அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Tuesday, March 25, 2014

4 சஹாரா சாம்ராஜ்ய சக்ரவர்த்தி சிறைசென்ற பின்னணி தெரியுமோ?

மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு,மாட்டிக்கொண்டு இவ்வருடம் பிப்ரவரி 28-ல் 'Luck-No' வில் கைதாகி டெல்லி திஹார் சிறையில் தள்ளப்பட்ட சஹாரா நிறுவன முதலாளி சுப்ரதா ராய் பற்றி ஒரு நியூசும் வராமல் பார்த்துக்கொண்டனர் நமது தமிழ் ஊடக கொள்ளையர்கள்..! ஆங்கில ஊடங்களில்தான் ஓரளவு நியூஸ் வந்தன..!

சஹாரா நிறுவன முதலாளி சுப்ரதா ராய்

இந்தியாவில் மஹா பணக்காரர்கள் எனப்படும் கார்ப்பொரேட் பண முதலைகள்தான், சமுதாய நலன் பேணவேண்டும் என்ற நல்லுணர்வு சிறிதும் இல்லாமல், இந்தியாவையும் அதன் வளத்தையும்  சுயநலத்துடன் எப்படியெலாம் தைரியமாக அரசியல் & பண பலத்துடன் சட்டத்துக்கு கட்டுப்படாமல் துணிவுடன் கபளீகரம் செய்து கொண்டுள்ளார்கள என்று இப்பதிவில் அறிந்தால் நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள் சகோஸ்..!

நம் நாட்டில் சட்டத்துக்கு பயந்த சிறு பணக்காரர்கள் எல்லாம் வருமான வரி கணக்கு காண்பிக்காமல், அரசாங்கத்தை ஏய்த்து பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்த பின்னரும் மிச்சமுள்ள கட்டுக்கடங்கா கறுப்புப்பணத்தை, எந்த இந்திய வங்கி அக்கவுண்டிலும் போட முடியாமல்... எந்த சொத்தும் வாங்க முடியாமல்... தவித்து விட்டு, கடைசியில்... அதை எப்படி எல்லாம் ஒய்ட்டாக மாற்றுவார்கள் என்று ஏற்கனவே... 

Black Money-யை சேமிக்க & செலவழிக்க சட்டப்பூர்வ Top 10 வழிமுறைகள்.


...எனும் இப்பதிவில் நான் விரிவாக எழுதியுள்ளேன். 'என்ன இப்படி எழுதியுள்ளேன்' என அதிர்ச்சியாக வேண்டாம் சகோ. இது எல்லாம் நம் நாட்டில் அடிக்கடி நியூஸில் தெரியவரும் வழிகள் எனும் அளவுக்கு ரொம்ப சகஜம்தான்..! ஆனால்.., அங்கே நான் எழுதாத "புதியவழி" ஒன்றில் சஹாரா முயன்ற போதுதான்... மாட்டிக்கொண்டார் சஹாரா அதிபர் என்று பல செய்திகளை படிக்கும் பொழுதுதான் புரிகிறது.

ஒரு பக்கம் லஞ்ச ஊழல் அரசியல்வாதிகள், மறு பக்கம் அரசினை ஆட்டுவிக்கும்  பணமுதலைகள்... இவர்களுக்கிடையே இந்த நடுத்தர வர்க்கத்தினர் மாத சம்பளத்தில் சிறுக சேமித்து வைத்ததை கார்பரேட் வியாபாரிகள் மொத்தமாக சுருட்டி விடாமல் இருக்கவே... RBI , SEBI  போன்ற அரசு நிறுவனங்கள் அனைவரையும் கண்காணித்து வருகின்றன. நிச்சயமாக இவை நல்ல ஏற்பாடு... இவர்கள் சரியாக பணியாற்றும் வரை..!


சஹாராவை, நம்மில் பெரும்பாலான தமிழர்களுக்கு கிரிக்கெட் ஸ்பான்சராகத்தான் தெரிந்திருக்கும். ஆனால்... வடக்கே அதையும்தாண்டி அது ஒரு ஜெகஜால ஜாம்பவான்..! 

பிசிசிஐ கிரிக்கெட்  டீம், எதோ ஒரு ஐபிஎல் டீம் மட்டுமின்றி... அது ஹாக்கி டீம் மற்றும் ஃபார்முலா ஒன் கார் ரேஸ் ஸ்பான்சரும் கூட..!

நம்ம ஊர் சன் டிவி குழுமம் போலவே... அதற்கு என்று ஏகப்பட்ட டிவி சேனல்கள் உள்ளன. "சஹாரா குழுமம்".அதுமட்டுமின்றி,இந்தியாவுக்குள் பறக்கும் விமான நிறுவனமும் இருக்கிறது.

நியூயார்க், லண்டன் முதற்கொண்டு இந்தியாவிலும் பல மாநகரங்களில் மகா பிரம்மாண்ட ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள், ஆடம்பரமான மெகா விடுதிகள் எல்லாம் உண்டு. பெரு நகரங்களில் பெரிய ஹை டடெக் ஹாஸ்பிடல்கள், ஹைப்பர் மால்கள் எல்லாம் கூட நடத்துகிறது.

இன்னும், அதனிடம் ஒரிசாவில் 2000 MW உயர்சக்தி திறன் கொண்ட மாபெரும் அனல் மின் நிலையம் எல்லாம் கூட சொந்தமாக உண்டு. இன்னும் வட இந்தியாவில்... இராசயன தொழிற்சாலை, சர்க்கரை ஆலை, சாப்ட்வேர் கம்பெனி, எண்ணெய் நிறுவனம் என்று ஏகப்பட்டவை உண்டு..!

இப்படியாக இவற்றில் எல்லாம் சேர்த்து சுமார் 12 லட்சத்துக்கும் மேலே உள்ளார்கள் சஹாரா நிறுவன ஊழியர்கள்..!

'சஹாரா சிட்டி' என்று ஒரு பெரிய ஊரே சொந்தமாக LuckNow அருகே உண்டு..! அதில் சென்ற வருட சுதந்திர தின கொடியேற்றும் விழாவில் குழுமிய தன் தொழிலாளர்களுடன்... சுப்ரதா ராய்... கீழே... தேசிய கீதம் பாடுகிறார்.


கிங்ஃபிஷர் விமான சர்வீஸ் ஓனர் விஜய் மல்லையா போலல்லாது, தம் விமானப்பணியாளர்களிடம் ஒழுங்காக மாதச்சம்பளம் தந்து மிகவும் அன்போடு நடத்து கொள்பவராம் சுப்ரதா ராய்..! ன்னு சொல்லிக்கிறாங்க...



உலகிலேயே ஆகப்பெரிய 9 வது நிறுவனமும், இந்தியாவிலேயே மிகப்பெரிய நிறுவனமுமான இந்தியன் ரயில்வேக்கு அடுத்த இடம்... இரண்டே முக்கால் லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சஹாரா நிறுவனத்துக்கு..! அதாவது... இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் முதலாளி சஹாரா நிறுவனம்தான்..! ரிலையன்ஸ் அம்பானியெல்லாம் சஹாராவுக்கு அப்புறம்தாங்க..! அந்த அளவுக்கு நாட்டின் நம்பர் ஒன் கம்பெனியின் மஹாராஜா திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்றால்... (ஸ்பெஷல் VVIP அ(சி)றை உபசரிப்புதான் என்றாலும்...) கைது-சிறை எல்லாம் எப்படி சாத்தியமானது..? என்னால் முதலில் நம்பவே முடியவில்லை..!

அதனால்தான் அது பற்றி அறியும் ஆவல் அதிகமானது..! சரி, இனி மேட்டருக்கு வருவோம்... மேலுள்ள அவ்ளோ நிறுவனங்கள் போதாது என்று சஹாரா புதிதாக இரண்டு நிதி நிறுவனங்களை ஆரம்பித்தது..! அதில்தான் மோசடியில் சிக்கி மாட்டிக்கொண்டார் சஹாரா பாதுஷா..! இனி சஹாராவின் அந்த மோசடியை பற்றி பார்க்கலாம் சகோஸ்...

Sahara Housing Investment Corporation Ltd மற்றும் Sahara Real Estate Corporation Ltd ஆகிய அந்த இரண்டும் சஹாரா நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக உள்ளன. இந்த இரண்டும் வருடத்திற்கு 15% வட்டி தருவதாகக்கூறி சஹாரா பரிவார் என்று விளம்பரம் செய்து "பொது மக்களிடம் பணம் வசூலித்துள்ளன". சட்டப்படி இப்படி செய்வதற்கு முன்னர் RBI யிடம் நிதி நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால்... இவை பதிவு செய்யப்படாதவை..!

பொதுவாக...வங்கியின் மூலம்தான் முதலீட்டாளர்களின் முதலீடு காசோலையாக வந்தாக வேண்டும் என்பதால்... 'நிஜமான நிதி நிறுவனங்கள்' RBI யிடம் பதிவு செய்யும். ஆனால், கருப்பு பணத்தை பினாமி பெயரில் / போலிகள் பெயரில் தம் பணத்தை தாமே இன்வெஸ்ட் பண்ணி வைக்க என்றே ஏற்படுத்தப்படும்(?) நிதி நிறுவனங்கள்... RBI (Reserve Bank of India) யிடம் பதிவு செய்தால் மாட்டிக்கொள்ளும். அல்லது அதிகமாக அதனிடம் உண்மையை மறைக்க போராடி கஷ்டப்பட நேரிடும்.

இதனால் சஹாரா நிதி நிறுவனங்கள் பதிவு செய்யாமல் "பணம் வசூலிக்க" விளம்பரம் தந்து விட்டதால்... அதன் கைவசம் அல்ரெடி இருந்த முதலீடுகளின் மூலம் - Root Source - ஏதும் தெரியாமல் தன்வசம் வங்கியில் RBI அதை இருப்பாக வைத்துக்கொள்ள விரும்பாமல்... என்ன செய்தது என்றால்... 'இந்த இரு நிறுவனங்கள் பதிவு பெறாதவை என்பதால்... பொது மக்களிடம் நிதியை பெறக்கூடாது' என்றும், 'பொதுமக்களும் அங்கே நிதி செலுத்த கூடாது' என்றும், ஏற்கனவே பெறப்பட்ட நிதியையும் மீண்டும் திருப்பி மக்களிடமே (?!) கொடுத்திட வேண்டும்' என்றும் RBI கூறி, அத்துடன் சஹாராவை விட்டுவிட்டது. கோர்ட்டுக்கு எல்லாம் போகவில்லை..!

RBI warns investors against Sahara India Pariwar deposits

நல்லவேளை என்று... நைசாக இதோடு ஒதுங்கி தமது நிதி நிறுவனத்தை கலைத்து பணத்தை வேறு மாதிரி மறைத்து இருந்திருந்தால் இன்று சஹாரா உரிமையாளர் சுப்ரதா ராய் திஹாரில் அடைபட்டிருக்க வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது.

ஆனால், அதன் பிறகு சஹாரா, ஏதோ புத்திசாலித்தனமாக செயல்படுவதாக எண்ணிக்கொண்டு... ஒரு மடத்தனமான காரியம் ஒன்றை செய்தது. அதாவது தான் வசூலித்த வைப்பு நிதிகளை எல்லாம் OFCD (Optionally Fully Convertible Debentures) என்ற முறையில் பங்குகளாக ஷேர் மார்க்கெட்டில் மாற்ற முயன்றது. இப்படி செய்வதன் மூலம், RBI தொடர்பான நடவடிக்கைகளை மட்டுமே RBI கண்காணித்து கட்டுப்படுத்த முடியும் என்பதால்... ஷேர் மார்க்கெட்டில் போட்டுவிட்டால் RBI யிடம் இருந்து சஹாரா தப்பித்துக்கொள்ள திட்டம் போட்டது. திட்டம் என்னவோ சரிதான்..! ஆனால்... பேஸ்மென்ட்..???

இங்கே ... OFCD என்பது பற்றி நாம் அறியவேண்டும். அதாவது... முதலீட்டாளர்கள் தங்கள் வைப்பு நிதிகளை விருப்பப்பட்டால் பங்குகளாக மாற்றி கொள்ளலாம். யாருங்க மாற்றலாம்..? முதலீட்டாளர்கள்..! நோட் பண்ணி வச்சிக்கிங்க. அவங்கதான் தான் மாத்த முடியும். நிதி நிறுவனம் அல்ல..!

These debentures can be converted into shares, when debt holder (investor) wishes

ஆனால், அந்தோ பரிதாபம்... இதில்தான்... ஓநாயிடம் தப்பி சிங்கத்திடம் மாட்டிய கதையாக... அந்த சஹாரா இந்த முறை பங்குச்சந்தையை கண்காணிக்கும் SEBI (Securities and Exchange Board of India) யிடம் அகப்பட்டுக் கொண்டது.

எப்படி..? 


"அதென்ன... நாட்டின் இரண்டு கோடி முதலீட்டாளர்கள் ஒரே மனசுடன் ஒரே மாதிரி சிந்திச்சி சடுதியில்  OFCD யில் மாற்றினார்கள்...? இதெப்படி சாத்தியம்?" என்று SEBI க்கு மூக்கு வேர்த்தது. எனவே, சஹாராவில் தன் மூக்கை நுழைத்து, "அதன் அவ்விரண்டு நிதி நிறுவனங்களும் பங்குச்சந்தையில் பட்டியலிடப் படவில்லை என்பதனால், இது போன்று நிதிகளை இந்த துணை நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் வசூலிக்கவும் கூடாது, வசூளித்த முதலீட்டை நிறுவனம் மாற்றவும் கூடாது" என்று SEBI சஹாராவுக்கு 3 வருஷங்களுக்கு முன்னரே ஆப்பு அறைந்தது..!


இதெற்கெல்லாம் சஹாரா மசியுமா..? SEBI யின் கையையும் காலையும் கட்டிப்போடும் விதமாக தமது பலத்தினால் ஹைக்கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியது ஜாம்பவான் சஹாரா. ஆனாலும், விடவில்லை SEBI. தொடர்ந்து ஒரு வருஷம் முயன்று, சஹாராவின் பங்குதாரர்கள் முதலீட்டாளர்கள் பற்றி எல்லாம் விசாரிக்க மட்டும் எப்படியோ அனுமதியை ரொம்பவும் போராடித்தான் பெற்றது.

அப்போதுதான்... சஹாராவின் இரண்டேகால் கோடி (?!) முதலீட்டாளர்களில் முதல் ஐந்து ஆகப்பெரிய முதலீட்டாளர்கள் பெயர், ஐடி,முகவரி, தொழில், விவரங்களை முதலில் துப்பறிந்து விசாரித்ததில்... ஒருவர் கூட அந்த விலாசத்தில் இல்லை. எல்லாருமே போலிகள்... போலி முகவரிகள் என்பதும்... அதன் பின்னர் பல முதலீட்டாளர்களின் விவரங்கள் சஹாராவுக்கு பெறப்படவே இல்லை என்பதும் SEBI தன்  விசாரணையில் கண்டுபிடித்தது. இதனால் Know Your Customer என்ற முக்கிய விதிமுறைகளையும் சஹாரா மீறி இருப்பது தெரிய வந்தது. அதாவது எல்லாம் fake investments... fake investors. போலி முதலீடுகள். போலி முதலீட்டாளர்கள். மாட்டிக்கொண்டது சஹாரா..!

சகோ, இப்போது உங்களுக்கு முழுக்கதை புரிந்திருக்குமே..?

Is Sahara Group a BLACK MONEY laundering machine headed by Subrata Roy?  There is every ground to believe that Subrata Roy is a Swiss Bank of India.

ஆம்.... எல்லாம் சஹாராவின் கருப்புப்பணம்... பங்கு முதலீடாக..! இதில் வேறு எத்தனை பேரின் கருப்புப்பணமும் உள்ளது என்றும் புரியவில்லை..! அப்படி இருந்தால், "இந்தியாவிற்குள்ளேயே ஒரு சுவிஸ் வங்கியா?"... என்ற கேள்வி வருவது இயற்கை.

அடையாளம், வைப்புக்கணக்கு உள்ள திருப்பித்தர முடிந்த அப்பாவி நிஜ முதலீட்டாளர்களின் முதலீடு... 1,780 கோடி ரூபாய் தவிர்த்து, மீதி 24,400 கோடி ரூபாய் முதலீட்டுக்கு ஒரு கணக்கும் இல்லை..! இந்த முதலீட்டுக்கு ஆள் அடையாளம் முகவரி ஏதும் இல்லை..! எனவே, முன்னர் அறையப்பட்ட ஆப்பின் மீது "நச்சக்" என்று ஓங்கி சுத்தியலால் அடிப்பது போல... இப்போது கைவசமுள்ள எல்லா ஆதாரத்துடன்... சென்ற வருஷம் SEBI நேராக சுப்ரீம் கோர்ட்டுக்கு போனது. அந்த வழக்கில்... அவ்விரு நிறுவனத்தின் 24,400 கோடி ரூபாயையும் அதன் முதலீட்டாளர்களிடம் 15% வட்டியுடன் திருப்பிக்கொடுக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு போட்டு, காலக்கெடுவும் விதித்தது. அடி சக்கை..! அப்டி போடு..! 

Sahara group told to refund Rs 24,400 cr to investors


ஆஹா... திருடனுக்கு தேள் கொட்டிய கதி..! மீதி 24,400 கோடிக்கு, சஹாரா இனி எந்த முதலீட்டாளரை... எங்கேன்னு போய் தேடும்..? யாரிடம் சென்று முதலீட்டை திருப்பி கொடுக்கும்..? இல்லாத முதலீட்டாளரிடம், "இந்தா உன்  முதலீடு" என்று திருப்பி தறுவது எங்ஙனம்..? ம்ம்ம்.... இனி தனக்குத்தானே தன் அக்கவுண்டில் வரவு வைத்து "திருப்பிக்கொடுத்தாலோ(?!)" அல்லது இனி ஏதும் பினாமி முதலீட்டாளர்களை புதிதாக உருவாக்கினாலோ, அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்ட் மொத்தமும் SEBI  யிடம் சீஸ் ஆன நிலையில் வசமாக மாட்டிக்கொள்ளுமே... கருப்புப்பண மோசடியில்..!

அதனால் எவரிடமும் திருப்பிக்கொடுக்கவில்லை.என்ன செய்வது என யோசித்து யோசித்து செய்வது அறியாது யோசித்துக்கொண்டே முழித்துக்கொண்டு இருக்க... மீண்டும் நீட்டிக்கப்பட்ட கெடுவும் முடிந்தும் விட்டது.

"சுமார் இரண்டு கோடி முதலீட்டாளர்களிடம், பணம் திருப்பி தரப்பட்டது போக, மீதி 2,160 கோடி ரூபாய் மட்டுமே பாக்கி உள்ளதாகவும், இன்னும் கொஞ்சம் கெடு நீட்டித்து தந்தால் அதையும் தந்து செட்டில் பண்ணிடுவோம்" என்றும் ஜனவரியில் கோர்ட்டில் சூப்பராக பொய் சொன்னது சஹாரா. என்ன ஒரு தெனாவெட்டு..!

Failure to pay could put Sahara under receiver: Sebi

ஆனால், SEBI, விடவில்லை. அதன் திருபித்தரப்பட்ட அஃபிடவிட் டாகுமென்ட் எல்லாவற்றையும் சரிபார்த்து, எல்லாமே போலி முகவரிகள், போலி முதலீடுகள், போலி முதலீட்டாளர்கள், பணம் கொடுக்கப்பட்ட ஆதாரம் எல்லாம் சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது' என்று கோர்ட்டில் பிப்ரவரி கடைசியில் சொல்ல, பணம் திருப்பிக்கொடுக்காததால்... சஹாரா அதிபர்க்கு கோர்ட்  பிடி வாரண்ட் பிறப்பிக்க, சஹாரா அதிபர் பிப்ரவரி 28ல்  கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்..!



இப்படி தவறை செய்து கொண்டு பல வழிகளில் தப்ப முயன்ற சஹாரா தற்போது கோர்ட்டின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை. இம்மாதம் 4 ந்தேதி கோர்ட்டில் நடந்த விசாரணையில், 'ரூ.24,400 கோடியை SEBI யிடம் கொடுங்கள்..! :-( அவர்கள் முதலீட்டாளர்களிடம் திருப்பி கொடுப்பார்கள்..! :-) அதுவரை அதன் நிறுவனர் ஜெயிலிலேயே இருக்கட்டும்' என்று கோர்ட் குண்டக்க மண்டக்கா என்று அதிரடி உத்தரவு போட்டு, திஹார் சிறையில் நிதி மோசடி வழக்கில் இம்மாதம் 4 ந்தேதி அடைக்கப்பட்டார்... ராய்..! வெல்டன் SEBI..! வெல்டன் கோர்ட்..!  ஆக, ஒரு மாதகாலமாக ஜெயிலில் உள்ளார் சஹாரா மஹாராஜா..!

'Unhappy' SC sends Sahara boss Subrata Roy to Tihar Jail

இந்தியாவில் பல அரசு நிறுவனங்களில் / அமைப்புகளில் லஞ்சம் ஊழல் அநீதி மிகைத்து இருந்தாலும்...  ECI, CBI, ATS, CIG, RBI, SEBI போன்றவை உலக அளவில் தவறுகளை நேர்மையாக கண்காணிக்கும் சிறந்த இந்திய அமைப்புகள் என்று பெயர் பெற்றுவிட்டன. இவற்றில் எல்லாம் நேர்மையான அதிகாரிகள் இல்லை என்றால்... இந்தியா என்றோ கூறு போட்டு விற்கப்பட்டிருக்கும்.

இந்திய தேர்தல் ஆணைய(ECI)த்தின் அதிகாரம் என்ன என்று அன்று டி.என் சேஷன்தான் நாட்டுக்கே விளக்கினார். ATS chief மாவீரன் ஹேமந்த் கர்கரே IPS வரலாறு படைத்தார்..! அதேபோல... SEBI யின் பவர் என்ன என்பதை சஹாராவின் மோசடிகளை கண்டுபிடித்த  SEBI  யின் மேலாண் இயக்குனர் Dr. K.N. ஆப்ரஹாம் IAS, உலகுக்கு உணர்த்தி இருக்கிறார். அவருக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவிப்போம்.

 SEBI  யின் மேலாண் இயக்குனர் Dr. K.N. ஆப்ரஹாம் IAS
இவர் பல அழுத்தங்களுக்கு இடையேதான் இதை சாதித்துள்ளார் என்று புரிய முடிகிறது. எந்த அளவுக்கு என்றால்... மத்திய நிதி அமைச்சகமும், அதன் அட்வைசர் ஒமிடா பவுல் ம் தனக்கு இந்த சஹாரா கேஸ் மட்டுமல்லாது, ரிலையன்ஸ், MCX மற்றும் ராஜஸ்தான் வங்கி கேஸ்களிலும் 'மூக்கை நுழைத்து கலைக்க பார்ப்பதாக' பிரதமருக்கு முன்னர் ஒருமுறை பகிரங்க புகார் கூறியுள்ளார்..!

இந்நேரத்தில்... இந்திய நீதித்துறையை அப்பழுக்கற்றதாக இருக்கும் என்று முழுமையாக நம்ப முடியாது தான். அதனால்தான்... இந்த நியூஸ் கூட ஊடகங்களால் & அரசால் விபரமாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கப்படவில்லை. இதெல்லாம்... சுப்ரதா ராய் என்ற பணமலை சட்டத்தின் ஓட்டைகளில் எவரும் அறியாத சயன நேரத்தில் வெளிவந்து விடலாம். நியாயப்படி இன்கம்டாக்ஸ் என்ற பெயரில் என்றோ நமது அரசு கஜானாவுக்கு போயிருக்கவேண்டிய இந்த ரூ 24,400 கோடியும்... "முதலீட்டாளர்கள்"(?) "திரும்ப பெற்றுக்கொண்டதாக"(!)வும் பின்னாளில் அறிவிக்கப்படலாம்..! யார் கண்டா..!


ஆனால், இனி நாம் தான் இது போன்ற ஏமாற்றுக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும். முதலீடு செய்யும் முன், அந்நிறுவனத்துக்கு RBI அங்கீகாரம் உண்டா, பங்குகளுக்கு SEBI யின் அனுமதி உண்டா என்றெல்லாம் ஒரு முறைக்கு இரு முறை நிறுவன / பங்கு பதிவு விவரங்களை இனி மக்கள் தான் சரி பார்த்துக்கொள்ள வேண்டும்..! இப்போது உள்ளது போலவே RBI , SEBI எல்லாம் எப்போதும் நீதியாக செயல்படும் என்று சொல்ல முடியாது. காரணம், அதன் இயக்குனர்கள் நாளை மாறுவார்கள். அல்லது மாற்றப்படுவார்கள். அல்லது... எலக்ஷன் கமிஷனில் டி.என். சேஷனுக்கு பிறகு மூவரை நியமித்து அந்த போஸ்டை வேண்டுமென்றே அரசு டம்மி ஆக்கியது போலவும் இனி SEBI யில் நடக்கலாம்..!

ஒட்டுமொத்தமாக, நம் நாட்டின் மானத்தை காப்பாற்றிக்கொண்டு இருப்பது மனசாட்சிக்கு பயந்து சுயகட்டுப்பாட்டோடும்  மறுமைக்கு பயந்து இறையச்சத்தோடும் அரசுப்பணியாற்றும் அதிகாரிகள்தான் இவர்களாக ஏதாவது நாட்டு நன்மைக்காக சட்டப்படி செயல்பட்டால்தான் உண்டு. இல்லையேல்... இந்தியா அவ்ளோதான். இந்த உண்மையைத்தான் மேலும் தெளிவு படுத்துகிறது இந்த மோசடி சம்பவம்..! #படிப்பினை.
.

4 -ந்தேதி ராய் கோர்டுக்கு வரும் போது ஒரு வக்கீல் அவர் மீதான கடுப்பில் முகத்தில் இங்க் அடிச்சிட்டார்..! அப்புறம் என்ன... நெருக்கித் தள்ளப்பட்டு, அடிபட்டு, மிதிபட்டு, கோட்டு சட்டை எல்லாம் கழட்டப்பட்டு, தம் வீரச்செயலுக்காக(?) பேட்டி எடுக்கப்பட்டு, அப்புறம் போலிஸ் வந்து, ஸ்பாட் அரெஸ்ட் ஆகி... அடுத்தநாள் 5 ந்தேதி அந்த இங்க் அடிச்ச வக்கீலும் அதே திஹார் ஜெயிலுக்கே அனுப்பப்பட்டு விட்டார்..!

4 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...