மொழியின் உயிர்நாடி பேச்சுதான். மனிதன் பிறக்கும்போதே 'பேசா'விட்டாலும், அழுகை எனப்படும் ஒலியை எழுப்புகிறான். பின்னர், சிந்தனை வளர வளர மனிதனின் தொண்டையிலிருந்து வெளியேறும் ஒலி... அதனை அடுத்த பல உறுப்புக்கள் மற்றும் அவனின் சிந்தை மூலமும் சரியாக திருத்தப்பட்டு, அந்த ஒலி வெளிவரும்போது... அது 'பேச்சு' என்றாகிறது. "ஒரு வித விதிமுறை + கட்டுக்கோப்பில்" அது இருந்தால்... இதுதான் மொழி என்றாகிறது..!
.
அப்படி ஒரு 'மொழியை பேச' மனிதனின் நாக்கு, பல், அண்ணம், உதடுகள், உள்நாக்கு, மூக்கின் காற்றுக்குழல், குரல்வளை, தொண்டை என்று அவன் உடம்பில் பல உறுப்புகள் உதவுகின்றன. இவை ‘ஒலி உறுப்புகள்’ எனப்படுகின்றன. இவற்றைப்பயன்படுத்தி மனிதர்கள் ஒலி எழுப்புகின்றனர். அந்த ஒலிகள் ஏதேனும் பொருள் தந்தால், அதுதான் ‘பேச்சு’..!
அப்படி ஒரு 'மொழியை பேச' மனிதனின் நாக்கு, பல், அண்ணம், உதடுகள், உள்நாக்கு, மூக்கின் காற்றுக்குழல், குரல்வளை, தொண்டை என்று அவன் உடம்பில் பல உறுப்புகள் உதவுகின்றன. இவை ‘ஒலி உறுப்புகள்’ எனப்படுகின்றன. இவற்றைப்பயன்படுத்தி மனிதர்கள் ஒலி எழுப்புகின்றனர். அந்த ஒலிகள் ஏதேனும் பொருள் தந்தால், அதுதான் ‘பேச்சு’..!
'புதிதாக கண்டுபிடித்து ஆட்படுத்திக்கொள்வது' போன்ற எவ்வித முயற்சியும் இல்லாமலேயே பிறப்பில் இயல்பாகவே இந்த சிறப்புமிக்க இறைவனின் அருட்கொடையாக 'பேச்சு' மனிதனுக்கு... அமைந்து விடுவதை காண்கிறோம்.
ஒவ்வொரு முறை பேசும்போதும்... 'அல்ஹம்துலில்லாஹ்' ('இறைவனுக்கே எல்லா புகழும்') என்று சொல்லவேண்டும் போல தோன்றும் இவ்வளவு அளப்பரிய பேச்சாற்றலுக்கான உறுப்புக்களை கொடுத்துவிட்டு நம்மை சும்மா விட்டு விடவில்லை இறைவன். இந்தந்த உறுப்பை இப்படி இப்படித்தான் பிற மனிதற்கு தீங்கிழைக்கா வண்ணம் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளான்.
இன்னொரு வகை 'பேச்சும்' இருக்கிறது. 'எழுத்து வடிவ பேச்சு'..! தற்போது நான் எழுத்து வடிவத்தில் உங்களிடம் 'பேசிக்கொண்டு' இருக்கிறேன் அல்லவா..? நீங்களும், பின்னூட்டம் வாயிலாக என்னிடம் பேசுகிறீர்கள். இது எழுத்து மொழி. இப்படி, நமது ஒலி உறுப்புகள், உண்டாக்கும் இந்த பேச்சை எப்படி பேணவேண்டும்... என்பது பற்றி இறைவன் தன் திருமறை குர்ஆனில் கூறிய போதனைகள் என்ன என்பதை இனி பார்ப்போம் சகோ..!
- பேச்சில் ஸலாம் இருக்க வேண்டும்..!
@ 4:86 says...உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான ஸலாம் கூறுங்கள்;. அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள்.
- பேச்சில் உண்மை இருக்க வேண்டும்..!
@ 9:119 says...இறைநம்பிக்கை கொண்டோரே..! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; உண்மையாளர்களுடன் ஆகிவிடுங்கள்..!
- பேச்சில் நேர்மை இருக்க வேண்டும்..!
@ 33:70 says...இறைநம்பிக்கை கொண்டோரே..! அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்..!
- பேச்சில் அழகு இருக்க வேண்டும்..!
@ 2:83 says...மக்களிடம் அழகானதையே பேசுங்கள்.
- பேச்சில் கனிவு இருக்க வேண்டும்..!
@ 4:8 says...சொத்தை பங்கிடும் போது உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்துவிட்டால்... அவர்களுக்கும் அதிலிருந்து வழங்குங்கள். அவர்களுக்கு கனிவான சொல்லையே கூறுங்கள்.
- பேச்சில் நியாயம் இருக்க வேண்டும்..!
@ 6:152 says...பாதிக்கப்படுபவர் உங்கள் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்.
- பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும்..!
@ 17:23 says...(உங்கள் பெற்றோராகிய)அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (ச்சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசவீராக!
- பேச்சில் பொய் இருக்ககூடாது..!
@ 22:30 says... பொய் பேசுவதிலிருந்தும் விலகிக்கொள்ளுங்கள்.
- பேச்சில் புறம் இருக்கக்கூடாது..!
@ 49:12 says... உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம்.
- பேச்சில் அவதூறு இருக்கக்கூடாது..!
@ 24:23 says...எவர் முஃமினான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ, அவர் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள் ஆவர்.
மேற்கண்ட விஷயங்கள் இறைநம்பிக்கை கொண்ட முஸ்லிம்களுக்கு சொல்லப்பட்டனவானாலும், கிட்டத்தட்ட இதே போன்ற விஷயங்களையே இஸ்லாம் அல்லாத பிற சமயகொள்கைகளும், திருக்குறள் போன்ற சங்கத்தமிழ் இலக்கிய அறநூல்களும்... "யாகாவாராயினும் நாகாக்க..." என்று போதித்திருக்கின்றன.
.
.
ஆனால், இறைநம்பிக்கையற்ற பல நாத்திகர்கள் (எல்லோரும் அப்படி அல்ல), தமக்கென்று எவ்வித கொள்கையோ, கோட்பாடோ, கட்டுப்பாடோ, தங்கள் பொல்லாத கற்பனைக்கு ஒரு வரைமுறையோ, இவ்வுலக செயலுக்கு மறு உலக தண்டனை பற்றிய அச்சமோ பேணாத காரணத்தால், அவர்களின் அத்துமீறிய அறுவறுப்பான செயல்களை அவ்வப்போது தங்கள் சுயலத்துக்காக செய்கிறார்கள். இனியும், செய்யத்தான் செய்வார்கள்.
ஆனால், இறைநம்பிக்கையற்ற பல நாத்திகர்கள் (எல்லோரும் அப்படி அல்ல), தமக்கென்று எவ்வித கொள்கையோ, கோட்பாடோ, கட்டுப்பாடோ, தங்கள் பொல்லாத கற்பனைக்கு ஒரு வரைமுறையோ, இவ்வுலக செயலுக்கு மறு உலக தண்டனை பற்றிய அச்சமோ பேணாத காரணத்தால், அவர்களின் அத்துமீறிய அறுவறுப்பான செயல்களை அவ்வப்போது தங்கள் சுயலத்துக்காக செய்கிறார்கள். இனியும், செய்யத்தான் செய்வார்கள்.
.
.
அப்போது... நாம், நாசூக்காய் அவருக்கு அதனை எடுத்துச்சொல்லியும் சட்டை செய்யாமல் சிலநேரம் அவர்கள் அதே செயலை தொடர்ந்து செய்தால், அப்போது, 'இறைவன் கொடுத்த கட்டளைகளை பேணவேண்டும்' என்ற கொள்கையுள்ள நாம், பொறுமையிழந்து, சராசரி மனிதனுக்கே உரித்தான குணமான தேவையற்ற கோபம் காரணமாய் மேற்படி கட்டுக்கோப்புக்கள் எல்லாம் தகர்ந்து போக, ஒரு சில சமயம் சற்று காட்டமான பதில்களை நம்மையும் மீறி தந்துவிட நேரிடுகிறது.
அப்போது... நாம், நாசூக்காய் அவருக்கு அதனை எடுத்துச்சொல்லியும் சட்டை செய்யாமல் சிலநேரம் அவர்கள் அதே செயலை தொடர்ந்து செய்தால், அப்போது, 'இறைவன் கொடுத்த கட்டளைகளை பேணவேண்டும்' என்ற கொள்கையுள்ள நாம், பொறுமையிழந்து, சராசரி மனிதனுக்கே உரித்தான குணமான தேவையற்ற கோபம் காரணமாய் மேற்படி கட்டுக்கோப்புக்கள் எல்லாம் தகர்ந்து போக, ஒரு சில சமயம் சற்று காட்டமான பதில்களை நம்மையும் மீறி தந்துவிட நேரிடுகிறது.
@ 16:125 says...(நபியே)உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக்கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக!
@ 16:126 says...நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள், பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும்.
ஆகவே, அச்சமயங்களில்... இறைநம்பிக்கையாளர்களாகிய நமக்கு பொறுமை/தண்டித்தல் இரண்டுக்கும் அனுமதி இருந்தாலும், நாம் பொறுமையுடனேயே... இருந்து விடுவோம்...!
ஏனெனில்...
@ 2:153 says...நம்பிக்கை கொண்டோரே! நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
இறுதியாக....
- வீண் விவாதப்பேச்சை தவிர்த்தல் வேண்டும்..!
@ 6:68 says...நம் வசனங்களைப்பற்றி வீண் விவாதம் செய்துகொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப்புறக்கணித்து விடும்.
20 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும்..
அருமையான பதிவு,என்ன பண்ணுறது நம்ம எவ்வளவு அமைதியா இருந்தாலும் இருக்க விட மாட்டிருகாங்காலே சிலர்.அதுனால தான் நம்மலையும் மீறி சில தகாத வார்த்தைகள் பயன்படுத்த வேண்டியது வருது.ஓகே இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் நாவை பேணுவோம்.
எனது குழந்தை இறந்து இரண்டு நாள் கழித்து ஒரு நெருங்கிய உறவினரின் வீட்டுக்கு செல்லலாம் என்று எண்ணியிருந்தேன்,அதனை போன் வழியாக சொல்லவும் செய்தேன், அவர்களும் சரி என்றார்கள், போகும் வழியில் திடீரென ஒரு போன் - "தயவு செய்து இங்கே இப்ப வரவேண்டாம், நீங்கள் பிள்ளையை பறிகொடுத்தவர்கள், இங்கே இரண்டு மாத குழந்தை யுர்க்கிறது "என்று., கண்ணீர் மட்டுமே வந்தது, திட்டவில்லை, வையவில்லை, சாபம் இடவில்லை, அவர்களின் அறியாமையை புரிந்துகொள்ளும் திறன் இருந்தது .,
சில மாதங்கள் கழித்து இது எதுவுமே தெரியாதது போல் மீண்டும் தொடர்பு கொண்டேன் , இப்பொழுது பழைய மாதிரி உறவுகள் தொடர்கின்றது., ( என் மனைவியை சமாதான படுத்த முடியவில்லை, முயற்சித்துக்கொண்டு இருக்கிறேன்)
நான் பிறந்ததுமுதல் எனக்கு மதி தெரிந்த நாளில் இருந்து என் பேச்சில் யாரும் புண் பட்டதாக இது வரையிலும் சொன்னதில்லை.,கெட்ட வார்த்தைகள் ஒன்று கூட உதாரணத்திற்கு கூட சொன்னதில்லை, இத எதன் மீதும் சத்தியம் இட்டு சொல்லமுடியும். காரணம் எங்கெல்லாம் கோபம் / வார்த்தைகள் தடிக்கின்றதோ அங்கெல்லாம் ஒரு பெரிய இடைவெளி விட்டுவிடுவேன் ( உங்களுக்கு நரசிம்ம ராவின் பேசா சாதுரியம் தெரியும்தானே ?!) அதன் பின்பு பார்த்தல் அங்கே ஒரு தயக்கம் மட்டும் இருக்கும், வார்த்தைகளை நான் விடாததினால் மீண்டும் நட்பை தொடர்வது இதுவரையுளும் சுலபமாகவே இருக்கிறது.
இது வரை நான் இறங்கி sendru நட்பு கொண்டதுதான் 99 %. இனிமேலும் தொடர நீங்களும் பிராத்தியுங்கள்....
சலாம் சகோ .
மாஷா அல்லா ..நல்ல பதிவு .
அல்லா குர்ஆனில் பொறுமை என்னும் குணத்தை எழுபது முறைக்கு மேல் கூறியுள்ளான் என்பது புத்திக்கு புரியுது ஆனால் எல்லா நேரங்களிலும் கடைபிடிக்க முடியல சகோ ..
அஸ்ஸலாமு அலைக்கும்!
நாவைப் பேணிணால் பல பிரச்னைகள் குறையும். சிறந்த பதிவு சகோ. ஆஷிக்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
சல்மான் ருஷ்திகளும் தஸ்லிமா நஸ்ரின்களும் நமது சகோதரர்களாக வலம் வந்ததை கண்டு பொங்கியபோது கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாமோ என்று ஆதங்கப்பட்டேன்.
.நம் வசனங்களைப்பற்றி வீண் விவாதம் செய்துகொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப்புறக்கணித்து விடும்.
.நம்பிக்கை கொண்டோரே! நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
என்பதை நினைவில் நிறுத்தியதில் மனம் அமைதியானது.
@செய்யது முஹம்மது புஹாரி (எ) முத்துவாப்பா..//இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் நாவை பேணுவோம்.//--தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.புஹாரி.
சென்ற பதிவில், இரு அனானிகளின் கருத்துக்கள் மிக மோசமாக இருந்தன. வெளியிடவில்லை. ஆனானி ஆப்ஷனை மூடிய பிறகு வந்த அதிஸ்ட் கமெண்டை வெளியிட்டுவிட்டு அவரையே நீக்க சொல்லியும் நீக்காததால் நான் நீக்கினேன். இதையெல்லாம் பார்த்த பிறகுதான், நம்மையே நாம் ஒருமுறை புதுப்பிக்க வேண்டி... இப்பதிவு போட்டேன் சகோ..!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!
வாழ்த்துகள் சகோ! அத்தனை வசனங்களையும் தெரிந்து இருந்தாலும் தக்க தருணத்தில் ஷைத்தான் அதை மறக்கடித்து தீய செயல்களில் ஈடுபடாமல் இருக்க இது போன்ற நினைவு கூறல் அவசியமாகின்றது. இதுவரையில் நமது சகோதரர்கள் கண்ணியத்துடந்தான் நடந்துள்ளார்கள், அவர்களுடைய பின்னூட்டங்களை படிக்கும் பொழுது அதை உணரலாம். கொள்கை இல்லாதவர்கள்தான் தன் மனம் போன போக்கில் கடிவாளம் இல்லாத குதிரையாக செயல் படுகின்றார்கள். அது அவர்களை முகம் குப்புற கீழே தள்ளும்பொழுது எண்ணுவார்கள் என்றே நம்புகிறேன்.
நம்மை இறை நம்பிக்கையாளர்களாக படைத்த இறைவனுக்கே எல்லா புகழும்!
@ஷர்புதீன்தங்கள் மீது அமைதி நிலவட்டுமாக சகோ.ஷர்புதீன்,
உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் மிகுந்த துயரமானது. சபூர் செய்யுங்கள்.. சகோ..!
இதற்கு காரணம்...
மூடநம்பிக்கை..! நம் மக்களின் அறியாமை..!
நம் மக்களுக்கு... 'எப்படி வாழ வேண்டும்' என்று முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரி இருந்தும், நம்மில் சிலர் இப்படி தன்னிஷ்டத்திற்கு நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது சகோ..!
ஒரு வீட்டில் ஒரு மவுத் ஏற்பட்டுவிட்டால்... அந்த வீட்டின் அண்டைவீட்டாரின் கடமை என்னவென்றால்...
மவுத் வீட்டினற்கு, அவர்கள் வீட்டில் மூன்று நாளைக்கு அடுப்பு பற்ற வைக்க அவசியமின்றி... மூன்று நாளைக்கு அவர்களுக்கு தேவையான சாப்பாடு போட வேண்டும் என்பதுதான்..!
ஆனால், இங்கே என்ன நடக்கிறது..?
அந்த மவுத் வீட்டினரை, நடுக்கூடத்தில் மைய்யித் கிடக்க, தோட்டத்தில் பிரியாணி/புலாவ் என்று பண்டாரி வைத்து வலுக்கட்டாயமாய் 'பெரியசட்டி சோறு' சமைக்கவைத்து... அதை வெட்கமில்லாமல் துக்கத்துக்கு வந்தோர் வயிறு பிடிக்க சாப்பிட்டுவிட்டு... இதுல... 'கறி வேக்காடு பத்தலைன்னு' கமென்ட் வேறு..! எப்படித்தான் மனசு வருதோ..!
ச்சே..!
அவர்களிடம், "கேவலத்திலும் கேவலம் இல்லையா இது?" என்றால்...
கலாச்சாரமாம்... பண்பாடாம்...!
மண்ணாங்கட்டி...!
தூக்கி எல்லாத்தையும் கூவத்துல கொட்டுங்கயா..!
இப்படித்தான்... நம்மிடம் இருக்கும் "பண்பற்ற(?)பண்பாடுகளையும்", "காட்டுமிராண்டி(?)கலாச்சாரத்தையும்"... உடைத்தெறிந்து நிர்மூலமாக்கிவிட்டு... பண்புள்ள மக்களாய் நம்மை மாற்றவே இஸ்லாம் வந்தது சகோ.ஷர்புதீன்.!
கடந்த 20 வருடங்களாய் தீவிர இஸ்லாமிய அடிப்படைவாத பிரச்சாரத்தின் பலனாய், அல்ஹம்துலில்லாஹ், இப்போது நிறைய மாறிக்கொண்டு வருகிறது..!
பிரியாணி... என்பது பின்னர் 'புரோட்டா/சால்ணாவாகி'... இப்போது 'பன்/டீ' என்ற அளவுக்கு சுருங்கி இருப்பதை "கலாச்சார காவலர்"களிடம் காண்கிறேன்.
ஆனால், பெரும்பாலும்...
இப்போது பெருகிவரும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வீட்டு மவுத்தில் அவர்கள் தண்ணீர் டிரம் கூட வைப்பதில்லை தெரியுமா சகோ..? நல்ல முன்னேற்றம் அல்லவா இது..?
தண்ணீர்... காபி/டீ வினியோகம் எல்லாம் பக்கத்து வீட்டுக்காரன் கடமை..! பக்கத்தில் காலி மனை என்றால்... யாராவது உறவினர் ஏற்பாடு செய்யவேண்டும்..!
-----------------------------------
//இது வரை நான் இறங்கி sendru நட்பு கொண்டதுதான் 99 %.// --உண்மைதான்... சகோ..!
உங்களுக்கு உங்களை மாதிரியே கிண்டல் பண்ணி உங்கள் வலைப்பூவில் நான் பதிலடி கமென்ட் கொடுத்தும்...
அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல், உயர்ந்த உள்ளத்துடன் மீண்டும் என் வலைப்பூ வந்து கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ. ஷர்புதீன்.
//இனிமேலும் தொடர நீங்களும் பிராத்தியுங்கள்....//
--இறைவா...! இவருடைய இந்த உயர்ந்த பண்பாடு மேலும் உயர பிரார்த்திக்கிறேன்..!
@ரியாஸ் அஹமது
அலைக்கும் ஸலாம் வரஹ்...
//எல்லா நேரங்களிலும் கடைபிடிக்க முடியல சகோ...//--முடியணும் சகோ..! நமக்காக இல்லாவிட்டாலும், பிறருக்காகவாவது..!
தங்கள் வருகைக்கும் எண்ணப்பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ.ரியாஸ் அஹமது.
@சுவனப்பிரியன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்..!
@மு.ஜபருல்லாஹ்
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.மு.ஜபருல்லாஹ்..!
@M. Farooq
அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்...
சகோ.ஃபாரூக்,
அருமையாக சொன்னீர்கள்..!
//கொள்கை இல்லாதவர்கள்தான் தன் மனம் போன போக்கில் கடிவாளம் இல்லாத குதிரையாக செயல் படுகின்றார்கள்.//
//இதுவரையில் நமது சகோதரர்கள் கண்ணியத்துடந்தான் நடந்துள்ளார்கள், அவர்களுடைய பின்னூட்டங்களை படிக்கும் பொழுது அதை உணரலாம்//
---நிச்சயமாக சகோ..! சரியாகவே சொன்னீர்கள்.
இதற்கு என்ன காரணம் என்று கொள்கையற்றவர்கள் இனியாவது சிந்திக்கவேண்டும்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
சலாம்.
//அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக!//
இப்போது தர்க்கத்தில் தெரியும், அவர்கள் வாதிகளா இல்லை, விதண்டாவாதிகளா என்று.
விதண்டாவாதிகள் என்றால்,
//வீண் விவாதப்பேச்சை தவிர்த்தல் வேண்டும்..!// குரான் வசனம் 6:68 படி.
இனி நல்ல முடிவு இதுதான். வரவேற்க வேண்டிய முடிவு.
ஒருவர் ஒரு விஷயத்தை அறிந்துகொள்ள விரும்பினால், வெட்டியாய் அவர் பதிவு போட்டுக்கொண்டு இருக்க மாட்டார். இணையத்தில் தேடி விடை காணுவார்.
இதுபோன்ற கொள்கையற்ற கோமாளிகளை கண்டுகொண்டு நம் நேரத்தை இனி வீணாக்க வேண்டாம்.
அஸ்லாமு அலைக்கும்
நியாயமான பதிவு. நல்ல தொரு தகவலுக்கு நன்றி ஆஷிக்.
நமக்கு இது சரியான சுயபரிசோதனை. இதில் நாம் எங்கு இருக்கிறோம் என்பதை நாமே அறிந்து கொள்ளலாம். உறவினர்களிடத்தில் / நண்பர்களிடத்தில் / வேலை பார்க்கும் அலுவலகத்தில் பெரும்பாலும் நாவை பேண முடியாத சூழ்நிலைகள். அதிலும், பொய், மற்றும் புறம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிலருக்கு இது சின்ன பொய் தானே என்ற எண்ணத்தில் பொய் சொன்ன பிறகும் அதை பற்றிய சிறு நெறுடல் இல்லாததை அறியலாம். அதே போல் ஒரு சில புறம் பேசுகிறவர்களிடத்தில் நீங்கள் புறம் பேசுகிறீர்கள் என்று கூறினால், புறம் பேசுவது பாவம் என்றே அறிந்து அறியாதவராய் நடிப்பதும், இதுவெல்லாம் புறம் ஆகாது என்று புறம் பேசுவதற்கே ஒரு இலக்கணம் சொல்லுவதையும் நாம் அறியலாம்.
அல்லாஹ் நாவை பேணி நம் அமல்களை பொருந்தி கொள்வானாக
அஸ்ஸலாமு அழைக்கும்.
சகோ.ஆசிக், மிக நல்ல சுயபரிசோதனை. நன்றி.
சென்ற கண்டனத்தில் தினமலரையும் இக்பால் செல்வனையும் ஒன்றாக கருதியதில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த தினசரி போட்டது கேலிச்சித்திரம். செல்வன் போட்டது கேலி செய்யும் நோக்கம் இல்லை. அவரின் அறியாமையாக இருக்கலாம். நீங்கள் என் எடுத்துச்சொல்ல வில்லை? உங்கள் கமென்ட் ஏதும் அங்கெ காணோமே? அவர் வெளியிடவில்லையா?
படம் சமந்தமாக நீங்கள் கேட்டிருக்கும் லாஜிக்கலான கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை. எதையும் பகுத்தறிவோடு அணுகுவோம் என்பது காணாமல் போய் இந்த விஷயத்தில் காழ்ப்புணர்ச்சியோடு அணுகியுள்ளனர்.
சரி. நடந்தவை நடந்துவிட்டது. செல்வன் அவரின் பதிவில் அந்த படத்தை நீக்கிவிட்டால், உங்கள் பதிவு தேவையற்றது என்றாகிவிடும். ஆகவே, உங்கள் பதிவை நீக்க நீங்க தயாரா?
அஸ்ஸலாமு அழைக்கும்.
சகோ.ஆசிக், மிக நல்ல சுயபரிசோதனை. நன்றி.
சென்ற கண்டனத்தில் தினமலரையும் இக்பால் செல்வனையும் ஒன்றாக கருதியதில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த தினசரி போட்டது கேலிச்சித்திரம். செல்வன் போட்டது கேலி செய்யும் நோக்கம் இல்லை. அவரின் அறியாமையாக இருக்கலாம். நீங்கள் என் எடுத்துச்சொல்ல வில்லை? உங்கள் கமென்ட் ஏதும் அங்கெ காணோமே? அவர் வெளியிடவில்லையா?
படம் சமந்தமாக நீங்கள் கேட்டிருக்கும் லாஜிக்கலான கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை. எதையும் பகுத்தறிவோடு அணுகுவோம் என்பது காணாமல் போய் இந்த விஷயத்தில் காழ்ப்புணர்ச்சியோடு அணுகியுள்ளனர்.
சரி. நடந்தவை நடந்துவிட்டது. செல்வன் அவரின் பதிவில் அந்த படத்தை நீக்கிவிட்டால், உங்கள் பதிவு தேவையற்றது என்றாகிவிடும். ஆகவே, உங்கள் பதிவை நீக்க நீங்க தயாரா?
அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.நீதிமான்...//தின மலத்துக்கு அப்புறம் இந்த உருவம் போடற ஈனச்செயலை செய்தது இவன்தான் என்றால் இந்த அடைமொழி பொருத்தம்தான்.//--இது சென்ற பதிவில் உங்களின் பின்னூட்டம்.
//முதல் பாரா//--இப்போது இப்படி சொல்லி இருக்கிறீர்கள்.
தினமலம் என்ற வார்த்தை அந்த சம்பவத்தை சுருக்கமாக அதிக வரிகள் இன்றி எளிதாக படிப்போரிடம் கொண்டுபோய் சேர்ப்பிக்க போட்டது. கார்ட்டூன் அல்லது கேலிச்சித்திரம் என்றால் என்ன..? எத்தனையோ அரசியல் தலைவர்களின் கேளிச்சித்த்ரம்/கார்ட்டூன் வரும்போது எவரும் கோபப்படுவதில்லை. ஆனால், நபிக்கு மட்டும் ஏன் அப்படி..? காரணம், நபிக்கு சித்திரமோ... கேலிச்சித்திரமோ யாரும் வரையவே முடியாது. காரணம், அவர் எப்படி இருப்பார் என்று அவருடன் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமே தெரியும். மற்றவருக்கு தெரியாது.
அப்படி இருக்க...கற்பனையாக வரைந்தால் அது நபி கிடையாது. மீறி வரைந்தால்.. அது அறிவீனம் மட்டுமல்ல... ஒரு மோசமான கெட்ட உள்நோக்கம். அப்படி வரைபவர்கள் அதனை ஆதரிப்பவர்கள் அதனை பிரசுரிப்பவர்கள் அனைவரும் முட்டாள்கள் மட்டுமல்ல... இஸ்லாத்தின் மீது பொறு தொடுப்பவர்கள். இதனை நன்கு விளங்க வேண்டும்.
திருவள்ளுவரை யாருக்கும் தெரியாது. ஆனால், அவரை கற்பனையாக வரைந்து இப்போது சிலையும் வைத்தாகிவிட்டது. நாளை நம் முன் ஒரிஜினல் திருவள்ளுவர் வந்து நின்றாலும் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டோம். எங்காவது ஒரு பழங்கால குகையில் மிகச்சரியான ஆதாரமாக திருவள்ளுவர் உருவப்படம் ஒன்று கிடைத்தால் கூட.. ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
அப்போது, கற்பனையாக வரைந்து சிலை வைத்தோர் நிலை..? அதையே திருவள்ளுவன் என நம்பியோர் நிலை embrassing அல்லவா..? இதனை தவிர்க்க இதற்கு ஒரே வழி, உண்மையான வள்ளுவர் படத்தை ஒளித்துவைக்க வேண்டும். அல்லது, 'இது வள்ளுவர் இல்லை' உண்மையான படத்தின் மீது வீண் குழப்பத்தை ஏமாற்றத்தை தவிர்க்க வேண்டி, பொய் சொல்ல வேண்டும். எனில், அவர்கள் முட்டாள்கள் அல்லவா..?
சரி,அவர்கள் அப்படியே முட்டாள்களாக இருந்து விட்டு போகட்டுமே..? நமக்கென்ன அதனால்..? அதை ஏன் நாம் எதிர்க்க வேண்டும்..?
காரணம் உள்ளது சகோ. மறுமையில் நாம் நம் நபியை இறைநாடினால் கவ்சர் தடாகத்துக்கு அருகில் சந்திக்க உள்ளோம். அப்போது நமக்கு எவ்வித குழப்பமும் இருக்கலாமா? இது நம்பிக்கை சாரத்த விஷயம். இதனை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இதனை குலைப்பதே அவர்கள் நோக்கம்.
ஒரு காஷ்மீர் தொப்பியும், கருப்புக்கன்னாடியும் போட்டு வரைந்தால் எம்ஜியார். டக் என புரியும். காரணம் உண்மையான எம்ஜியார் அறிவோம். அதுபோல இருந்தால் கார்ட்டூன் ஓகே. ஆனால், நபியை வரைந்து எப்படி கார்ட்டூன் என்று சொல்ல முடியும்..? மேலும், இப்போதுள்ளவர்கள் நபியை பொருத்தமட்டில் எவ்வளவு அழகாக வரைந்தாலும் அது கேலிச்சித்திரமே. தினமலர் ஆசிரியரை கூட கைது செய்து ஜாமீன் மறுத்திருக்கிறது நீதி மன்றம். அந்த குற்றத்தைத்தான் இக்பால் செல்வன் செய்துள்ளார்.
இன்னும் விளக்கமாக வேண்டுமெனில், நீங்கள் ஆச்சாரமான ஒரு பார்ப்பனர் என்று கொள்வோம். என் வீட்டுக்கு விருந்துக்கு வருகிறீர்கள். நான் கருவாட்டு குழம்பும் ஆட்டுக்குடல் பொறியலும் வைத்தால்..? நான் முட்டாள் அல்ல. விவகாரமானவன். உங்களை வேண்டுமென்றே வெறுபேற்றுகிறேன் என்று புரிந்து கொள்வீர்களா? அல்லது நான் முட்டாள் என்று புரிந்து கொண்டு அவற்றை சாப்பிட்டுவிடுவீர்களா? இதுதான் எனது இங்கிதமா? தரம் தாழ்ந்த செயல் அல்லவா..?
அப்படியே, உங்களுக்கு சைவ நளபாகம் வைத்து இலையில் ஓர் ஓரத்தில் நரகல் வைத்து... "அது பிடிக்கலைன்னா ஓரமா ஒதுக்கிட்டு மத்ததை சாப்பிடுங்க" என்றால்..? இது எவ்வளவு கீழ்த்தரமான செயல்..?
சகோ.சுவனப்பிரியன் மிக சீனியர் பதிவர். சகோ.ஆஷிக் மிக கண்ணியமான ஒரு பதிவர். இவர்களுக்கு 'பதில் அளிக்கிறேன் பேர்வழி' என்று ஒரு பதிவு போட்டார் அந்த இ.செல்வன். அதில், இவர்களின் படங்கள் இருக்கலாம். இல்லாதும் இருக்கலாம். அவர் இஷ்டம். ஆனால், குளோஸ் அப்பில் பன்றிகள் படங்கள் எதற்கு போட்டார் இந்த பதிவில்..? விளக்கம் கேட்டோம். எவ்வளவு மழுப்பல் வியாக்கியானம்..? இன்றுவரை பதிவுக்கும் அந்த படத்துக்கும் உள்ள பொருத்தத்தை பற்றி சரியான பதில் அவரிடம் இல்லையே..! இது எவ்வளவு கீழ்த்தரமான தனிமனித தாக்குதல்..? வக்கிர புத்தி..?
இப்படிப்பட்டவர்தான் பின்னர் "இயேசு/மகமது" என்ற பதிவில் படம் காட்டினார். இத்தனைக்கும் இவரின் அறியாமை என்று நீங்கள் நம்பவேண்டாம். சென்னை (இஸ்லாமிய)நியு காலேஜில் படித்தவருக்கு இது தெரியாதா..? இது பக்கா கிருத்துருவம் புடித்தவர் செயல் அல்லவா..?
விளக்கம் கேட்காமல் பதிவு போட்டது குற்றம் என்று ஆகியிருக்கும். எப்போது..? 'அடடா..! எனக்கு தெரியவில்லையே, சரி நான் அந்த படத்தை நீக்கி விடுகிறேன்' என்று அவர் சொல்லி இருந்தால். இன்னும் கூட சப்பைக்கட்டு கட்டிக்கொண்டுதான் இருக்கிறார்...சார்வாகன், கோவி, போன்ற சில பக்கவாத்தியங்களுடன்.
முன்பு கொடுக்கியில் கமென்ட் போட்டு விவாதித்தவந்தான் நானும். இப்போது போகவில்லை. காரணம்... என் இலையில் நரகல் இருக்கிறது. புறக்கனிக்கிறேன். இவரின் வண்டவாளத்தை பதிவு போட்டு தண்டவாளத்தில் ஏற்றுகிறேன்.
அன்று பன்றி போட்டவர்...புத்தி..நபிக்கு எவன் போட்டோவையோ போடும் நிலை வந்துள்ளது. நாளை, நம் கற்பனைக்கு எட்டாத வகையில் பிரம்மானடாமான அழகிய உருவத்திலானவன், அல்லாஹ்வுக்கு போட்டோ போடலாம். அதற்குள் நான் கண்டனத்தில் முந்திக்கொண்டேன்.
//இரண்டாவது பாரா//--மிக்க நன்றி சகோ. சரியாக புரிந்து கொண்டீர்கள்.
//கடைசி பாரா//--அவர் அந்த புகைப்படத்தை நீக்கிவிட்டால்... நான் அப்பதிவை நீக்கிவிட தயார். கேட்டுப்பாருங்கள் அவரிடம்... தனி மனித உரிமை என்கிறார். அதற்குத்தான் நான் சென்ற பதிவில் பிற்சேர்க்கையாக கேள்விகள் கேட்டிருக்கிறேன். அதற்கு பதில் ஒன்றும் இல்லை.
என் மீது என்னுடய தனிமனித உரிமைக்கு கடிவாளம் உண்டு. அதற்கு பெயர் இஸ்லாம்.
சகோதரர் நீதிமான்,
உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
----
சரி. நடந்தவை நடந்துவிட்டது. செல்வன் அவரின் பதிவில் அந்த படத்தை நீக்கிவிட்டால், உங்கள் பதிவு தேவையற்றது என்றாகிவிடும். ஆகவே, உங்கள் பதிவை நீக்க நீங்க தயாரா?
----
அப்படி அவர் செய்தால் அது எங்களுக்கு தெரிந்த அடுத்த கணமே எங்களின் பதிவு தூக்கப்படும்...இன்ஷா அல்லாஹ்.
நம்பிக்கையாலர்களிடம் ஈகோ இருக்க முடியாது சகோதரர்.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.அப்துல் மாலிக்,
சகோ.அஷ்வின்,
சகோ.அபுநிஹான்,
சகோ.நீதிமான்,
சகோ.ஆஷிக் அஹமத்...
தங்கள் அனைவர் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றிகள் சகோதரர்களே.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!