எத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற
துவா செய்யுங்கள்' என்று..! ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெயில்- இது ஏனோ, எனது குடும்பத்து உறுப்பினர்
நோய்வாய்ப்பட்டது போன்ற ஒரு சோகத்தை என்னுள் ஏற்படுத்துகிறது. காரணம், நான் மட்டுமல்ல...
'குர்ஆன் ஹதீஸ் மட்டுமே தனது வாழ்வியல் மார்க்கம்,
என்று யாரெல்லாம் எனது தலைமுறையில் வாழ தலைப்பட்டனரோ, அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்வினுள்ளும் மார்க்க ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மவுலவி சகோ.பீஜே' என்று கூறினால் அது மிகை அல்லதான்..!
நான் பிறந்த இடமான, பாபநாசம்-பண்டாரவாடையில்,
இமாம் அபூ ஹனிபா ரஹ் அவர்களை பழிக்கும் கொடியவராக
எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் இவர். பின்னர், நான் படித்து வளர்ந்த இடமான, அதிராம்பட்டினத்தில்... இமாம் ஷாஃபி ரஹ் அவர்களை அவமானப்படுத்தும்
இஸ்லாத்தின் வில்லனாக மீண்டும் எனக்கு சொல்லப்பட்டவர் இவர்.
ஊருக்கு
நாலு பேர், இப்படி 'நஜாத்துக்காரன்' என்று இருந்த அக்காலத்திய அவரின் ஆதராவளர்களை 'அஞ்சாம் மதஹப்'காரர்கள் என்று சொல்லி, பள்ளியின் வாசலில், 'நான்கு மதஹபுகளில் ஒருவரையாவது பின்பற்றாதவருக்கு இப்பள்ளியில் அனுமதி இல்லை' என்று பலகை மாட்டி... பள்ளியை விட்டு,
தள்ளிவைத்து... இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களாக எனக்கு காட்டப்பட்ட
போது... அத்தோடு 'வேண்டாம்பா இந்த விரோதிகள் சகவாசம்' என்று மெய்யாலுமே மூடத்தனமாக நான் நம்பி...
என்பதுகளின் இறுதியில் இவர்களை வெறுத்து ஒதுங்கி விட்டேன்.
ஆனால்.... அதே ஆண்டுகளில்... வெறும் 2 MP மட்டுமே வைத்து இருந்த பாஜக, பாபர்
மஸ்ஜிதை இடிக்கும் ஓட்டுப்பொறுக்கி அஜன்டாவை கையில் எடுத்தவுடன்... 88 MPக்களுடன்
ஆளுங்கட்சி கூட்டணி என்றாகி... மீண்டும் பாபர் மஸ்ஜித் இடிப்பு ரத யாத்திரை
மூலம் 120 MP க்களுடன் வலுவான எதிர்க்கட்சியாகி... 'கரசேவை' என்ற
சட்டத்துக்கு எதிரான மறைமுக பயங்கரவாதம் செய்து பாபர் மஸ்ஜிதை இடித்தனர். ஆனால், இதன் பிறகு... ராமர் கோவில் கட்டும் ஆர்வத்திலிருந்து அவர்களின் ஆதரவாளர்களை ஆட்சிக்கு வந்தவுடன் அதுபற்றி பார்ப்போம்... என்று திசை திருப்பி... ஹிந்துத்துவா வெறியூட்டப்பட்ட மக்களை தக்க வைப்பதற்கு
பாஜக எடுத்த... அடுத்த அரசியல் ஓட்டுப்பொறுக்கி ஆயுதம் தான் 'பொது சிவில் சட்டம்'. இது எந்த
அளவு முட்டாள்த்தனமானது என்று இப்போது எல்லாருக்கும் தெரியும். அப்போது,
இதுபற்றி அந்த அளவு விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. மிகச்சிலருக்கே
இருந்தது. அதனால்தான் அவர்களுக்கு 161 அப்புறம் 182 சீட் எல்லாம் வந்தது.
இந்நிலையில் ஒருநாள் (1993 /94 என்று நியாபகம்)
அதிராம்பட்டினத்தில் ஒரு சம்பவம் நடந்தது. செக்கடிப்பள்ளி எதிரே வற்றி
இருந்த செக்கடி குளத்திடலில் மவுலவி பீஜே வின் பொதுக்கூட்டம். மேடை லைட் எல்லாம் முதல் நாளே
போட்டு விட்டார்கள். ஊர் முழுக்க போஸ்டர். 'PJ பேசுகிறார்' என்று. 'என்ன
பேசுகிறார்... எதைப்பற்றி பேசுகிறார்' என்பதெல்லாம் யாருக்கு வேணும்...?
'அதெப்படி நம்ம எதிரி நம்ம இடத்துக்கு வந்து பேசலாம்...?' அவ்ளோதான் மேட்டர்.
விளைவு...? எல்லா போஸ்டரும் கிழிக்கப்பட்டது. அடுத்தநாள், காலையில்...
பரபரப்பான தகவல் பஸ் ஸ்டாண்டில் நியூஸ் பேப்பர் வாங்கும்போது நண்பர்களால் பரிமாறப்பட்டது. அதாவது... PJ மீட்டிங்கிற்காக போடப்பட்டு
இருந்த மேடை உடைக்கப்பட்டு... கீற்று பிய்த்து எறியப்பட்டு... மைக் செட்
லைட் எல்லாம் நொறுக்கப்பட்டு... சொற்பொழிவு இன்று நடத்த முடியாத அளவுக்கு
ஆக்கப்பட்டு விட்டது என்ற நியூஸ்..!
'இந்த இடத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ
மீட்டருக்கு அப்பால் பேச்சு காதில் விழாத பாதுகாப்பான(?) தூரத்தில்தான் இருக்கேன்
நான்' என்ற நிம்மதியான எண்ணத்தில் இருந்த எனக்கு... வந்தே விட்டது அவரின் உரை எனது
காதுக்குள்..! இது எப்படி..? ஆமாம்.! அந்த மீட்டிங் கேன்சல் ஆக வில்லை..! இடம்
தான் கேன்சல் ஆகியது. எனவே, மீட்டிங் எங்கள் வீட்டு அருகே இருந்த 'சாரா
கல்யாண மண்டபத்தில்' மாற்றப்பட்டு அங்கே நடந்தது. நான்
என்னதான் காதை பொத்திக்கொண்டு இருந்தாலும்... வீதி எங்கும் கட்டப்பட்ட ஸ்பீக்கர்கள் மூலம் எனது செவிப்பறையை தட்டி
எனது சிந்தைக்குள் சென்ற அவர் சொன்ன விஷயம் இதுதான்...........
"நான் என்ன, இவர்களை எதிர்த்தா பேச
வந்துள்ளேன்..? நான் எதுக்கு இங்கே வந்து இருக்கேன்... எதைப்பற்றி பேச
வந்து இருக்கேன்... இதுகூட தெரியாமல்... இப்படி மேடையை கலைத்து இடைஞ்சல்
செய்தால் இதுக்கு என்ன அர்த்தம்..? நாளை பேப்பரில் நம்ம எதிரிகள்... என்ன
எழுதுவாங்க தெரியுமா..? 'அதிராம்பட்டினத்தில் முஸ்லிம்கள் பொது சிவில்
சட்டத்தை எதிர்த்து பேச வந்தவரின் மேடை உடைத்து சட்டத்துக்கு தம் ஆதரவை தெரிவித்தனர்.'
இப்படி ஒரு அவப்பெயர் உங்கள் ஊருக்கு தேவையா...? நமக்குள் இருக்கும் மார்க்கம் பற்றிய வேறுபாட்டையா காரணமாக சொல்வார்கள்..? நான் என்ன சொல்றேன்னு புரியுதா..?" என்றார்.
அதுதான்... நான் அவர் விஷயத்தில் யோசிக்க ஆரம்பித்ததன் முதல் படி. அந்த
பேச்சை முழுதாக செவி தாழ்த்தி சொற்பொழிவை கேட்க ஆரம்பித்தேன். 'அடடே... நல்லாத்தானே பேசுறார். நேர்மையான
கேள்விகள்தானே இவை. எவ்ளோ பெரிய விஷயம் சொல்ல வந்து இருக்கார்..! ஒருவேளை மக்கள் இவர் மேலே சொல்றது தப்பா இருக்குமோ..?
என்று நினைத்துக்கொண்டு... அத்தோடு அவரை மறந்தும் விட்டேன்..! காரணம்,
எனக்கு கொடுக்கப்பட்டு இருந்த ஆரம்பகால இன்புட் அவரை அந்நியராக்கி வைத்திருந்தது. ஆனால், இரண்டு நாள் கழித்து... அவர் சொன்ன மாதிரித்தான் தினமலரில் பெட்டி செய்தியாக ஓர் ஓரத்தில் வந்தது. "பொது சிவில்
சட்டம் : அதிரை முஸ்லிம்கள் ஆதரவு". :-)
இதேகாலகட்டத்தில்... பல
வருடங்களாக மத்ஹப்
சட்டங்களை படித்து (ஃபிக்ஹின் கலைக்களஞ்சியம் : ஹனபி & ஷாபி) அதில் உள்ள குளறுபடிகளை
கண்டு நெருடலாக இருந்து... 'ஒரே விஷயத்தில், ஹனபி
ஒன்றாக ஷாபி வேறாக இருந்த மசாயில்களில் எது மார்க்க ரீதியில் நபி ஸல்
அவர்களின் சரியான செயலாக இருக்கும்' என்று குழம்பி
தத்தளித்துக்கொண்டு இருந்து... 'இரண்டுமே சரிதான் தம்பி' என்ற பதிலை இருவரிடமும் பெற்று... 'அப்படின்னா... இரண்டில் எது சிறந்ததோ அதை மட்டும் நான் எடுத்து இரண்டிலிருந்தும் மிக்ஸ் பண்ணி பின்பற்றலாமா' என்றாலும் கூடாதாம்... ஏதாவது ஒன்னை மட்டுமே பின்பற்றனுமாம்... இறுதியில்... அந்த மதஹப் சட்டங்களில்
இது நிச்சயம் பிழையானவையாகத்தான் இருக்கும் என்று சுயமாக சிந்தித்து ஒவ்வொன்றாய் வெறுத்து... (உதாரணம்:- திருட செல்லுவதற்கு முன்னர் திருடன் ஓதவேண்டிய துவா) அடுத்து எப்படி, எந்தப்பக்கம்
செல்வது, என்ன செய்வது,
என்று குர்ஆன் தர்ஜுமாவை மட்டும் படித்துக்கொண்டு இருந்தபோதுதான்...
தூத்துக்குடியில் நான் டிவி வாங்கிய பிறகு... (அதற்கு முன்னர் எங்கள் வீட்டில் டிவி இல்லை) ஒருநாள், விஜய்
டிவியில் ஒருவரின் சொற்பொழிவை எதேச்சையாக 'பார்க்கும்' வாய்ப்பு ஏற்பட்டது.
'அடடே... எல்லாம் சரியா சொல்றாரே..! மத்ஹபில் தப்பா இருக்கும் இது...
உண்மையில் இப்படி இருந்தால் நல்லா இருக்குமே என்று நாம் நினைச்ச படியே
நம்ம மார்க்கத்திலும் முன்னமேயே இருக்கே...' என்று வியப்போடும் மனநிறைவுடனும் நன்றியுணர்வோடும்
அவரைப்பார்த்துக்கொண்டு இருந்த போதுதான்... நண்பன் அதிரை ஹாரிஸ் சொன்னான்...
'இவர்தாண்டா அவர்' என்று..!
அதற்கு முன்னர் 13 வருடங்களாக அவரை
பண்டாரவாடையில் 'ஜெய்லாவுதின்' என்றும், அதிரையில் 'PJ' என்றும் அறிந்திருந்த நான் அன்றுதான்... அவரை
'மவுலவி P.ஜைனுல்ஆபிதீன் உலவி' இவர்தானா என்று பரவசத்துடன் பார்த்தேன்.
அவரது ஆய்வுத்திறனும் அரபிப்புலமையும் பேச்சாற்றலும் அவர்மீது எனக்கு
ஒருவித மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தியது. அதேநேரம், 'இவரையா இத்தனை
காலம் நாம் நம்மைவிட்டு தள்ளி வைத்து நம்மை நாமே பாழ்படுத்திக்கொண்டோம்..?'
என்று உள்ளுக்குள் துணுக்குற்றேன். இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக மத்ஹப் காரர்களின் பேச்சை
கேட்காது இருந்து சுயமாக ஆராய வேண்டும் என்ற கொள்கையில் இருந்த நான்... 'இவரை
மட்டும் சுயமாக ஆராயாமல்.. இவ்வளவு காலம் அவர்கள் பேச்சை கேட்டு எப்படி
விலகி ஓடினேன்' என்று என்னை நானே அவமானத்தால் நொந்து கொண்டேன்.
சகோ.பிஜேவின் சொற்பொழிவுகள், ஆய்வுகள், கேள்வி- பதில்கள் போன்றவற்றை, 'இவர் ஒரு சிறந்த இமாம்' என்று நான் அறிந்த ஸ்பிக் நகர் பள்ளியின் சுன்னத் ஜமாஅத் மவுலவியிடம் சொல்லி விவாத்தித்த போது... 'மவுலவி பிஜே சொல்றதுதான் சரி' என்று ஏறக்குறைய எல்லா விஷயத்திலும் அவரை சப்போர்ட் பண்ணியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
அப்படியாக,
ஓரிரு
வருடம் கழித்து, குடந்தை-மேலக்காவேரியில் ஒரு மேடை சொற்பொழிவில்... சகோ.மவுலவி பிஜே அவர்களை நேரில்
சந்தித்து சலாம் சொல்லி
அருகருகே மேலக்காவேரி பள்ளியில் இஷா தொழுத அன்று (2002) அவர் மூலமாக அல்லாஹ்
தந்த உத்வேகம்தான் புஹாரி ஹதீஸ் ஏழு வால்யுமையும் ஒரே நேரத்தில் என்னை
வாங்க வைத்தது. அன்று அவர் கூட்டத்தில், 'யார் யாரிடம் ஏதாவது ஒரு குர்ஆன் தர்ஜுமா உள்ளது ,
கைதூக்குங்கள்' என்றார். நான் உட்பட ஏராளமானோர் கை தூக்கினோம். 'மாஷாஅல்லாஹ்'
என்றவர், 'வாங்காதவர்கள் யார் என்று கேட்டு இருக்கனுமோ' என்று கூறி
விட்டு.. அடுத்து, 'இம்மாதம் வெளிவந்தபுகாரி ஏழாவது பாகம் யாரிடம் உள்ளது..?' என்றார்..? எவரிடமும் இல்லை. 'சரி, மற்ற ஆறு பாகம்
உள்ளவர்கள்..?' எவரிடமும் இல்லை. இப்படியே குறைத்து குறைத்து வந்து 'ஒரு பாகமாவது
யாரிடம் உள்ளது..?' என கேட்க ஒரு சிலர் மட்டும் கை தூக்கினர்.
இந்த மாதிரியான மோசமான நிலையிலா நாம் இருக்கிறோம்... என்று அவருக்கு வந்த நியாமான வருத்தத்தில்... முன்வரிசையில் அமர்ந்து
இருந்த நான் வெட்கி தலைகுனியும் அளவுக்கு அடுத்து அவரின் உரை என்னை மிகவும் பாதித்தது.
ஆமாம்..! அவர் உரையின் படி... நான் சினிமாவுக்கு செலவழித்துள்ளேன். காமிக்ஸ், நாவல், விகடன்,
குமுதம், தினதந்தி, தினமணி, தி ஹிந்து, எக்ஸ்ப்ரஸ்... என்று எதற்கெல்லாமோ... எவ்வளவோ செலவு செய்து
உள்ளேனே..! அந்த பணத்தில் எழென்ன... எழுநூறு பாகம் நான் வாங்கி
இருக்கலாமே..! ஏன் எனக்கு வாங்க மனம் வரவில்லை..? மறுமைக்காக வாழும் எண்ணம் எனக்கு இல்லையா..? மார்க்கத்தை அறியும் ஆவல் எனக்கு இல்லையா..? இதுபோல யாராவது வந்து எதயாவது மார்க்கம் என்று சொன்னால், 'சொல்பவர் சொல்வது சரியா' என்று எப்படி நான் உரசிப்பார்ப்பது..?
அதே ஊட்டத்தில்... அடுத்த நாளே... குடந்தையில் அலைந்து புஹாரி கிடைக்காமல்... தஞ்சாவூர்
ஹாஜியார் புக் டிப்போ சென்று ஏழு வால்யுமையும் ஒரே நேரத்தில் வாங்கி
தூக்க முடியாமல் தூக்கி வந்தேன். அடுத்து, முஸ்லிம், திர்மிதி என்று என்னை சரியான பாதையில்
இவரின் இந்த மனதை தொட்ட உரை மூலம் என்னை சரியான பாதையில் பயணிக்கவைத்த இறைவனுக்கே புகழனைத்தும்.
.
மேலும், விஜய், விண், மூன் மீடியா சிடிக்கள், ஆன்லைன் பிஜே தளம், DAN தமிழ், இமயம் வாயிலாக... அவரால் நிறைய மார்க்க விஷயங்களில் நான் விளக்கம் பெற்றிருக்கிறேன். அதெல்லாம் நான் குழம்பி வேறு எப்பக்கம் செல்வது என்று முட்டு சந்தில் திக்கு முக்காடி திசை அறியாமல் நின்ற விஷயங்கள். அல்ஹம்துலில்லாஹ். எனக்கு பல விளக்கங்களை ஊட்டின அவரது உரைகளும் எழுத்துக்களும்.
.
மேலும், விஜய், விண், மூன் மீடியா சிடிக்கள், ஆன்லைன் பிஜே தளம், DAN தமிழ், இமயம் வாயிலாக... அவரால் நிறைய மார்க்க விஷயங்களில் நான் விளக்கம் பெற்றிருக்கிறேன். அதெல்லாம் நான் குழம்பி வேறு எப்பக்கம் செல்வது என்று முட்டு சந்தில் திக்கு முக்காடி திசை அறியாமல் நின்ற விஷயங்கள். அல்ஹம்துலில்லாஹ். எனக்கு பல விளக்கங்களை ஊட்டின அவரது உரைகளும் எழுத்துக்களும்.
அப்போதெல்லாம்... அவற்றில், அவர் அடிக்கடி
சொல்லும் அறிவுரையில் எனக்கு மிகவும் பிடித்தது யாதெனில்... "நான் சொல்கிறேன் என்பதால்
அப்படியே நம்பி பின்பற்றாமல், நீங்களும் கற்று ஆய்வு செய்து சரிபார்த்து விட்டு
விளங்கி பின்பற்றுங்கள்" என்பதே..! ஒருவர் மார்க்க விஷயத்தில் முனைந்து கஷ்டப்பட்டு பல நாட்கள் பல நூல்களை ஆய்வு செய்த
பின்னரும், இப்படியும் சொல்ல ஒரு கர்வமற்ற மனப்பக்குவம் வேண்டுமே. மாஷாஅல்லாஹ்.
இப்படி, என்னைப்போல... தமிழ்கூறும் உலகெங்கும் எண்ணற்றோர் சரியான
இஸ்லாமிய பாதையை தேர்ந்தெடுக்க அவர் ஒரு கருவியாக இருக்கிறார். தமிழில் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் இன்று அவரின் ஆக்கங்கள் மொழி பெயர்க்கப்படும் நிலையில், தமிழ்கூறும் நல்லுலகிற்குமட்டுமின்றி அகில உலக இஸ்லாமிய பிரச்சாரத்துக்கு அவர் ஓர் இஸ்லாமிய சொத்து..!
கடந்த 27
வருடங்களாக அவரின் இந்த அயராத மார்க்க உழைப்புக்கு உரிய நற்கூலியை வல்ல
அல்லாஹ் அவருக்கு ஈருலகிலும் வழங்கி அவரை மகிழ்விக்கவும், அவரின் அளப்பரிய
தொண்டுகள் மேலும் பலருக்கு சென்றடைந்து இன்னும் எண்ணற்றோர் பயன்பெறவும்,
அவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நோயை அடியோடு முற்றிலுமாக நீக்கி அருளி, இன்னும் பல்லாண்டுகள்
அவருக்கு நல்வாழ்வினை தந்து, மார்க்க பிரச்சார அழைப்பு பணியில் இன்னும்
சிறப்பாக ஈடுபட அவருக்கு உடலளவிலும் & மன அளவிலும் பெரும் ஆரோக்கியமும்
ஊக்கமும் தந்தருளவும்... அவரின் பாவங்களை மன்னிக்கவும், இருகரம் ஏந்தி
வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். யா அல்லாஹ், எனது துவாவை ஏற்றுக்கொள்வாயாக..! ஆமீன்.
64 ...பின்னூட்டங்கள்..:
மாஷா அல்லாஹ் ....!!!!!!!!!!!!!!!!!
இப்படி ஒரு சுயசரிதையை நான் எதிர்பார்க்கவே இல்லை பாய்..... அல்ஹ்மதுலில்லாஹ்..... உங்களின் ஒவ்வொரு பதிவிலும், ஈமெயில் பதிகளிலும் என எல்லா இடத்திலும் எதாவது பாடத்தை கற்றுக்கொள்வது உண்டு.... இன்றும் அப்படியே....
எல்லாம் வல்ல நாயன் அன்னாரின் உடல்நலத்தை பரிபூரண சுகமாக்கித் தருவானாக. ஆமீன்.
அவரது உடல்நிலை நலமடைய இறைவனிடம் துவா செய்கிறேன்...
சலாம் சகோ .முகம்மத் ஆஷிக்
இந்த நேரத்தில் பதிவுலகில் மு.மாலிக் என்னும் பெயர் உடையவர் ,PJ ஐ வசை பாடுவதையே தொழிலாக கொண்டவர் யார்... ?என்பதை அறிய வேண்டுகிறேன் ..இக்பால் செல்வன் ,நபி வழி, இப்னு சாகிர்,உம்மத் இன்னும் இவர்களை போன்றவரா...அறிந்தவர்கள் விளக்கம் தாருங்கள்...
நன்றியுடன்
நாகூர் மீரான்
ஸலாம்
நான் ஒரு சம்பவம் சொல்கிறேன் எங்களுக்கு பீ ஜே சொன்னது ...
என்கிட்ட என்னுடைய உரையை கேட்டு நிறைய பேரு உரை நல்லா இருக்கு அப்படியென்று சொல்வார்கள் ... இப்படி சொல்லும் போது நம்மில் பல பேருக்கு நம்ம தான் எல்லாம் ...!!! ஆனால் அவர் சொல்வார் நான் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று ...
மேலுல்லுல வார்த்தையை தவறா புரிந்து கொள்ளாதீர்கள் ... எனக்கு எப்படி எழுதனும்நு தெரியல ...
கீழுள்ள வார்த்தைகள் [GOLDEN WORDS]
//"நான் என்ன, இவர்களை எதிர்த்தா பேச வந்துள்ளேன்..? நான் எதுக்கு இங்கே வந்து இருக்கேன்... எதைப்பற்றி பேச வந்து இருக்கேன்... இதுகூட தெரியாமல்... இப்படி மேடையை கலைத்து இடைஞ்சல் செய்தால் இதுக்கு என்ன அர்த்தம்..? நாளை பேப்பரில் நம்ம எதிரிகள்... என்ன எழுதுவாங்க தெரியுமா..? 'அதிராம்பட்டினத்தில் முஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து பேச வந்தவரின் மேடை உடைத்து சட்டத்துக்கு தம் ஆதரவை தெரிவித்தனர்.' இப்படி ஒரு அவப்பெயர் உங்கள் ஊருக்கு தேவையா...? நமக்குள் இருக்கும் மார்க்கம் பற்றிய வேறுபாட்டையா காரணமாக சொல்வார்கள்..? நான் என்ன சொல்றேன்னு புரியுதா..?" என்றார்.//
""اَللّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ اِشْفِهِ وَأَنْتَ الشَّافِيْ لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
அல்லாஹும்ம ரப்ப(B]ன்னாஸி அத்ஹிபில் ப(B]ஃஸ இஷ்பி[F]ஹி வஅன்தஷ் ஷாபீ[F] லாஷிபா[F]அ இல்லா ஷிபா[F]வு(க்)க ஷிபா[F]அன் லா யுகாதிரு ஸகமா.
இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து!
ஆதாரம்: புகாரி 6743""
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் ஆஸிக்,
தங்களின் இந்த ஆக்கத்தில் சகோதரர் பிஜே அவர்களின் கூட்டம் செக்கடிகுளம் அருகில் நடைபெறாமல் சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது என்பது உண்மை. அந்த மார்க்க விளக்க பொதுக்கூட்டமும் அதிராம்பட்டினத்தில் தவ்ஹீத் வளர்ச்சிக்கு ஒரு காரணம்.
சகோதரர் பிஜே அவர்களுக்கு அல்லாஹ் நில்ல சுகத்தை தந்தருள்வானாக. சகோதரர் பிஜே போன்றவர்களின் மார்க்க சேவை தமிழ் பேசும் மக்களுக்கு மேலும் தேவை என்பது பொதுவாக தவ்ஹீத் சிந்தனையுள்ள அனைவரின் எதிர்ப்பார்ப்பு.
//அப்போதெல்லாம்... அவற்றில், அவர் அடிக்கடி சொல்லும் அறிவுரையில் எனக்கு மிகவும் பிடித்தது யாதெனில்... "நான் சொல்கிறேன் என்பதால் அப்படியே நம்பி பின்பற்றாமல், நீங்களும் கற்று ஆய்வு செய்து சரிபார்த்து விட்டு விளங்கி பின்பற்றுங்கள்" என்பதே..!//
நீங்களும் கற்று ஆய்வு செய்து சரிபார்த்து விட்டு விளங்கி பின்பற்றுங்கள் என்பதை நம்மில் எத்தனை பேர் பின்பற்றியுள்ளோம் என்பது தான் இங்கு நாம் சிந்திக்க வேண்டியவை..
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்ஹம்துலில்லாஹ்! அருமையான பதிவு... அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வனாக!
"நான் சொல்கிறேன் என்பதால் அப்படியே நம்பி பின்பற்றாமல், நீங்களும் கற்று ஆய்வு செய்து சரிபார்த்து விட்டு விளங்கி பின்பற்றுங்கள்" - சத்தியமான வார்த்தை!!!
அல்லாஹ் சகோ.பிஜே அவர்களுக்கு விரைவில் ஷிபாவை கொடுப்பான்! இன்ஷாஅல்லாஹ்!
சலாம் சகோ ஆசிக்...
இந்த கட்டுரை படித்ததும் நிஜமாகவே கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது...இப்பொழுது நான் அழுதுகொண்டு இருக்கிறேன்... நீங்கள் சொன்ன சம்பவங்கள் அனைத்தும் ஏகத்துவவாதிகள்(வஹாபிகள்) அனைவர் வாழ்விலும் நடந்து இருக்கும்.. எனக்கும் நடந்து இருக்கு.. சம்பவங்களும் ஊர்களும் மட்டுமே மாறும்... நான் அவரின் பேச்சை முதன் முதலில் காரைக்குடியில் கேட்டேன் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" என்ற மாற்று மதத்தவர்களுக்கான நிகழ்ச்சி.. அதில் மாற்று மதத்தவர்கள் யாருக்கும் புரிதல் வந்ததோ இல்லையோ?? நான் தெளிவடைந்தேன்.. அன்றில் இருந்து எனது சிந்தனையில் பெரும் மாற்றங்கள்... பல புத்தங்கள் படித்து , விவாதித்து உண்மையான இஸ்லாத்தை அறிந்து கொண்டேன்.. எல்லாப் புகழும் இறைவனுக்கே....
இன்று சில விஷயங்களில் அண்ணனுடைய கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்து நம்மில் பலரிடம் இருக்கலாம்... ஆனால் அவரது கருத்தையே மறுக்கும் அளவுக்கும் நமக்கு தெளிவு ஏற்பட அண்ணன் பீஜே தான் காரணம் என்று நான் எங்கு கேட்டாலும் உரக்க கத்திச் சொல்வேன்.. அந்த அளவு மார்க்கத்தை எளிமையாக, தெள்ளத் தெளிவாக நமக்கு விளக்கு உள்ளார்... இதை மனசாட்சி உள்ள யாரும் மறுக்க முடியாது... என்னைப் பொறுத்த வரை தமிழகத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர் இவரே... ஏன் இந்தியாவிலே சிறந்தவர் என்று கூடச் சொல்வேன்..... என்னென்னவோ சொல்லத் தோன்றுகிறது சகோ.. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருக்கிறது...
எங்கள் இறைவா!!! நாங்கள் எதர்க்கும் சக்தி அற்ற அர்ப்பர்களாய் இருக்கிறோம்... நீயே சர்வ வல்லமய் படைத்தவனாய் இருக்கிறாய்.. நீ நாடியது மட்டுமே நடக்கக் கூடியதாக இருக்கிறது... நீ நடத்துபவற்றை பார்க்க மட்டுமே எங்களுக்கு முடியும்..அதை தடுக்கும் சக்தியற்றவர்களாக நாங்கள் இருக்கிறோம் என்பதை நீ அறியாதவன் அல்ல...
எங்கள் இறைவா!!! நாங்கள் தவறு செய்யக்கூடிய பலகீனர்களாகவே இருக்கிறோம்.. எங்கள் தவறுகளை மன்னித்து நீ எங்களுக்கு நேர்வழி காட்டாவிட்டால் நிச்சயம் நாங்கள் நரகப் படுகுழியில் விழுபவர்களாகவே ஆவோம்... ஆகவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக...
எங்கள் இறைவா!!!! எனது அருமை அண்ணன் பீஜே அவர்களுக்கு நோயிலிருந்து நிவாரணம் அளிப்பாயாக.. நோயின் வேதனையை அவருக்கு இல்லாமல் செய்வாயாக.. அவருக்கு நீண்ட ஆயுலைக் கொடுத்து தமிழக மக்கள் அனைவருக்கும் இன்னும் அதிகம் அதிகம் சேவை செய்ய அருள் புரிவாயாக...
”இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்” நிகழ்ச்சியை பார்த்து விட்டு ஒரு இந்து பெரியவர் (நண்பர்), வீட்டுக்கு வெளியே நின்று அது பற்றி விமர்சித்து பேசிக்கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்களிடம் “எவ்வளவு அருமையாக விளக்குகிறார், அவர் கூறுவதில் என்ன தவறு?, ஏன் உங்களது ஆட்கள் அவரை இவ்வளவு தூரம் விமர்சிக்கிறீர்கள்?, இறைவனையும், நபியையும்தானே அவர் முன்னிலை படுத்தி பேசுகிறார், அதில் என்ன குற்றம் இருக்க முடியும்?” என்று அவர்களை பார்த்து கேள்வி கேட்டார். இவ்வாறாக, எவ்வித பேதமுமின்றி அனைத்து தரப்பினரையும் அவர் உரையின் மூலம் கவர்ந்திருக்கிறார் என்பது மிகையில்லை.
அவரின் நோயை குணப்படுத்தி அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் இறைவன் நல் வாழ்வை அளிப்பானாக.
அஸ்ஸலாமு அலைக்கும்
ஆம் சகோதரா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வரியையும் இன்று தூய இஸ்லாத்தை விளங்கி இருக்கும் அனைத்து சகோதரர்களும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் .அதிலும் நம் ஊர் சம்மந்த பட்ட விஷயம் ,அதை அருகில் இருந்து பார்த்த என்னை போன்றவர்களுக்கு இந்த கட்டுரையை படிக்கும் போது பிஜே என்ற அந்த தனிமனிதனை எண்ணும் போது ஒரு மரியாதை வரத்தான் செய்கிறது
இந்த நேரத்தில் இன்னொன்றும் ஞாபகம் வருகிறது சில வருடங்களுக்கு முன் சகோ பிஜே அவர்களுக்கு சிறிய ஸ்ட்ரோக் வந்து மருத்துவர் ஒய்வு எடுக்க சொல்லி இருந்த நேரம் .அப்போது நம் அதிராம்பட்டினத்தில் ஒரு பொதுக்கூட்டம் ,அந்த நேரத்தில் பிஜே அவ்லியாக்களை திட்டியதால் வாய் இழுத்து விட்டது என்று பித்னா பரப்பினார்கள் .அப்போது பொதுக்கூட்டத்தில் பேசும் முன் ஒரு ஊசி போட்டால் 2 மணிநேரம் தாக்குபிடிக்கும் அதன்பின் சோர்ந்து விடுவார் எனது தம்பி எங்கள் வீட்டில் வைத்து தான் ஊசி போட்டுவிட்டான் .அந்த சூழ்நிலையில் அவர் சொன்னார் பேசமுடியாமல் என் வாயே இழுத்து விட்டாலும் எழுதுவேன் என்னால் ஆன அனைத்து முறையிலும் மார்க்கத்தை கொண்டு போய் சேர்ப்பேன் என்று சொன்னார் அந்த மனோதைரியத்தை அன்று அருகில் இருந்து வியந்தேன் .இன்று இப்படி ஒரு நோய் வந்து இருந்தும் எனக்காக துவா மட்டும் செய்யுங்கள் என்று சொல்லும் அதே மனோ தைரியம் எத்தனையோ நோயாளிகளுக்கு பணம் வசூலித்து கொடுத்த
தலைமையகம் இன்று அதன் அமைப்பாளருக்கு பணம் கொடுக்க முடியாத நிலையில் வைத்து இருக்கும் அவருடைய மனோவலிமை இறைவன் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கையை பறைசாற்றுகிறது
இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் முஹம்மது ஆஷிக்,
சிராஜ் பாய் சொன்னது போல இந்த பதிவை படிக்கும் போதே கண்களில் நீர் வழிகின்றது. அத்தகைய பாதிப்பை தான் பிஜே அண்ணன் நம்மிடையே ஏற்படுத்தியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.
நிறைய எழுத வேண்டும் என்று தோன்றுகின்றது. ஆனால் பதிவின் பாதிப்பால் தொடர முடியவில்லை.
யா அல்லாஹ் இந்த அற்புத மனிதருக்கு நீண்ட ஆயுளை அளிப்பாயாக...ஆமீன்.
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
பி.ஜே என்கிற ஆளுமை தமிழக முஸ்லிம்களின் வரலாற்றில் இப்போதும் இனியும் புறக்கணிக்க முடியாத ஒரு ஆளுமை
சொல்வதை அப்படியே ஏற்காதே ஆதாரம் கேள் என்பதை அல்லாஹ்வின் அருளால் கற்றுக் கொடுத்தவர் துஆ செய்வோம் அவருக்காக
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )
//'குர்ஆன் ஹதீஸ் மட்டுமே தனது வாழ்வியல் மார்க்கம், என்று யாரெல்லாம் எனது தலைமுறையில் வாழ தலைப்பட்டனரோ, அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்வினுள்ளும் மார்க்க ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மவுலவி சகோ.பீஜே' என்று கூறினால் அது மிகை அல்லதான்..!//
இது 100 க்கு 100 சதம் உண்மையான விஷயம் . அல்ஹம்துலில்லாஹ் . மிகத்தெளிவாக சுருக்கமாக , அழகிய உதாரணங்களுடன் , நகைச்சுவையாக
ஒரு புன் சிரிப்புடன் ஒரு சிறு பிள்ளைக்கு விளக்குவதுப்போல சொல்ல அவரை விட்டால் யாருமில்லை என்றே சொல்லனும் .
யா அல்லாஹ்..! நீ கொடுப்பதை தடுப்பவர் எவருமில்லை , நீ தடுத்ததை கொடுப்பவர் எவருமில்லை . அவருக்கு நோய் நொடிகளற்ற நீண்ட ஹயாத்தை கொடுப்பாயாக ..!! ஆமீன் .
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
சகோதரர் பி.ஜே அவர்களுக்கு ஏற்பட்ட நோயை அல்லாஹ் குணப்படுத்த பிரார்த்திக்கும் சகோதரன்
சிராஜ் ஏர்வாடி
சலாம்
சகோ.பி.ஜே அவர்கள் தொடக்க கல்வியை கூட தாண்ட வில்லை என்று நினைக்கிறேன்...அனால் அவரது அறிவு, மருத்துவம் படித்த முதல் மாணவருக்கு கூட இருப்பது கடினமே..எந்த கேள்வியை கேட்டாலும் பதில் சொல்லுகிற திறமை விஞ்ஞானிகளுக்கு கூட இருக்காது....நிச்சயமாக இந்த மாமேதை உருவாக காரணம் இஸ்லாம் மட்டுமே...
"சிந்திக்க மாட்டீர்களா.. ? !!!" என இறைவன் கூருவது இறை எதிர்பாளர்களுக்கு நக்கலாக தெரிகிறது...(பல பின்னூட்டங்களில் இதை காண முடியும் ) ...அல் குர் ஆன் கூற்று படி சிந்தித்த மனிதருக்கு நல்ல ஒரு உதாரணம் பி.ஜே அவர்களே.... ஒவ்வொரு கால கட்டத்திலும் இஸ்லாத்தை அதன் தூய வழியில் எடுத்துரைக்க அல்லாஹ் ஒவ்வொரு மனிதரை அனுப்புவான்... பி.ஜே க்கு பின்பும் பல நல்லடியார்கள் வருவார்கள்....ஆனால் பி.ஜே அல்லாத பயான் எப்படி இருக்கும் என்று நினைக்க முடியவில்லை ...இன்று பெரும்பாலான தமிழ் தாயிக்கள் பேசுவதில் இவருடைய தாக்கத்தை அறியலாம்...இதில் வேடிக்கை என்ன வென்றால் TNTJ விலிருந்து நீக்க பட்டவர்கள் பி.ஜே யை எதிர்த்து பேசுவார்கள் ...பி.ஜே அவர்களின் தாக்கத்திலே தான் பேசுவார்கள்...அவர்களின் பேச்சு பி.ஜே போலவே தான் இருக்கும்....அந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியவர்...சகோதரர் பி.ஜெயினுல் ஆபிதீன் அவர்கள்
பி.ஜே யை போன்ற அழைப்பாளர்களை இறைவன் அனுப்பாமல் இருந்திருந்தால் இஸ்லாம் தமிழகத்தில் இவ்வளவு வீரியமாகவும் விவேகமாகவும் இருந்திருக்குமா என்று தெரியாது.. நம்மில் எத்தனை பேர் ஐவேளை தொழுகை தொழுதிருப்போம்...அப்படியே தொழுதாலும் எத்தனை பேர் தூய இஸ்லாத்தை அறிய முற்பட்டிருப்போம்...? பி.ஜே அவர்களும் அவர்களை போன்றோரும் கொளுத்தி வைத்த தீப்பந்தமே தவிர வேறு எதையும் காண முடியவில்லை...
நிச்சயமாக தமிழக இஸ்லாமிய வரலாறிலே "பி.ஜெயினுல் ஆபிதீன் ஒரு மாபெரும் புரட்சியாளரே "
நிச்சயமாக பி.ஜே வுக்கு ஆங்கில அறிவு இருந்திருந்தால் உலக அளவில் ஒரு குறிப்பிடத்தக்க மார்க்க மேதையாக உருவெடுத்திருப்பார்....பி.ஜே ஆங்கில அறிவு பெறாதது, ஆங்கிலம் மட்டுமே அறிந்த மக்களுக்கு துரதிஸ்டமே !!!
இன்று பி.ஜே வுக்காக பிரார்த்தனை செய்யும் பலபேர் நிச்சயமாக முன்பு பி.ஜே யை தவறாக நினைத்தவர்களே...(அதில் நானும் ஒருவன்...)..இன்ஷா அல்லாஹ் இன்று தவறாக பேசும் பல பேர் நாளை சிந்திப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் சகோ.பி.ஜே அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...
நன்றியுடன்
நாகூர் மீரான்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இன்று மார்க்கம் குறித்து நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ ஒருவர் கருத்து கொண்டிருந்தால் அதன் பிண்னணியில் எங்காவது ஓரிடத்தில் சகோதரர் பீ.ஜெயின் தாக்கம் நிச்சயமாக இருக்கும் .இந்த தலைமுறையில் சகோதரர் பீ.ஜெ சிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவர் என்றால் மிகையாகாது. அவரது கருத்துக்கள் சிலவற்றில் எனக்கு சில மாற்று சிந்தனை இருந்தாலும், உண்மையாக அவரது உடல் நல குறைவு என் மனதிற்கு பாதிப்பை தான் ஏற்படுத்துகிறது.
அல்லாஹ் அவருக்கு இம்மையிலும், மறுமையிலும் நன்மையை ஏற்படுத்துவானாக!
கனமான பதிவு! எனது தவ்ஹூது சிந்தனையின் ஆரம்ப கால சூழ்நிலையை அப்படியே கண்ணுக்கு கொண்டு வருகிறது சிட்டிசன்
பகிர்ந்தமைக்கு ஜஸாகல்லாஹ் கைரா
நன்றி!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோ.
இந்த பதிவை காலையில் படித்து என்னால் கருத்திடமுடியவில்லை கண்ணீர்னால் கீபோர்ட் தெரியவில்லை, இப்பவும் இதே நிலை தொடருகிறது, நேற்று செய்தியை கேட்டதில்லிருந்து என் குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்பட்டதை போன்றே உணர்க்கிறேன். தனி ஒரு மனிதனாக இருந்து ஏகத்துவத்தை சொல்லி இன்று அவருக்காக இன்று இத்தனை மக்கள் தூஆ செய்கிறார் என்றால் அவரின் தக்காம் எந்தளவிற்கு நாம் மனதில் ஊடுறுவிற்கிறது. என்னால் தொடந்து கருத்திடமுடியவில்லை, பி.ஜே. அவர்கள் அந்த நோயில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று அல்லாஹ்விடம் தூஆ செய்தவனாக (ஆமீன்).
வஸ்ஸலாம்
ஸலாம் ...
நேற்றிலிருந்து ஒரே கவலை ... இந்நேரத்தில் என் தந்தைக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்யுங்கள் ... அவருக்கும் அதே நோய் தான் ...
அஸ்ஸலாஹ் ஒவ்வொரு நூற்றாண்டுகளிலும் ஒரு முஜத்திதுகளை (இஸ்லாத்தை புதுப்பிப்பவர்) அனுப்புகிறான். இந்த நூற்றாண்டின் அந்த அறிஞர் இவர் என்று சொன்னால் மிகையாகாது. அல்லாஹ் அவரின் குற்றங்களை மன்னித்து பூரண குணம் அடைந்து மீண்டும் தனது மார்க்க பணியை தொடங்க அல்லாஹ் அருள்புரிவானாக. யாஅல்லாஹ் லா ஷிஃபாவுக்க இல்லா அன்த்.
கடந்த 27 வருடங்களாக அவரின் இந்த அயராத மார்க்க உழைப்புக்கு உரிய நற்கூலியை வல்ல அல்லாஹ் அவருக்கு ஈருலகிலும் வழங்கி அவரை மகிழ்விக்கவும், அவரின் அளப்பரிய தொண்டுகள் மேலும் பலருக்கு சென்றடைந்து இன்னும் எண்ணற்றோர் பயன்பெறவும், அவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நோயை அடியோடு முற்றிலுமாக நீக்கி அருளி, இன்னும் பல்லாண்டுகள் அவருக்கு நல்வாழ்வினை தந்து, மார்க்க பிரச்சார அழைப்பு பணியில் இன்னும் சிறப்பாக ஈடுபட அவருக்கு உடலளவிலும் & மன அளவிலும் பெரும் ஆரோக்கியமும் ஊக்கமும் தந்தருளவும்... அவரின் பாவங்களை மன்னிக்கவும், இருகரம் ஏந்தி வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். யா அல்லாஹ், எனது துவாவை ஏற்றுக்கொள்வாயாக..! ஆமீன்.
சகோதரர் பீஜே அவர்கள் அவர் பற்றிய புகழ்ச்சியை அவரது மேடைகளிலும் இதழ்களிலும் விரும்பாத தமிழகம் கண்டிராத மனிதர் ,
நபிவழி மற்றிலுமே மார்க்கம் என்று பறைசாற்றிய அவருக்கு அந்நபி வழியிலே அடிகளும் உதைகளும் வெட்டு குத்துகளும் கிடைத்ததை தாங்கிக் கொண்டு கொள்கையில் உறுதி தளராது ,பணத்திற்கும் புகழுக்கும் மயங்காத மாமனிதர் .
இஸ்லாத்தை சொன்னதற்காக இஸ்லாமியர்களாலே கொலை முயற்சிக்கு ஆளானவர் .இஸ்லாமியர்களாலே வெட்டு பட்டவர் இந்தியாவில் அவர் மட்டுமே இருக்க வேண்டும்.
துபையில் மார்க்கம் சொல்லாமல் தடுக்கப்பட்டார்.இலங்கையில் தடுக்கப்பட்டார்.மலேசியாவில் அவரை கைது சிறையில் அடைத்து கொடுமை படுத்த முயற்சி செய்தார்கள்
அவரை ஜெயலலிதாவுடன் டூயட் பாடுவது போன்று படங்கள் சிறை உடையில் படங்கள் முதல் இணையதளங்களில் ஆயிரக்கணக்கான அவதூறுகள்.
அவரிடம் நல்லவராக நடித்து காசுகள் சம்பாதித்த பிறகு அவரை குழி தோண்டி புதைக்க நினைத்தவர்கள் ஏராளம்.
இறையருளால் தமிழகத்தில் இஸ்லாமிய வரலாற்றை புரட்டி .போட்டவர் .இடஒதுக்கீடு சிந்தனைகளை தூண்டி போராடி வெற்றி கண்டவர் .
இறையருளால் நலம் பெற இறைஞ்சுவோம்
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள் பதிவை உள்வாங்கியதால் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், என்னால் நான் நினைப்பதை எழுத இயலவில்லை.
//எத்தனையோ நோயாளிகளுக்கு பணம் வசூலித்து கொடுத்த
தலைமையகம் இன்று அதன் அமைப்பாளருக்கு பணம் கொடுக்க முடியாத நிலையில் வைத்து இருக்கும் அவருடைய மனோவலிமை இறைவன் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கையை பறைசாற்றுகிறது//
பின்னூட்டத்தில் ஜாகிர் உசேன் என்பவர் எழுதியிருந்த இந்த வரியை வாசித்தவுடன் உடைந்து அழ ஆரம்பித்து விட்டேன்.
அல்லாஹ் அவருடைய பிணியை நீக்கி இன்னும் அதிகமதிகம் மக்களுக்கு அவர் இஸ்லாத்தை கொண்டு செல்லவும் முஸ்லிம்களின் அறிவை விசாலமாக்கவும் பேரருள் புரிய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
சகோ.பிஜே அவர்கள் பூரண குணமடையவும். புத்துணர்வுடன் அனைத்து சகோதர அமைப்புகளையும் ஒருங்கிணைத்து இளைய தலைமுறைக்கு நல்ல தலைமையை அடையாளம் காட்டவும் மனமார துஆச் செய்வோம்.
இன்னும் பல்லாண்டுகள் அவருக்கு நல்வாழ்வினை தந்து, மார்க்க பிரச்சார அழைப்பு பணியில் இன்னும் சிறப்பாக ஈடுபட அவருக்கு உடலளவிலும் & மன அளவிலும் பெரும் ஆரோக்கியமும் ஊக்கமும் தந்தருளவும்... அவரின் பாவங்களை மன்னிக்கவும், இருகரம் ஏந்தி வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். யா அல்லாஹ், எனது துவாவை ஏற்றுக்கொள்வாயாக..! ஆமீன்.
பி ஜே......1990 ஆண்டுகளில் இவருடைய பெயரை கேட்டால்,தாக்குவதற்கு தலைமை ஏற்று, அல்லாஹ்விற்கு இணை வைக்கும் ஈன செயலில் ஈடுபட்டு உச்ச கட்டத்தில் இருந்த காலத்தில்,திருமறை தமிழாக்கம் இப்ராஹீம் (அலை)நபியின் தியாகங்கள் படிக்கும்போது, பி ஜே அவர்களின் சத்திய முழக்கம் நெஞ்சை பிளக்கிறது.விம்மி விம்மி அழுது கண்கள் குளமாகிறது. குற்றமிழைத்த மனம்.அல்லாஹ் எம்மை போன்றவர்களை நரகின் விளிம்பிலுருந்து காப்பாற்றி விட்டான்.சகோதரர் பி ஜே......,அல்லாஹ் வழங்கிய தூய இஸ்லாத்தை,இறுதி தூதர்,தன்னிகரில்லாத தலைவர், உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் வாழ்க்கை வழி முறையை, குழந்தைக்கு எடுத்து சொல்வதை போன்று மிக தெளிவாக எடுத்துரைத்தவர்.ஏகத்துவத்துக்கு எதிராக நாங்கள் தாக்குதல் தொடுத்த போதெல்லாம் தன் உயிரை பொருட்படுத்தாமல்,நிலைகுலையாமல் சத்தியத்தை மக்களுக்கு எடுத்து சொன்னவர் என்பதை கடந்த காலங்களில் நாங்கள் கண்ட உண்மை.யா! அல்லாஹ் சகோதரர் அவர்களுடைய நோயை குணபடுத்தி அருள் புரிவாயாக.நெஞ்சம் கனக்கிறது.கண்கள் குளமாகிறது...நாமும் மனிதர்கள் தானே....
சலாம் சகோ!
தற்காலத்தில் இது நிறைய பேருக்கு வந்துக் கொண்டிருக்கும் நோய் என்றாலும் குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்பட்டதைப் போன்று அனைவருக்குமே பெரிய அதிர்ச்சியாக உள்ளது :(( இதுவரை இங்கு வந்த டெலிஃபோன் கால் எதிலுமே இந்த செய்தியைப்பற்றி பேசிய யாருமே அழாமல் இல்லை :'( நம்முடைய கவலைகள், கண்ணீர்கள் அத்தனையையும் அல்லாஹ்தஆலா நிச்சயம் இரக்கக் கண்ணோடு பார்ப்பான், இன்ஷா அல்லாஹ்! இது அவருக்கும் அவரை அநாவசியமாக திட்டித்தீர்த்து, இல்லாத குற்றங்களை சுமத்திக் கொண்டிருப்பவர்களுக்கும் இடையில் ஒரு சிறிய சோதனையாக இருக்கலாம். இந்த சோதனையில் அல்லாஹ்தஆலா அவருக்கு வெற்றியைத் தந்து, பூரண சுகத்தையும், நீடித்த ஆயுளையும் தந்தருள்வானாக! அவர் மூலமாக தெளிவான இஸ்லாத்தைக் கற்ற நாம் இந்த செய்திகேட்டு கட்டுப்படுத்த முடியாத கண்ணீரோடு இறைவனிடம் கையேந்திக் கொண்டிருக்கிறோம் :((
தமிழ் மக்களை தவ்ஹீதின் பக்கம் அழைக்க அவர் தன் வாழ்வின் பெரும்பகுதியை இஸ்லாத்திற்காக செலவழித்ததை யாராலும் மறுக்க இயலாது! தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்க அறிஞராக இருந்தும், குர்ஆன்/ஹதீஸ் அடிப்படையில் தவறென்று அவர் கவனிக்கத் தவறியதை அவரிடமே நாம் சுட்டிக்காட்டினால், அதைத் தயங்காமல், ஈகோ இல்லாமல் உடனே ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை மற்றவர்களும் கற்றுக்கொள்ளவேண்டும்! அவருடைய அமல்களை அல்லாஹ்தஆலா பொருந்திக்கொண்டு, அவர் அறிந்தோ அறியாமல் செய்த தவறுகளை மன்னித்து, அவனுடைய மாபெரும் அருளைக் கொண்டு இந்த நோயை அடியோடு நீக்கி, மென்மேலும் மார்க்கப் பணியாற்ற அல்லாஹ் கிருபை செய்வானாக!
யா அல்லாஹ்.. எங்கள் ரஹ்மானே! உன்னுடைய இஸ்லாம் மார்க்கத்தினை எங்களுக்கு அழகிய முறையில் அயராமல் விளக்கி எங்களுக்கு மார்க்க அறிவினை வழங்கிய எங்களின் ஆசானாகிய, அந்த அன்புச் சகோதரருக்கு இந்த ஆபத்தான நோயை, நோவினை இல்லாத வகையிலும் செலவு குறைந்த வகையிலும் விரைவில் நீக்கிவைத்து, மேலும் பல்லாண்டுகள் மார்க்கப் பணியினை நலமுடன் தொடர கிருபை செய்வாயாக!
அவரின் இந்த அயராத மார்க்க உழைப்புக்கு உரிய நற்கூலியை வல்ல அல்லாஹ் அவருக்கு ஈருலகிலும் வழங்கி அவரை மகிழ்விக்கவும், அவரின் அளப்பரிய தொண்டுகள் மேலும் பலருக்கு சென்றடைந்து இன்னும் எண்ணற்றோர் பயன்பெறவும், அவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நோயை அடியோடு முற்றிலுமாக நீக்கி அருளி, இன்னும் பல்லாண்டுகள் அவருக்கு நல்வாழ்வினை தந்து, மார்க்க பிரச்சார அழைப்பு பணியில் இன்னும் சிறப்பாக ஈடுபட அவருக்கு உடலளவிலும் & மன அளவிலும் பெரும் ஆரோக்கியமும் ஊக்கமும் தந்தருளவும்... அவரின் பாவங்களை மன்னிக்கவும், இருகரம் ஏந்தி வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். யா அல்லாஹ், எனது துவாவை ஏற்றுக்கொள்வாயாக..! ஆமீன்.
நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!
என் குடும்பத்தில் ஒருவருக்கு இந்த நோய் ஏற்பட்டால் கூட இந்த அளவு நான் வருந்தியிருப்பேனா என்பது சந்தேகமே! அதிகம் உணர்ச்சி வசப்படாத எனக்கே இந்த பின்னூட்டம் எழுதும் போது என்னையறியாமல் கண்ணீர் வழிந்து கொண்டே உள்ளது. அண்ணனின் உடல் நிலை சரியாக உங்கள் அனைவரோடு சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
வல்ல அல்லாஹ்வின் அருளால் அன்புச் சகோதரர் பி.ஜே அவர்களின் பேச்சுக்களை அதிகமதிகம் கேட்கக் கூடிய வாய்ப்புகள் கிடைத்து, குர்ஆன் மற்றும் ஹதீஸ் மட்டும்தான் மார்க்கம் என்பதை அறிந்து தெளிந்து அதன்படி நடக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்!
பிற மத மக்களுக்கு இஸ்லாத்தை விளங்க வைப்பதிலும், இஸ்லாமியர்களுக்கு 'மார்க்கத்தை' ''குர்ஆன், ஹதீஸ்'' ஒளியில் எளிமையாக விளக்கும் ஆற்றலையும் சகோதரருக்கு வல்ல அல்லாஹ் வழங்கியிருக்கிறான்.
''நான் சொல்கிறேன் என்று மார்க்கத்தை அப்படியே பின்பற்றாமல், நீங்களும் கற்று ஆய்வு செய்து விளங்கி பின்பற்றுங்கள் என்று நிறைய பயான்களில் கூறியவர்.''
அவருக்கு நோயை தந்தவனும் அதை நீக்கி சுகத்தை அளிப்பவனும் வல்ல அல்லாஹ்வே! வல்ல அல்லாஹ் சகோதரருக்கு வந்த நோயை நீக்கி பூரண குணமாக்கி அவர் மீண்டும் மார்க்கத்தை எத்தி வைக்கும் பணியில் வீரியமுடன் செயல்பட வேண்டும் என்று மனிதர்களின் ரப்பான வல்ல அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன்.
சகோ.பி ஜே எல்லாம் வல்ல அல்லாஹுவின் அருளால் நலமடைந்து மீண்டும் மார்க்கபணியில் ஈடுபட துவா செய்கிறேன்.
@அஜீம்பாஷாஆமீன். வருகைக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.
@அலாவுதீன்.S.அலைக்கும் சலாம் வரஹ்... ஆமீன். வருகைக்கும் கருத்துக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.
@சுவனப் பிரியன்அவ்வாறே நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக! ஆமீன். வருகைக்கும் கருத்துக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி சகோ.
@niduraliஆமீன். வருகைக்கும் கருத்துக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.
@அஸ்மாஅலைக்கும் சலாம் வரஹ்... ஆமீன். வருகைக்கும் கருத்துக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.
@Abba Ishaqஆமீன். வருகைக்கும் கருத்துக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.
@யாதும் ஊரே., யாவரும் கேளீர்.ஆமீன். வருகைக்கும் கருத்துக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.
// 'கேளிர்' //---என்பதே சரி சகோ.
@அதிரைக்காரன்ஆமீன். வருகைக்கும் கருத்துக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.
@உதயம்அலைக்கும் சலாம் வரஹ்... ஆமீன். வருகைக்கும் கருத்துக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.
//பின்னூட்டத்தில் ஜாகிர் உசேன் என்பவர் எழுதியிருந்த இந்த வரியை வாசித்தவுடன் உடைந்து அழ ஆரம்பித்து விட்டேன்.//---எனக்கும் அதே ஃபீலிங்க்ஸ் தான். இதுபற்றி சகோ.பீஜே ஏதும் கூற வேண்டாம் என்று கூறியதால் அது பற்றி நான் ஏதும் கூறவில்லை சகோ.உதயம்.
எனினும்...
//தமிழ்கூறும் நல்லுலகிற்கு, அவர் ஓர் இஸ்லாமிய சொத்து.//---என்று நான் அவரை அவரின் ஞானத்துக்காகவும் உழைப்புக்காகவும் பொதுப்படுத்தி இருக்கிறேன். அதில் ஆழ்ந்த உட்புரிதல் உள்ளது.
@Ibrahim Sheikmohamedஆமீன். வருகைக்கும் நல்ல பல பல மீள் நினைவூட்டல் கருத்துக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.
@shahul hameedஆமீன். வருகைக்கும் கருத்துக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.
@Noor Ameenஆமீன். வருகைக்கும் கருத்துக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.
@Nizamஅலைக்கும் சலாம் வரஹ்... ஆமீன். வருகைக்கும் கருத்துக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.
@G u l a mஅலைக்கும் சலாம் வரஹ்... ஆமீன். வருகைக்கும் கருத்துக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.
@நாகூர் மீரான்//நிச்சயமாக தமிழக இஸ்லாமிய வரலாறிலே "பி.ஜெயினுல் ஆபிதீன் ஒரு மாபெரும் புரட்சியாளரே "//
அலைக்கும் சலாம் வரஹ்... ஆமீன். வருகைக்கும் கருத்துக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.
@eruvadiஅலைக்கும் சலாம் வரஹ்... ஆமீன். வருகைக்கும் துவாவுக்கும் நன்றி சகோதரர் ஏர்வாடி சிராஜ்.
@ஜெய்லானிஅலைக்கும் சலாம் வரஹ்... ஆமீன். வருகைக்கும் கருத்துக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.
@ஹைதர் அலிஅலைக்கும் சலாம் வரஹ்...
பி.ஜே என்கிற ஆளுமை தமிழக முஸ்லிம்களின் வரலாற்றில் இப்போதும் இனியும் புறக்கணிக்க முடியாத ஒரு ஆளுமை
ஆமீன். வருகைக்கும் கருத்துக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.
@Aashiq Ahamedஅலைக்கும் சலாம் வரஹ்... ஆமீன். வருகைக்கும் கருத்துக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.
@ஜாகிர்உசேன்அலைக்கும் சலாம் வரஹ்...
//அந்த சூழ்நிலையில் அவர் சொன்னார் பேசமுடியாமல் என் வாயே இழுத்து விட்டாலும் எழுதுவேன் என்னால் ஆன அனைத்து முறையிலும் மார்க்கத்தை கொண்டு போய் சேர்ப்பேன் என்று சொன்னார்//---மாஷாஅல்லாஹ், தபாரக்கல்லாஹ்.
//எத்தனையோ நோயாளிகளுக்கு பணம் வசூலித்து கொடுத்த
தலைமையகம் இன்று அதன் அமைப்பாளருக்கு பணம் கொடுக்க முடியாத நிலையில் வைத்து இருக்கும் அவருடைய மனோவலிமை இறைவன் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கையை பறைசாற்றுகிறது//---தமிழ்கூறும் நல்லுலகிற்கு, அவர் ஓர் இஸ்லாமிய சொத்து. அவரின் நலனில் சகலருக்கும் பங்குண்டு என்றே நினைக்கிறேன்.
ஆமீன். வருகைக்கும் கருத்துக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.
@Syed Ibramshaஆமீன். வருகைக்கும் கருத்துக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.
@சிராஜ்அலைக்கும் சலாம் வரஹ்... //நீங்கள் சொன்ன சம்பவங்கள் அனைத்தும் ஏகத்துவவாதிகள் (வஹாபிகள்) அனைவர் வாழ்விலும் நடந்து இருக்கும்.//---உண்மைதான் சகோ.
ஆமீன். வருகைக்கும் கருத்துக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.
@பரங்கிப்பேட்டை TNTJஅலைக்கும் சலாம் வரஹ்... ஆமீன். வருகைக்கும் கருத்துக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.
@தாஜுதீன்அலைக்கும் சலாம் வரஹ்... ஆமீன். வருகைக்கும் கருத்துக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.
@மை தீன்அலைக்கும் சலாம் வரஹ்... ஆமீன். வருகைக்கும் கருத்துக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.
//இந்நேரத்தில் என் தந்தைக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்யுங்கள் ... அவருக்கும் அதே நோய் தான் ...//
""اَللّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ اِشْفِهِ وَأَنْتَ الشَّافِيْ لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
அல்லாஹும்ம ரப்ப(B]ன்னாஸி அத்ஹிபில் ப(B]ஃஸ இஷ்பி[F]ஹி வஅன்தஷ் ஷாபீ[F] லாஷிபா[F]அ இல்லா ஷிபா[F]வு(க்)க ஷிபா[F]அன் லா யுகாதிரு ஸகமா.
இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து!
@நாகூர் மீரான்அலைக்கும் சலாம் வரஹ்... //பதிவுலகில் மு.மாலிக்//---ஒருவரின் கருத்துக்களுக்கு எதிர்கருத்து வைக்க முடியாதவர்கள் எதிரிகளாக மாறி, எதிராளியின் அழிவை விரும்புகிறார்கள். அப்போது அவர்கள் தோற்கிறார்கள். அப்படியான இவரின் எழுத்துக்கள் அநாகரிகமானவை. ஆகவே, இவரை ஒரு பொருட்டாக மதிக்க வேண்டிய அவசியமில்லை.
@NKS.ஹாஜா மைதீன்வருகைக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.
@அன்னுஜசாக்கல்லாஹு க்ஹைரன் சகோ.
ஆமீன். வருகைக்கும் கருத்துக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.
சகோ, பீ ஜே அவர்கள் உடல் நலம்பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவர் தலைமையில் நாத்தீகர்களுடன் நடந்த விவாதத்தை பதிவாக ஏன் வெளிடக்கூடாது? அந்த வீடியோக்கள் நூற்றுக் கணக்கில் இருப்பதால் பலர் பார்ப்பதில்லை, நீங்கள் ஏன் கருத்தைச் சுருக்கி சில பதிவுகளாக வெளியிடக் கூடாது?
சகோதரரே சலாம் சிறப்பான பதிவு "நான் சொல்கிறேன் என்பதால் அப்படியே நம்பி பின்பற்றாமல், நீங்களும் கற்று ஆய்வு செய்து சரிபார்த்து விட்டு விளங்கி பின்பற்றுங்கள்" இப்படி சொல்பவருக்கு ரொம்ப பெரிய மனது வேனும்.இப்படி சொன்ன பிறகும் கூட சிலர் கண் மூடிதனமா பின்பற்றுகிறாக்கள் தான்.கற்கவும் ஆய்வு செய்யவும் சோம்பேறி தனம் தான் காரணமோ
போங்கண்ணா என்ன உருக்கம் காட்டினாலும் அவர் மாறவே மாட்டார். இன்னுமா?
இந்த கட்டுரையையும் ஒருசில சகோதரர்களுடைய பின்னூட்டங்களையும் படித்தவுடன் கண்களில் கண்ணீர் பீறிடுகிறது உள்ளம் அவருக்காக ஏகனிடம் பிரார்த்திக்கிறது சொல்வதற்கு வார்த்தைகள் ஒன்றும் இல்லை.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!