H.L. Dattu --- உச்ச நீதிமன்ற நீதிபதிகள் --- C.K. Prasad |
"சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக எந்த ஓர் அப்பாவி நபரையும் பிடித்து பயங்கரவாதி / தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் அடைக்காதீர்" என்று நேற்று உச்ச நீதிமன்றம் தனது வரலாற்று சிறப்பு மிக்க அதிரடி தீர்ப்பில் குஜராத் போலீஸ்க்கு ஓங்கி நச்சென மண்டையில் குட்டும் விதமாக, இந்த நெத்தியடி கருத்தினை கூறியது. குஜராத்துக்கு மட்டுமல்ல... இது அனைத்து மாநில அரசு , காவல்துறை மற்றும் ஊடகங்களுக்கும் சேர்த்தே பொருந்தும்..!
'எந்த ஓர் அப்பாவி முஸ்லிமும் "என் பெயர் கான், ஆனால், நான் ஒரு பயங்கரவாதி இல்லை," என்று சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தாத ஓர் உறுதியான சூழலை காவல்துறை உருவாக்க வேண்டும்' என்றும் நீதிபதிகள் H.L. Dattu மற்றும் C.K. Prasad அடங்கிய உச்சநீதி மன்ற பெஞ்ச் நேற்று தனது அதிரடி தீர்ப்பில் நெத்தியடியாக இப்படி கூடியது. அடி சக்கை..! அப்படி போடு..!
( No innocent person should be branded a terrorist and put behind bars simply because he belongs to a minority community, the Supreme Court has told the Gujarat Police. Police must ensure that no innocent person has the feeling of sufferance only because “my name is Khan, but I am not a terrorist,” a Bench of Justices H.L. Dattu and C.K. Prasad said on Wednesday. )
வழக்கில் இருந்த பொய்யான ஜோடிப்பு புனைவுக்கதைகளை கண்டு எத்தனை தூரம் நொந்து போயிருந்தால் இப்படியெல்லாம் கூறி இருந்திருப்பார்கள் அந்த நேர்மை மிகுந்த நீதிபதிகள்..!? சிந்திக்கவும் சகோஸ்..! அவர்களின் மனிதநேய வரிகளுக்கு வாழ்த்துகளுடன் நமது நன்றிகள் பல உரித்தாகுக..!
வேண்டுமென்றே பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி, 1994 இல் தடா சட்டத்தில் பிடித்த 11 முஸ்லிம்களை 'குற்றமற்ற நிரபராதிகள்' என்று கூறி விடுதலை செய்துவிட்டுத்தான், குஜராத் போலிசை அத்தீர்ப்பில் இப்படி ஒரு 'நெத்திஅடி' அடித்து உள்ளது உச்ச நீதி மன்றம்..! வாறே...வா...!
வேண்டுமென்றே பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி, 1994 இல் தடா சட்டத்தில் பிடித்த 11 முஸ்லிம்களை 'குற்றமற்ற நிரபராதிகள்' என்று கூறி விடுதலை செய்துவிட்டுத்தான், குஜராத் போலிசை அத்தீர்ப்பில் இப்படி ஒரு 'நெத்திஅடி' அடித்து உள்ளது உச்ச நீதி மன்றம்..! வாறே...வா...!
"1994-ஆம் ஆண்டு ஜூன் மாதம் குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் ஹிந்துக்கள் நடத்திய ஜஹன்னாத பூரி யாத்திரையின் போது மதக்கலவரத்தை நடத்த சதித்திட்டம் தீட்டினார்கள் இவர்கள்" என்று கூறி, அப்போதைய காங்கிரஸின் குஜராத் முதல்வர் - சபில்தாஸ் மேத்தா ஆட்சில், 11 அப்பாவி முஸ்லிம்கள் மீது 'தடா' சட்டத்தில் பொய்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அப்போது, தமிழ்நாட்டில் ஜெ. முதல்வராக இருந்தபோதும் இப்படியான அராஜகம் தமிழக முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டதை அறிவோம். பாபர் மஸ்ஜிதை ஹிந்துத்துவாக்கள் இடிக்கும்போது வேடிக்கை பார்த்த ஆர் எஸ் எஸ் தொடர்புடைய நரசிம்ம ராவ் ஆண்ட காலத்து காங்கிரசும், பாஜகவுக்கு சற்றும் சளைத்தது இல்லை என்பதையும் அறிவோம்.
பின்னர் வந்த பாஜகவின் நர்ர்ர்ர்ரேந்திர மோடியின் ஆட்சியில், 2002, ஜனவரி 31-ஆம் தேதி அஹ்மதாபாத் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு... (ஏற்கனவே எட்டு ஆண்டுகள் ஜாமீன் இல்லாத தடாவில் சிறையில் இருந்தவர்களுக்கு) ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.
எவ்வித ஆதாரமும் இன்றி தண்டனை பெற்றதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர், அந்த 11 அப்பாவி முஸ்லிம்கள்..! வழக்கில் தண்டிக்கப்பட்ட இவர்கள் சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், பயங்கரவாத மற்றும் சீர்கேட்டு நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் கைது, மற்றும் 1994 ஆம் ஆண்டு அகமதாபாத் ஜெகன்னாத் பூரி யாத்திரை போது வகுப்புவாத வன்முறை உருவாக்க திட்டம், ஆயுதங்கள் வைத்து இருந்தது, போன்ற அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் 11 முஸ்லிம்களையும் விடுவிக்க உச்ச நீதி மன்ற பெஞ்ச் நேற்று உத்தரவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் அத்தீர்ப்பில்....
சட்டத்தை அமல்படுத்த நியமிக்கப்பட்ட போலீஸ் சூப்பிரண்டும், ஐ.ஜி உள்ளிட்ட இதர அதிகாரிகளும் அதனை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. 'பிறந்த மதத்தின் பெயரால் கொடுமை இழைக்கப்படுகிறோம்' என்று எந்த ஒரு அப்பாவிக்கும் தோன்றக்கூடாது. இதனை சட்டத்தின் பாதுகாவலர்கள் உறுதிச்செய்ய வேண்டும். இதனை கூறுகையில்தான், ‘my name is Khan, but I am not a terrorist’ என்ற ஒரு திரைப்பட வசனத்தை சுட்டிக்காட்டினர், நீதிபதிகள்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு தண்டனையை இன்னும் அதிகப்படுத்த கோரும்... (அட... சண்டாளர்களா...) குஜராத் மாநில அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது, அத்தீர்பில்..!
எஃப்.ஐ.ஆர் சமர்ப்பிக்கும் முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அனுமதியை பெறவேண்டும் என்ற தடாச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள சட்டப் பிரிவை அரசு கடைப்பிடிக்கவில்லை என்று நீதிமன்றம் குற்றம் தெரிவித்தது.
'தடா சட்டத்தை சுமத்தும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகளை பேணாததால் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த தீர்ப்பு, காவல் துறையின் இதுபோன்ற தவறுகள், இப்படி 'மகாத்மா நாட்டில், தவறாக சட்டம் கையாளப்படுகிறது' என்று பிரச்சாரம் செய்ய நம் எதிரி நாடுகளுக்கும் ஒரு வாய்ப்பை அளிக்கிறது. இதன் மூலம் அவர்களால் இச்சட்டம் சிறுபான்மையோர் மீது துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, சட்டத்தை பிரயோகிக்கும் பொழுது தனி நபரின் சுதந்திரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்யவேண்டும்' என்றும் கூறியது.
தீவிரவாதத்தை தடுப்பதிலும், அதிகமான மக்கள் பலியாகக்கூடாது என்பதில் போலீசாரின் உறுதி பாராட்டத்தக்கதுதான். என்றாலும், இவ்வழக்கில் ஆயுதங்களும், வெடிப்பொருட்களையும் கண்டுபிடிக்க புலனாய்வு ஏஜன்சிகளால் இயலவில்லை. இவ்வாறு உச்சநீதிமன்றம் தனது சிறப்பான தீர்ப்பில் கூறியது.
என்னால் பொருளுணர்ந்தும் அதேபோல சிறப்பாக தமிழில் மொழி பெயர்க்க முடியாத அத்தீர்ப்பின் ஒரு சிறப்பான பகுதி இது : “We emphasise and deem it necessary to repeat that the gravity of the evil to the community from terrorism can never furnish an adequate reason for invading personal liberty, except in accordance with the procedure established by the Constitution and the law,” the Bench said. (சுவை கெடாமல் ஆங்கிலத்திலேயே படியுங்கள்)
நன்றி : உச்சநீதி மன்றம் |
இருப்பினும், ஒவ்வொரு முறையும் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் பல்லாண்டுகள் சொல்லொனாத்துயறுற்று, பின்னர் "குற்றம் யாதுமற்ற நிரபாராதிகள்" என்று உச்சநீதிமன்றாத்தால் அப்பாவிகள் விடுவிக்கப்படும் ஓவ்வொரு முறையும்... நமது மனதினில்... ரணமாகி இருக்கும் அதே பழைய கேள்விகள்... எவரும் எந்த நீதியும் கண்டுகொள்ளாத அரதப்பழைய அதே கேள்விகள்...
கடந்த 18 ஆண்டுகளாக, பொய் குற்றச்சாட்டுக்காக தங்கள் வாழ்வை சிறையிலும், நீதிமன்ற வளாகத்திலும், இவற்றுக்கு இடையே பூட்டப்பட்ட வாகனத்திலும் கழித்த இந்த அப்பாவிகள் இழந்த வாழ்க்கையினை எப்படி அவர்களிடம் திரும்பக்கொடுப்பது..? யார் கொடுப்பது..? எவ்வளவு இழப்பீடு..? எங்கே இழப்பீடு..? கோடி கோடி இழப்பீடு தந்தாலும்... அவர்களின் இளமையை மீண்டும் எப்படி மீட்டுத்தருவது..?
:-(
'Justice delayed is justice denied'
....என்று ஒரு ஆங்கில பழமொழி உள்ளது, தெரியுமா..?
-----------------------------------------------------------------------------------------------------------
நிறைய பேரால் ஏனோ முக்கியத்துவம் அளிக்கப்படாத இச்செய்தியை தந்தமைக்கு மிக்க நன்றி 'தி ஹிந்து' :-
முன்னணி தமிழ் செய்தி தளங்களால் வழக்கம்போல இருட்டடிப்பு செய்யப்படும் செய்திகளை, தொடர்ந்து தமிழில் தந்து கொண்டு இருக்கும் 'தூது'க்கும் மிக்க நன்றி.
27 ...பின்னூட்டங்கள்..:
சலாம் சகோ ஆஷிக்!
உண்மையிலேயே இது ஒரு நெத்தியடி தீர்ப்புதான். இனிமேலாவது இவர்களின் எண்ணங்களில் மாற்றம் வருகிறதா என்று பார்ப்போம்.
மாக நதி படத்தில் கதாநாயகன் ஜெயிலுக்கு போய் திரும்பி வருவதற்குள் அவரது குடும்பம் சீரழிந்து சின்னாபின்னமாகி இருப்பதை தத்ரூபமாக காட்சிபடுத்தி இருப்பார்கள் .
18 ஆண்டுகள் அந்த குடும்பங்கள் என்ன பாடுபட்டு சித்ரவதைகளுக்கு ஆளாகி இருக்கும் ?
இழந்த வாழ்க்கையை மீண்டும் கொடுக்க முடியுமா ?
இதெற்கெல்லாம் காரணமாக இருந்த காவல் துறை கயவர்களை அவர்களின் வேலையை பறித்து குறைந்த பட்சமாக
இரண்டு வருடங்களாவது சிறையில் தள்ளினால் தான் இனி அடுத்தவர்களை
பொய் வழக்கில் கைது செய்வதை ஓரளவாவது குறைக்க முடியும்
தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி
இதனால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் நிலை அந்தோ பரிதாபம்
அவசியமான அருமையான பதிவு
உயர் நீதி மன்றத்திற்கோ, உச்ச நீதி மன்றத்திற்கோ சென்றால்தான் நீதி கிடைக்கும் என்ற நிலை உள்ளவரை இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை பரிதாபகரம்தான்.
எல்லாம் வல்ல இறைவன்தான் பொய் வழக்கு போட்டு முஸ்லிம்களை அலைக்கழிக்கும் சண்டாளர்களை தண்டிக்க வேண்டும்.
சலாம் சகோ.....
சாட்டையடி தீர்ப்பு.....
தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டு சிறையில் வாழும் அப்பாவி முஸ்லிம்களுக்கு இனியாவது நீதி கிடைக்குமா?
Great Justice.
அப்பாவி மக்களை விசாரணை என்கிற பெயரில் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் அதிகார வர்க்கத்தின் தலை புடைப்பாக வீங்கும் அளவிற்கு விழுந்துள்ள குட்டு!!
தமீம் அன்சாரி தீவிரவாதி அல்ல, இலங்கைக்கு காய்கறி வியாபாரம்தான் செய்தார் – த.மு.மு.க
சென்னை: தீவிரவாதி என்று போலீஸாரால் பிடிக்கப்பட்டுள்ள தமீம் அன்சாரி ஒரு புகைப்படக் கலைஞர்.
இலங்கைக்குக் காய்கறி வியாபாரம்தான் செய்து வந்தார்.
அவர் தீவிரவாதியோ அல்லது அன்னிய கைக்கூலியோ அல்ல என்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமுமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
26.09.2012 அன்று தமுமுகவின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தற்போது தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் அதிராம்பட்டினம் தமீம் அன்சாரி வழக்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தமீம் அன்சாரி, ஒரு புகைப்படக் கலைஞர் என்பதும், குறும்படம் இயக்கும் எண்ணத்துடன் சில முயற்சிகள் செய்துள்ளார் என்பதும், இலங்கைக்கு காய்கறி வியாபாரம் செய்துள்ளார் என்பதும் மட்டுமே உண்மை என்பதும், போலீசார் கூறுவதுபோல் அவர் தீவிரவாதியோ, அன்னிய கைக்குகூலியோ இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
காஷ்மீர், குஜராத், டெல்லி, பீஹார், மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைப் போல இங்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்கில் சிக்கவைக்கும் முயற்சியை க்யூ பிராஞ்ச் போலீசார் தொடங்கி வைத்திருப்பதாக நிர்வாகக்குழு கருதியதால்,
இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டனப் போஸ்டர் ஒட்டுவது என்றும்,
விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி க்யூ பிராஞ்ச் போலீசின் சதியை அம்பலப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
தமீம் அன்சாரியை திருச்சியில் வைத்துப் பிடித்த போலீஸார் அவர் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு இந்திய ராணுவ ரகசியங்களை கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
SOURCE:http://tamil.oneindia.in/news/2012/09/28/tamilnadu-tameem-ansari-is-innocent-says-tmmk-162243.html
தமீம் அன்சாரி கைது - தவறாகப் பிரயோகிக்கப்பட்ட சட்டம் -
அழகு சுந்தரம் B.A.B.L.
ஆங்கிலேயே ஏகாதிபத்திய அரசுக்கு எதிரான இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்களை ஒடுக்கும் நோக்கில் இராணுவ ரகசிய சட்டம் (Official Secrets Act 1923) ஐ இயற்றியது.
இதன்படி, ஆங்கிலேய அரசின் ரகசியங்களை பகிர்ந்துகொள்வதும், அதன் காரணமாக அரசுக்கு இழப்பு ஏற்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது.
ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா விடுதலை அடைந்து 65 ஆண்டுகளாகி விட்டபோதிலும், சுதந்திர இந்திய பாதுகாப்புக்கு ஏற்றதாகக் கருத்தப்படுவதால் இன்றும் நடைமுறையில் உள்ளது.
ரகசிய சட்டம் (Official Secrets Act - 1923) என்ன சொல்கிறதென்றால், "இந்தியாவின் எதிரி நாட்டுக்கு உதவும் வகையில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளை அணுகுவது, ஆய்வு செய்வது, அப்பகுதி வழியாக ஊடுறுவுதல் ஆகியவையும் அவை தொடர்பான வரைபடம், மாதிரிகள் மற்றும் ரகசிய குறியீடுகளை எதிரிநாட்டு உளவாளிகளுடன் பகிர்ந்து கொள்வது ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்தியாவின் இறையான்மைக்கும் தேசிய ஒருமைப்பாடுக்கும்,உள்நாட்டு பாதுகாப்புக்கு அல்லது அண்டை நாடுடனான நட்புறவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த இந்த சட்டப்பிரிவின்படி தண்டிக்க முடியும்.
இந்த சட்டப்பிரிவின்கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 முதல் 14 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
தேசநலனுக்கு கேடுவிளைவிக்கும் நோக்கத்துடனோ அல்லது நோக்கமில்லாமலோ மேற்படி ரகசிய இடங்களில் பிரவேசிப்பதும் ரகசிய சட்டம் 1923 இன் கீழ் தண்டனைக்குரிய செயலாகும்.
மேலும்,இவ்வழக்கு குறித்த நீதிமன்ற விசாரணைகளின்போது பாதுகாக்கப்பட வேண்டிய ரகசிய தகவல்கள் கசியும் வாய்ப்புள்ளதாக நீதிமன்றம் கருதினால் வழக்கில் தொடர்புடைய பொதுவானவர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகாது இருக்கவும் அறிவுறுத்தப்படலாம்.
மேலும், செய்தி ஊடகங்கள்,பத்திரிக்கையாளர்கள் வழக்கு விபரத்தை செய்தியாக வெளியிடுவதும் தடுக்கப்பட்டுள்ளதாகும்.
(Uninterested members of the public may be excluded from court proceedings if the prosecutions feels that any information which is going to be passed on during the proceedings is sensitive. This also includes media; so the journalists will not be allowed to cover that particular case.)
இந்தச் சட்டப்பிரிவில் சிலநாட்களுக்குமுன் கைதான அதிராம்பட்டினம் தமீம் அன்சாரி விசயத்தில் மேற்கண்டவை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.
அவர் கைதான அன்றே தமிழகம் மட்டுமின்றி நாட்டின் அனைத்து பத்திரிக்கைகளும் பரபரப்புச் செய்தியாக இதை வெளியிட்டன.
தாங்களே நேரடியாக இருந்து துப்பறிந்தவர்களைப்போல் கற்பனைக்கு ஏற்ப அச்சுப்பிசகாமல் ஒரே செய்தியையே வெளியிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
மேலும், அரசாங்க ரகசிய ஆவணங்களைக் கையாள்பவர்கள், அவற்றை அனுமதிக்கப்படாத பகுதிகளிலோ அல்லது வெளியிலோ வைத்திருப்போர் மட்டுமே இந்த சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவர் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
(The Act only empowers persons in positions of authority to handle official secrets, and others who handle it in prohibited areas or outside them are liable for punishment)
கைதாகியுள்ள தமீம் அன்சாரி இந்த ஆவணங்களை கையாள்பரல்லர் என்பதோடு செல்போனில் படமெடுத்த இடங்கள் சுற்றாலா செல்பவர்களால் எளிதில் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டவையே என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிலக்கரி ஊழல்,சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு ஆகியவை காரணமாக மத்திய அரசும்,
கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டம்,
முஹம்மது நபியை இழிவுபடுத்திய படத்தை வெளியிட்டதற்காக சென்னை அமெரிக்க துணைதூதரகம் முற்றுகை,
மின்வெட்டு மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மக்கள் கவனத்தை திசைதிருப்பவே பரனில் தூங்கிக்கொண்டிருந்த ரகசிய சட்டம் 1923 தூசு தட்டப்பட்டு தீவிரவாத பூச்சாண்டி காட்டப்பட்டுள்ளது.- அழகு சுந்தரம் B.A.B.L.,-
Source: http://www.inneram.com/opinion/readers-mail/utility-bad-law-5909.html
PART 1. அப்துல் நாசர் மதானியுடன் இரண்டு மணி நேரம். - அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்
('மக்கள்உரிமை' இந்தவார இதழில் வந்துள்ள கட்டுரை)
கோவை தொடர் வெடிகுண்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஒன்பதரை ஆண்டு காலம் கோவை சிறையில் பிணையின்றி அடைக்கப்பட்டு இறுதியில் குற்றமற்றவர் என சென்ற ஆகஸ்ட் 1, 2007ல் விடுதலையான கேரள ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’த் தலைவர் அப்துல் நாசர் மதானி அவர்கள் மீண்டும் ஆக்ஸ்ட் 17, 2012ல் பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கர்நாடக அரசால் கைது செய்யப்பட்டது ஒரு சிலருக்கு நினைவு இருக்கக்கூடும்.
கடும் நோய்வாய்ப்பட்டிருக்கும் அவரைப் பிணையின்றி கர்நாடக அரசும் கடந்த மூன்றாண்டுகளாகச் சிறையில் அடைத்துள்ளது.
பெங்களூரு பராப்பன அக்ரகாரத்தில் புதிதாகக் கட்டபட்டுள்ள உயர் பாதுகாப்புச் சிறையில் இருக்கும் அவரை இன்று (17.09.2012) சந்தித்தோம்.
எங்கள் இருவரைத் தவிர நகரி பாபையா, ஆர்.ரமேஷ், ஷோயப், முகம்மது காக்கின்ஜே (பெங்களூரு), ரெனி அய்லின், ‘தேஜஸ்’ நாளிதழ் ஆசிரியர் முகமது ஷெரீப் (கேரளா) ஆகியோரும் வந்திருந்தனர்.
கர்நாடகச் சிறைகளில் கைதிகளைப் பார்ப்பதற்கான சடங்குகளும், கெடுபிடிகளும் அதிகம்.
ஏற்கனவே இருமுறை மைசூர் சிறையில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியைச் சந்தித்த அனுபவம் எங்களுக்குஉண்டு.
எல்லாச் சடங்குகளும் முடிந்து சிறையின் முதன்மை வாயிலுள் நுழையும் போது ஒரு கணம் நிறுத்தி நம் கை ஒன்றில் ஒரு முத்திரை பதிப்பார்கள்.
அனேகமாக வேறெந்த மாநிலச் சிறைகளிலும் இப்படி ஒரு பழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.
அந்த முத்திரையைக் கைதியைப் பார்த்துவிட்டு வரும் வரையில் நாம் அழிக்காமல் வைத்திருக்க வேண்டும்.
சிறைக்குள் நுழையும் போது போடப்படும் இந்த முத்திரை நமக்கு சோழர் காலத்தில் கட்டாயமாகப் பிடித்து வரப்பட்டு தேவதாசிகள் ஆக்கப்பட்டவர்களுக்கும், நாசி சித்திரவதைக் கூடங்களில் யூதர்களுக்கும் இடப்பட்ட முத்திரைகளை நினைவூட்டுவது தவிர்க்க இயலாது.
மைசூர் சிறையைக் காட்டிலும் பராப்பன அக்ரகாரச் சிறையில் கெடுபிடிகள் அதிகம்.
சிறைகள் நவீனப்படுத்தப்பட படுத்தப்பட கெடுபிடிகளும், கண்காணிப்புகளும் (surveillances) அதிகமாகின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சி, நம்மூர் புழல் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய சிறைகள் இதற்குச் சில எடுத்துக்காட்டுகள்.
பராப்பன அக்ரகாரச் சிறையில் கைதிகளைப் பார்ப்பதற்கு முன்பானசடங்குகளை முடிக்க சுமார் மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
சிறைக் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணகுமார் நமது பேராசிரியர் பாபையாவின் மாணவராக இருந்ததால், சற்றுக் கூடுதல் சலுகை அளிக்கப்பட்டும் கூட, எங்களுக்கும் சடங்குகளை முடிக்க மூன்று மணி நேரமானது.
க்யூவில் நின்று மனுக் கொடுத்து நமது இடது பெருவிரல் ரேகை, முகம் அனைத்தையும் நுண்ணிய கேமரா ஒன்றின் முன் அமர்ந்து பதிவு செய்துகொள்ள வேண்டும்,
நமது தொலைபேசி எண் உட்பட முக்கிய விவரங்களையும் அத்துடன் பதிந்து ‘ப்ரின்ட் அவுட்’ ஒன்றைத் தருவார்கள்.
இதற்கான இடத்தில் க்யூவில்காத்திருந்தவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்பதைதைக் கண்டோம்.
2001ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி நமது நாட்டிலுள்ள மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 13.4 சதம்.
ஆனால்,சிறைச்சாலைகளில் அவர்களின் பங்கு 50 சதத்திற்கும் மேல் என்பது நினைவுக்கு வந்தது.
விரல் ரேகை,முகப்பதிவு கொண்ட தாள்களை சிறை வாசலில் கொடுத்து விட்டு மீண்டும் காத்திருந்தால் வெகு நேரம் கழித்துச் சிறை அதிகாரிகளின் ஒப்புதலுக்குப் பின் நமக்கு அழைப்பு வரும்.
கண்காணிப்பாளர்,பாபையாவின் மாணவர் என்பதால் நாங்கள் சற்று விரைவாக அழைக்கப்பட்டதோடு,
கண்காணிப்பாளரின் அறையிலேயே ஒருபுறம் அமர்ந்து சற்று ஆறஅமரப் பேசவும் முடிந்தது.
நாங்கள் உள்ளே நுழைந்து சுமார் அரை மணி நேரத்திற்குப் பின் அப்துல் நாசர் மதானியைச் சக்கர நாற்காலியில் தள்ளி வந்தனர்.
ஆர்.எஸ்.எஸ்.காரன் ஒருவன் வீசிய குண்டு வீச்சில் வலது காலை இழந்தவர் மதானி. வழக்கு நடந்துக்கொண்டிருந்த போது குண்டு வீசியவன் வந்து அவாரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளான்.
அவனை மன்னித்ததோடு அவன் மீதான தனது குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்று வழக்கு தள்ளுபடி ஆவதற்குக் காரணமாக இருந்தவர் மதானி.
தூய வெள்ளுடையில் மலர்ந்த முகத்துடன் அருகில் நெருங்கிய மதானியைக் கண்டவுடன் அனைவரும்எழுந்து நின்றோம்.
துரும்பாய் இளைத்து இருந்தாலும் அவரது கண்களில் ஒளி குன்றவில்லை.
ஒவ்வொருவராக அருகில் சென்று அவரது கைகளைப் பற்றி அறிமுகம் செய்துக் கொண்டோம்.
Continued ……
PART 2. அப்துல் நாசர் மதானியுடன் இரண்டு மணி நேரம். - அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்
கண்காணிப்பாளருடன் பேசிக் கொண்டிருந்த பாபையா எழுந்தோடி வந்தார்.
மதானியின் அருகில்வந்தவுடன் அவருடைய கண்கள் கலங்கின.
கன்னங்கள் துடித்தன. அப்படியே அவரை மார்புறத் தழுவிக் கொண்டார்.
பார்த்திருந்த அனைவருக்கும் நெஞ்சு இரும்பாய் கனத்தது.
மனித உரிமைப் பணிகளுக்காகக் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் சிறை அனுபவித்தவர் பேராசிரியர் பாபையா.
மார்க்ஸ், சுகுமாரன் என்று நாங்கள் பெயர்களைச் சொன்னவுடன் மதானி உடனடியாக எங்களை நினைவுகூர்ந்தார்.
கோவைச் சிறையில் இருந்த போது சுகுமாரன் அவரைச் சந்தித்துள்ளார்.
கோவைச் சிறையில் இருந்த அவரை உடல் நலம் கருதி பிணையில் விடுவிக்க வேண்டுமென நாங்கள் முன்னின்று தமிழ் எழுத்தாளர்களிடம் கையொப்பம் பெற்று வெளியிட்ட அறிக்கையை மதானி இருமுறை நினைவுகூர்ந்தார்.
அறிக்கையில் கலைஞரின் மகள் கனிமொழியும்கையெழுத்திட்டிருந்ததைக் குறிப்பிட்டுச் சொன்னார்.
பிரபஞ்சன், சாரு நிவேதிதா, வெளி ரங்கராஜன்,சுகிர்த ராணி உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் அதில் கையெழுத்திட்டிருந்தனர்.
அடுத்த ஒன்றைரை மணி நேரமும் மெல்லிய குரலில் மதானி பேசிக் கொண்டிருந்தார்.
மதானி மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்.
சுற்றிலும் நாற்காலிகளை நெருக்கமாகப் போட்டு நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம்.
தற்போது போடப்பட்டுள்ள வழக்கு குறித்து மிக விரிவாக சொன்னார்.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை அவர் தெளிவாக விளக்கினார்.
பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 32 பேர்களில் 31வது குற்றவாளியாக அவர் இணைக்கப்பட்டுள்ளார்.
குற்றம்சாட்டப்பட்ட முக்கியமானவர்களில் ஓரிருவரை முன்னதாகத் தனக்குத் தெரியும் என்பதைத் தவிர இந்தக் குற்றச் செயலில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும்,
இப்படியான ஒரு செயல் நடக்கப்போகிறது என்பது தனக்குத் தெரியாது என்பதையும் விரிவாக விளக்கிச் சொன்னார்.
விசாரணையில் இருக்கும் வழக்கு என்பதால் எல்லாவற்றையும் இங்கு எழுத முடியவில்லை.
எனினும் ஒன்றை மட்டும் இங்கு சொல்லியாக வெண்டும். முக்கிய குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தடியண்டவீடு நசீர் தங்களுடைய சதி குறித்து மதானிக்குத் தெரியுமெனக் கூறியுள்ளதாதாக விசாரணையின் போது மதானியிடம் திரும்பத் திரும்பக் கேட்டுள்ளனர்.
“நசீரை ஒருமுறை என்னிடம் அழைத்து வாருங்கள். உங்கள் முன் நான் அவரைக் கேட்கிறேன்” என மதானி வற்புறுத்தியுள்ளார்.
தயங்கிய புலனய்வுத்துறையினர் இறுதியாக வேறொரு சிறையில் இருந்த நசீரை முகமூடியிட்டு அழைத்து வந்து நிறுத்தியுள்ளனர்.
புனாய்வுத்துறையினர் முன்னிலையில் மதானி கேட்ட போது தான்அப்படிச் சொல்லவில்லை என நசீர் பதிலளித்ததோடு,
“உங்களை அரசியலில் இருந்து விலகச் சொல்லிப் பலமுறை எச்சரித்தேனே நான்” என்றும் கூறியுள்ளார்.
குற்றமற்ற என்னை ஏன் இப்படித் திரும்பத் திரும்பக் கொடுமைப் படுத்துகிறீர்கள் என மதானி கேட்டபோது விசாரித்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒரு கணம் அமைதியாய் இருந்தபின் இப்படிச்சொல்லியுள்ளார்.
“இந்தப் பிறவியில் நீர் ஏதும் குற்றம் செய்யாதிருக்கலாம். போன பிறவியில் செய்திருப்பீர். அந்தப் ‘பூர்வ கர்மா’வின் பலனை இப்போது அனுபவிக்கிறீர்.”
வழக்கு விரைந்து விசாரிக்கப்பட்டால் கோவை வெடிகுண்டு வழக்கில் அவர் எப்படிக் குற்றமற்றவர் என்று விடுதலைச் செயப்பட்டாரோ அதேபோல் இதிலும் விடுதலை செய்யப்படுவது உறுதி.
ஆனால்,பராப்பன அக்ரகாரச் சிறை வளாகத்தில் இருந்து செயல்படும் தனிநீதிமன்றம் வழக்கை விரைந்து விசாரிக்கத் தயாராக இல்லை.
குற்றம்சட்டப்பட்ட பலரும் வெவ்வேறு சிறைகளில் இருப்பதைக் காரணம் காட்டி விசாரணையை இழுத்தடிக்கிறார்கள்.
அதேநேரத்தில் படிப்படியாக மோசமாகிக் கொண்டிருக்கும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு,அவரைப் பிணையில் விடுதலைச் செய்ய அரசும், நீதிமன்றமும் தயாராக இல்லை.
கடும் இருதய நோய், முற்றிய நீரிழிவு நோய், நீரிழிவினால் ஏற்பட்ட சிறுநீரகப் பாதிப்பு, முதுகுத்தண்டுத் தேய்வு என்பவற்றோடு, எல்லாவற்றுக்கும் மேலாகப் பெங்களூருச் சிறைவாசம் இன்று அவர் கண் பார்வையைப்பறித்துள்ளது.
வலது கண் பார்வை முற்றிலும் பறிபோய்விட்டது.
இடது கண்ணில் 20 சதப் பார்வைதான் எஞ்சியிருக்கிறது.
நீரிழிவுனால் ஏற்பட்ட இந்த பார்வைக் குறைவுக்கு உரிய நேரத்தில் லேசர் சிகிச்சை அளித்திருந்தால இன்று அவர் பார்வை காப்பாற்றப்பட்டிருக்கும்.
துண்டாடப்பட்டு முழங்காலுக்கு மேல் எஞ்சியிருக்கும் அவரது வலது காலின் மேல்புறம் உணர்ச்சியற்றுப் போயுள்ளது. உள்ளே கடுமையான வலி.
கேரளம் சென்று ஆயுர்வேத சிகிச்சை செய்தால் நிச்சயம் பலனிருக்கும் என அவர் நம்புகிறார்.
ஆனால், கர்நாடக அரசும், நீதிமன்றமும் அனுமதி அளிக்கவில்லை.
Continued ….
PART 3. அப்துல் நாசர் மதானியுடன் இரண்டு மணி நேரம். - அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்
உச்சநீதிமன்றம் வரை சென்று வேண்டிய போது பெங்களூரிலேயே ஆயுர்வேத சிகிச்சை அளிக்க உத்தரவு கிடைத்தது.
70 ஆயிரம் ரூபாய் அளவில் முடிய வேண்டிய சிகிச்சைக்கு அங்குள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவ மனை எட்டரை லட்ச ரூபாய் ‘பில்’ கொடுத்தது.
ஒவ்வொரு மாதமும் மருத்துவப் பரிசோதனைக்கு வர வேண்டுமெனவும், ஆறு மாதங்களுக்குப் பின் மீண்டும் ஒரு முறை முழு சிகிச்சையும் கொடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த வைத்தியசாலை வலியுறுத்தியும் சிறை அதிகாரிகள் ஒருமுறை கூட அவரைப் பரிசோதனைக்கு அனுப்பவில்லை.
உள்ளூர் மருத்துவமனை ஒன்றிற்குக் கண் மருத்துவத்திற்காக அனுப்பப்பட்ட போது, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அடுத்த நாள் அவரது வலது கண் பார்வை முற்றிலும் அழிந்து போனது.
இப்படி அவரது உடல் அவயவங்களை ஒவ்வொன்றாகச் சிறை வாழ்க்கை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்து கொண்டிருக்கிறது.
இதுகுறித்து மிக விரிவாக அவர் சொன்னார். மிக மிகச் சுருக்கமாகவே நாங்கள் இங்குக் குறிப்பிட்டுள்ளோம்.
கடைசியாக அவர் சொன்னது எங்கள் எல்லோரது கண்களையும் கசிய வைத்தது.
“எல்லாவற்றையும் நான் தாங்கிக் கொண்டிருக்கிறேன். இந்த முறை நோன்பு நாட்களில் குனிந்து தொழவும் என்னால் முடியவில்லை.
ஆனால், அல்லாஹ்வின் அருளால் மன உறுதியை மட்டும் நான்இழக்கவில்லை. என் மனம் தளர்ந்துவிடவில்லை.
உடல் உபாதைகளையும் கூடத் தாங்கிக்கொள்கிறேன்.
ஆனால் கண் பார்வை இழந்ததைவிடவும் என்னால் தாள முடியாத வேதனையாகஇருப்பது எனக்குள்ள மலச் சிக்கல்தான்.
சாப்பிட்டு இரண்டு நாளானாலும் மலம் கழிவதில்லை. திடீரென இரவு நேரங்களில் என்னை அறியமலேயே மலம் கழிந்துவிடுகிறது.
அந்த நேரத்தில் என்னையும் என் படுக்கையும் என்னால் சுத்தம் செய்துக் கொள்ள முடிவதில்லை.
இரவு நேரத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் என்னால் அதைச் செய்ய முடியாது.
நகர வேண்டுமானால் எனது வலது செயற்கைக் காலைப் பொருத்திக் கொள்ள வேண்டும்.
தண்ணீரை எடுப்பது, கழுவுவது எதையும் தனியாகச் செய்ய முடியாது. இரவு முழுக்க அப்படியே கிடக்கவும் முடியவில்லை. இந்தக் கொடுமையைதான் என்னால் தாங்க முடியவில்லை.”
அந்த அறையில் ஒரு கணம் இறுக்கமான அமைதி நிலவியது.
நாங்கள் என்ன ஆறுதல் அவருக்குச் சொல்ல முடியும்.
நேரமாகிவிட்டது என்பதைத் தெரிவிப்பதற்காகக் கண்காணிப்பாளர் ஒருமுறை அங்கு வந்து எங்களைப் பார்த்துப் புன்முறுவலித்துச் சென்றார்.
நாங்கள் புறப்படத் தயாரானோம்.
“நான் ஒன்பதரை ஆண்டுக் காலம் கோவைச் சிறையிலிருந்தேன். சிறையில் இருந்தது என்பதைத் தவிர எனக்கு வேறெந்தப் பிரச்சினையும் இல்லை.
அதிகாரிகள் என்னிடம் அக்கறையுடன் நடந்துக் கொண்டார்கள்.
தமிழ்நாட்டு ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகள், முஸ்லிம் அமைப்புகள் எல்லாம் என்னிடம் அக்கறையாக நடந்து கொண்டார்கள்.
சிறையில் நான் எதற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை.
இங்கே எல்லாம் தலைக்கீழ். என்னுடைய ‘செல்’ அருகில் ஒரு பூனைக்குட்டிஇருக்கிறது.
அதுவொன்றுதான் இங்கே காசு கேட்பதில்லை.
இங்குள்ள ஊடகங்களும் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் என்னைப்பற்றி மோசமாக எழுதுகின்றன.”
மெல்லிய குரலில் எல்லாவற்றையும் எளிய ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார் மதானி.
நாங்கள் எழுந்து நின்றோம்.
குனிந்து ஒவ்வொருவராக அவரைத் தழுவிக் கொண்டோம்.
நகர மன்மின்றி நகரத்தொடங்கிய போது அவர் குரல் எங்களை அழைத்தது “நீங்கள் வந்து சென்றது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது.
நீங்கள் நாளை நடத்த உள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லப் போகிறவை எனது சிகிச்சைக்கும்,
நான் பிணையில் விடுதலைப் பெறுவதற்கும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ஒருவேளை அந்தப் பயன் எனக்குக் கிடைக்காமலும் போகலாம்.
ஆனால் நீங்கள் வந்ததே எனக்குப் பெரும் பயன்தான்.
அல்லாஹ்வின் அருளால் நான் விடுதலையாகி வெளியே வந்தால்,என்னுடைய எஞ்சிய வாழ்நாளை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் செலவிடுவேன். அவர்களோடு வாழ்ந்து மடிவேன்.”
மதானியின் ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’, தலித், முஸ்லிம் ஒற்றுமையை முன்னெடுத்துப் பேசுகிற ஒன்று.
அவரது நிறுவனங்களின் மூலம் பெரிய அளவில் தலித்கள் பயனடைகின்றனர்.
நாங்கள் படிகளில் இறங்கிக் கீழுள்ள பேரேட்டில் கையெழுத்திட்டோம்.
எங்களது செல்போன்களைப் பெற்றுக் கொண்டோம்.
கையிலுள்ள முத்திரை அடையாளத்தைக் கத்தி பொருத்திய துப்பாக்கியுடன் இருந்த காவலரிடம் காட்டிய பின் கதவு திறந்தது..
ஏதோவொரு கொண்டாட்டத்திற்காக ஒளி அலங்காரம் செய்வதற்கென சீரியல் விளக்குகள் சிறை வாசலில் வந்து இறங்கி இருந்தன.
எதற்காக இருக்கும் என நாங்கள் சற்று வியப்புடன் நோக்கிய போது மிகப் பெரிய அலங்கரிக்கப்பட்ட ஒரு வண்ண விநாயகர் சிலையை சுமார் 10 கைதி வார்டர்கள் சுமந்துவந்து கொண்டிருந்தனர்,
ஓ! நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி அல்லவா?
@சுவனப் பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்... சகோ.சுவனப்பிரியன். மாறனும் சகோ..! உச்ச நீதி மன்ற தீர்ப்பு ஆச்சே..! இல்லைன்னா... 'கன்டெம்ப்ட் ஆப் கோர்ட்டு' ன்னு ஆகிறாதா..!?
@திருபுவனம் வலை தளம்//குறைந்த பட்சமாக இரண்டு வருடங்களாவது சிறையில் தள்ளினால் தான் இனி அடுத்தவர்களை பொய் வழக்கில் கைது செய்வதை ஓரளவாவது குறைக்க முடியும் //----இனி இப்படி ஒரு தண்டனை காலத்தின் கட்டாயமாயிற்று சகோ..! அவசியமான சட்டம் இது.
@Rabbani//தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி
இதனால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் நிலை அந்தோ பரிதாபம்//---இதை புரிவார் குறைவாக போய் விட்டனரே சகோ.ரப்பானி..!
@azeem bashaசரியா சொன்னீங்க சகோ.அஸீம் பாஷா. ஆனாலும், ஒரு சில நேரம் அங்கும் கூட... சட்டப்படி இல்லாம... 'இந்திய வெகு ஜன மன விருப்பத்தின் படி' & 'புராண இதிகாசப்படி' எல்லாம் நீதி வழங்குறாங்களே..!
@NKS.ஹாஜா மைதீன்அலைக்கும் சலாம். //தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டு சிறையில் வாழும் அப்பாவி முஸ்லிம்களுக்கு இனியாவது நீதி கிடைக்குமா?//---இறைநாடினால்... நிச்சயமாக கிடைக்கும் சகோ.ஹாஜா..! அதை நோக்கிய முதல் அடி எடுத்து வைத்தாயிற்று.. இத்தீர்ப்பில்..! :-)
@! சிவகுமார் !//Great Justice.//---நிச்சயமாக, சகோ.சிவகுமார்.
//அப்பாவி மக்களை விசாரணை என்கிற பெயரில் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் அதிகார வர்க்கத்தின் தலை புடைப்பாக வீங்கும் அளவிற்கு விழுந்துள்ள குட்டு!!//---வருகைக்கும் 'நச்' கருத்துக்கும் நன்றி சகோ.
@UNMAIKALசகோ.உண்மைகள், தங்கள் வரவுக்கும் மிக முக்கியமான அனைத்து பகிர்வுகளுக்கும் மிக்க நன்றி சகோ.
அதிலும்... குறிப்பாக... 'மக்கள்உரிமை' இதழில் வந்துள்ள கட்டுரையை படித்து விட்டு, துயரம் தொண்டையை அடைத்துக்கொண்டது சகோ.
இப்படிப்பட்ட ஒரு நோயாளியிடம்... இப்படியுமா ஈவிரக்கமே இல்லாமல்... மனிதத்தன்மை இன்றி நடப்பார்கள்..!?
தன் மீது குண்டு வீசி காலை எடுக்க காரணமான அந்த RSS பயங்கரவாதியை மன்னித்து, வழக்கை தள்ளுபடி செய்து அவனை விடுவித்தவரின் மாண்பு எங்கே...
இவர்கள் எங்கே...
அவரின் அந்த மாண்பில்... கால் தூசிக்கு சமமாவார்களா இந்த கர்நாடக காவி அரசினர்..! ச்சே..!
Citizen,
Yet another good post... Fantastic brother... Keep up the good work...
// அவர்களின் மனிதநேய வரிகளுக்கு வாழ்த்துகளுடன் நமது நன்றிகள் பல உரித்தாகுக..! //
எனது நன்றிகளையும் உரித்தாக்குகிறேன்...
சிறுபான்மையோ, பெரும்பான்மையோ அப்பாவிகள் பாதிக்கப்படக்கூடாது... இது நடக்க வேண்டும் என்றால் நமது நீதிக்கான கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் சகோ ஆசிக்...
அதாவது "1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஒரு நிரபராதி பாதிக்கப்படக்கூடாது" என்பதை மாற்றி... "ஒரு குற்றவாளியும் தப்பிக்க கூடாது" என்று கொள்ள வேண்டும்..
முஸ்லிம் என்பதால் பதவி உயர்வை தடுக்கிறார்கள் –
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்!
29 Sep 2012
மும்பை:முஸ்லிம் என்ற காரணத்தால் தான் நீதிபதியாக பதவி உயர்வு பெறும் வாய்ப்பு தடுக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
த ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அஜ்மல்கான் கூறியது:
“நீண்டகால அனுபவத்தின் அடிப்படையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நீதிபதி பதவிக்கு நான் தகுதியானவர் என்பதை நீதிமன்றம் கண்டறிந்தது.
அதற்கு அனுமதி ஆவணமும் எனக்கு வழங்கப்பட்டது.
ஆனால், பின்னர் பதவி உயர்வு தடைப்பட்டுப் போனது.
மத அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக உளவுத்துறையின் குற்றச்சாட்டு எனது பதவி உயர்வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
நண்பர்கள், என்னுடன் பணிபுரிபவர்கள் ஆகியோரிடம் என்னைக் குறித்து விசாரித்துள்ளனர்.
தேசத்துடன் எனக்கு எவ்வளவு தூரம் பற்று இருக்கிறது என்பதை ஆராயவே இந்த விசாரணை.
இதனால் நானும், எனது குடும்பத்தினரும் மிகுந்த மன வேதனைக்கு ஆளானோம்.
ரமலான் மாதத்தில் ஊரில் உள்ள மதரஸா மற்றும் மஸ்ஜிதுக்கு நன்கொடை அளித்ததை குறித்தும் ஐ.பி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
1983-89 காலக்கட்டத்தில் மதுரை அரசு சட்டக்கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் படிப்பில் சேர்ந்த 140 நபர்களில் நானும் ஒருவன்.
பின்னர் தேர்வில் வெற்றிப் பெற்று முதல்10 இடங்களை பிடித்தவர்களில் நானும் இடம் பெற்றேன்.
ஆனால், 20 ஆண்டுகளுக்கும் மேலான எனது வழக்கறிஞர் பணியில் சமூக பாரபட்சத்தின் வேலிகளை தாண்டுவதில் நான் தோல்வியை தழுவினேன்.
ஒரு பொது விசாரணை நடத்தப்பட்டால், எனது பெயர் கான் என்றும், நான் தீவிரவாதி அல்ல என்றும் இந்த தேசத்திற்கு என்னால் உணர்த்த முடியும்.” என்று அஜ்மல் கான் கூறுகிறார்.
நிரபராதிகளான முஸ்லிம்கள் மீது தீவிரவாத முத்திரையை குத்தாதீர்கள் என்றும்,
மதத்தை பார்த்து யாரையும் சிறையில் அடைக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் நேற்று முன் தினம் உத்தரவிட்டது.
பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் ‘மைநேம் ஈஸ் கான்! ஐ அம் நாட் எ டெரரிஸ்ட்’ என்ற திரைப்படத்தின் உரையாடலை மேற்கோள்காட்டி உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.
http://www.thoothuonline.com/they-stop-the-promotion-because-i-am-a-muslim-says-chennai-hc-lawyer/
பின்னூட்டவாதியின்
முன்னோட்ட கருத்து
@சிராஜ்வருகைக்கும் நல்லதொரு கருத்துக்கும் நன்றி சகோ.
@UNMAIKALவருகைக்கும் நல்லதொரு பகிர்வுக்கும் நன்றி சகோ.
@அதிரை சித்திக்
//பின்னூட்டவாதியின்
முன்னோட்ட கருத்து//
வருகைக்கும் இருவரி கவிதைக்கும் நன்றி சகோ.
சட்ட நுணுக்கங்களை மக்களுக்கு எடுத்து சொல்ல மற்றும் ஏழை எளிய மக்களுக்கு சட்ட ஆலோசனை செய்ய முகாம், மையம் இருப்பது தேவை.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!