அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Wednesday, June 1, 2011

17 அனா..பீப்பீப்பீப்பீப்பீ...அன்த்தா..மாப்பி..பீப்பீப்பீப்பீப்பீ..பாதன்..'டும்'..!

என்ன சகோ..? தலைப்பை பார்த்ததும் சும்மா 'கிர்ர்ர்ர்ரு'ன்னு இருக்கா? சொல்றேன்..! சொல்றேன்..! விளக்கமா சொல்றேன்..!

சவூதியை பொறுத்த மட்டில் ஒரு கார் பின்புறமாக சென்று வேண்டுமென்றே... 'தேமே' என பார்க்கிங்கில் நின்று கொண்டிருக்கும் இன்னொரு காரின் முன்புறத்தில் இடித்தாலும், சாட்சிகள் இல்லையேல், பழியும் அபராதமும் வழக்கும் என்னவோ முன்புறம் இடிவாங்கியவர் மீதுதான் விடியும்..! இடித்தவர் ஏமாற்றுக்காரர் எனில், நஷ்டஈடும் பெற்றுக்கொள்வார்..! இங்கு வாகனச்சட்டம் அப்படி..!



இது ஒருபுறம் இருக்க, சவூதியில் வேலைபார்க்க வந்திருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களின் வார்த்தை உச்சரிப்பு விநோதமானதாக இருக்கும்...!

"ஓ... மை ப்பிறந்த்..." என்றால் "Oh... My Friend..!" என்று அர்த்தமாம்..!

இப்படி, ஆங்கிலம் மட்டுமின்றி அவர்களின் இந்த மொழி உச்சரிப்பு அட்டகாசத்தை அரபியிலும் செய்வர்...!

உதாரணமாக... "கீப்பல் ஆள்..?" (கைஃபல் ஹால்..? உடல்நிலை எப்படி..?) "குயிஸ்..?" (க்வைஸ்..? நலமா..?) என்று மொழியை குத்திக்குதறி கொல்வார்கள்...!

மேற்படி  விபரங்களின் பின்னணியில் தொடர்ந்து படியுங்கள்...!


நான், தமாம் சீக்கோ பில்டிங் பக்கத்திலே உள்ள பெய்ட் பார்க்கிங்ல காரை நிறுத்திட்டு, அட்லஸ் நோக்கி சும்மா அப்டியே ஒரு வாக் போயிட்டு இருந்தேன்.  டாக்சி ஸ்டேன்ட் முடிஞ்சி திரும்பினா சின்னதா ஒரு கூட்டம். அந்த கூட்டத்தின் மத்தியிலே ஒரு ஃபிலிப்பைனி சத்தமா எதோ பாட்டு பாடினாப்ல இருந்துச்சு.

கிட்டே போய் பார்த்தா... ஜீன்ஸ் பேன்ட் ஜீன்ஸ் ஷர்டில் இருந்த அந்த நடுத்தர வயது பிலிப்பைனி தன் எதிரே குத்ரா-தவுப் போட்டிருந்த ஒரு இளம் அரபி கிட்டே படு சீரியஸா கத்திக்கொண்டு இருந்தார். ஆனால், பதிலுக்கு அந்த அரபி சிரித்துக்கொண்டு இருந்தார்.

இந்த வினோதமான விஷயம் புரியாமல், பக்கத்திலே நின்ன  ஒருவரை (ரொம்ப டீக்கா டக் இன் செஞ்ச காட்டன் பேன்ட், அயர்ன் மடிப்புடன் ஷர்ட் உடுத்தி இருந்ததால்...) 'இந்தியர்' என்று முடிவு கட்டி(?!), அவரிடம் சென்று...

"இதற் கியா ஹுவா...? கியா ச்சள்றாஹே இதற்...? கியூன்... பிலிப்பைனி ஷௌடிங்...?" என்று என் தூய(?) ஹிந்தியில் நான் கேட்க,

அதற்கு அவர்... "எந்தா  தமிள்நாடா..?" என்று என்னிடமே திருப்பிப் போட...

(அட...! மலையாளிகள் எப்படிடா கண்டு பிடிக்கிறீங்க..? அதுனாலத்தான் 'ரா'... 'சிபிஐ'...  இங்கெல்லாம் நீங்களே இருக்கீங்களா..? ஆனா... ஐம்பது பேர் லிஸ்ட்ட பாகிஸ்தானிடம் கொடுக்கும் போது மட்டும் தப்பு தப்பா எழுதி கோட்டை விட்டுட்டு நம்ம நாட்டின் மானத்த வாங்குக்குங்க...)

"கைசே...ஆப்... மாலும்... மே... தமில்நாடுசே ஆயா...ன்னு...?" என்று நான் 'ஆச்சர்யபட்டு' கேட்பதுபோல அப்பாவியாய் கேட்க,

அதற்கு அவர்... ஏதோ... ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் ஒரு அரசியல் தலைவர்  போல ஒரு பாவ்லாவை காட்டிவிட்டு... தொடர்ந்தார்.

"ஒகே.. ஒகே... இப்போ இங்க என்னா ஆச்சுன்னா...  அதோ... நீங்க அங்க பாத்தாச்சுல்ல... அதான் அரபிட  ஜிஎம்சி... (அதன் பின்புறம் சற்று நசுங்கி இருந்தது)  இது... வந்து... அந்த ஃபிலிப்பைனிட கிரஸ்ஸிடா... (பொதுவா இவனுங்க மஜ்தா தானே வெச்சிருப்பாணுவ... ஓகே... இருக்கட்டும், அதன் முன்புறம் நசுங்கி வலது விளக்குகள்  உடைந்து இருந்தன).

'சம்பவம்' (?!) என்னன்னா... அந்த ஃபிலிப்பைனி நேரா ஹாரன் அடிச்சுட்டே வந்தாச்சு...  அந்த நேரம் பாத்து, பார்கிங்ல இருந்து இந்த அரபி, செம ஸ்பீடா ரிவர்ஸ் எடுத்தாச்சு... அப்புறம் அரபி தன் பேக்கால ஃபிலிப்பினிய ஸ்பீடா இடிச்சாச்சு... அதத்தான் ஃபிலிப்பைனி, தங்கிட்டே எந்த தப்பும் இல்லைன்னும்... தன்னையும் தன்  ஹாரன் சவுண்டையும் அரபிகாரர்தான் கவனிக்காம... ராங்கா ரிவர்ஸில் வந்து தம்மீது மோதிட்டாருன்னு...  

"அனா பீப்பீப்பீப்பீப்பீ... அன்த்தா... மாப்பி பீப்பீப்பீப்பீப்பீ... பாதன் 'டும்'...!"

...ஈ மாதிரி சொல்றார்... எந்தா சாரே... டவுட் கிளியரோ...?" என்று 'தெளிவாக'... 'சம்பவத்தை'... 'விவரித்து'... 'மலைத்தமிழில்' சொற்பொழிவே ஆற்றினார்..!

நான், "ஒகே... ச்சேட்டா புரிஞ்சாச்சு...!"...என்றேன்..!?

இப்போது, அந்த ஃபிலிப்பைனி அங்கே வந்த வேறு ஒரு அரபியிடம் அதே  உச்சஸ்தாயியில் இப்படி சொல்லிக்கொண்டு இருந்தார்...  

தன் கட்டை விரலை ஹாரன் மேல் அழுத்தி சைகை போல காட்டி...
 "அனா பீப்பீப்பீப்பீப்பீ..."

தன் கையை காதில் வைத்து, 'தன் ஹாரன் சத்தத்தை இந்த அரபிக்காரர் கவனிக்கவில்லை' என்று சைகையில் சொல்லி...  
"ஹாதா அரபி மாப்பி பீப்பீப்பீப்பீப்பீ"

தன் ஒரு கை முஷ்டியின் மீது, மற்றொரு கையின் புறங்கையை வேகமாய் கொண்டு வந்து  இடித்துக்காட்டி...  
"பாதன் 'டும்'...!"
                     -------என்றார்..!

எனக்கா... சிரிப்பை அடக்க முடியவில்லை..!
(அரபி அறிந்தவர்கள் ரசித்திருப்பீர்கள்... சிரித்திருப்பீர்கள்...)

மற்றவர்களும் ரசிக்க வேண்டி :- அருஞ்சொற்பொருள் தெளிவுரை...

அனா...--->நான்
பீப்பீப்பீப்பீப்பீ...--->தொடர்ந்து ஹாரன் அடித்தேன்
அன்த்தா...--->நீங்கள் (ஹாதா அரபி--- இந்த அரபிக்காரர்)
மாப்பி பீப்பீப்பீப்பீப்பீ...---> தொடர்ந்து அடித்த என் ஹாரனையும் என்னையும்  கவனிக்கவில்லை  
பாதன்...---> பிறகு
'டும்'...--->'டும்' என்ற சத்தத்துடன் 'இந்த கார்மோதல் சம்பவம்' நடந்தது.


டிஸ்கி:
  1. 'சம்பவத்தில்' இடம்பெறும் அந்த 'நான்,' ... நான் அல்லன்..! என்னிடம் இந்த சம்பவத்தை சொன்னவர்தான் அந்த 'நான்'..! அவர் சொன்னது போலவே அவர் வார்த்தைகளிலேயே சம்பவத்தை தந்து இருக்கிறேன்..! 
  2. அப்புறம், இந்த பதிவுக்கும்... அரேபியாவில் இன்று... வெயில் 45'C (114 F) தாண்டி ஜூன் மாசம் சம்மர் சீசன் ஆரம்பித்தற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை...... :)
.

17 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...