அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Tuesday, June 7, 2011

20 பேச்சை பேணுக

மொழியின் உயிர்நாடி பேச்சுதான். மனிதன் பிறக்கும்போதே 'பேசா'விட்டாலும், அழுகை எனப்படும் ஒலியை எழுப்புகிறான். பின்னர், சிந்தனை வளர வளர மனிதனின் தொண்டையிலிருந்து வெளியேறும் ஒலி... அதனை அடுத்த பல உறுப்புக்கள் மற்றும் அவனின் சிந்தை மூலமும் சரியாக திருத்தப்பட்டு, அந்த ஒலி வெளிவரும்போது... அது 'பேச்சு' என்றாகிறது. "ஒரு வித விதிமுறை + கட்டுக்கோப்பில்" அது இருந்தால்... இதுதான் மொழி என்றாகிறது..!   

.
அப்படி ஒரு 'மொழியை பேச' மனிதனின் நாக்கு, பல், அண்ணம், உதடுகள், உள்நாக்கு, மூக்கின் காற்றுக்குழல், குரல்வளை, தொண்டை என்று அவன் உடம்பில் பல உறுப்புகள் உதவுகின்றன. இவை ‘ஒலி உறுப்புகள்’ எனப்படுகின்றன. இவற்றைப்பயன்படுத்தி மனிதர்கள் ஒலி எழுப்புகின்றனர். அந்த ஒலிகள் ஏதேனும் பொருள் தந்தால், அதுதான் ‘பேச்சு’..!

'புதிதாக  கண்டுபிடித்து ஆட்படுத்திக்கொள்வது' போன்ற எவ்வித முயற்சியும் இல்லாமலேயே பிறப்பில் இயல்பாகவே இந்த சிறப்புமிக்க இறைவனின் அருட்கொடையாக 'பேச்சு' மனிதனுக்கு... அமைந்து விடுவதை காண்கிறோம். 

ஒவ்வொரு முறை பேசும்போதும்... 'அல்ஹம்துலில்லாஹ்' ('இறைவனுக்கே எல்லா புகழும்')  என்று சொல்லவேண்டும் போல தோன்றும் இவ்வளவு அளப்பரிய பேச்சாற்றலுக்கான உறுப்புக்களை கொடுத்துவிட்டு நம்மை சும்மா விட்டு விடவில்லை இறைவன். இந்தந்த உறுப்பை இப்படி இப்படித்தான் பிற மனிதற்கு தீங்கிழைக்கா வண்ணம் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளான். 

இன்னொரு வகை 'பேச்சும்' இருக்கிறது. 'எழுத்து வடிவ பேச்சு'..! தற்போது நான் எழுத்து வடிவத்தில் உங்களிடம் 'பேசிக்கொண்டு' இருக்கிறேன் அல்லவா..? நீங்களும், பின்னூட்டம் வாயிலாக என்னிடம் பேசுகிறீர்கள்.  இது எழுத்து மொழி. இப்படி, நமது ஒலி உறுப்புகள், உண்டாக்கும் இந்த பேச்சை எப்படி பேணவேண்டும்... என்பது பற்றி இறைவன் தன் திருமறை குர்ஆனில் கூறிய போதனைகள் என்ன என்பதை இனி பார்ப்போம் சகோ..!

  • பேச்சில்  ஸலாம் இருக்க வேண்டும்..!
@ 4:86 says...உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான ஸலாம் கூறுங்கள்;. அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள்.

  • பேச்சில்  உண்மை இருக்க வேண்டும்..!
@ 9:119 says...இறைநம்பிக்கை கொண்டோரே..! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்;  உண்மையாளர்களுடன் ஆகிவிடுங்கள்..!

  • பேச்சில்  நேர்மை இருக்க வேண்டும்..!
@ 33:70 says...இறைநம்பிக்கை கொண்டோரே..! அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்..!

  • பேச்சில்  அழகு இருக்க வேண்டும்..!
@ 2:83 says...மக்களிடம் அழகானதையே பேசுங்கள்.  

  • பேச்சில்  கனிவு இருக்க வேண்டும்..!
@ 4:8 says...சொத்தை பங்கிடும் போது உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்துவிட்டால்... அவர்களுக்கும் அதிலிருந்து வழங்குங்கள். அவர்களுக்கு கனிவான சொல்லையே கூறுங்கள்.

  • பேச்சில்  நியாயம் இருக்க வேண்டும்..!
@ 6:152 says...பாதிக்கப்படுபவர் உங்கள் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்.

  • பேச்சில்  கண்ணியம்  இருக்க வேண்டும்..!
@ 17:23 says...(உங்கள் பெற்றோராகிய)அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (ச்சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசவீராக! 

  • பேச்சில்  பொய்  இருக்ககூடாது..! 
@ 22:30 says... பொய் பேசுவதிலிருந்தும்  விலகிக்கொள்ளுங்கள்.

  • பேச்சில்  புறம் இருக்கக்கூடாது..!
@ 49:12 says... உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம்.  

  • பேச்சில்  அவதூறு  இருக்கக்கூடாது..! 
@ 24:23 says...எவர் முஃமினான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ, அவர் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள் ஆவர்.

 
மேற்கண்ட விஷயங்கள் இறைநம்பிக்கை கொண்ட முஸ்லிம்களுக்கு சொல்லப்பட்டனவானாலும், கிட்டத்தட்ட இதே போன்ற விஷயங்களையே இஸ்லாம் அல்லாத பிற சமயகொள்கைகளும், திருக்குறள் போன்ற சங்கத்தமிழ் இலக்கிய அறநூல்களும்... "யாகாவாராயினும் நாகாக்க..." என்று    போதித்திருக்கின்றன.
.
 .
ஆனால், இறைநம்பிக்கையற்ற பல நாத்திகர்கள் (எல்லோரும் அப்படி அல்ல), தமக்கென்று எவ்வித கொள்கையோ, கோட்பாடோ, கட்டுப்பாடோ, தங்கள் பொல்லாத கற்பனைக்கு ஒரு வரைமுறையோ, இவ்வுலக செயலுக்கு மறு உலக தண்டனை பற்றிய அச்சமோ பேணாத காரணத்தால், அவர்களின் அத்துமீறிய அறுவறுப்பான செயல்களை அவ்வப்போது தங்கள் சுயலத்துக்காக செய்கிறார்கள். இனியும், செய்யத்தான் செய்வார்கள். 
.
 .
அப்போது... நாம், நாசூக்காய் அவருக்கு அதனை எடுத்துச்சொல்லியும் சட்டை செய்யாமல் சிலநேரம் அவர்கள் அதே செயலை தொடர்ந்து செய்தால், அப்போது, 'இறைவன் கொடுத்த கட்டளைகளை பேணவேண்டும்' என்ற கொள்கையுள்ள நாம், பொறுமையிழந்து, சராசரி மனிதனுக்கே  உரித்தான குணமான தேவையற்ற கோபம் காரணமாய்  மேற்படி கட்டுக்கோப்புக்கள் எல்லாம் தகர்ந்து போக, ஒரு சில சமயம் சற்று காட்டமான பதில்களை நம்மையும் மீறி தந்துவிட நேரிடுகிறது.

@ 16:125 says...(நபியே)உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக்கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக!

@ 16:126 says...நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள், பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும்.

@ 16:127 says...(நபியே!)நீர் பொறுமையுடன் இருப்பீராக.


ஆகவே, அச்சமயங்களில்... இறைநம்பிக்கையாளர்களாகிய நமக்கு பொறுமை/தண்டித்தல் இரண்டுக்கும் அனுமதி இருந்தாலும், நாம் பொறுமையுடனேயே... இருந்து விடுவோம்...!

ஏனெனில்...

@ 2:153 says...நம்பிக்கை கொண்டோரே!  நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.


இறுதியாக....
  • வீண் விவாதப்பேச்சை தவிர்த்தல் வேண்டும்..! 
@ 6:68 says...நம் வசனங்களைப்பற்றி வீண் விவாதம் செய்துகொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப்புறக்கணித்து விடும்.  

20 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...