அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Tuesday, May 22, 2012

16 இது 'கன்ட்டம்ப்ட் ஆஃப் கட்ட பஞ்சாயத்து'லே..!

சென்ற மாதம், எதேச்சையாக டிவி நியூசில் கேட்ட செய்தி..!


'உழைப்பவருக்கே நிலம் சொந்தம்', 'இருப்பவருக்கே இல்லம் சொந்தம்' போன்ற வெற்று ஓட்டரசியல் கற்பிக்கும் பிற்போக்கு சித்தாந்த உந்துதலுக்கு உள்ளாகி... 'சில வருடம் உழைத்து பராமரித்த தோட்டம்... தனக்கே சொந்தம்' என்று ஒரு தோட்டக்காரர், உரிமையாளருக்கு எதிராக அத்தோட்டத்துக்கு உரிமை கோரி வழக்கு தொடுக்க, நீதிபதியோ... 'அந்த தோட்டம் உரிமையாளருக்கே சொந்தம்' என்றும்... இப்படி ஒரு அநியாய வழக்கை போட்டதற்காக, தோட்டக்காரருக்கு இருபதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு அளித்தார்..! அபூர்வமான இதுபோன்ற "மெயின் தீர்ப்புடன் இணைந்த இலவச தீர்ப்பு"... அதாவது '2 in 1 நல்ல தீர்ப்புகள்' நாட்டுக்கு ஆரோக்கியமானவை..! தீர்ப்பை வரவேற்கிறேன்..!

மனிதர்கள் மனங்கள் வேறுபடுகின்றன. அதற்கேற்ப  செயல்களும் வேறுபடுகின்றன. அவை தமக்கும் பிறருக்கும் நன்மையையோ தீமையையோ விளைவிக்கின்றன..! ஒரு மனம் தமக்கோ பிறருக்கோ தீமையின்றி நன்மையாக 'என்ன சிந்திக்கலாம்', 'எதை செய்யலாம்' என்ற கட்டுப்பாடுகள் தான் வாழ்வியல் சட்டங்கள்..! சமூக அமைதிக்கு இவை அஸ்திவாரங்கள்..! இதனை செயல்படுத்த / நடைமுறை சாத்தியப்படுத்த மனித மனங்களில் இறையச்சம் தேவைப்படுகிறது..!

இறையச்சம் இல்லாதோருக்கு ஓர் அரசின் சட்டங்கள், அதனை கண்காணித்து அமல்படுத்தும் காவலர்கள், மீறுவோரை தண்டிக்க நீதிமன்றங்கள் எல்லாம் அவசியம்..! இந்த நடைமுறையில்... சகலருக்கும் சமநீதியான பாரமச்சமற்ற தண்டனைகள் சரியாகவும் விரைவாகவும்  வழங்கப்பட்டால்தான் சட்டம் மற்றும் நீதித்துறையின் நோக்கமான சமூக அமைதி நாட்டில் நிலவும்..! ஆனால்... உண்மையில் எல்லாம் சரியாகவா நடந்து கொண்டிருக்கிறது சகோ..? 

னால்......  

இந்த விஷயம்தான் என்னை மிகவும் உறுத்துகிறது சகோ..!

மாவட்டம்.....

வாதி செத்துருவான்...
பிரதிவாதி செத்துருவான்...
வாதி வக்கீல் செத்துருவான்...
பிரதிவாதி வக்கீல் செத்துருவான்...
மாஜிஸ்ட்ரேட் செத்துருவார்...
வழக்கு மட்டும்
வாய்தா வாங்கி
வாய்தா வாங்கி
வருடங்கள் கடந்து
ஒருவழியா பிரதிவாதிக்கு சாதக தீர்ப்பு வந்தால்....

வாதி மகன் மேல் முறையீடு செய்வான்...
பிரதிவாதி மகள் மறுதளிப்பாள்...

உயர்.....

வாதி மகன் செத்துருவான்...
பிரதிவாதி மகள் செத்துருவாள்...
வாதி மகன் வக்கீல் செத்துருவாள்...
பிரதிவாதி மகள் வக்கீல் செத்துருவான்...
ஜட்ஜ் செத்துருவார்...
வழக்கு மட்டும் தீர்க்கப்படாமல்
வாய்தா வாங்கி
வாய்தா வாங்கி
வழக்கு பல்லாண்டுகள்
வாழ்வாங்கு வாழ்ந்து
ஒருவழியாக வாதிக்கு சாதக தீர்ப்பு வந்தால்....

பிரதிவாதி பேத்தி மேல் முறையீடு செய்வாள்...
வாதி பேரன் மறுதளிப்பான்...

உச்சம்.....

வாதி பேரன் செத்துருவான்...
பிரதிவாதி பேத்தி செத்துருவாள்...
வாதி பேரன் வக்கீல் செத்துருவான்...
பிரதிவாதி பேத்தி வக்கீல் செத்துருவாள்...
பெஞ்ச் செத்துரும்...
வழக்கு மட்டும் தீர்க்கப்படாமல்
வாய்தா வாங்கி
வாய்தா வாங்கி
வாழ்வாங்கு வாழ்ந்து 
அதன் மூலம் நீதி மன்ற ஊழியர்களை எல்லாம்...
வாழ்வாங்கு வாழவைத்துக்கொண்டே இருக்க்க்க்க்க்க்க.....

இப்படியாக...
மாவட்டம்...
உயர்...
உச்சம்...
என்று...
மேல் முறையீடுகள் மூலம்...
ஒரே வழக்குக்கு எத்தனை தீர்ப்புகள்..?!

அடப்போங்கப்பா...
நீங்களும் உங்க நீதி முறையும்..!

னால்.........



இங்கே என்ன நடக்கிறது  என்று  பாருங்க சகோ...!

எலே பட்டாபி... 
கொட்ரா தண்டோராவ...
எங்கடா நாட்டாம...
கூட்ரா பஞ்சாயத்த...

நாட்டாம வந்தாச்சுலே..!
ஆர்லே அது..?
என்லே பஞ்சாயத்து...?
எலே  பட்டாபி... எடுலே ஆஷ்ட்ரேவை...
ம்ம்ம்... ஆரம்பிலே...
"......  ...... ......"
ம்ம்ம்... அப்டியாலே...?
இதுக்கு நீ என்னம்லே சொல்லுதே...
"...... ...... ......"
ம்ம்ம்... இப்டியாலே...?

அப்படின்னா...
".... .... .... .... ...."
இதுதாம்லே எம்மட தீர்ப்பு...!
அம்புட்டுதேம்லே...!
கிளம்புலே...!

எலே... பார்த்தசாரதி... ஸ்டார்ட் பண்ணுடா டொயோட்டாவ...

'நாட்டாம.... தீர்ப்ப மாத்தி சொல்லூ......'

எலே... பார்த்தசாரதி... நிறுத்துடா டொயோட்டாவ...

ஆருலே அப்படி சவுண்டு உட்டது...?
ஆலமரத்து கட்ட பஞ்சாயத்துலே ஏதுலே அப்பீலு..?
எட்டுப்பட்டியிலே என்னிக்குலே நடந்திருக்கு அப்பீலு...?
எங்க ஐயாவோட ஐயாரு காலத்துலே
இங்கிலீசுகாரனே கேட்டதில்லலே அப்பீலு...!
நீ கேக்குரயாலே அப்பீலு...!

இது 'கன்ட்டம்ப்ட் ஆஃப் கட்ட பஞ்சாயத்து'லே..!

இதுக்கும் உண்டுலே இங்கே எம்மட தண்டனை...
சொல்றேன் கேட்டுகலே...
இன்னிலேருந்து அஞ்சு வருஷம்
உமக்கு ஆரும் எட்டுப்பட்டிலே சிம் கார்டு விக்க மாட்டாங்கலே...!

அப்டியே நீ வெளியூரு போய் சிம்மு வாங்கி வந்து போட்டாலும்
உம்மட செல்ஃபோனுக்கு மட்டும் அஞ்சு வருஷம் 
எந்த மொபைல் கம்பெனி சிக்னலும் 
எம்மட எட்டுப்பட்டி டவர் எதுலேருந்தும் வராதுலே..!

என்னாலே முளிக்கிறவே..? புரியலையாலே...?
உம்ம ஊரைவிட்டு அஞ்சு வருஷம் தள்ளி வக்கிறோம்லே..!

கேட்டுக்கலே...
இன்னும் பாக்கி இருக்குலே...
இதுக்கு மேலே நீ ஏதாச்சும் வில்லத்தனம் பண்ணியினா...
உம்ம உலகத்தே விட்டே தள்ளி வப்பம்லே...
எப்படீன்னு கேளுலே....

ப்டீங்ங்ங்....

அதாவதுலே....
உம்ம வீட்டு இண்டர்நெட்ட கட் பண்ணிருவம்லே...!
இது இந்த நாட்டமையோட 'வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு' (2 in 1) தீர்ப்புலே..!

எலே... பார்த்தசாரதி...
என்ரா அப்படி மலச்சி நின்னுட்டே...
எட்ரா நம்ம  டொயோட்டாவ...
விட்ரா நேரா வீட்டுக்கு...!
.

16 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...