இந்தவாரம் திங்கள் அன்று, 'எதிர்க்குரல்' சகோ. ஆஷிக் அஹ்மத் மிகச்சிறப்பாக எழுதி வெளியிட்ட 'என் மகள்களின் மூன்று கேள்விகள்' என்ற பதிவில், சகோ.லாரா பூத் சொன்ன //புகைபிடிப்பது ஹராம் இல்லை எனினும் அது உடம்புக்கு நல்லதல்ல. அதனால் என்னுடைய பதில், 'இல்லை'.// என்ற இரண்டாவது கேள்விக்கான பதிலை ஆட்சேபித்து, //சகோ.லாரன் பூத்தின் இப்புரிதல் தவறானது// என்றும், // 'படிப்போர் யாரும் தவறாக விளங்கிக்கொள்ளக்கூடாது' என்பதற்காக நீங்களாவது உங்கள் விளக்கத்தை அடைப்புக்குறிகளுக்குள் போட்டிருக்கலாம் சகோ. ஆஷிக் அஹமத்.// என்றேனா..?! அவ்ளோதான். நம்ம சகோதரர் உடனடியாக செயல்பட்டு... தன்னுடைய 'விளக்கமாக' // //புகைபிடிப்பது ஹராம் இல்லை (??) எனினும்// என்று இந்த // (??) // 'குறியீட்டினை' பின்னர் சேர்த்து விட்டார். ஏனோ அது... "சிகரெட் பற்றி சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், தெளிவற்ற முடிவே இஸ்லாத்தில் இருப்பது போல உணர்த்துவதாய் எனக்குப்பட்டதால்... அந்த "(??)" குறியீட்டுக்கான மேலதிக விளக்கமாகத்தான் இப்பதிவு, சகோ..!
நன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.
அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!
Saturday, June 25, 2011
35 புகைப்பிடித்தல் : ஹராமா...ஹலாலா..?
தேடுகுறிச்சொற்கள் :-
அனுபவம்,
இஸ்லாம்,
சமூகம்,
சிகரெட்,
சுருட்டு,
தவறான புரிதல்,
நிகழ்வுகள்,
பீடி
Tuesday, June 21, 2011
34 சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! (Photo Gallery)
சகோ..! இங்கே சில மதிநுட்பமான கண்டுபிடிப்புகளை, மனிதனின் நூதன சிந்தனை திறனை வெளிப்படுத்தக்கூடிய ஆக்கப்பூர்வமான புதிய எண்ணங்களை, புகைப்படங்களாக வந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் உவகை அடைகிறேன். எவ்வித ராயல்டியோ, பேடன்ட் பயமோ இன்றி... இவற்றை நீங்களும் உங்கள் வாழ்வில் தாராளாமாக பயன்படுத்திக்கொள்ளலாம். :)
தேடுகுறிச்சொற்கள் :-
Photo Gallery,
அறிவியல்,
நிகழ்வுகள்,
நையாண்டி
Friday, June 17, 2011
47 கலாச்சாரங்களை ஒழித்துக்கொண்டிருக்கும் இஸ்லாம்
ஆதிமனிதர்களான ஆதம் மற்றும் அவர் மனைவி ஹவ்வா இருவரும் இவ்வுலகிற்கு படைத்தனுப்பப்பட்ட பின்னர், அவ்விருவரும் இப்படி இப்படித்தான் இம்மண்ணில் வாழ வேண்டும் என்று அவர்களுக்கு அன்றே இறைவனால் கொடுக்கப்பட்ட கலாச்சாரம்தான் இஸ்லாம் எனும் வாழ்வியல் நெறி. இதனை, தன் இறைத்தூதர் ஆதம் நபி(அலை)க்கும், அவர்மூலம் அவரின் மனைவி ஹவ்வா (அலை) அவர்களுக்கும் இறைவன் மூலம் பரிசளிக்கப்பட்டது. இதுவே- இந்த இஸ்லாமே- இவர்களின் வழித்தோன்றல்களும் கடைப்பிடித்தொழுக வேண்டிய வாழ்வியல் நெறி. அப்படி இருக்க, முதன்முதலில் இந்த நெறிக்கு எதிராக ஆதம் நபியின் மகன் தன் சகோதரனை கொலை செய்தார். முதல் மனித மரணம். கொலை. இப்படித்தான் இஸ்லாத்திற்கு எதிரான 'கலாச்சாரங்கள்' உலகில் ஆரம்பித்தன. கலாச்சாரம் என்றாலே.. ஒரு நாலுபேர் ஒரே மாதிரி செயல்படுவதும், அதையே அவர்களின் வழித்தோன்றல்கள் எக்கேள்வியும் இன்றி பின்பற்றுவதும் தானே..?!
தேடுகுறிச்சொற்கள் :-
இஸ்லாம்,
கலாச்சாரம்,
சமூகம்,
தவறான புரிதல்
Wednesday, June 15, 2011
15 அதிகநேரம் அமர்ந்திருந்தால் அதிவிரைவில் அமரர்...!? அதிர்ச்சிஅறிக்கை..!
எனதருமை சகோ..!
சென்றவருடம் டிசம்பரில், அலுவலில் அல்லது பதிவுலகில்(?!) 'மணிக்கணக்கில் பொட்டி தட்டுவோர்' -களுக்காக...
சென்றவருடம் டிசம்பரில், அலுவலில் அல்லது பதிவுலகில்(?!) 'மணிக்கணக்கில் பொட்டி தட்டுவோர்' -களுக்காக...
---என்று உங்க உடம்பு நோகாமல் இருக்க(?) ஒரு பதிவு போட்டிருந்தேன். அப்போது அதன் அதிபயங்கர பின்னணி தெரியாமல் அப்படி ஒரு பதிவு போட்டுவிட்டேன். ஸாரி...! ஆனால், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதாலேயே கூடிய சீக்கிரம் உயிர்போக வாய்ப்பு அதிகமாம்..!? இப்படி ஒரு அதிர்ச்சி ஆய்வறிக்கை ஒன்றை சொல்லி இப்போது வயிற்றில் புளியை கரைக்கிறார்கள்..! என்னத்த சொல்ல சகோ..?! அந்த அறிக்கை சொல்வதை நீங்களே தொடர்ந்து படியுங்களேன்..!
தேடுகுறிச்சொற்கள் :-
ஆரோக்கியம்,
உடல்நலம்,
கணினி,
சமூகம்,
டிவி,
தவறான புரிதல்,
நிகழ்வுகள்
Sunday, June 12, 2011
28 தமிழ்மாணவி சாதனை--அமெரிக்காவின் நற்செயல்
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் ஃபாத்திமா. இவர் ஒரு அங்கன்வாடி ஊழியர். இவரது மூத்த மகள் ஹலிமா தர்வேஷ் (20). நெல்லை மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 3-ம் ஆண்டு பயில்கிறார்.
கடந்த ஆண்டு பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் கடந்த ஆண்டு அமெரிக்க தூதரகத்தினர் நடத்திய ஆங்கில பேச்சு போட்டியில், "ஜனநாயகம்" என்ற தலைப்பில் பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. பின்னர், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்றை ஒளிபரப்பி, அதில் சில விமர்சனங்களை சொல்லச்செய்தனர். அதையும் சிறப்பாக செய்த மாணவி ஹலிமாவை, அமெரிக்க அரசின் செலவில் 10 மாதங்களுக்கு வடக்கு அலபாமா பல்கலையில் கலாச்சாரம் மற்றும் கம்ப்யூட்டர் கல்விக்கு தேர்வு செய்தனர். மாதம் சுமார் ரூ.12 ஆயிரம் ஊதியத்துடன் தங்கும் வசதி, உணவுடன் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.
அமெரிக்காவில் 10 மாத படிப்பிற்கு பின், தற்போது நெல்லை திரும்பியுள்ள மாணவி ஹலிமா தர்வேஷ் கூறியதாவது :-
தேடுகுறிச்சொற்கள் :-
அமெரிக்கா,
சமூகம்,
சாதனை,
நிகழ்வுகள்,
ஹலிமா
Tuesday, June 7, 2011
20 பேச்சை பேணுக
மொழியின் உயிர்நாடி பேச்சுதான். மனிதன் பிறக்கும்போதே 'பேசா'விட்டாலும், அழுகை எனப்படும் ஒலியை எழுப்புகிறான். பின்னர், சிந்தனை வளர வளர மனிதனின் தொண்டையிலிருந்து வெளியேறும் ஒலி... அதனை அடுத்த பல உறுப்புக்கள் மற்றும் அவனின் சிந்தை மூலமும் சரியாக திருத்தப்பட்டு, அந்த ஒலி வெளிவரும்போது... அது 'பேச்சு' என்றாகிறது. "ஒரு வித விதிமுறை + கட்டுக்கோப்பில்" அது இருந்தால்... இதுதான் மொழி என்றாகிறது..!
தேடுகுறிச்சொற்கள் :-
அனுபவம்,
இஸ்லாம்,
சமூகம்,
சரியான புரிதல்,
விவாதம்
Saturday, June 4, 2011
52 பதிவுலகின்...'தினமலம்'...(கொடுக்கி)
டிஸ்கி:
என் அன்புள்ள சகோ..!
உங்களுக்கு நன்கு தெரியும்...!
தினமலரை முஸ்லிம்கள் எல்லோரும் 'தினமலம்' என்று எதிர்த்து எப்போது போராட்டம் புரிந்தோம், என்ன காரணத்தினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம், எதனால் 'தினமலம்' என்று சொன்னோம்... என்று...
உங்களுக்கு நன்கு தெரியும் அல்லவா..?
அதே காரணம்தான்..!
அதே காரணம்தான்..!
அதே காரணம்தான்..!
தேடுகுறிச்சொற்கள் :-
KOTUKKI. NET,
இக்பால் செல்வன்,
சரியான புரிதல்,
நெத்தியடி
Friday, June 3, 2011
32 Saudization=சவூதியின் பிழைப்புவாத அரசியல்
"செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது..!"--என்று ஒரு செய்தி எல்லா ஊடகத்திலும் சிறிது நாட்களுக்கு முன்னர் பரபரப்பாக போனியானதை பார்த்திருப்பீர்கள். இதனால் லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது என்று ஒரு பீதியை ஊடகத்தினர் கிளப்பினர். ஆனால், சவூதி அரசின் இதற்கான மறுப்பு விளக்க அறிக்கையை பல ஊடகங்கள் முந்திய பீதியூட்டும் செய்தியை சேர்ப்பித்தது போல இதை மக்களிடம் கொண்டுபோய் சரியாக சேர்க்க வில்லை.
தேடுகுறிச்சொற்கள் :-
Saudization,
அரசியல்,
சவூதி அரேபியா,
தவறான புரிதல்
Wednesday, June 1, 2011
17 அனா..பீப்பீப்பீப்பீப்பீ...அன்த்தா..மாப்பி..பீப்பீப்பீப்பீப்பீ..பாதன்..'டும்'..!
என்ன சகோ..? தலைப்பை பார்த்ததும் சும்மா 'கிர்ர்ர்ர்ரு'ன்னு இருக்கா? சொல்றேன்..! சொல்றேன்..! விளக்கமா சொல்றேன்..!
சவூதியை பொறுத்த மட்டில் ஒரு கார் பின்புறமாக சென்று வேண்டுமென்றே... 'தேமே' என பார்க்கிங்கில் நின்று கொண்டிருக்கும் இன்னொரு காரின் முன்புறத்தில் இடித்தாலும், சாட்சிகள் இல்லையேல், பழியும் அபராதமும் வழக்கும் என்னவோ முன்புறம் இடிவாங்கியவர் மீதுதான் விடியும்..! இடித்தவர் ஏமாற்றுக்காரர் எனில், நஷ்டஈடும் பெற்றுக்கொள்வார்..! இங்கு வாகனச்சட்டம் அப்படி..!
சவூதியை பொறுத்த மட்டில் ஒரு கார் பின்புறமாக சென்று வேண்டுமென்றே... 'தேமே' என பார்க்கிங்கில் நின்று கொண்டிருக்கும் இன்னொரு காரின் முன்புறத்தில் இடித்தாலும், சாட்சிகள் இல்லையேல், பழியும் அபராதமும் வழக்கும் என்னவோ முன்புறம் இடிவாங்கியவர் மீதுதான் விடியும்..! இடித்தவர் ஏமாற்றுக்காரர் எனில், நஷ்டஈடும் பெற்றுக்கொள்வார்..! இங்கு வாகனச்சட்டம் அப்படி..!
தேடுகுறிச்சொற்கள் :-
ஃபிலிப்பைனி,
சவூதி அரேபியா,
நகைச்சுவை
Subscribe to:
Posts (Atom)