நான் சிறுவனாக இருந்தபோது, கின்னஸ் உலக சாதனை என்பது மிகப்பெரிய விஷயமாக போற்றப்படும். அப்போது, உடல் பலத்திலோ அல்லது மதி நுட்பம் மூலமாகவோ செயற்கரிய சாதனைகளை செய்த வீரர்கள் தங்கள் வீரதீரச்செயல்கள் மூலம் உலக சாதனை நிகழ்த்தி அப்புத்தகத்தில் இடம்பிடித்தனர். ஆனால், காலப்போக்கில் சுவாரசியம் மற்றும் புத்தக சர்குலேஷன் கூடவேண்டும் என்பதற்காக... நோஞ்சான்கள், சோம்பேறிகள், சாப்பாட்டு ராமன்கள், கயவர்கள், அயோக்கியர்கள், வேலைவெட்டி இல்லாத போழுது போக்கிகள், குற்றவாளிகள், முட்டாள்கள் செய்யும் உப்புசப்பில்லாத விஷயங்கள் எல்லாம் உலக சாதனைகள் என்ற பெயரில் அந்த கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறத்துவங்கின.
இவை கின்னஸ் சாதனையாக மக்களிடம் போகும் போது, "ச்சே... என்னடா இது...!? இப்படியாக தன் நேரத்தை, பணத்தை, திறமையை வெட்டியாக வீணாக்கி உள்ளார்களே..." என்று அவர்கள் மீது வெறுப்பையும், பரிதாபத்தையுமே வரச்செய்தன. இதனால் கின்னஸ் சாதனை புத்தகம் தனக்குரிய மதிப்பையும் மரியாதையையும் நிஜ வீரர்களிடம் இழந்தது. ஆனால்... மூடர்களிடம் 'அதில் நாமும் சுலபமாக இடம்பெற்றிடலாமே' என்ற ஆர்வம் அவர்களை எதையும் செய்ய வைத்தது..! அப்படி ஒரு மூடத்தனம்தான் சென்ற வாரம் உலக சாதனையாக போற்றப்பட்டது..! அது என்ன தெரியுமா சகோ..?
இவை கின்னஸ் சாதனையாக மக்களிடம் போகும் போது, "ச்சே... என்னடா இது...!? இப்படியாக தன் நேரத்தை, பணத்தை, திறமையை வெட்டியாக வீணாக்கி உள்ளார்களே..." என்று அவர்கள் மீது வெறுப்பையும், பரிதாபத்தையுமே வரச்செய்தன. இதனால் கின்னஸ் சாதனை புத்தகம் தனக்குரிய மதிப்பையும் மரியாதையையும் நிஜ வீரர்களிடம் இழந்தது. ஆனால்... மூடர்களிடம் 'அதில் நாமும் சுலபமாக இடம்பெற்றிடலாமே' என்ற ஆர்வம் அவர்களை எதையும் செய்ய வைத்தது..! அப்படி ஒரு மூடத்தனம்தான் சென்ற வாரம் உலக சாதனையாக போற்றப்பட்டது..! அது என்ன தெரியுமா சகோ..?
"THIS IS MUHAMMAD" என்று ஒரு புத்தகம் கின்னசில் சென்றவாரம் இடம்பிடித்தது..! இப்புத்தகம் 'துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டரில்' நடைபெற்ற நிகழ்ச்சியில் துபாய் துணை ஆட்சியாளரும் UAE நிதி அமைச்சருமான ஷைக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் வெளியிட்டார். அதில், அண்ணல் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அன்னாரின் வாழ்வியல் வழிகாட்டுதலையும் உலக அளவில் இஸ்லாத்தின் சிறப்புகளையும் உள்ளடக்கிய இந்நூல், சவூதி அரேபியாவின் எழுத்தாளரான டாக்டர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் முஸ்லிஹ் (Saudi author and Secretary General of the Complex for Islamic Fiqh Research in Riyadh) என்பவர் எழுதியதாகும். புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் மேற்படி உயர்ந்த விஷயங்களினாலா கின்னஸ்
புத்தகத்தில் இடம்பெற்றது..? அதுதான் இல்லை..! வேறென்ன காரணமாம் சகோ..?
.
.
420 பக்கம் கொண்ட இப்புத்தகத்தின் நீளம் 5 மீட்டர். அகலம் 4 மீட்டர். ஆக மொத்த எடை... 1500 கிலோ..!
100 பேர் 16 மாதங்களாக பணியில் ஈடுபட்டு இறகுகளாலும் விஷேசமாக தயாரிக்கப்பட்ட காகிதத்தாலும் இந்நூல் அரபிமொழியில் தயாரிக்கப்பட்டு ஜெர்மனியில் அச்சிடப்பட்ட இப்புத்தகத்தை தயாரிக்க 11 மில்லியன் திர்ஹம் (சுமார் 14 கோடி ரூபாய்) செலவாகியுள்ளது..!
அதாவது... இதுதான் இன்று உலகிலேயே மிகப்பெரிய... கனமான... விலை அதிகமான புத்தகம்..! இதற்காகத்தான் இது சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறது..!
இவ்வளவு பெரிய புத்தகத்தை யாராலும் புரட்டி படிக்க முடியுமா..? முடியாது..?
அப்புறம் அதற்கு வேறு என்ன பயன்..? "உலகசாதனை புத்தகம்" என்ற
புகழுடன் குவைத்திலிருந்து உலகின் சில நாடுகளுக்கு தொடங்குகின்ற
சுற்றுப்பயணத்திற்குப் பிறகு இப்புத்தகம் இறுதியாக அபுதாபியில் உள்ள ஷைக்
சாயித் கிராண்ட் பள்ளிவாசலில் நிரந்தரமாக பார்வைக்கு வைக்கப்படும்..!
தட்ஸ்ஆல் சகோ...!
தற்போது இது கின்னஸ் சாதனை புரிந்திருப்பதால், 'முஹம்மது என்றால் யார்' என்று இந்த புத்தகம் பலரையும் திரும்பிப்பார்க்க வைக்கும் என்று இவ்வளவு பணம் கொட்டி இந்த புத்தகத்தை தயாரித்தவர்கள் தங்கள் நோக்கமாக கூறுவார்களேயானால் அவர்கள் குறித்து வருத்தப்படுவதை தவிர வேறு வழியில்லை..!
இஸ்லாம் குறித்து கொஞ்சநஞ்சம் நல்ல அபிப்பிராயம் வைத்திருப்பவர்களை கூட இம்மாதிரியான வெட்டி ஆடம்பர மூடத்தனமான நடவடிக்கைகள் தூர விலக்கி வைக்கவே செய்யும்..!
இஸ்லாம் குறித்து கொஞ்சநஞ்சம் நல்ல அபிப்பிராயம் வைத்திருப்பவர்களை கூட இம்மாதிரியான வெட்டி ஆடம்பர மூடத்தனமான நடவடிக்கைகள் தூர விலக்கி வைக்கவே செய்யும்..!
இறைவன் கொடுத்த கல்வியையும், நேரத்தையும், செல்வத்தையும் இப்படி வெட்டித்தனமாகவும் ஊதாரித்தனமாகவும் யார்க்கும் எவ்வித பயனும் இன்றி செலவிடுபவர்கள், செல்வம் தந்த இறைவனுக்கு நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இதற்கெல்லாம் மறுமை தண்டனை காத்திருக்கிறது என்பதை மறந்து ஆட்டம் போடுகிறார்கள்..!
செலவழித்த 11 மில்லியன் திர்ஹமை வைத்து, வறுமையில் வாடும் ஆப்பிரிக்க மக்களின் பசியை ஒரு மாத காலத்திற்காவது போக்கி இருந்தார்கள் என்றால் அதுதான் நிஜமான உலக சாதனை.
செலவழித்த 11 மில்லியன் திர்ஹமை வைத்து கல்வியோ, வீடோ அல்லது வேறு ஏதேனும் ஆக்கப்பூர்வமான மக்கள் நலப்பணித்திட்டங்களோ அமைத்து மக்களுக்கு அழகான வாழ்வை வாழ வழிவகுத்திருந்தார்கள் என்றால் அது தான் நிரந்தர உலக சாதனை.
'இல்லை.... நான் இந்த புத்தகத்தைத்தான் வெளியிடுவேன்' என்று அடம்பிடிக்கிறீர்களா...? அப்போ...சரி, அதை... 11 திர்ஹாமில் தரமான புத்தகம் ஒன்றாக மொத்தம் ஒரு மில்லியன் புத்தகம் அச்சடித்து, அவற்றை எல்லாம், இஸ்லாம் இன்னும் அறியப்படவேண்டிய நாடுகளில் விநியோகித்து இருந்திருந்தால்... அதைப்படித்து மில்லியனில் ஒரு பதினோரு பேராவது நேர்வழி பெற்று இருந்திருந்தால்... இவைதான் நிலையான சாதனைகள் அல்லவா உங்களுக்கு..?
இறைவன் கொடுத்த செல்வத்தை தவறான வழியில் பயன்படுத்தும் இம்மாதிரியான முஸ்லிம்களை கண்டால் வெறுப்பு தான் வருகின்றது. எந்த அளவுக்கு என்றால்... நரமாமிச மோடி... மதநல்லிணக்கத்துக்காக உண்ணாவிரதம் இருந்ததை அறிந்ததை விட பன்மடங்கு... வெறுப்பு வருகிறது சகோ..!
ஏனெனில், மதநல்லிணக்கத்துக்கு சாவுமணி அடிக்கும் ஒருவர் அதன் மறுமலர்ச்சிக்காக பாடுபடுவது மிகப்பெரிய முரண்நகை அன்றோ..!
இதேபோலத்தான்......
எளிமை, சிக்கனம், பயன்தரும் செய்கை இவற்றை அனுதினமும் போதித்த மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்...) அவர்களைப்பற்றி ஆடம்பரம், பகட்டு, வீண்விரையம், பிறருக்கு பயனற்ற செயல்கள் மூலமாக சொல்கிறார்களாம்..! அட... காலக்கொடுமையே..! இவற்றை எல்லாம் ஒழிக்க அல்லவா வந்தார்கள் நபிகள் நாயகம்..! என்னே ஒரு முரண்நகை..?!
இவர்களுக்கு இறைவனின் எச்சரிக்கை இதுதானோ சகோ..?
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை (வீணாக) செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன் (அல்குர்ஆன் 4:36)
வீண் விரையம் செய்வோரை இறைவன் நேசிக்க மாட்டான்.(அல்குர்ஆன் 6:141)
இவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அன்றே சொன்ன எச்சரிக்கை, இதோ... !
''ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனையுண்டு. என்னுடைய சமுதாயத்திற்கு செல்வம் சோதனையாகும்'' (நூல்கள்: திர்மிதீ 2258, அஹ்மத் 16824)
கின்னஸ் ரெக்கார்டில் இடம் பெற்ற அந்த புத்தகமா நாளை மறுமையில் இவர்களுக்காக வாதாட போகிறது..? செல்வம் எனும் சோதனையில் தோற்காமல் வெல்ல வேண்டுமல்லவா இவர்கள்..! என்று திருந்துவார்கள் இவர்கள்..? சகோ, நாம் இந்த பணக்கார மூடர்கள் நல்லறிவு பெற இறைவனிடம் பிரார்த்திப்போமாக..!
இதேபோலத்தான்......
எளிமை, சிக்கனம், பயன்தரும் செய்கை இவற்றை அனுதினமும் போதித்த மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்...) அவர்களைப்பற்றி ஆடம்பரம், பகட்டு, வீண்விரையம், பிறருக்கு பயனற்ற செயல்கள் மூலமாக சொல்கிறார்களாம்..! அட... காலக்கொடுமையே..! இவற்றை எல்லாம் ஒழிக்க அல்லவா வந்தார்கள் நபிகள் நாயகம்..! என்னே ஒரு முரண்நகை..?!
இவர்களுக்கு இறைவனின் எச்சரிக்கை இதுதானோ சகோ..?
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை (வீணாக) செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன் (அல்குர்ஆன் 4:36)
வீண் விரையம் செய்வோரை இறைவன் நேசிக்க மாட்டான்.(அல்குர்ஆன் 6:141)
இவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அன்றே சொன்ன எச்சரிக்கை, இதோ... !
''ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனையுண்டு. என்னுடைய சமுதாயத்திற்கு செல்வம் சோதனையாகும்'' (நூல்கள்: திர்மிதீ 2258, அஹ்மத் 16824)
கின்னஸ் ரெக்கார்டில் இடம் பெற்ற அந்த புத்தகமா நாளை மறுமையில் இவர்களுக்காக வாதாட போகிறது..? செல்வம் எனும் சோதனையில் தோற்காமல் வெல்ல வேண்டுமல்லவா இவர்கள்..! என்று திருந்துவார்கள் இவர்கள்..? சகோ, நாம் இந்த பணக்கார மூடர்கள் நல்லறிவு பெற இறைவனிடம் பிரார்த்திப்போமாக..!
62 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும்,
நல்ல அருமையான சிந்தனை ஆக்கம்.
தற்போதைய நிலையில் இஸ்லாமிய வளர்ச்சிக்கு தடையாக இருப்பது இது போன்ற ஆடம்பரங்களும் ஒரு காரணம் என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். மிகவும் வேதனை சகோதரரே..
அன்று நபிகளாரின் எளிமையான வாழ்வே இஸ்லாம் இன்று நமக்கெள்ளாம் கிடைப்பதற்கு காரணம் என்பது 100க்கு 100 உண்மை.
மார்க்க அறிஞர்களின் அறிவு கண் ஆட்சியாளர்களுக்கு அடிமைப்பட்டுபோனதால் தான் இன்று குர்ஆன் ஹதீஸுக்கு முரணான இது போன்ற காரியங்கள் நடைபெறுகிறது. என்னதான் ஆட்சியாளர்கள் அவர்கள் இஸ்டத்துக்கு இஸ்லாத்தை அவர்கள் வழியில் எடுத்துச்சொல்ல முன்வந்தாலும், கியாம நாள் வரை நம் இஸ்லாம் அதன் தூயவடிவில் இருந்துக்கொண்டே தான் இருக்கும் அதற்காக ஒரு கூட்டத்தார் இருந்துக்கொண்டே தான் இருப்பார்கள்.
அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக.
//செலவழித்த 11 மில்லியன் திர்ஹமை வைத்து, வறுமையில் வாடும் ஆப்பிரிக்க மக்களின் பசியை ஒரு மாத காலத்திற்காவது போக்கி இருந்தார்கள் என்றால் அதுதான் நிஜமான உலக சாதனை.
செலவழித்த 11 மில்லியன் திர்ஹமை வைத்து கல்வியோ, வீடோ அல்லது வேறு ஏதேனும் ஆக்கப்பூர்வமான மக்கள் நலப்பணித்திட்டங்களோ அமைத்து மக்களுக்கு அழகான வாழ்வை வாழ வழிவகுத்திருந்தார்கள் என்றால் அது தான் நிரந்தர உலக சாதனை. //
உண்மை..
.
.
இப்பதிவு மேலும் பலரின் பார்வையை சென்றடைய "தமிழ்மணம்" திரட்டியில் வாக்களிக்கவும் (VOTE)
வாக்களிக்க TO VOTE >>>>
இங்கு <<<< சொடுக்குங்கள்.
.
.
சலாம் சகோ....
வீண் விரயம்.,அதுவும் வீண்விரயம் கூடாது என்ற ரசூலுல்லாஹ் பெயரிலே..வன்மையாக கண்டிக்கத்தக்கது
சாதனைகள் என்று உண்மையாகவே கவனிக்க வேண்டிய விஷயங்கள் மீது எனக்கு ஆர்வம் உண்டு, ( அதனை கின்னஸ் என்று பதிவு செய்வதிலும் உடன்பாடு உண்டு.. ஆனால் மீசை அதிகம் வளர்ப்பது, நீண்ட தூரம் எச்சு துப்புவது என்ற சாதனைகள் ??ridiculous and crap !
என்றும் அன்புடன்
ஷர்புதீன்
www.rasekan.blogspot.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
பிரம்மாண்டமாக தயாரிப்பில் கின்னஸ் சாதனை படைத்த அந்த புத்தகத்தை பற்றி பல நேர்மறையான கருத்துக்களும் வியப்புக்குரிய செயலாக எண்ணி வாழ்த்துக்களும் வலம் வரும் நாட்களுக்கு மத்தியில் அந்த புத்தகம் குறித்த எதிர்மறையாய்
ஆனால்...
உண்மையாய் ஒரு விமர்சனம்.
வாழ் நாள் முழுவதும் எளிமை என்பதன் இலக்கணமாய் திகழ்ந்த அந்த மாமனிதர் பெயரால்..
அநியாயமாய்
அறிவற்ற -ஓர்
ஆடம்பரம்...
அதுவும் சாதனை என்ற பெயரில்...
ஒரு நையா பைசா செலவுக்கூட இல்லாமல் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வை உலகிற்கு எடுத்துச்சொல்ல நூறு சதவீகிதம் வாய்ப்பு இருந்தும், அவர்களின் பெயரை மட்டும் சொல்ல 11 மில்லியன் திர்ஹம் செலவழிக்கப்பட்டது தான் மூடத்தனமான முரண்பாடு!
எந்த செயலுக்கும் அழகிய முன்மாதிரி அவர்களின் வாழ்வில் இருக்க அவர்களின் பெயரை பயன்படுத்தி புரிந்த இந்த அழகற்ற செயலுக்கு யார் முன்மாதிரியோ...
அவர்களும் கண்டிப்பாய் பதில் சொல்லியாக வேண்டும் நாளை இறைவனிடத்தில்.
அல்லாஹ் நேர்வழி செலுத்த போதுமானவன்.
சலாம் சகோ :-)
சில விஷயங்களை ”மெத்த படித்த” ஆலிம்களால் கூட ’ஷேக்’குகளிடம் சொல்ல முடியாது ..புரியும் என்று நினைக்கிறேன் :-). இதற்கு துனை போன இமாம்கள் நாளை மறுமையில் குற்றவாளி ஆக முடியாது .
ஹஸ்பியல்லாஹு வ நிஃமல் வகீல்
//11 மில்லியன் செலவில் ஒரு புத்தகத்திற்கு பதிலாக, 1 மில்லியன் புத்தகங்கள் அச்சடித்து வழங்கியிருக்கலாம். // உண்மைதான்.
//புத்தகத்தை தயாரிக்க 11 மில்லியன் திர்ஹம் (சுமார் 14 கோடி ரூபாய்) செலவாகியுள்ளது..!//
11லயே முடிச்சிட்டாங்களேன்னு சந்தோஷப்படுவீங்களா..???.. இதே நம்ம நாடா இருந்தா கமிஷன் , லஞ்சம் அதுக்கு பின்னே விசாரனை கமிட்டின்னு போய்கிட்டே இருந்திருக்குமே ஹி..ஹி.... :-)))))))))))))))))))))))))))
((யானைக்கே சிலை வச்சதை யாரும் இன்னும் கின்னஸ் பக்கம் கொண்டு போகலைப்போலிருக்கே ஹா..ஹா... ))
இஸ்லாமியப் பார்வையில் அறிவார்ந்த ஒரு விமர்சனம், அருமை சகோ..
பெருமயடிப்பதற்க்காக பள்ளிவாயில்கள் கட்டப்படும்பொழுது மறுமையை எதிர்பாருங்கள் என்று, ஒரு ஓலைக்குடிசையில் அமர்ந்திருந்து இம்மாமனிதர் சொன்னார், அதுதான் இப்பொழுது பலித்துக் கொண்டிருக்கிறது.
"எப்படிச் சம்பாதித்தாய், அதை எப்படிச் செலவு செய்தாய்" மறுமையில் இக் கேள்விக்கு விடையளிக்காமல் ஒருவன் கால் நகராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது, நம்மில் நிறைய பேர்களுக்குத் தெரியாமல் போனதுதான் பரிதாபம்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
//தற்போது இது கின்னஸ் சாதனை புரிந்திருப்பதால், 'முஹம்மது என்றால் யார்' என்று இந்த புத்தகம் பலரையும் திரும்பிப்பார்க்க வைக்கும் என்று இவ்வளவு பணம் கொட்டி இந்த புத்தகத்தை தயாரித்தவர்கள் தங்கள் நோக்கமாக கூறுவார்களேயானால் //
மன இச்சைகளை பின் பற்றி வாழாமல் குர்ஆன், சுன்னாஹ் இவைகளை பின் பற்றி அரபுகள் செயலால் வடிவமைத்தார்களானால் உலக சாதனை மட்டுமில்லை.நாளை மறுமையில் இறைவன். தரக்கூடிய சொர்க்கத்தோடு சாதனையில் முதலிடம் பிடிப்பார்கள்.அரபு மண்டுகள் உணரட்டும்.
உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்
மிகச் சரியான விமர்சனம்.
இதில் நூறில் ஒரு பங்கு கூட அவர்கள் மொத்த வாழ்க்கைக்காக செலவு செய்திருக்க மாட்டார்கள். அத்தனை எளிமையாக வாழ்ந்தவர்களை பற்றிய புத்தகத்தின் தயாரிப்பு செலவு ??? நகை முரண்
சலாம் சகோ ஆஷிக்!
எதற்கு செலவழிக்க வேண்டுமோ அங்கு இந்த பணத்தை கொண்டு செல்ல மாட்டார்கள். சிந்திக்க வைத்த பதிவு.
அருமையான கட்டுரை தந்தமைக்கு வாழ்த்துகள் . அராபிய நாடுகளில் ஒற்றுமை இல்லை ஆனால் ஆடம்பரங்கள் உண்டு. அல்லாஹ் கொடுத்த அருளை வீண் விரயம் செய்து பெருமை தேடுவார்கள் .அதற்கு ஆங்கிலேயர்கள் ஒரு சபாஸ் போட்டு இன்னும் கெட்டுப் போ என தூண்டுவதற்கே இந்த கின்னஸ் சாதனைப் பட்டம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
படித்து மனம் மிகவும் கனத்துப் போனது. இவர்கள் இஸ்லாமிய ஆட்சியாளர்களா?
ஒரு காரியம் சரியான முறையில் செய்யாவிட்டாலும் கெடும். இந்த காரியம் ஒரு ஆடம்பரத்தை நோக்கிய சரியற்ற காரியம். அஞ்சாமல் செய்யப்பட பதிவை பாராட்டுகிறேன். - இப்ராஹீம் அன்சாரி துபாய்.
சலாம் சகோ முஹம்மத் ஆசிக்,
பெட்ரோல் வளம் இல்லாமல் ஏழையாகவே இருந்திருந்தால் இவர்கள் நல்ல ஈமானுடன் இருந்து இருப்பார்களோ??? எதை எடுத்தாலும் ஆடம்பரம், அமெரிக்க ஜால்ரா புத்தி.
சவுதிக்கும் ஒரு மக்கள் புரட்சி தேவை சகோ. மற்ற மத்திய கிழக்கு நாடுகளில் ஆதரித்ததை போல் சவுதியில் புரட்சி ஏற்ப்படுவதை அமெரிக்கா ஆதரிக்காது. ஆதரித்தால் அது தனக்கு தானே தோண்டும் புதை குழி என்று அதற்க்கு நன்றாகவே தெரியும்.
@தாஜுதீன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
///என்னதான் ஆட்சியாளர்கள் அவர்கள் இஸ்டத்துக்கு இஸ்லாத்தை அவர்கள் வழியில் எடுத்துச்சொல்ல முன்வந்தாலும், கியாம நாள் வரை நம் இஸ்லாம் அதன் தூயவடிவில் இருந்துக்கொண்டே தான் இருக்கும் அதற்காக ஒரு கூட்டத்தார் இருந்துக்கொண்டே தான் இருப்பார்கள்.
அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக.///---சரியாக சொன்னீர்கள் சகோ. ஆமீன்.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் அருமையான கருத்துக்கும் நன்றி சகோ.தாஜுதீன்.
@VANJOORதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் இப்பதிவு மேலும் பலரின் பார்வையை சென்றடைய தங்களின் முயற்சிக்கும் நன்றி சகோ.வாஞ்சூர்.
@NKS.ஹாஜா மைதீன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
///வன்மையாக கண்டிக்கத்தக்கது///---எனது கண்டனமும் சேரட்டும்..!
தங்கள் வருகைக்கும் கண்டன பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.ஹாஜா மைதீன்.
@ஷர்புதீன்//மீசை அதிகம் வளர்ப்பது, நீண்ட தூரம் எச்சு துப்புவது என்ற சாதனைகள் ??ridiculous and crap !//---சாதனைகளை விடுத்து இதுபோன்றவைதான் தற்போது அதில் மிகுதியாகி விட்டது சகோ. எனவே, அதை 'கின்னஸ் சோதனை புத்தகம்' என்பதில் தவறில்லைதான்..!
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.ஷர்புதீன்.
நம்மவர்கள் தானே செய்தார்கள், அதுவும் நமது அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பற்றிய நூல் தானே என்றெல்லாம் 'சப்பைக் கட்டு' கட்டாமல் நியாயமான முறையில் நேர்மையுடன் விமரிசனம் செய்த தங்களுக்கு பாராட்டுக்கள். தொடரட்டும் தங்கள் பணி.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,உண்மையில் இது சாதனை கிடையாது சோதனை என்பதை அழகாகவே எடுத்து கூறியிருக்கின்றீர்கள்.இஸ்லாம் என்ன போதிக்கின்றதோ அதற்கு எதிர் மாறாகத்தான் சில முஸ்லிம்கள் நடந்து கொண்டிருக்கின்றார்கள்.இந்த புத்தகம்போல் சில மாதங்களுக்கு முன் உலகிலேயே "பெரிய குர்ஆன்" என்று முகப்புத்தகத்திலும்,வலைகளிலும் வலம் வந்ததை என்னால் கண்டு சந்தோஷமடைய முடியவில்லை.சில முஸ்லிம்கள் இதை கண்டு பெருமைபட்டுகொண்டார்கள்.இதில் என்ன பெருமை இருக்கின்றதென்று தெரியவில்லை.எதற்கு இந்த வீன்செலவு.இதனால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை.
""""11 திர்ஹாமில் தரமான புத்தகம் ஒன்றாக மொத்தம் ஒரு மில்லியன் புத்தகம் அச்சடித்து, அவற்றை எல்லாம், இஸ்லாம் இன்னும் அறியப்படவேண்டிய நாடுகளில் விநியோகித்து இருந்திருந்தால்... அதைப்படித்து மில்லியனில் ஒரு பதினோரு பேராவது நேர்வழி பெற்று இருந்திருந்தால்... இவைதான் நிலையான சாதனைகள் அல்லவா உங்களுக்கு..? """""நெத்தியடி
ஒரு மாற்று மத நண்பர் சொன்னார் "ISLAM IS THE BEST RELIGION BUT SOME MUSLIMS ARE THE WORST FOLLOWERS".இது உண்மையில் 100% சரி.
@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//...பல நேர்மறையான கருத்துக்களும் வியப்புக்குரிய செயலாக எண்ணி வாழ்த்துக்களும் வலம் வரும் நாட்களுக்கு மத்தியில் அந்த புத்தகம் குறித்த எதிர்மறையாய்
ஆனால்...
உண்மையாய் ஒரு விமர்சனம்.//---நன்மை என்ற தவறான புரிதலில் செய்யப்படும் தீமையை எதிர்ப்பதும் ரொம்ப ரொம்ப முக்கியம் சகோ.குலாம்.
அதை நம்மில் பலர் தொடர்ந்து செய்து வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.
நம் அனைவருக்கும்... தொடர்ந்து //அல்லாஹ் நேர்வழி செலுத்த போதுமானவன்.//..ஆமீன்.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.குலாம்.
@ஜெய்லானிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//சில விஷயங்களை ”மெத்த படித்த” ஆலிம்களால் கூட ’ஷேக்’குகளிடம் சொல்ல முடியாது//---மிகவும் துயரமான நிலை சகோ.இது..!
ஒரு தீமை நடந்தால்...
அதை கையால் தடுக்க வேண்டும்.
அதற்கு சக்தி இல்லையேல் வாயால் தடுக்க வேண்டும்.
அதற்கும் பயந்தால்...
மனத்தால் வெறுத்து ஒதுங்கி விட வேண்டும்..! இதை இறைநம்பிக்கையின் கடை நிலை என்கிறது நபிமொழி...!
//இதற்கு துனை போன இமாம்கள் நாளை மறுமையில் குற்றவாளி ஆக முடியாது .//----துணை போவதை என்னால் ஏற்க முடியாது சகோ..! இது சரியான கருத்தும் அல்ல..!
அப்புறம்...
நம்ம நாட்டோடு கம்பேர் பண்ண முடியாது சகோ. நம் நாட்டில் அரசியல்வாதிகளால் வீணடிக்கப்படுவது மக்கள் பணம். இங்கே வீணடிக்கப்படுவது சொந்தப்பணம்..!
முன்னதை தடுக்க நம் நாட்டில் சட்டம் தான் தன் கடமையை செய்ய முடியும்.
பின்னதற்கு இஸ்லாம் மட்டுமே தான் சரியான நோய் நிவாரணி..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.ஜெய்லானி.
@NIZAMUDEENவருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.நிஜாமுதீன்.
@Syed Ibramshaவருகைக்கும் பின்னூட்டத்துக்கும்...///"எப்படிச் சம்பாதித்தாய், அதை எப்படிச் செலவு செய்தாய்" மறுமையில் இக் கேள்விக்கு விடையளிக்காமல் ஒருவன் கால் நகராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது, நம்மில் நிறைய பேர்களுக்குத் தெரியாமல் போனதுதான் பரிதாபம்.///...அருமையான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.சையத் இப்ராம்ஷா.
@லெ.மு.செ.அபுபக்கர்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்...///மன இச்சைகளை பின் பற்றி வாழாமல் குர்ஆன், சுன்னாஹ் இவைகளை பின் பற்றி அரபுகள் செயலால் வடிவமைத்தார்களானால் உலக சாதனை மட்டுமில்லை.நாளை மறுமையில் இறைவன். தரக்கூடிய சொர்க்கத்தோடு சாதனையில் முதலிடம் பிடிப்பார்கள்.///......அருமையான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.அபுபக்கர்.
@பார்வையாளன்வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் உடன்பாட்டுக்கும் மிக்க நன்றி சகோ.பார்வையாளன்.
@சிநேகிதன் அக்பர்வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.சிநேகிதன் அக்பர்.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@niduraliவருகைக்கும் பின்னூட்டத்துக்கும்...///அல்லாஹ் கொடுத்த அருளை வீண் விரயம் செய்து பெருமை தேடுவார்கள் .அதற்கு ஆங்கிலேயர்கள் ஒரு சபாஸ் போட்டு இன்னும் கெட்டுப் போ என தூண்டுவதற்கே இந்த கின்னஸ் சாதனைப் பட்டம்.///...சரியான கணிப்புக்கும் மிக்க நன்றி சகோ.நீடூர் அலி.
@Jafar Safamarvaஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மனம் கனத்த கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.ஜாஃபர். அவர்களுக்காக துவா செய்வோம் நாம்..!
@Ebrahim Ansariவருகைக்கும் பின்னூட்டத்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.இப்ராஹீம்.
//இப்புத்தகத்தை தயாரிக்க 11 மில்லியன் திர்ஹம் (சுமார் 14 கோடி ரூபாய்) செலவாகியுள்ளது..!//
என்ன ஒரு வீண்செலவு.. இங்கே இது மட்டுமல்ல.. இந்த பணக்கார திமிர்பிடித்த அரபிகளின் அட்டகாசம் ரொம்ப அதிகம்..
அதுவும் எளிமையான வாழ்க்கை.. வாழ்ந்து மற்றவர்களையும் வாழ்த்தூண்டிய நபிகள் நாயகத்தைப்பறறிய புத்தகம்..
//இப்புத்தகம் இறுதியாக அபுதாபியில் உள்ள ஷைக் சாயித் கிராண்ட் பள்ளிவாசலில் நிரந்தரமாக பார்வைக்கு வைக்கப்படும்..! //
இப்பள்ளிவாசல் கூட வெறும் ஆடம்பரம்,சுற்றுலா நோக்கில் கட்டப்பட்டதுதான்.. மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் பெரிய பள்ளிவாசல்கள் கிடையாது.. ஜும்மா தினங்களில்.. 50% க்கும் அதிகமானோ பாதைகளில்தான் தொழுகின்றனர்.. காரணம் இடப்பற்றாக்குறை.. இவ்வாறான இடங்களில் பள்ளிவாசல்களை பெரிதாக்க எந்த நடவடிக்கையும் இல்லை.. இந்த யு ஏ இ அரசாங்கத்தின் நடவடிக்கைகள்.. பெரும்பாலும் வெறுப்பையே ஏற்படுத்துகிறது.. இங்கே பப்ளிக்காக கொடிகட்டிப்பறக்கும் விபச்சாரம் போன்ற பாவகாரியங்களை தடுப்பதற்க்கு துப்பில்லாதவர்கள்... லுங்கி கட்டிக்கொண்டு வெளியே தண்டனை விதிக்கிறார்கள்.. ஆனால் ஐரோப்பியர்கள் மற்றும் மேற்கு நாட்டவர் ஜட்டியுடனும்.. வேண்டுமானால் நீச்சல் உடையுடனும் அலைய முடியும்..
//வறுமையில் வாடும் ஆப்பிரிக்க மக்களின் பசியை ஒரு மாத காலத்திற்காவது போக்கி இருந்தார்கள் என்றால்//
எதுக்கு ஆபிரிக்காவுக்கு போகனும்.. அவர்களின் காலடியிலே இருக்கும் ஆயிரக்கனக்கான தொழிலாளர்களின் நலங்களை கவனிக்கலாமே! மாறாக அவர்களிடமிருந்து ரூம் வாடகை என்ற பெயரிலும், தேவையே இல்லாத எமிரேட்ஸ் ஐடி என்ற பெயரிலும் கொள்ளை அடிப்பதை தவிர்த்து.. இவர்கள் இவ்வாறு செலவழிக்கும் பணம் இவர்கள் உழைத்ததா? இல்லவே இல்லை.. எல்லாம் ஏழைத்தொழிலாளர்களின் வேர்வைத்துளிகள்.. அவர்களை சுரண்டி சம்பாதித்தது..
நான் இங்கு வரும்வரை இந்த நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாகவே நினைத்திருந்தேன்.. வந்தபிறகுதான் என் எண்ணத்தில் செருப்படி விழுந்தது..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....
அருமையான பதிவு
//எதுக்கு ஆபிரிக்காவுக்கு போகனும்.. அவர்களின் காலடியிலே இருக்கும் ஆயிரக்கனக்கான தொழிலாளர்களின் நலங்களை கவனிக்கலாமே! மாறாக அவர்களிடமிருந்து ரூம் வாடகை என்ற பெயரிலும், தேவையே இல்லாத எமிரேட்ஸ் ஐடி என்ற பெயரிலும் கொள்ளை அடிப்பதை தவிர்த்து.. இவர்கள் இவ்வாறு செலவழிக்கும் பணம் இவர்கள் உழைத்ததா? இல்லவே இல்லை.. எல்லாம் ஏழைத்தொழிலாளர்களின் வேர்வைத்துளிகள்.. அவர்களை சுரண்டி சம்பாதித்தது..///
சரியான பின்னூட்டம் சகோ நிதர்சனம்
முஹம்மது நபி ஸல் அவர்கள் பல நாடுகளுக்கு மன்னராக இருந்தும் எவ்வளவு எளிமையாக இருந்தார்கள் பகலில் விரிப்பாக இருக்கும் பாயை இரவில் கதவாக பயன்படுத்தினார்கள் என்ற வரலாறுகளை தெரியாதவர்களா இவர்கள்?
விழிப்புணர்வு பதிவு !
வாழ்த்துகள்............!
நல்ல விமர்சனம் ஆஷிக்..
இப்படி வீண் செலவு செய்பவர்கள் நாட்டுநலனுக்காக ஒரு சதவீதமாவது செலவு செய்வார்களா?.. இதல்லாம் மனித இயல்பு. என்ன செய்ய இவர்களை?..
//இஸ்லாம் குறித்து கொஞ்சநஞ்சம் நல்ல அபிப்பிராயம் வைத்திருப்பவர்களை கூட//
அது என்ன கொஞ்ச நஞ்சம்?
ஏன் இப்ப இஸ்லாம் பற்றி அபிப்ராயம் கெட்டு போச்சா என்ன?
-பஹ்ருத்தீன்
அஸ்ஸலாமு அலைக்கும்
//செலவழித்த 11 மில்லியன் திர்ஹமை வைத்து, வறுமையில் வாடும் ஆப்பிரிக்க மக்களின் பசியை ஒரு மாத காலத்திற்காவது போக்கி இருந்தார்கள் என்றால் அதுதான் நிஜமான உலக சாதனை.
செலவழித்த 11 மில்லியன் திர்ஹமை வைத்து கல்வியோ, வீடோ அல்லது வேறு ஏதேனும் ஆக்கப்பூர்வமான மக்கள் நலப்பணித்திட்டங்களோ அமைத்து மக்களுக்கு அழகான வாழ்வை வாழ வழிவகுத்திருந்தார்கள் என்றால் அது தான் நிரந்தர உலக சாதனை. //
ஐய்யோ..சொல்லி சொல்லி புளித்துப்போன லாஜிக் இது
ஆப்ரிக்கர்களுக்கு உதவுவதாகட்டும், அல்லது கல்விக்கு செலவிடவதாகட்டும் அது தனிக்கதை. இந்த குர் ஆன் தயாரிப்பில் ஏற்பட்ட செலவுகளால் அம்மாதிரியான சில பிரயோஜனமான காரியங்கள் தடைபட்டிருந்தால் நீங்கள் சொல்வது சரி.
ஆப்ரிக்க மக்களின் வறுமைக்கோ, கல்விக்கோ செலவு பன்ன சொல்ல நினைத்தால் அதை நேரடியாகவே சொல்வதில் தவறு இல்லை. அதை இந்த குர் ஆனோடு குடிச்சு போட்டுதான் சொல்லனும்னு என்ன அவசியம் ஏற்பட்டது. இந்த குர் ஆனுக்கு செலவழித்த பின்பும் கூட சவுதியால் ஆஃப்ரிக்கர்களுக்கும் செலவு செய்யமுடியும். கல்விக்கும் செலவழிக்க முடியும். அதை ஏன்யா செய்யமாட்டேன்றீங்கனு கேட்டா அது வரவேற்கதக்க கேள்வி.
இந்த குர் ஆனுக்காக இவ்வளவு செலவழித்துவிட்டாச்சு, அதனால் கல்விகூடங்களுக்கோ, தர்மங்களுக்கோ செல்வு பன்றதுக்கு கஜானா காலினு சொன்னா நீங்க சொல்ற லாஜிக் ஓகே. ”உங்களிடம் செல்வம் இருக்கும் பொருட்டு நீங்கள் விசாலாமாக இருந்து கொள்ளலாம்” இதுவும் இஸ்லாம் சொல்லி கொடுத்ததுதான்(விசாலம் என்பதை ஆடம்பரம்னு தவறாக புரிந்து கொள்ளக்கூடாது)
சில பேருக்கு 1000ரூபாய் பெரிய தொகை இல்லை, சில பேருக்கு 10,000 ரூபாய் பெரிய தொகை இல்லை, சில பேருக்கு ஒரு லட்சம் கூட பெரிய தொகை இல்லை. ஏன் இன்னும் சில பேருக்கு ஒரு கோடி கூட பெரிய விஷயம் இல்லை.
சவுதி அரசுக்கு அந்த செலவு பெருசு இல்லை, அந்த செல்வு போகவும் மற்ற நற்காரியங்களுக்கு செலவு செய்ய சவுதி கஜானா தகுதியுடன் தான் உள்ளது, தயாராக உள்ளதா என்றுதான் நாம் கவலைப்பட வேண்டும். ஓகே வா?
முஹம்மது என்றால் யார் என எல்லாரையும் திரும்பி பார்க்க வைக்கும் என்றால் அது நல்ல விஷயம்தானே? எது எதுக்கோ பணத்தை அழிக்கிறதுக்கு இதுக்கு செலவிட்டதால் ஒன்றும் ஆபத்து நேர்ந்துவிடப்போவதில்லை எதுக்கும் நீங்களும் ஒரு தடவை யோசிச்சு பாருங்க. மேட்டர் ஓகே தானா என்று.
இறைவன் ஞானமிக்கோன், அவனே எல்லாவற்றையும் நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாம்
-பஹ்ருத்தீன்
@AshIQஅலைக்கும் சலாம் வரஹ்...
///அது என்ன கொஞ்ச நஞ்சம்? ஏன் இப்ப இஸ்லாம் பற்றி அபிப்ராயம் கெட்டு போச்சா என்ன?///
---இல்லை சகோ.பகுருதீன். கெட்டுப்போகவில்லை.
சிலர், தவறான முஸ்லிம்களை பார்த்து இஸ்லாத்தை இப்படித்தான் என அளவீடு செய்கிறார்கள்.
அதாவது, என்னதான் சொல்லிக்கொடுத்தும் அதன்படி படிக்காமல் ஊரைசுற்றி பரிட்சையே எழுதாமல் ஃபெயிலா போன ஒரு மாணவனை வைத்து அவன் படித்த பள்ளியை எடை போடுகின்றனர். அது மகா தவறு அல்லவா..?
இந்நிலையில் இப்பள்ளியை பத்தி முன்பே தம் தவறான முன்முடிவு மூலம் வன்மம் கொண்டு உள்ள இவர்களிடம்... அந்த மாணவனின் செய்கையை நாம் தவறு என்று புரியவைக்க வேண்டாமா..? அவர்களுக்கானதுதான் சகோ. இப்பதிவின் முயற்சி.
@AshIQ///இந்த குர் ஆன் தயாரிப்பில் ஏற்பட்ட செலவுகளால் அம்மாதிரியான சில பிரயோஜனமான காரியங்கள் தடைபட்டிருந்தால் நீங்கள் சொல்வது சரி.///
----அப்டீன்னா நீங்க என்ன சொல்ல வரீங்க...?
அந்த நபர் முன்னரே பதினோரு பி ல்லியன் ஆப்ரிக்காவுக்கு வறுமை நீங்க செலவழித்து இருந்தால்... இப்போது பதினோரு மி ல்லியன் இப்படி செலவழித்தால் தப்பில்லை என்றா..?!?
///ஆப்ரிக்க மக்களின் வறுமைக்கோ, கல்விக்கோ செலவு பன்ன சொல்ல நினைத்தால் அதை நேரடியாகவே சொல்வதில் தவறு இல்லை. அதை இந்த குர் ஆனோடு குடிச்சு போட்டுதான் சொல்லனும்னு என்ன அவசியம் ஏற்பட்டது. இந்த குர் ஆனுக்கு செலவழித்த பின்பும் கூட சவுதியால் ஆஃப்ரிக்கர்களுக்கும் செலவு செய்யமுடியும். கல்விக்கும் செலவழிக்க முடியும். அதை ஏன்யா செய்யமாட்டேன்றீங்கனு கேட்டா அது வரவேற்கதக்க கேள்வி.///-----ஹா..ஹா..ஹா..
இப்பதிவின் நோக்கம் ஆப்ரிக்க மக்களுக்கு செலவு செய்ய தூண்ட வேண்டும் என்பது அல்லவே அல்லவே..!?!
"இதுக்கு அது பெட்டர்" என்றும் கூடவே வேறு இரண்டு ஐடியாக்களும் பதிவில் உள்ளனவே..?!? அவற்றை கவனிக்கவில்லையா சகோ.பகுருதீன்..?
/// ”உங்களிடம் செல்வம் இருக்கும் பொருட்டு நீங்கள் விசாலாமாக இருந்து கொள்ளலாம்” இதுவும் இஸ்லாம் சொல்லி கொடுத்ததுதான்(விசாலம் என்பதை ஆடம்பரம்னு தவறாக புரிந்து கொள்ளக்கூடாது)///--
-----இதற்கு ஆதாரம்...?!?
@AshIQ///முஹம்மது என்றால் யார் என எல்லாரையும் திரும்பி பார்க்க வைக்கும் என்றால் அது நல்ல விஷயம்தானே?///
----ஆமாம்..! அது நல்ல விஷயம்தான் சகோ..!
மேட்டர் என்னவென்றால்...
எனது பெயர் டிவி நியூசில் வரவேண்டும் என்றால்... அது நல்ல விஷயம்தானே..?
ஆனால், "நான் நல்லது செய்து" வரவேண்டுமா... அல்லது "நான் கெட்டது செய்து" வரவேண்டுமா..? எது செய்தாலும் நான் நியூசில் வருவேன் அல்லவா..? எதை வரவேற்பீக்கள்..?
///எது எதுக்கோ பணத்தை அழிக்கிறதுக்கு இதுக்கு செலவிட்டதால் ஒன்றும் ஆபத்து நேர்ந்துவிடப்போவதில்லை///
----ஆபத்து நேர்ந்து இருக்கிறது சகோ..! இது வீண்விரையம் இல்லையா..? பத்து ரூபாய் செருப்பு சீக்கிரம் தேயும், சீக்கிரம் பிய்யும், என்பதற்காக பேட்டாவில் அழுத்தமாக ஆயிரம் ரூபாய்க்கு "நீண்ட நாள் உழைக்க வேண்டும்".... "காலுக்கும் கூடுதல் பாதுகாப்பு வேண்டும்"... என்று வாங்கி போடலாம் தப்பில்லை.
ஆனால், வெள்ளி பாட்டம் தச்சி... தங்க இழை வேய்ந்து... வைரக்கல் பதிச்சு ஐம்பது லட்சத்தில் செருப்பு போட்டால்... இவரை என்ன சொல்வீர்கள்...? இவர் ஒரு கோடி ரூபாய் ஏழைக்காக செலவு செய்தவராக இருந்துவிட்டு போகட்டுமே..? சரி என்பீர்களா..?
எதுக்கும் நீங்களும் ஒரு தடவை யோசிச்சு பாருங்க. மேட்டர் ஓகே தானா என்று.
இறைவன் ஞானமிக்கோன், அவனே எல்லாவற்றையும் நன்கு அறிந்தவன்.
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.Ash IQ
@Starjan வீண்செலவுகளை விடுத்து, செல்வத்தை உருப்படியாக செலவு செய்ய இனியாவது அப்படியானவர்கள் சிந்திக்க வேண்டும் சகோ. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.ஸ்டார்ஜன்.
@சேக்கனா M. நிஜாம்வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.நிஜாம்.
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
///முஹம்மது நபி ஸல் அவர்கள் பல நாடுகளுக்கு மன்னராக இருந்தும் எவ்வளவு எளிமையாக இருந்தார்கள் பகலில் விரிப்பாக இருக்கும் பாயை இரவில் கதவாக பயன்படுத்தினார்கள் என்ற வரலாறுகளை தெரியாதவர்களா இவர்கள்?///---அருமையாக கேட்டீர்கள்..!
சிலர் இப்படி தெரிந்தும் மறந்தவர்களாக இருக்கிறார்கள் சகோ. அவர்களுக்கு நாம் நியாபகமூட்டிக்கொண்டே இருப்போம்..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.ஹைதர் அலி.
@Riyas///நான் இங்கு வரும்வரை இந்த நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாகவே நினைத்திருந்தேன்.. வந்தபிறகுதான் என் எண்ணத்தில் செருப்படி விழுந்தது..///----எவ்வளவு நொந்து போயிருந்தால் இப்படி சொல்வீர்கள் சகோ..!
யு எ இ பற்றி நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன் சகோ..! செல்வம் ஒரு சோதனை என்ற ஹதீஸை மெய்ப்பித்து அதில் தோற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்..!
உங்கள நாட்டில் முஸ்லிமாக வாழ்வதை விட... துபாயில் முஸ்லிமாக வாழ்ந்து காட்டுவது பெரிய சாதனைதான்..! நிறைய நன்மை என்று மனதை தேற்றிக்கொள்ளுங்கள் சகோ..! இப்போதைக்கு வேறென்ன சொல்ல..?
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நிதர்சனமான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.Riyas.
@முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//சில மாதங்களுக்கு முன் உலகிலேயே "பெரிய குர்ஆன்" என்று முகப்புத்தகத்திலும்,வலைகளிலும் வலம் வந்ததை என்னால் கண்டு சந்தோஷமடைய முடியவில்லை//---எனக்கும்தான் சகோ..!
சகோ.சுவனப்பிரியன் இதனை தம் பதிவில் கண்டித்துள்ளார் சகோ.ஷஃபி. அதில் எனது பின்னூட்டத்தையும் படிங்கள்.
"ISLAM IS THE BEST RELIGION BUT SOME MUSLIMS ARE THE WORST FOLLOWERS".----WE WANT THOSE MUSLIMS MUST BECOME GOOD...BETTER... (AND IF POSSIBLE) BEST FOLLOWERS OF ISLAM
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் சுயபரிசோதனையை தூண்டும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ. முஹம்மது ஷஃபி.
@மஸ்தூக்கா///நம்மவர்கள் தானே செய்தார்கள், அதுவும் நமது அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பற்றிய நூல் தானே என்றெல்லாம் 'சப்பைக் கட்டு' கட்டாமல்...///
---ஆமாம் சகோ.மஸ்தூக்கா. நமது மக்கள் தவறுசெய்தால், அதை 'சரி' என்று பொய் சொல்ல நமக்கு இஸ்லாத்தில் தடை உண்டே..!
இதைத்தானே 'இனவெறி...மதவெறி...மொழிவெறி..' என்றெல்லாம் சொல்கிறார்கள் நபி(ஸல்) அவர்கள்..!
ஒரு முஸ்லிமுக்கு இன-மத-மொழி
வெறி ஏதும் இருக்க முடியாதே சகோ..! இதில் நான் தவறு செய்தால் சுட்டிக்காட்டுங்கள் சகோ.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும்
நன்றி சகோ.மஸ்தூக்கா.
@சிராஜ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
///பெட்ரோல் வளம் இல்லாமல் ஏழையாகவே இருந்திருந்தால் இவர்கள் நல்ல ஈமானுடன் இருந்து இருப்பார்களோ??? ///-----இல்லை சகோ.சிராஜ்..!
நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு... 'இவர்கள் பெரும் செல்வந்தர்கள் ஆவார்கள்' என்பதுதான். ஆகிவிட்டார்கள். அடுத்து இவர்களுக்கு சோதனை அதே செல்வம்தான்..! அதுதான் இப்போது நடந்து கொண்டு உள்ளது..!
///சவுதிக்கும் ஒரு மக்கள் புரட்சி தேவை சகோ. ///
----இந்த பதிவில் உள்ள புத்தகத்தை எழுதியவர் மட்டுமே சவூதிகாரர். அதை இத்தனை செலவு செய்தது, வெளியிட்டது எல்லாம் துபாய் ஆட்சியாளர்.
ஆனால், துபாயில் புரட்சி வராது. காரணம்.. அந்த நாட்டு முஸ்லிம் மக்களை விட வேற்று நாட்டு முஸ்லிம் அல்லாத மக்கள்தான் அதிகம். அவர்களுக்கு சகோ.ரியாஸ் சொன்ன அனாச்சாரங்கள் மற்றும் இந்த பதிவில் உள்ளதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல..!
///மற்ற மத்திய கிழக்கு நாடுகளில் ஆதரித்ததை போல்///----இல்லை.. சகோ. ஆதரிக்க வில்லை..! 'நேரடியாக ஆயுதம் மூலம் எதிர்க்காமல் இருந்தது' அவ்வளவுதான்..!
///சவுதியில் புரட்சி ஏற்ப்படுவதை அமெரிக்கா ஆதரிக்காது. ஆதரித்தால் அது தனக்கு தானே தோண்டும் புதை குழி என்று அதற்க்கு நன்றாகவே தெரியும்.///----கட்டாயம் ஆயுதம் மூலம் எதிர்க்கும்..!
ஆனால்,
சவூதியில் புரட்சிக்கு அவசியம் இல்லையே சகோ.சிராஜ்.
பொதுவாக அனாச்சாரங்கள் எல்லா நாடுகளிலும் நடக்கின்றது. மத்திய கிழக்கு நாடுகளிலை பொருத்தமட்டில் சவூதி அரேபிய மற்ற நாடுகளை விட எவ்வளவோ மேல்..!
அதன் மக்களும் எப்போது புரட்சி அவசியம் என்பதை அறிந்து வைத்துள்ளார்கள்..! இப்போது அவசியம் இல்லை என்பதையும் அறிந்து வைத்துள்ளார்கள்..!
ஆனாலும் இவர்களுக்கு புரட்சி செய்ய தெரியாது என்றெல்லாம் இல்லை. அருமையாக செய்தும் காட்டியுள்ளார்கள்.
அதனை... சவூதியில் மக்கள் புரட்சிக்கு கிடைத்த மகத்தான் வெற்றிபதிவில் சொல்லி இருக்கிறேன்.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்
நன்றி சகோ.சிராஜ்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
எத்தனை Recession வந்தாலும் ஆடம்பரம் மட்டும் குறையாது போல..
மிக மிக சரி
சமூக சோதனை தான்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நல்லதொரு ஆக்கம் சகோ. நல்ல விஷயங்களை ஆதரிப்பது போல் தவறுகளை சுட்டிகாட்டவும் தயங்க கூடாது என்பதை எடுத்துகூறும் அழகிய பதிவு.
நிச்சயமாக இது ஒரு ஆடம்பர செலவு தான். இதை ஆக்கப்பூர்வ விஷயங்களுக்கு திருப்பிவிட்டால் நிச்சயம் பயன் பலருக்கும் கிடைத்திருக்கும்! இன்று ஒரு பள்ளிவாசலில் காட்சிபொருளாய் அடக்கி வைக்கப்பட்ட விஷயம் பலரின் வாழ்வில் விளக்கேற்றும் விஷயமாக மாறியிருக்கும்! மிஸ் ஆய்டுச்சே :'(
முஹம்மது என்றால் யார் என எல்லாரையும் திரும்பி பார்க்க வைக்கும் என்றால் அது நல்ல விஷயம்தானே? என கேட்பவர்களுக்கு...
அய்ய்யோ.... கேட்டு கேட்டு புளிச்சு போன லாஜிக் இது!
அது என்ன நல்ல விஷயம்?
ஏன் இப்ப முஹம்மது என்றால் யார் என யாருக்கும் தெரியாதா என்ன??!!!
@ஆமினாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//மிஸ் ஆய்டுச்சே :'(//---ங்க்கும்... சகோ..! மிஸ் பண்ணிட்டாங்களே..!
//ஐய்யோ..சொல்லி சொல்லி புளித்துப்போன லாஜிக் இது.
அது என்ன கொஞ்ச நஞ்சம்?
ஏன் இப்ப இஸ்லாம் பற்றி அபிப்ராயம் கெட்டு போச்சா என்ன?//
..........இதுக்கு...........
\\\அய்ய்யோ.... கேட்டு கேட்டு புளிச்சு போன லாஜிக் இது!
அது என்ன நல்ல விஷயம்?
ஏன் இப்ப முஹம்மது என்றால் யார் என யாருக்கும் தெரியாதா என்ன??!!!\\\
............இது தான்...........
சரியான பதில் சகோ.ஆமினா..! அதிரடி..!
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் கருத்துக்கும்
நன்றி சகோ.ஆமினா..!
@khaleelதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்
நன்றி சகோ.கலீல்.
@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//Recession//---இதெல்லாம் only for employees சகோ..! not for employers..! ஹி..ஹி..
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்
நன்றி சகோ.அப்துல் பாஸித்.
ஸலாம் சகோ
இந்த புத்தகம் வெளியீடு நிகழ்வு சும்மா ஒரு விளம்பரம்தான் சீரியசா எடுத்துகொள்ளவேண்டாம் மிடில் ஈஸ்ட் ஆட்சியாளர்களின் அட்டகாசங்களை பட்டியல் இட்டால் தினமும் பல பதிவுகளாக இட மேட்டர் உள்ளது சகோ
@Rabbaniஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//..சும்மா ஒரு விளம்பரம்தான்..//---இதி சவூதி காரரின் புத்தகத்துக்கு துபாய் ஆட்சியாளரின் விளம்பரம் இல்லை சகோ.ரப்பானி.
'மது ஒழிப்பு பற்றி ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கு' அதுவும்... டாஸ்மாக்கில், மது குடித்துக்கொண்டே, போதையில் நடத்தினால்... எப்படி இருக்கும்..?
எனவே, இது மெயின் மேட்டர்..! மிகவும் சீரியஸ்..!
//மிடில் ஈஸ்ட் ஆட்சியாளர்களின் அட்டகாசங்களை பட்டியல் இட்டால் தினமும் பல பதிவுகளாக இட மேட்டர் உள்ளது சகோ//---ஆமாம் சகோ.ரப்பானி.
ஆனால், அவற்றை எல்லாம் 'இஸ்லாம் அல்ல' என்று சரியாக விளங்கி ஒதுக்கத்தெரிந்த நம்மில் சிலர், இந்த விஷயத்தை மட்டும் ஒரு சாதனையாக மகிழ்ந்து பரஸ்பரம் மெயில் பரிமாறிக்கொள்வதை காண நேர்ந்தது. அதனை தவறு என்று உடனடியாக சுட்டிக்காட்டி ஒரு பதிவு எழுதி விழிப்புணர்வூட்ட வேண்டியது அவசியமாகி விட்டது சகோ.
உதாரணமாக...
http://news.discovery.com/space/big-pic-hamad-abu-dhabi-space-graffiti-110721.html
...இதையெல்லாம், நம்மில் ஒருத்தர் கூட இஸ்லாமிய சாயம் பூசவோ, இப்படி செய்தால் மறுமையில் நன்மை கிட்டும் என்று சிலாகிக்கவோ, வியந்து பாராட்டவோ இல்லை. அதனால், இதை சீரியஸாக எடுக்காமல், ஜஸ்ட் வெறுத்து கடந்து போகிறோம்..!
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்
நன்றி சகோ.
மிக அருமையான பதிவு சகோ. ஆஷிக்,
அரேபியர்கள் முட்டாள்கள் என்று அடிக்கடி நான் கேள்விப்பட்டதுண்டு. அதை உண்மைப் படுத்துவது போன்றுல்லது இந்நிகழ்வு.
இது மகிவும் பயனுள்ள, அவசியம் உணர்த்தப் படவேண்டிய (தீமையா)தலால், இதனுடன் சேர்த்து இன்னும் பல தகவல்களை உள்ளடக்கி அரேபியர்கள் அறியும் பொருட்டு, தங்களின் கட்டுரையை அரபியில் மொழிபெயர்க்க தங்களின் அணுமதி கோறுகிறேன். மொழபெயர்ப்பு முடிந்த பின் தங்களின் பார்வைக்கு முதலில் அணுப்பி வைக்கப் படும்.
நன்றி
அன்ஸார்
@asljhkசகோ.அன்சார்,
இதுபோன்ற ஆடம்பரங்களை எதிர்த்து அரபியிலும் எழுதுவோர் ஏகப்பட்டோர் உண்டு.
//இதனுடன் சேர்த்து இன்னும் பல தகவல்களை உள்ளடக்கி...//---நல்ல விஷயம் சகோ. தாராளமாக செய்யுங்கள்..!
அனுமதி கேட்கவெல்லாம் அவசியம் இல்லை சகோ.//Copyright: For Me (~முஹம்மத் ஆஷிக்_citizen of world~) & You //---இது எனது பிளாக்கின் கடைசி வரி..!
//மொழபெயர்ப்பு முடிந்த பின் தங்களின் பார்வைக்கு முதலில் அணுப்பி வைக்கப் படும்.//---தவறு/சரி-திருத்தம் செய்யும் அளவுக்கெல்லாம் எனக்கு அரபியில் புலமை கிடையாது சகோ.அன்சார். ஹி..ஹி.. :-)
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்
நன்றி சகோ.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!