அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, February 9, 2012

22 சுவாசிக்க 100% ஆக்ஸிஜன் நல்லதா..?

நம் பூமியை சூழ்ந்த பல வாயுக்களின் தொகுப்பான இந்த வளிமண்டலத்தில் நைட்ரஜன் 78 %ம், ஆக்ஸிஜன் 21 %ம், கார்பன் டை ஆக்ஸைடு 0.033 %ம், ஆர்கான் 0.934 %ம், நியான் 0.0018 %ம், ஹீலியம் 0.00052 %ம், மீதம் மீதேன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்கள் மிகக்குறைந்த அளவிலும் கலந்துள்ளன..!

நாம் சுவாசிக்கும் அந்த காற்றில், ஆக்ஸிஜன் 21% தான் உள்ளது. ஆனால், காற்றில் மனிதனுக்கு தேவையான குறைந்த பட்ச உடல்நலன் பாதிப்பில்லாத ஆக்ஸிஜன் அளவு 19%..! சில சமயம் நோயாளிகளுக்கு 'ஆக்ஸிஜன் மாஸ்க்'... நீருக்கு அடியில் நீந்த செல்வோருக்கு 'ஆக்ஸிஜன் சிலிண்டர்'... என்று சொல்ல/எழுத கேள்விப்பட்டிருப்பீர்கள். இது சரியா..? இதனால், 'நாம் மூச்சு விட 100% ஆக்ஸிஜன் இருந்தால் நமக்கு நல்லது' என்று நாம் நினைத்தால் - இல்லை, உண்மையில் அது தீங்குதான் விளைவிக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்..!

இன்னும் சொல்வதாயின், நோயாளியாக இருந்தாலும், நீருக்கு அடியில் நீந்த சென்றாலும் சிலிண்டரில் இருப்பது என்னவோ... 21% ஆக்ஸிஜன் கொண்ட வளிமண்டல காற்றுதான்..! அதாவது அதிக பருமன் அழுத்தப்பட்ட காற்றுதான். (lot of volume air compressed at required pressure) இதில் ஆக்ஸிஜன் % கூடினாலோ குறைந்தாலோ அது, உயிருக்கே ஆபத்து என்பதையும் நாம் அறிய வேண்டும். ஏனெனில், நம் உடல் இந்த 21% ஆக்ஸிஜன் அளவில் சுவாசிக்கத்தான் படைக்கப்பட்டு உள்ளது..! அல்லது அந்த உடலுக்கு ஏற்ற வகையில் இப்படியாக, நம் பூமியில் 21% ஆக்ஸிஜன் அளவை இறைவன் நிர்ணயித்து அதை அதே அளவினதாகவே வைத்திருப்பதாகவும் கூறலாம்..! இதனை நாம் புரிந்து கொள்ள, மேலும் சில விவரங்களை அறிய வேண்டியுள்ளது..!






 

நாம் சுவாசிக்க உள்ளிழுக்கும் காற்று... மூக்கு மற்றும் வாய்/தொண்டை தாண்டி உள்ளே ட்றக்கியா சென்று பின் கிளைத்து பிரிந்து இரு நுரையீரலின் ஒவ்வொரு கிளை மூச்சுக்குழலுக்கும் சென்று மேலும் கிளைத்து சிறு சிறு மூச்சுக்குழல்களுக்கும் சென்று (from trachea to bronchi to bronchioles) இறுதியாக (alveoli) அல்வியோலி என்றழைக்கப்படும் சிறிய மெல்லியசுவர் காற்று நுண்ணறைகளில் முடிகிறது..!

இந்த முழு அமைப்பை ஒரு நீண்ட தொடர் குழாய் அதன் இறுதியில் சோப்பு நுரை குமிழ் போன்று எண்ணிக்கொண்டால்... ஆல்வியோலி என்பது சுவாசக்குழாயின் கடைசி குமிழ் போன்று என்று புரியும்.

இந்த ஒவ்வொரு அல்வியோலி சிற்றறையிலும் அதன் வெளிப்பக்கம் நுரையீரல் நுண்குழாய்கள் என்று அழைக்கப்படும் சிறிய, மெல்லிய-சுவர் இரத்த நாளங்கள் சுற்றியுள்ளன. இந்த நுண்குழாய்கள் மற்றும் அல்வியோலி சிற்றறை இடையில் (சுமார் 0.5 microns தடித்த) ஒரு மெல்லிய சவ்வு (diaphragm) சுவர் ஒன்று உள்ளது. இதன் மூலம்தான் பல்வேறு வாயுக்கள் ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு 'ஊடுருவி வந்து போய்க்கொண்டு' இருக்கும்..! 

இங்கே 'சவ்வூடு பரவல்' என்ற வேதி வினை நிகழ்கிறது. அதாவது, ஒரு வாயு, தான் அடர்ந்த நிலையில் உள்ள ஒரு இடத்திலிருந்து... தன் வாயு அடர்த்தி குறைந்த நிலையில் உள்ள இடத்திற்கு சென்றால் அது விரவுதல் (diffusion). அதுவே ஒரு சவ்வு வழியாக விரவினால்... அது 'சவ்வூடு பரவல்' (osmosis).  

நாம் காற்றை உள்ளிழுக்கும் போது, இறுதியாக சென்று அல்வியோலிக்குள் இந்த காற்று நிரம்பும். இரத்த நுரையீரல் நுண்குழாய்களில் உள்ள ஆக்ஸிஜன் அளவோடு ஒப்பிடும்போது, ஆல்வியோலியில் 'ஆக்ஸிஜன் செறிவு' அதிகமாக இருப்பதால், ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும், இரத்தத்தினுள் அல்வியோலியில் உள்ள காற்றிலிருந்து ஆக்ஸிஜன் மட்டும் சவ்வூடுபரவல் என்ற வேதிவினை மூலம் இரத்தத்துக்குள் நுழைகிறது. இது இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதால்தான் நடக்கிறது..!

இதேபோல, கார்பன் டை ஆக்சைடின் செறிவு, அல்வியோலி காற்றை விட நுண்குழாய்களில் அதிகமாக இருப்பதால் அதே சவ்வூடுபரவல் வேதி வினை மூலம் இரத்தத்திலிருந்து கார்பன் டை ஆக்சைடு வாயு மட்டும் அல்வியோலிக்குள் நுழைந்து விடுகிறது. 

ஆல்வியோலியின் உள்ளே நுண்ணிய சவ்வு சுவர் முழுவதும் 'மூச்சுக்காற்று-ஆக்ஸிஜன்' மற்றும் 'இரத்த-கார்பன் டை ஆக்சைடு' வாயுக்கள் பரிமாற்றம் இப்படித்தான் நடைபெறுகிறது..! நாம் சுவாசம் வெளிவிடும் போது, அதில் காற்றில் உள்ள அளவைவிட கார்பன் டை ஆக்சைடு 4% to 5% அதிகம் உள்ளது. அதேபோல, காற்றில் உள்ள அளவைவிட ஆக்ஸிஜன் 4% to 5% அளவு குறைவாக உள்ள சுவாசக்காற்று வெளியேறுகிறது. மேலும், சுத்த ரத்தம் என்றால் அதில் 98.5% வரை ஆக்ஸிஜன் இருக்கும். அசுத்த ரத்தம் என்றால் அதில் 75% வரை மட்டும் ஆக்ஸிஜன் இருக்கும். மீதி கார்பன் டை ஆக்சைடு.

ஆக, இரத்தத்தில் உள்ள இந்த 75% ஆக்ஸிஜன் அளவை, 98.5% என்றாக்க, காற்றில் உள்ள 21% ஆக்ஸிஜன் போதும். ஆனால், இது 100% ஆக்ஸிஜன் ஆக இருந்தால் என்னாகும்..? ஆக்ஸிஜன் Partial pressure அதிகமாக இருப்பதால், இரத்தத்தை நோக்கி சவ்வூடு பரவல் அதி வேகமாக நடைபெறும். அதேநேரம், கார்பன் டை ஆக்சைட் Partial pressure அல்வியோலியில் பூச்சியம் ஆகையால், அதுவும் அல்வியோலியை நோக்கி அதிவேகமாக செல்லும். இதனால், diaphragm சவ்வு கிழிந்து அல்வியோலி rupture ஆகி சிதைந்து விடும் அபாயம் இருக்கிறது.
.
பொதுவாக சுத்த ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 90% க்கு கீழே போனாலே நல்லதல்ல எனும்போது,  ஹைபோக்ஸியா நோயாளிகளின் சுத்த ரத்தத்தில் 30% மட்டுமே ஆக்ஸிஜன் சேரும்..! இவர்களுக்கு ஆக்ஸிஜன் சப்ளை அதிகம் தேவைப்படும். அப்போதும்கூட 60% ஆக்ஸிஜன் உள்ள காற்றைத்தான் மருத்துவர்கள் சப்ளை செய்வார்கள். காரணம், அல்வியோலி முக்கியம் என்பதால்..!  

(Hypoxia is a pathological condition in which the body as a whole (generalized hypoxia) or a region of the body (tissue hypoxia) is deprived of adequate oxygen supply. Hypoxia in which there is complete deprivation of oxygen supply is referred to as anoxia)
.
சகோ..! இப்போது உங்களுக்கு இன்னொரு கேள்வியும் வரும்..! அது ஏன் நைட்ரஜன் 78% இருக்கிறது என்று..! இதுதான் இறைவனின் படைப்பின் மகிமை வெளிப்படும் இடம்..! மிக மிக முக்கியமாக... வாசனை, நச்சுத்தன்மை, வேதிவினை ஏதுமற்ற நைட்ரஜன் ஒரு மந்த வாயு - inert gas..! சுவாசிக்கும் காற்றில் உள்ள அந்த நைட்ரஜன் அளவுதான்... மற்ற ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்சைடு இரண்டும் மிகுதியாகிவிடாமல் பார்த்துக்கொண்டு, உள்ளே போனது... போனது போலவே வெளியே வந்து விடுகிற அதேநேரம், நம் நுரையீரல் அல்வியோலி சவ்வு கிழியாமலும் பார்த்துக்கொள்கிறது..! 


மேலும், தேவையான அளவுக்கு நைட்ரஜன் இல்லை எனில், வெளியேறும் மூச்சுக்காற்றில் கார்பன் டை ஆக்சைடு மட்டுமே இருந்தால்... அதன் partial pressure அதிகமாகி, நுரையீரலில் உள்ள ஈரத்தில் கார்பானிக் அமிலம் உண்டாகி Respiratory acidosis என்ற அரிப்புநோய் ஏற்பட்டு நுரையீரலை அரித்துவிடும்..! இப்படி எல்லாம் ஏதும் ஆகிவிடாமல், அது அது இருக்க வேண்டிய அளவுக்கு வாயுக்கள் இருந்திருக்குமா..? அல்லது, 0.00001%... 0.001%... 0.1%... 1%... 2.. 3.. 10... 78%... என்றெல்லாம் மில்லியன் ஆண்டுகளாய் பரிணாமம் பெற்று இருந்திருக்குமா..? அப்புறம்... Is the Nitrogen gas... 'the fittest which survives'..?!?   ' :-)) '

22 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...