என்ன சகோ..? தலைப்பை பார்த்ததும் சும்மா 'கிர்ர்ர்ர்ரு'ன்னு இருக்கா? சொல்றேன்..! சொல்றேன்..! விளக்கமா சொல்றேன்..!
சவூதியை பொறுத்த மட்டில் ஒரு கார் பின்புறமாக சென்று வேண்டுமென்றே... 'தேமே' என பார்க்கிங்கில் நின்று கொண்டிருக்கும் இன்னொரு காரின் முன்புறத்தில் இடித்தாலும், சாட்சிகள் இல்லையேல், பழியும் அபராதமும் வழக்கும் என்னவோ முன்புறம் இடிவாங்கியவர் மீதுதான் விடியும்..! இடித்தவர் ஏமாற்றுக்காரர் எனில், நஷ்டஈடும் பெற்றுக்கொள்வார்..! இங்கு வாகனச்சட்டம் அப்படி..!
இது ஒருபுறம் இருக்க, சவூதியில் வேலைபார்க்க வந்திருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களின் வார்த்தை உச்சரிப்பு விநோதமானதாக இருக்கும்...!
"ஓ... மை ப்பிறந்த்..." என்றால் "Oh... My Friend..!" என்று அர்த்தமாம்..!
இப்படி, ஆங்கிலம் மட்டுமின்றி அவர்களின் இந்த மொழி உச்சரிப்பு அட்டகாசத்தை அரபியிலும் செய்வர்...!
உதாரணமாக... "கீப்பல் ஆள்..?" (கைஃபல் ஹால்..? உடல்நிலை எப்படி..?) "குயிஸ்..?" (க்வைஸ்..? நலமா..?) என்று மொழியை குத்திக்குதறி கொல்வார்கள்...!
மேற்படி விபரங்களின் பின்னணியில் தொடர்ந்து படியுங்கள்...!
நான், தமாம் சீக்கோ பில்டிங் பக்கத்திலே உள்ள பெய்ட் பார்க்கிங்ல காரை நிறுத்திட்டு, அட்லஸ் நோக்கி சும்மா அப்டியே ஒரு வாக் போயிட்டு இருந்தேன். டாக்சி ஸ்டேன்ட் முடிஞ்சி திரும்பினா சின்னதா ஒரு கூட்டம். அந்த கூட்டத்தின் மத்தியிலே ஒரு ஃபிலிப்பைனி சத்தமா எதோ பாட்டு பாடினாப்ல இருந்துச்சு.

கிட்டே போய் பார்த்தா... ஜீன்ஸ் பேன்ட் ஜீன்ஸ் ஷர்டில் இருந்த அந்த நடுத்தர வயது பிலிப்பைனி தன் எதிரே குத்ரா-தவுப் போட்டிருந்த ஒரு இளம் அரபி கிட்டே படு சீரியஸா கத்திக்கொண்டு இருந்தார். ஆனால், பதிலுக்கு அந்த அரபி சிரித்துக்கொண்டு இருந்தார்.
இந்த வினோதமான விஷயம் புரியாமல், பக்கத்திலே நின்ன ஒருவரை (ரொம்ப டீக்கா டக் இன் செஞ்ச காட்டன் பேன்ட், அயர்ன் மடிப்புடன் ஷர்ட் உடுத்தி இருந்ததால்...) 'இந்தியர்' என்று முடிவு கட்டி(?!), அவரிடம் சென்று...
"இதற் கியா ஹுவா...? கியா ச்சள்றாஹே இதற்...? கியூன்... பிலிப்பைனி ஷௌடிங்...?" என்று என் தூய(?) ஹிந்தியில் நான் கேட்க,
அதற்கு அவர்... "எந்தா தமிள்நாடா..?" என்று என்னிடமே திருப்பிப் போட...
(அட...! மலையாளிகள் எப்படிடா கண்டு பிடிக்கிறீங்க..? அதுனாலத்தான் 'ரா'... 'சிபிஐ'... இங்கெல்லாம் நீங்களே இருக்கீங்களா..? ஆனா... ஐம்பது பேர் லிஸ்ட்ட பாகிஸ்தானிடம் கொடுக்கும் போது மட்டும் தப்பு தப்பா எழுதி கோட்டை விட்டுட்டு நம்ம நாட்டின் மானத்த வாங்குக்குங்க...)
"கைசே...ஆப்... மாலும்... மே... தமில்நாடுசே ஆயா...ன்னு...?" என்று நான் 'ஆச்சர்யபட்டு' கேட்பதுபோல அப்பாவியாய் கேட்க,

அதற்கு அவர்... ஏதோ... ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் ஒரு அரசியல் தலைவர் போல ஒரு பாவ்லாவை காட்டிவிட்டு... தொடர்ந்தார்.
"ஒகே.. ஒகே... இப்போ இங்க என்னா ஆச்சுன்னா... அதோ... நீங்க அங்க பாத்தாச்சுல்ல... அதான் அரபிட ஜிஎம்சி... (அதன் பின்புறம் சற்று நசுங்கி இருந்தது) இது... வந்து... அந்த ஃபிலிப்பைனிட கிரஸ்ஸிடா... (பொதுவா இவனுங்க மஜ்தா தானே வெச்சிருப்பாணுவ... ஓகே... இருக்கட்டும், அதன் முன்புறம் நசுங்கி வலது விளக்குகள் உடைந்து இருந்தன).
'சம்பவம்' (?!) என்னன்னா... அந்த ஃபிலிப்பைனி நேரா ஹாரன் அடிச்சுட்டே வந்தாச்சு... அந்த நேரம் பாத்து, பார்கிங்ல இருந்து இந்த அரபி, செம ஸ்பீடா ரிவர்ஸ் எடுத்தாச்சு... அப்புறம் அரபி தன் பேக்கால ஃபிலிப்பினிய ஸ்பீடா இடிச்சாச்சு... அதத்தான் ஃபிலிப்பைனி, தங்கிட்டே எந்த தப்பும் இல்லைன்னும்... தன்னையும் தன் ஹாரன் சவுண்டையும் அரபிகாரர்தான் கவனிக்காம... ராங்கா ரிவர்ஸில் வந்து தம்மீது மோதிட்டாருன்னு...
"அனா பீப்பீப்பீப்பீப்பீ... அன்த்தா... மாப்பி பீப்பீப்பீப்பீப்பீ... பாதன் 'டும்'...!"
...ஈ மாதிரி சொல்றார்... எந்தா சாரே... டவுட் கிளியரோ...?" என்று 'தெளிவாக'... 'சம்பவத்தை'... 'விவரித்து'... 'மலைத்தமிழில்' சொற்பொழிவே ஆற்றினார்..!
நான், "ஒகே... ச்சேட்டா புரிஞ்சாச்சு...!"...என்றேன்..!?

இப்போது, அந்த ஃபிலிப்பைனி அங்கே வந்த வேறு ஒரு அரபியிடம் அதே உச்சஸ்தாயியில் இப்படி சொல்லிக்கொண்டு இருந்தார்...
தன் கட்டை விரலை ஹாரன் மேல் அழுத்தி சைகை போல காட்டி...
"அனா பீப்பீப்பீப்பீப்பீ..."
தன் கையை காதில் வைத்து, 'தன் ஹாரன் சத்தத்தை இந்த அரபிக்காரர் கவனிக்கவில்லை' என்று சைகையில் சொல்லி...
"ஹாதா அரபி மாப்பி பீப்பீப்பீப்பீப்பீ"
தன் ஒரு கை முஷ்டியின் மீது, மற்றொரு கையின் புறங்கையை வேகமாய் கொண்டு வந்து இடித்துக்காட்டி...
"பாதன் 'டும்'...!"
-------என்றார்..!
எனக்கா... சிரிப்பை அடக்க முடியவில்லை..!
(அரபி அறிந்தவர்கள் ரசித்திருப்பீர்கள்... சிரித்திருப்பீர்கள்...)

மற்றவர்களும் ரசிக்க வேண்டி :- அருஞ்சொற்பொருள் தெளிவுரை...
அனா...--->நான்
பீப்பீப்பீப்பீப்பீ...--->தொடர்ந்து ஹாரன் அடித்தேன்
அன்த்தா...--->நீங்கள் (ஹாதா அரபி--- இந்த அரபிக்காரர்)
மாப்பி பீப்பீப்பீப்பீப்பீ...---> தொடர்ந்து அடித்த என் ஹாரனையும் என்னையும் கவனிக்கவில்லை
பாதன்...---> பிறகு
பாதன்...---> பிறகு
'டும்'...--->'டும்' என்ற சத்தத்துடன் 'இந்த கார்மோதல் சம்பவம்' நடந்தது.
டிஸ்கி:
- 'சம்பவத்தில்' இடம்பெறும் அந்த 'நான்,' ... நான் அல்லன்..! என்னிடம் இந்த சம்பவத்தை சொன்னவர்தான் அந்த 'நான்'..! அவர் சொன்னது போலவே அவர் வார்த்தைகளிலேயே சம்பவத்தை தந்து இருக்கிறேன்..!
- அப்புறம், இந்த பதிவுக்கும்... அரேபியாவில் இன்று... வெயில் 45'C (114 F) தாண்டி ஜூன் மாசம் சம்மர் சீசன் ஆரம்பித்தற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை...... :)
17 ...பின்னூட்டங்கள்..:
சிரிச்சு முடியல... தமிழில் கோவைத் தமிழ், சென்னைத் தமிழ்னு விதவிதமா இருக்க மாதிரி ஃபிலிப்பைனியின் அரபியும் ஊருக்கு ஊர் வித்தியாசப்படும்போல!! இதுவே அமீரக ஃபிலிப்பைனி என்றால், இப்படிச் சொல்லியிருப்பார்:
”அனா ப்பீப்பீ; இன்த மாப்பி ப்பீப்பீ; பாதேன் டும்”
ஹா...ஹா.... அன வல்லாஹி பீப்பீப்பி சிரிச்சேன்...
வெயில் அவள்ளவ்வு அதிகமா சகோ . சுபகனல்லாஹ் .
நல்ல பதிவு வாசலாம்
மா ஹாதா??
ஹாதா பிப்பீபிப்பீ.....
ஹ ஹ ஹா.... சிரிக்க இனிமே திராணியே இல்லை...சரியான குபீர் ரக பதிவு..!!
பகிர்வுக்கு நன்றி சகோ. :)
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோ. டெய்லி ஆபீசில் பார்த்து கொண்டு இருக்கிறேன் , சில நேரங்களில் வாய் விட்டு சிரித்து விடுவேன்.
பிலிப்பைனிகளின் அரபி உச்சரிப்பை வைத்து ஒரு பதிவே போட்டாச்சா! ரசித்தேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்
சந்தேகமே இல்லை அங்கே வெயில் அதிகம் என்பது பதிவை படித்தவுடன் புரிகிறது. இங்கே வெயில் குறைந்து மழை காலம் ஆரம்பிக்க போகுது.
ஆஹா, ஓருக்கு ஓர் பாஷைக்கு பாஷை இந்தக்காமெடில்லாம் சகஜம் போல.
சோக்கா சொன்னீங்க சகோ. ஆனால் அது அவுங்கள கிண்டல் பண்றா மாதிரி இருக்கறது தான் உறுத்தலா இருக்கு.
மத ரீதியான ஒரு விவாதத்திற்குரிய இன்றைய அடியேனின் பதிவை பார்வை இட அழைக்கிறேன்
@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)
சகோ.அபுநிஹான்...
யாரையும் கிண்டல் பண்ணுவது இப்பதிவின் நோக்கம் அல்ல...
மொழி தெரியாதோர்... வேறு நாட்டில் வேலைக்கு சென்று மொழிப்பிரச்சினையால் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதனை... ஒரு நகைச்சுவை கண்ணோட்டத்தில் கூறியுள்ளேன் சகோ.அபுநிஹான்.
இப்பதிவில்...
மற்ற இந்தியர்களிடம் பேச, தமிழர்கள் "கஷ்டப்பட்டு" ஹிந்தி பேசுகிறார்கள்...
தமிழர்களிளிடம் பேச, மலையாளிகள் "கஷ்டப்பட்டு" தமிழ் பேசுகிறார்கள்...
ஆங்கிலம் தெரியாத அரபிகளிடம் பேச, பிளிப்பைனிகள் "கஷ்டப்பட்டு" அரபி பேசுகிறார்கள்...
இப்பதிவை... சற்று சீரியஸாக எழுதி இருக்கலாம்தான்...
ஆனால்,
'முஹம்மத் ஆஷிக் என்றாலே எப்போதுமே சீரியசாகவே பதிவுபோட்டு விவாதித்து சர்ச்சையை கிளப்பும் ஆசாமி' என்ற பெயர் பதிவுலகில் நிலைத்து விடக்கூடாது என்பதற்காகவே...
அவ்வப்போது சில பதிவுகள் இப்படி மொக்கை போல 'உட்கருத்துக்களுடன்' வந்திருக்கின்றன..!
இறைநாடினால் மேலும் வரும்...!
தங்கள் வருகைக்கும் அருமையான ஆக்கப்பூர்வமான விமர்சனத்துக்கும் மிக்க நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
சதிக் சதிக் அனா மாப்ப்பீபீபீபீ சவுதீய்ய்யியி பிலிப்பின்னி அச்ச அத்மீ
அலைக்கும் சலாம் வரஹ்...
சகோ.ஹுசைனம்மா,
சகோ.புஹாரி,
சகோ.ரியாஸ்,
சகோ.அன்னு,
சகோ.இளம்தூயவன்,
சகோ.சுவனப்பிரியன்,
சகோ.ஷேக்தாவூத்,
சகோ.லக்ஷ்மி,
சகோ.அபுநிஹான்,
சகோ.ஷர்புதீன் &
சகோ.ஹைதர் அலி...
தங்கள் அனைவர் வருகைக்கும் நகைச்சுவையை ரசித்தமைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி சாகோ'ஸ்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
வெயில் 45'C (114 F) இருக்கும்போது குற்றால அருவியில் குளித்தது போன்ற திருப்தி.
சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது நீங்கள் பிலிப்பைன் நாட்டுகாரர்களை எவ்வளவு கேலி செய்தாலும் அவர்கள் நாட்டு எம்பாசி ரொம்ப ஸ்ட்ராங்
பயங்கர காமெடி. நல்லா எழுதியிருக்கீங்க சகோ. அதுவும் அந்த மலையாளி தமிழ் பேசுற ஸ்லாங் அருமை.
சம்பவங்களை கண் முன்னே நிறுத்துகிறது உங்க எழுத்து.
சகோ.ஜபருல்லாஹ்,
சகோ.வீரை மன்னன்,
சகோ.சிநேகிதன் அக்பர்...
தங்கள் அனைவர் வருகைக்கும் ரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ'ஸ்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!