எனதருமை சகோ..!
சென்றவருடம் டிசம்பரில், அலுவலில் அல்லது பதிவுலகில்(?!) 'மணிக்கணக்கில் பொட்டி தட்டுவோர்' -களுக்காக...
சென்றவருடம் டிசம்பரில், அலுவலில் அல்லது பதிவுலகில்(?!) 'மணிக்கணக்கில் பொட்டி தட்டுவோர்' -களுக்காக...
---என்று உங்க உடம்பு நோகாமல் இருக்க(?) ஒரு பதிவு போட்டிருந்தேன். அப்போது அதன் அதிபயங்கர பின்னணி தெரியாமல் அப்படி ஒரு பதிவு போட்டுவிட்டேன். ஸாரி...! ஆனால், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதாலேயே கூடிய சீக்கிரம் உயிர்போக வாய்ப்பு அதிகமாம்..!? இப்படி ஒரு அதிர்ச்சி ஆய்வறிக்கை ஒன்றை சொல்லி இப்போது வயிற்றில் புளியை கரைக்கிறார்கள்..! என்னத்த சொல்ல சகோ..?! அந்த அறிக்கை சொல்வதை நீங்களே தொடர்ந்து படியுங்களேன்..!
.
மணிக்கணக்காய் டிவி பார்ப்பதும், கணிணி முன்னாலேயே (வேலையாகவோ அல்லது வெட்டியாகவோ) பொழுதன்னிக்கும் அமர்ந்து கிடப்பதும், அலுவல் என்றாலும்... அது தற்சமயம் "மேசை வேலை" என்றான நிலையில்... இந்த இருபத்தோராம் நூற்றாண்டில், உலக மனிதர்களின் உட்காரும் சராசரி நேரம் 9.3 மணிநேரமாக அதிகரித்துவிட்டது..! இவ்வுலகில் மனிதர்கள் தூங்கும் சராசரி நேரம் கூட, 7.7 மணிநேரமாக சுருங்கிவிட்டது..!
என்னதான் ஒருவர் உடற்பயிற்சி செய்பவாராக இருந்தாலும், அவர் தொடர்ந்து ஒருநாளைக்கு 6 மணி நேரங்களுக்கு மேல் தொடர்ந்து அமர்பவராகவே இருந்தால், அவருக்கு 40% வரை இறப்பதற்கு வாய்ப்பு மற்றவரைவிட அதிகம் என்கிறது அந்த அறிக்கை..!
மணிக்கணக்காய் டிவி பார்ப்பதும், கணிணி முன்னாலேயே (வேலையாகவோ அல்லது வெட்டியாகவோ) பொழுதன்னிக்கும் அமர்ந்து கிடப்பதும், அலுவல் என்றாலும்... அது தற்சமயம் "மேசை வேலை" என்றான நிலையில்... இந்த இருபத்தோராம் நூற்றாண்டில், உலக மனிதர்களின் உட்காரும் சராசரி நேரம் 9.3 மணிநேரமாக அதிகரித்துவிட்டது..! இவ்வுலகில் மனிதர்கள் தூங்கும் சராசரி நேரம் கூட, 7.7 மணிநேரமாக சுருங்கிவிட்டது..!
என்னதான் ஒருவர் உடற்பயிற்சி செய்பவாராக இருந்தாலும், அவர் தொடர்ந்து ஒருநாளைக்கு 6 மணி நேரங்களுக்கு மேல் தொடர்ந்து அமர்பவராகவே இருந்தால், அவருக்கு 40% வரை இறப்பதற்கு வாய்ப்பு மற்றவரைவிட அதிகம் என்கிறது அந்த அறிக்கை..!
வேறுவழியின்றி 8 மணிநேரம் அமர்ந்தே பணியாற்றும் ஒவ்வொருவரும் அதற்கு அதிகமாய்... வீட்டில் சென்றும் டிவி/கணிணி முன் அமர்வதால் வருகிறது மேலும் ஆபத்து..! இவர்களுக்கு அரைமணி நேர உடற்பயிற்சி எல்லாம் ஒரு நாளைக்கு போதவே போதாதாம்.
.
.
உட்கார்ந்தே இருப்பது உடல் எடையை கூட்டுகிறது. அமர்ந்திருக்கும்போது, கால் தசைகள் வேலை செய்வதில்லை. கலோரி எரிப்பும், என்சைம் சுரப்பும் குறைந்து விடுகிறது. உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்டிரால் குறைகிறது. இதனால், இதய நோய், ரத்த அழுத்தநோய், சர்க்கரை நோய் பாதிப்பு ஆகியன வர அதிக சாத்தியம் உண்டு.
8 மணிநேரம் நின்று கொண்டு வேலை பார்ப்பவரை விட 8 மணிநேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவருக்கு இதயநோய் வர இருமடங்கு சாத்தியம். அப்படி... 8 மணி நேரம் தினமும் உட்கார்ந்தவாறே "மேசைவேலை" பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தும், 3மணி நேரம் அல்லது அதைவிட அதிகம் ஓரிடத்தில் அமர்ந்து டிவி பார்ப்போருக்கு 64% மாரடைப்பு வர சாத்தியம் உண்டு என்கிறது அறிக்கை. அப்படி அமரும்போது 135' பாகையில் அமர்வது ஓரளவு நல்லது. ஆகவே இந்த, நம் மனித உடலமைப்பு நீண்ட நேரம் உட்கார்வதற்காக படைக்கப்பட வில்லையாம்.
.
8 மணிநேரம் நின்று கொண்டு வேலை பார்ப்பவரை விட 8 மணிநேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவருக்கு இதயநோய் வர இருமடங்கு சாத்தியம். அப்படி... 8 மணி நேரம் தினமும் உட்கார்ந்தவாறே "மேசைவேலை" பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தும், 3மணி நேரம் அல்லது அதைவிட அதிகம் ஓரிடத்தில் அமர்ந்து டிவி பார்ப்போருக்கு 64% மாரடைப்பு வர சாத்தியம் உண்டு என்கிறது அறிக்கை. அப்படி அமரும்போது 135' பாகையில் அமர்வது ஓரளவு நல்லது. ஆகவே இந்த, நம் மனித உடலமைப்பு நீண்ட நேரம் உட்கார்வதற்காக படைக்கப்பட வில்லையாம்.
.
நூறு வருடங்களுக்கு முன்னால், இப்போதுள்ள நவீன மின்சார இயந்திர சாதனங்கள் ஏதும் கண்டுபிடிக்காமல் இருக்கும்போது, மனிதர்கள் தம் அன்றாட தேவைகளை தாமே தம் உடலுழைப்பால் பூர்த்தி செய்து கொண்டனர். அதனால், இப்போதுள்ள உடற்பருமன் மற்றும் அதானால் வரும் நோய்கள் ஏதும் அப்போது இல்லை. இப்போதோ அனைத்துக்கும் இயந்திர உதவி மனிதனுக்கு அத்தியாவசியமாகிவிட்டது. அதானால்தான் வருகின்றன அத்தனை நோய்களும்.
.
.
இதற்கு இனி நாம் என்ன மாற்று வழிகளை சிந்தனை செய்யலாம்..?
.
.
நீண்டநேரம் அமர்ந்தவாறே நம் பணி இருக்குமானால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அல்லது அப்படியொரு வாய்ப்பை நாமே உருவாக்கியாவது தொடர்ச்சியாக அமராமல், அவ்வப்போது எழுந்து ஒரு உலா போய் வருதல் நலன் பயக்கும். நமக்கு ஏதும், கைபேசி அழைப்பு வந்தால் ஓரிடத்தில் அமர்ந்து பேசாமால் சற்று உலாசென்று கொண்டே பேசலாம். எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் முடிந்தவரை சற்று நிற்கலாம். லிஃப்ட் இருந்தாலும், அவசரம் இல்லையேல்... படிக்கட்டை உபயோகிக்கலாம். சிறுதொளைவு என்றால் முடிந்தவரை காலாற நடந்து சென்றுவரலாம். சிறுதூரத்துக்கு இனி மிதிவண்டி பயன்படுத்தலாம். உட்கார்ந்தவாறே சுவிங்கம் மெல்வது கூட உடற்பயிசியாம்.
_________________________________________________________________________________
ம்ஹூம்...சகோ..!
நீங்க முதல்ல அந்த இடத்தை விட்டு எழுந்தறிங்க..!
டக்குன்னு எழுந்தறிங்க சொல்றேன்..! என்னது..?
ஓட்டா..? பின்னூட்டமா..?
ஃபாலோவர் போடறீங்களா..?
அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் சகோ..!
இப்போது அதைவிட ரொம்ப முக்கியம்...
உடனே கொஞ்சம் காலாற நடந்துட்டு வாங்க..!
ஏனெனில்...
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வ'மாம்..!
Health is Wealth -ன்னு பேசிக்கிறாங்க..! நாம்... வருமுன் காப்போம் சகோ..!
டிஸ்கி :
நாங்கூட இந்த பதிவை நின்னுகிட்டே டைப் அடிச்சேன்னா பாத்துக்கோங்களேன்..!
15 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
//8 மணிநேரம் நின்று கொண்டு வேலை பார்ப்பவரை விட 8 மணிநேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவருக்கு இதயநோய் வர இருமடங்கு சாத்தியம்.//
என்னது? எனக்கு இருக்குறதே குட்டி இதயம்.. அதுல நோய் வருமா? என்ன கொடுமை சகோ. இது?
//நீண்டநேரம் அமர்ந்தவாறே நம் பணி இருக்குமானால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அல்லது அப்படியொரு வாய்ப்பை நாமே உருவாக்கியாவது தொடர்ச்சியாக அமராமல், அவ்வப்போது எழுந்து ஒரு உலா போய் வருதல் நலன் பயக்கும். //
ம்ம்ம்ம்.. முயற்சி செய்கிறேன்....
//ஓட்டா..? பின்னூட்டமா..? ஃபாலோவர் போடறீங்களா..?
ஹலோ... அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் சகோ..!//
அப்புறம்னா... ஒரு மாதம் கழிச்சு போடவா?
சகோதரர் ஆஷிக்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
நல்ல விழிப்புணர்வு பதிவு சகோதரர். உடல் நலமாக இருந்தால்தான் உள்ளமும் உற்சாகமாக செயல்படும்.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்... //அப்புறம்னா... ஒரு மாதம் கழிச்சு போடவா?//---அடடா..! சகோ.அப்துல் பாஸித்... ஓர் உலா போய்விட்டு வந்து அதை செய்யலாமேன்னு சொன்னேன்..! எனக்கே நான் வெச்ச ஆப்பா ஆகிடுச்சே இது..!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.
@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம் வரஹ்... //உடல் நலமாக இருந்தால்தான் உள்ளமும் உற்சாகமாக செயல்படும்.//--வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.ஆஷிக் அஹ்மத்.
”அமர்ந்தால் அமரர்”னு ரைமிங்கா எழுதி, டெரர் ஆக்குறீங்களே!! 135 கோணத்தில் அமரணும்கிறது புது தகவல். நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும், W.R.B.
// என்னதான் ஒருவர் உடற்பயிற்சி செய்பவாராக இருந்தாலும், அவர் தொடர்ந்து ஒருநாளைக்கு 6 மணி நேரங்களுக்கு மேல் தொடர்ந்து அமர்பவராகவே இருந்தால்,……… வேறுவழியின்றி 8 மணிநேரம் அமர்ந்தே பணியாற்றும் ஒவ்வொருவரும் …….8 மணிநேரம் நின்று கொண்டு வேலை பார்ப்பவரை விட 8 மணிநேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவருக்கு……. என்னதான் ஒருவர் உடற்பயிற்சி செய்பவாராக இருந்தாலும்… //
கடமையான ஐங்கால ஃபர்ழ், சுன்னத் தொழுகைகளுடன் தஹஜ்ஜத் தொழுகையும் அனுதினம் கடைப்பிடித்து முஸ்லீம்களுக்கு மேற்கூறப்பட்டபடி மணிக்கணக்காக அமர்ந்திருக்க வாய்ப்பு இல்லை.
தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,
உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.
யோகாசனம் பற்றி பிரசித்தி பெற்ற யோகாசன ஆசிரியர் பெங்களூர் சுந்தரம் அவர்கள் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து
"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.
இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.
தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."
இஸ்லாத்தை குறை கூறுவதையே தொழிலாக எடுத்துக்கொண்ட ஒரு ஐரோப்பிய கைக்கூலி ,
"முகம்மது ஒரு எத்து புத்திக்காரர் (MOHAMED IS A CUNNING FELLOW)
இஸ்லாமியர்களை "வாய், நாசிதுவாரங்கள், கண்கள், காதுகள், உபாதை வாயில்கள், கைகால்கள் அனைத்தையும் ஒரு நாளில் பலமுறை சுத்தம் செய்ய செய்து,உடலுக்கும் உள்ளத்துக்கும் பயனுள்ள உடற்பயிற்ச்சியை கட்டுக்கோப்பாக ராணுவ செயல்பாட்டுடன் தொழுகை என்ற பெயரில் கட்டாயமாக்கி அமைத்து கொடுத்து இருக்கிறார் " என கூறியிருக்கின்றான்.
இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முயற்ச்சி அல்ல இது.
தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்
வாஞ்சையுடன் வாஞ்சூர்.
http://vanjoor-vanjoor.blogspot.com/
REGARDS.
VANJOOR
___________________________________________________________________________
ASSALAMU ALAIKKUM W.R.B.
DEAR MOHAMED ASHIK
RE: YOUR POST
http://pinnoottavaathi.blogspot.com/2011/06/blog-post_15.html
அதிகநேரம் அமர்ந்திருந்தால் அதிவிரைவில் அமரர்..!!? அதிர்ச்சிஅறிக்கை..!
SEVERAL TIMES I HAVE TRIED TO POST MY COMMENT BELOW IN VAIN.
BLOGGER KEEPS ON REPEATING THIS
"We are sorry, but we were unable to complete your request."
=================
BE KIND ENOUGH TO ADD THIS COMMENTIN YOUR POST .
___________________________________________________________________________
அலைக்கும் ஸலாம் வரஹ்...
எனக்கு மெயிலில் தங்கள் அனுப்பிய அருமையான கருத்தை இங்கே சேர்ப்பித்து விட்டேன்.
நீங்கள் கூறியபடி, தொழுகை என்பது முஸ்லிம்களுக்கு, ஈருலகுக்கும் பல்வேறு நன்மைகளை அள்ளித்தருவதாக அமைந்துள்ளது. அதை நமக்கு இறைத்தூதர் மூலம் தந்துதவிய இறைவனுக்கே எல்லா புகழும் உரித்தாகுக.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.வாஞ்சூர் அவர்களே.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
பயனுள்ள தகவல் நன்றி சகோ. உடல் உழைப்பு சம்பந்தமான வேலையை விட்டுவிட்டால் இதுதான் கதி போல.
அஸ்ஸலாமு அலைக்கும்!
சிறந்த பதிவு சகோ. ஆஷிக்! அதிலும் இணையத்தில் எழுதும் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு!
அஸ்ஸலாமு அலைக்கும்,
உண்மை தான் சகோ., என் பணியும் அவ்வாறு தான் உள்ளது. எல்லோரும் சிந்திக்க கூடிய விஷயம்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
அருமையான தகவல்.
விழிப்படைய வைத்தமைக்கு நன்றி
அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.மு.ஜபருல்லாஹ்,
சகோ.இளம் தூயவன்,
சகோ.சுவனப்பிரியன்,
சகோ.சிநேகிதன் அக்பர் &
சகோ.இராஜராஜேஸ்வரி
தங்கள் அனைவர் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர்களே.
வணக்கம் தோழர் முகம்மது அவர்களே,
அஸ்ஸலாமு அலைக்கும்..
எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என்பது - வள்ளலார் திருவாக்கு..
அதுபோல எல்லோருக்கும் ஒரு நல்ல விழிப்புணர்வு பெற தாங்கள் தந்திருக்கும் இவ்வாக்கத்திற்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்..
எல்லாம் வல்ல திருவருள் தங்களுக்கு நலம் பயக்கட்டும்..
அதுவும் எனக்கு ஓட்டோ / பின் ஊட்டமோ வேண்டாம்...
எழுந்து சற்று நேரம் நடங்கள் என்ற தங்களது மனிதாபிமானத்திற்கு வாழ்த்துக்கள்.
அன்பன் சிவ.சி.மா.ஜா
http://sivaayasivaa.blogspot.com
@சிவ.சி.மா. ஜானகிராமன்வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ.சிவ.சி.மா. ஜானகிராமன்.
salaam,good information about health tips.specially in gulf countries genetically modified vegetables,desalinate water and hybrid broilers are quite common. if you use regularly it will affect health. sea food is best
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!