தன்னுடைய குழந்தையின் பிறந்தநாள் 2012 - பிப்ரவரி-18 -சனிக்கிழமை என்ற ஒருநாளை... அடுத்தவாரம் சனிக்கிழமை வரும்போது அவர் கண்டுகொள்வதில்லை. அதுவே அடுத்த மாதம் மார்ச் 18 அன்றும் கண்டுகொள்வதில்லை. ஆனால், அடுத்தவருஷம் 2013 - பிப்ரவரி-18 -என்ன கிழமை ஆனாலும், அதை... "தன் குழந்தையின் பிறந்தநாள் இன்று" என்கிறார்..! இது எப்படி சரி..? லாஜிக்கே இல்லாத முட்டாள்த்தனம் அல்லவா..? விளக்கமாக காண்போம்.
குழந்தை பிறந்துதான் ஒருவருஷம் ஆச்சே..? உயிரோடு இருக்கும் அதே குழந்தை ஒரு வருஷம் கழித்து அன்று மீண்டும் ஒருமுறை எப்படி பிறந்தது..?
இப்படி... கேட்டால்... Birth Day என்கிறார்..! பெரிய சைஸ் கேக் ஒன்றை ஆர்டர் கொடுத்து, மத்தியில் ஒரு மெழுகுவர்த்தி கொளுத்தி, அதனை உடனே ஊதி அணைத்ததும் கூடி இருந்த மக்கள் அனைவரும் இந்த சாதனைக்கு கைதட்டி "wish you happy birthday to you" என்று கோரசாக தலையை ஆட்டி ஆட்டி பாட்டு பாடுகிறார்கள்..! அடுத்து பலர் பரிசுகளுடன் வருகிறார்கள்..! கேக் வெட்டி கொடுத்து ஊட்டி விட்டு பரஸ்பரம் கைகுலுக்குகிறார்கள்..! கட்டி அனைத்து முத்தம் இடுகிறார்கள்..! எனில், இங்கே ஏதோ ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளதா..?
சாகாமல் ஒருவருடம் உணவுண்டு உயிர் வாழ்ந்தது சாதனையா..? அல்லது, சாகடிக்காமல் ஒரு வருடம் உணவூட்டியது சாதனையா..? எது சாதனை..? சரி, ஒரு வாதத்துக்கு இதுவும் சாதனைதான் என வைத்துக்கொண்டால்... வாழும் ஒவ்வொரு வினாடியும் சாதனைதானே..? அது ஏன் வருஷத்துக்கு ஒருநாள் மட்டும் இந்த சாதனை கொண்டாடப்படுகிறது..?
பெரியார் சமாதி, காயிதே மில்லத் சமாதி : பிறந்தநாள் வழிபாடு |
பெரியார் சாமி பிறந்தநாள் : புகைப்பட மற்றும் சிலை வழிபாடு |
இரு இறைத்தூதர்கள் பிறந்த நாள் தெரியாவிட்டாலும், ஏதோ ஒரு நாளை கணித்து கொண்டாட்டங்கள் |
"பதிவு முழுமை பெறவில்லை" என்று பின்னூட்டத்தில் குறைபட்டுக் கொண்ட சகோ. கவிதாவுக்காகவும் கூடவே, சகோ. தி எலைட் குரூப்புக்கும் ஃபோட்டோவுடன் கூடிய ஒரு பிற்சேர்க்கை : -
இதுபோன்ற பிறந்த / இறந்த நினைவு நாட்கள், இறந்த தலைவர்களுக்கு விமரிசையாக அரசியல் பின்புலத்துடன் அனுசரிக்கப் படுவதால், அமைதிப் பூங்காவான தமிழகத்தில் அவ்வபோது கலவரம், டென்ஷன் ஏற்பட்டு துப்பாக்கிச்சூடு, ஊரடங்கு, என மக்களின் மாமூல் வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படுகிறது..!.
'ஜெயந்திகள்', 'குருபூஜைகள்' ...என பல இருந்தாலும் இவற்றுக்கு உதாரணமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் (ஒரேநாளில் பிறந்த தேதியும் இறந்த தேதியும் கொண்ட) பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி & குருபூஜை மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரன் குருபூஜை போன்ற சம்பிரதாய நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு சொல்லலாம். இதுபோன்ற விழாக்களுக்கு எல்லாம் ஓட்டுக்காக அரசியல் தலைவர்கள் முன்னின்று ஆதரவு தருவது இப்போதைக்கு உடனே குறைய வேண்டும் என்பதே மக்களில் நடுநிலை விரும்பிகளின் ஆவல்..! (பிற்சேர்க்கை முற்றும்)"பிறந்தநாள்" என நாம் தவறாக சொல்வது... "பிறந்ததினத்தின் வருடாந்திர நினைவுநாள்" என்பதே சரியாக இருக்கும் என நான் சொல்கிறேன். பார்ப்போம் இன்னொரு உதாரணம்..!
நீங்கள் ஒரு ஞாயிறு அன்று திருமணம் புரிந்து உள்ளீர்கள் என்று வைப்போம். அடுத்த வாரம் அதே ஞாயிறு வருமா..? வரும்..! இன்னிக்கு உங்கள் 'கல்யாண நாளா'...? இல்லை..! "வாராந்திர திருமண நினைவு நாள்". (ஒவ்வொரு வாரமும் துட்டு செலவாகும்னு இதை கொண்டாடுவதில்லையோ)..!
அடுத்த மாதம் அதே தேதி வருமா..? வரும்..! இன்று 'கல்யாண நாளா'..? இல்லை..! "மாதாந்திர திருமண நினைவு நாள்".(ஒவ்வொரு மாதமும் துட்டு செலவாகும்னு இதையும் கொண்டாடுவதில்லையோ)..!
அடுத்த வருடம் அதே மாதம்.. அதே நாள்.. வேறு கிழமையில் வரும்..! இது 'கல்யாண நாளா'..? இல்லையாம்..! வேறு என்னவாம்..? "வருடாந்திர திருமண நினைவு நாள்". [பிப்ரவரி 29 விதிவிலக்கு :-( 'லீப் வருடாந்திர திருமண நினைவு நாள்'.-இப்படி வந்தா நான்கு வருஷத்தில் ஒருமுறை கொண்டாட்டம். பணம் ரொம்ப மிச்சம்... ஆனால், வருஷா வருஷம் வயசு மட்டும் ஏறுமாம்..! :-)) But, rich people celebrate every year...no logic..!] ஆனால்... முன்பு கல்யாணத்தன்று சொன்ன "wish you happy wedding day..." ஐ தம்பதிகளுக்கு இன்று எவரும் சொல்வதில்லை...! கவனியுங்கள் சகோ..! இதை உலகமே சரியாக புரிந்து வைத்து இருக்கிறது. அதனால்தான்..."wish you happy annual wedding anniversary..!" என்கிறார்கள்...!
ஆனால், ஏனோ... வருஷா வருஷம் 'பிறந்த நினைவு நாளுக்கு'... "wish you happy birth anniversary" என்று ஒருவரும் சொல்வதில்லை..! "wish you happy birthday" என்கிறார்கள்..! ஏதோ... 'அன்று அவர் மீண்டும் பிறந்துவிட்டார்' என்பது போல..! இதை ஆயுசுக்கு ஒருமுறைதான் ஒருத்தர் கிட்டே சொல்ல முடியும். அதாவது அவர் பொறந்த அன்றைக்கு மட்டும்..!
வேண்டுமானால்... ஒவ்வொரு வருஷமும் சென்று... உங்கள் குழந்தையின் "annual birth anniversary" அன்று, குழந்தை பிறந்த மருத்துவ மனையில் உள்ள மகப்பேறு மருத்துவரை அணுகி, "இன்னிக்கி எம்புள்ளைக்கு பொறந்தநாளு... birth certificate கொடுங்கன்னு" கேட்டால் என்ன நடக்கும்...?
ரெண்டு வருஷம் திட்டி அனுப்பிட்டு... மூணாவது வருஷம் போயி கேட்டீங்கன்னா மனநல மருத்துவமனையில் சேர்த்து விடுவார்கள். இல்லையா..? ஹா...ஹா...ஹா... ஆக, பிறப்புச்சான்றிதழ் வருஷா வருஷம் தருவதில்லை..! உங்கள் birth day பூர்த்தி செய்ய வேண்டிய இடத்தில்... மறக்காமல் நீங்கள் பிறந்த ஆண்டைத்தான் போடுவீர்களே அன்றி, "இந்த வருஷத்திய(?)பிறந்தநாளை" போடுவதில்லை..!
வேண்டுமானால்... ஒவ்வொரு வருஷமும் சென்று... உங்கள் குழந்தையின் "annual birth anniversary" அன்று, குழந்தை பிறந்த மருத்துவ மனையில் உள்ள மகப்பேறு மருத்துவரை அணுகி, "இன்னிக்கி எம்புள்ளைக்கு பொறந்தநாளு... birth certificate கொடுங்கன்னு" கேட்டால் என்ன நடக்கும்...?
ரெண்டு வருஷம் திட்டி அனுப்பிட்டு... மூணாவது வருஷம் போயி கேட்டீங்கன்னா மனநல மருத்துவமனையில் சேர்த்து விடுவார்கள். இல்லையா..? ஹா...ஹா...ஹா... ஆக, பிறப்புச்சான்றிதழ் வருஷா வருஷம் தருவதில்லை..! உங்கள் birth day பூர்த்தி செய்ய வேண்டிய இடத்தில்... மறக்காமல் நீங்கள் பிறந்த ஆண்டைத்தான் போடுவீர்களே அன்றி, "இந்த வருஷத்திய(?)பிறந்தநாளை" போடுவதில்லை..!
அதேபோல, ஒருவர் இறந்த வருடாந்திர நாளை "நினைவுநாள்" என சரியாக சொல்கிறார்கள்..! "இறந்தநாள்" .... 'Death Day' என்பதில்லை..! 'Annual Death Anniversary' என்றுதான் ஆங்கிலத்திலும் சொல்வார்கள்..!
அதேபோல, பிறந்த தேதியும் "வருடாந்திர நினைவு நாள்" தானே...? இப்போது புரிகிறதா..?
.
ஆகஸ்ட் 15 அன்னிக்குத்தான் independence day..! அடுத்த வருஷத்திலேருந்து... 'Anniversary' என்றுதான் சொல்ல வேண்டும்....! அதேபோலத்தான், ஒவ்வொருவருடமும் 'Republic Day' என சொல்லாமல் "குடியரசுபிறந்த நினைவுநாள்" என்று சொல்ல வேண்டும்..! நாம்தான் தப்பான பெயர் வைத்துகொண்டு சரி என்று நினைக்கிறோம்..! என்றைக்கு சிந்தித்து சரி செய்து கொள்ளப்போகிறோம்...?
ஆகவே... ஒரு மனிதருக்கு வாழ்வில் ஒரே ஒருநாள்தான் பிறந்தநாள் வரமுடியும். அதேபோல ஒரே ஒருநாள் மட்டுமே இறந்தநாள் வரமுடியும். இறந்தநாளின் நினைவுநாள் அனுஷ்டிப்பது போல பிறந்தநாளின் நினைவுநாள் அனுஷ்டிப்பதே லாஜிக்..! அல்லாது... "பிறந்தநாள்" என்றால் அது லாஜிக் மீறிய மூடத்தனமே..!
சரி, இனியாவது... "இன்னிக்கு எனக்கு பிறந்தநாள்" என வருஷா வருஷம் முட்டாள்த்தனமாக சொல்லிக்கொண்டு இருக்காமல்... "பிறந்தநாளின் நினைவுநாள்" என அதைகொண்டாடுவோர் சொல்லட்டுமாக..!
ஆக மொத்தத்தில்... உயிரோடு வாழ்வதே சாதனையாக நினைப்போர்... அதை ஒவ்வொரு நாளும், வாரமும், மாதமும் கொண்டாடாமல் வருஷாவருஷம் மட்டுமே கொண்டாடுகிறார்கள் என வைத்துக்கொண்டால்...
ஆகவே... ஒரு மனிதருக்கு வாழ்வில் ஒரே ஒருநாள்தான் பிறந்தநாள் வரமுடியும். அதேபோல ஒரே ஒருநாள் மட்டுமே இறந்தநாள் வரமுடியும். இறந்தநாளின் நினைவுநாள் அனுஷ்டிப்பது போல பிறந்தநாளின் நினைவுநாள் அனுஷ்டிப்பதே லாஜிக்..! அல்லாது... "பிறந்தநாள்" என்றால் அது லாஜிக் மீறிய மூடத்தனமே..!
சரி, இனியாவது... "இன்னிக்கு எனக்கு பிறந்தநாள்" என வருஷா வருஷம் முட்டாள்த்தனமாக சொல்லிக்கொண்டு இருக்காமல்... "பிறந்தநாளின் நினைவுநாள்" என அதைகொண்டாடுவோர் சொல்லட்டுமாக..!
ஆக மொத்தத்தில்... உயிரோடு வாழ்வதே சாதனையாக நினைப்போர்... அதை ஒவ்வொரு நாளும், வாரமும், மாதமும் கொண்டாடாமல் வருஷாவருஷம் மட்டுமே கொண்டாடுகிறார்கள் என வைத்துக்கொண்டால்...
இஸ்லாத்தில் இதுபோல இறப்புக்கும் பிறப்புக்கும் 'வருடாந்திர நினைவு நாள்' துக்கமாக இருப்பதோ அல்லது கொண்டாடுவதோ கிடையாது. இறந்த அன்றும் அடுத்த இரண்டு நாள் மட்டும் துக்கம் அனுஷ்டிக்கலாம். குழந்தை பிறந்த அன்று ஆடு அறுத்து 'அகீகா' விருந்து போட்டு (மூன்றில் ஒரு பங்கை ஏழைக்கு கொடுத்து ) கொண்டாடலாம்..!
ஆனால், 'அடுத்த வருடம் மீண்டும் ஆடு அறுக்கனுமா' என்றால்... கிடையாது..! ஏன்..?
இவ்விஷயத்தில் இஸ்லாம் தெளிவாகவே இருக்கிறது. மனிதனுக்கு பிறந்தநாள் ஆயுளுக்கு ஒருமுறைதான் வரும் என்று..! அதேபோல... மனிதனுக்கு ஆயுளுக்கு இறந்த நாள் என்பதும் ஒரே ஒரு முறைதான்..!
இஸ்லாத்தில், பிறந்ததுக்கு நினைவு நாள் இல்லாதது போலவே இறந்ததுக்கும் நினைவு நாள் கிடையாது..!
.
பகுத்தறிவாளர்களுக்கான மிகவும் தெளிவான வாழ்வியல் மார்க்கம் இஸ்லாம்..!
எனவே... வருஷாவருஷம் பிறந்தநாள் என்பது... முட்டாள்த்தனம் என்பதால்... அறிவாளிகள் எவருமே பிறந்தநாள் கொண்டாடக்கூடாது. பிறந்ததுக்கும் இறந்தந்துக்கும் வருடாந்திர நினைவுநாள் அனுஷ்டிப்பதில் ஒரு லாஜிக் இருக்கிறது என ஏற்றுக்கொண்டாலும்.... இதை முஸ்லிம்கள் மட்டும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். காரணம், இது இஸ்லாத்தின் வழிகாட்டால் இல்லை என்பதால்..!
ஆனால், இன்றுள்ள விபரம் அறியாத முஸ்லிம்கள் நபியின் இறந்த நாளை, பிறந்த நாள் எனத்தவறாக எண்ணிக்கொண்டு, மவ்ளூது பாடி.. பெரியசட்டி ஹந்திரி புலவ் சோறாக்கி.. 'சந்தோஷமாக'(!) வருடா வருடம் கொண்டாடும் மட்டமான மூடத்தனத்துக்கும்.... இஸ்லாமிற்கும் துளிக்கூட சம்பந்தம் கிடையாது..! சிலர் இது இறந்த நாள் என்று தெரிந்து அதற்காக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினாலும் அல்லது அன்று துக்க தினம் எனக்கூறி கருப்பு சட்டை போட்டு/கருப்பு ரிப்பன்துண்டை சட்டையில் குத்தி கண்ணை கசக்கி மூக்கை சிந்தினாலும் அதுவும் இஸ்லாத்தில் இல்லாத மூடத்தனமே..!
இதைவிட பெரிய மூடத்தனம்தான்... முஸ்லிம்கள்... கிரிகோரியன் ஆண்டில் 365 அல்லது 366 நாட்கள் ஆன பின்னர் தங்களுக்கு ஒரு வயசு முடிந்ததாக நம்புவது என்பது, அல்லாஹ் சொன்ன காலண்டருக்கு முற்றிலும் எதிரானது மட்டுமின்றி இறைவசன மறுப்பாகும். ஏனெனில், முஸ்லிம்களின் வயது குறித்த தம் நம்பிக்கை சந்திர காலண்டர் அடிப்படையில்தான் அமைந்ததாக இருத்தல் வேண்டும்..!
எனவே... வருஷாவருஷம் பிறந்தநாள் என்பது... முட்டாள்த்தனம் என்பதால்... அறிவாளிகள் எவருமே பிறந்தநாள் கொண்டாடக்கூடாது. பிறந்ததுக்கும் இறந்தந்துக்கும் வருடாந்திர நினைவுநாள் அனுஷ்டிப்பதில் ஒரு லாஜிக் இருக்கிறது என ஏற்றுக்கொண்டாலும்.... இதை முஸ்லிம்கள் மட்டும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். காரணம், இது இஸ்லாத்தின் வழிகாட்டால் இல்லை என்பதால்..!
பின்னூட்டமிடுமுன்... ஒரு முக்கிய டிஸ்கி :-
ஹிஜ்ரீ 357 முதல் 567 வரை எகிப்தை ஆண்ட ஃபாத்திமியீன்களின் ஆட்சியில் அப்துல்லாஹ் பின் மைமூன் அல் கதாஹ் என்ற யூதனால், இஸ்லாத்தின் பெயரால் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் இறந்தநாளான ரபியுல் அவ்வல் 12-ஐ அப்பாவி முஸ்லிம் மக்களை 'மகிழ்ச்சியாக(?) கொண்டாட' வைக்கும் பொருட்டு, மிக நயவஞ்சகமாக "பிறந்த நாள் விழா" அல்லது "மிலாடி நபி" என்ற பெயரில் பித்அத் புகுத்தப்பட்டது. (ஆதார நூல் : பிதாயா வன் நிஹ்யா பாகம் 11 பக்கம் 172).ஆனால், இன்றுள்ள விபரம் அறியாத முஸ்லிம்கள் நபியின் இறந்த நாளை, பிறந்த நாள் எனத்தவறாக எண்ணிக்கொண்டு, மவ்ளூது பாடி.. பெரியசட்டி ஹந்திரி புலவ் சோறாக்கி.. 'சந்தோஷமாக'(!) வருடா வருடம் கொண்டாடும் மட்டமான மூடத்தனத்துக்கும்.... இஸ்லாமிற்கும் துளிக்கூட சம்பந்தம் கிடையாது..! சிலர் இது இறந்த நாள் என்று தெரிந்து அதற்காக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினாலும் அல்லது அன்று துக்க தினம் எனக்கூறி கருப்பு சட்டை போட்டு/கருப்பு ரிப்பன்துண்டை சட்டையில் குத்தி கண்ணை கசக்கி மூக்கை சிந்தினாலும் அதுவும் இஸ்லாத்தில் இல்லாத மூடத்தனமே..!
இதைவிட பெரிய மூடத்தனம்தான்... முஸ்லிம்கள்... கிரிகோரியன் ஆண்டில் 365 அல்லது 366 நாட்கள் ஆன பின்னர் தங்களுக்கு ஒரு வயசு முடிந்ததாக நம்புவது என்பது, அல்லாஹ் சொன்ன காலண்டருக்கு முற்றிலும் எதிரானது மட்டுமின்றி இறைவசன மறுப்பாகும். ஏனெனில், முஸ்லிம்களின் வயது குறித்த தம் நம்பிக்கை சந்திர காலண்டர் அடிப்படையில்தான் அமைந்ததாக இருத்தல் வேண்டும்..!
50 ...பின்னூட்டங்கள்..:
பிறந்தவங்களுக்கு மட்டுமல்லாது, இறந்தவங்களுக்கும் கொண்டாடுறாங்க,
நல்ல பதிவு சகோ ...
எனக்கும் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் நம்பிக்கை இல்லை, ஆனால் இன்று உள்ள தனி தனி குடும்ப வாழ்க்கையில் யாருக்கும் யாரிடமும் ( காரணமின்றி ) பேச நேரமில்லாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கையில் இந்த மாதிரியான கந்தூரிகள், மடத்தனமான "சிறப்பு நாட்கள்" தான் அவர்களை சந்திக்க வைக்கிறது !
அமெரிக்கர்களின் தனி மனித சுதந்திர வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் கூடி குலாவ மாட்டோமா என்று அதற்கென்று ஒரு நாளை நிர்ணயத்து கொண்டாடி வருகிறார்கள்,. என்றும் கூடி வாழ்ந்து தொலைத்திருந்தால் இந்த மாதிரியான நாட்கள் தேவையில்லை. இது குறித்து விரிவாக ஒரு நாள் எழுதுகிறேன். ' ஒரு நாள்' என்று ஒன்றை நிர்ணயத்து கொண்டாடுவதை ஆதரிக்காத அதே வேலையில், மற்ற உறுவுகளை பேணுவதில் மட்டும் சரியாகவா இருக்கிறோம் என்ற சுய பரிசோதனையே முக்கியம், காரணம் நிறைய பிரச்சனைகளில் நேரடி ஒரு காரணங்கள் இல்லை, மறைமுகமாக நிறைய காரங்கள் உண்டு, நீயா நானாவில் அலசுவதை போல் அலச வேண்டி இருக்கிறது .
எனது உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் முடிந்த அளவிற்கு ஞாபகம் வைத்து வாழ்த்து சொன்னதுண்டு, அதில் அவர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி " நான் அவர்களை ஞாபகம் வைத்திருப்பது குறித்துதான்" - இன்ற கால கட்டத்தில் எனது நெருங்கிய உறவினருக்கு போன் செய்தால் " சொல்லுப்ப்பா என்னை விஷயம் என்றுதான் கேட்பார்கள்", சும்மாதான் என்று சொன்னால், பேசி முடிந்து வைத்தபின் " ஷர்புதீன் இன்னைக்கு எதற்கு போன் செய்தான் என்று மண்டை முடி உதிரும் வரை யோசிப்பார்களே தவிர, அப்படியே விடமாட்டார்கள்,. காரணமின்றி அண்ணன் தம்பிகள் கூட இன்றைய வாழ்க்கையில் பேசிகொள்வதில்லை- இது குறித்து நீண்ட ஒரு பதிவு எழுத கூட ரெடி,! எழுதவா?
பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தோன்றியதை குறித்த எனது ஒரு பார்வை இப்படி வருகிறது -
பேனும், லைட்டும் இருக்கிற தைரியத்தில் தான் நிறைய சிறிய சிறிய வீடுகளில் மனிதர்கள் வாழ்கிறார்கள். மனிதர்கள் அதிகமானதால் இந்த கண்டுபிடிப்புகள் வந்தததா, இவை இருப்பதால் மனிதர்கள் அதிகமானார்களா?
சிந்திக்கவேண்டிய ஒரு கருத்தை சொல்லியிருக்கிறிங்க ஆஷிக்.
டிஸ்கிய படிக்காட்டி வேற ஒரு பதில் குடுத்திருப்பேன் ...வடை போச்சே....!! :-)))
சரி...வந்ததுக்கு ஒன்னும் சொல்லாம போகக்கூடாது இல்லையா...வரலாறு ரொம்ப முக்கியம் :-)))
இந்த கேக்...வடை , பாயாசத்துக்கு மேலே மெழு வர்த்திய மட்டும் இன்னும் ஏன் வச்சி ஊதிகிட்டு இருக்காங்க ...நாகரீகம்தான் மேலே வநதுடுச்சே ஒரு ஊசி வெடி , பாம் , கெரசின் விளக்கு , L E D லைட்டுன்னு இதை எல்லாம் வைக்கிறதில்லை ..
இதை பத்தி பதிவுல ஒன்னுமே சொல்லலையே ஹி...ஹி... :-)))
இஸ்லாமிய மக்கள்மத்தியில் இருக்கும் தவறுகளையும் சுட்டிக்காட்டும் உங்கள்போன்றவர்கள் வெளி உலகிற்கு தெரியவருவது குறைவு. அதனாலேயே இஸ்லாமியர் என்றாலே அனைவரும் பிற்போக்குத்தனமானவர்கள் என்ற எண்ணம் ஏனைய தரப்பு மக்களிட்ம் அதிகமாக பரவியுள்ளது. Hats off Asahik
நபிகளாரின் போதனைகளை நம் வாழும் ஒவ்வொரு வினாடியும் பின் பற்றினாலே போதும் அவர்களை கண்ணியப்படுத்துவதற்கு.
தெளிவான பதிவு.
ஜஸக்கல்லாஹ்..
சலாம் சகோ ஆஷிக்!
மீலாது நபி கொண்டாடுவது தவறு என்பவர்கள் தனது மகனுக்கோ மகளுக்கோ பிறந்த நாள் கேக் வெட்டுகிறார்கள். இதை எனது சொந்தத்திலேயே பார்த்தேன்.
சிந்திக்க வைக்கும் பதிவு. பகுத்தறிவாளர்களும் சற்று சிந்திக்க வேண்டும்.
சலாம் சகோ
////"wish you happy birthday to you"//
நாங்களாம் " happy birthday to you"ன்னு தான் பாடுவோம். ஹி...ஹி...ஹி..
சரியா சொன்னீங்க :-)
@தமிழ்நுட்பம்வருகைக்கும் பயனுள்ள சுட்டிகளுக்கும் மிக்க நன்றி சகோ.தமிழ்நுட்பம்.
@நட்புடன் ஜமால்வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.நட்புடன் ஜமால்.
@ஷர்புதீன்//எனக்கும் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் நம்பிக்கை இல்லை////---நன்றி சகோ.
//...மடத்தனமான "சிறப்பு நாட்கள்" தான் அவர்களை சந்திக்க வைக்கிறது !////---சிந்திக்கவும் வைக்கிறது..!
//ஒரு நாள் கூடி குலாவ மாட்டோமா////---நல்ல விஷயம். நாம்தான் இதற்கு முக்கியமாக நேரம் ஒதுக்கி முயற்சிக்க வேண்டும் சகோ, பாக்கிஸ்தானிகள்-பங்களாதேஷிகள் போல..!
இங்கே சவூதியில் இருப்போருக்கு தெரியும். சுற்றுவட்டாரத்தில் உள்ள பாக்கி-பங்காளி அனைவரும் வெள்ளிக்கிழமை அன்று மாலை ஜித்தா-ரியாத்-தம்மாம்-ஜுபைல் ஆகிய ஊரின் மையத்தில் ஒன்று கூடி கதை அடிப்பார்கள். பார்க்கிங், சாலையின் ஓர நடை பாதை, சாலை மைய மேடை என எங்கும் புற்றீசல் போல வியாபித்து... பார்க்க ஏதோ எகிப்து தஹ்ரீர் சதுக்கம் போலவே வாரா வாராம் டிராஃபிக் ஆகும். இப்படி ஐந்தாறு மணிநேரம் எல்லாரும் எல்லாரிடமும் ஒரு ரவுண்டு
நின்றுகொண்டே...
பேசிக்கொண்டே...
நின்றுகொண்டே...
பேசிக்கொண்டே...
நின்றுகொண்டே...
பேசிக்கொண்டே...
இருப்பார்கள்..!
///ஷர்புதீன் இன்னைக்கு எதற்கு போன் செய்தான் என்று மண்டை முடி உதிரும் வரை யோசிப்பார்களே தவிர, அப்படியே விடமாட்டார்கள்,///---உங்க கமெண்டை பார்த்த உடனே எனக்கு என்ன தெரியுமா தோனுச்சு..? உண்மைய சொல்றேன்..!
வழக்கமா ஸ்மைலி போடறவரு இவ்ளோ எழுதி இருக்காரேன்னு திகீர் என்று ஆகிவிட்ட்டது..! :-))
//இது குறித்து நீண்ட ஒரு பதிவு எழுத கூட ரெடி,! எழுதவா?//--ம்ம்ம் எழுதுங்க சகோ..! நல்ல விஷயம் தானே..!
அப்புறம், மனிதர்கள் அதிகமாகாவிட்டால் வேறு புதிய கண்டுபிடிப்புகள் வராது சகோ.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஷர்புதீன்.
//இங்கே சவூதியில் இருப்போருக்கு தெரியும். சுற்றுவட்டாரத்தில் உள்ள பாக்கி-பங்காளி அனைவரும் வெள்ளிக்கிழமை அன்று மாலை ஜித்தா-ரியாத்-தம்மாம்-ஜுபைல் ஆகிய ஊரின் மையத்தில் ஒன்று கூடி கதை அடிப்பார்கள். பார்க்கிங், சாலையின் ஓர நடை பாதை, சாலை மைய மேடை என எங்கும் புற்றீசல் போல வியாபித்து... பார்க்க ஏதோ எகிப்து தஹ்ரீர் சதுக்கம் போலவே வாரா வாராம் டிராஃபிக் ஆகும். இப்படி ஐந்தாறு மணிநேரம் எல்லாரும் எல்லாரிடமும் ஒரு ரவுண்டு
நின்றுகொண்டே...
பேசிக்கொண்டே...
நின்றுகொண்டே...
பேசிக்கொண்டே...
நின்றுகொண்டே...
பேசிக்கொண்டே...
இருப்பார்கள்..! //
வடிவேல் : "இது அதற்க்கு பதில் இல்லையே!!?"
தூரத்தில் ( வெளிநாடுகளில்) இருந்தால் அப்படிதான் பேச மனம் விரும்பும்.
@ஷர்புதீன்//தூரத்தில் (வெளிநாடுகளில்) இருந்தால் அப்படிதான் பேச மனம் விரும்பும்.//
---சரியே..!
//"இது அதற்க்கு பதில் இல்லையே!!?"//
---:-)(-:
@அம்பலத்தார்//இஸ்லாமியர் என்றாலே அனைவரும் பிற்போக்குத்தனமானவர்கள் என்ற எண்ணம் ஏனைய தரப்பு மக்களிட்ம் அதிகமாக பரவியுள்ளது.// ---இதுபோன்ற நச்சுக்கருத்துக்கள் நான் பார்த்தவரை வேண்டுமென்றே மேற்குலகினரால் பரப்பப்பட்டு வருகிறது சகோ.அம்பலத்தார். ஆனால், உண்மை அதுவல்ல.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.அம்பலத்தார்.
@ஜெய்லானி///ஒரு ஊசி வெடி , பாம் , கெரசின் விளக்கு , L E D லைட்டுன்னு இதை எல்லாம் வைக்கிறதில்லை .. இதை பத்தி பதிவுல ஒன்னுமே சொல்லலையே ஹி...ஹி... :-)))///
---ஆஹா... கெட்டுது போங்க... :-))
சகோ.............
இந்த பதிவே அது வேணாம்னுதானே........
நீங்க என்னடான்னா, இன்னும் அதை 'டெக்னிகலா மாடர்னைஸ்' பண்ண சொல்லலியேன்னு கேக்கறீங்க..! ம்ம்ம்.. நான் வேற என்ன சொல்ல..?
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஜெய்லானி.
@தாஜுதீன்//நபிகளாரின் போதனைகளை நம் வாழும் ஒவ்வொரு வினாடியும் பின் பற்றினாலே போதும்//---அவர்களை கண்ணியப்படுத்துவதற்கு இதை விட வேறு சிறந்த வழி இல்லை என்று சரியாக சொன்னீர்கள் சகோ.தாஜுதீன்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.தாஹுதீன்.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
ம்ம்ம்ம்... அறியாத மக்களிடம் நிறைய தெளிவு படுத்த வேண்டியுள்ளது சகோ. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@ஆமினாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
///நாங்களாம் " happy birthday to you"ன்னு தான் பாடுவோம்.///---ஓஹோ... அப்போ 'விஷ்' பண்ண மாட்டீங்களாக்கும்ம்ம்... :-))
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஆமினா.
நல்ல அலசல் சகோதரரே. தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறை கடலுக்குச்சென்று திரும்பும்வரை (இலங்கை ராணுவம் கொன்றுவிடுமோ என்ற அச்சத்தால்) கரையில் இருக்கும் அவர்தம் உறவினர்கள் "செத்து செத்து" பிழைக்கிறார்களே! அதற்கு என்ன பெயரில் வாழ்த்துவது?)
அப்புறம், செத்துப்பிழைத்தவர்களுக்கு முதலில் பிறந்த தினம் கொண்டாடனுமா? நினைவு தினம் கொண்டாடனுமா?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மாஷா அல்லாஹ் ..
அழகிய பதிவு -என்பதை விட பொட்டில்
அறைந்தார்போல் ஓர் பதிவு!..
இஸ்லாத்தில் இல்லாத பிறந்த -திருமண & எக்ஸ்ட்ரா கொண்டாட்ட தினங்களை குறித்த விழிப்புணர்வு சமூகத்திற்கு மீண்டுமொரு முறை உங்களால் உரக்க சொல்லப்பட்டு இருப்பதில் மகிழ்ச்சி.!
இங்கே ஏனையோருக்கு ஒரு சிறிய நினைவூட்டல்
இங்கு லைக் இடவும், வாக்களிக்கவும், ஆதாரித்து பின்னூட்டமிடவும் செய்யும் நாம்.. இந்த பதிவிற்கு அங்கீகாரம் அளிப்பதற்காக மட்டும் அதை செய்யவில்லை. இப்பதிவு சொல்லும் கருத்தை ஏற்பதாலும் தாம்!
நம் நிஜ வாழ்வில் கடந்து போகும் இதைப்போன்ற தருணங்களில் நம் பிறந்த நாளை கொண்டாமல் இருந்தோமா... பிறர் கொண்டாடியதற்கு ஆதரவு தெரிவிக்காமல் இருந்தோமோ என நிதர்சனமாக நினைத்து பார்ப்பதும் இந்த நேரத்தில் மிக முக்கியமான ஒன்றாகும்.
அது தான் இந்த பதிவின் நோக்கமாகவும் இருக்கும்!
ஒருவேளை
கடந்து போன கணங்களில் மேற்கண்டவற்றை செய்திருந்தாலும் இது தவறேன உணர்ந்து இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் இதைப்போன்ற "மூடத்தனமான" அறிவிற்கு பொருந்தாத தவறுகளை செய்யாமல் தவிர்ப்போம்!
அதையும் தாண்டி இதைப்போன்ற பதிவிற்கு ஆதரவும் அளித்து, நாளை கொண்டாட்டங்கள் என்ற பெயரில் அறிவற்ற செயல்களுக்கு உடன்பட்டால்..
நமது இரட்டை நிலைக்கு அல்லாஹ்விடம் நிச்சயமாக பதில் சொல்லியாக வேண்டும்.
அப்படிப்பட்ட நிலையிருந்து முதலில் என்னையும் பின் உங்களையும் அல்லாஹ் காத்தருள்வானாக!
குறிப்பு:பின்னூட்டவாதி இந்த பின்னூட்டத்திற்கு உடன்பட்டால் மட்டும் வெளியிடவும்.
பதிவு சற்று வித்தியாசமாக இருந்தாலும், டிஸ்கி பயனுள்ளதாக இருந்தது. அருமையான பதிவுகளை தொடர்ந்து அளித்து வருகிறீர்கள்....என்னால் அனைத்தையும் படிக்க முடியவில்லை.....தொடரட்டும் தங்கள் பணி.....
ஸலாம் சகோ
காலம் திரும்பாது என்பதனால் பிறந்தநாள் திருமணநாள் இறந்தநாள் போன்றவை அறிவுப்பூர்வமாக இல்லை அதனால் அதை நினைத்து கொண்டாடுவது மடத்தனம் என்பது இப்பதிவின் மையா கருத்து.
ஒவ்வொரு வருடமும் லைலத்துல் கதிர் இரவை நோன்பின் கடைசி பத்தில் தேடுகிறோமே.நபி ( ஸல் ) அவர்கள் சொல்லி இருப்பதினால் நாம் தேடுகிறோம். காலம் திரும்பவில்லை எனில் லைலத்துல் கதிர் இரவு வருடம் தோரும் எவ்வாறு வரும் ? எனக்கு ரொம்ப நாள சந்தேகம் இது பற்றி விளக்கம் தெரிந்தவர்கள் சொல்லலாமே. பிறந்தநாள் கொண்டாடுவது எனக்கு உடன் பாடு இல்லை ஆனால் அப்படி ஒருநாளே வராது என்பதில் தான் சந்தேகம்
அஸ்ஸலாமுஅலைக்கும் சகோ!
எத்தனை தான் விளக்கம் கொடுத்தாலும் educated என்று தங்களைத்தாமே சொல்பவர்களும் இந்த மூடத்தனத்தை விட்டு விலக முயற்சிப்பதாய் தெரியவில்லையே! இந்த பதிவை படித்த பின்னும் தங்கள் மூடத்தனத்திலேயே காலம் கடத்துவோம் என்ரிருப்பார்களானால் ஆறறிவு கொண்டவர்கள் என தகுதியற்றவர்கள் என்று முத்திரை குத்துவோம்.
பிறந்தநாள் கொண்டாடுவது என்பது பிற்போக்குத்தனம். மிக நல்ல அறிவுப்பூர்வமான வாதங்களுடன் அமைந்த இடுகை. ஜெயலலிதாவும்தான் பெரியாருக்கு மாலை போடுறார். கும்பிடுறார். ஆளுங்கட்சி என்பதால் பயந்து அவரை விட்டுட்டீர்கள். நக்கீரன் ஆபீஸ் அடிபட்ட சம்பவம் நினைவுக்கு வந்துடச்சுதாயிருக்கும்.
பொதுவாக அனைத்து விஷயங்களையும் சமநீதியோடு சொல்லி இருப்பது நேர்மை.
ஆனாலும் ஒரு குறை உண்டு.
நீங்கள் சொன்ன பிறந்தநாட்கள் இறந்த நாட்கள் எல்லாத்திலேயும் தமிழகம் அமைதிப்பூங்காதான்.
முன்பு இம்மாநுவேல் சேகரன் குருபூஜையை எதிர்த்து தேவையா அது எண்டு நல்ல பதிவு போட்திருந்தீர்கள்.
ஆனால், இங்கே தேவர் ஜெயந்தி-குருபூஜையை பற்றி குறிப்பிட வாய்ப்பு இருந்தும் புள்ளி புள்ளியா வைத்த்து தவித்து விட்டுவிட்டீர்கள்.
அதையும் சொல்லி இருந்தால் முழுமை பெற்று இருக்கும் இந்த கட்டுரை.
ப்ச்ச் v . ,.
சலாம் சகோ முஹம்மது ஆசிக்,
வழக்கம் போல், அருமையான சமுதாய சிந்தனை உள்ள பதிவு. கலக்குறீங்க சகோ. வாழ்த்துக்கள்.
சகோ,
நீங்கள் எப்பொழுதும் நன்றாக சிந்திப்பீர்கள் என தெரியும்.
ஆனால் இந்த சிந்தனையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் பிறந்த நாள் கொண்டாடுவதில்லை. அதே நேரத்தில் சர்புதின் கூறியது போல இந்த இயந்திர உலகில் மனிதர்கள் ஒன்று கூட, மகிழ்ச்சியாக இருக்க இது வாய்ப்பாக அமைகிறது. அவர்கள் கொண்டாடிவிட்டு போகட்டுமே. வேண்டும் என்றால் அரசியல் தலைவர்களின் கொண்டாட்டங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க முயலுங்கள்.
நீங்கள் சொல்லும் இதே நினைவு நாள் தான் ரம்ஜானும், பக்ரீதும் அதையும் தடை செய்வீர்களா?
சகோ எல்லாவற்றையும் மதம் கொண்டு பார்க்காதீர்கள் மனிதம் கொண்டு பாருங்கள்.
நன்றி
பிறந்தநாள், கல்யாணநாள், இறந்தநாள் கொண்டாட்டங்கள் பகுத்தறிவுக்கும், மார்க்கத்திற்கும் எதிரானது என்பதை அழகாக எடுத்துரைத்திருக்கிறீர்கள்.
சத்தியத்தை சத்தியம் என்று அறிந்து அதன்படி நல்ல செயல்கள் செய்யவும் அசத்தியத்தை அசத்தியம் என்று அறிந்து அதனை விட்டு தூர விலகி இருக்கவும் வல்ல் இறைவனை இறைஞ்சுகிறேன்.
@அதிரைக்காரன் ஹா...ஹா...ஹா... மெய்யாக செத்து பிழைத்தவர் எவரேனும் உண்டா சகோ..? வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் வித்தியாசமான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.அதிரைக்காரன்.
@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
"உடன்பட்டேன்;வெளியிட்டேன்"
///கடந்து போன கணங்களில் மேற்கண்டவற்றை செய்திருந்தாலும் இது தவறேன உணர்ந்து இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் இதைப்போன்ற "மூடத்தனமான" அறிவிற்கு பொருந்தாத தவறுகளை செய்யாமல் தவிர்ப்போம்!///---- அருமையான கருத்து.
///அதையும் தாண்டி இதைப்போன்ற பதிவிற்கு ஆதரவும் அளித்து, நாளை கொண்டாட்டங்கள் என்ற பெயரில் அறிவற்ற செயல்களுக்கு உடன்பட்டால்..
நமது இரட்டை நிலைக்கு அல்லாஹ்விடம் நிச்சயமாக பதில் சொல்லியாக வேண்டும்.///---மிக தைரியாமான கருத்து.
///அப்படிப்பட்ட நிலையிருந்து முதலில் என்னையும் பின் உங்களையும் அல்லாஹ் காத்தருள்வானாக!///---ஆமீன்..!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் சிறப்பான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.குலாம்.
@abd shamதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.abd sham.
@Rabbaniஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//காலம் திரும்பாது என்பதனால் பிறந்தநாள் திருமணநாள் இறந்தநாள் போன்றவை அறிவுப்பூர்வமாக இல்லை அதனால் அதை நினைத்து கொண்டாடுவது மடத்தனம் என்பது இப்பதிவின் மையா கருத்து.//---சரியான புரிதல்..!
///காலம் திரும்பவில்லை எனில் லைலத்துல் கதிர் இரவு வருடம் தோரும் எவ்வாறு வரும் ?///---தவறான புரிதல்..!
ஹிஜ்ரி வருடம் தோறும் ஒவ்வொரு வருஷத்துக்கான தனி ரமலான் பிறை 'பிறக்கிறது'.
அதற்கு அடுத்த மாதம் ஷவ்வால் பிறை 'பிறக்கும்' போது அவ்வருட ரமலான் பிறை 'இறந்து' விடுகின்றது.
அவ்வருடம் 'பிறந்த' ரமலானின் கடைசி பத்தில் ஒற்றைப்படை இரவுகள் ஐந்து 'பிறக்கின்றன'.
அவை அனைத்தும் அன்றே சூரிய உதயத்துக்கு முந்தி ஃபஜ்ர் நேரம் வந்தவுடன் 'இறக்கின்றன'.
அந்த ஐந்து இரவுகளில் ஒன்றைத்தான் லைலத்துல் கத்ர் என்றும் "1000 மாதங்களை விடச்சிறந்தது" என்றும் கூறி... நம்மை நிறைய அமல்செய்து மறுமைக்கான நன்மைகளை தேடச்சொல்கிறது இஸ்லாம்.
லைலத்துல் கதர் :-
இந்த ஒரு இரவுக்கு ஏன் இத்தனை சிறப்பு வந்தது என்றால்... அன்றுதான் குர்ஆனின் முதல் வார்த்தையான 'இக்ரஃ' இறங்கி கூடவே சில வசனங்கள் இறங்கின.
அன்றைத்தொடர்ந்து 23 வருடங்கள் வருடத்தின் பல நாட்களில் ஏனைய குர்ஆன் வசனங்கள் இறங்கின என்பதெல்லாம் உங்களுக்கு தெரிந்த செய்திதான் சகோ.ரப்பானி.
அதனால் ஒவ்வொரு வருடமும் லைலத்துல் கத்ர் பிறப்பதால் ஒவ்வொருவருடமும் அதனை நன்மைகளை தேடுகிறோம்..!
சென்ற வருடத்தில் நீங்கள் அடைந்தால் ஆயிரம் மாதங்கள் அம்லசெய்த நன்மையை பெற்றுக்கொள்வீர்கள்.
இவ்வருடமும் அடைந்தால்... இரண்டாயிரம், அடுத்த வருடமும் அடைந்தால்... மூவாயிரம் என்று மீட்டர் ஓடிக்கொண்டே இருக்கும் அல்லவா..?
இதன் மூலம் என்ன விளங்குகிறது...?
அது "பிறந்த நினைவுநாள்-anniversary அல்ல"... "உண்மையான actual பிறந்தநாள்" என்றுதானே..?
///பிறந்தநாள் கொண்டாடுவது எனக்கு உடன் பாடு இல்லை ஆனால் அப்படி ஒருநாளே வராது என்பதில் தான் சந்தேகம்///---பதிவிலேயே சொல்லி இருக்கிறேன் சகோ...
"மனிதனுக்கு பிறந்தநாள் ஆயுளுக்கு ஒருமுறைதான் வரும்..! அதேபோல... மனிதனுக்கு ஆயுளுக்கு இறந்த நாள் என்பதும் ஒரே ஒரு முறைதான்..!
இஸ்லாத்தில், பிறந்ததுக்கு நினைவு நாள் இல்லாதது போலவே இறந்ததுக்கும் நினைவு நாள் கிடையாது..!" ---இப்படி..!
வருடா வருடம் ஒருவர் இறந்து வருடா வருடம் பிறந்த நாள் அவருக்கு ஒவ்வொரு வருடமும் பிறந்தநாளும் இறந்தநாளும் வரும்..!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் சிந்திக்க வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.ரப்பானி.
@zalhaஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.zalha.
வழக்கம் போலவே பதிவில் அதிரடி மழை,
பதிவும், சகோக்களின் கருத்துக்களும் அருமையிலும் அருமை.
@The Elite Group
///பிறந்தநாள் கொண்டாடுவது என்பது பிற்போக்குத்தனம். மிக நல்ல அறிவுப்பூர்வமான வாதங்களுடன் அமைந்த இடுகை.///---நன்றி.
நான் எந்தக்கட்சியின் அனுதாபியும் அல்லன். யார் நல்லது செய்தாலும் பாராட்டுவேன். யார் கெட்டது செய்தாலும் வருந்தி கண்டனம் தெரிவிப்பேன்.
///ஜெயலலிதாவும்தான் பெரியாருக்கு மாலை போடுறார். கும்பிடுறார். ஆளுங்கட்சி என்பதால் பயந்து அவரை விட்டுட்டீர்கள்.///
---இல்லை. அதனால் விடவில்லை. "பகுத்தறிவு-நாத்திகம்..." என்று வீராப்பு பேசுபவர்கள் தான் எனக்கு சட்டென நியாபகத்துக்கு வந்தார்கள். அதனால்தான் அந்த படங்கள்.
காரணம்- 1992 மகாமகம் மற்றும் கரசேவைக்கு கற்களும் ஆட்களும் அனுப்பிய போது, முதல்வர் ஜெ. பற்றி என் ஆழ்மனதில் வேறொரு பிம்பம் நிலை பெற்றுவிட்டது.
எனினும், 'உங்கள் ஆசையையும் ஏன் கெடுப்பானேன்' என்று 'தேவர் ஜெயந்தியில்' அவரை சேர்த்து விட்டேன். ஓகேதானே..?
//நக்கீரன் ஆபீஸ் அடிபட்ட சம்பவம் நினைவுக்கு வந்துடச்சுதாயிருக்கும்.//---ஜெ. பற்றி சொன்னது எம்ஜிஆர்..! ஆனால், அதை ஜெ.சொன்னதாக சொல்லும் நக்கீரன் அட்டைப்பட தலைப்பு அப்பட்டமான அவதூறு..! வெற்று பரபரப்பு காட்டி பொய்யை விற்பனை செய்யும் ச்சீப்பான தந்திரம்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ(ஸ்).தி எலைட் குரூப்.
@கவிதா.G.//பொதுவாக அனைத்து விஷயங்களையும் சமநீதியோடு சொல்லி இருப்பது நேர்மை.//---நன்றி சகோ.
//ஆனாலும் ஒரு குறை உண்டு.//---நிவர்த்தி செய்து விட்டேன்.
//நீங்கள் சொன்ன பிறந்தநாட்கள் இறந்த நாட்கள் எல்லாத்திலேயும் தமிழகம் அமைதிப்பூங்காதான்.//---இப்படி சரியான காரணம் சொல்லி இருந்தீர்கள். நன்றி.
///அதையும் சொல்லி இருந்தால் முழுமை பெற்று இருக்கும் இந்த கட்டுரை.
ப்ச்ச் v . ,.///---முழுமை பெற்று விட்டதா..? :-))
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் சிறப்பான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.கவிதா.
@சிராஜ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.சிராஜ்.
('வாழ்த்துகள்' என்பதே சரி. இலக்கணம் குற்றியலுகரம்படி 'க்' மிகாது:-))
@R.Puratchimani//நீங்கள் எப்பொழுதும் நன்றாக சிந்திப்பீர்கள் என தெரியும்.//---நன்றி சகோ. புகழனைத்தும் இறைவனுக்கே.
//நான் பிறந்த நாள் கொண்டாடுவதில்லை.//---அதாவது, anniversary பற்றி சொல்கிறீர்கள். நன்றி.
//அவர்கள் கொண்டாடிவிட்டு போகட்டுமே.//---'அவர்கள்'ஐ ஏன் 'நம்'இலிருந்து பிரிக்கிறீர்கள்..? தவறில் உள்ள அவர்களும் சரியில் உள்ள நம்மோடு இணையட்டுமே..?
சகோ.ஷர்புதீனுக்கு, வருடா வருடம் அன்றி, அதுபோல வாராவாரம் கூட ஒன்றுகூடல், மகிழ்ச்சி பரிமாறுதல் ஆகிய இவற்றை உண்டாக்கமுடியும் என்று பதில் சொல்லி இருக்கின்றேன்.
//அரசியல் தலைவர்களின் கொண்டாட்டங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க முயலுங்கள்.//---இதை பதிவில் சொல்லியே இருக்கிறேன்.
//நீங்கள் சொல்லும் இதே நினைவு நாள் தான் ரம்ஜானும், பக்ரீதும் அதையும் தடை செய்வீர்களா?//---ஹா..ஹா..ஹா.. அது ஒன்றும் யாரோ ஒரு மனிதருடைய நினைவு நாள் அல்லவே சகோ..?
அந்த நாட்கள் ஒவ்வொரு ஹிஜ்ரி வருடமும் ஷவ்வால்-1-லும், துல்ஹஜ்-10-லும் பிறையாய் பிறந்து அடுத்த நாள் பிறை பிறக்கும்போது இறக்கின்றன. நாம் அந்த நாளையே கொண்டாடுகிறோமே அன்றி, அது ஒரு மனிதனின் பிறந்த நாளிற்கோ இறந்த நாளிற்கோ கொண்டாடப்படும் anniversary அல்லவே..?
(பின்னூட்டம் 35-ல் இன்னும் விளக்கி உள்ளேன்)
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் சிந்திக்க வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.புரட்சிமணி.
@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நல்லதொரு இறைஞ்சலுக்கும் நன்றி சகோ.ஹாஜா.
@Syed Ibramshaவருகைக்கும் பின்னூட்டவாதிகளை பாராட்டிய பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.Syed Ibramsha.
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
// /நீங்கள் சொல்லும் இதே நினைவு நாள் தான் ரம்ஜானும், பக்ரீதும் அதையும் தடை செய்வீர்களா?//---ஹா..ஹா..ஹா.. அது ஒன்றும் யாரோ ஒரு மனிதருடைய நினைவு நாள் அல்லவே சகோ..?
அந்த நாட்கள் ஒவ்வொரு ஹிஜ்ரி வருடமும் ஷவ்வால்-1-லும், துல்ஹஜ்-10-லும் பிறையாய் பிறந்து அடுத்த நாள் பிறை பிறக்கும்போது இறக்கின்றன. நாம் அந்த நாளையே கொண்டாடுகிறோமே அன்றி, அது ஒரு மனிதனின் பிறந்த நாளிற்கோ இறந்த நாளிற்கோ கொண்டாடப்படும் anniversary அல்லவே..?//
சகோ உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா. தமிழகத்தில் விவரம் தெரிந்தவர்கள் பிறந்த நாளை அன்றைய ஆங்கில தேதியில் கொண்டாடுவதில்லை.
நீங்கள் எப்படி ரம்ஜானுக்கு பிறையை கணக்கில் கொள்கிறீர்களோ அவ்வாறு தான் அந்த மாதத்தின் நிலவை மையமாக கொள்வார்கள்.
அன்றைய நாளில் நபி அவர்கள் இறைவனின் சாட்சியாக கூறும் சூரியனும் சந்திரனும் ஒருவன் பிறந்த நாளில் எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் இருக்கும். இதை நான் சொன்னால் நபி அவர்கள் ஒத்துக்கொண்டிருப்பார். அவர் சொல்லாததால் நீங்கள் ஒத்துகோள்ள மாட்டீர்கள் என நினைக்கின்றேன். :)
இயற்கை ரீதியாக/வானிலை ரீதியாக அது சிறப்பு வாய்ந்ததே. கொஞ்சம் ஆய்வு செய்யுங்கள் உண்மை புலப்படலாம்.
நன்றி
@R.Puratchimaniசகோ.புரட்சிமணி,
ரம்ஜான், பக்ரீத் பற்றி நீங்கள் தடை கேட்டதால் பிறை பற்றி விளக்கி சொல்ல வேண்டி இருந்தது.
நீங்கள் 'இந்துக்கள் பொங்கல் கொண்டாடலாமா' என்று பொங்கல் பற்றி என்னிடம் கேட்டிருந்தால்... சூரியன் 'பிறக்கும்' போது 'பிறந்த அந்த பொங்கல் நாள்' அடுத்த நாள் சூரியன் 'பிறக்கும்' போது 'இறக்கிறது' என்றுதான் சொல்லி இருப்பேன். வருஷா வருஷம் அறுவடை செய்வோர் வருஷா வருஷம் கொண்டாடுவர் என்றுதான் 'சரி கண்டிருப்பேன்'..!
அன்றி...
கிருஸ்துமஸ், மீலாடி நபி, தீபாவளி போன்ற ஒருவரின் "என்றோ பிறந்து முடிந்த"/ "என்றோ இறந்து முடிந்த" ஒரு தினத்துக்காக கொண்டாடப்படுகிற 'நினைவுநாள் பண்டிகைகளோடு' பொங்கலை நான் சேர்த்து இருக்க மாட்டேன்..!
நமது சென்ற பொங்கல் பற்றிய விவாதத்தில் கூட... 'வருஷத்துக்கு மூன்று போகம் காணும் உழவர்களுக்கு மூன்று அறுவடை நாளில் மூன்று பொங்கல் கொண்டாடலாம்' என்ற எனது பதில் வாதத்தை இங்கே பொருத்திப்பாருங்கள் சகோ.புரட்சிமணி.
ரமலான் ஒருமாதம் முழுக்க நோன்பு நோர்த்துவிட்டு, அடுத்த மாதம் முதல் நாளான "நன்மைகளின் அறுவடைநாளான" ஷவ்வால் முதல் நாள் அன்று ரன்ஜான் பண்டிகை..! அது அடுத்தநாள் இறந்து விடுகிறது.
திரும்பவவும் அடுத்த வருஷம் அந்த தினம், பிறந்து... பின்... இறக்கிறது.
நான் ஒருவரின் பிறப்பை சூரிய உதயமாக/பிறை உதயமாக வும்,
அவரின் இறப்பை அடுத்த சூரிய உதயமாகவும், பிறை உதயமாகவும் பார்க்கிறேன். ஆக இவர் வாழ்க்கையே ஒரு முழு பண்டிகை தினம் போலத்தானே..? அதற்குள்ளே இன்னும் எத்தனை பண்டிகை தினங்கள், சகோ.புரட்சிமணி..?
இப்போது மீண்டும் நான் சொன்னதை படியுங்கள்...
//அந்த நாட்கள் ஒவ்வொரு ஹிஜ்ரி வருடமும் ஷவ்வால்-1-லும், துல்ஹஜ்-10-லும் பிறையாய் பிறந்து அடுத்த நாள் பிறை பிறக்கும்போது இறக்கின்றன. நாம் அந்த நாளையே கொண்டாடுகிறோமே அன்றி, அது ஒரு மனிதனின் பிறந்த நாளிற்கோ இறந்த நாளிற்கோ கொண்டாடப்படும் anniversary அல்லவே..?//
---நான் தெளிவாகவே புரிந்துதான் சொல்லியுள்ளேன்..!
@ ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said..
// ஆக இவர் வாழ்க்கையே ஒரு முழு பண்டிகை தினம் போலத்தானே..? அதற்குள்ளே இன்னும் எத்தனை பண்டிகை தினங்கள்,//
சகோ
நீங்கள் சொல்வது உணமைதான் வாழ்கையே பண்டிகை தான்
ஆனால் இந்த இயந்திர உலகில் எத்தனை பேர் ஒவ்வொரு நாளையும் கொண்டாடுகிறார்கள்?
அப்படி கொண்டாட முடியாதவர்கள் ஒரு நாளையாவது கொண்டாடிவிட்டு போகட்டுமே?
மற்றவர்கள் ஒரு நாளை கூட கொண்டாடகூடதேன்று ஏன் உங்களுக்கு இந்த கொலை வெறி :) (சும்மா :) )
நன்றி
@R.Puratchimani
சரியென்று பட்டதை சொல்வோம்...
சரியென்று கேட்போர் கேட்கட்டும்...
என்கிறேன் நான்..!
பிறகுக்கு பிரச்சினை இல்லாதவரை தன்னளவில் எதுவும் சரியே என்கிறீர்கள்..!
ம்ம்ம்.....
வருகைக்கு நன்றி சகோ.புரட்சிமணி.
@சலாம் சகோ முஹம்மது ஆசிக்,
"வாழ்த்துக்கள்" ல ஒரு "க்" கூட இருக்கு அப்படின்னா எடுத்திர போறேன். இதுக்கு ஏன் சகோ நீங்க குற்றியலுகரம் வரை போறீங்க???? இலக்கணம் லா நமக்கு ரொம்ப
தூ................................................................ர................................................................................................................ம்................................................................................
அறியாமை இருளில் உலாவரும் மூடர்களுக்கு சூரியன் உதித்ததுபோல் வெளிச்சமிக்க ஆக்கம் சகோதரரே!வாழ்த்துக்கள்.
@சிராஜ்///தூ................................................................ர................................................................................................................ம்................................................................................///---
சகோ.சிராஜ், நாமெல்லாம் "ஒண்ணுக்குள்ளே ஒண்ணு"...
இதில், "ஒண்ணுக்குள்ளே ஒண்ணு" இந்த வார்த்தையை உங்க 'தூரம் பாணி'யில் டைப் அடிக்கிறது ..?
:-))
@லெ.மு.செ.அபுபக்கர் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சகோ.லெ.மு.செ.அபுபக்கர்
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!