அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!
Showing posts with label அயோத்தி. Show all posts
Showing posts with label அயோத்தி. Show all posts

Monday, December 5, 2011

26 பாபர் மசூதி : ஹிஸ்ட்-ஜியோ டேட்டா


ஃப்ளாஷ் பேக்

1992 December - 6 அதிகாலை
1949 டிசம்பர் 22 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் 'இஷா' எனும் இரவுத் தொழுகையை தொழுதுவிட்டு வீடுகளுக்கு சென்றனர். வைகறை ஃபஜ்ர் தொழுகைக்காக  அன்று பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி..! கதவு உடைக்கப்பட்ட பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. 'ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார்' என்று ஒரு கும்பல் வெளியே கலாட்டாவில் இறங்கியது.

"வன்முறைக்கும்பல் ஒன்று பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலைகளை வைத்ததாக" ஃபைஸலாபாத் காவல் நிலையத்தில் 'முதல் தகவல் அறிக்கை' (FIR) பதிவு செய்யப்பட்டது. அப்போது, மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத்தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.

Monday, December 6, 2010

11 அயோத்தி, டிசம்பர்-6 : தலைவெட்டு எப்போது?

      இன்று, டிசம்பர்-6, பாபர் மசூதியை மதவாத பயங்கரவாதிகள் இடித்த- முஸ்லிம்களுக்கு அநியாயமிழைக்கபட்ட இந்த துக்கம் மிகுந்த தினத்தில் என்ன நடக்கிறதென்றால்..... பொது இடங்களில் போவோர் வருவோரிடமெல்லாம் விசாரணைகள் – ஆவணப்பரிசோதனைகள் – உடை, உடைமைகளில் பாதுகாப்புச்சோதனை – காவலர் குவிப்பு – ராணுவ அணிவகுப்பு – பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் முன்னெச்செரிக்கை கைது - அரசியல் தலைவர்களின் சூடான அறிக்கை என்று எல்லா ஊடகங்களிலும் ஏதோ ஒரு ‘அதிபயங்கர போர்ச்சூழல் மிகுந்த பரபரப்பு நாள்’ போன்று இந்நாளை வழக்கம்போல ஆக்கிவிடுவார்கள்.

      இன்றோ நேற்றோ முந்தாநாளோ ஏதாவது ஒரு ‘அண்டார்டிக்கா-இ-தொய்பா’ அல்லது  ‘ஆண்ட்ரமீட்டா முஜாஹிதீன்’ அல்லது ‘பால்வீதி மண்டல ஜிஹாத் அமைப்பு’ –க்களிடமிருந்து போலிஸ் கமிஷனருக்கோ, சி.பி.ஐ-க்கோ ஒரு அநாமதேய வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் வந்திருக்கும்..!? உலகப்புகழ்பெற்ற அளவில் எவ்வளவோ கண்டுபிடிக்கும் இவர்களுக்கு முஸ்லிம் வேஷத்தில் வரும் அந்த மிரட்டல் இ-மெயில் அனுப்புபவர்களை மட்டும் யார் என்று எந்த வருடமும் கண்டுபிடிக்க முடியாதாம்..!? பகுத்தறிவு சிந்தனை மிக்க மக்களே, நம்புங்கள் இதனை..!?

previous home
Related Posts Plugin for WordPress, Blogger...