அவற்றில் எந்த பக்கம் மிகுதியோ அதைவைத்துத்தான் அவன் நமது 'நல்ல சமூகத்தில்' நல்லவன் அல்லது தீயவன் எனப்படுகிறான்..!
('தீய சமூகத்தில்'... நல்லவன்... 'தீயவன்' என்றும் தீயவன்... 'நல்லவன்' என்றும் பெயர்பெற்று உல்ட்டாவாகிவிடுவது தனிக்கதை. அதுபற்றி இப்பதிவில் வேண்டாம்..! )
சரி, நமது வாழ்க்கை புத்தகத்தில் அந்த இரண்டு பக்கத்தையும் படித்து இரண்டையும் நேர்மையான முறையில் கூட்டி குறைக்காமல் உள்ளது உள்ளபடி பொதுவில் கருத்து சொல்பவர்கள்தான் 'விமர்சகர்கள்'..!
ஆனால், இவர்கள் உண்மையில் தமது விமர்சனத்தில் பெரும்பாலும் நேர்மையாக நடப்பதில்லை..!
காரணம்..? விமர்சிக்கப்படுபவரின் இனம், தேசம், மொழி, மதம், சாதி, குலம், உறவு, பாலினம், பணம் என... ஏதாவது ஒரு காரணியால்... நேர்மை தவறி விடுகிறார்கள்..!
இப்படியான விமர்சகர்களில் பல தரப்பினர் உண்டு..! அவர்களில் சிலரை இங்கே காண்போம்..! இவர்கள் தம்மை அப்படி சொல்லிக்கொண்டாலும்... உண்மையில் இவர்கள் 'விமர்சகர்கள்' அல்லர்..! அப்படி சொல்(லிக்கொள்)வது தவறான புரிதல்..!
நமது இரண்டு பக்கத்தையும் படித்து, அதில் நமது நல்ல பக்கத்தை மட்டுமே நம்மிடம் 'விமர்சனமாக' சொல்பவர்கள்... நம்மிடம் ஆதாயம் தேட சுயநலன் விரும்பி 'ஜிங் ஜாக்' அடிக்கும் ஜால்ராக்கள்..!
நமது இரண்டு பக்கத்தையும் படித்து, அதில் நமது நல்லதை பொதுவில் பாராட்டிவிட்டு... தீய பக்கத்தை நம்மிடம் மட்டுமே சுட்டிக்காட்டி நம்மை திருத்த அல்லது நாம் திருந்த உரிமையோடு 'விமர்சனமாக' சொல்பவர்கள் நண்பர்கள்..!
நமது இரண்டு பக்கத்தையும் படித்து, அதில் தீயதை கண்டுகொள்ளாமல்... நல்லதை மட்டுமே 'விமர்சனமாக' பிறரிடம் பொதுவில் சொல்பவர்கள் நமது அல்லக்கை அடியாள் ரசிகர்கள்..!
நமது இரண்டு பக்கத்தையும் படித்து, அதில் நல்லதை கண்டுகொள்ளாமல்... தீயதை மட்டுமே பிறரிடம் பொதுவில் 'விமர்சனமாக' சொல்பவர்கள் நம்மை வெறுக்கும் எதிரிகள் அல்லது நமது எதிரியின் அல்லக்கை அடியாள் ரசிகர்கள்..!
பெரும்பாலும் நம்மில் எல்லோரும் மற்றவர்களை தமக்கென விரும்புவது நண்பர்களாக இருக்க மட்டுமே..! :-))
ஆனால்... பெரும்பாலும் அந்த 'அதே எல்லாரும்' தம்மை பிறர்க்கு தம்மையும் அறியாமல் காட்டி வரும் முகம் விமர்சகர்களாகவே..! ஏனோ... நண்பர்களாக அல்ல..!
ஆகவே... நண்பர்கள் கிட்டுவது இங்கே அரிதே..! ஆனாலும் அரிதுதான் எனினும் அறிதாகவேனும் கிட்டிவிடுகிறார்கள் நண்பர்கள்..!
அதேநேரம், விமர்சகர்கள் என்ற பெயரில்... மற்றவர்கள் கிட்டுவதுதான் மிக எளிதாக உள்ளது..!
ஆனால்................
அவர்களில்..................
'மெய்யான விமர்சகர்களை'த்தான் நான் குவி ஆடியில் கண் முழி குழி விழ தேடிக்கொண்டு இருக்கிறேன்..!
இவர்கள் கிட்டுவதுதான் இங்கே நண்பர்களை விட அரிதினும் அரிதாகவே உள்ளது..! பதிவுலகிற்கு இது ஆரோக்கியமானது அல்லவே அல்ல..!
8 ...பின்னூட்டங்கள்..:
நீங்க நல்லவரா..? கெட்டவரா..? :-)
நன்மை, தீமை இருபக்கமும் அம்பலத்தில் வர வேண்டும், அவற்றை சுட்டிக்காட்ட அனைவருக்கும் உரிமை வேண்டும், அனைத்துலகிலும் வேண்டும்.
/ நமது இரண்டு பக்கத்தையும் படித்து, அதில் நமது நல்லதை பொதுவில் பாராட்டிவிட்டு... தீய பக்கத்தை நம்மிடம் மட்டுமே சுட்டிக்காட்டி நம்மை திருத்த அல்லது நாம் திருந்த உரிமையோடு 'விமர்சனமாக' சொல்பவர்கள் நண்பர்கள்..!//
// நமது இரண்டு பக்கத்தையும் படித்து, அதில் நல்லதை கண்டுகொள்ளாமல்... தீயதை மட்டுமே பிறரிடம் பொதுவில் 'விமர்சனமாக' சொல்பவர்கள் நம்மை வெறுக்கும் எதிரிகள் //
மிகச்சரியே !
இப்ப நிறைய பேர் காலையில எழுந்து பல்லு விளக்கி, மூஞ்சே கழுவி “டீ” யை குடிச்சிட்டு வாக்கிங் போறாங்களோ !? இல்லையோ !? கம்ப்யூட்டர திறக்காமே அதிலே இண்டர்நெட் பக்கம் போகாமே இருக்கிறதில்ல அந்தளவு நெட் கனெக்சன் நாட்லே பெருத்துப் போச்சு
சமூக தளங்கள்லே குறிப்பா பேஜ்புக், டுவிட்டர்ர்ர், கூகிளு இப்புடி எழுதித்தள்ள நமக்கு கிடைக்கும் இலவசத்தால் நாம் எழுதும் பதிவுகளை எல்லோராலும் படிக்க/பார்க்க முடிகிறது... இதுவும் ஒரு விதத்தில் நம் டயரி போலதான் டயரியை நாம் மட்டுமே படிக்க/பார்க்க முடியும்... இவற்றை பொதுவில் வைப்பதால் எல்லோராலும் படிக்க/பார்க்க முடிகிறது...... இதில் இதைத்தான் எழுதனும் இதெல்லாம் எழுதக்கூடாதுன்னு சட்ட திட்டமெல்லாம் கிடையாது... உள்ளே புடிச்சி போட...
1. சில நிமிடங்கள் கிடைக்கும் !? சந்தோசத்திற்காக !? இராப்பகலா கண் முழிச்சி !? பைல்ஸ், முதுகு வலி, கண் வலி வருமளவுக்கு உட்காந்து யோசிச்சி எழுதுவோரும்
2. எழுதிய பதிவுக்கு கிடைக்கும் கருத்துகளாகிய ஆஹா அருமை, வாழ்த்துகள், தொடரட்டும், நல்ல எழுத்து நடை, புத்தகமாக வெளியிடலாம் என இது போன்ற உசுப்பேத்தலும் !?
3. அகத்திலிருக்கும் மன மாசுகளை பிறரைத் தூண்டி பழி தீர்த்துக்கொள்வோரும்
4. விழிப்புணர்வு, புரட்சி, சேவை என தினமும் கம்யூட்டரே கதியென தட்டித் தடவி எழுதுவோரும்
5. சுருக்கமாக சுவிட்டா எழுதிரேன்னு சொல்லி பிறரை சுருக்கு மாட்ட வைப்போரும்
6. சுகமா காலத்தைப் போக்குகின்ற பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் எழுதி தள்ளுவோரும்
7. கன்னித்தீவு கதைபோல பதிவுகளை நீளமா[ஆ] எழுதி படிப்போரை பாதியிலே உறங்கச் செய்வோரும்
8. கருத்தில் கலவரத்தை உண்டு பண்ணும் முகவரியில்லா புறம்போக்குகளும்
9. பெண்கள் பெயரில் கருத்தை வெளியிட்டு பதிவர்களை உசுபேத்தும் ஒன்பதுகளும்
10. ஒருவரை ஒருவர் வஞ்சப்புகழ்ச்சியில் வசை பாடி அரசியல் செய்வோரும்
இணையத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.
இணையம் எல்லோருக்கும் பொதுவானது. யாருக்கும் சொந்தமில்லாதது. அறிவியலின் அடுத்தக் கட்டம் என்று அழைக்கும் இவற்றை பயனுள்ள வகையில் நம்முடைய நேரத்தையும், சிந்தனையையும் செலவிட்டு நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் பயனுற உறுதுணையாய் இருப்போம் [ இறைவன் நாடினால் ! ]
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ....
நல்ல பதிவு ....
அப்போ இதுவரை நான் அல்லக்கை அடியாள் ரசிகனாகத்தான் இருந்துள்ளேனா....!
இனிமே நண்பனாக முயற்சிக்கின்றேன் .
வணக்கம் ஆஷிக்,
நலம் என்று நம்புகிறேன்.
நல்ல முயற்சி.
//
நமது இரண்டு பக்கத்தையும் படித்து, அதில் நல்லதை கண்டுகொள்ளாமல்... தீயதை மட்டுமே பிறரிடம் பொதுவில் 'விமர்சனமாக' சொல்பவர்கள் நம்மை வெறுக்கும் எதிரிகள் அல்லது நமது எதிரியின் அல்லக்கை அடியாள் ரசிகர்கள்..! //
ஏன் பிறரை எதிரிகளாக பார்க்கிறீர்கள்? நான் சிலரை சிலமுறை பொதுவெளியில் விமர்சித்துள்ளேன் நான் அவர்களின் கருத்துக்கு எதிர் கருத்தைத்தான் வைக்கிறேனே தவிர நான் அவர்களுக்கு எதிரானவன் அல்ல. ஒருவேளை உங்களை விமர்சிக்கும் ஒருவனை நீங்கள் எதிரியாக பார்ப்பீர்கள் என்றால் தவறு உங்களுடையதுதான்.
விமர்சிப்பவர்களை எதிரிகளாக பார்த்தால் உங்களுக்கு எப்படி நண்பர்கள் கிடைப்பார்கள்?
//
நமது இரண்டு பக்கத்தையும் படித்து, அதில் நமது நல்லதை பொதுவில் பாராட்டிவிட்டு... தீய பக்கத்தை நம்மிடம் மட்டுமே சுட்டிக்காட்டி நம்மை திருத்த அல்லது நாம் திருந்த உரிமையோடு 'விமர்சனமாக' சொல்பவர்கள் நண்பர்கள்..!
//
கிடைக்கின்ற நேரத்தில் படிப்பதும் பின்னூட்டம் இடுவதுமே சிரமம், இதில் உங்களை பொதுவில் பாராட்டிவிட்டு பிறகு தனியாக உங்கள் குறைகளை மின்னஞ்சல் அனுப்பி திருத்த முயற்சிக்க முடியுமா?. இணையத்தில் நீங்கள் ஒருவர் இருந்தால் பிரச்சனை இல்லை ஆயிரக்கணக்கான பேரிடம் இதை செய்ய முடியுமா சிந்தியுங்கள்.
நான் சிலரின் கருத்துக்களை பொதுவில் விமர்சனம் செய்ய என்ன காரணம் எனில் அவர்களின் தவறான கருத்தானது பிறர்களுக்கு சென்று விடகூடாது என்பதுதான்.
இந்து மதத்தை விமர்சிப்பவன் இந்துக்களின் எதிரி என்றும், இசுலாமை விமர்சிப்பவன் இசுலாமியர்களின் எதிரி என்றும், இவ்வாறு அனைத்து துறைகளையும் எடுத்துக்கொண்டு பார்த்தால் நமக்கு உலகெங்கிலும் எதிரிகள் மட்டுமே இருப்பதாக தெரியும்.
மொழியையோ,மதத்தையோ, இனத்தையோ, ஜாதியையோ விமர்சிப்பது என்பது அவனவன் விருப்பம். விமர்சனம் சரியாக இருக்கும் பட்சத்தில் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். தவறாக இருக்கும் பட்சத்தில் அதை விட்டு விட வேண்டும் அல்லது உங்கள் நிலையை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தலாம். இதை தவிர விமர்சனம் செய்வதை வைத்து நண்பர்கள்,எதிரிகள் என்ற கோட்பாட்டில் எனக்கு உடன்பாடில்லை.
பிறரை எதிரிகளாக பார்க்க சொன்ன இறைவன்களையும்,இறைதூதர்களையும் நினைத்து நான் வெட்கப்படுகிறேன்,வேதனைப்படுகிறேன்.
உலகில் யாரும் யாருக்கும் எதிரிகள் அல்ல என்ற நிலை உருவாக,ஜாதி,மதங்களையும், நாடுகளையும் அழிக்க வேண்டும். மக்கள் மனதில் நாம் விதைக்க வேண்டியது மனிதம் மட்டுமே.
(இங்கே உங்கள், நான் என்பது பல இடங்களில் பொதுவாகவும் சில இடங்களில் என் தனிப்பட்ட கருத்தையும் குறிக்கும்)
இவ்விமர்சனம் நிச்சயமாக உங்களை எதிரியாக நினைத்து அல்ல :)
என்றும் அன்புடன்
இராச.புரட்சிமணி
அஸ் ஸலாமு அலைக்கும் ஆஷிக் பாய்,
இந்தப் பதிவு நீங்க போட்ட உடனே வந்து படிச்சேன்... பட் எனக்கு புரியவே இல்லை :(( அதன் பின் வரவில்லை.
எனினும், நான் உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்... மறக்காம ப்ளீஸ்ம் எழுதுங்க :)
ஜஸாக்கல்லாஹும் க்ஹைர்.
http://mydeartamilnadu.blogspot.com/2012/12/blog-post_10.html
வஸ்ஸலாம்.
சலாம் சகோ....உங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு உள்ளேன்....நேரமிருந்தால் பார்க்கவும்...http://blogintamil.blogspot.com/2012/12/blog-post_13.html
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!