அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Monday, October 17, 2011

45 மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!

விக்கியுலகம் said...
Mr.பெயரிலி, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும்....திரட்டியால் பதிவரா அல்லது பதிவரால் திரட்டியா!
திரட்டியே இல்லாத நாட்களிலும் பதிவர்கள் இருந்தனரே..!? பதிவுகள் வந்தனவே..!? இவர்களுக்காகத்தானே பின்னர் திரட்டிகளே தோன்றின..?! 

இப்போது, பதிவர்கள் எந்த பதிவுகளையும் திரட்டியில் இணைக்காவிட்டால்..? திரட்டியே இருக்காதே..!? அப்படியே இருந்தாலும், அதற்கு விளம்பரம் ஏதும் வராதே..!? இத்தளத்தில் இருக்கும் 89,000+ ஹிட்ஸ்களால் எனக்கு ஏதேனும் பைசா பலன் உண்டா..? 

ஆனால், திரட்டிகள் மூலம் கிளிக் செய்து பதிவுகள் படிக்க வந்த வாசகர்கள் மூலம்... திரட்டிகளுக்கு அல்லவா ஒவ்வொரு கிளிக்குக்கும் ஹிட்ஸ் விழுந்திருக்கும்..? அதிக ஹிட்ஸ் வாங்கும் பதிவர்கள் அதிகமாக ஒரு திரட்டியில் இணைந்திருந்தால்... அதன் மூலம் திரட்டிகளுக்கு அல்லவா "அலெக்ஸா ரேட்டிங்" எகிறி, அதன் அடிப்படையில் திரட்டிகள் தமக்குவரும் விளம்பரத்தில் இலாபம் கொழிப்பர்..?! இதில், பதிவர்களுக்கு என்ன பங்கை தந்திருக்கிறார்கள்..?!

எனவே, யாரை நம்பி யார் இருக்கின்றனர் என்று புரிகின்றதா..? 

சரி, இனி பிரச்சினைக்கு செல்வோம்..!


சமீபத்தில், 'டெர்ரர்கும்மி' தளத்தில் வெளியான  தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா... எனும் பதிவில் அதன் பின்னூட்டத்தில் தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான சகோ.இரமணிதரன், -/பெயரிலி (Profile Not Available) (ஆனாலும், தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா வை இங்கே காணலாம்) என்ற அநாமதேய ஐடியில் வந்து அங்கே பதிவிட்ட மற்றும் பின்னூட்டமிட்ட பதிவர்கள் பற்றி... நாகரிகமற்ற, அருவருக்கத்தக்க, ஆபாசமான, எண்ணற்ற ஆத்திரமூட்டும் ஏச்சு பேச்சு வாசகங்கள் சர்வாதிகார மனப்பான்மையுடன் கொட்டித்தீர்த்தார். இவை அனைத்தும் பரவலாக பலரால் சுட்டிக்காட்டப்பட்டு, விளக்கம் கேட்கப்பட்டு அதற்கு அவர் மன்னிப்போ வருத்தமோ ஏதும் தெரிவிக்க வில்லை. இதற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவிக்கிறேன்.

ஒருவேளை அந்த பய(ங்கர)டேட்டாவில் சொல்லப்பட்டவை உண்மைக்கு புறம்பானவை என்று நினைத்தாலும் இப்படி பொங்கி எழ இவருக்கு தார்மீக உரிமையே கிடையாது..!

ஏன் தெரியுமா சகோ..?
.
முன்பு 'கொடுக்கி.நெட்', நபிகள் நாயகம் (ஸல்..) பற்றி உண்மைக்கு புறம்பான உருவப்படம் போட்டபோது அதை நீக்கக்கோரி பின்னூட்டம் இட்டு அங்கே நாம் கேட்டுக்கொண்ட பிறகும் அந்த பதிவர் அதை கேட்காததால் எதிர்பதிவு ஒன்று இங்கே பிரசுரித்தோம். இதை நீக்கிய இந்த தமிழ்மணத்துக்கு, 'உண்மைக்கு புறம்பான செய்தி' என்று கூறி கொடுக்கி பதிவை தூக்கும் நேர்மை அன்று ஏனோ இவர்க்கு தெரியவில்லை..! இன்று மட்டும் அந்த ஒரு பதிவுக்காக அந்த தளத்தையே தமிழ்மணத்தை விட்டு நீக்கும் அளவுக்கு இவர் குதிப்பது ஏன்..? தனக்கு வந்தால்தான் தலைவலியோ..?

இதற்கிடையே... தன் தமிழ்மண தளத்தை பற்றி பய(ங்கர)டேட்டா எழுதியோரிடம் டெர்ரர் கும்மியில் தரம் தாழ்ந்து வசவு வார்த்தை கொண்டு திட்டிய -/பெயரிலி... அங்கே விவாதத்துக்கு சம்பந்தமே இல்லாமல்... அவர் துப்பிய ஒரு வாக்கியம் படிப்போரை மேலும் ஆத்திரமூட்டியது..!

அது...///சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்/// ......என்பதுதான்..! 

இது முஸ்லிம்கள் பிறரை சந்திக்கும் போது கூறும் ஓர் அழகிய முகமன் ஆகிய... " சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது நிலவட்டுமாக " என்பதை கேலி செய்வதாகவும், கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது அல்லவா..? இதற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
.
இதை ஏன் அவர் அங்கே சொல்ல வேண்டும்..? இதற்கு அங்கே என்ன சம்பந்தம்..? இதற்கு என்ன பொருள்..? மகளிர் பற்றி இவ்வளவு கீழ்த்தரமான சிந்தை கொண்ட மனிதரா இவர்..? சாந்தியும் சமாதானமும் விரும்பாத இவர் என்ன பயங்கரவாதியா..? இந்த வாக்கியத்தை  எப்படி இவர் கேவலப்படுத்தலாம்..?

இப்படி செய்தவர்... தமிழ்மணம் சார்பாக அங்கே செயல்பட்ட சகோ.இரமணிதரன் என்பதால், இது குறித்து தமிழ்மணம் விளக்கம் அளிக்குமாறு கேட்டு ஒரு மின்னஞ்சல் தமிழ்மணத்துக்கு முஸ்லிம்கள் சார்பாக 'எதிர்க்குரல்' சகோ.ஆஷிக் அஹ்மதினால்  admin@thamizmanam.com என்ற முகவரிக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டது.

மேலும், அந்த மெயில் தமிழ்மணத்தில் இணைந்துள்ள பெரும்பாலான முஸ்லிம் பதிவர்களுக்கு bcc போடப்பட்டது.  

தமிழ்மணம் சார்பாக அந்த மின்னஞ்சலை திறந்து படித்தவர்... வேறு யாருமல்ல... புகார் கூறப்பட்ட -/பெயரிலி என்ற அதே சகோ.இரமணிதரன் தான்..!

மறுநாள் சனிக்கிழமை அதற்கான பதிலை அவரே அனுப்பினார். அந்த பதில் மின்னஞ்சலில் அவர் சொல்லி இருப்பது யாதெனில்...
.
பதிவருக்கு, 
இரமணிதரனின் எங்கோ ஒரு தனிப்பதிவிலே சொன்ன அவரின் தனிப்பட்ட சொல்லாடல் உங்களைக் கேலி செய்கின்றதென்று கருதிக்கொண்டால், அதற்கு எதற்காகத் தமிழ்மணம் விளக்கம் சொல்லவேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள்?  இரமணிதரன் அங்கே இச்சொல்லாடலைச் செய்தபோது, தமிழ்மணம் சார்பிலே சொல்கிறேனென்று சொல்லியிருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்தாமல்
http://www.terrorkummi.com/2011/10/blog-post_10.html?showComment=1318339644384#c2814521872429044645 ,
எதற்காகத் தமிழ்மணத்துக்கு அனுப்புகின்றீர்கள்?

ஆனாலும், ஏனென்றால், இரமணிதரன் சம்பந்தப்பட்ட விடயத்திலே இரமணிதரனே பதில் சொல்வது நியாயமில்லை என்பதாலே மற்றைய நிர்வாகிகளுக்கும் அனுப்பியிருக்கின்றேன்.

/இந்த மெயில் தமிழ்மணத்தில் இணைந்துள்ள பெரும்பாலான முஸ்லிம் பதிவர்களுக்கு bcc போடப்பட்டுள்ளது/
இதற்கு தமிழ்மணம் என்ன செய்யவேண்டும்?

==
புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.

இரமணிதரன், க.
தமிழ்மணம் உதவிக்குழு

...இதுதான்..!

ஆக, இவர்தான் தமிழ்மண அட்மின்-இல் சகல அதிகாரத்துடன் இருக்கிறார். இவர் அனுப்பி வைத்தால்தான் விஷயம் மற்ற நிர்வாகிகளுக்கு செல்கிறது; தெரிகிறது..!

இவர், 'டெர்ரர் கும்மி'யிலே போட்ட முதல் பின்னூட்டம் கண்டு இவரை யார் என்று தெரியாததால், அடுத்த பின்னூட்டத்தில் மிக தெளிவாக அவரே சொல்லி இருக்கார்...  'நான் தமிழ்மணத்துக்காக அதன் சார்பாகத்தான் வந்து பேசுறேன்' என்று..! 

இதேபோலத்தான், எனது முந்தய "தமிழ்மணத்துக்கு நன்றி" என்ற பதிவில் கூட, -/பெயரிலி என்ற பெயரில் நிர்வாகம் சார்ந்த விஷயங்களை ஒரு தமிழ்மண நிர்வாகியாகவே அதே தோரணையுடன் பேசியுமுள்ளார்.

இப்போது, குற்றம் சொன்னவுடன், "-/பெயரிலி சொன்னதுக்கு தமிழ்மணம் பொறுப்பேற்க முடியாது" என்பது போல, தான் வேறு பெயரிலி வேறு என்று புரட்டிப்பேசுகிறார், சகோ.இரமணிதரன். இவர் யாரை ஏமாற்றுகிறார்..? ஏன் இந்த பித்தலாட்டம்..? இதைக்கூடவா நம்மால் விளங்க இயலாது..?

ஆக, 

தமிழ்மணம் = -/பெயரிலி = இரமணிதரன் = இரமணிதரன், க. = தமிழ்மணம் உதவிக்குழு = தமிழ்மணத்திலே ஒரு நிர்வாகி


மேற்படி குற்றச்சாட்டை உணர்ந்து கொண்டபின்னர், அவர் இன்னும் நக்கலாகவும் விஷயத்தை திரித்தும், பொய் கூறுவதையும் சகோ.ஒருவரின் இந்த... 'வெளங்காதவன்' பதிவில் உள்ள -/பெயரிலி பின்னூட்டத்தில் கூறி இருப்பது இன்னும் இவர் எந்த அளவுக்கு மோசமானவர் என்றும் அறிய முடிகிறது. அதில் அவர்...

நீங்கள் அடிக்கும் கும்மியிலே மற்றைய பதிவர்கள் ("சாந்தியும் சமாதானத்துக்கும் சொன்னதற்கு மன்னிப்புக் கேள்" என்று தமிழ்த்திசைச்சொற்களுக்கு உரிமம் வைத்திருப்பதுபோல, கும்மும் அடுத்த குழு தவிர; அதுவேறு மதம் சம்பந்தமான பதிவுகளைத் தமிழ்மணத்திலே சேர்க்கமாட்டோம் என்று சேர்க்காமல்விட்டது நான் என்பதற்காக அமுக்கக் காரணம் தேடித்திரிவதை உணராத அளவுக்கு நிதானமான மற்றைய பதிவர்களில்லை) ஏன் கருத்தினைப் பொதுவிலே சொல்லவில்லை என்று கவனித்தீர்களா? 

...இப்படி கூறுகிறார். என்ன சொல்ல வருகிறார் புரிகிறதா சகோ..? 

ஒழுங்காக... "சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது நிலவட்டுமாக" என்று கூறி இருந்தால் அவர்மீது ஒரு குற்றமும் இல்லையே..? அதை ஏன் மோசமாக... 'சாந்தி... அவளின் அக்கா சமாதானி... உங்களுடன் கூடி...' என்று அசிங்கமாக திரிக்க வேண்டும்..? அப்புறம், எதற்கு 'தான் சொன்னது சரிதான்' என்று பொருளற்ற வெத்து விதண்டாவாதம்..?! ஒரு நாகரிகமடைந்த படித்த பண்புள்ள மனிதர் பேசும் பேச்சல்லவே இவை..? அப்படி பேசினால்..? அவரிடம் அவை இல்லை என்றே ஆகிறது..!

மேலும், இந்த கேலி பேசிய குற்றத்தை... அழகிய முறையில் தனிமையில் மெயில் அனுப்பி நாங்கள் கேட்டால்... அதை ஊரறிய பொய் கூறி எப்படி அங்கே  திரிக்கிறார் பாருங்கள், சகோ..?! இதற்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படி பதிவில் அல்லது பின்னூட்டத்தில் பகிரங்கமாக கேட்காது நாங்கள் தனி மெயிலில் விளக்கம் கேட்பதற்கு கேவலமான சப்பை காரணம் ஒன்று கூறுவது அவரின் உலகமகா பித்தலாட்டம். அதற்குத்தான் இப்படி ஒரு பகிரங்க பதிவு தேவைப்பட்டு விட்டது.

இனியும் இவரிடம் மறைமுகமாக கேள்வி கேட்டு புண்ணியம் இல்லை. மற்ற தமிழ்மண நிர்வாகிகளுக்கு இவர் எங்களின் மெயிலை அனுப்பினாரா என்றும் தெரியவில்லை. அவர்களிடம் இருந்து எந்தவித பதிலும் வரவும் இல்லை.

எனவே... இந்நிலையில்....

அழகிய இஸ்லாமிய முகமன் கூறுதலை ஆபாசமாக கொச்சை வார்த்தை கூறி கேலி செய்தமைக்காகவும்....

தமிழ்மண சகோதர பதிவர்களை நாகரிகமற்ற, அருவருக்கத்தக்க, மோசமான, எண்ணற்ற ஆத்திரமூட்டும் ஏச்சு பேச்சு வாசகங்களை சகோ.-/பெயரிலி என்ற இரமணிதரன் கூறியமைக்காகவும்...

அதற்கெல்லாம் பொறுப்பேற்று தவறுணர்ந்து... 

தமிழ்மணம் உடனடியாக சம்பந்தப்பட்ட சகலரிடமும் தமிழ்மண பிளாக்கில் ஒரு பதிவு போட்டு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!

இல்லையேல், மூன்று நாட்களுக்கு முன்னர் சென்ற பதிவிற்கு முன்பிருந்தே தூக்கப்பட்ட  தமிழ்மண ஓட்டுப்பட்டையை இனி இணைக்கவோ, அல்லது  பதிவை அங்கே சேர்க்கப்போவதோ இல்லை நான்..!

இனி, ஒட்டுமொத்தமாக நம்மால் தமிழ்மணம் புறக்கணிக்கப்படும்..!

எனவே... தமிழ்மனங்களை நோகடித்த தமிழ்மணமே...
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

...என்றெல்லாம்  படித்திருப்பீர்தானே..?


முடிவாக....  

       புரிந்துணர்வின்றி   ஒத்துழைக்காத இவர்களுடன் தொடர்வது சரியா..?

                தமிழ்மணமா  அல்லது  நம் மானமா..?  
                        முடிவு நமது கையில்தான் சகோ..!

45 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...