தமிழக அரசியலில் பொதுத்தேர்தலை பொருத்தமட்டில் பல காரணிகள் வெற்றி தோல்வியை நிர்ணயித்தாலும், இலவசங்கள் பற்றிய வாக்குறுதிகளுக்கு மட்டும் ஒரு மகத்தான இடம் உண்டு..! அப்படித்தான் இப்போதைக்கு முந்திய பொதுத்தேர்தலில்.... இலவச சைக்கிள், இலவச டிவி, இலவச Gகேஸ் ஸ்டவ், ரெண்டு ரூபா அரிசி (கிட்டத்தட்ட இலவசம்தானே இது?) என, இதுமாதிரி வாக்குறுதிகளை அள்ளி வீசியவுடன், பெரும்பான்மையான மக்கள் இலவசங்களுக்கு மயங்கி திமுகவுக்கு வாக்குகளை அள்ளி வழங்கி அதை அமோக வெற்றி பெற வைத்தார்கள். அதனாலேயே 2006ல், 'க.'தமிழக முதல்வர் ஆனார்.
அதேபோல, அதுவரை வழங்கப்பட்டு வந்த இலவசங்களை கன்னாபின்னா என்று திட்டித்தீர்த்த எதிர்க்கட்சித்தலைவர் ஜெ. கடந்த பொதுத்தேர்தலில், மக்களின் நாடியை புரிந்தவராக, தானும் தன் இஷ்டத்துக்கு இலவச லாப்டாப், இலவச மிக்சி, இலவச கிரைண்டர், இலவச ஃபேன்...என்று அடிச்சு விட்டார். வெற்றிக்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்துவிட ஆட்சியை பிடித்தார் 'ஜெ'..!
'இலவசம்' என்று ஆசைகாட்டி ஆட்சியை பிடிச்சிட்டார் இல்லையா..? ஆனால், அதன்பிறகு அவர் பல அதிரடி 'மக்கள் நலப்புரட்சி திட்டங்களை' நம் தமிழகத்தில் நிறைவேற்றி விட்டார். அதில் மிகமுக்கியமான திட்டம்... "நாள்பாதி : மின்சாரம் பாதி - திட்டம்"..!
அப்புறம் கொயம்பேடு பஸ்டாண்டில் நுழையவும், அங்கே காலியாக நிற்கும் பேருந்துக்குள் ஏறி புள்ளைங்களுக்கு சுத்திக்காட்டவும், ரயில்வே ஸ்டேஷன் போல அநியாயத்துக்கு பிளாட்ஃபாரம் டிக்கட் வசூல் மாதிரி, "பஸ் ஷெட் டிக்கட்" என்றெல்லாம் கொள்ளை அடிக்காமல் இலவசமாக.... "பேருந்தையும் பேருந்து நிலையத்தையும் கட்டணமின்றி கண்டு ரசிக்க அனுமதிக்கும் திட்டம்"..! (பாவி... பாவி...சும்மா கிடந்த சங்கை....)
விலை மிகுதியான மினரல் வாட்டர் பாட்டில் தண்ணீரில் சிலர் மலிவான பாலை கலந்து விற்பனை செய்யும் கலப்படத்தை தடுக்கும் பொருட்டு, பால் விலையை மினரல் வாட்டர் விலையை விட அதிகமாக்கி, "பாலில் தண்ணீர் கலக்கும் ஆதி கலாச்சாரம் செத்துவிடாமல் காப்பாற்றும் திட்டம்"..!
சென்ற ஆட்சியிலேயே சமையல் எரிவாயு சிலிண்டருக்கு செமை தட்டுப்பாடு மற்றும் கெடுபிடி..! கிடைப்பதே ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால், இலவச அடுப்பும் உதவாமல் போக, மின்சார அடுப்பு வாங்கினர் பலர். இப்பொது, கேஸ் பிரச்சினை முன்னைவிட மோசமாக இருக்க, மின்சாரமும் கால்வாசி அரைவாசி சமைப்பதற்குள் சோதிக்கிறது.
பஸ் டிக்கட் கட்டண ஏற்றத்தால் இலவச சைக்கிள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இப்போது அதிகம். இலவச டிவி பார்க்க மின்சாரம் இல்லை. காசு செலவழித்து Bபோர் போட்டு இருந்தாலும், ஓவர் ஹெட் டாங்கில் நீர் ஏற்ற கரண்ட் இல்லை. வியர்வைக்கு மின் காற்றாடி எல்லாம் போதாது என்று பந்தாவாக ஏ/சி வைத்தாலும் அது இயங்க கரண்ட் இல்லை. சென்ற ஆட்சில் இரண்டு மணி நேரம் நான்கு மணிநேரம் என பவர் கட் காரணமாக, வாங்கி வைத்த UPS இன்வேட்டர் பேட்டரிக்கு சார்ஜ் ஏற வேண்டிய அளவுக்கு குறைந்த பட்ச 8 மணி நேர தடை இல்லாத மின்சாரம் இல்லை. அதனால், இதுவும் வெஸ்ட்.
இந்த நிலையில்தான், சங்கரன்கோவில் தொகுதியில் மார்ச் 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என்பதை 'கூர்ந்து அவதானிக்க' நாம் கடமைப்பட்டுள்ளோம்..! இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை 22-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், 'சவால் விட்டவர்', 'சவாலை ஏற்றவர்', 'இரண்டு சவால்காரர்களையும் சவாலே விடாமல் சைலண்டாக இருந்து தோற்கடிக்க விரும்புவோர்' அனைவரும்... 'ஏனைய தமிழகத்தோடு இணைக்கப்படாத(?) ஒதுக்கி வைக்கப்பட்ட(!) சென்னை எனும் மின்வெட்டில்லாத தனி நாட்டில்' வாழ்கிறார்கள்..!
இவர்கள் நம் தற்போதைய தமிழக மக்களின் மனநிலையை நாடி பிடித்து பார்த்தறிய வேண்டியுள்ளது..! இங்கே அனேகமாக மேற்படி அரசியல்வாதிகள் தவறு செய்யக்கூடும்..! ஏனென்றால் சென்னையில் உள்ளோருக்கு 'மின்சாரம் என்ற ஒன்று மின் இலாகாவால் நிறுத்தப்படும்' என்ற விஷயமே தெரியாதாம்..! அதனால்த்தான் கீழே உள்ள சாதனை எல்லாம் ஏதோ... மின் இலாகாவின் சொந்த சாதனைபோல முதுகில் தட்டிக்கொடுத்து பெரிதாக அரசால் பாராட்டப்பட்டாலும், அதை கிண்டல் செய்து அறிக்கைகூட மற்றவர்கள் விடவில்லையாம்..!
பஸ் டிக்கட் கட்டண ஏற்றத்தால் இலவச சைக்கிள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இப்போது அதிகம். இலவச டிவி பார்க்க மின்சாரம் இல்லை. காசு செலவழித்து Bபோர் போட்டு இருந்தாலும், ஓவர் ஹெட் டாங்கில் நீர் ஏற்ற கரண்ட் இல்லை. வியர்வைக்கு மின் காற்றாடி எல்லாம் போதாது என்று பந்தாவாக ஏ/சி வைத்தாலும் அது இயங்க கரண்ட் இல்லை. சென்ற ஆட்சில் இரண்டு மணி நேரம் நான்கு மணிநேரம் என பவர் கட் காரணமாக, வாங்கி வைத்த UPS இன்வேட்டர் பேட்டரிக்கு சார்ஜ் ஏற வேண்டிய அளவுக்கு குறைந்த பட்ச 8 மணி நேர தடை இல்லாத மின்சாரம் இல்லை. அதனால், இதுவும் வெஸ்ட்.
இந்த நிலையில்தான், சங்கரன்கோவில் தொகுதியில் மார்ச் 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என்பதை 'கூர்ந்து அவதானிக்க' நாம் கடமைப்பட்டுள்ளோம்..! இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை 22-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், 'சவால் விட்டவர்', 'சவாலை ஏற்றவர்', 'இரண்டு சவால்காரர்களையும் சவாலே விடாமல் சைலண்டாக இருந்து தோற்கடிக்க விரும்புவோர்' அனைவரும்... 'ஏனைய தமிழகத்தோடு இணைக்கப்படாத(?) ஒதுக்கி வைக்கப்பட்ட(!) சென்னை எனும் மின்வெட்டில்லாத தனி நாட்டில்' வாழ்கிறார்கள்..!
இவர்கள் நம் தற்போதைய தமிழக மக்களின் மனநிலையை நாடி பிடித்து பார்த்தறிய வேண்டியுள்ளது..! இங்கே அனேகமாக மேற்படி அரசியல்வாதிகள் தவறு செய்யக்கூடும்..! ஏனென்றால் சென்னையில் உள்ளோருக்கு 'மின்சாரம் என்ற ஒன்று மின் இலாகாவால் நிறுத்தப்படும்' என்ற விஷயமே தெரியாதாம்..! அதனால்த்தான் கீழே உள்ள சாதனை எல்லாம் ஏதோ... மின் இலாகாவின் சொந்த சாதனைபோல முதுகில் தட்டிக்கொடுத்து பெரிதாக அரசால் பாராட்டப்பட்டாலும், அதை கிண்டல் செய்து அறிக்கைகூட மற்றவர்கள் விடவில்லையாம்..!
நன்றி:- முகநூலில் பகிர்ந்த ஒரு புண்ணியவான் |
இதற்கு உள்ளே உள்ள உள்குத்து சென்னை காரர்களுக்கு புரியாது. ஆனால், நேத்து ராத்திரி முழுக்க கொசுக்கடியில் அழுத பச்சபுள்ளை உட்பட இதர தமிழ்நாட்டின் மக்கள் அனைவருக்கும் புரியும்..!
இப்போது ரகசியம் ஒன்று சொல்கிறேன். சகோ, காதை கொண்டாங்க..!
இதற்கிடையில் சென்ற பொதுத்தேர்தலில் ஏற்கனவே அதிமுக அறிவித்து இருந்த இலவசங்களை மாநிலம் முழுக்க நடப்பு அரசு வழங்கி வருகிறது. அதை சங்கரனகோவிலில் தருவதை மட்டும் இடைத்தேர்தலுக்காக நிறுத்தி வைத்துள்ளது தேர்தல் கமிஷன். காரணம், அதை வாங்கி சென்று டெஸ்ட் பண்ணி பார்க்கக்கூட கரண்ட் இல்லை என்றால் ஆளுங்கட்சி மீது அதிருப்தி வந்து அதன் ஓட்டு வங்கி பாதிக்கப்பட்டு விடக்கூடுமே(!?) என்ற தொலைநோக்கு 'நல்ல எண்ணம்' காரணமாக இருக்கலாம்..!
.
இப்படி ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் கமிஷனை, விழிப்பும் துடிப்பும் மிக்க கேப்டன் அவர்கள் கூட கண்டுகொள்ளவில்லை என்பது ஆச்சரியம்..!
.
எல்லா முக்கிய கட்சித்தலைவர்களும் சென்னை எனும் நாட்டில்தான் உள்ளார்கள்..! மின்தடை பற்றி செய்திகளும் ஒழுங்காக ஊடகத்தில் வருவதில்லை. காரணம், எல்லா ஊடக பொறுப்பாசிரியர்களும் சென்னையில்தான் உள்ளார்கள்..! நிருபர்கள் தருவது உடான்ஸ் நியுஸ் என்று நினைக்கிறார்கள் போலும். அவர்களுக்கு எல்லாம் தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய மின்வெட்டு பிரச்சினை தெரியுமான்னு எனக்கு தெரியலை. அதனாலே, இடைத்தேர்தல் வெற்றிக்கு என்ன செய்யலாம் என்று மந்திராலோசனையில் மூழ்கிக்கிடக்கும் அவங்க போட்டி போட்டுக்கொண்டு, இடைத்தேர்தலில் மக்களுக்கு அவசியமற்ற, தேவையற்ற, பயனற்ற, தவறான இலவச அறிவிப்புகளை கூறி 'தேர்தலில் தோல்வியை தழுவி விடக்கூடாது' என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்த 'டிப்ஸ்' பதிவே..!
இதற்கிடையில் சென்ற பொதுத்தேர்தலில் ஏற்கனவே அதிமுக அறிவித்து இருந்த இலவசங்களை மாநிலம் முழுக்க நடப்பு அரசு வழங்கி வருகிறது. அதை சங்கரனகோவிலில் தருவதை மட்டும் இடைத்தேர்தலுக்காக நிறுத்தி வைத்துள்ளது தேர்தல் கமிஷன். காரணம், அதை வாங்கி சென்று டெஸ்ட் பண்ணி பார்க்கக்கூட கரண்ட் இல்லை என்றால் ஆளுங்கட்சி மீது அதிருப்தி வந்து அதன் ஓட்டு வங்கி பாதிக்கப்பட்டு விடக்கூடுமே(!?) என்ற தொலைநோக்கு 'நல்ல எண்ணம்' காரணமாக இருக்கலாம்..!
.
இப்படி ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் கமிஷனை, விழிப்பும் துடிப்பும் மிக்க கேப்டன் அவர்கள் கூட கண்டுகொள்ளவில்லை என்பது ஆச்சரியம்..!
.
மக்களுக்கு இலவசம் இல்லாமல் ஒட்டு போட முடியாது என்பது கண்கூடு. அரசியல்வாதிகளுக்கு இலவச வாக்குறுதி கொடுக்காமல் ஓட்டுக்கேட்க முடியாது என்பதும் நிதர்சனம்.
எனவே... இந்த இரண்டு அம்சங்களையும் கருத்தில் கொண்டு 'நடுநிலையாக ஆழ்ந்து சிந்தித்ததின்(?)' விளைவாக...
'சென்னை நாட்டில் வாழும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்'.................
கீழ்க்காணும் தமிழக மக்களின் அத்தியாவசிய பொருட்களை..........
'இலவசமாக தருவதாக' உடனடியாக அறிவிக்க அன்போடு வேண்டுகிறேன்...! :-))
கிளை டிஸ்கி:- யார் இப்பதிவை படித்து மேற்படி இலவசங்களை தருவதாக வாக்குறுதி அளித்து
செயலில் முந்திக்கொள்கிறாரோ... நிச்சயமாக அவர் அமோக வாக்கு
வித்தியாசத்தில் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றிபெற பிரகாசமான
வாய்ப்பு உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி..! 'சவாலில்' வெற்றியை தரக்கூடிய இவ்வளவு அரிய பெரிய இலவச டிப்ஸ்-ஐ எந்தக்கட்சி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். எனக்கு 'காப்பி ரைட்' தேவை இல்லை..!
தலைமை டிஸ்கி:- இது ஒரு... சீரியஸ் அரசியல் நகைச்சுவை நையாண்டி பதிவு..! ஆங்..!
பிற்சேர்க்கை :- சகோ.முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ், மேற்படி இலவசங்கள் எல்லாம் ///உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்./// .....என்கிறார் தம் பின்னூட்டத்தில்..!
எனவே, மேற்படி 'டிப்சை' அதிமுக முந்திக்கொண்டு அமல்படுத்தினால்,
"தமிழக அரசின் கொலஸ்டிரால் குறைப்பு திட்டம்"
....என்ற மேலும் ஒரு சிறந்த மக்கள் நலத்திட்டம் நமக்கு கிடைக்கும் அல்லவா..?
எனவே... இந்த இரண்டு அம்சங்களையும் கருத்தில் கொண்டு 'நடுநிலையாக ஆழ்ந்து சிந்தித்ததின்(?)' விளைவாக...
'சென்னை நாட்டில் வாழும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்'.................
கீழ்க்காணும் தமிழக மக்களின் அத்தியாவசிய பொருட்களை..........
'இலவசமாக தருவதாக' உடனடியாக அறிவிக்க அன்போடு வேண்டுகிறேன்...! :-))
+ பாயிண்ட் : இவை யாவும் இயங்க கரண்டு தேவை இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். |
+ பாயிண்ட் : இவை இயங்கவும் கேஸ் / கரண்டு தேவை இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள் |
+ பாயிண்ட் : இந்த Information Technology க்கு கரண்டு, நெட், டவர் சிக்னல் ஏதும் வேண்டாமாம் |
+ பாயிண்ட் : இவையும் இயங்க கரண்டு தேவை இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள் |
+ பாயிண்ட் : இவை இயங்கவும் கரண்டு தேவை இல்லை என்கிறார்கள் அறிஞர் பெருமக்கள் |
+ பாயிண்ட் : இவைவும் இயங்க கரண்டு தேவை இல்லை என்பது அறியும்போது... ஆனந்தம் |
தலைமை டிஸ்கி:- இது ஒரு... சீரியஸ் அரசியல் நகைச்சுவை நையாண்டி பதிவு..! ஆங்..!
==========================================================================
பிற்சேர்க்கை :- சகோ.முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ், மேற்படி இலவசங்கள் எல்லாம் ///உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்./// .....என்கிறார் தம் பின்னூட்டத்தில்..!
எனவே, மேற்படி 'டிப்சை' அதிமுக முந்திக்கொண்டு அமல்படுத்தினால்,
"தமிழக அரசின் கொலஸ்டிரால் குறைப்பு திட்டம்"
....என்ற மேலும் ஒரு சிறந்த மக்கள் நலத்திட்டம் நமக்கு கிடைக்கும் அல்லவா..?
36 ...பின்னூட்டங்கள்..:
ஆசிக் உங்களோட ஊமை குசும்பு
சூப்ப்பர்
#அதை வாங்கி சென்று டெஸ்ட் பண்ணி பார்க்கக்கூட கரண்ட் இல்லை என்றால் ஆளுங்கட்சி மீது அதிருப்தி வந்து அதன் ஓட்டு வங்கி பாதிக்கப்பட்டு விடக்கூடுமே(!?) என்ற தொலைநோக்கு 'நல்ல எண்ணம்' காரணமாக இருக்கலாம்..!#
சலாம் சகோ....
எம்மா பெரிய கற்பனை வளம் உங்களுக்கு...!
அஸ்ஸலாமு அலைக்கும்
அந்த முதல் படம் செம...
இந்த ரகசியங்களை மத்தவங்களுக்கு சொல்றதுக்கு பதிலா நீங்களே தேர்தலில் நின்னு, ஆட்சியை பிடிச்சு மக்களுக்கு நல்லது பன்னலாம்ல?
:) :) :)
@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வாங்க.. வாங்க.. சகோ.அப்துல் பாஸித், உங்களை மாதிரி ஆட்களைத்தான் தேடிக்கொண்டு இருந்தேன்.
எனக்கு டாடா, பிர்லா, அம்பானி, மல்லையா என்றா வரப்போகிறார்கள், எலக்ஷன் செலவுக்கு ஸ்பான்சர் பண்ண..?
ஏதோ 'எனக்கேத்த எள்ளுருண்டை...' பிளாக்கர் நண்பன் வாறீக...
நாளைக்கு மனுதாக்கல்.
ம்ம்ம்... னு ஒரு வார்த்தை சொல்லுங்க சகோ...!
நான் ரெடி... ஸ்பான்சர் பண்ண நீங்க ரெடின்னா..!
வருகைக்கும் 'முன்னூட்டத்துக்கும்' மிக்க நன்றி சகோ.
@NKS.ஹாஜா மைதீன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//எம்மா பெரிய கற்பனை வளம் உங்களுக்கு...!//
---இதிலேதான் எனக்கு தெளிவான அரசியல் ஞானம் இருப்பதை கண்டு பிடித்துவிட்டார் சகோ.அப்துல் பாசித் என நினைக்கிறேன்..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.ஹாஜா.
@பாவா ஷரீப்//ஊமை குசும்பு
சூப்ப்பர்//---என்ன செய்ய..? ரொம்ம்ம்ம்ம்ப நொந்து போயிட்டா... எல்லாமே நகைச்சுவையாயிடுது சகோ.
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.பாவா ஷரீப்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,பதிவு நகைச்சுவையாக இருந்தாலும் சிந்திக்கவைக்கின்றது.மக்கள் இலவசங்களுக்கு மயங்கிதான் கேடுகெட்ட ஆட்சியை ஆதரிக்கின்றார்கள்.இந்த நாட்டு மக்கள் எப்போது விழிப்படைய போகின்றார்களோ தெரியவில்லை.உண்மையாகவே கடைசியாக சில படங்களை கொடுத்திருக்கின்றீர்களே அதுதான் என்றைக்குமே நிரந்தரம் உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்.சென்னையில் மின்சாரம் தட்டுப்பாடில்லை என்பது உண்மையா?அது உண்மையாக இருந்தால் ஆட்சியாளர்களுக்கு எனது கேள்வி அங்கே மட்டும்தான் மனிதர்கள் வாழ்கின்றார்களா?
சலாம் சகோ.,
பேசாம நீங்களே Electionla நிக்கலாம். First Pictures பார்த்தே விழுந்து விழுந்து சிரித்தேன்.
//. அதில் மிகமுக்கியமான திட்டம்... "நாள்பாதி : மின்சாரம் பாதி - திட்டம்"..!
// -- அருமை.
//..அப்புறம் கொயம்பேடு பஸ்டாண்டில்.... (பாவி... பாவி...சும்மா கிடந்த சங்கை....) // ஹா.. ஹா.. பட்டாசோ.. பட்டாசு....
//..விலை மிகுதியான மினரல் வாட்டர் பாட்டில்..// beatutiful. பலே..
// இலவச திட்டங்கள்.. // -- யப்பா.. முடியல சார்.. சூப்பர்.
//டிஸ்கி.// -- அச்சோ.. அச்சோ...
இப்படியே copy பண்ணி எழுதினா.. முழு பதிவையும்.. copy பண்ண வேண்டி வரும்.
So.. Totalaaa.. சொல்றாதா இருந்தா... பின்னிட்டீங்க.. சகோ..
சலாம் சகோ ஆஷிக்!
ஹா...ஹா...கலக்கல் பதிவு!
இவ்வளவு ஐடியா வைத்திருப்பதால் நீங்கள் தேர்தலில் நின்றால் எனது ஓட்டும் எங்கள் குடும்பத்தின் ஓட்டும் உங்களுக்கே! :-)
@முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
///உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்.///---அடடா...
தமிழக அரசின் கொலஸ்டிரால் குறைப்பு திட்டம்
....என்று சொல்லிடலாமே..?
//சென்னையில் மின்சாரம் தட்டுப்பாடில்லை என்பது உண்மையா?//
---இப்படி ஒரு தமிழர் கேள்வி கேட்பதே கூட ஆச்சரியமாக உள்ளது சகோ..!
தமிழக மின்தடையின் பரிணாமம்
இது, ஒரு வருஷம் முன்னர் சென்ற ஆட்சியில்...
தமிழகத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 6 மணி நேரம் மின்சாரத்தடை அமல்படுத்தப்படுகிறது. தலைநகர் சென்னையில் மட்டும் மின் தடை பெருமளவில் இல்லை. சொந்த ஊர்களுக்குப்போனவர்கள் சென்னைக்குத்திரும்பும் வினோதம்
இது இந்த வாரம் நடப்பு ஆட்சியில்...
மின்சாரத் தடை என்பது சென்னையில் அதிகாரப்பூர்வமாக ஒரு மணி நேரம்தான்.ஆனால் சென்னைக்கு வெளியே உள்ள தமிழகத்தில் கிட்டத்தட்ட 10 மணி நேர அளவுக்கு மின்தடை கோரத் தாண்டவம் ஆடி வருகிறது.
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.ஷஃபி.
@Rafikஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//பேசாம நீங்களே Electionla நிக்கலாம்.//---ஹைய்யா... எனக்கு இரண்டாவது ஸ்பான்சர் கிடைச்சாச்சு..!
//பின்னிட்டீங்க..//---நம்மளை யாரும் பின்னாம இருந்தா சரிதான்..!
வருகைக்கும் அடிபடாமல் விழுந்து விழுந்து சிரித்ததுக்கும்...
பின்'பின்'னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.Rafik.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//இவ்வளவு ஐடியா வைத்திருப்பதால் நீங்கள் தேர்தலில் நின்றால்//---மூன்றாவது ஸ்பான்சர் ஆகி, நிற்க வையுங்கள் சகோ.சுவனப்பிரியன். வேண்டாம் என்றா சொல்வேன்..?
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் அட்வான்ஸ் ஓட்டு வாக்குறுதிக்கும் மிக்க நன்றி சகோ.
இந்த பதிவு சிரிப்பதற்கு மட்டும் அல்ல சிந்திக்கவும் தூண்டுகிறது
இந்த பதிவு சிரிப்பதற்கு மட்டும் அல்ல சிந்திக்கவும் தூண்டுகிறது
இந்த பதிவு சிரிப்பதற்கு மட்டும் அல்ல சிந்திக்கவும் தூண்டுகிறது
இப்பதிவு சிரிக்க மட்டும் அல்ல சிந்திக்கவும் தூண்டுகிறது
சென்னை நாட்டுல கூட இந்த நிலமை வரலாம்! ஆனா எங்க பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கும் சிறப்பு பொருளாதார மண்டல நாட்டுல (உண்மைல இதான் தமிழ்நாட்டுக்குள் இருக்கும் தனி நாடு) மட்டும் மின்வெட்டுங்குற பேச்சுக்கே இடமில்லையாக்கும்!
மாப்ள..அய்யயோ சென்னய தனியா பிரிச்சிட்டாங்களே...என்னா ஒரு அடி..முடியல..ஆங்!
தமிழக அரசின் குற்றங்களை குறை கூறுவது போல உள்ளது, இதில் உள்ள சில நல்ல விசயங்களையும் பார்க்க வேண்டும்.
1) மக்களின் போக்குவரத்து செலவு குறைகிறது, (சைக்கிள்ல போனா என்ன செலவு)
2) மின் விநியோக செலவு முற்றிலும் மிச்சம்.
3) மாணவர்கள் பிரச்டிகல் எக்ஸாம் என்று கஷ்ட பட தேவை இல்லை.
4) தொழிலாளிகள் வேலை செய்ய தேவை இல்லை (கரண்ட் இருந்த தானே வேலை)
5) இலவசமாக கொடுக்கப்பட்ட பொருள்கள் தேய்மானம் ஆகாமல் இருக்கும்.
6) இரவில் கரண்ட் இல்லாமல் இருந்தால் திருடர்கள் பயமில்லாமல் திருடலாம்.
இது போன்ற பல நன்மைகள் இருக்கின்றது, ஆகையால் அனைவரும் அம்மாவிற்கே வாக்களியுங்கள்.
/***** தமிழக அரசின் கொலஸ்டிரால் குறைப்பு திட்டம் ***/
ஆனா உங்களுக்கு கொலஸ்ட்ரால் ஜாஸ்தி சகோ...
/* அதை சங்கரனகோவிலில் தருவதை மட்டும் இடைத்தேர்தலுக்காக நிறுத்தி வைத்துள்ளது தேர்தல் கமிஷன். காரணம், அதை வாங்கி சென்று டெஸ்ட் பண்ணி பார்க்கக்கூட கரண்ட் இல்லை என்றால் ஆளுங்கட்சி மீது அதிருப்தி வந்து அதன் ஓட்டு வங்கி பாதிக்கப்பட்டு விடக்கூடுமே(!?) என்ற தொலைநோக்கு 'நல்ல எண்ணம்' காரணமாக இருக்கலாம்..! */
செம...செம... அற்புதமான(குற்றியலுகரம் மிகவில்லையே????) கற்பனை. உண்மையும் கூட.
/* நாள்பாதி : மின்சாரம் பாதி - திட்டம் */
சத்தமா சொல்லாதீங்க..இதுவும் ஒரு நல்ல திட்டம்னு நினச்சு யாராவது இதை நாங்கள் தான் முதலில் கொண்டு வந்தோம் அப்படின்னு சண்டைய ஆரம்பிக்கப்போறாங்க...
பக்கிய என்ன வேணும்னாலும் செய்யும்.
Salaam sago mohamed Aasik,
On a whole.... it is an excellent post. You rocks buddy.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இடைதேர்தல் இலவசங்களையும் தமிழகத்திற்கு தன்னிறைவு திட்டங்களையும் சிறப்பாக சிந்திக்கும் சகோ. முஹம்மத் ஆஷிக் அவர்களை சென்னை நாட்டின் அரசுக்கு ஆஸ்தான திட்ட கொள்கை பரப்பாளர் பதவிக்கு பரிந்துரைக்கிறேன்.
@Barariவருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி சகோ.பராரி.
@தமிழ் மீரான்
சென்னை நாட்டுல கூட இந்த நிலமை வரலாம்! ஆனாஎங்க பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கும் சிறப்பு பொருளாதார மண்டல நாட்டுல (உண்மைல இதான் தமிழ்நாட்டுக்குள் இருக்கும் தனி நாடு) மட்டும் மின்வெட்டுங்குற பேச்சுக்கே இடமில்லையாக்கும்!
அட..!
இப்படி ஒரு இந்திய நாட்டுக்குள் தமிழ்நாட்டுக்குள் சென்னை நாட்டுக்குள் ஒரு 'சி.பொ.ம.நாடு' ஒன்று வேறு உள்ளதா...?
யாரும், சொல்லவே இல்லையே...!
வருகைக்கும் உம்மையை போட்டுடைத்த பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.தமிழ்மீரான்.
@விக்கியுலகம்///அய்யயோ சென்னய தனியா பிரிச்சிட்டாங்களே///----ஹா...ஹா...ஹா....வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.விக்கிமாம்ஸ்.
@கார்பன் கூட்டாளிரொம்ப நொந்து போயி இருக்கீங்கன்னு புரியுது சகோ. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.கார்பன் கூட்டாளி.
@சிராஜ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
உங்ககிட்டே சில நாட்கள் முன்பு டீக்கடையிலே நான் சொன்ன அரசியல் பதிவு மேட்டர் இதுதான் சகோ.சிராஜ்.
//ஆனா உங்களுக்கு கொலஸ்ட்ரால் ஜாஸ்தி சகோ...//---ஸ்ஸ்ஸ்ஸ்... பப்ளிக்...பப்ளிக்...
வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி சகோ.சிராஜ்.
@மு.ஜபருல்லாஹ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//சென்னை நாட்டின் அரசுக்கு ஆஸ்தான திட்ட கொள்கை பரப்பாளர் பதவி//---அட..! இப்படி ஒரு பதவி வேற இருக்கா..?
'கால் சம்பளம்ன்னாலும் கவர்மண்டு சம்பளம்ன்னு' பெருமையா சொல்வாகளே..! நான் ரெடி. :-)) உங்க பரிந்துரை கடிதத்தை மெயிலில் அனுப்புங்க சகோ.ஜபருல்லாஹ்.
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.
/////சகோ.முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ், மேற்படி இலவசங்கள் எல்லாம் ///உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்./// .....என்கிறார் தம் பின்னூட்டத்தில்..!
எனவே, மேற்படி 'டிப்சை' அதிமுக முந்திக்கொண்டு அமல்படுத்தினால்,
"தமிழக அரசின் கொலஸ்டிரால் குறைப்பு திட்டம்"////////அஸ்ஸலாமு அலைக்கும் சகோ, சும்மா ஒரு "டிப்"தானே கொடுத்தேன் அதிலும் ஒரு புதிய திட்டமா?பெரிய அரசியல்வாதியா வருவீங்க சகோ(வருங்கால ஜனாதிபதி "நெத்தியடி முஹம்மத்" வாழ்க.....வாழ்க...உங்களை பார்த்தாலே தெரியுதுண்ணே).....
இந்த ரகசியங்களை மத்தவங்களுக்கு சொல்றதுக்கு பதிலா நீங்களே தேர்தலில் நின்னு, ஆட்சியை பிடிச்சு மக்களுக்கு நல்லது பன்னலாம்ல? //
நல்லது செய்ய நினைக்கறவங்க ஆட்ச்சியை பிடிக்க ஆசைபடமாட்டாங்க
// 'இலவசம்' என்று ஆசைகாட்டி ஆட்சியை பிடிச்சிட்டார் இல்லையா..? ஆனால், அதன்பிறகு அவர் பல அதிரடி 'மக்கள் நலப்புரட்சி திட்டங்களை' நம் தமிழகத்தில் நிறைவேற்றி விட்டார். அதில் மிகமுக்கியமான திட்டம்... "நாள்பாதி : மின்சாரம் பாதி - திட்டம்"..! //
:) :))
//தலைமை டிஸ்கி:- இது ஒரு... சீரியஸ் அரசியல் நகைச்சுவை நையாண்டி பதிவு..! ஆங்..!//
sema .... sema ... super sago ...
//ஆங்..!////
ithai vaiththey neengal vijaykanthai மட்டுமே ஆதரிப்பதாக தெரிகிறது :) :)
@முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்அலைக்கும் ஸலாம் வரஹ்..... வாங்க சகோ.ஷஃபி... விட்ருவோமா... இப்படித்தானே புதிய (பின்)ஊட்டத்தை எதிரபார்த்தேன்..!
///வருங்கால ஜனாதிபதி///
---ஒரு PM..CM...MP...MLA...மேயர்... சேர்மன்..வார்ட கவுன்சிலர்... ம்ம்ம்ம்ஹூம்.......
"இவன் ரொம்ப 'பிளாக் போஸ்ட்'ஆ எழுதி போடறான்... ஆனால், செயலில் ஒண்ணும் வேலைக்கு ஆக மாட்டான்... அதனால, இவனுக்கு இந்த 'அரசு போஸ்ட்' தான் லாயக்கு"
....என்று எப்படி சகோ.அவ்வளவு துள்ளியமா கண்டு பிச்சீங்க...?
///உங்களை பார்த்தாலே தெரியுதுண்ணே///----என்னமோ போங்க... :-))
@லெ.மு.செ.அபுபக்கர்///நல்லது செய்ய நினைக்கறவங்க ஆட்ச்சியை பிடிக்க ஆசைபடமாட்டாங்க///---ஆமா... ஆமா... சரியா சொன்னீங்க சகோ.அபுபக்கர்.
ஆட்சியில் இல்லாமலேயே எப்படி மக்களுக்கு நல்லது செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.அபுபக்கர்.
@R.Puratchimani///ithai vaiththey neengal vijaykanthai மட்டுமே ஆதரிப்பதாக தெரிகிறது :) :)///---கிழிஞ்சது கதை... விடிய விடிய கதை கேட்டு... ம்ம்ம்ம்ஹூம்...
சகோ.புரட்சிமணி....
இந்த பதிவே எதுக்கு..?
எப்படியாவது சவாலில் ஜெ. ஜெயிச்சிடனும்னுதானே...!? உங்களுக்கு தெரியாதா...? யாரு எப்போதும் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு இருக்கிறதுன்னு..?
அவங்க,
பிரச்சாரத்துக்கு கிளம்பற நாளுக்கு முந்திய வாரத்துலருந்து... ஓட்டுப்பதிவு முடியும்வரை, அந்த தொகுதி முழுதும் கரண்டே போகாதுல...?!?!?! செவிக்காம விட்ருவோமா...?!?!?!
அதுக்குத்தானே,
பிற்சேர்க்கை எல்லாம் கோர்த்து போட்டு எவ்ளோ கஷ்டப்பட்டு புதுப்புது திட்டம் எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கோம்....
ஆங்..!
:-))
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.புரட்சிமணி.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!