'இவ்வுலகின் வாழ்வியல் மார்க்கமான இஸ்லாம் மூலம் மனித சமுதாயம் நேர்வழி பெற வேண்டும்' என்பதற்காகவே குர்ஆனில் தனது வழிகாட்டும் வசனங்களை இறைவன் விவரித்து கூறும்போது... அவற்றை மேலும் உறுதிப் படுத்துவதற்கும், கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதற்கும், தான் படைத்த படைப்புகள் மீதே அல்லாஹ் சத்தியமிட்டு அவ்வசனங்களை கூறுவதை குர்ஆனில் பல இடங்களில் நாம் காணலாம்..!
உதாரணமாக சில:-
வானத்தின் மீது சத்தியமாக 86:1
சூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்தியமாக 91:1
அதை அடுத்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக 91:2
இரவு, பகல் மீது சத்தியமாக 92:1
அத்தியின் மீதும், ஒலிவ மரத்தின் மீதும் சத்தியமாக 95:1
தூர் ஸீனீன் மலையின் மீதும் சத்தியமாக 95:2
அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக 95:3
தூர் ஸீனீன் மலையின் மீதும் சத்தியமாக 95:2
அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக 95:3
காலத்தின் மீது சத்தியமாக 103:1
ஆனால், அல்லாஹ் சொல்லும் சத்தியங்களில் மிக "மகத்தான சத்தியமாக" ஒரு சத்தியத்தை அல்லாஹ் சிறப்பித்து குறிப்பிடுவது எது தெரியுமா சகோ...?
ஆனால், அல்லாஹ் சொல்லும் சத்தியங்களில் மிக "மகத்தான சத்தியமாக" ஒரு சத்தியத்தை அல்லாஹ் சிறப்பித்து குறிப்பிடுவது எது தெரியுமா சகோ...?
குர்ஆன் 56:76
அவர் சொன்னவை என்ன...? விண்மீன்களில் nuclear fusion reaction மூலம் ஹைட்ரஜன் ஹீலியமாக மாறும் போது வெப்பமும் ஒளியும் வெளிப் படுகின்றன. இப்படி ஆக்சிஜன் இல்லாமல் எரிந்து கொண்டு இருக்கும் விண்மீன்கள் ஒரு கட்டத்தில் தங்களிடமுள்ள எரிபொருளான ஹைட்ரஜன், ஹிலியம் வாயுவை இழந்து முற்றிலும் அணைந்து கருப்பாகி அழியும் நிலையில் அதனுடைய அடர்த்தி பன்மடங்கு அதிகரிக்கும். இதனால், அத்துடன் அதன் 'உள் ஈர்ப்பு விசை ஆற்றல்' பன்மடங்காக ஒளி வேகத்துக்கு பெருகி விடும். அதனுள் ஈர்க்கப்படும் எப்பொருளும் மீண்டு வருவதில்லை. இவ்வாறு எரிதிறனை இழந்து அடர்கருப்பாகி அழிந்து மறையும் நட்சத்திரம்... கருந்துளையாக மாறுகிறது.
நீங்கள் அறிந்தீர்களானால் இது மகத்தான சத்தியம்..!
...என்று சொல்வதை காண்கிறோம். அதென்ன "விண்மீன்கள் விழும் இடங்கள்"..? இதை முழுதாக அறிந்து கொள்ள, இறைவன் சொன்னதுபோல, நாம் சில அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிந்தோமானால் இந்த சத்தியத்தின் மகத்துவத்தை முழுதாக உணரலாம்..! எவ்வளவு உண்மைகள் இவற்றில் இருக்கின்றன..! சுபஹானல்லாஹ்..!
17-ம் நூற்றாண்டு ஃபிளாஷ்பேக்
முதல் மனிதரான ஆதம் நபி (அலை..) காலத்திலிருந்தே மரத்து ஆப்பிள் தரையில் விழுந்தாலும், அது தன்னருகில் அன்று விழுந்ததற்கு காரணம் 'புவி ஈர்ப்பு விசை' என்று நியூட்டன் சொன்னார்.
18-ம் நூற்றாண்டு ஃபிளாஷ்பேக்
...என்று சொல்வதை காண்கிறோம். அதென்ன "விண்மீன்கள் விழும் இடங்கள்"..? இதை முழுதாக அறிந்து கொள்ள, இறைவன் சொன்னதுபோல, நாம் சில அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிந்தோமானால் இந்த சத்தியத்தின் மகத்துவத்தை முழுதாக உணரலாம்..! எவ்வளவு உண்மைகள் இவற்றில் இருக்கின்றன..! சுபஹானல்லாஹ்..!
17-ம் நூற்றாண்டு ஃபிளாஷ்பேக்
முதல் மனிதரான ஆதம் நபி (அலை..) காலத்திலிருந்தே மரத்து ஆப்பிள் தரையில் விழுந்தாலும், அது தன்னருகில் அன்று விழுந்ததற்கு காரணம் 'புவி ஈர்ப்பு விசை' என்று நியூட்டன் சொன்னார்.
18-ம் நூற்றாண்டு ஃபிளாஷ்பேக்
அப்படி பூமியில் விழுந்த அந்த ஆப்பிளை, 'அது திரும்ப பூமிக்கே வராதபடி... புவி ஈர்ப்பு சக்தி முடிந்து விட்ட விண்வெளிக்கு சென்றுவிடும்படி வானத்தை நோக்கி வீச வேண்டுமானால், வீசும் வேகம் எவ்வளவு வேண்டும்' என்று, ஜான் மிச்சேல் சரியாக 11.2 km/s என்று கண்டுபிடித்துவிட்டு, அதற்கு 'escape velocity' (விடுபடு வேகம்) என்றும் பெயரிட்டார். அதோடு, இந்த வேகம்... கோளின்/விண்மீனின் எடைக்கு தக்கபடி கூடும் என்றும் தன் நண்பர் லாப்லாஸ் உடன் இனைந்து சமன்பாட்டில் சொல்லி விட்டார்.
.
.
இதன்படி, ஒளியின் வேகத்தை விட அதிக அளவு விடுபடு வேகம் கொண்ட ஒரு விண்மீன் இருந்தால், அதன் ஒளி அதனிடம் இருந்து வெளிப்படவோ, அதன் மீது விழும் வேறு எந்த ஒளியையும் பிரதிபலிக்கவோ கூட செய்யாது என்றும், இதனால் அதனை நாம் பார்க்கக்கூட முடியாது என்றும், ஒளி என்பது எடை அற்ற ஒன்றாதலால் அதுவே அதனுள்ளே இழுக்கப் படும் போது அதன் அருகில் தப்பித்தவறி சென்ற எதுவும் அதனுள் ஈர்க்கப்பட்டு காணாமல் போய்விடும் என்றும், அப்போதே BLACK STAR பற்றி அவர் கூறிவிட்டார்.
.
.
20-ம் நூற்றாண்டு ஃபிளாஷ்பேக்
அந்த அளவுக்கு பெரிய சைஸ் விண்மீன் அப்போது இல்லாதால், புரியாத புதிரான இதை யாரும் 19-ம் நூற்றாண்டில் கண்டுகொள்ளவில்லை என்றாலும், 20-ம் நூற்றாண்டில் ஐன்ஸ்டீன் சொன்ன சார்பியல் கோட்பாட்டுக்கு அப்புறம், மீண்டும் மிட்செல் சொல்லி விட்டு சென்றது உயிர்பெற்றது. இது விஷயத்தில் பற்பல கண்டுபிடிப்புகள் பலரால் தொடர்ந்தன. அவை அனைத்தையும் ஒன்று திரட்டி, இறுதியில், 1964-ல் அண்ணே ஈவிங் எழுதி வைத்த black hole என்ற பெயரையும் அதற்கு இட்டு... 1967-ல் உலகுக்கு விளக்கமாக சொல்லி... ஜான் வீலர் புகழ் பெற்றார்.
அந்த அளவுக்கு பெரிய சைஸ் விண்மீன் அப்போது இல்லாதால், புரியாத புதிரான இதை யாரும் 19-ம் நூற்றாண்டில் கண்டுகொள்ளவில்லை என்றாலும், 20-ம் நூற்றாண்டில் ஐன்ஸ்டீன் சொன்ன சார்பியல் கோட்பாட்டுக்கு அப்புறம், மீண்டும் மிட்செல் சொல்லி விட்டு சென்றது உயிர்பெற்றது. இது விஷயத்தில் பற்பல கண்டுபிடிப்புகள் பலரால் தொடர்ந்தன. அவை அனைத்தையும் ஒன்று திரட்டி, இறுதியில், 1964-ல் அண்ணே ஈவிங் எழுதி வைத்த black hole என்ற பெயரையும் அதற்கு இட்டு... 1967-ல் உலகுக்கு விளக்கமாக சொல்லி... ஜான் வீலர் புகழ் பெற்றார்.
அவர் சொன்னவை என்ன...? விண்மீன்களில் nuclear fusion reaction மூலம் ஹைட்ரஜன் ஹீலியமாக மாறும் போது வெப்பமும் ஒளியும் வெளிப் படுகின்றன. இப்படி ஆக்சிஜன் இல்லாமல் எரிந்து கொண்டு இருக்கும் விண்மீன்கள் ஒரு கட்டத்தில் தங்களிடமுள்ள எரிபொருளான ஹைட்ரஜன், ஹிலியம் வாயுவை இழந்து முற்றிலும் அணைந்து கருப்பாகி அழியும் நிலையில் அதனுடைய அடர்த்தி பன்மடங்கு அதிகரிக்கும். இதனால், அத்துடன் அதன் 'உள் ஈர்ப்பு விசை ஆற்றல்' பன்மடங்காக ஒளி வேகத்துக்கு பெருகி விடும். அதனுள் ஈர்க்கப்படும் எப்பொருளும் மீண்டு வருவதில்லை. இவ்வாறு எரிதிறனை இழந்து அடர்கருப்பாகி அழிந்து மறையும் நட்சத்திரம்... கருந்துளையாக மாறுகிறது.
இதற்கு கன அளவோ மேற்பரப்போ கிடையாது..! கண்ணாலோ, தொலை நோக்கியாலோ எவரும் பார்க்க முடியாது..! காரணம், கருந்துளையின் நிகழ்வெல்லைக்கு(Event Horizon) செல்லும் ஒளி உட்பட எப்பொருளும் மீண்டு வெளியேற முடியாது. ஒன்றின் மீது ஒளி பட்டும் அது பிரலிபலித்து நம் கண்ணுக்கு வந்தால்தானே பார்க்க இயலும்..? ஒளியைக்கூட ஈர்க்கும் இவற்றின் ஈர்ப்பு ஆற்றல்.
நியூட்டன் சொன்னபடி நமது பூமிக்கு புவியீர்ப்பு ஆற்றல் உள்ளதால் எப்பொருளையும் நாம் ஆகாயத்தை நோக்கி எறிந்தால் அது மீண்டும் பூமியில் விழுந்து விடும். மிச்சேல் சொன்னதுபோல, அந்த பொருள் இந்த புவியீர்ப்பு விசையை மீறிச்செல்ல வேண்டுமாயின், ஒரு வினாடிக்கு 11.2 கிலோ மீட்டர் விடுபடுவேகம் வேண்டும். அதாவது... மணிக்கு 40,320 கிமீ ஸ்பீடு..! பூமியில் இருந்து விண்ணை நோக்கி செலுத்தப்படும் சாட்டிலைட் தூக்கிச்செல்லும் ராக்கெட்டுகள் வினாடிக்கு 11.2 கிமீக்கு மேற்பட்ட வேகத்திலேயே செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த வேகம் குறைந்தால், திரும்பி வந்து 'கடலில்' விழவைக்கப்பட்டுவிடும்..!
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னபடி, இப்பிரபஞ்சத்தில் உள்ள வேகங்களில் மிக உயர்ந்தபட்ச வேகம் ஒளியின் வேகமான... வினாடிக்கு சுமார் 3,00,000km தான்..! அந்த வேகத்துக்கு சென்றால், ஒரு பொருள் தன் பொருண்மையை இழந்து அருகில் உள்ள மற்றவற்றை ஈர்க்க ஆரம்பிக்கும். அதேபோல, 'நமது(?)' கருந்துளையின் ஈர்ப்பு ஆற்றல் விசையும் நொடிக்கு 3,00,000kmக்கும் மேல்தான்..!
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னபடி, இப்பிரபஞ்சத்தில் உள்ள வேகங்களில் மிக உயர்ந்தபட்ச வேகம் ஒளியின் வேகமான... வினாடிக்கு சுமார் 3,00,000km தான்..! அந்த வேகத்துக்கு சென்றால், ஒரு பொருள் தன் பொருண்மையை இழந்து அருகில் உள்ள மற்றவற்றை ஈர்க்க ஆரம்பிக்கும். அதேபோல, 'நமது(?)' கருந்துளையின் ஈர்ப்பு ஆற்றல் விசையும் நொடிக்கு 3,00,000kmக்கும் மேல்தான்..!
இதனால்தான்... நேர்க்கோட்டில் பிரயாணிக்கும் ஒளிக்கீற்று... கருந்துளை அருகே சென்றாலும் கூட... நாம் இதுவரை பள்ளியில் படித்த இயற்பியல் விதிக்கு மாறாக, ஒளிக்கதிர் வ...ளை...ய... ஆரம்பித்து கருந்துளையை நோக்கி உள்ளே சென்று விடுகிறது. அப்படி சென்ற ஒளி மீண்டு வருவதில்லை..! ஒளிமட்டுமல்ல..! கருந்துளைக்குள் செல்லும் எதுவும் மீண்டு வர முடியாது..! ஏனென்றால், அந்த ஈர்ப்பு சக்தியை தாண்டிய விடுபடுவேகம் இருந்தால் சாத்தியம்..! ஆனால், உள்ளே போனதும் அங்கு அப்புறம் என்ன நடக்கிறது என்பதும் எவர்க்கும் காணவும் முடியாத புரியாத புதிர்..!
கருந்துளைகளை நம் கண்களால் காண முடியாவிட்டாலும் இதன் நிகழ்வெல்லைக்கு (Event Horizon) அப்பால் இருக்கும் பிற நட்சத்திரங்கள், மற்ற விண் பொருட்களின் மீது அவை கொண்டுள்ள தாக்கங்கள் மூலம் கருந்துளை இருக்கும் இருப்பிடத்தை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக ஒரு தொகுதி விண்மீன்கள் கருந்துளையின் ஈர்ப்புக்கு உட்பட்டு அதன் மையத்தைச்சுற்றி வருவது உண்டு. இவ்வாறான விண்மீன்களின் இயக்கத்தை கூர்ந்து நோக்குவதன் மூலம் கருந்துளையின் இருப்பையும் அதன் அமைவிடத்தையும் அறிந்து கொள்ளலாம்.
.
சில வேளைகளில் கருந்துளைகள் அண்டவெளியில் இருந்து அல்லது அண்மையில் இருக்கும் விண்மீன்களில் இருந்து வரும் வளிமத்தூசுகளை கவர்ந்து இழுக்கின்றன. இவ்வளிமங்கள் கருந்துளையைச் சுற்றி வேகமாக உட்செல்லும் போது வெப்பநிலை அதிகரிப்பதனால் பெருமளவு கதிர்வீச்சு வெளிப்படுகிறது. இவற்றை புவி, அல்லது விண்வெளி தொலை நோக்கி மூலம் உணர முடியும்.
மிகப்பிரமாண்டமான நட்சத்திரங்களின் இறுதி கட்ட நிகழ்வாக கருதப்படும், 20ம் நூற்றாண்டில் விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரியமான அதிசயம் இக்கருந்துளைகள்..!
மிகப்பிரமாண்டமான நட்சத்திரங்களின் இறுதி கட்ட நிகழ்வாக கருதப்படும், 20ம் நூற்றாண்டில் விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரியமான அதிசயம் இக்கருந்துளைகள்..!
.
இப்போது மேலே போட்டுள்ள சத்திய இறைவசனங்களை மீண்டும் ஒருமுறை வாசித்து பாருங்கள்..! ஆக, இப்படியாக... எரிபொருள் இழந்து ஒளி இழக்கும் (குர்ஆன்-77:8) நட்சத்திரங்கள் மறையும்போது... (குர்ஆன்-53:01) அப்போது அதன் ஈர்ப்பால், மற்ற நட்சத்திரங்கள் அதன் மீது விழுந்து உள்ளிழுக்கும் இடம் (குர்ஆன்-56:75) ஆன, "கருந்துளைகள்" மீது அல்லாஹ் செய்யும் சத்தியம் எத்தனை மகத்தானது (குர்ஆன்-56:75) என்பதை இதன் பிரமாண்டத்தின் மூலம் அடுத்த பாராவில் புரிந்து கொள்ளலாம்.
.
'நமது பிரபஞ்சத்திலேயே பெரிய கருந்துளை' என்று "கேலக்ஸி கிளாசிக்" (Galaxy Classic) எனும் மேலே நீங்கள் பார்க்கும் கருந்துளையை கடந்த 2008 மார்ச் 18-ல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர். இந்த கருந்துளையின் பரிமாணம் மிகப்பிரமாண்டமானது. நமது சூரியனின் விட்டம் 'வெறும்... 13,92,000km. தான்'..! இதைவிட 1800 கோடி மடங்கு மிகப்பெரியது அந்த கருந்துளை..!
நம்மை பிடித்து இழுத்து 'விழுங்கி' விடுமோ என பயப்படாதீர்கள் சகோ..! நாம் அதன் அருகில் இல்லை..! :-)) நமது பூமியில் இருந்து 350 கோடி 'ஒளி ஆண்டுகள்' தொலைவில் உள்ளது..!
சரி, '1 ஒளி ஆண்டு' என்றால் எவ்வளவு தூரம்..? ஒரு நொடியில் துல்லியமாக 2,99,792 km தூரம் செல்லும் ஒளியானது, இதே வேகத்திலேயே தொடர்ந்து 1 வருடம் பயணித்தால் எவ்வளவு தூரம் செல்லுமோ... அதுவே 'ஒரு ஒளி ஆண்டு' தூரம் ஆகும்..!
இதன் பிரம்மாண்டம் பற்றி இன்னொன்றும் உள்ளது. இப்பிரபஞ்சத்தின் ஆகசிறிய கருந்துளையின் பிரம்மாண்டம் என்ன தெரியுமா சகோ..? அது... சூரியனை விட ஒரு கோடி மடங்கு பெரியது..! :-))
நம்மை பிடித்து இழுத்து 'விழுங்கி' விடுமோ என பயப்படாதீர்கள் சகோ..! நாம் அதன் அருகில் இல்லை..! :-)) நமது பூமியில் இருந்து 350 கோடி 'ஒளி ஆண்டுகள்' தொலைவில் உள்ளது..!
சரி, '1 ஒளி ஆண்டு' என்றால் எவ்வளவு தூரம்..? ஒரு நொடியில் துல்லியமாக 2,99,792 km தூரம் செல்லும் ஒளியானது, இதே வேகத்திலேயே தொடர்ந்து 1 வருடம் பயணித்தால் எவ்வளவு தூரம் செல்லுமோ... அதுவே 'ஒரு ஒளி ஆண்டு' தூரம் ஆகும்..!
இதன் பிரம்மாண்டம் பற்றி இன்னொன்றும் உள்ளது. இப்பிரபஞ்சத்தின் ஆகசிறிய கருந்துளையின் பிரம்மாண்டம் என்ன தெரியுமா சகோ..? அது... சூரியனை விட ஒரு கோடி மடங்கு பெரியது..! :-))
வானில் உள்ள கோடானு கோடி நட்சத்திரங்களில் அல்லாஹ் நாடியவை தன் எரிபொருளை இழந்து அடர்த்தி அதிகமாகி கருந்துளையாக மாறலாம். பிரபஞ்சத்தில் இதுபோல ஏராளமான கருந்துளைகள் உருவாகி விட்டன. நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனின் இறுதி முடிவும் இவ்வாறே..! அது எப்போது கருந்துளை ஆகி, பூமி உட்பட அதன் நிகழ்வெல்லைக்குள் (Event Horizon) உள்ள அனைத்தையும் தன்னுள்ளே இழுத்துக்கொள்ளும்(!?) என்பதை அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்..!
.
.
குர்ஆன்77:7 உங்களுக்கு எச்சரிக்கப்படுவது நடந்தேறும்.
குர்ஆன்77:13 (கியாமத் நாள் எனும்) தீர்ப்பு நாளுக்காகவே..!
குர்ஆனின் ஒளியில் எல்லா நட்சத்திரங்களும் கருந்துளைகளாக எப்போது மாறும் என்றும் காண்கிறோம்..! சுபஹானல்லாஹ்..!
அறிவார்ந்த வாழ்வியல் நெறிநூலான இக்குர்ஆனில் ஏராளமான அறிவியல் உண்மைகளை இடையிடையே உலக மக்களுக்கு தொட்டுக்காட்டி அச்சமூட்டி எச்சரிக்கை செய்து இறுதிநாளுக்கு முன்னர் நேர்வழிக்குள் வந்துவிடுமாறு அழைத்து, 'படைக்கப்பட்ட போலி பொய் தெய்வங்களை விடுத்து, நாம், நம் உலகம், சூரியன், சந்திரன், மற்ற கோள்கள், நட்சத்திரங்கள், கருந்துளைகள் கொண்ட இந்த மாபெரும் கேலக்ஸிகளை கொண்ட பிரபஞ்சத்தை மட்டுமலாது இன்னும் ஆறு பிரபஞ்சத்தை படைத்த ஏக இறைவனை மட்டுமே வணங்குங்கள்' என்று குர்ஆன் கூறுவதை காணலாம்.
குர்ஆனின் ஒளியில் எல்லா நட்சத்திரங்களும் கருந்துளைகளாக எப்போது மாறும் என்றும் காண்கிறோம்..! சுபஹானல்லாஹ்..!
அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.
அதேநேரம், இவ்வளவு அறிவியல் உண்மைகளையும் கற்று புரிந்து தெளிந்து இறைவனின் மகத்துவத்தை ஐயம் திரிபற அறிந்து இன்று இஸ்லாமை வாழ்வியல் நெறியாக பின்பற்ற ஆரம்பிக்கும் இக்காலத்தினரைவிட, அக்காலத்தில், எவ்வித அறிவியல் உண்மையும் அறியாமல் தெரியாமல் புரியாமல் "சமிஃணா; வஅத்தஃணா" (கேட்டோம்; வழிபட்டோம்) என்று இறைத்தூதர்கள் சொன்னதை அப்படியே ஏற்று இறைநம்பிக்கை கொண்டு இஸ்லாமிய வாழ்வியல் நெறியை பின்பற்றும் முஸ்லிம்களாகி, மிகச்சிறந்த ஒழுக்க சீலர்களாக, உயர்ந்த பண்பாளர்களாக, பயபக்தியோடு வாழ்ந்தவர்கள் பற்பல மடங்கு ஈமானில் உயர்ந்தவர்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை..!
Thanks for reference :-
http://www.amnh.org/education/resources/rfl/web/essaybooks/cosmic/cs_michell.html
http://www.dailygalaxy.com/my_weblog/2008/03/18-billion-suns.html
http://en.wikipedia.org/wiki/Black_hole
http://annajaath.com/?p=2852http://en.wikipedia.org/wiki/Black_hole
57 ...பின்னூட்டங்கள்..:
salaaam....
subahannalllaah ....
allaah akber ....
masha allaah ...superb...
அஸ்ஸலாமு அலைக்கும் ! சகொ ஆஷிக்!
சிறந்த ஒரு அறிவியல் பதிவை தந்ததற்கு நன்றி! இனி வரும் காலங்களில் மேலும் பல உண்மைகள் வெளி வரும். குர்ஆன் இறை வேதம்தான் என்பதற்கு அவை மேலும் வலு சேர்க்கும்.
அஸ்ஸலாமுஅலைக்கும் சகோ...
மிகவும் நுட்பமாக ஆராய்ந்து எழுதி உள்ளீர்கள்....திருக்குர்ஆன் கூறும் அறிவியல் அற்புதங்களில் எதையும் மாற்று மதத்தினரும் மறுக்க இயலாது...
அல்ஹமுடுளில்லாஹ். அல்லாஹ் உங்களுக்கு மேன்மலும் நல அறிவை வழங்குவானாக.
sadiq
.
.
.
சொடுக்கி >>>>> அன்றே திரு குரானில் கூறப்பட்டிருக்கும் இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள். !!! இருபதாம் நூற்றாண்டில் தொழில் நுட்ப விருத்தியால் கண்டறியப்பட்ட எத்தனையோ விஞ்ஞான உண்மைகளை அல் குரானில் 1400 வருடங்களுக்கு முன்னரே அழுத்தமாக சொல்லியிருப்பது அந்த அற்புதங்களில் ஒன்று எனலாம். <<<<<< கேளுங்கள்.
.
.
.
சலாம் சகோ முஹம்மத் ஆசிக்,
நச் பதிவு. வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. மில்கி வே, galaxy அளவிற்க்கெல்லாம் நான் வொர்த் இல்ல. சோ, தூர இருந்து உங்கள் போஸ்டை ரசித்தேன். தொடரட்டும் உங்கள் நற்ப்பணி.
மொத்ததில சார்வாகானுக்கு வேலை வச்சிகிட்டே இருக்கீங்க????
மாஷா அல்லாஹ்.
விளக்கம் அருமையாக உள்ளது. கருந்துகள்களை பற்றி நானே எழுத வேண்டும் என்றிருந்தேன், நட்சத்திரம் பற்றிய வசனங்கள் அனைத்தையும் சேர்த்து படிக்கும் பொழுது அதிசயமாக உள்ளது.
புகழ் அனைத்தும் ஏக இறைவனுக்கே, விக்கிபீடியாவில் ஒளி எவ்வாறு விலகி செல்கிறது என்பதற்கு ஒரு படம் போடபட்டிருந்தது அதை பார்க்க வியப்பாக இருந்தது. அதை பகிர்கிறேன்.
http://upload.wikimedia.org/wikipedia/commons/0/03/Black_hole_lensing_web.gif
மாஷா அல்லாஹ்.
விளக்கம் அருமையாக உள்ளது. கருந்துகள்களை பற்றி நானே எழுத வேண்டும் என்றிருந்தேன், நட்சத்திரம் பற்றிய வசனங்கள் அனைத்தையும் சேர்த்து படிக்கும் பொழுது அதிசயமாக உள்ளது.
புகழ் அனைத்தும் ஏக இறைவனுக்கே, விக்கிபீடியாவில் ஒளி எவ்வாறு விலகி செல்கிறது என்பதற்கு ஒரு படம் போடபட்டிருந்தது அதை பார்க்க வியப்பாக இருந்தது. அதை பகிர்கிறேன்.
http://upload.wikimedia.org/wikipedia/commons/0/03/Black_hole_lensing_web.gif
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
//நீங்கள் அறிந்தீர்களானால் இது மகத்தான சத்தியம்..!//
சுபுஹனல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும்...
சுப்ஹானல்லாஹ்... அருமை
அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள் - 4:82
ஜசாக்கல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ் நிறைய விசயங்களை அருமையா பகிர்ந்துள்ளீர்கள்
மிகச் சிறந்த ஆக்கம் சகோ. சுற்றி வலைக்கக் கூடியது சுற்றி வலைத்தது என்னும் குர் ஆனின் கூற்று இந்த (black hole) பற்றித்தான் அதையும் கொஞ்சம் ஆய்வு செய்யுங்களேன்
மிக அருமையான பதிவு சகோதரரே !....
//எவ்வித அறிவியல் உண்மையும் அறியாமல் தெரியாமல் புரியாமல் "சமிஃணா; வஅத்தஃணா" (கேட்டோம்; வழிபட்டோம்) என்று இறைத்தூதர்கள் சொன்னதை அப்படியே ஏற்று இறைநம்பிக்கை கொண்டு இஸ்லாமிய வாழ்வியல் நெறியை பின்பற்றும் முஸ்லிம்களாகி, மிகச்சிறந்த ஒழுக்க சீலர்களாக, உயர்ந்த பண்பாளர்களாக, பயபக்தியோடு வாழ்ந்தவர்கள் பற்பல மடங்கு ஈமானில் உயர்ந்தவர்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை..!//
மிக மிக உண்மயான கருத்துக்கள். பதிவும் மிக அருமை சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோ சிட்டிசன்
மாஷா அல்லாஹ் விவரிக்க வரியில்லை. படிக்கும் போதே ஆச்சரியம்.. பிரமிக்க வைக்கிறது. அந்த கருந்துளைகளை பற்றிய தகவல்.
எவ்வளவு நுணுக்கங்களை வைத்திருக்கிறான் இறைவன்...
பகிர்ந்த கருத்திற்கு ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..வபர..
அல்லாஹு அக்பர்!
நல்ல பதிவு...சில புதிய தகவல்களும் அறிந்து கொண்டேன்..மாஷா அல்லாஹ்!
ஜஸாக்கல்லாஹு கைர்
வானியல் பற்றி குர்ஆன் முழுதும் பரவலாக உள்ள வசனங்களை பார்த்த பின்பும் அதனை நம்பாமல் இருப்பவர்களை பார்க்கும் போது மிக ஆச்சர்யமாக இருக்கிறது
"படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா? அதை அவன் நிறுவினான்"
"நீங்கள் அறிந்தீர்களானால் இது மகத்தான சத்தியம்"
"அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்"
அஸ்ஸலாமு அலைக்கும்...
நல்ல அறிவியல் தகவல்கள்...ஆனால் என் மாற்றுக் கருத்துக்களை சொல்ல
அனுமதிக்கவும்.
குர்-ஆன்,சொல்வதென்றால் நேரடியாக சொல்வது தானே? ஏன்
சுற்றி வளைத்து சொல்ல வேண்டும்? மேலும் ஏன் கருந்துகளைகள் மட்டும்?
லேசர், செயற்கை அறிவு, பயோ இஞ்சினியரிங் என்று மனித குலத்துக்கு
பயன்படும் அறிவியல் விஷயங்கள் ஏன் குர்-ஆனில் இல்லை?
மேலும் மத நூலான குர்-ஆன் கருந்துளைகளைப் பற்றி பேச வேண்டிய
அவசியம் என்ன? அதனால் நமக்கு என்ன பயன்?
இரவு வானத்தைப் பார்த்தால் அடிக்கடி எரிகற்கள் விழும். அது பார்ப்பதற்கு
விண்மீன் ஒன்று விழுவதைப் போலவே இருக்கும். இதைப் பார்த்து விட்டு
குர்-ஆனை எழுதியவர் குறிப்பிட்டு இருக்கலாம் அல்லவா?
எனவே அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஒரேயடியாக இப்படி கலப்பதை
குறைத்துக் கொள்ளுங்கள்.குர்-ஆனில் இப்படி ஒரு வரி இருக்கிறது என்று குறிப்பு மட்டும் கொடுங்கள் போதும்.
@சமுத்ராஅலைக்கும் சலாம் வரஹ்...
//நல்ல அறிவியல் தகவல்கள்...//---நன்றி சகோ.சமுத்ரா.
///ஆனால் என் மாற்றுக் கருத்துக்களை சொல்ல
அனுமதிக்கவும்.///---தாராளமாக சொல்லுங்க சகோ....
///குர்-ஆன்,சொல்வதென்றால் நேரடியாக சொல்வது தானே? ஏன்
சுற்றி வளைத்து சொல்ல வேண்டும்? ///---இந்த குறையை அதன் மீதி நாம் சொல்ல அதொன்றும் அறிவியல் நூல் அல்லவே..?
///அறிவார்ந்த வாழ்வியல் நெறிநூலான இக்குர்ஆனில் ஏராளமான அறிவியல் உண்மைகளை இடையிடையே உலக மக்களுக்கு தொட்டுக்காட்டி அச்சமூட்டி எச்சரிக்கை செய்து இறுதிநாளுக்கு முன்னர் நேர்வழிக்குள் வந்துவிடுமாறு அழைத்து, 'படைக்கப்பட்ட போலி பொய் தெய்வங்களை விடுத்து, நாம், நம் உலகம், சூரியன், சந்திரன், மற்ற கோள்கள், நட்சத்திரங்கள், கருந்துளைகள் கொண்ட இந்த மாபெரும் கேலக்ஸிகளை கொண்ட பிரபஞ்சத்தை மட்டுமலாது இன்னும் ஆறு பிரபஞ்சத்தை படைத்த ஏக இறைவனை மட்டுமே வணங்குங்கள்' என்று குர்ஆன் கூறுவதை காணலாம்.///
---இப்படி பதிவிலேயே சொல்லி இருக்கிறேனே சகோ..?
@சமுத்ரா///மேலும் ஏன் கருந்துகளைகள் மட்டும்?
லேசர், செயற்கை அறிவு, பயோ இஞ்சினியரிங் என்று மனித குலத்துக்கு
பயன்படும் அறிவியல் விஷயங்கள் ஏன் குர்-ஆனில் இல்லை?///
---இந்த குறையை அதன் மீதி நாம் சொல்ல அதொன்றும் அறிவியல் நூல் அல்லவே..?
///மேலும் மத நூலான குர்-ஆன் கருந்துளைகளைப் பற்றி பேச வேண்டிய
அவசியம் என்ன? அதனால் நமக்கு என்ன பயன்?///
---இது நல்ல கேள்வி சகோ.சமுத்ரா..
"இன்றைய நவீன கால கண்டுபிடிப்புகள் எப்படி பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் சொல்லப்பட்ட வார்த்தைகளில் இருக்கின்றன..? எனில், இது இறைவேதமாகத்தான் இருக்க வேண்டும்..!" என்று இறைவனை அதுவரை நம்பாமல் இருக்ககூடிய மிகச்சிறந்த சிந்திக்கும் ஆற்றல் மிக்க அறிவியல் கற்ற மக்களுக்கு அப்படி ஒரு அத்தாட்சி குர்ஆனில் ஆங்காங்கே விட்டு வைக்கப்பட்டுள்ளது சகோ.சமுத்ரா.
@சமுத்ரா
///இரவு வானத்தைப் பார்த்தால் அடிக்கடி எரிகற்கள் விழும். அது பார்ப்பதற்கு
விண்மீன் ஒன்று விழுவதைப் போலவே இருக்கும். இதைப் பார்த்து விட்டு
குர்-ஆனை எழுதியவர் குறிப்பிட்டு இருக்கலாம் அல்லவா?///
---இல்லை சகோ.சமுத்ரா.
நட்சத்திரம் என்பதற்கு " نجم" "நஜ்ம்" என்ற பெயரே அந்த வசனத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது. மாறாக எரிகற்கள், விண்கற்கள் என்று சொல்வதாக இருந்தால் அவற்றுக்கு வேறு பெயர்கள் இன்று 'நவீன அரபியில்' ( النيزكية & النيازك) உள்ளன. 'நஜ்ம்' என்ற நட்சத்திரத்துக்கான பெயர் சொல்ல வேண்டிய தேவை இல்லை. இதை நான் சொல்லவில்லை சகோ.சமுத்ரா...!
குர்ஆனே சொல்கிறது..! (67:5)
وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِّلشَّيَاطِينِ ۖ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ
And we have, (from of old), adorned the lowest heaven with Lamps, and We have made such (Lamps) (as) missiles to drive away the Evil Ones, and have prepared for them the Penalty of the Blazing Fire.
இங்கேதான் நீங்கள் சொல்லும் 'எரிகற்கள்' வருகின்றன.
என்ன பெயரில்...?
'விளக்குகள்' என்ற பெயரில்..! ( சிலர் 'கொள்ளிக்கட்டைகள்' என்று தமிழில் மொழிமாற்றம் செய்து இருப்பார்கள்)
அன்றைய கல்வி அறிவற்ற
மக்களுக்கான் 'அந்தக்கால அரபி பதம்'.(பிமஸாபீஹ்) " بِمَصَابِيحَ " ----இதுதான்....!
நீங்கள் இதை கூகுள் மொழிமாற்றியில் சென்று இந்த இரண்டு வார்த்தையையும் காபி பேஸ்ட் போட்டு தமிழில் சோதனை செய்து கொள்ளலாம் சகோ.சமுத்ரா.
@சமுத்ரா
///எனவே அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஒரேயடியாக இப்படி கலப்பதை
குறைத்துக் கொள்ளுங்கள்.குர்-ஆனில் இப்படி ஒரு வரி இருக்கிறது என்று குறிப்பு மட்டும் கொடுங்கள் போதும்///
-----இனி இப்படி சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்..! :-))
நீங்கள் இதுவரை நினைத்து இருப்பது போல குர்ஆன் புத்தகம் அப்படி ஒன்றும் யாரோ ஒரு மனிதரால் எழுதப்பட்டது அல்ல சகோ.சமுத்ரா...!
அது அனைத்தையும் படைத்த அதன் தாத்பரியங்கள் நுணுக்கங்கள் அனைத்தையும் அறிந்த ஏக இறைவனால் மட்டுமே தரப்பட்ட வார்த்தைகள் சகோ. அதில் நாம் முரண்பாடு காணவே முடியாது. அதையும் சவாலவே சொல்லும் குர்ஆன் வசனத்தை பதிவில் சொல்லி இருக்கிறேன் சகோ.சமுத்ரா.
// குர்ஆன் 4:82
அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.//
இதுதான் குர்ஆன்..!
இதுதான் அதன் மகத்துவம்..!
சுபஹானல்லாஹ்..!
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் அருமையான சிந்தனைக்கும் ஆழ்ந்த கருத்துக்களுக்கும் நல்ல கேள்விகளுக்கும் மிகவும் நன்றுய் சகோ.சமுத்ரா.
kalakkal
சரி. தங்கள் பதில்களுக்கு நன்றி . என் விவாதம் என்ன என்றால்
குர்-ஆன் நிறைய காலமாக இருந்து வந்திருக்கிறது. கருந்துளைகள்
என்ற Concept போன நூற்றாண்டில் தான் வந்து.கருந்துளைகள் கண்டுபிடிக்கப்படும் முன்னர் இதை இஸ்லாமியர்கள் எப்படி
அர்த்தம் செய்து கொண்டனர்? இப்போது இத்தனை அழகாக விளக்கம்
சொல்கிறீர்களே?நவீன இயற்பியலின் காலத்துக்கு முன்னர் விண்மீன்களும்
ஒளி இழக்கும். விண்மீன்கள் கடைசி காலத்தில் சுருங்கி ஒளி வெளியேறாத
ஒரு கருந்துளையாக மாறிவிடும் என்று ஒருவர் கூடவா Deduce செய்யவில்லை?
யாராவது சொல்லியிருந்தால் குர்-ஆனுக்கே நோபல் பரிசு கிடைத்திருக்குமே?
மேலும் ஸ்ட்ரிங் தியரி, M தியரி எல்லாவற்றுக்குமான குறிப்புகளையும் அவர்கள்
நம் குர்-ஆனிலேயே தேடி இருக்கலாமே? ஏன் telescope , கருவிகள் , சமன்பாடுகள் என்று இத்தனை ஆராய்ச்சி செய்ய வேண்டும்? நவீன கண்டுபிடிப்பு ஒன்றை இப்படி வேதநூல்களின் வசனங்களுடன் பொருத்தி அழகழகாக எது வேண்டுமானாலும் சொல்லலாம்.இணையத்தில் தேடினால் ஹிந்து வேதங்களில் ஸ்ட்ரிங் தியரியே சொல்லப்பட்டு விட்டது என்று நிறைய தற்குறிப்பேற்ற அணிகளைப் பார்க்கலாம்.இதற்குத் தேவை கொஞ்சம் கற்பனைத் திறன் தான். பகவத் கீதையில் முழு ரிலேடிவிடி வருகிறது என்றும் சொல்கிறார்கள். என்
கவலை என்ன என்றால் இதையெல்லாம் Reference ஆக Scientists எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு International conference இல் பகவத் கீதையையோ குர்-ஆனையோ எடுத்துச் செல்ல முடியாது.
குர்-ஆன் அதிக பட்சம் மக்களை நல்வழிப்படுத்த ஏற்பட்ட ஒரு மதநூல். அதைப் பின்பற்றி நாம் ஒரு நல்ல வாழ்க்கையை மேற்கொள்ளலாம். அவ்வளவு தான். இறைவன் எழுதியதில் தயவு செய்து உங்கள் சொந்த பெயிண்டை பூச வேண்டாம் சகோதரரே.
மேலும் இப்போது நவீன இயற்பியல் உலகம், நான்கு விசைகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது, அடிப்படைத் துகள்களுக்குள் என்ன இருக்கிறது, இணை உலகங்கள் இருக்கின்றனவா காலப்பயணம் இயலுமா என்று நிறைய விஷயங்களில் திணறிக் கொண்டு இருக்கிறது. இதைப் பற்றிய
குறிப்புகள் நம் குர்-ஆனில் வருகின்றனவா என்று இப்போதே சொல்லி விடவும். அப்புறம் அவர்கள் கண்டுபிடித்ததற்குப் பின்னர் அது இந்த சுராஹ்-வில் வருகிறது அங்கே வருகிறது என்றால் அது சுத்த Humbug ...மதத்தின் மீதான அதீதப் பற்றின் வெளிப்பாடு.கோபப்படாமல் இந்த விஷயங்களை
ஆராய்ந்து பாருங்கள். Al-Hamdu-Lillaah...
@சமுத்ராமுதல் பாராவில் நிறைய கேள்விகள் கேட்டு உள்ளீர்கள். அதற்கு இரண்டாவது பாராவில் நீங்களே பதில்களை சொல்லி விட்டீர்கள் சகோ.சமுத்ரா.
அறிவற்று இருந்த அரேபிய பாரசீக சமூகம் குர்ஆன் கொடுத்த ஊக்கத்தால் நிறைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினர். சுமார் ஐநூறு நூற்றாண்டுகள் அறிவியல் முன்னேற்றம் முஸ்லிம்கள் கைகளில் தான் இருந்தன என்று வரலாறு கூறுகிறது. இன்றைய நவீன அறிவியல் வளர்ச்சிக்கான அஸ்திவாரங்கள் பல போடப்பட்டன. நிறைய கண்டுபிடிப்புகள் அச்சமயம் இஸ்லாம் மனித குலத்துக்கு வாரி வழங்கி உள்ளதை காண்கிறோம். எல்லாமே குர்ஆன் கொடுத்த உத்வேகம்தான். அந்த காலத்தை 'ஐரோப்பாவின் இருண்ட காலம்' என்று படித்து இருப்பீர்கள்.
பின்னர் இஸ்லாமிய அரசின் மீது தொடுக்கப்பட்ட பல போர்களிநாளும் அதில் இஸ்லாமிய அரசுக்கு ஏற்பட்ட தோல்விகளாலும் கொள்ளை அடிக்கப்பட்ட அறிவியல் ஆவணங்களிநாளும் பல போர்களில் ஏற்பட்ட அறிவியல் ஆவணங்களின் குறிப்புகளின் இழப்புகள் கல்வி நிலையங்களின் சேதங்கள் என்று தலைமுறை பின்னுக்கு சென்றது.
விட்டதை பிடிக்க போரில் கவனம் செலுத்த இரண்டு தலைமுறை பின்னுக்கு சென்றது. இப்போது மீண்டும் முன்னேறி வருகிறது. இதற்கும் காரணம் குர்ஆன் தரும் உத்வேகம்தான்.
இதனால்தான், சர்வதேச அளவில் இந்த முன்னேற்றத்துக்கு எதிராக... பொளாதார தடைகள் போடப்படுவதையும், நிர்பந்தங்களும் இடப்படுவதையும், தீவிரவாத பட்டங்கள் தரப்படுவதையும் உரிமை மறுக்கப்படுவதும் ஆயிரமாயிரம் முட்டுக்கட்டைகள் பிறப்பதை தினமும் கண்கூடாக பார்க்கிறோம்.
ஒன்று சொல்லட்டுமா..? இஸ்லாமிய அரசின் கல்விக்கூடங்களை கொள்ளை அடித்த ஐரோப்பியர்கள் அப்படியே குரானையும் கொள்ளை அடித்து சென்று இருந்திருந்தால்... இன்று நாம் பார்க்கும் அறிவியல் முன்னேற்றம் ஆறேழு நூற்றாண்டுகளுக்கு முன்னரே வந்து இருக்கும்..!
நிச்சயமாக சிலநூற்றண்டுக்ளுக்கு அப்புறம் கண்டுபிடித்த அறிவியலுக்கு அல்குரான் அன்றே அவர்களுக்கு வழிகாட்டி இருந்திருக்கும்.
அல்லது அந்த சிலுவைப்போர்கள் எல்லாம் நடந்து இராமல் இருந்திருந்தாலும் சிலநூறு வருடங்களுக்கு முன்னரே இன்றைய அறிவியல் முன்னேற்றத்தை கண்டிருப்போம். என்ன செய்ய..?
இந்த குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல. உலகில் உள்ள அனைவருக்கும் சொந்தம். உங்களுக்கும் சொந்தம். படித்து ஆய்ந்து பயனடைவோம் & அதன்படி நம் வாழ்வை அமைத்துக்கொள்வோம் சகோ.சமுத்ரா..!
மீண்டும் வருகைக்கு நன்றி.
அப்படியா? குர்-ஆன் சொல்லித் தான் அறிவியல் கண்டுபிடிப்புகள்
நிகழ்ந்தன என்று நான் எங்கேயும் இதுவரை படிக்கவில்லை.
அதுதான் சொல்கிறேனே, தயவு செய்து இப்போதே அதில் என்ன
என்ன பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று யாராவது
scientist ஆராய்ந்து புதுப்புது கொள்கைகளைக் கண்டுபிடிக்கட்டும்.
கண்டுபிடித்ததற்கு அப்புறம் சொன்னால் எந்த பிரயோஜனமும் இல்லை.
கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் மனதில் இருந்தது சார், வெளியே வரவில்லை
என்று சொன்னால் பரிசு கொடுக்கமாட்டார்கள்.
//சுமார் ஐநூறு நூற்றாண்டுகள் அறிவியல் முன்னேற்றம் முஸ்லிம்கள் கைகளில் தான் இருந்தன என்று வரலாறு கூறுகிறது//
எனக்குத் தெரிந்து ஒரு இஸ்லாமிய விஞானி கூட இதுவரை இல்லையே? நீங்கள் சொல்வது உண்மை என்றால் அது கண்டிப்பாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும். நம் விவாதத்தை இத்துடன் முடித்துக் கொள்வோம்.
bye
@சமுத்ரா
///எனக்குத் தெரிந்து ஒரு இஸ்லாமிய விஞானி கூட இதுவரை இல்லையே? நீங்கள் சொல்வது உண்மை என்றால் அது கண்டிப்பாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.///------தோடா...........!?!?!?!?!?!?
தயவுசெய்து கிணற்றுத்தவளையாக இருக்காதீர்கள் சகோ.சமுத்ரா.அறிவு வளர தேடல் வேண்டும் சகோ.சுமத்ரா.
நமக்கு பள்ளியில் சொல்லப்பட்ட வரலாறு எல்லாம் சார்புத்தன்மை கொண்டவை. உண்மையான வரலாறாய் தேடி அறியுங்கள். நீங்கள் கற்றது கையளவு கூட இல்லை என்பதை முதலில் விளங்குங்கள்.
மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்றால்....
http://en.wikipedia.org/wiki/Timeline_of_Islamic_science_and_technology
http://en.wikipedia.org/wiki/Islamic_Golden_Age
http://en.wikipedia.org/wiki/List_of_Muslim_scientists
http://en.wikipedia.org/wiki/Islamic_studies
http://en.wikipedia.org/wiki/Islamic_scholars
http://en.wikipedia.org/wiki/Islamic_mathematics
http://en.wikipedia.org/wiki/Islamic_medicine
http://en.wikipedia.org/wiki/Islamic_science
http://en.wikipedia.org/wiki/Ophthalmology_in_medieval_Islam
http://en.wikipedia.org/wiki/Islamic_astronomy
http://en.wikipedia.org/wiki/List_of_Iranian_scientists
http://en.wikipedia.org/wiki/Science_in_the_medieval_Islamic_world
http://royalsociety.org/policy/projects/atlas-islamic-world/golden-age/
http://www.maa.org/devlin/devlin_0708_02.html
http://www.researchtrends.com/issue21-january-2011/a-rebirth-of-science-in-islamic-countries/
http://www.newscientist.com/blogs/thesword/2010/06/the-staggering-potential-of-is.html
http://edition.presstv.ir/detail/118977.html
http://themuslim.org/2010/01/28/conference-of-women-scientists-of-islamic-world/
http://www.newscientist.com/article/dn18546-iran-showing-fastest-scientific-growth-of-any-country.html
http://www.science-metrix.com/30years-Paper.pdf
இன்னும் ஏகப்பட்டவை உள்ளன...
எனினும் இவற்றை நீங்கள் அறிந்துகொண்டாலே போதும் என நினைக்கிறேன் சகோ.சமுத்ரா.
///தயவு செய்து இப்போதே அதில் என்ன
என்ன பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று யாராவது
scientist ஆராய்ந்து புதுப்புது கொள்கைகளைக் கண்டுபிடிக்கட்டும்.//
---ஏன் 'யாராவது'..?
நம்மால் முடியும் சகோ.சமுத்ரா..! உங்களால் முடியாதா..?
மனிதனுக்கு 'முயன்றால் முடியும்' என்ற இறைநம்பிக்கையுடன் கூடிய தன்நம்பிக்கை அவசியம் சகோ.சமுத்ரா..!
//நம் விவாதத்தை இத்துடன் முடித்துக் கொள்வோம்.//---எனக்கு இதனால் ஒரு இழப்பும் இருக்காது என்றே நினைக்கிறேன் சகோ.சமுத்ரா.
:-))
தங்கள் முடிவு... அது முழுக்க உங்கள் முடிவுதான்.
வருகைக்கும் தங்களைப்பற்றி யாரென்று வெளிக்காட்டியதற்கும் நன்றி சகோ.சமுத்ரா.
thanks for the links..
http://en.wikipedia.org/wiki/List_of_Muslim_scientists
இத்தனை பேர் இருந்தும் ஒருத்தர் பேர் கூட எனக்குத் தெரியவில்லையே? எனக்கு வேண்டாம். நான் தான் கிணற்ற்றுத் தவளை ஆயிற்றே.. நான் படித்த அறிவியல் புத்தகம் ஒன்றில் கூட இல்லையே?இதற்கு யார் காரணம்? நான் சொல்ல வருவது உங்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன். நீங்களும் 'இஸ்லாம்' என்ற கிணற்றில் இருந்து (அல்லது கடலில் இருந்து) வெளிவர வேண்டும்.அறிவியல் வளர்ச்சிக்கு எல்லா மதத்தவர்களும் பங்காற்றி இருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் குர்-ஆனை அல்லது கீதையை, பைபிளை படித்து விட்டுதான் அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்தார்கள் என்று சொல்லாதீர்கள்.
முதலில் விஞ்ஞானிகளை இவர் ஹிந்து விஞ்ஞானி, இவர் இஸ்லாம் விஞ்ஞானி என்று பார்ப்பதே பெரும் தவறு. அறிவியல் என்றால் எந்த விதமான மத கருதுகோள்கள் இன்றி உண்மையை அணுக முயல்வது.
Scientific issues in the Qur'an and Hadith//நீங்கள் கொடுத்த லிங்கில் தான் இதுவும் இருக்கிறது.
//As a result, he says there is a great deal of Islamic pseudoscience attempting to reconcile this respect with other respected religious beliefs. //நீங்கள் கொடுத்த லிங்கில் தான் இதுவும் இருக்கிறது.
pseudoscience என்றால் தெரியும் என்று நினைக்கிறேன். குர் ஆனில் கருந்துளை வருகிறது ஒளிவேகம் பற்றி குறிப்பு இருக்கிறது என்று ஏதேதோ சொல்வது.
//Edis qualifies that 'Muslim thought' certainly cannot be understood by looking at the Qur'an alone - cultural and political factors play large roles.[8]
Russel Glasser (Skeptic on "The Atheist Experience" TV show with Matt Dillahunty and Jeff Dee) argues that interpreting the Qur'an like this is cherry picking and risks simply confirming the biases of the investigator.[47]//நீங்கள் கொடுத்த லிங்கில் தான் இதுவும் இருக்கிறது.
லிங்குகளைக் கொடுப்பது யாருக்கும் எளிது. நானும் கூகிளில் தேடி நூறு லிங்குகள் கொடுக்க முடியும்.அந்த லிங்குகளில் ஒன்றையாவது நீங்கள் முழுமையாகப் படித்திருக்கிறீர்களா என்பது தான் முக்கியம்.A coin has two sides.
Please don't look at a single side.In that case, you are half-blind.
குர்ஆனில் அறிவியலுக்கு முரணானது எதுவும் இல்லை என்றும் அது அறிவியலாளர்களுக்கு மேலும் புதிய விஷயங்களை விரைவாக கண்டறிய சில க்ளூக்களை எடுத்து தருகிறது என்ற உண்மைகளை எடுத்து சொல்லும் பதிவு இது! நன்றி!
@மிஸ்டர் சமுத்ரா
ஹலோ, சவுக்கியமா?
இப்படி டெய்லி யாருகிட்டேயாவது வாயை குடுத்து மூக்குடைபட்டு வாங்கி கட்டிக்கணும்னு ஏதாவது 'டார்வின் ஆட்டுக்குட்டி சுவாமிகள்' கிட்டே வேண்டுதலா?
(விஷயம் புரியாதவர்கள்
http://duraidaniel.blogspot.com/2012/02/1.html
நண்பர் துறைடேனியல் தளம் சென்று இந்த பதிவில் மறுமொழிகளை படிக்கவும்)
@மிஸ்டர் சமுத்ரா
//ஹலோ, சவுக்கியமா?//
ஆஹா, அல்லா இயேசு விஷ்ணு இவர்களின் தயவால் பரம சவுக்கியம்
//இப்படி டெய்லி யாருகிட்டேயாவது வாயை குடுத்து மூக்குடைபட்டு வாங்கி கட்டிக்கணும்னு ஏதாவது 'டார்வின் ஆட்டுக்குட்டி சுவாமிகள்' கிட்டே வேண்டுதலா?//
ஆம் அய்யா. வேண்டுதல் தான் 108 தேங்காய் உடைப்பதாக.நீங்கள் வேண்டுமானால் வந்து பொறுக்கிக் கொண்டு செல்லவும். நோ அப்ஜக்ஷன்.
(விஷயம் புரியாதவர்கள்
http://duraidaniel.blogspot.com/2012/02/1.html
நண்பர் துறைடேனியல் தளம் சென்று இந்த பதிவில் மறுமொழிகளை படிக்கவும்)
//என் புகழைப் பரப்புவதற்கு மிக்க நன்றிகள்//
மூக்கு உடைபடுவது யாம் அல்ல, மதங்களின் பெயரால் அறிவியலை இழிவுபடுத்தும் மதவாதிகள் தான்.
//குர்ஆனில் அறிவியலுக்கு முரணானது எதுவும் இல்லை என்றும் அது அறிவியலாளர்களுக்கு மேலும் புதிய விஷயங்களை விரைவாக கண்டறிய சில க்ளூக்களை எடுத்து தருகிறது என்ற உண்மைகளை எடுத்து சொல்லும் பதிவு இது! நன்றி!//
இங்கேயும் கூஜா தூக்க ஆரம்பித்து விட்டீர்களா, அல்லா இயேசு எல்லாருக்கும் கூஜா தானா?
@சமுத்ரா/////எனக்குத் தெரிந்து ஒரு இஸ்லாமிய விஞானி கூட இதுவரை இல்லையே?/////
.............என்று சொன்ன உங்களுக்கு நான் என்னவெல்லாம் சொல்ல நினைத்தேனோ.............
//அறிவியல் வளர்ச்சிக்கு எல்லா மதத்தவர்களும் பங்காற்றி இருக்கிறார்கள்//
///முதலில் விஞ்ஞானிகளை இவர் ஹிந்து விஞ்ஞானி, இவர் இஸ்லாம் விஞ்ஞானி என்று பார்ப்பதே பெரும் தவறு.///
////A coin has two sides.
Please don't look at a single side.In that case, you are half-blind.////
அதை எல்லாம் அப்படியே இவ்வளவு சீக்கிரம் 'கப்'என்று பிடித்துக்கொண்டீர்களே..!
ஒருவழியாக கிணற்றிலிருந்து 'வெளியே எட்டி பார்த்ததை' பின்னூட்டம் வாயிலாக அறிவித்தமைக்கு மிகவும் நன்றி சகோ.சுபத்ரா.
:-))
//ஒருவழியாக கிணற்றிலிருந்து 'வெளியே எட்டி பார்த்ததை' பின்னூட்டம் வாயிலாக அறிவித்தமைக்கு மிகவும் நன்றி சகோ.சுபத்ரா.//
என் பெயர் சமுத்ரா ;):):):)
;-) நான் எட்டிப் பார்த்து விட்டேன். நீங்கள் எப்போது???உலகம் மிகப் பெரியது சகோதரரே..
@சமுத்ரா
//நான் எட்டிப் பார்த்து விட்டேன். நீங்கள் எப்போது???//
---- கொஞ்சநேரத்துக்கு முந்திதான்.... எட்டி பார்க்கும்போது தவறுதலாக உள்ளே விழுந்து.... நல்லவேளையா அடிபடாம வெளியே ஏறி வந்து இருக்கேனாக்கும்...!
மறுபடியும் எட்டிப்பார்க்கனுமா..? நான் இந்த விளையாட்டுக்கு வரலை....சகோ.சமுத்ரா.
{முந்திய பெயர் தவறுக்கு..........[இதுபோன்று சிலநேரம் தன்னை அறியாமல் தவறுதல் ஏற்படுதல் மனித இயல்புதானே..? எனக்கு முதல் முறை என நினைக்கிறேன்]..........என்னை மன்னிக்கவும் சகோ.சமுத்ரா.}
சரி. இன்னொரு பதிவில் சந்திக்கலாம்.கருந்துளைகள் பற்றிப் பேசும் போது குர்-ஆனில் ஒரு வரி வருகிறது .அது அவற்றைக் குறிக்கலாம் என்று மட்டும் சொல்லுங்கள். ஆனால் எனக்கு இந்தப் பதில் மிக அதிகம்
ISLAMIC INFLUENCE இருப்பதாகத் தோன்றுகிறது.எனவே பார்வையிடும் பலர் இது மத சார்புடைய பதிவு என்று சீண்டாமலேயே சென்று விடுவார்கள். உள்ளே என்ன தான் அருமையாக எழுதி இருந்தாலும் சில பேர் படிக்க மாட்டார்கள்.இது என் Suggestion தான்.அப்புறம் உங்கள் விருப்பம்.நான் மீண்டும் மீண்டும் சொல்வது போல நான் நாத்திகன் அல்ல. அதே சமயம் மனிதனை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆன்மீகத்துக்கும் அடிமை அல்ல.ஓஷோ சொல்வதைப் போல ஒரு un-religious religion என்னுடையது !
@சிந்தனை
அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.சுல்தான்.
@சுவனப்பிரியன்
அலைக்கும் ஸலாம் வரஹ்...
//இனி வரும் காலங்களில் மேலும் பல உண்மைகள் வெளி வரும். குர்ஆன் இறை வேதம்தான் என்பதற்கு அவை மேலும் வலு சேர்க்கும்.//
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.சுவனப்பிரியன்
@NKS.ஹாஜா மைதீன்
அலைக்கும் ஸலாம் வரஹ்...
//திருக்குர்ஆன் கூறும் அறிவியல் அற்புதங்களில் எதையும் மாற்று மதத்தினரும் மறுக்க இயலாது...//
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.ஹாஜா.
@jaffy
தங்கள் வருகைக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.சாதிக்
@VANJOOR
தங்கள் வருகைக்கும் சுட்டிக்கும் நன்றி சகோ.வாஞ்சூர்.
@சிராஜ்
அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும், "ஓவர் தன்னடக்கத்துக்கும்",(:-)) பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.சிராஜ்.
@கார்பன் கூட்டாளி
அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் விக்கிபீடியா ஒளிவிலகல் மாதிரி பட சுட்டிக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.கார்பன் கூட்டாளி.
@ஹைதர் அலி
அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.ஹைதர் அலி.
@Aashiq Ahamed
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.ஆஷிக் அஹமத்.
@Rabbani
அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.ரப்பானி.
@kaleelsms.com
//சுற்றி வலைக்கக் கூடியது சுற்றி வலைத்தது//
---இன்ஷாஅல்லாஹ் இதுபற்றி தேடி பார்க்கிறேன் சகோ.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.கலீல்.
@sksj
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.sksj
@Syed Ibramsha
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.இப்ராம்ஷா.
@G u l a m
அலைக்கும் ஸலாம் வரஹ்...
//எவ்வளவு நுணுக்கங்களை வைத்திருக்கிறான் இறைவன்...//--சுபஹானல்லாஹ்.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.குலாம்.
@ashfa mowlana
அலைக்கும் ஸலாம் வரஹ்...
//"படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா? அதை அவன் நிறுவினான்"//---அல்லாஹு அக்பர். தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.அஷ்ஃபா மெளலானா.
@Rafeeq-ul-islam
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.ரஃபீக் உல் இஸ்லாம்.
@THE UFO
///குர்ஆனில் அறிவியலுக்கு முரணானது எதுவும் இல்லை என்றும் அது அறிவியலாளர்களுக்கு மேலும் புதிய விஷயங்களை விரைவாக கண்டறிய சில க்ளூக்களை எடுத்து தருகிறது///---விஞ்ஞானிகள் கவனிக்க வேண்டிய கருத்து..!
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.THE UFO
@சமுத்ரா
ஏதேதோ சொல்கிறீர்கள். ஆனால், தாங்கள் தவறான புரிதலில் இருக்கிறீர்கள் என்பது மட்டும் திண்ணமாக புரிகிறது எனக்கு..!
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.சமுத்ரா.
Ok. Have a nice day
இஸ்லாத்தில் கூறப்பட்ட அறிவியல்களை மிகவும் அறிவுப்பூர்வமாக அறிய தந்தீர்கள் சகோ மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
அருமையான பதிப்பு சகோதரே
நன்றி
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!