பயங்கரவாதங்கள் நிறைந்த, பணம் சம்பாரிக்கும் பரபரப்பான இவ்வாழ்கையில் சில நேரங்களில் நம்மை சுற்றி இயல்பாக நடந்து கொண்டிருக்கும் எளியோரின் சில அதிசய சாதனைகள் நம் கண்டு கொள்ளலில் ஏனோ சிக்காமலேயே போய் விடுகின்றன..!
அப்படி ஒன்றைத்தான் இங்கே புகைப்படங்களாக தந்துள்ளேன்.
வாருங்கள்..!
எளியோருக்கு அதரவு நல்கி, அவர்களின் உழைப்பை போற்றி அன்போடு அரவணைப்போம்..!
மனிதம் நம்மில் தழைத்தோங்கட்டும்..!
நம்முடைய எளிய சக 'Citizen of World'-ன் ஒரு சாதனை இப்பதிவில் படங்களுடன்.!
சுபஹானல்லாஹ்..!
'இந்த வீட்டு ஓனர் தன் ஜன்னல் கண்ணாடியை திறப்பாரே...' என்ற பகுத்தறிவு சிறிதும் இல்லாமல் தவறுதலாக கூட்டை கட்டி விட்டது குருவி.
'ஜன்னலை திறப்பது எனது உரிமை... கூட்டை கட்டியது குருவியின் ஆக்கிரமிப்பு...' என்று வலியார் சட்டம் பேசி ஜன்னலை வலுக்கட்டாயமாய் திறந்தால்..?
கூடு கட்ட எடுக்கப்பட்ட குருவியின் கடும் முயற்சிகள் அனைத்தும் பாழ்.
உள்ளே முட்டைகள் இட்டிருந்தால் அவை நொறுங்கி உடையும்.
ஒருவேளை குஞ்சு பொறித்து இருந்தால்...?
சின்னஞ்சிறு பறக்க இயலா பச்சிளம் குருவி குஞ்சுகள் கீழே விழுந்து இறக்கலாம்...! இல்லையெனில்... மேலே சுற்றும் வல்லூறுகளுக்கு இறையாகலாம்...!
குஞ்சுகள் இறக்கை முளைத்து, தானே வானில் பறக்கும் வரை... வலியார் கொஞ்ச காலம் அவகாசம் தந்து கதவை திறக்காமல் இருந்து பொறுக்கலாமே..!
எதற்கு வலியார் அத்துமீறும் எளியாரிடம் பொறுக்க வேண்டும்..?
ஏன் சட்டப்படி வலியார் நடக்காமல் இருக்க வேண்டும்..?
அப்படி இருந்தால் அதனால்... வலியாருக்கு என்ன இலாபம்..? என்ன இலாபம்..?
நபி (ஸல்) அவர்கள் ''உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில் அதற்கான பிரதிபலன் கிடைக்கும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 2363, 6009
--------------------------------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி (15-5-2011, 4:30 PM) :
இந்த பறவை, உரிமையாளர், நடந்த இடம் போட்டோ எடுத்தவர் பற்றிய விபரங்களை பின்னூட்டம் (#17) வாயிலாக தெரிவித்த சகோ.நிசார் அவர்களுக்கு மிக்க நன்றி..!
( மேலும், விபரங்களுக்கு மறுமொழி # 18-ல் உள்ள சுட்டிகளையும் தொடருங்கள்..!)
19 ...பின்னூட்டங்கள்..:
அருமையான இணைப்பு அத்தனைப்படங்களையும் எடுக்க எவ்வளவு நேரம் அல்லது எத்தனை நாள் ஆகியிருக்கும் சகோ.
வியப்பூட்டும் படங்கள். அழகையும் இயற்கையும் மதிப்பவர்கள் இந்த குருவி கூடு கட்டுவதை பார்த்து ரசிப்பார்கள், பாதுகாப்பார்கள்.
ஜன்னலின் உரிமையாளர் யார்? இது எந்த ஊரில் எடுக்கபட்டது? முழு கூட்டையும் பாதுகாத்து,பொறுமையுடன் படமெடுத்து அதனை பிறரும் கண்டு மகிழ வலையில் இட்டதற்கும் உங்களுக்கும் நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும்
சுபஹானல்லாஹ்..!
படைப்பாளனின் அற்புதங்கள்
@எம்.சி.பிவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.எம்.சி.பி. ஓரிரு நாட்கள் ஆகி இருக்கலாம் சகோ. சரியாக தெரியவில்லை. படங்கள் எடுத்தவர் அந்த குறிப்பை கொடுக்கவில்லை.
@கக்கு - மாணிக்கம்தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ.மாணிக்கம்
//ஜன்னலின் உரிமையாளர் யார்?//--தெரியவில்லை. எனக்கு ஓர் அரபி சகோதரர் அனுப்பிய புகைப்படங்கள் அவை.
உங்கள் பின்னூட்டம் வெளியிட்ட பின்னர் அவரிடம் அது பற்றி கேட்டால், அதை அவருக்கு வேறு ஒரு எகிப்தியர் அனுப்பி இருக்கிறார்..!
அந்த புகைப்படங்களை பார்த்த பின்னர், "உரிமையாளர் இந்த ஜன்னலை திறந்தால் கூடு என்னாகும்" என்று என் மனதினுள் தோன்றிய பயத்தைத்தான் பதிவாக இட்டுவிட்டேன்.
உங்கள் அழகிய கருத்தே என் கருத்தும்.
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//படைப்பாளனின் அற்புதங்கள்//--நிச்சயமாக, சகோ.ஹைதர் அலி..!
வருகைக்கு நன்றி சகோ.
மாஷா அல்லாஹ், இறைவனின் அற்புதப் படைப்பு. இது குறித்து மேலும் விவரங்கள் அறிய ஆவலாக இருக்கிறது.
//"உரிமையாளர் இந்த ஜன்னலை திறந்தால் கூடு என்னாகும்" //
எவ்வளவு கொடூரனாக இருந்தாலும், அதைச் செய்ய மனம் வராது!!
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக்..
இந்த புகைப்ப்டங்களின் தொகுப்பு என்னை வியப்பின் எல்லைக்கு கொண்டுசென்றுவிட்டதாக உணர்கிறேன்..
மாஷா அல்லாஹ்..
அல்லாஹ் அவற்றிற்கு எத்துனை பெரிய அறிவுத்திறனை கொடுத்திருக்கிறான்..
நிச்சயமாக அல்லாஹ்! அவனே மாபெரும் கொடையாளி..அவனே மாபெரும் படைப்பாளன்...
அன்புடன்
ரஜின்
@ஹுஸைனம்மாஆமாம். சகோ.ஹுசைனம்மா..
இறைவனின் படைப்புகள் ஒவ்வொன்றும் அற்புதம்தான். வருகைக்கு நன்றி சகோ.
@RAZIN ABDUL RAHMANவ அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் அருமையான கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ரஜின் அப்துல் ரஹ்மான்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக்..
எவ்வளவு நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. இதைக்கட்ட எவ்வளவு சிரமம் எடுத்திருக்கும்? இறைவனின் படைப்பில் எத்தனை அதிசயங்கள். சுப்ஹானல்லாஹ்!
@சுவனப்பிரியன்அலைக்கும் சலாம் வரஹ்...
//இறைவனின் படைப்பில் எத்தனை அதிசயங்கள். சுப்ஹானல்லாஹ்!//-சரியாக சொன்னீர்கள் சகோ.சுவனப்பிரியன். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
வீட்டு உரிமையாளர் தெரியாமல் கதவை திறந்தாள் என்னாவாகும். ??????
இறைவனே நன்கு அறிபவன். பறவை தெரியாமல் வீட்டை கட்டி விட்டு. பகுத்தறிவில்லா பறவை.
இதுவும் ஆக்கிரமிப்போ ????
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... என்ன அழகு... சுப்ஹானல்லாஹ்!! எங்க வீட்டு பால்கனியில் வந்து சாதாரண கூடு அமைத்து குடித்தனம் பண்ணும் புறாக்களை விரட்ட மனமின்றி, பால்கனியையே சரியாக புழங்காமல் அதுங்க இஷ்டத்துக்கு விட்டு வைத்துள்ளோம் இங்கு. இவ்வளவு சிரமமான, அழகிய கூடுகளையும் அந்த குருவிகளையும் எத்தனை வருஷம் ஆனாலும் கலைக்க நிச்சயம் மனம் வராது. பகிர்வுக்கு நன்றி சகோ.
இந்தப் படங்களைப் பார்த்துவிட்டு என் மகன் கேட்டது, 'ஏம்மா அந்த வீட்டுக்குள்ள வெளிச்சம் இருக்காதே, யாராச்சும் விளக்காவது போட்டுக் கொடுக்கலாமில்ல அதுக்கு? பாவம்மா அது..' :)))
@sulthanதங்கள் வருகைக்கும் உணர்விற்கும் மிக்க நன்றி சகோ.சுல்தான்.
@அஸ்மாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//இந்தப் படங்களைப் பார்த்துவிட்டு என் மகன் கேட்டது, 'ஏம்மா அந்த வீட்டுக்குள்ள வெளிச்சம் இருக்காதே, யாராச்சும் விளக்காவது போட்டுக் கொடுக்கலாமில்ல அதுக்கு? பாவம்மா அது..' :)))//--மாஷாஅல்லாஹ்...
இந்த பிஞ்சு குழந்தை மனம் என்னமாய் பிற உயிர்களுக்காக இறக்கப்பட்டு எப்படியெல்லாம் யோசிக்கிறது..? உங்கள் வளர்ப்பு உங்கள் மகன் பேச்சில்..!
வருகைக்கும் உணர்வை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சகோ.அஸ்மா.
அஸ்ஸலாமு அலைக்கும் வ..
எக்ஸலன்ட்
எனது நன்பரிடமிருன்து, எனக்கு இந்த செய்தி பவர் பாய்ன்ட் இணைப்புடன் வந்தது. நல்ல அருமையான படங்கள். கீழே படிக்கவும்.
Urban Horneros
In Uruguay we used to see Horneros’ nests everywhere, this peculiarity nest was built on a window in the building where I live. Having the nest "there" I accumulated over 600 photos.
It all started for curiosity and I was fortunate to witness it every day. After seeing the photos my family and friends were very surprised.
I thought it would be good to put the photos online to share with you, mainly those of you who care about the environment, so here they are, I hope you like it.
I am not a photographer. The nest was built between late September and 30 November. They work from 8 to 10 hours a day but they didn’t work Sundays!
Daniel Carajal
@nissarவ அலைக்கும் ஸலாம் வரஹ்...
இதைப்பற்றி செய்திகளை நான் தேடித்தேடி அலுத்து விட்டேன்..சகோ.நிஸார்..!
பின்னே..? எதைவைத்துத்தான் நான் தேடுவது..?
அந்த பறவையின் பெயரும் தெரியவில்லை. படம் எடுத்தவர் பெயரும் தெரியவில்லை. சம்பவம் நடந்த இடம் இடமும் தெரியவில்லை.
இப்போது...
//////
-Uruguay,
-Horneros’ nests,
-600 photos,
-The nest was built between late September and 30 November,
-8 to 10 hours a day but they didn’t work Sundays!
-Daniel Carajal
//////
அடடா..! எவ்வளவு தகவல்கள்..!
மிக எளிதாக கண்டுபிடித்துவிட்டேன்..!
மூன்று மாதங்களுக்கு முன்னர் அத்தனை போட்டோக்களும் "...இங்கே..." அப்புறம் "...இங்கேயும்..." அப்லோட் செய்யப்படுள்ளன..!
அப்புறம்... சகோ.நிஸார், உங்களுக்கு வந்த தகவல்... "இங்கேயிருந்துதான்...!"
வருகைக்கும் அரியதொரு விபரத்திற்கும் மிக்க நன்றி சகோ.நிஸார்..!
அழகோ அழகு.....
சின்ன குருவிக்கு எவ்வளவு பெரிய மூளை :)
சண்டே லீவ் வேற ;)
பகிர்வுக்கு நன்றி சகோ
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!