சில நாட்கள் முன்பு ஒரு மிகப்பெரிய பரப்பரப்பு திருப்புமுனையாக, உலகின் மிகப்பிரபல பரிணாமவாதியும், அறிவியல் கற்றறிந்த "நாத்திக தீவிரவாதி"-யுமான பேராசிரியர் ரிச்சர்ட் டாக்கின்ஸ், "இனிமேல் தான் ஒரு நாத்திகர் அல்ல" என்று அறிவித்து விட்டார்..!
[Agnostic - கடவுளை என்றுமே முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என நம்புபவர்; Atheist - கடவுள் நம்பிக்கை இல்லாதவர். (நன்றி: Google translation) ]
20-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த அறிவியலாளர் என்று பலராலும் பாராட்டப்பட்ட பிரபல விஞ்ஞானி டாக்டர். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இப்படித்தான் சொன்னார்... "இறைமார்க்கம் அற்ற அறிவியல் நொண்டி; அறிவியல் அற்ற இறைமார்க்கம் குருடு" என்றார்..!
அவர் அறிந்த யூதமதம் அடிப்படையில் அப்படி சொல்லி இருக்கலாம். ஆனால், குர்ஆனை
பொருளுணர்ந்து கற்றவர்களுக்குத்தான் தெரியும்... அவ்வாக்கியத்தின் முதல் பகுதியில் உள்ள
ஆழம் எவ்வளவு பெரிது என்று..!
(முஹம்மதே!) 'உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை' என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். மற்றும் புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது..! (குர்ஆன் - 34:6)
ஐன்ஸ்டீன் மட்டுமல்ல... இன்னும் ஏகப்பட்ட அறிவியல்
தத்துவங்களை கூறிய சிந்தனாவாதிகளும், அவற்றை நிரூபித்துக்காட்டிய
அறிவிற்சிறந்த விஞ்ஞானிகளும்... கடவுள் நம்பிக்கை கொண்ட ஆத்திகர்களே..!
ஆனால், நம் தமிழகத்தில் நாம் பார்த்த ஒரு பிரபல நாத்திகர், 'பெரியார்' என்று அழைக்கப்படும் திரு.ஈ.வெ.ராமசாமி..! அவர் கடவுளை அறியும் முயற்சியில் டாக்கின்ஸ் போன்று ஏதும்
அறிவுப்பூர்வமான சிந்தனையில் மூழ்கிய பின்னர் நாத்திகர் ஆனாரா... என்றால் இல்லை..!
உலகின் எல்லா சமய நூல்களையும் படித்து அறிந்துவிட்டு நாத்திகர் ஆனாரா என்றால் இல்லை. எல்லா சமய மக்களும் சாதிய ஏற்றத்தாழ்வு, மத மூடநம்பிக்கை என இழிவாக வாழ்வதை பார்த்துவிட்டு நாத்திகர் ஆனாரா என்றால்
அதுவும் இல்லை..!
மாறாக, அவர் கிருஸ்துவ மதத்தையும் அதன் கடவுளையும் அவர் எதிர்க்கவில்லை..! இன்னும் ஒரு படி மேலே போய், "இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து" என்று பெரியாரே சொல்லியும் இருக்கிறார்..!
பின்னர் எப்படி அவர் நாத்திகர் ஆனார்..? இவர், தான் பிறந்த மதத்தில் உள்ள பார்ப்பணிய வர்ணாசிரம சாதிய ஏற்றத்தாழ்வு சார்ந்த கொடுமைகளையும் மற்றும் தன் மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளை பார்த்துவிட்டு, அதனால் தன் சமூகம் சீர்கெட்டு போய்விட்டதை அறிந்து செமை கடுப்பாகித்தான்..........
கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். கடவுளை பரப்பியவன் அயோக்கியன். கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
....................என இப்படி எல்லாம் சொல்லியிருக்க வேண்டும்..!
அவர் இப்படி சொன்னது, 'அவர் சார்ந்த வர்ணாசிரம தர்மம் அடிப்படையில் அமைந்த சாதிய மதத்துக்கும் அதன் 'சாமி சிலைக்கடவுள்களுக்கும்' மட்டுமே பொருந்தும்' என்று தான் நம்மால் முடிவுக்கு வர முடிகிறது..!
இன்னும் சொல்வதானால்... பெரியார் எல்லா சாதியையும் முஸ்லிம் ஆக சொல்ல வில்லை..! சூத்திரர்கள் என்று பார்ப்பனீயம் வகைப்படுத்திய நால்வரில் ஒரு பிரிவினரை மட்டுமே... அவர்களின் இனஇழிவு நீங்க முஸ்லிமாக சொல்லி இருக்கிறார்..! உண்மையிலேயே எல்லாரின் சாதியையும் ஒழிக்க அவர் நாடி இருந்தால்... தானே- ஈரோடு வெங்கட் ராமசாமி
நாயக்கரே- அல்லவா முதலில் முஸ்லிம் ஆகி இருந்திருப்பார்..? ஆக, சூத்திரர் தவிர மற்ற பிரிவினரை
அப்படியே இருந்துவிட்டு போகட்டும் என்று விட்டுவிட்டதால்... சாதியை பெரியார் ஒழித்தார் என்று நம்மால் சொல்ல முடியாது..! ஒடுக்கப்பட்ட சாதியை பார்ப்பணியத்தில் இருந்து ஒழிக்க பாடுபட்டார் என்று வேண்டுமானால் சொல்லலாம்..!
இப்படியாக 'கடவுள் இல்லை' என்ற நம்பிக்கையை கொண்டவர்களை உலகம் 'நாத்திகர்கள்' - 'Atheist' என்றுதான் அழைக்கிறது..! ஆனால், இவர்கள் முதலில் தம்மை 'சுயமரியாதை இயக்கத்தினர்' என்று அழைத்து பின்னர், "பகுத்தறிவாளர்கள்" என்று தங்களை தாங்களே பெயர்சூட்டி அழைத்துக் கொள்ளத் துவங்கினர்..!
இந்த "பகுத்தறிவாளர்கள்" பதம் சரியா..? இவர்களுக்கு இது உண்மையில் பொருத்தமா..? கடவுள் விஷயத்தில் இப்படி சொல்லிக்கொள்ள இவர்களுக்கு 'தார்மீக உரிமை' உண்டா..?
பார்ப்பனர்கள் பூணூல் போட்டு இருப்பது... ஒரு தெருவில் ஒரு வீட்டில் மட்டும் "இது பத்தினிகள் வாழும் வீடு" என்று பலகை தொங்கவிட்டு இருப்பது போல, தெருவில் உள்ள மற்றவரை இழிவு படுத்த கூடியது என்றார் பெரியார். அப்படி சொன்ன அவரே, 'கடவுள் இல்லை' என்ற அறிவியல் ஆதாரமற்ற வெற்றுக்கோஷம் போடும் தங்களை மட்டும் "பகுத்தறிவாளர்கள்" என்று கூறியது வடிகட்டின முரண்பாடு மட்டுமல்ல... முட்டாள்த்தனமும் கூட..! மற்ற கடவுள் நம்பிக்கை கொண்ட ஆத்திகர்களை இழிவு படுத்தக்கூடியது..!
பொதுவாக இவ்வுலகில்... மனிதன் தன் உடல் உடலுறுப்புக்களால் செய்யும் வேலைகளுக்கும் தன் மூளையை-சிந்தையை கசக்கிக்கொண்டு செய்யும் வேலைகளுக்கும் பெருத்த வித்தியாசத்தை பார்க்கிறோம். இவற்றுக்கு அளிக்கப்படும் மரியாதை, முக்கியத்துவம் இதெல்லாமே அவ்வேலைக்கு வழங்கப்படும் ஊதியத்தின் அளவிலும் வசதிகளின் மதிப்பிலும் நன்கு தெரிந்துவிடும்..!
தொட்டுணர்ந்து அறியும் மிகச்சாதாரண அறிவு கொண்ட தொட்டாற்சிணுங்கி மரம் போன்ற பச்சைத்தாவர ஜீவராசிகள் ஓரறிவு ஜீவன்களாம்..!
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்கு பல சான்றுகள் உள்ளன. அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் இறைவனை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்து சிந்திப்பார்கள். ''எங்கள் இறைவா! இதை நீ வீணாகப்படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக்காப்பாயாக!'' (என்றும் அவர்கள் கூறுவார்கள்) (குர்ஆன் - 3:190, 191)
ஆனால்..............................
31 ...பின்னூட்டங்கள்..:
#பகுத்தறிவாளர்கள்" என்று கூறியது வடிகட்டின முரண்பாடு மட்டுமல்ல... முட்டாள்த்தனமும் கூட..!#
நெத்தியடி சகோ....இறைவன் இல்லை என்பவன் முட்டாள்...
சலாம் சகோ ஆஷிக்!
//ஆறாவது அறிவாகிய பகுத்தறிவை பயன்படுத்தி இறைவனை பகுத்துணறுவதுதானே மனிதனுக்கு பெருமை..? அதைக்கொடுத்த கடவுளுக்கும் மகிழ்ச்சி..?//
சிந்திக்காத இவர்கள் தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக் கொள்வதுதான் விந்தை. சிந்திக்க வைத்த பதிவு.
அஸ்ஸலாமு அலைக்கும்,
டாகின்ஸ்சை பொறுத்தவரை, அவர் தன்னை அக்னாஸ்டிக் என்றே முன்பே தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தாக அந்த விவாதத்தில் கூறினார். நீங்கள் பிரபல நாத்திகர் ஆயிற்றே என்று கேட்டதற்கு நான் அப்படி சொல்லவில்லையே என்று ஒரு போடு போட்டார். இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், தான் நாத்திகர் இல்லையென்றால் இத்தனை வருடங்களாக பலரும் அவரை நாத்திகர் என்று கூறும் போது ஏன் அமைதியாக இருக்கவேண்டும்?
//Q : WHO ARE ATHEISTS..?
A : THOSE WHO BELIEVE IN 'NOTHING MADE EVERYTHING'..!//
:) :)
//'கண்ணால் கண்டால்தான் கடவுளை நம்புவேன்' என்கின்றனர்..! எனில், கண்பார்வை இழந்தோருக்கு கடவுள் இல்லையா..? மூச்..!//
அவங்க இந்த மாதிரி ‘குருட்டு ‘கேள்வியெல்லாம் கேட்க மாட்டாங்களே..ஹா..ஹா.. :-)))
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
மனிதனுக்கு பகுத்தறிவு கொடுக்கப்பட்டதே படைத்தவனை அறிந்து கொள்வதற்குத்தான்.
ஆனால் கடவுளை மறுப்பவருக்கு பகுத்தறிவாளி என்ற பைத்தியக்காரத்தனமான கருத்து தமிழகத்தில் திணிக்கப்படுவது வேடிக்கையானது.
ஊர்பக்கம் சொலவடை ஒண்ணு சொல்லுவாங்க..
கழுதைக்குப் பேரு முத்துமாலையாம்!!!
சலாம் சகோ முஹம்மது ஆசிக்,
ஒரு வேலை.... அறிவை பகுத்து, அதில் ஒரு பகுதியை மட்டும் பயன்படுத்துவதால் அவர்கள் தங்களைத் தாங்களே பகுத்தறிவாளிகள் என்று அழைக்கிறார்களோ????
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
பகுத்தறிவு நோக்கி எதார்த்த பதிவு!
அல்ஹம்துலில்லாஹ்
கேள்விகளேல்லாம் சரிதான். ஆனால் இதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமோ... இக்கேள்விக்குறித்து நடு நிலை சிந்தனையோ பல நாத்திகர்களிடம் இல்லை என்பதே உண்மை. பாருங்கள் இதற்கு கூட ஏதும் கமெண்ட் வந்தால் அது இஸ்லாத்தை நோக்கியதாக தான் இருக்கும்.
நாத்திக மரத்தை இஸ்லாம் எனும் கோடாரியால் மட்டுமே மண்ணோடு மாய்க்கமுடியும் என்ற பேருண்மை அவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால் தான் இன்று ஏனைய மதம் சார்ந்த கோட்பாடுகள் விமர்சிக்கபடுவதை விட இஸ்லாத்தின் மீது அவதூறு குற்றச்சாட்டுகள் ஏராளமாக வைக்கப்படுகிறது.
இன்னும் பாருங்கள், இஸ்லாம் (கூறும் கடவுள் கோட்பாடுகள்) வேண்டாம் வேண்டாம் என்று சொல்கிறார்களே ஒழிய எது வேண்டுமென்று கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டேங்கிறாங்க...! இந்த பதிவின் மூலமாவது பதில் கிடைக்கிறாதா..பார்ப்போம்!
நான் எப்போதும் சொல்வது இதுதான்
எதையும் மறுப்பதற்கல்ல... ஏற்பதற்கே வேண்டும் பகுத்தறிவு!
பகிர்ந்த பதிவிற்கு
ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
சிந்திக்க வைத்த பதிவு சார் ! இறைவன் இல்லை என்பவன் முட்டாள் ! இறைவன் உண்டு என்பவன் படுமுட்டாள் ! - இது ஒரு தரப்பினரின் வாதம் ? ! விளக்கம் வேண்டுமா சார் ? நான் ரெடி ! நீங்க ரெடியா ?
mika nalla pathivu, nantri
அருமையான பதிவு
சகோ. அவர்களை நாம் எப்போதுமே பகுத்தறிவாளர் என்று அழைத்ததே இல்லை, நாத்திகர் என்றே அழைக்கிறோம், வரிக்கு வரி ஆழமான கருத்துக்கள்.
இறைவன் இல்லை என்பவன் முட்டாள், பகுத்தரியாதவன், சிந்திக்க தெரியாதவன் என்ற slogan ஐ என் தலத்தில் இடலாம் என்று இருந்தேன், அதற்கு வழிமுறையை கொடுக்கிறது உங்கள் பதிவு.
என்னை கேட்டால், கடவுள் இல்லை என்று அவர்கள் கூறும் காரணங்களை மொத்தமாக எடுத்து, அவை அனைத்திற்கும் பதிலை ஒரு தனி பதிவில் இட வேண்டும்.பிறகு அதை அவர்களின் தலைமைக்கு அனுப்பி பதில் கேட்க வேண்டும்.
இறைவன் நாடினால் செய்வோம்.
இறை மறுப்பாளர்களை பகுத்தறிவாளன் என்று சொல்லுவதே தவறு.
நியாய தீர்ப்பு நாளை நம்பிக்கைகொள்ளாத எந்த ஒரு தனிமனிதனும் உண்மையில் ஒழுக்க சீடர்களாக வாழ்கிறார்களா என்பது சந்தேகமே..(இதில் அடிக்கடி டயலாக் வேற, நான் குடிப்பேன்,விபச்சாரம் செய்வேன், ஆபாச சினிமா பார்ப்பேன், இவைகளால் அடுத்தவனுக்கு கேடு செய்யாமல் இருப்பது தனிமனித சுதந்திரம், மனித உரிமை)
நியாய தீர்ப்பு நாள் நம்பிக்கையற்ற நார்த்திகம் வெறும் கவுரவத்திற்காக, அரசியலுக்காக, தன்னை வித்யாசப்படுத்திக்காட்டுவதற்காக மட்டுமேயன்றி தான் ஒழுக்க சீடர்களாக வாழ்வதற்கு இல்லை என்பது ஏதார்த்த உண்மை.
தந்தை பெரியாரை மட்டும் உதாரணம் காட்டியே காலத்தை ஓட்டமுடியாமல், அவரின் பிறந்த நாளன்று அவரின் சிலைக்கு மாலை மரியாதை போட்டு ஒரு பெரிய கும்பிடு போட்டு கடவுள் ஸ்தானத்தில் வைத்தது தான் இந்த நார்த்தீக சிந்தனையின் எதார்த்தம்..
அன்றும் இன்றும் சினிமா என்ற கேடுகெட்ட போலி(?) ஊடகத்தில் காமத்தை தூண்டும் காட்சிகளை காட்டி பெண்களை கேவலப்படுத்துவதை தட்டிக்கேட்காத கேவல சிந்தனைகொண்டவர்களை பகுத்தறிவாளர்கள் என்று எப்படி சொல்ல முடியும்.ஆபாசமில்லாத சினிமாவை வைத்து வியாபரம் செய்தவர்களில் ஒரு நார்த்திகன் கூட இல்லை என்று சொல்ல முடியுமா?
உண்மை என்ன தெரியுமா? இன்று சினிமா என்ற கேடுகெட்ட ஊடகம் பெண்களை கேவலப்படுத்துவதற்கு இந்த நியாய தீர்ப்பு நாள் நம்பிக்கையற்ற நார்த்தீக சிந்தனை கொண்டவர்கள் அதில் அதிகம் உள்ளதே காரணம்.
சகோதரர் குலாம் சொன்னது போல் "நாத்திக மரத்தை இஸ்லாம் எனும் கோடாரியால் மட்டுமே மண்ணோடு மாய்க்கமுடியும் என்ற பேருண்மை அவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால் தான் இன்று ஏனைய மதம் சார்ந்த கோட்பாடுகள் விமர்சிக்கபடுவதை விட இஸ்லாத்தின் மீது அவதூறு குற்றச்சாட்டுகள் ஏராளமாக வைக்கப்படுகிறது."
இப்படி எல்லாம் நாம் சொன்னால் இதற்கு பதிலளிக்க திரானியற்று இஸ்லாமிய கொள்கையை வேண்டுமென்றே விமர்சிப்பார்கள்.
கடவுள் இல்லை என்று வாதாடும் கூட்டம் ஒருபக்கம்.இல்லை கவுள் நிச்சயமாக இருக்க வேண்டும். அதுவும் ஒரே ஒரு கடவுளாகதான் இருக்க முடியுமென்று. என்று எத்தனையோ சகோதர,சகோதரிகள் பல ஆராய்ச்சிக்கு பிறகு இந்தியாவில் மட்டுமில்லை.பல நாடுகளிலும்.இஸ்லாத்தின் பக்கம் விரைந்து வந்து கொண்டிருப்பதை செய்திகளின் மூலம்.தெரிந்து கொண்டிருக்கிறோம்.அல்லாஹ் அக்பர்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
அருமையான கேள்விகள்! சகோ..
//வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்கு பல சான்றுகள் உள்ளன. அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் இறைவனை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்து சிந்திப்பார்கள். ''எங்கள் இறைவா! இதை நீ வீணாகப்படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக்காப்பாயாக!'' (என்றும் அவர்கள் கூறுவார்கள்) (குர்ஆன் - 3:190, 191)//
சுப்ஹானல்லாஹ்! இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர் வழியில் நிறுத்துவானாக... ஆமீன்.
@NKS.ஹாஜா மைதீன்வருகைக்கும் ஆதிரடி கருத்துக்கும் நன்றி சகோ.ஹாஜா.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் அருமையான கருத்துக்கும் நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஆஷிக்,
அவர் இத்தனை வருடம் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும்...
ஆனால்....
எப்போது..."I can't be sure God DOES NOT exist..!"
என்று இப்படி கூறி......
thus a militant atheist - admitting that he is actually 'agnostic' as he can't prove God doesn't exist..!
என்று இப்படி நிரூபணம் ஆகிவிட்டதோ...
அப்போதே....
நாத்திகம் 'அறிவியல் பூர்வமாகவே' மண்ணை கவ்வி விட்டது...
---என்பதற்கான நாத்திகர்களுக்கு ஆத்திகம் தொடர்பான மேலும் ஓர் ஆதாரம் அல்லவா சகோ இந்த சம்பவம்...!?
அது...!
வருகைக்கும் அருமையான கருத்துக்கும் நன்றி சகோ.ஆஷிக் அஹமத்..!
@ஜெய்லானிஹா...ஹா.... அதானே... :-)) வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.ஜெய்லானி..!
@தமிழ் மீரான்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.தமிழ்மீரான்.
@சிராஜ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
///அறிவை பகுத்து, அதில் ஒரு பகுதியை மட்டும் பயன்படுத்துவதால் அவர்கள் தங்களைத் தாங்களே பகுத்தறிவாளிகள் என்று அழைக்கிறார்களோ????///----எப்டீங்க சகோ... இப்டீலாம்...?!? அவங்களை நினைச்சு ரொம்ப நொந்து போயி இருக்கீங்க போல... :-))
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.சிராஜ்.
@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
///இஸ்லாம் (கூறும் கடவுள் கோட்பாடுகள்) வேண்டாம் வேண்டாம் என்று சொல்கிறார்களே ஒழிய எது வேண்டுமென்று கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டேங்கிறாங்க...!///
----அப்படி ஒரு வாழ்வியல் கோட்பாடே இருக்கக்கூடாது என்பதுதான் ஒரு கோட்பாடோ...???
//எதையும் மறுப்பதற்கல்ல... ஏற்பதற்கே வேண்டும் பகுத்தறிவு!// ---அருமை சகோ..!
வருகைக்கும் சிறந்த கருத்துக்களுக்கும் நன்றி சகோ.குலாம்..!
@திண்டுக்கல் தனபாலன்///இறைவன் இல்லை என்பவன் முட்டாள் ! இறைவன் உண்டு என்பவன் படுமுட்டாள் ! - இது ஒரு தரப்பினரின் வாதம் ? !விளக்கம் வேண்டுமா சார் ?///
---நானும் விளக்கம் தர ரெடி தான் சார்...
எனது விளக்கத்தை பாருங்களேன்.....
ஒரு தேர்வு அறை!
ஒரு வினாத்தாள்!
அதில்,
" உண்டு / இல்லை "
இரண்டில் ஒரு பதில் சொல்லச்சொல்லி ஒரு வினா..!
பெருவாரியான மாணவர்கள்,
"உண்டு"
என்று பதில் எழுத...
வெகுசில மாணவர்கள்,
"இல்லை"
என்ற பதில் எழுத...
நீங்கள் சொன்ன தரப்பினர்...
எந்த பதிலும் எழுதமால்....
'இல்லை' என்பவன் முட்டாள் !
'உண்டு' என்பவன் படுமுட்டாள் !
....என்று முடிவு எடுத்தவர்களாக வெத்து விடைத்தாளை கொடுத்துவிட்டு தேர்வு அறையை விட்டு நடையைக்கட்டுகின்றனர்...!
ஹா...ஹா... ஹா...இவர்களை பற்றி வேறு என்னத்த சொல்ல சகோ..?
இப்போ டாக்கின்ஸ் இந்த தரப்பினரில்தான் இருக்கார்... ஹி...ஹி...
//சிந்திக்க வைத்த பதிவு சார் !//--நன்றி சார்..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் வித்தியாசமான கருத்துக்கும் நன்றி சகோ.திண்டுக்கல் தனபாலன்..!
@lcnathanவருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.lcnathan.
@abdulவருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.abdul
@கார்பன் கூட்டாளி
//அவர்களை நாம் எப்போதுமே பகுத்தறிவாளர் என்று அழைத்ததே இல்லை, நாத்திகர் என்றே அழைக்கிறோம்//---ஆமாம் சகோ.நம்மில் பெரும்பாலும் அப்படித்தான்...!
ஆனால்,
யாரேனும் தெரியாமல் இருந்துவிடக்கூடாதே என்பது மட்டும் அல்ல... 'நாம் ஏன் அவர்களை அப்படி அழைப்பதில்லை' என்று அவர்களும் அறிந்து கொள்ளட்டுமே சகோ... அதற்குத்தான் இந்த பதிவு..!
///...பதிலை ஒரு தனி பதிவில்...///---இறைவன் நாடினால் நிச்சயமாக செய்வோம் சகோ.
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.கார்பன் கூட்டாளி.
@தாஜுதீன்அருமையான கருத்துக்கள் சகோ.தாஜுதீன்.
நாத்திக எண்ணங்களே... தற்போதுள்ள அனைத்து கேடுகளுக்கும் காரணம்..!
நியாயத்தீர்ப்பு நாளை பயந்த ஒரு ஆத்திகன் எந்த கெடுதியும் எவருக்கும் தனக்கும் கூட செய்வதில்லை..! நாத்திக விஷ மரம் வளர்ந்தால்... அதன் நிழலில் நிற்கும் நேரம் இறைவனை மறந்த ஆத்திகன் பல கேடுகளை அந்த நிழலுலகில் செய்யக்கூடும்..! எனவே, அந்த நாத்திக மரத்தை இஸ்லாம் எனும் கோடாரியால் மட்டுமே மண்ணோடு மாய்க்கமுடியும்..!
அருமையான கருத்துருவாக்கம் சகோ.தாஜுதீன் & சகோ.குலாம்..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ.தாஜுதீன்..!
@லெ.மு.செ.அபுபக்கர்///எத்தனையோ சகோதர,சகோதரிகள் பல ஆராய்ச்சிக்கு பிறகு இந்தியாவில் மட்டுமில்லை.பல நாடுகளிலும்.இஸ்லாத்தின் பக்கம் விரைந்து வந்து கொண்டிருப்பதை செய்திகளின் மூலம்.தெரிந்து கொண்டிருக்கிறோம்.அல்லாஹ் அக்பர்.///
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் உண்மை செய்திக்கும் நன்றி சகோ.அபுபக்கர்.
@Syed Ibramshaஅலைக்கும் ஸலாம் வரஹ்...//இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர் வழியில் நிறுத்துவானாக...// ஆமீன்.
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.Syed Ibramsha
சாகும் போது கடவுளைக் கண்டேன்!
--------------------------------
இறைவனைக் காணாத வரையில் அவன் இருப்பை நம்பப்போவதில்லை. என்றேன்.
அவன் படைத்தவைகள் சாட்சியாக இருக்க ஏன் படைத்தவனை நம்ப மறுக்கிறாய். என்றான்.
அவன் தான் படைத்தான் என்பதற்கு என்ன சாட்சி. என்றேன்.
அவன் படைக்கவில்லை என்பதற்கு உன்னிடமுள்ளதா அத்தாட்சி. என்றான்.
அத்தாட்சி உள்ளது; அது தான் விஞ்ஞானம். என்றேன்.
விஞ்ஞானமா அப்படியென்றால்.. என்றான்.
மதவாதி நீ; உனக்கு விஞ்ஞானம் புரியாது. என்றேன்.
விளக்கு விளங்கிக்கொள்வேன். என்றான்.
எதையும் பகுத்து அறிவது தான் விஞ்ஞானம். என்றேன்.
அப்படியா.. பகுத்து அறிந்தால் இறைவனை காணலாமா?.. என்றான்.
இல்லாதவற்றை எப்படி காண முடியும்?. என்றேன்.
அய்யோ.. அங்கே பார் புகை மூட்டம், தீ பரவுகிறது என நினக்கிறேன். வா.. ஓடி விடலாம். என்றான்.
இல்லை.. தீயை பார்க்காதவரையில் அது தீ என்று நான் நம்பப்போவதில்லை. என்றேன்.
ஒன்றைப் பார்த்து தான் நம்ப வேண்டுமென்றால், அதற்கு ஐந்தறிவு விலங்கு போதுமே..மூடனே.. ஒன்றிலிருந்து ஒன்றை விளங்குவதே பகுத்தறிவு. வா.. ஓடி விடலாம். என்றான்.
அவன் ஓடி விட்டான். நான் திடமாக நின்றேன். அட.. வந்தது தீ பிழம்பு தான். கருகிக்கொண்டே நம்பினேன். "இறைவன் இருக்கிறான் என்று".
உதயம்.
http://meiyeluthu.blogspot.com/2010/07/blog-post_27.html
@உதயம்ஓர் உதாரணம் மூலம் என் முழுப்பதிவின் கருத்தையும் கொண்டுவந்துவிட்டது தங்களின் இந்த...நறுக் வரிகளும்...
சுருக் கருத்துக்களும்...
தங்களின் வருகைக்கும் அபாரமான ஆக்கத்தை பின்னூட்டமாக இட்டதற்கும் நன்றி சகோ.உதயம்.
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!