சென்ற மாதம், எதேச்சையாக டிவி நியூசில் கேட்ட செய்தி..!
ஆனால்......
இந்த விஷயம்தான் என்னை மிகவும் உறுத்துகிறது சகோ..!
மாவட்டம்.....
என்னாலே முளிக்கிறவே..? புரியலையாலே...?
'உழைப்பவருக்கே நிலம் சொந்தம்', 'இருப்பவருக்கே இல்லம் சொந்தம்' போன்ற வெற்று ஓட்டரசியல் கற்பிக்கும் பிற்போக்கு சித்தாந்த உந்துதலுக்கு உள்ளாகி... 'சில வருடம் உழைத்து பராமரித்த தோட்டம்... தனக்கே சொந்தம்' என்று ஒரு தோட்டக்காரர், உரிமையாளருக்கு எதிராக அத்தோட்டத்துக்கு உரிமை கோரி வழக்கு தொடுக்க, நீதிபதியோ... 'அந்த தோட்டம் உரிமையாளருக்கே சொந்தம்' என்றும்... இப்படி ஒரு அநியாய வழக்கை போட்டதற்காக, தோட்டக்காரருக்கு இருபதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு அளித்தார்..! அபூர்வமான இதுபோன்ற "மெயின் தீர்ப்புடன் இணைந்த இலவச தீர்ப்பு"... அதாவது '2 in 1 நல்ல தீர்ப்புகள்' நாட்டுக்கு ஆரோக்கியமானவை..! தீர்ப்பை வரவேற்கிறேன்..!
மனிதர்கள் மனங்கள் வேறுபடுகின்றன. அதற்கேற்ப செயல்களும் வேறுபடுகின்றன. அவை தமக்கும் பிறருக்கும் நன்மையையோ தீமையையோ விளைவிக்கின்றன..! ஒரு மனம் தமக்கோ பிறருக்கோ தீமையின்றி நன்மையாக 'என்ன சிந்திக்கலாம்', 'எதை செய்யலாம்' என்ற கட்டுப்பாடுகள் தான் வாழ்வியல் சட்டங்கள்..! சமூக அமைதிக்கு இவை அஸ்திவாரங்கள்..! இதனை செயல்படுத்த / நடைமுறை சாத்தியப்படுத்த மனித மனங்களில் இறையச்சம் தேவைப்படுகிறது..!
இறையச்சம் இல்லாதோருக்கு ஓர் அரசின் சட்டங்கள், அதனை கண்காணித்து அமல்படுத்தும் காவலர்கள், மீறுவோரை தண்டிக்க நீதிமன்றங்கள் எல்லாம் அவசியம்..! இந்த நடைமுறையில்... சகலருக்கும் சமநீதியான பாரமச்சமற்ற தண்டனைகள் சரியாகவும் விரைவாகவும் வழங்கப்பட்டால்தான் சட்டம் மற்றும் நீதித்துறையின் நோக்கமான சமூக அமைதி நாட்டில் நிலவும்..! ஆனால்... உண்மையில் எல்லாம் சரியாகவா நடந்து கொண்டிருக்கிறது சகோ..?
இந்த விஷயம்தான் என்னை மிகவும் உறுத்துகிறது சகோ..!
மாவட்டம்.....
வாதி செத்துருவான்...
பிரதிவாதி செத்துருவான்...
வாதி வக்கீல் செத்துருவான்...
பிரதிவாதி வக்கீல் செத்துருவான்...
மாஜிஸ்ட்ரேட் செத்துருவார்...
வழக்கு மட்டும்
வாய்தா வாங்கி
வாய்தா வாங்கி
வருடங்கள் கடந்து
வருடங்கள் கடந்து
ஒருவழியா பிரதிவாதிக்கு சாதக தீர்ப்பு வந்தால்....
வாதி மகன் மேல் முறையீடு செய்வான்...
பிரதிவாதி மகள் மறுதளிப்பாள்...
உயர்.....
வாதி மகன் செத்துருவான்...
பிரதிவாதி மகள் செத்துருவாள்...
வாதி மகன் வக்கீல் செத்துருவாள்...
பிரதிவாதி மகள் வக்கீல் செத்துருவான்...
ஜட்ஜ் செத்துருவார்...
வழக்கு மட்டும் தீர்க்கப்படாமல்
வாய்தா வாங்கி
வாய்தா வாங்கி
வழக்கு பல்லாண்டுகள்
வழக்கு பல்லாண்டுகள்
வாழ்வாங்கு வாழ்ந்து
ஒருவழியாக வாதிக்கு சாதக தீர்ப்பு வந்தால்....
ஒருவழியாக வாதிக்கு சாதக தீர்ப்பு வந்தால்....
பிரதிவாதி பேத்தி மேல் முறையீடு செய்வாள்...
வாதி பேரன் மறுதளிப்பான்...
உச்சம்.....
வாதி பேரன் செத்துருவான்...
பிரதிவாதி பேத்தி செத்துருவாள்...
வாதி பேரன் வக்கீல் செத்துருவான்...
பிரதிவாதி பேத்தி வக்கீல் செத்துருவாள்...
பெஞ்ச் செத்துரும்...
வழக்கு மட்டும் தீர்க்கப்படாமல்
வாய்தா வாங்கி
வாய்தா வாங்கி
வாழ்வாங்கு வாழ்ந்து
அதன் மூலம் நீதி மன்ற ஊழியர்களை எல்லாம்...
வாழ்வாங்கு வாழவைத்துக்கொண்டே இருக்க்க்க்க்க்க்க.....
இப்படியாக...
மாவட்டம்...
உயர்...
உச்சம்...
என்று...
மேல் முறையீடுகள் மூலம்...
மேல் முறையீடுகள் மூலம்...
ஒரே வழக்குக்கு எத்தனை தீர்ப்புகள்..?!
அடப்போங்கப்பா...
நீங்களும் உங்க நீதி முறையும்..!
ஆனால்.........
இங்கே என்ன நடக்கிறது என்று பாருங்க சகோ...!
எலே பட்டாபி...
எலே பட்டாபி...
கொட்ரா தண்டோராவ...
எங்கடா நாட்டாம...
கூட்ரா பஞ்சாயத்த...
நாட்டாம வந்தாச்சுலே..!
ஆர்லே அது..?
ஆர்லே அது..?
என்லே பஞ்சாயத்து...?
எலே பட்டாபி... எடுலே ஆஷ்ட்ரேவை...
எலே பட்டாபி... எடுலே ஆஷ்ட்ரேவை...
ம்ம்ம்... ஆரம்பிலே...
"...... ...... ......"
ம்ம்ம்... அப்டியாலே...?
இதுக்கு நீ என்னம்லே சொல்லுதே...
"...... ...... ......"
ம்ம்ம்... இப்டியாலே...?
அப்படின்னா...
".... .... .... .... ...."
இதுதாம்லே எம்மட தீர்ப்பு...!
அம்புட்டுதேம்லே...!
கிளம்புலே...!
கிளம்புலே...!
எலே... பார்த்தசாரதி... ஸ்டார்ட் பண்ணுடா டொயோட்டாவ...
'நாட்டாம.... தீர்ப்ப மாத்தி சொல்லூ......'
எலே... பார்த்தசாரதி... நிறுத்துடா டொயோட்டாவ...
ஆருலே அப்படி சவுண்டு உட்டது...?
ஆலமரத்து கட்ட பஞ்சாயத்துலே ஏதுலே அப்பீலு..?
எட்டுப்பட்டியிலே என்னிக்குலே நடந்திருக்கு அப்பீலு...?
எங்க ஐயாவோட ஐயாரு காலத்துலே
இங்கிலீசுகாரனே கேட்டதில்லலே அப்பீலு...!
நீ கேக்குரயாலே அப்பீலு...!
இது 'கன்ட்டம்ப்ட் ஆஃப் கட்ட பஞ்சாயத்து'லே..!
இதுக்கும் உண்டுலே இங்கே எம்மட தண்டனை...
சொல்றேன் கேட்டுகலே...
சொல்றேன் கேட்டுகலே...
இன்னிலேருந்து அஞ்சு வருஷம்
உமக்கு ஆரும் எட்டுப்பட்டிலே சிம் கார்டு விக்க மாட்டாங்கலே...!
அப்டியே நீ வெளியூரு போய் சிம்மு வாங்கி வந்து போட்டாலும்
உம்மட செல்ஃபோனுக்கு மட்டும் அஞ்சு வருஷம்
எந்த மொபைல் கம்பெனி சிக்னலும்
எம்மட எட்டுப்பட்டி டவர் எதுலேருந்தும் வராதுலே..!
என்னாலே முளிக்கிறவே..? புரியலையாலே...?
உம்ம ஊரைவிட்டு அஞ்சு வருஷம் தள்ளி வக்கிறோம்லே..!
கேட்டுக்கலே...
இன்னும் பாக்கி இருக்குலே...
இதுக்கு மேலே நீ ஏதாச்சும் வில்லத்தனம் பண்ணியினா...
உம்ம உலகத்தே விட்டே தள்ளி வப்பம்லே...
எப்படீன்னு கேளுலே....
எப்டீங்ங்ங்....
அதாவதுலே....
உம்ம வீட்டு இண்டர்நெட்ட கட் பண்ணிருவம்லே...!
இது இந்த நாட்டமையோட 'வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு' (2 in 1) தீர்ப்புலே..!
16 ...பின்னூட்டங்கள்..:
.
.
Click >>>>
இதெல்லாம் நம்ம நாட்டிலே தான். பாருங்கள். இந்தியாவில் அரசியல் அமைதி நிலவ இப்படியான திருமணம் தேவை !!!
இஸ்லாத்தில் சாதி இல்லை <<<<< TO READ.
.
.
சப்பா............ஆஆஆ...முடியல்ல...சூப்பர்ப்பா உலகத்த விட்டு தள்ளி வைக்கிறது..செம..செம...
/// இது 'கன்ட்டம்ப்ட் ஆஃப் கட்ட பஞ்சாயத்து'லே..! ///
தலைப்பு செம சகோ... அருமையா இருக்கு.. ரூம் போட்டு யோசிப்பீங்களோ????
//வாதி மகன் செத்துருவான்...
பிரதிவாதி மகள் செத்துருவாள்...
வாதி மகன் வக்கீல் செத்துருவாள்...
பிரதிவாதி மகள் வக்கீல் செத்துருவான்...
ஜட்ஜ் செத்துருவார்...
வழக்கு மட்டும் தீர்க்கப்படாமல்
வாய்தா வாங்கி
வாய்தா வாங்கி
வழக்கு பல்லாண்டுகள்
வாழ்வாங்கு வாழ்ந்து
ஒருவழியாக வாதிக்கு சாதக தீர்ப்பு வந்தால்....
பிரதிவாதி பேத்தி மேல் முறையீடு செய்வாள்...
வாதி பேரன் மறுதளிப்பான்... *//
ஹ..ஹா..ஹா.. சத்தியமான உண்மை சகோ....
கோர்ட் போய் கேஸ் போடறதுக்கு...எதிராளி கால்ல விழுந்து(சும்மா பேச்சு வழக்கு காண்டி தான், பத்வா டிபார்ட்மன்ட் சண்டைக்கு வந்திடாதீங்க)
கதறி கதறி மன்னிப்பு கேட்டுடலாம்... தப்பு அவன் மேல இருந்தாலும் சரியே....
படிப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் இதன் உட்கருத்து நூற்றுக்கு நூறு உண்மை.
" INCREDIBLE INDIA " ன்னு சும்மாவா சொன்னாங்க ... பாய் படத்துல சொம்ம்புக்கு SCRIPT எழுதாம விட்டீங்களே ...!!!!!
@சிந்தனை
//பாய் படத்துல சொம்ம்புக்கு SCRIPT எழுதாம விட்டீங்களே ...!!!!!//---Wow...!!!என்னவொரு ஆழ்ந்த வாசிப்பு...!!! சேர்த்துட்டேன் சகோ.சிந்தனை..!
///எலே பட்டாபி... எடுலே ஆஷ்ட்ரேவை...///
சலாம் சகோ ஆஷிக்!
ஹா..ஹா..ஹா...கலக்கல் பதிவு.
இப்படி ஜவ்வு மாதிரி வழக்கை இழுத்துக் கொண்டு சென்றால் நாளடைவில் சம்பந்தப்பட்டவர்கள் ராசியாகி விடுவார்கள் என்று இதற்கு வியாக்ஞானம் தருகிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவனுக்கு நீதி மறுக்கப்படுவதை ஏனோ இவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை.
அஸ்ஸலாமு அலைக்கும் !
ரசித்து சிரித்து யோசிக்க வைத்த பதிவு.வாழ்த்துக்கள் சகோ.
இதுமூலமா நீங்கள் கூற விரும்புவது என்ன? மேல் முறைஇடு தேவை இல்லை என்றா? ஆமன்றால் , பாபர் மசதி இட வழக்கு உச்ச நீதி மன்றம் போயிருக்காதே? இடம் மூன்றா துண்டாடப்பட்டு இந்நேரம் நீதி செத்ருக்குமே? முன்சீப் நீதி மன்றம் தந்த தப்பான தூக்கு; உயர் நீதி மன்றத்தில் ரத்தகிருக்கே? மேல்முறையீடு இல்லைன்னா உயிர் போயிருக்குமே? போனா வருமா? யோசித்துதான் எழுதர்களா? சும்மா பகடிய?
//இது 'கன்ட்டம்ப்ட் ஆஃப் கட்ட பஞ்சாயத்து'லே..!//
ரெம்ப.... யோசிக்கிறீங்க..
@ChemmaL
//இதுமூலமா நீங்கள் கூற விரும்புவது என்ன? மேல் முறைஇடு தேவை இல்லை என்றா?//
ஆமாம்
//ஆமன்றால் , பாபர் மசதி இட வழக்கு உச்ச நீதி மன்றம் போயிருக்காதே? இடம் மூன்றா துண்டாடப்பட்டு இந்நேரம் நீதி செத்ருக்குமே?//
நீதியை ஏன் சாக விட்டீங்க சகோ..?
உச்ச நீதி மன்றத்திலும் அது செத்து போனா அப்புறம் எங்கே போவீங்க சகோ..? ஏன், செஷன்ஸ் கோர்ட்டிலேயே சாக விடாம காப்பாத்த முடியாதா..? இங்கே உள்ள அதே சட்டம் தானே டில்லி கோர்ட்டிலும்..? இங்கே முடியாது... அங்கே மட்டுமே முடியும்னா அது மட்டுமே இருக்கலாமே..?
///முன்சீப் நீதி மன்றம் தந்த தப்பான தூக்கு; உயர் நீதி மன்றத்தில் ரத்தகிருக்கே?///
"தப்பான தூக்கு" ஏன் தரனும்..? இங்கேயே ரைட்டா தந்துட்டா.. அப்புறமா மேலே அப்பீல் தேவை இல்லை அல்லவா..?
///மேல்முறையீடு இல்லைன்னா உயிர் போயிருக்குமே? போனா வருமா? ///
தப்பான உயிர் போகனும். சரியான உயிர் பிழைக்கணும். ஒரே தீர்ப்பில்..! மேல் முறையீடு இலலாமல்..! ஏன்... இது முடியாதா..?
///யோசித்துதான் எழுதர்களா? சும்மா பகடிய?///
:-)) ரொம்ப யோசிச்சு தான் சகோ எழுதினேன். நீங்க கேக்குறது தான் இப்போ எனக்கு பகடியா தெரியுது சகோ.ச்செம்மல்ல்..!
மனிதர்கள் எழுதும் தீர்ப்பில் எல்லாமே சரியாக அமைய வாய்ப்பில்லை சகோ...மிக கால தாமதமான தீர்ப்புகள் மிக கொடுமையானதே.. அதற்காக கட்ட பஞ்சாயத்து முறைகள் சரி என்றால் வலிமையுள்ளவன் சொல்வதே தீர்ப்பாகவும் சட்டமாகவும் அமையும் அபாயம் உருவாகும்.சிரிக்க மட்டும் இந்த பதிவை எடுத்து கொள்கிறேன்..உண்மை முகத்தில் அறைந்தாலும்....
@சதீஷ் செல்லதுரை///மனிதர்கள் எழுதும் தீர்ப்பில் எல்லாமே சரியாக அமைய வாய்ப்பில்லை சகோ...///---சரியாக சொன்னீர்கள் சகோ.சதீஷ்..!
மனிதன் இயற்றிய சட்டத்தில் கோளாறுகள் இருப்பதால்தான் ஏகப்பட்ட முறை சட்டத்திருத்தம் தேவைப்பட்டு உள்ளது.
///மிக கால தாமதமான தீர்ப்புகள் மிக கொடுமையானதே..///---இதை மறுக்கப்படும் நீதி என்கிறார்கள்..!
///அதற்காக கட்ட பஞ்சாயத்து முறைகள் சரி என்றால் வலிமையுள்ளவன் சொல்வதே தீர்ப்பாகவும் சட்டமாகவும் அமையும் அபாயம் உருவாகும்.///---முற்றிலும் தவறான புரிதல் சகோ..!
நான் என்ன சொல்கிறேன் என்றால்... "நீதியில் தரம் குறைந்த கட்ட பஞ்சாயத்துலேயே மேல்முறையீடு இல்லையே... அது contempt of court போல அங்கே கருதப்படுகிறதே... அப்படி இருக்க, உயர்வான நீதித்துறையில்... எப்படித்தான் இந்த மேல்முறையீட்டை அனுமதிக்கிறார்களோ... அதுவும் contempt of court மாதிரிதானே...?" ---இதுதான் சகோ. அந்த காமடியின் உள்ளடக்கம்..!
///சிரிக்க மட்டும் இந்த பதிவை எடுத்து கொள்கிறேன்..உண்மை முகத்தில் அறைந்தாலும்....///---இல்லை சகோ.சதீஷ்..! இது சிரிக்க வைத்து சிந்திக்க வைக்க போடப்பட்ட பதிவுதான்..! :-))
கலக்குங்க சகோ.வித்தியாச பதிவு...பட்டைய கலப்புங்க....
என் புதிய பதிவுகள்:அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,ஷேர் மார்க்கெட் ஹலாலா? ஹராமா?மனைவியிடம் எப்படி நடந்துக் கொள்வது --www.tvpmuslim.blogspot.com
@VANJOOR
@சிட்டுக்குருவி
@சிராஜ்
@Barari
@சிந்தனை
@சுவனப் பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
@ஸாதிகாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
@ChemmaL
@வ.அன்சாரி
@சதீஷ் செல்லதுரை
@திருவாளப்புத்தூர் முஸ்லீம்
தங்கள் அனைவர் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி சகோஸ்..!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!