அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, May 7, 2011

19 'வாயால் வீடு கட்டி ஒரு வாயில்லா ஜீவன் சாதனை..! (Photo Gallery)

பயங்கரவாதங்கள் நிறைந்த, பணம் சம்பாரிக்கும் பரபரப்பான இவ்வாழ்கையில் சில நேரங்களில் நம்மை சுற்றி இயல்பாக நடந்து கொண்டிருக்கும் எளியோரின் சில அதிசய சாதனைகள் நம் கண்டு கொள்ளலில் ஏனோ சிக்காமலேயே போய் விடுகின்றன..!

அப்படி  ஒன்றைத்தான் இங்கே புகைப்படங்களாக தந்துள்ளேன்.

வாருங்கள்..!

எளியோருக்கு அதரவு நல்கி, அவர்களின் உழைப்பை போற்றி  அன்போடு அரவணைப்போம்..!

மனிதம் நம்மில் தழைத்தோங்கட்டும்..!

நம்முடைய  எளிய சக 'Citizen of World'-ன் ஒரு சாதனை இப்பதிவில் படங்களுடன்.!




























சுபஹானல்லாஹ்..!

'இந்த வீட்டு ஓனர் தன் ஜன்னல் கண்ணாடியை திறப்பாரே...' என்ற பகுத்தறிவு சிறிதும் இல்லாமல் தவறுதலாக கூட்டை கட்டி விட்டது குருவி.

'ஜன்னலை திறப்பது எனது உரிமை... கூட்டை கட்டியது குருவியின் ஆக்கிரமிப்பு...' என்று வலியார் சட்டம் பேசி ஜன்னலை வலுக்கட்டாயமாய் திறந்தால்..?

கூடு கட்ட எடுக்கப்பட்ட குருவியின் கடும் முயற்சிகள் அனைத்தும் பாழ்.

உள்ளே  முட்டைகள் இட்டிருந்தால் அவை நொறுங்கி உடையும்.

ஒருவேளை குஞ்சு பொறித்து இருந்தால்...?

சின்னஞ்சிறு பறக்க இயலா பச்சிளம் குருவி குஞ்சுகள் கீழே விழுந்து இறக்கலாம்...! இல்லையெனில்... மேலே சுற்றும் வல்லூறுகளுக்கு இறையாகலாம்...!

குஞ்சுகள் இறக்கை முளைத்து, தானே வானில் பறக்கும் வரை... வலியார் கொஞ்ச காலம் அவகாசம் தந்து கதவை திறக்காமல் இருந்து பொறுக்கலாமே..!

எதற்கு வலியார் அத்துமீறும் எளியாரிடம் பொறுக்க வேண்டும்..?

ஏன் சட்டப்படி வலியார் நடக்காமல் இருக்க வேண்டும்..?

அப்படி இருந்தால் அதனால்... வலியாருக்கு என்ன இலாபம்..? என்ன இலாபம்..? 


நபி (ஸல்) அவர்கள் ''உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில் அதற்கான பிரதிபலன் கிடைக்கும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி) 
நூல்: புகாரி 2363, 6009

--------------------------------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி (15-5-2011, 4:30 PM) :

இந்த பறவை, உரிமையாளர், நடந்த இடம் போட்டோ எடுத்தவர் பற்றிய விபரங்களை பின்னூட்டம் (#17) வாயிலாக தெரிவித்த சகோ.நிசார் அவர்களுக்கு மிக்க நன்றி..!
( மேலும், விபரங்களுக்கு மறுமொழி # 18-ல் உள்ள சுட்டிகளையும் தொடருங்கள்..!) 

19 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...