சென்ற இரு பதிவிற்கு முந்தைய பதிவில், பகல் நேரப்பணியில் கடும் கோடையில் உண்டான பிரச்சினையும் அதற்கு கண்ட தீர்வையும் சொல்லி இருந்தேன் அல்லவா..? இப்போது... இரவுப்பணியில் எனக்கு ஏற்பட்ட பிரச்சினையையும் அதற்கு கண்ட தீர்வையும் எழுதப்போகிறேன்..! யாருக்கேனும் எனது அனுபவம் பயன் தந்தால் மிக்க மகிழ்ச்சி..! வழக்கம்போல சகோஸ்... நீங்களும் பின்னூட்டத்தில் மேலும் சில ஐடியாக்களை தாருங்கள்..! :-))
படிக்கும் காலங்களில் என்னதான் முழுவாண்டு தேர்வே ஆயினும்... ராத்திரி 12 மணிக்குமேலே விழித்து படிக்கும் வழக்கம் எல்லாம் பொதுவாக கிடையாது..! காரணம்... தூக்கம்..! அது என்னமோ தெரியவில்லை..! படிக்கும் பள்ளி- கல்லூரி காலங்களில் மட்டும் தான் அப்படி ஒரு தூக்கம் கண்ணை செருகி சொக்கும்..! இரவு 1,2,3,4..... ஆகிய மணிகளை எல்லாம் நேரலை லைவ் ஆக பார்த்து பழக்கம் இல்லை..! நோன்பு காலங்களில் கூட சஹருக்கு கடைசியாக வீட்டில் எழுபவன் நான்தான்..!
அப்பேற்பட்ட நான்... தூத்துக்குடி உரத்தொழிற்சாலையில் போய் வேலைக்கு சேர்ந்தால்... முதல் நாள் டூட்டியே இரவுப்பணி..! அதாவது... 10 pm - 6 am. 8 மணிநேர டூட்டி..! அது மட்டுமல்ல... இதேபோல தொடர்ச்சியாக 6 நாள் இரவுப்பணி பார்க்க வேண்டும்..! பிறகு, 7-ம் நாள் ஒரே ஒரு நாள் வார விடுமுறை..! பின்னர் தொடர்ச்சியாக 6 நாள் மாலை நேரப்பணி (2 pm - 10 pm)..! 7-ம் நாள் விடுமுறை..! அடுத்து 6 நாள் தொடர்ச்சியாக காலை நேரப்பணி (6 am - 2 pm)..! 7-ம் நாள் விடுமுறை..! மீண்டும் 6 நாள் இரவுப்பணி..! இப்படி சுற்றி சுற்றி வரும் ஷிஃப்ட்டில் பணியாற்றும் ஒரு வேலை எனக்கு..! விடுமுறை கிழமை அடிப்படையில் 7 பிரிவாக ஊழியர்கள் பிரிந்து... ஒரு பிரிவு ஓய்வில் இருக்க மீதி ஆறு பிரிவு 3 ஷிப்டுகளில் வேலை செய்ய... 24 மணி நேரமும் தொழிற்சாலை முழுத்திறணில் இயங்கிக்கொண்டிருக்கும்..!
உள்ளே ஒரு கேண்டீன் சர்வீஸ் உண்டு. எல்லா ஷிப்டிலும் இயங்கும். நாம் இருக்கும் இடத்துக்கு சாப்பாடு தேடி வரும். காலை 7am டிஃபன், மதியம் 12pm லஞ்ச், மாலை 7pm டின்னர், இரவுப்பணியில் அதிகாலை 3am ப்ரேக்-க்பாஸ்ட் என்று எல்லாம் உண்டு. All Subsidized - கிட்டத்தட்ட எல்லாமே ஃப்ரீ போன்றது - சாப்பிடாமல் பசியோடு இருக்க வாய்ப்பே இல்லை..!
.
இதுபோல.. இரவு விழித்து தூங்(கி)காமல் விழித்து தூங்(கி)காமல் ஆறுநாள் இரவில் வேலை பார்த்ததால்... அத்தனை வருடம் இரவில் தூங்கியே பழக்கப்பட்ட உடம்பு... இந்த திடீர் மாற்றத்தை உடனே ஏற்றுக்கொள்ளவில்லை..! அதனால் உடல் சூடு அதிகரித்து... அதன் விளைவு... வந்தது அஸிடிட்டி..! (Acidity-நெஞ்சு எரிச்சல்) அஸிடிட்டிக்கு ஏகப்பட்ட காரணிகள் பிறருக்கு உண்டு என்றாலும், அவை எல்லாம் எனக்கு காரணிகளாக இல்லை..! நைட் ஷிப்ட் தான் - அதனால் ஏற்பட்ட உடல் சூடுதான் எனக்கு காரணி..!
இது என்ன செய்தது என்றால்... முதல் நாள் இரவு டூட்டி முடிந்து காலை ஆறரை மணிக்கு வந்து படுத்தால்... பகல் 11... 12 மணிக்கெல்லாம்... வயிற்றுக்கு மேலே நெஞ்சுக்கு கீழே diaphragm region இல் பரவலாக எரிச்சல் தந்து வலிக்க ஆரம்பித்துவிடும்..! தூக்கம் கலைந்து விடும்..! அவ்ளோதான்..! கொஞ்சம் கொஞ்சமாக கூடி... மதியம் சாப்பிடவும் பிடிக்காமல்.. சாப்பிட்டால் இன்னும் எரிச்சலும் வலியும் கூடி... பின்னர் மாலை ஆனதும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்..! ஆனால்... இரவு எல்லாம் சரியாகிவிடும்..! பிறகு, அடுத்த நாள் பகல் 10... 11 மணிக்கெல்லாம் வலியும் எரிச்சலும் என்னை எழுப்பி விட்டுவிடும்..!
இப்படியே... போய்... 5-வது... 6-வது நாளின் இரவு டூட்டி முடியும் சமயமான காலை 6 மணிக்கெல்லாம் வலியும் எரிச்சலும் ஆரம்பித்து தூங்கவே முடியாது போய்விடும்..! இப்படி ஒவ்வொரு தடவையும் இரவுப்பணி என்றால் மட்டும் இந்த பிரச்சினை வந்து விடும்..! இதற்கு என்ன தீர்வு..? இரவுப்பணியே செய்யாமல் இருக்க வேண்டுமோ..!?
முதல் இரண்டு வருடம் ட்ரைனிங் பீரியட் என்பதால்... என்னால் ஷிப்ட் டூட்டியில் இருந்து தப்பிக்க முடியவில்லை..! எனவே, இதற்கு தக்க மருத்துவ தீர்வு மட்டுமே வழி..! முயற்சித்தேன்..! ஒவ்வொரு டாக்டராக பார்த்தேன்..! எல்லோருமே... ஜெலுசில்... ரோஸ் கலர் சிரப்... டைஜின்... தயிர்... மோர்... இப்படியே ப்ரிஸ்கிரிப்ஷன் & ஐடியா கொடுக்க... ஒரு சிலர்... 'இது நாளைடைவில் தீவிர அல்சரில் கொண்டு போய் விட்டுவிடும்' என்று பயமுறுத்த ஆரம்பித்துவிட்டனர்..!
பகல் நேர டூட்டியில் என்னடாவென்றால்... fungal attack பிரச்சினை... ராத்திரி டூட்டியில் இந்த அஸிடிட்டி பிரச்சினை... மனம் வெறுத்து, 'பேசாமல் வேலையையே விட்டு விடலாமா' என்று சிந்திக்க ஆரம்பித்த போதுதான்... fungal attack பிரச்சினை... ஒரு சிறந்த மருத்துவரின் (ஆனாலும் யாரும் தன்னிடம் வராததால் 'ஈ ஓட்டுபவர்'..) வித்தியாசமான முயற்சியில் தீர்வுக்கு வந்தது..! இது பற்றி சுவாரசியமாக அறிய... கிளிக்குங்க>>>கோடை-சூடு-ஈரம்-வியர்வை (Only for Gents) அந்த டாக்டர்தான் மேற்படி அஸிடிட்டி பிரச்சினைக்கும் நான் இதுவரை சென்று பார்க்காத ஒரே டாக்டர்..! எனவே... இப்போது அவரிடம் இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டி சென்றேன்..! இம்முறை... என்னை பார்த்ததும் புன்முறுவலிட்டவர்... பேனாவை எடுத்து.. 'எங்கே கையெழுத்து போட வேண்டும்?' என்று என்னிடம் கேட்கவில்லை..! :-))
நேரடியாக... என்ன பிரச்சினை என்றார்...!
சகோ..! இதுவரை நான் உங்களிடம் சொன்னதை ஒன்று விடாமல் அப்படியே விபரமாக சொன்னேன்..!
அவர்... ஓகே.. ஓகே.. என்று... தலையாட்டிவிட்டு...
உங்களுக்கு தூக்கம் இல்லாததால்... உடல் சூடாகி அசிடிட்டி வந்துள்ளது. ஏற்கனவே உங்க பாடி ஹீட்டில் உள்ளபோது... அசிடிட்டி உள்ள நேரம் அல்லோபதி கெமிகல் மெடிசின் தந்தால்... அதிலும் ரியாக்ஷன் ஹீட் வெளி வந்து... அசிடிட்டியில் எதிர்பார்த்த ரெமடி இருக்காது..! எனவே..... இதுக்கு வேறு ஒரு மெடிசின் உள்ளது..! ஹீட்டையும் குறைத்து அசிடிட்டியையும் குறைக்கிறா மாதிரி...! ---என்று சொல்லிவிட்டு.....
இதோ ட்ரீட்மென்ட்... பரிஸ்கிரிப்ஷன்... என்று... அவர் வழக்கப்படி சொல்லிக்கொண்டே... எழுதிக்கொண்டே... சொல்ல ஆரம்பித்து விட்டார்...!
அடுத்து... ப்ளீஸ்.... கொஞ்சம் சிரிக்காமல் சீரியசாக படிக்கவும் சகோ..! :-)))
முதல் நாள் நைட் ஷிப்ட் முடிஞ்சதும் எங்கே போவீங்க..?
வீட்டுக்குத்தான்...! ஏன் கேக்குறீங்க டாக்டர்..?
இல்லை... வீட்டுக்கு போவாதீங்க...!
அப்புறம்...?
நேரா பஸ் ஸ்டாப்புக்கு அருகே உள்ள வாழைப்பழக்கடை போங்க...!
போயி...?
ஒரு வாழைப்பழம் மட்டும் சாப்பிடுங்க...!
என்னா வாழைப்பழம் சாப்பிடனும்...?
ஏதாவது ஒன்னு... ம்ம்ம்... ரஸ்தாளி... பச்சைநாடா... செவ்வாழை இப்படி...! பூவன் வேண்டாம்..! அப்புறமா வீட்டுக்கு போயி நல்ல்லா தூங்குங்க...!
ஓகே டாக்டர்..! :-)
ரெண்டாவது நாள் நைட் ஷிப்ட் முடிஞ்சதும் எங்கே போவீங்க..?
ஹி..ஹி... அன்னிக்கும் வீட்டுக்குத்தான்...!
இல்லை...நேரா வாழைப்பழக்கடை போங்க...
ஒகே..!
ரெண்டு வாழைப்பழம் சாப்பிடுங்க...!
ஓ...ஓகே..!
அப்புறமா வீட்டுக்கு போயி தூங்குங்க...!
ஓகே டாக்டர்.
மூணாவது நாள் நைட் ஷிப்ட் முடிஞ்சதும்....
வீட்டுக்கு போகமாட்டேன்.... நேரா வாழைப்பழக்கடை போவேன்...
எக்ஸாக்ட்லி... யூ ஆர் வெரி இண்டல்லிஜென்ட்...
:-)) ம்ம்ம்... தேங்க்ஸ்.... போயி...?
மூணு வாழைப்பழம் சாப்பிடுறீங்க....
தெளிவா புரியுது டாக்டர்... ஒகே. டன்..!
அப்புறமா வீட்டுக்கு...
போயி தூங்கிருவேன்... கிளியர்..!
(இவர்... டாக்டர்தானா.... இல்லே... வாழைப்பழவியாபாரியா...)
நாளாவது நாள் நைட் ஷிப்ட் முடிஞ்சதும்....
நேரா வாழைப்பழக்கடை போயி நாலு வாழைப்பழம் சாப்பிடனுமா... டாக்டர் இது கொஞ்சம் கஷ்டம்.... சின்ன பழமா.... இருந்தாகூட பரவ்வ்....
ஹலோ... ஹலோ... வெயிட்... வெயிட்... டோன்ட் பி சில்லி... எதுக்கு இந்த அவசரம்...? நான்தான் சொல்லிட்டு இருக்கேன்ல...? சொல்றதை பொறுமையா கேளுங்க...! இங்கே யாரு டாக்டர்...?
ஓ.... ஸாரி டாக்டர்... நீங்களே சொல்லுங்க...!
ம்ம்ம்..... அது...! இப்போ நாலாவது நாள்தானே....?
ம்ம்ம்... வெயிட்... ஒன்னு, ரெண்டு, மூணு வாழைப்பழம்...., ஆமா நாலாவது நாள்தான் டாக்டர்...!
இப்போ அந்த வாழைப்பழக்கடைக்கு எதிர்த்த கடையில் இளநீர் விப்பாங்க... அதிலே ஒரு இளநீர் குடிச்சிட்டு வீட்டுக்கு போயி தூங்குங்க...!
வாவ்.... ஓகே டாக்டர்..!
.
அஞ்சாவது நாள் நைட் ஷிப்ட் முடிஞ்சதும் எங்கே போவீங்க...?
தெரியலை டாக்டர்... நீங்களே சொல்லிடுங்க..!
வாழைப்பழ கடைக்கு முதல்லே போங்க... அங்கே ஒரு வாழைப்பழம் மட்டும் சாப்பிடுங்க... அப்புறமா இளநீர் கடைக்கு போயி ஒரு இளநீர் சாப்பிடுங்க... பின்னர் வீட்டுக்கு தூங்க போங்க.... டூ யு அண்டர்ஸ்டேன்ட்...?
அண்டர்ஸ்டுட் டாக்டர்...!
தட்ஸ் நைஸ்...!
ஆறாவது நாள் நைட் ஷிப்ட் முடிஞ்சதும் என்ன பண்ணுவீங்க...?
பொதுவா வலி தாங்காம ஆறாவது நாள் நேரா கிளினிக்தான் போயிட்டு இருந்தேன்... இப்போ... இளநீர்... இல்லை... இல்லை... வாழைப்பழக்கடை... போகணும்... ஆம் ஐ ரைட்..?
டோன்ட் கெட் கன்ஃபியுஸ்ட்... லிசன்.... முதலில் ரெண்டு வாழைப்பழம்... சாப்பிடுங்க... அப்புறம் ஒரு இளநீர்... குடிங்க...! தட்ஸ் ஆள்.... அவர் ப்ரிஸ்க்ரிப்ஷன் ஈஸ் ஓவர்..!
எப்பா..... வித்தியாசமா இருக்கே டாக்டர்..!
ம்ம்ம்.... எங்கே... ஒருவாட்டி கேட்டதை அப்படியே சொல்லுங்க...! பார்ப்போம்...!
சொன்னேன்... சரியாகவே சொன்னேன்...! என் நினைவாற்றலை பாராட்டினார்..! :-)))
அடுத்த ஓரிரு வாரம் கழித்து வந்த... "இந்த வா.......ரம்ம் ஆஷிக்கின் அஸிடிட்டி வா.......ரம்ம்.." (நன்றி... சன் டிவி..1997-98) ....என்று நண்பர்கள் மத்தியில் பிரபலமான எனது "நைட் ஷிப்ட் வாரம்" வந்தவுடன்.... மேற்கண்ட ட்ரீட்மெண்டை கச்சிதமாக அப்படியே பின்பற்றினேன்...! என்னவொரு ஆச்சரியம்...! சகோ...நம்புங்கள்..! மெய்யாலுமே... "அந்த வா.....ரம்ம்... அஸிடிட்டி காணாமல் போன வா......ரம்ம்...!" புகழனைத்தும் முயற்சிக்கு பலனளித்த இறைவனுக்கே..!
ஆஹா..! என்னவொரு டாக்டர் இவர்..! இவ்வளவுக்கும் இவர் அல்லோபதி டாக்டர்தான்..! எப்படி ஓர் இயற்கையான அருமருந்தை எனக்கு தந்திருக்கிறார்...! அவருக்கு இறைவன் அருள்புரியட்டுமாக..!
ஆறாவது நாள் தூங்கி எழுந்து அன்று மாலை டாக்டரை சந்தித்து பாராட்டி நன்றி தெரிவிக்க சென்றேன்..! அவர் இல்லை..! வெகேஷன் சென்று இருக்கலாம்..! பின்னர், எனது வெகேஷன் முடிந்து வந்து பார்த்தால்... அவர் ரிட்டையர் ஆகி ஆந்திரா சென்று விட்டதாக மருத்துவமனையில் கூறினர்..! என் வாழ்வில் நான் சந்தித்த வித்தியாசமான அல்லோபதி டாக்டர்..! பின்னர் அவரை நான் சந்திக்கவே முடியவில்லை. அவர் பெயர்... டாக்டர்.அப்பாராவ்..! வாவ்...!
மற்றுமோர் சவூதி அனுபவ டிப்ஸ்..!
உடற்சூடு அல்லாமல்... பழைய எண்ணெய் அல்லது கலப்பட நெய் அல்லது கொழுப்புக்கட்டி கலந்த ஹோட்டல் உணவை சாப்பிட்டுவிட்டு அதன்மூலம் அஸிடிட்டி வந்தால்... உடனடி நிவாரணத்துக்கு இங்கே ஒரு நல்ல மெடிஸின்... Cold 7-up..! ஒரு 355 ml டின் கடகடவென குடித்தால் போதும்..!

33 ...பின்னூட்டங்கள்..:
எனக்கும் இதே தொல்லை. நான் முயற்சி செய்கிறேன். தகவலுக்கு நன்றி
சிட்டிசன்,
பாட்டி வைத்தியம் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டிங்க.
வயிற்றில் உணவு இல்லாத போது சுரக்கும் செரிமான அமிலங்கள் அதிகம் ஆகி வருவதே அசிடிட்டி என்பதை புரிந்துக்கொண்டால் அசிடிட்டி வராது.
அமிலத்துக்கு வேலை கொடுத்துவிட்டால் ,நமக்கு வேலை வைக்காது.எனவே தான் வாழைப்பழம் சாப்பிட சொல்லி இருக்கிறார்.
அசிட்டி தீர எளிய வழி மிதமான அல்லது சுட வைத்து ஆறிய வென்னீர் குடித்தாலும் தீரும். கூட ஜீரகம் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிக்கட்டி குடித்தாலும் தீரும்.நன்கு ஜீரணமும் ஆகும்.
இளநீர் சூட்டை குறைக்க நல்ல இயற்கை மருந்து எனலாம்.
நைட் ஷிப்ட் முடிஞ்சு போகும் காலை ஆறு மணிக்கு வாழைப்பழம் கூட கிடைக்கலாம் , இளநீர் கிடைக்குதா?
-----
7 அப் குடித்தால் தற்காலிக நிவாரணம் தான், ஆனால் பின்னர் இன்னும் அதிகம் ஆக்குமே. இதற்கு நல்ல தீர்வு சோடாவில் உப்பு போட்டு குடிக்க சொல்வார்கள்.
வட இந்தியர்கள் ஜல்ஜீரா என்னும் பொடியை சோடாவில் போட்டு குடிப்பார்கள், அசிடிட்டி,ஜீரணத்துக்கு நல்லதாம். நானும் அவர்களிடம் இருந்து காப்பி அடிச்சு குடிக்க கத்துக்கிட்டேன்.
அசைவம் அல்லது கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிட்ட பின் ஜல்ஜீரா சோடா குடிச்சால் நன்கு ஜீரணம் ஆகும் என சொல்வார்கள்.
சலாம்! சகோ!
அஜீரணக் கோளாறால் நெஞசு எரிச்சல் எனக்கும் அவ்வப்போது வருவதுண்டு. சிறந்த வைத்திய பதிவு. பகிர்வுக்கு நன்றி!
உங்களுக்கு வாய்த்த மருத்துவர் மிக நல்லவர்...இங்கே அப்படியா?அத நினைச்சா லே எனக்கு வயிறு எரியுது.அருமையான தகவலுக்கு நன்றி சகோ....
அசிடிட்டி-க்கு நல்ல நிவாரணிகள் வாழையும் இளநீரும் என அரும் மருந்து தந்தீர்கள்.
7அப் 355ml இப்பவும் கிடைக்குதா?
சகோ.சிட்டிசன்!உடல் சூட்டுக்கு இன்னுமொரு டாக்டர் இருக்கிறார்.அது நாந்தான்!
சர்பத் விதை,லவங்கப்பட்டை,துளசி இலை,ரோஸ் வாட்டர்,ரோஸ் சர்பத் சர்க்கரைப் பாகு இதுதான் அடிப்படைப் பொருட்கள்.
இவற்றில் சர்பத் விதை,துள்சி இலை ஊறவைத்து ஏனையவற்றையும் கலந்து நீர்,மோர்,பால் எதிலாவது சேர்த்து குடித்து வர சூடு இறங்கும்.ல்வங்கப்பட்டை,துளசி போன்றவை திரவ வடிவிலும் கிடைக்கின்றன.
7 up சாப்பிட்டால் ஏப்பம்தான் வரும்:) பெப்சி,ஏழு அப்பு KFC சாப்பிடற ஆளுகளுக்கானது என்பதால் ஒரு விதத்தில் எண்ணைப்பொருள் உணவுகளுக்கும் என்பது சரியே.ஆனால் எனக்கு இதெல்லாம் உவ்வே!
@ராஜ நடராஜன்சகோ.ராஜ நடராஜன், இங்கு சவூதியில் நான் எனது கம்பெனி லேபில்... அதிகமான மக்களால் அருந்தப்படும்... நமது "உவ்வே" ரக பானங்களான கோக், பெப்சி, மிரிண்டா, மவுண்டன் டிவ், ஸ்பிரிட், ஏழு அப்பு.... போன்ற முக்கியாமனவைகளின் pH டெஸ்ட் செய்துள்ளேன்..!
அதில்.... நான் அறிந்தவை : ஆக மோசமான ஆசிட் கோக்..! அது 1.3 pH தான் இருந்நது. அடுத்து பெப்சி... 1.7 இருந்தது. மற்றவை... 2 லிருந்து 4 வரை இருந்தன..! ஆனால், 7-up மட்டும் 6 pH இருந்தது..! ஆனாலும் ஆதற்கு 7-up என்ற பெயரை விட 7-down என்ற பெயர் பொருத்தம்..!
அதனால்தான், அசிசிட்டி இருக்கும் நேரம் செரிமானத்துக்கு வேறு எதை குடித்தாலும் இன்னும் சற்று ஏற்றிவிட்டுவிடும். ஆனால், ஏழு அப்பு... கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும்..! எனக்கும் இது மெடிசின் என்றளவில் மட்டுமே பழக்கம்..! மற்ற நேரங்களில் 'உவ்வே'..!
இது சவூதியில் // எண்ணைப்பொருள் உணவுகளுக்கு // எனது சொந்த அனுபவம் சகோ.ராஜ நடராஜன்...!
நம்ம ஊர் செவன் அப் இங்கே வளைகுடாவில் உள்ள அளவுக்கு குவாலிட்டி இல்லை..! இவ்வளவுக்கும் அது சவூதி செவன் அப்பை விட விலை கூட வேறு..!
@ராஜ நடராஜன்//சர்பத் விதை,//-------'ஜம்ஜா விதை' என்பார்கள் எங்கள் ஊர் பக்கம்...! அதுதானே..?
உடல் சூட்டுக்கு இன்னொரு மருந்து தந்த டாக்டர் ராஜ நடராஜன் சகோ... தங்களுக்கு மிக்க நன்றி..!
@NIZAMUDEEN///7அப் 355ml இப்பவும் கிடைக்குதா?///---இந்த டின்... இங்கே சவூதியில் கிடைக்கும்...! அங்கே... இந்தியாவில் பிளாஸ்டிக் பாட்டிலில் அரை லிட்டர் / ஒரு லிட்டர் பார்த்து உள்ளேன்..! கிளாஸ் பாட்டில்... 250ml..? நியாபகம் இல்லை சகோ.நிஜாம்.
(நமக்கு அங்கே வீட்டு சாப்பாடு ஆச்சே...! அசிடிட்டிக்கு வேலை..?)
@சதீஷ் செல்லதுரை//மருத்துவர் மிக நல்லவர்...//---நிச்சயமாக ரொம்ப நல்லவர் சகோ.சதீஷ்..! அங்கே, ஒரு மெடிக்கல் ரெப் வந்து பார்க்கவில்லை... மருந்து கம்பெனி விளம்பர போர்டு கிஃப்ட் என்று ஏதும் இல்லை. அவரின் ப்ரிஸ்கிரிப்ஷன் பேட் கூட... அவரே சொந்த காசில் அடித்துக்கொண்டதாக இருக்கலாம்..! காரணம், அதில்.... மருந்து கடை / லேப் / எக்ஸ் ரே / ஸ்கேன் சென்டர் என எந்த விளம்பரமும் இல்லையே..!!!
@சுவனப் பிரியன்அலைக்கும் சலாம்.
Acidity க்கு கூகுள் மொழிமாற்றியிடம் கேட்டால் "அமிலத்தன்மை" என்றது..! வேதியியல் பெயர்..! ஆகவே, அது சரியாக படவில்லை..!
'தமிழில் என்ன கலோக்கியல் பெயர் போடலாம்' என்று தேடிக்கொண்டு இருந்தேன்...! கிடைக்கவில்லை..!
ம்ம்ம்.....//நெஞசு எரிச்சல்//----அப்பாடா...! இப்போது சேர்த்துவிட்டேன்..!
நன்றி சகோ.சுவனப்பிரியன்..!
@வவ்வால்//பாட்டி வைத்தியம் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டிங்க.//----That is a MBBS Doctor's prescription..! Grandma :- No such character came in this post..!
ஹும்... நீங்க என்னைக்குத்தான் நான் சொல்வதை நேரா பார்க்க போறீங்க சகோ.(தலைகீழ்)வவ்வால்..?
உங்களைப்போன்றேதான்... நான் சொல்வதை கவனிக்காமல்... எல்லா டாக்டர்களும் அவர்களே முன்முடிவு எடுத்தனர்..! எனக்கு... நைட் ஷிப்டில் அதிகாலை 3am - 4am break fast time... என்று சொல்லியும் கூட...! அதில் தயிர் சாதம் மட்டும்தான் சாப்பிடுவேன் என்றும் கூட...! :-(((
///ஆறு மணிக்கு வாழைப்பழம் கூட கிடைக்கலாம் , இளநீர் கிடைக்குதா?///----கிடைத்தது...! நான் அங்கிருந்த ஏழு வருடங்களாக கிடைத்துக்கொண்டுதான் இருந்தது..!
இப்போது, இங்கே எனக்கு வாரத்துக்கு 2 நாள் மட்டுமே நைட் ஷிப்ட்..! So, no acidity.. no banana.. no tender coconut..!
7-up பற்றி நான் மெடிசின் என்று சொன்னது சவூதி சூழலில்..!
ஆகவே, ///ஜல்ஜீரா சோடா///----இது சவூதியில் எங்கே கிடைக்கும்னு சொன்னீங்கன்னா எனக்கும் பயனுடையதா இருக்குமே சகோ.வவ்வால்..!
@தமிழானவன்///எனக்கும் இதே தொல்லை. நான் முயற்சி செய்கிறேன்///----தொல்லை நீங்கி தாங்களும் நலம்பெற பிரார்த்திக்கிறேன் சகோ.தமிழானவன்..!
சிட்டிசன்,
தமிழில் உங்களுக்கு இம்புட்டு தகராறு இருக்கும்னு தெரியாம போச்சு. பாட்டி வைத்தியம்னா வீட்டு வைத்தியம், வாழப்பழம் சாப்பிட சொல்வது,சுக்கு கஷாயம் குடிக்க சொல்வது போல.
டாக்டருக்கு படிச்சவரே சொன்னாலும் அப்படி தான், அதை குறிப்பிடும் வகையில் சொன்னா,தலை கீழா ,நேரானு.
//உங்களைப்போன்றேதான்... நான் சொல்வதை கவனிக்காமல்... எல்லா டாக்டர்களும் அவர்களே முன்முடிவு எடுத்தனர்..! எனக்கு... நைட் ஷிப்டில் அதிகாலை 3am - 4am break fast time... என்று சொல்லியும் கூட...! அதில் தயிர் சாதம் மட்டும்தான் சாப்பிடுவேன் என்றும் கூட...! :-(((//
என்ன கொடுமை இந்த பதிவில் இல்லாத ஒன்றை சொல்லி முன் முடிவு கிடிவுனு சொல்லிக்கிட்டு,இதான் உங்க முன் முடிவா :-))
------
ஜல்ஜீரா பொடி சூப்பர் மார்கெட்டில் கிடைக்கும், வாங்கி ,சோடாவில் கலந்து குடிங்க.சோடா எனில் காரமா,உப்பு சுவையுடன் இருக்கும், இனிப்பா இருக்க, பெப்சி ,கோக்,தம்ஸ் அப் இல் கலந்தும் குடிக்கலாம்.
இங்கே ஜல்ஜீரா எவரெஸ்ட் மசாலா பிராண்டில் கிடைக்குது.
இன்னுமொரு பிரச்சினைக்கான தீர்வா? நல்லது!! நானும் நைட் ஷிப்ட் செய்வதுண்டு.. எனக்கும் இந்த பிரச்சினை இருந்தது.. அது நைட் ஷிப்ட் முடித்து எதுவும் சாப்பிடாமல் உறங்கப்போவதால்தான் அதிகம் வருகிறது.. இப்பவெல்லாம் நைட் ஷிப்ட் முடித்து ஏதாவது சாப்பிட்டு விட்டுத்தான் உறங்க போவது இப்ப அந்த பிரச்சினை குறைவு.. நீங்க சொன்ன வாழைப்பழ வைத்தியம் முயற்சித்து பார்க்கிறேன்..
//இதற்கு நல்ல தீர்வு சோடாவில் உப்பு போட்டு குடிக்க சொல்வார்கள்.//
ஆமாம் நானும் அப்பிடித்தான் 7 அப்பில் உப்பு போட்டு குடிப்பதுண்டு.. அசிட்டியா காரணமாக ஏற்படும் வயிற்றுவலிக்கு தற்காலிகமாகவேணும் உடனடி தீர்வு கிடைக்கும்..
@வவ்வால்சகோ.வவ்வால்,
உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. //டாக்டருக்கு படிச்சவரே சொன்னாலும் அப்படி தான்//-----ம்ம்ம்... இப்படியெல்லாம் சமாளிக்காதீர்கள்..! :-))) தப்பு தப்புதான்..!
எத்தனையோ வருடங்கள் ரமளான் மாதத்தில் நோன்பு (~5am to ~6.30pm) வைத்துள்ளேன்..! அப்போதெல்லாம் அசிடிட்டி என்றால் என்னவென்றே அறியேன்..!
//இதுபோல.. இரவு விழித்து தூங்(கி)காமல் விழித்து தூங்(கி)காமல் ஆறுநாள் இரவில் வேலை பார்த்ததால்... அத்தனை வருடம் இரவில் தூங்கியே பழக்கப்பட்ட உடம்பு... இந்த திடீர் மாற்றத்தை உடனே ஏற்றுக்கொள்ளவில்லை..! அதனால் உடல் சூடு அதிகரித்து... அதன் விளைவு... வந்தது அஸிடிட்டி..!//------இப்படி தெளிவாக பதிவில் எனது பிரச்சினைக்கான காரணத்தையும் சொல்லி இருக்கிறேனே சகோ.வௌவால்...!
பகலில் மட்டும் வேலைபார்ப்போர்க்கு இரவு என்பது வீட்டில் உறங்கும் நேரம் என்பதால்தான்... சுமார் 12 நேரம் சாப்பிடுவதில்லை..!
ஆனால் இரவுப்பணியில் இருப்பவர்க்குக்கு பணியாற்றும் இரவுதான் பகல்.... தூங்கும் பகல்தான் இரவு..! இத்தைகூடவா உங்களுக்கு சொல்ல வேண்டி இருக்கும்..!!! :-)))
//என்ன கொடுமை இந்த பதிவில் இல்லாத ஒன்றை சொல்லி முன் முடிவு கிடிவுனு சொல்லிக்கிட்டு,இதான் உங்க முன் முடிவா :-))//
----அட ஏங்க...... எட்டு மணி நேரம் வேலை பார்ப்பவன் சாப்பிட மாட்டானா..? இரவுப்பணி என்றால்... பட்டினியோடு வேலை பார்த்து... அப்படியே தூங்க போயிடுவார்கள்... என்றா முடிவு செய்வீர்கள்..? என்ன ஆச்சு சகோ.வவ்வால்..?
சரி.... உங்களுக்காகவே பதிவில் சேர்த்து உள்ளேன் இப்போது...!
இப்படி....>>>உள்ளே ஒரு கேண்டீன் சர்வீஸ் உண்டு. எல்லா ஷிப்டிலும் இயங்கும். நாம் இருக்கும் இடத்துக்கு சாப்பாடு தேடி வரும். காலை 7am டிஃபன், மதியம் 12pm லஞ்ச், மாலை 7pm டின்னர், இரவுப்பணியில் அதிகாலை 3am ப்ரேக்-க்பாஸ்ட் என்று எல்லாம் உண்டு. All Subsidized - கிட்டத்தட்ட எல்லாமே ஃப்ரீ போன்றது - சாப்பிடாமல் பசியோடு இருக்க வாய்ப்பே இல்லை..!<<<
இனி எந்த "கொடுமை"க்கும் வேலை இல்லை அல்லவா..!? :-)))
@வவ்வால்//ஜல்ஜீரா பொடி சூப்பர் மார்கெட்டில் கிடைக்கும்,//
//இங்கே ஜல்ஜீரா எவரெஸ்ட் மசாலா பிராண்டில் கிடைக்குது.//
தகவலுக்கு மிக்க நன்றி சகோ.வவ்வால்...
(அவை இங்கே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்துள்ளதா என்று இந்திய கடைகளில் தேடிப்பார்க்க வேண்டும்..!)
@Riyas//நைட் ஷிப்ட் முடித்து எதுவும் சாப்பிடாமல் உறங்கப்போவதால்தான் அதிகம் வருகிறது.. //
-----சகோ.ரியாஸ்,
நீங்க முன்னிரவில் சாப்பிட்டு விட்டு நைட் ஷிப்ட் சென்றால்... இரவின் கடைசி நேரத்தில் (சஹர் நேரம்) அவசியம் சாப்பிடுங்க சகோ..! பணி இடத்தில் ஏதும் கிடைக்காது என்றால்.. கூடவே எண்ணெய் & காரம் இல்லாத உணவாக எடுத்து செல்லுங்கள்..!
//ஒவ்வொரு டாக்டராக பார்த்தேன்..! எல்லோருமே... ஜெலுசில்... ரோஸ் கலர் சிரப்... டைஜின்...//
அடப்பாவிங்களா!, உங்களுக்கும் இதைத்தான் கூறினார்களா?, எல்லோரும் ஒரு குருப்பாத்தான் அலைறாங்க போல.
எனக்கும் அதே பிரச்சினை, உங்களுக்கு டாக்டர் கொடுத்த அற்புத தீர்வை முயற்சிக்கிறேன், மேலும், இங்கு செயற்கையாக (கேன்களில்) கிடைக்கும் இளநீர் பயனளிக்குமா?
//ஜல்ஜீரா எவரெஸ்ட் மசாலா// கிடைத்தால் அதையும் தெரியப்படுத்துங்கள், முயற்சி செய்துபார்க்கலாம்.
@Syed Ibramsha//இங்கு செயற்கையாக (கேன்களில்) கிடைக்கும் இளநீர் பயனளிக்குமா?//---ஆனாலும், இயற்கை போன்று வருமா சகோ.செயத்..? ஆனாலும், கிடைப்பதை ஏற்றுக்கொண்டு பரிசோதிக்க வேண்டியதுதானே..? :-)))
//தெரியப்படுத்துங்கள்//---ஓகே சகோ...! இன்ஷாஅல்லாஹ்..!
சிட்டிசன்,
எனக்கு ஒன்றும் ஆகவில்லை, நீங்க தான் இன்னும் சூடு குறையாம இருக்கிங்க, இளநீர் குடிங்க :-))
நானும் நீங்க சொன்னதை இல்லைனு சொல்லவில்லையே, அதிகமாக ஜீரண அமிலம் வயிற்றில் சுரந்துவிட்டதுனு தான் வாழைப்பழம் சாப்பிட சொல்லி இருக்கார், எதாவது முன்னரே அதற்கு ஏற்ப சாப்பிட்டாலும் சரி ஆகி இருக்கும். இரவு விழித்து இருக்கும் போது வழக்கத்தினை விட கூடுதல் அமிலம் சுரக்கும், ஆனால் நாம் சாப்பிடுவது வழக்கமான அளவு ஆகவே இருப்பதால் ,உபரி அமிலம்.
பல மருத்துவர்கள் ஜெலுசில் குடிக்க சொல்லக்காரணம் அமிலத்தினை சமப்படுத்திவிடும் என்ற நேரடியான கணக்கின் அடிப்படையிலேயே. அது மருத்துவ ரீதியான பார்வை.
ஆனால் வாழைப்பழம் சாப்பிட்டால் அமிலம் அதனை செரிக்க செலவாகி சரியாகிவிடும் என அடிப்படையான எளிய உண்மையை மருத்துவர் சொல்லி இருக்கார்னு சொன்னேன்.
அது ஏன் வாழைப்பழம், எனக்கேட்கலாம், எளிதில் செரிக்கும், காலையில் வேலை முடித்து வருபவரை போய் பரோட்டா சாப்பிடுன்னு சொன்னால் சரியா வராது.எனவே வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு படுத்தாலும் செரித்துவிடும். இங்கெல்லாம் செரிமானத்துக்காவே தினம் வாழைப்பழம் சாப்பிடுகிறோம்.
அப்புறம் ஆறிய சுடு நீர், மிதமான சுடுநீர் என குடித்தாலும் அசிடிட்டி மட்டுப்படும்னு சொன்னதை பார்க்கவில்லையோ. மேலும் சரியான நேரத்துக்கு சாப்பிடவில்லை என்றாலும் அவ்வப்போது நீர் குடித்துக்கொண்டே இருக்கணும். இது அமிலத்தினை டைலூட் செய்து அசிடிட்டி உருவாகமால் தடுத்துவிடும்.
அப்புறம் நீங்க தயிர் சாதம்னு சொன்னதுலவும் இரு பிரச்சினை இருக்கு, அசிடிட்டி வராமல் இருக்கும் போது நல்லது,அசிடிட்டி இருக்கும் நிலையில் தயிர் சாதம் இன்னும் அதிகம் ஆக்கும் ,தயிர் எளிதில் செரிக்காது.மேலும் புளிச்ச ஏப்பம் வேறு வரும்.காரணம் தயிரிலும் லேக்டிக் ஆசிட் உள்ளதே. அதனால் தான் இரவில் தயிர் சாதம் சாப்பிட கூடாது என்பார்கள்.
தயிர் சூடு ,மோர் குளிர்ச்சி ஆகும். நீங்க நைட் ஷிப்ட்ல தயிர் சாதம் சாப்பிட்டது அசிடிட்டியை அதிகமாக்கி இருக்க வேண்டும்.
----------
செயற்கை இளநீர் ,ஒரு குளிர் பானம் போலவே, தேங்காயின் கான்சென்ட்ரேட்டில் நீர் சேர்த்து செய்யப்படுவது. மாதுளம் பழச்சாறு குடியுங்கள் அசிடிட்டி, வயற்று கோளாறுக்கும் நல்லது.
துவர்ப்பு சுவையுடன் இருக்கும் உணவு ஜீரணத்திற்கு,அசிடிட்டிக்கு நல்லது. அதனால் தான் அறுசுவை உணவு சாப்பிட சொல்கிறார்கள். சாப்பிட்ட பின் வெற்றிலையுடன் பாக்கு சேர்த்து போடுவதும் அதுவே காரணம்.
சகோ.சிட்டிசன்!இன்னொரு வாழைப்பழம் சாப்பிட்டீங்களான்னு மீண்டும் பார்க்க வந்தேன்.உங்களுக்காக சிரமப்பட்டு சர்பத் விதை லேபிளை பார்த்தேன்.ஒரு வெள்ளையான விதை இஷாபுல் புசி (Isabul bushi) கருப்பாக இருக்கும் விதை துக்மா (Tukma) என்று எழுதியிருக்கிறது.
சவுதியின் உணவுப்பொருட்கள் தரமானவை.முக்கியமாக பால்,பழரசங்கள் போன்றவை அக்மார்க் சுத்தம்.சகோ.சுவனப்பிரியன் பாலாறு,தேனாறு என சவுதி விவசாயத்தை தொடாமல் பால்,பழரசங்களை சொல்லியிருந்தால் ஆமாம் சாமி சொல்ல நானும் துணையாக வந்திருப்பேன்.வீட்டில் சாதியா கோழி,அல்மராய் தயிர்,பால் என்று சவுதி தயாரிப்புக்களையே தேடி தேடி வாங்குகிறோம்.அங்கேயிருந்து விம்டோ என்ற பிளாக்பெர்ரி சர்பத் கூட கிடைக்கிறது.வளைகுடா நாடுகளுக்கே உரித்தான பல ஆயுர்வேத குண நலன்கள் உரிய ரோஜா இதழ்,துளசி இலை,ஜாத்தர் இலை,மாதுளம்பழ விதைகள் போன்றவற்றையெல்லாம் இன்னும் அனுபவ பூர்வமாக உபயோகித்துப்பார்க்க உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு இருக்கிறது.நான் முந்தைய பின்னூட்டத்தில் சொன்ன பொருட்கள் திரவப்பொருட்களாகவும் கிடைக்கிறது.எனவே பால்,பழரசம்,விம்டோ,மோர் என அனைத்திலும் ஒரு தேக்கரண்டி கலந்து முயற்சித்துப்பாருங்கள்.தொடர்ந்து டீ குடித்து வந்ததை நிறுத்தி விட்டு இந்த பானங்களையே நான் பருகுகிறேன்.நன்றி.
சலாம் முஹம்மது ஆசிக்,
நல்ல பதிவு..பொதுவாகவே வாழைப்பழம் உடம்பிற்க்கு நல்லது... உடம்பிற்க்கு சக்தியும் அளிக்கக கூடிய விலை குறைந்த எளிய உணவு... நான் நைட் ஷிப்ட் போனா நல்லா தூங்கிடுவேன்..சோ நோ அசிடிட்டி பிரச்சனை...
ராபின் வந்து நீங்க ஏன் வாழைப்பழம் பத்தி எழுதுநீங்க??? பேரிச்சம்பழம் பத்தி ஏன் எழுதலன்னு கேட்டு இருப்பாரே?? எங்க அந்த பின்னூட்டத்தை காணவில்லை??? மட்டுறுத்தி விட்டீர்களா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
@வவ்வால்//நானும் நீங்க சொன்னதை இல்லைனு சொல்லவில்லையே//-----பொறுமையான தெளிவான நீண்ட விளக்கத்துக்கு நன்றி சகோ.வவ்வால்.
@ராஜ நடராஜன்///உங்களுக்காக சிரமப்பட்டு சர்பத் விதை லேபிளை பார்த்தேன்.ஒரு வெள்ளையான விதை இஷாபுல் புசி (Isabul bushi) கருப்பாக இருக்கும் விதை துக்மா (Tukma) என்று எழுதியிருக்கிறது. ///---சிரமப்பட்டு தகவல் திரட்டி தந்தமைக்கு மிகவும் நன்றி சகோ.ராஜ நடராஜன்..!
//சாதியா கோழி//----இது...
சவூதி தயாரிப்பு அல்ல சகோ..!
பிரேஸில்..!
தங்களின் மேலதிகமான விபரங்களுடன் கூடிய டிப்ஸ் அனைத்தும் அருமை சகோ..! பகிர்வுக்கு மிகவும் நன்றி..!
@சிராஜ்
அலைக்கும் ஸலாம் வரஹ்...
///நான் நைட் ஷிப்ட் போனா [["போயிட்டு வந்தா"--ன்னு அப்புறமா வந்து கமென்ட் போட்டு சமாளிக்க கூடாது]] நல்லா தூங்கிடுவேன்///-------ப்ரோஜக்ட் ஏதும் இல்ல்லாமல்... கம்பெனிக்கு சென்று பொட்டிக்கு முன்னால் ஈ ஓட்டாமல் தூங்கிட்டு வரும் மென்பொருள் வல்லுநர் சகோ.சிராஜ் அவர்களே...! உங்களுக்கும் ஒரு ஜீவன் சம்பளம் கொடுக்குதே...! என்னத்த சொல்ல...! :-)))
உரையாடலை படித்துவிட்டு நன்கு சிரித்தேன்... நல்ல மருத்துவர்...நல்ல பேஷன்ட்... :)) உண்மையிலேயே மிக நல்ல மருத்துவமுறையைப் பகிர்ந்துள்ளீர்கள்... எனக்குத் தெரிந்தவர்களிடம் நிச்சயம் சொல்கிறேன்.... நன்றி. மேலதிக தகவலுக்கு வவ்வாலுக்கும் நன்றி.
அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு
சொல்லிச் சென்றவிதம் அருமை
வாழ்த்துக்கள்
Tha.ma 20
நல்ல கட்டுரை நல்ல டிப்ஸ்..அவசியம் அனைவரும் தெரிந்துக் கொள்ளவேண்டிய தகவல்.
புதிய வரவுகள்:
மவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்,இறைவன் நாடினால் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?
www.tvpmuslim.blogspot.com
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )
அஸிடிட்டி வந்த போது ரெட் புல் ( டிரிங்க் )ஒன்னு குடிச்சால் உடனே அந்த வயிற்று வலி இருக்கும் இடம் தெரியாமல் போயிடும் :-).
இது உடனடி தீர்வு :-)
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!