்கள் எவருமே இல்லை என்றால்... கதையே வேறு.
வாடிகனில் இந்த சட்டம் அமுலில் வந்தால் எனக்கொன்றும் அப்ஜெக்ஷன் இல்லை, சகோ.பைபிள்...
@Bible Hidden Truthநான் நடைமுறையில் சட்ட பாதுகாப்போடு நடக்கும் குற்றங்களை பற்றி கேட்டிருக்கிறேன்..!
நீங்களோ....
///இஸ்லாத்தில் ஒரு பெண்ணுக்கு நான்கு கணவர்கள், திருமண பந்தத்துடன் என்றால் ஏற்பீர்களா?///
...இப்படி இல்லாத ஒன்றை பற்றி "...இருந்தால் ஏற்பீர்களா.." எனக்கேட்கிறீர்கள்.
மனிதனால் நடைமுறைப்படுத்த இயலாத - நடைமுறை சாத்தியமற்ற சட்டங்கள் எதுவுமே இஸ்லாத்தில் நன்மை என்று ஏவப்படவில்லை என்பதை அறிக, சகோ.பைபிள்...
வருகைக்கு மிக்க நன்றி சகோ.
@Mohamed Faaique//இவர்களின் நீதியையும் நேர்மையையும் பார்க்கும் போது மனசு கொதிக்கிறது,..//---ஸலாம்..! :-(
வருகைக்கு மிக்க நன்றி சகோ.ஃபாயிக்.
@பி.ஏ.ஷேக் தாவூத்அலைக்கும் ஸலாம் வரஹ்...
///தம்முடைய நாட்டின் குடிமக்களின் ஒரு பகுதியினரின் சுதந்திரத்தை அப்பட்டமாக பறித்திருக்கிறது. அதுவும் மக்கள் பிரதிநிதிகளுக்கே இந்த நிலைமை.///---இது கொடுமையான நிலைமை சகோ..!
ஆனாலும்,
இது போன்ற நாடுகளைத்தான்...///நாகரிகத்திலும் தனி மனித உரிமைகளிலும் சிறந்தது///...என்று தலையில் தூக்கி வைத்து ஆடுகிறது, ஆட்டுமந்தை கூட்டம் ஒன்று..!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.ஷேக் தாவூத்.
@ரஹீம் கஸாலி//இஸ்லாம் மீது இங்கிலாந்து மக்களுக்கு மேனியா வந்துவிடுமோ என்ற ஃபோபியா தான் எல்லாவற்றிற்கும் காரணம்.//---ஹி..ஹி.. ஃபோபியாகளுக்கு இஸ்லாமோஃபிலியா வர பிரார்த்திப்போம்..!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.கஸாலி.
@இப்னு காஜாவருகைக்கு நன்றி சகோ.இப்னு காஜா.
@முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்அலைக்கும் ஸலாம் வரஹ்...வருகைக்கு நன்றி சகோ.முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்.
இங்கிலாந்தில் இஸ்லாம் வேகமாக பரவி வருகிறது.அதற்க்கு ஏதாவது ஒரு வகையில் இடையுறு ஏற்ப்படுத்த வேண்டும் அதுதான் அவர்களின் நோக்கம்.சத்திய ஒளியை வாயால் வூதி அணைக்க முயல்கிறார்கள்.
இங்கிலாந்தில் இஸ்லாம் வேகமாக பரவி வருகிறது.அதற்க்கு ஏதாவது ஒரு வகையில் இடையுறு ஏற்ப்படுத்த வேண்டும் அதுதான் அவர்களின் நோக்கம்.சத்திய ஒளியை வாயால் வூதி அணைக்க முயல்கிறார்கள்.
அஸ்ஸலாமு அழைக்கும் ...
நல்ல பதிவு சகோ ...நன்றி நன்றி
மாஷா அல்லா
அருமையான பதிவு . பாராட்டுக்கள் ஆஷிக். *
இதையும் படிங்க ..
காவி தீவிரவாதிகளின் கயவாளித்தனம்! http://meiyeluthu.blogspot.com/2012/01/blog-post.html
சலாம் சகோ....
இறைவன் உதவியால் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்...
இங்கிலாந்து அமெரிக்காவின் கைப்பாவைதானே ..
@NKS.ஹாஜா மைதீன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
நீண்ட நாள் கழித்து மீண்டும் வந்திருக்கிறீர்கள். தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.அதிரடி ஹாஜா.
அல்ஹம்துலில்லாஹ் நலம். இறைவன் உதவியால் தாங்களும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். //இங்கிலாந்து அமெரிக்காவின் கைப்பாவைதானே..//---ஆமாம் சகோ. அப்புறம் அதிலென்ன ஆச்சர்யம் என்கிறீர்களா..? சர்தான்.
@உதயம்ஸலாம் சகோ.உதயம்,
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
தங்கள் பதிவை படித்தேன். புது வரடம் அன்று இந்த நியூஸ் வந்த போதே எனக்கு இதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா சங்பரிவார வேலையாகத்தான் இருக்கும் என்று ஊகித்தேன்.
உயிரைப்பற்றி கொஞ்சமும் அஞ்சாது துப்பறிந்த உண்மையை ஊருக்கும் உலகுக்கும் உணர்த்திய அந்த உத்தமருக்கு என் கோடி நன்றிகள்.
ஹேமந்த் கார்கரேவின் நேர்மை இன்னும் வாழ்வது கண்டு மிகவும் மகிழ்ச்சி.
இறைவனுக்கே புகழனைத்தும்.
@ரியாஸ் அஹமதுஅலைக்கும் ஸலாம் வரஹ்... வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ரியாஸ்.
@Barariதங்கள் கருத்தே என் கருத்தும். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.சகோ.பராரி.
ஹலால் உணவை உண்ணாதவர்களுக்கு மட்டும் அப்படி ஒரு வாய்ப்பிருப்பது போல்... ஹலால் உணவு மட்டுமே உண்ண விரும்புவோர்க்கும் ஒரு வாய்ப்பு இருக்க வேண்டாமா//
நிச்சயமாக!
ஆதரிக்கிறேன்
@Ibnu Shakir
//நிச்சயமாக!//---ம்ம்ம்... அது..!
//ஆதரிக்கிறேன்//---முதன்முறையாக (எனக்குத்தெரிந்தவரையில்) நீங்கள் உண்மையின் பக்கம் நின்று ஆதரவுக்குரல் எழுப்பியமைக்கும், தங்கள் வருகைக்கும் மிக்க நன்றி திரு.Ibnu Shakir.
என் பின்னூட்டத்தை அனுமதித்ததற்கு நன்றி மார்க்க சகோ.
அதெ நேரத்தில் காஃபிர்கள் இப்படியெல்லாம் கேட்டுத்தொலைத்தால் அனுமதிக்க வேண்டாம். ”அதே போல, ஹலால் உணவு உண்ண விரும்பாதவர்களுக்கும் ஹலால் அல்லாத உணவு கிடைக்க சவுதி அரேபியா போன்ற நாடுகள் வழி செய்துதரவேண்டும் இல்லையா? ரமதான் காலத்தில் உணவு உண்ண விரும்பும் காஃபிர்களுக்கும் உணவு உண்ண அனுமதி இருக்க வேண்டும் இல்லையா? பர்தா போட விரும்பாத காபிர் பெண்களும் பர்தா போடாமல் வீதிகளில் நடக்க உரிமை இருக்க வேண்டும் இல்லையா? ஐரோப்பாவில் மசூதி கட்ட எவ்வளவு உரிமை அங்கு மதம் மாறக்கூடிய அல்லத் வந்தேறிய முஸ்லிம்களுக்கு இருக்குமோ அதே அளவுக்கு அரேபியாவிலும் கோவில் கட்டவோ சர்ச் கட்டவோ உரிமை இருக்க வேண்டும் இல்லையா? ”
அதற்கு நாம் என்ன பதில் எழுதுவோம் என்று தெரியாத காஃபிர்கள் எதாவது எழுதுவார்கள். அனுமதிக்க வேண்டாம்
@Ibnu Shakir
//என் பின்னூட்டத்தை அனுமதித்ததற்கு நன்றி மார்க்க சகோ.அதெ நேரத்தில் காஃபிர்கள் இப்படியெல்லாம் கேட்டுத்தொலைத்தால் அனுமதிக்க வேண்டாம். //
---சரி, சரி, இந்த ஒருமுறை தவிர்த்து நானும் இனிமேல் மற்றவர்கள் போலவே உங்களின் இதுபோன்ற அறிவற்ற வறட்டு மொக்கை வாதங்களை அனுமதிக்கப்போவதில்லை... இந்த ஒருமுறை தவிர்த்து..!
///அதே போல, ஹலால் உணவு உண்ண விரும்பாதவர்களுக்கும் ஹலால் அல்லாத உணவு கிடைக்க சவுதி அரேபியா போன்ற நாடுகள் வழி செய்துதரவேண்டும் இல்லையா?///----நிச்சயமாக..! இங்கிலாந்தில், Lord அஹமத் போன்று சவூதியிலும் ஒரு Lord
Mount Batton என்பவர், சவூதி அரசில் அமைச்சராக எல்லாம் இருக்கவேண்டாம்... அட்லீஸ்ட் ஒரு சாதாரண பிச்சை எடுக்கும் saudi citizen ஆவாவது இருந்தால் கூட, நிச்சயமாக அந்த ஒருவருக்கு அவர் கேட்கும் ஹாராமை பெற தக்க வாய்ப்பை ஏற்படுத்தத்தான் வேண்டும்..! மலேசியாவில் உள்ள சைவ மத தமிழர்களுக்காக (citizens) உலகப்பிரசித்தி பெற்ற பிரபல முருகன் கோவில் போலவும், ஓமானில் உள்ள வைணவ மத தமிழர்களுக்காக (citizens) பெருமாள் கோவில் போலவும்... சரி... இப்போதைக்கு இந்த இரண்டு உதாரணம் போதும்...
///ரமதான் காலத்தில் உணவு உண்ண விரும்பும் காஃபிர்களுக்கும் உணவு உண்ண அனுமதி இருக்க வேண்டும் இல்லையா? பர்தா போட விரும்பாத காபிர் பெண்களும் பர்தா போடாமல் வீதிகளில் நடக்க உரிமை இருக்க வேண்டும் இல்லையா?///
---ஹா....ஹா....ஹா.... முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட முஸ்லிம்கள் ஆளும் எந்த நாட்டில் தன் சிறுபான்மை மதத்து குடிமகனுக்கு இப்படி ஒரு அராஜக சட்டம் உள்ளது..? உண்மை பேசுங்கள் பொய்யரே..! (my question is foolish logic... is it not..?)
///ஐரோப்பாவில் மசூதி கட்ட எவ்வளவு உரிமை அங்கு மதம் மாறக்கூடிய அல்லத் வந்தேறிய முஸ்லிம்களுக்கு இருக்குமோ அதே அளவுக்கு அரேபியாவிலும் கோவில் கட்டவோ சர்ச் கட்டவோ உரிமை இருக்க வேண்டும் இல்லையா?///
---ஹலால் உணவை சாப்பிட ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கே உரிமை மறுக்கப்படுகிறது.. அவர் முஸ்லிம் என்பதால்..! நிகாப் அணிய ஒரு பிரான்ஸ் குடிமகளுக்கே உரிமை மறுக்கப்படுகிறது.. அவர் முஸ்லிம் என்பதால்..!
இந்த லட்ஷணத்தில்.... //வந்தேறிய முஸ்லிம்களுக்கு இருக்குமோ//---ஹா....ஹா....ஹா.... பொய்...! அண்டப்புளுகு...! உண்மை பேசுங்கள் பொய்யரே..! (my question is foolish logic... is it not..?)
ஆனால், சவூதி அரேபியாவில் முஸ்லிம் அல்லாத குடிமக்கள் இல்லை... ஓமான்...துபாய்.... போன்ற நாடுகளில் தங்கள் முஸ்லிம் அல்லாத குடிமக்களுக்காக கோவில்கள், சர்ச்கள் உள்ளன..!
//அதற்கு நாம் என்ன பதில் எழுதுவோம் என்று தெரியாத காஃபிர்கள் எதாவது எழுதுவார்கள். அனுமதிக்க வேண்டாம்//
---தயவுசெய்து என்னை இந்த ஒருமுறை மட்டும் மன்னித்து விடுங்கள் திரு.Ibnu Shakir... உங்களை எல்லாம் ஒரு பொருட்டாக மதித்து பதில் சொன்னதுக்கு...
@Ibnu Shakir
Mr.Ibnu Shakir,
தப்பித்தவறி எப்படியோ என் தளத்துக்கு வந்து விட்டீர்கள்...
உண்மைகளை அறிந்து கொள்ள வைக்காமல் உங்களை வெறுங்கையோடு அனுப்பினால் அது தவறல்லவா..?
இன்றைய உலகில், சிறுபான்மை குடிமக்களாக முஸ்லிம்கள் உள்ள நாடுகளில்தான்... அவர்களின் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்ற ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள் இடையூறுகள் அந்தந்த பெரும்பான்மை மதத்து அரசால் அல்லது நாத்திக அரசால் போடப்படுகின்றன.
ஆனால், இன்றைய உலகில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்து அவர்கள் ஆளும் எந்த ஒரு நாட்டிலும் சிறுபான்மை மதத்து குடிமக்களுக்கு அவர்களின் மத நடவடிக்கைகளுக்கு அது மற்றவர்களுக்கு ஆபத்தாகவும் (பட்டாசு வெடி வெடிப்பது, கலர் போடி தண்ணீர் அடிப்பது...) இருந்தாலுமே கூட எவ்வித எதிர்ப்போ முட்டுக்கட்டையோ இடப்படுவது கிடையாது.
இஸ்லாமோபோபியா இன்றி இதை சிந்தித்து பார்க்கவும்.
இன்னொன்றும் சொல்கிறேன்...!
உங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் காலை எழுந்தவுடன் எப்போதும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பார். மேலும், 'மதுவகை... போதை வஸ்து எல்லாம் ஹராம்' என்று அதன் வாசனை கூட இவருக்கு ஆகாது. இது அவரது வாழ்வியல் கொள்கை. 'அது அவரது உரிமைதான்' என்று மிகவும் பரந்த மனதுடன் நீங்கள் அதை அனுமதிக்கிறீர்கள்.
உங்களின் இன்னொரு மகன் எப்போதும் காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் சாராயம் குடிப்பார். அப்புறம் தான் காபி டீ தண்ணீர் எதுவும் குடிப்பார். இது அவரது வாழ்வியல் கொள்கை. 'இது இவரது உரிமை' என்று அனுமதிக்கிறீர்கள்.
இந்நிலையில்....ஒருநாள்,
நீங்கள் 'சமநீதியோடு நடப்பவர்' என்று உலகுக்கு காட்டவிரும்பி... சாராயம் குடிக்கும் மகனின் கிளாசில் ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றுகிறீர்கள். அவர் ஏதேனும் எதிர்ப்பு தெரிவிப்பாரா..? மாட்டார் அல்லவா..?
சரி, இப்போது... தண்ணீர் குடிக்கும் மகனின் கிளாசில் ஒரு ஸ்பூன் சாராயம் ஊற்றுகிறீர்கள். அவர் ஏதேனும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பாரா..? சும்மா இருக்க மாட்டார் அல்லவா..? ஏன்.. இப்படி..?
இஸ்லாமோபோபியா இன்றி சிந்தித்து பாருங்கள் திரு.Ibnu Shakir
@Ibnu Shakirஅடடா ஒரு முக்கிய விஷயத்தை விட்டுட்டேனே...
எது மத விரோதம்..? எது மத சகிப்புத்தன்மை..?இரண்டையும் குழப்பி என்னவொரு நயவஞ்சகமான எழுத்து உங்களுடையது...?
//ரமதான்...காஃபிர்களுக்கும் உணவு உண்ண அனுமதி//---மறைவில் உன்ன அனுமதி இருக்கிறது..!
ஆனால் பப்ளிக்கில் உன்னத்தான் முஸ்லிம்களுக்கும் அனுமதி இல்லை.
99 % சாப்பிடாமல் இருக்க ஒரு சதவீதம் பேர் அவர்கள் முன்னிலையில் சாப்பிட்டால்... அது நோன்பிருப்போருக்கு அசூசையை ஏற்படுத்தும் என்பதால் பொது இடங்களில் சாப்பிட அனுமதி இல்லைதான். ஆனால், அவர்களின் வீட்டில் சமைத்து பலருடன் சேர்ந்து சாப்பிடலாமே..? இந்த சட்டம் நோன்பு வைக்காத முஸ்லிம்களுக்கும் பொருந்துமே..!
(முந்தைய நிறுவனத்தில் கேண்டினில் இருந்து வந்த சாப்பாடை புறக்கணித்து யூனியன் தொழிலாளர்கள் நாங்கள் உண்ணாவிரதம் இருந்தோம். அப்போது, எங்கள் யூனியனில் இல்லாத பலரும் சாப்பிடாமல் புறக்கணித்தனர். கேட்டதற்கு பெரும்பாலானோர் நீங்கள் சாப்பிடாமல் பசியோடு வேலை செய்ய... உங்கள் கண்முன்னே நாங்கள் மட்டும் எப்படிப்பா சாப்பிடுவது..? என்றனர். சரி, பார்சல் வாங்கி தனியே எடுத்து சென்று வேறு ஒரு அறையில் அமர்ந்து சாப்பிட சொன்னோம். நாகரிகம் கருதி அதைக்கூட மறுத்து விட்டனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்... மிஸ்டர்.இப்னு ஷாகிர்..?)
@Ibnu Shakir
இதேபோலத்தான்...
மற்ற மதத்து பெண்கள் சவூதி வந்தாலும் அங்கே பின்பற்றவேண்டிய நடைமுறை என்று ஒன்று உள்ளது. உதாரணம் ஹிஜாப். கண்டோலிசா ரைஸ் சவூதி வந்தபோதும் கூட ஹிஜாப் அணிந்தே வந்தார். மேலோட்டமாக பார்க்கும்போது இது அராஜகம் போல தோன்றும். ஆனால் இல்லை.
ஏனெனில், கிருச்துவமோ, யூதமோ, சைவமோ, வைணவமோ, பவுத்தமோ, சீக்கியமோ, சொராச்ற்றியமோ மற்றும் ஏனைய நாத்திக இசமோ எந்த ஒன்றிலும், "ஹிஜாப் ஆடையை அணிய அந்த மதத்தில் தடை" என்று இருக்க...
அல்லது
"பெண்கள்... தொடை,மார்பு,இடுப்பு, அக்குள் ஆகியன தெரியாதபடி ஒருக்காலும் ஆடை அணியவே கூடாது" என்ற கெடுபிடி சட்டம் இருக்க...
அதற்கு எதிராக சவூதி சட்டம் போட்டு அதை தன நாட்டுக்கு வந்த விருந்தாளிகள் மீது திணித்து இருக்குமேயானால்... அது மத நிந்தனை சட்டம்..!
(எனக்கு பிடிக்காத காக்கி யுனிபார்ம் நிறத்தை, என் அரசு பள்ளி சீருடை சட்டத்தை பின்பற்றி ஐந்து வருடம் தொடர்ந்து அணிந்தேன்... எவ்வித எதிர்ப்பும் இன்றி..!இதற்கு என்ன சொல்கிறீர்கள்... மிஸ்டர்.இப்னு ஷாகிர்..?)
எது மத விரோதம்..? எது மத சகிப்புத்தன்மை..? இரண்டையும் குழப்பி என்னவொரு நயவஞ்சகமான எழுத்து உங்களுடையது...?
@Ibnu Shakirஒரு மதத்தின் நடைமுறைகளுக்கு மாற்றமான வேறொரு நடைமுறைகளை பேணும் ஒரு நாட்டில் தன்னளவில் தன் மார்க்கத்தை பேணி ஒரு கொள்கைவாதி வாழ முடியும். அதற்கு அந்த நாட்டு அரசு தன் குடிமகனுக்கு அனுமதி அளித்தால் அதுதான் மத சகிப்புத்தன்மை. மதச்சார்பின்மை.
ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தின் நடைமுறைகளுக்கு/சட்டங்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் சட்டமிட்டு, அதன்மூலம் அந்த மதத்தில் உள்ளவர்களை அம்மதத்தின் சட்டங்களை பின்பற்றவிடாமல் அடக்குமுறை செய்தால் அதுதான் மதவெறி..! மதவிரோதம்..! அக்குறிப்பிட்ட மதஃபோபியா..! communalism..!
@Ibnu ShakirIbnu Shakir left a new comment....
ஹலோ...திருவாளர்.இப்புனு ஷாக்கிறு....
நீங்க சொல்லியும் கேட்காம, உங்க கமெண்டையும் வெளியிட்டு, அதுக்கு வரிக்கி வரி பதிலும் சொல்லி இருக்கேன். அதெல்லாம் கண்டுக்காம, அதுக்கெல்லாம் பதில் சொல்லும் வக்கோ... திராணியோ... நேர்மையோ இல்லாமல்... இப்ப்போது புதுசா இன்னொரு மொக்கை வாத கமென்ட் போட்டு உள்ளீரே... இது நியாயமா பொய்யரே..?
குமுதம் என்ற மஞ்சள் பத்திரிக்கைக்கு அதில் உள்ள ஆபாச படங்களுக்கு சவூதி கருப்பு மை அடிப்பதுதான் உமது தலை போற பிரச்சினையா..? என்னைக்கேட்டால், அந்த பத்திரிக்கையை சவூதியில் அனுமதித்து வெளியிடுவதே தப்பு..! அவ்வளோ ஏன்..? நம் நாட்டிலேயே கூட அதை தடை செய்தால் நம்ம இளம் சமுதாயம் உருப்படுமே..?
குடிமகனின் உரிமை பிரச்சினை பற்றி மாங்கு மாங்கு என்று அவ்ளோ கேள்வி கேட்டு இருக்கேன். ஆனால்.. நீரு...என்னடாவென்றால்... சம்பந்தம் இல்லாம... போயா நீரும் உம்ம வறட்டு வாதமும்..!
ஒரு முக்கிய அறிவிப்பு:
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாட்டு ஐபி-யில் ப்ராக்ஸி சாப்ட்வேர் மூலமும்,
பொய்யான அரபி புனைப்பெயரிலும் வந்து...
ஆரம்பத்தில் பின்னூட்டம் வெளியிட வேண்டாம் என்று கூறிவிட்டு...
கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்ல திராணியின்றி...
இறைவனை பழித்து ஆரம்பித்து பின்னர் என்னையும், இஸ்லாமையும் கண்ணா பிண்ணா என இட்டுக்கட்டி அவதூறு வார்த்தைகளுடன் பின்னூட்டம் இட்டுக்கொண்டு இருக்கும்...
'இப்ணு ஷாக்கிர்' ....என்ற உலகமகா 'தைரியசாலியே'...!
நீர் மனம் திருந்தி நல்ல பண்புள்ள மனிதனாக மாற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!